Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் என்ன செய்யலாம்?

என்ன செய்யக்
கூடாது?
சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்
கூடாது?
ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் என
சொல்லக் கூடிய 41 நாட்கள் விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் 60 நாட்கள் கடுமையாக
விரதமிருந்து மகரஜோதி காண செல்லும் வழக்கம் வைத்துள்ளனர். ஆனால் 41
நாட்கள் விரதம் இருப்பவர்களே அதிகம்.

இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு
பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில்
அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு
நியதி உண்டு. பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும்
என்பதால் தான் மனைவியை கூட "சாமி"என்று அழைக்க வேண்டும்.
கலியுக வரதன் ஐயப்பன்
கலியுக வரதன் ஐயப்பன்

கலியுக வரதனாக, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக் கூடியவர்


சுவாமி ஐயப்பன். சபரிமலையில் வற்றிருந்து
ீ அருள்புரியக் கூடிய ஐயப்பனின்
வரலாறு, மிக அற்புதமானது. தண்டகாருன்ய வனத்தில் உள்ள மகரிஷிகளின்
ஆணவத்தை அடக்குவதற்காக நாராயணர் ஜெகன் மோகினியாகவும், சிவ
பெருமான் பிச்சாடனராக உருவெடுக்கின்றனர். அப்போது இரு ஜோதிகளும்
ஒன்று சேருகின்ற போது அந்த ஜோதி பிளம்பில் இருந்து ஜோதி வடிவமாக
வெளிப்பட்டவர் தான் ஆனந்தமயமாக வற்றிருக்கக்
ீ கூடிய ஐயப்பன்.

ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாக அவதரித்த காரணத்தால் ஹரிஹரசுதன் என


அழைக்கப்படுபவர். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கக் கூடிய இந்த தெய்வம்
யோக பட்டை அணிந்து, சின்முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார். இவரை
வழிபட்டால் நாம் என்னவெல்லாம் பிரார்த்தனை செய்கிறோமோ அவை
அனைத்தையும் நிறைவேற்றித் தரக் கூடியவராகவும், நெய்யபிஷேகத்தை
ஏற்றுக் கொண்டு பக்தர்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கக் கூடியவராக
விளங்குகிறார் ஐயப்பன்.

வைகுண்ட ஏகாதசி விழா : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும்


நிகழ்ச்சியுடன் துவங்கியது
எப்படி விரதம் இருப்பது?
எப்படி விரதம் இருப்பது?

மண்டல விரதம்
ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் என
சொல்லக் கூடிய 41 நாட்கள் விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் 60 நாட்கள் கடுமையாக
விரதமிருந்து மகரஜோதி காண செல்லும் வழக்கம் வைத்துள்ளனர். ஆனால் 41
நாட்கள் விரதம் இருப்பவர்களே அதிகம். இப்படி மாலை அணியும் பக்தர்கள் விரத
காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது
என்பதனை இங்கே காணலாம்.

விரதம் இருக்கும் முறை

* பக்தர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

* குருசாமி கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். குருசாமி


இல்லாதவர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள புரோகிதர்கள் கையால் மாலை
அணிந்து கொள்ளலாம். வட்டில்
ீ மாலை அணிவதாக இருந்தால் தாயார் கையால்
மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

* மாலை அணிந்து கொண்டவர்கள் அதிகாலையில் பச்சை தண்ண ீரில் தான்


குளிக்க வேண்டும் என்பது நியதி. உடல்நிலை சரியில்லை என்பவர்கள்,
தண்ண ீரின் குளுமையை குறைத்து, சற்று வெது வெதுப்பான (வெந்நீரில்
கிடையாது) தண்ண ீரில் குளிக்கலாம்.

மண்டல விரதம் என்றால் என்ன ? விரத நாட்களை எப்படி கணக்கிடுவது ?


பூஜை விதிகள்
பூஜை விதிகள்

என்ன செய்ய வேண்டும்?

* நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற மங்கல பொருட்களை அணிந்து


கொள்ள வேண்டும்.

* ஐயப்பனின் திருவுருவப்படத்திற்கு புதிதாக மலர் அணிவித்து, தினமும் ஏதாவது


நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். மிக எளிமையாக ஏதாவது ஒரு பழம்,
உலர் திராட்சை, பேரிச்சம் பழம் போன்றவை வைத்து வழிபடலாம்.

* ஐயப்பனுக்கு மட்டும் சரணம் சொல்லி வழிபட வேண்டும். அதிகாலை


வேளையில் நம்முடைய அடிவயிற்றில் இருந்து சொல்லக் கூடிய "சுவாமியே
சரணம் ஐயப்பா" என்ற சரணம் நம்முடைய உள்ளத்திற்கும் இல்லத்திற்கும்
மகிழ்ச்சியை கொடுக்கும்.

* நெய் தீபம் ஏற்றி ஐயப்பனை வழிபட வேண்டும்.


* ஐயப்பனுக்கு மட்டும் சாப்பிட்டுக் கொண்டே விரதம் இருக்கலாம். சுத்த
சைவமாக இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். மிக கடுமையாக
விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டும் உணவும் எடுத்துக் கொள்ளலாம்.

* காவி உடை மட்டும் அணிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். கன்னி சாமியாக


இருந்தால் கருப்பு உடையணிந்து விரதம் இருக்க வேண்டும்.

* மாலையில் வடு ீ திரும்பியதும் மீ ண்டும் குளித்து விட்டு, ஐயப்பனுக்கு


விளக்கேற்றி, சரணம் சொன்ன பிறகே இரவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* மாலை அணிந்த காலத்தில் அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச


வேண்டும் என்ற மற்றொரு நியதி உண்டு. பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின்
ரூபமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் மனைவியை கூட "சாமி"என்று
அழைக்க வேண்டும். மாலை அணிந்தவர்களும் ஐயப்பனின் ஸ்வரூபமாக
பார்க்கப்படுவதால் தான் 6 வயது சிறுவனின் காலில் கூட 80 வயது பெரியவர்
விழுந்து வணங்கி, ஆசி பெறும் வழக்கமும் உள்ளது.

* பேசுவதற்கு முன்பும் சரி, பேசி முடித்த பிறகும் சரி "சுவாமி சரணம்" என


சொல்ல வேண்டும். எப்போதும் இறை சிந்தனையும் இருக்க வேண்டும்
என்பதற்காக தான் இந்த வழக்கத்தை வைத்தார்கள்.

* மலைக்கு செல்வதற்கு முன் ஒரு நாளாவது, ஐயப்ப சாமிகள், அக்கம் பக்கத்தில்


இருப்பவர்களை வட்டிற்கு
ீ அழைத்து ஐயப்ப பஜனை நடத்தி அன்னதானம்
கண்டிப்பாக அளிக்க வேண்டும். ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்றொரு நாமம்
உண்டு. அதிலும் கன்னி சாமியாக இருப்பவர்கள் வட்டில்
ீ அன்னதானம் அளிப்பது
மிகவும் விசேஷமானது.

நாளை சபரிமலை நடைதிறப்பு : மாலை அணிய தயாராகும் பக்தர்கள்


அனைத்தும் ஐயப்பனே
அனைத்தும் ஐயப்பனே

என்ன செய்யக் கூடாது ?

* காலணி கண்டிப்பாக அணியக் கூடாது. அலுவலக கட்டுப்பாடு காரணமாக காவி


உடை அணிய முடியாமல், காலணி அணிய வேண்டிய கட்டாயத்தில்
இருப்பவர்கள் தாராளமாக அணிந்து கொள்ளலாம்.

* இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக


ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* வட்டில்
ீ உள்ள மனைவியோ அல்லது தாயோ பூஜை அறைக்கு வர முடியாத
காலத்தில் என்ன செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அந்த காலத்தில்
பெரிய வடாகீ இருக்கும் அவர்கள் தனி அறையில் இருந்து கொண்டு, மாலை
அணிந்தவர்களை பார்க்காமல் ஒதுங்கி இருப்பார்கள். இப்போதும் அப்படி இருக்க
முடிந்தால் இருக்கலாம். அப்படி இருக்க முடியாதவர்கள், அந்த நாட்களை
கணக்கிட்டு, தங்களின் விரத காலத்தை அரை மண்டலமாக, அதாவது 24 நாட்கள்
என்ற அளவில் குறைத்துக் கொள்ளலாம்.
அன்னதானம் அவசியம்
அன்னதானம் அவசியம்

* பெண்கள் சுத்தமாக இருக்கக் கூடிய காலத்தில் மாலை அணிந்தவர்கள் அங்கே


உலாவலாம். அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கலாம். இதற்கெல்லாம்
வாய்ப்பே இல்லை என்பவர்கள் வட்டில்
ீ இருக்கும் பெண்கள் கையால்
சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, முகம் கொடுத்து பேசுவதையும் தவிர்த்துக்
கொண்டு ஒரே வட்டில்
ீ இருந்து கொள்ளலாம்.

* மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் விரத காலத்தில் அதை முற்றிலுமாக


தவிர்க்க வேண்டும்.

* ஒழுக்கக் கேடான அனைத்து விஷயத்தையும் இந்த காலத்தில் நிறுத்த


வேண்டும்.

குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, பிரார்த்தனை


நிறைவேறியதும் தென்னங்கன்று, மணி போன்றவற்றை வாங்கிக் கொண்டு
போய் கோவிலில் செலுத்தலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல
மாற்றத்தை தரக் கூடியது இந்த விரத காலம் என்பது. அதிலும் ஐயப்பனுக்கு
இருக்கக் கூடிய விரதம் தான் மிக கடுமையான விரதம் என்றே சொல்லலாம்.

You might also like