Byepass Road

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

கோவை:கோவையில், 81 கி.மீ .

, துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க,


தேவையான நிலம் கையகப்படுத்த அளவடு
ீ செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி
துரிதகதியில் நடந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், நகருக்குள்
போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும்.
வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், நீலகிரிக்கு செல்வதாக இருந்தாலும்,
கேரளா செல்வதாக இருந்தாலும், கோவை நகர் பகுதிக்குள் வந்து, போக்குவரத்து
நெருக்கடியில் சிக்கி, வெளியேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், இரண்டு மணி
நேரம் தாமதமாகிறது. நகருக்கு வெளியே, சுற்று வட்டச்சாலை
அவசியமாகிறது.பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி,
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ ., துாரத்துக்கு, மேற்கு
புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அரசிதழில்
வெளியிட்டதும், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை
திட்டமிட்டு உள்ளது.கிழக்கு புறவழிச்சாலை!இதேபோல், மதுக்கரையில் துவங்கி,
மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர்,
குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில்,
மொத்தம், 81 கி.மீ ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது.கிழக்கு
புறவழிச்சாலை வழித்தடத்துக்கு, ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. திட்டத்துக்கான
நிலம் அளக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு
வருகின்றனர்.அத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கையகப்படுத்த வேண்டிய நிலம்
எவ்வளவு என்பது, இன்னும் இரண்டு மாதத்துக்குள் இறுதி செய்யப்பட்டு, டில்லிக்கு
அறிக்கை அனுப்பப்படும். ஆறு வழியா அல்லது நான்கு வழியா என, அமைச்சகம் இறுதி
செய்ததும், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். நிதி ஒதுக்கீ டு செய்ததும், இழப்பீடு வழங்கி,
நிலம் கையகப்படுத்தப்படும்.'திட்ட பணி துவங்கியதில் இருந்து, இரண்டு ஆண்டுக்குள்
முழு பணியும் முடிந்து விடும். இச்சாலை அமைந்தால், கோவை நகருக்குள்
போக்குவரத்து நெரிசல் குறையும்.
மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை அமைந்தால், நகருக்கு வெளியே
முழுமையாக சுற்று வட்டச்சாலை அமையும். வேறு மாவட்டங்களுக்கு செல்ல
வேண்டியவர்கள், இச்சாலையில் எளிதாக செல்லலாம்' என்றனர். மதுக்கரையில்
துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர்,
குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில்,
மொத்தம், 81 கி.மீ ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

You might also like