Professional Documents
Culture Documents
Gmail - B.SC Psychology ADMISSION
Gmail - B.SC Psychology ADMISSION
Gmail - B.SC Psychology ADMISSION
Sc Psychology ADMISSION
1 message
டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி.
மாணவர் சேர்க்கை - 2023-24
இக்கல்லூரியில் 2023-24 கல்வியாண்டுக்குரிய மாணவர் சேர்க்கைக்காக 19/06/2023 நா
ளன்று (நேரம்:9.00 மணி) RUSA அரங்கில் நடைபெற உள்ள உளவியல் (PSYCHOLOGY) துறை
கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தாங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளீர்கள். நேர்முகத்
தேர்வில், அப்போதுள்ள காலியிடங்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே தங்களது சேர்க்கை உறுதி
செய்யப்படும் எனத் தெரிவிக்கலாகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எடுத்து வரவேண்டிய
ஆவணங்கள் (ஒவ்வொன்றின் உண்மை மற்றும் மூன்று நகல்கள்)
1. பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பம்
2. கலந்தாய்வு அழைப்புக் கடிதம்
3. மாற்றுச் சான்றிதழ்
4. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அல்லது) பள்ளித் தலைமையாசிரியர்
சான்றொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
5, பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
6. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
7. சாதிச் சான்றிதழ் (தற்பொழுது பெறப்பட்டது)
8. விளையாட்டு / தேசிய மாணவர் படை / மாற்றுத் திறனாளிகள் /
முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ்கள்,
9. வங்கிக் கணக்கு புத்தகம் - முதல் பக்க நகல்
10. ஆதார் அட்டை (இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன்)
11. வருமாளச் சான்றிதழ் (தற்பொழுது பெறப்பட்டது)
12. புகைப்படம் - 5 பிரதிகள்
கலந்தாய்வு நடைபெறும் நாள் :19.06.2023
நேரம் : காலை - 9.00 மணி
சேர்க்கை அளிக்கப்பெற்ற மாணவர் தாம் செலுத்த வேண்டிய கட்டணத்தை
உடனடியாகக் கல்லூரி அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மாணவர் சேர்க்கைக் கட்டணம்.
அறிவியல் பிரிவு ரூ.1142 + ரூ.1,000 (CLP) மொத்தம் = ரூ.2,142/-
(தமிழக அரசின் கணினி பயனறிவுப் பயிற்சித் திட்டத்தில் (CLP) இணைந்து பயில விரும்பும் மாணவர்கள்
ரூ.1,000-/- ஐ கல்லூரிக் கட்டணத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டும்) சேர்க்கை கிடைக்கப்பெற்ற மாணவர்களின்
சான்றிதழ்களில் தவறு இருப்பது தெரிய வருமானால் அம்மாணவரின் சேர்க்கை உடனடியாக இரத்து
செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கலந்தாய்வுக்கூடத்தில் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பெறுவர்.
முதல்வர்