மன்னர்களின் அவையில் இருந்து

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

மன்னர்களின் அவையில் இருந்து

மக்கள் கலையாக மாறிய ஆடற்கலை

நம் ஊர்களில் ஆலயங்களில் காணப்படும் பல சிற்பங்கள் பரதக்

கலையின் சிற்பங்களே. தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய

ஆலயங்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள், கரணங்கள் குறித்து நடன

மேதை பத்மஸ்ரீ பத்மாசுப்ரமண்யம் அவர்கள் ஆய்ந்து ஒரு நூலை

இயற்றியிருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி முடித்தபோது

நானூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை நியமித்து, அவர்களுக்கு

வீடுகள் கட்டிக் கொடுத்து குடியேற்றியதாக கல்வெட்டுகள் இருக்கின்றன.

தஞ்சை கோயிலுக்கு முதன்முதலாக திருவையாற்று கோயிலில் இருந்து பல

நடனமாதர்களை மாற்றல் செய்து தஞ்தைக்கு அனுப்பியதாகவும் செய்திகள்

இருக்கின்றன.

நமது கலைகள் அனைத்துமே இறைவனை மையப்படுத்தி

நடத்தப்படுவதால், இந்த நடனக் கலை நமது ஆலயங்களின் செயல்பாடுகளில்

முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. மன்னர்களின் அவைகளில் இருந்த

ஆடற்கலை இன்று மக்கள் கலையாக மாறி, நம் அனைவர் வீட்டுக்

குழந்தைகளும் பயிலுகின்றதொரு அற்புதக் கலையாக மாறி இருக்கிறது.


தெய்வபக்தியால் கைகூடும் கலை

கலைகள் எல்லாம் தெய்வ பக்தியினாலே கைகூடுகிறது என்கிறார்

மகாகவி பாரதி. திறமை, முயற்சி, குருபக்தி, உடல்வாகு, இவை அனைத்தும்

இருந்தாலும் தெய்வ அனுக்ரகம் என்பது மிக அவசியம்.

நடராஜப் பெருமானால் உருவாக்கப்பட்டது ஆடற்கலை. எனவே,

முறையாக இந்தக் கலையைக் கற்க அவனது அருள் அவசியம் தேவை.

தெய்வத்தின் பெயரால், தெய்வத்தை முன்னிட்டு நாம் கற்கும் இந்தக் கலை

அவனுக்கே அர்ப்பணிக்கப் படுகிறது. ஆடற்கலையில் சிறந்து விளங்கும்

ஆயிரமாயிரம் அற்புதமான கலைஞர்கள் தங்கள் நடனத்தால் அந்த நடராஜப்

பெருமானுக்கு தங்கள் நன்றியைக் காணிக்கை ஆக்கியிருக்கிறார்கள்.

You might also like