பெரம்பலூர் பகுதியில் பசிப்பிணி போக்கிய ஜீவ அமிர்தம்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

பெரம்பலூர் பகுதியில் ஜீவ அமிர்தத்தின் இறைத் தொண்டு

ஞானப் பசிக்கு உணவளித்த சித்த பெருமக்கள், ஏழை


எளியோரின் வயிற்றுப்பசிக்கும் உணவளிக்கத் தவறியதில்லை.
திருவருட்பாவினால் அஞ்ஞான இருளை அகற்றிய வள்ளல்
பெருமானார், பசித்த வயிறுகளுக்கு உணவளிக்கும் உயரிய
சேவையையும் சேர்த்தே செய்தார். 150 ஆண்டுகளுக்கு முன்
அவர் ஏற்றிவைத்த அணையா அடுப்பு, இன்று வடலூரில்
மட்டுமல்ல... சித்தத்தை உணர்ந்த அத்தனை நல்ல
உள்ளங்களிலும் ஜோதியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

சித்தர்களின் வழியில் உலகோருக்கு ஞானம் பரப்பும் ஜீவ


அமிர்தம்மாத இதழ். பல்வேறு இடங்களில் ஏழைமக்களைத்
தேடிச்சென்று அருட்தொண்டு செய்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பல ஆன்ம


உள்ளங்களை காக்கும் நோக்கத்தில் ஜீவ அமிர்தம்
அறக்கட்டளையின் அருட்சாதனை தொடங்கியது.

பசித்து வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் வகையில்,


தரமிக்க
நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தைத்
கடந்த கொரோனா அலையின் போதே துவக்கினோம்.

இம்முறை இரண்டாம் கொரோனா அலையின்போது, ஜீவ


அமிர்தம் ஆன்ம உறவுகளின் உறுதுணையோடு பல
ஏழ்மையான இடங்களை கண்டறிந்து, நிவாரணப்
பொருட்களோடு பயணித்தோம்.

புறம் பேசும் உலகில், பொய்மை பேசும் கண்களில், ஆன்ம


ஒளியை காண முடியாது.. ஆனால், வறுமையில்
உள்ளவர்களின் கண்களில் அவர்களின் துன்பத்தை காண
முடியும்.. அத்தகைய மக்களை ஐந்து மாவட்டங்களில்
தேர்ந்தெடுத்து பயணித்தது ஜீவ அமிர்தம் அறக்கட்டளை.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,
ஆந்திர
மாநிலத்தில் இறுக்கம் என்கிற தீவு கிராமம் என ஏராளான
இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது..
இரண்டாவது முறையாக நேரில் சென்று அர்ப்பணிப்புடன்
தொண்டாற்றியது நமது குழு.

இதன் தொடர்ச்சியாக ஜூன் மாதம் 17,18 ஆகிய தேதிகளில்


பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு
நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. அங்கு திட்டக்குடிக்கு
அருகில் சிவராமபுரம் என்ற இடத்தில் 150 குடும்பங்களுக்கும்,
பெரம்பலூரில் 100 குடும்பத்திற்கும். மேல்மருவத்தூர்
ராமாபுரத்தில் 50 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள்
வழங்கப்பட்டது.. பல தாயுள்ளங்கள் அழுது ஆனந்த கண்ண ீர்
வடித்தது.

கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து


தவிப்பவர்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏராளம்.
அவர்களில் சிலருக்கும் நிவாரணப் பொருட்களை
வழங்கினோம்.

அறம் பழகு வினை கழியும் என்பதே சித்தர்களின் சீரிய


தத்துவம். அதை செவ்வனே செய்துவரும் ஜீவ அமிர்தம்
அறக்கட்டளையின் பணி சித்தர்களின் நல்லாசியோடும்,
இந்த அண்டத்தின் துணையோடும்
தொடர்ந்துகொண்டிருக்கிறது.

You might also like