Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

பத்து மாதம் எமை சுமந்து

பெற்ற தாயை போல


எமை கருவில் சுமக்காமலே – தன்
இதயத்தில் சுமப்பவர் அப்பா

தாயிற் சிறந்த கோவிலுமில்லை


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தந்தையை விட நம்மை அன்பு செய்பவர்
இவ்வுலகில் யாருமில்லை

தந்தையின் மறு உருவம் கண்டிப்பு


கண்டிப்பால் நமை ஆழ்பவர் அப்பா
எப்போதும் விரைப்பாய் இருப்பவருள்ளே
ஆழமாய் சுரப்பது தாய்ப்பாசம்

தன் பிள்ளை சிறக்க வேண்டுமென


அல்லும் பகலும் அயராது உழைத்து
தன் வியர்வைத் துளிகளை பொருட்படுத்தாது
நமக்காக உழைப்பவர் அப்பா

கண்களில் கண்ண ீர் கண்டதில்லை – அவர்


வார்த்தைகளில் வலி அறிந்தது இல்லை
தன் வேதனை வெளித் தெரியாமல்
தன் குடும்பத்திற்காய் உருகும் மெழுகுவர்த்தி
அப்பா
அப்பா என்ற சொல்லிற்கு
அர்த்தங்கள் பல அகராதியில் இருந்தாலும்
என்றும் ஆழமான அவர் பாசம்
அன்பு என்பதே அவர் தாரக மந்திரம்

கை பிடித்து மெதுவாய் நடை பயின்று


இந்த உலகத்தை நமக்கு காட்டி
தான் கற்ற பாடங்களை
எமக்கு கற்று தருபவர் அப்பா

கண்டிப்புடன் கூடிய அவர் வார்த்தைகள்


நம்மை நல்வழிப்படுத்தும் ஆயுதங்கள்
அவர் அறிந்த படிப்பினைகளே – நம்
வாழ்வின் ஏற்றப்படிகள்

அவர் உழைப்பு என்றும் வெளித் தெரிவதில்லை


வாய் விட்டு தன் கவலை சொன்னதில்லை
அவரது விலை மதிக்க முடியா தியாகங்கள்
எம்மை செம்மைப்படுத்தும் கூர்ங் கற்கள்

உலகமே போற்றும் தாயைப் போல


நம்மை உயிராய் போற்றும் தந்தையை
எந்நாளும் உறவாய் எண்ணி
இறுதிவரை காத்திடுவோம்

You might also like