Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தாய் வாழ்க! தாய் தந்த தமிழ் வாழ்க!

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நீதியை நிலைநாட்ட வந்திருக்கும்


நீதிவழுவா நீதிபதிகளே, மணிக்காப்பாளர் அவர்களே, அறிவுக் கண்களைத்
திறந்து வைக்கும் ஆசிரியர்களே, சக நண்பர்களே உங்கள் அனைவருக்கும்
முத்தான முத்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர்
தேசிகா வடிவேலன். நான் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளியில் பயில்கிறேன்.
இன்று நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு இலக்கியம்.

சபையோரே,
இலக்கியம் பற்றிப் பல்வேறு அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்களுண்டு
எனினும் இலக்கு கூட்டல் இயம் இலக்கியமாகும். இலக்கு என்பது நோக்கம்,

குறிக்கோள், கொள்கை, குறிப்பு, இலட்சியம் எனப் பொருள் கொள்ளப்படும்.

இயம் என்பது இயம்புவதாகும். எனவே இலக்கியம் என்பது

சமுதாயத்தினுடைய, நாட்டினுடைய, மக்களினுடைய, தனிமனிதனினுடைய

நோக்கம், கொள்கை, குறிப்பு, இலட்சியம் குறிக்கோள் இவற்றையெல்லாம்

எடுத்தியம்புவது இலக்கியம் எனலாம்.

அவையோர்களே,
சங்ககாலத்து சமுதாயமானது காதலுக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம்

கொடுத்த சமுதாயமாக விளங்கியது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள்

யாவும் பெரும்பாலும் காதலையும், வீரத்தையும் எடுத்தியம்புவதாகவே

எழுந்தன. சங்ககாலத்தில் காதலைப் பற்றிக் கூறிய இலக்கியங்களாக


நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு,

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற இலக்கிய நூல்கள்

காணப்படுகின்றன. இதேபோல் வீரத்தைக் கூறும் இலக்கியங்களாக

பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் காணப்படுகின்றன. கொடைத்தன்மை


பற்றிக் கூறும் நூல்களாக மதுரைக்காஞ்சி, ஆற்றுப்படை நூல்கள்
காணப்படுகின்றன.

நண்பர்களே,
சங்கமருவிய காலத்தில் அறத்தினை வலியுறுத்திப் பல நூல்கள் தோற்றம்
பெற்றன. அறம் என்பது நற்செயல்கள், நற்சிந்தனைகள் என சுருக்கமாகக்

கூறலாம். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,

ஆசாரக்கோவை போன்ற அறநூல்கள் சங்கமருவிய காலத்தில் தோன்றின.


ஆசிரியர்களே,
இலக்கியங்கள் மனித வாழ்விற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன.

பழையனவற்றைக் கழித்து புதியனவற்றைத் தருபவையாக இலக்கியங்கள்

விளங்குகின்றது என்கின்றது நன்னூல். இலக்கியங்கள் அறவழியில் வாழ

வழிவகுக்கின்றன. அதாவது வாழ்வை நெறிப்படுத்தும் வாழ்வியல் அறங்களை

இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக

திருக்குறளைக் கூறலாம். இலக்கியங்களே மொழியின் இனிமையையும்,

வளமையையும் வெளிப்படுத்துகின்றன. வீர உணர்வை ஊட்டுவதில்

இலக்கிங்களின் பங்கு இன்றியமையாததாகும். இலக்கியங்கள் நாட்டு நடப்பை

அனைவரும் புரிந்து கொள்ளச் செய்கின்றன. மனித இயல்புகளின்

மேன்மையை எடுத்தியம்புவதில் இலக்கியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இக்கால மக்களின் வாழ்க்கைமுறை, சூழல், அரசியலமைப்பு, சரித்திரம்

போன்றவற்றின் தோரம் இலக்கியங்களே ஆகும்.

சபையோர்களே,
மனித உணர்ச்சியைப் படைப்பிலக்கியத்துக்குள் கொண்டுவரும் போது
இலக்கண வரையறைகள் மீறப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத
உண்மையாகும்.
தற்கால இலக்கியத்தில் உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளதனைக் காணலாம்.

உரை நடை மரபோடு பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைப் பதிவுகளும்

பேச்சுப் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தி புதிய போக்கினை மேல் எழச்

செய்கின்றன. இன்று மொழியும், இலக்கியமும் மாறி வருகின்ற நிலையில் ஒரு

பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியங்கள் பற்றிய வாசிப்பு


அவசியமானாகும்.

எனவே இலக்கியம் இல்லையெனில் இந்த நிலையில்லா உலகில் அழகில்லை,

அறிவில்லை, ஆற்றலில்லை, தெளிவில்லை என்றால் அதுமிகையல்ல.

நண்றி, வணக்கம்.

You might also like