Bacaan

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

பெயர் : _______________________________________________ ஆண்டு : 4 கம்பர்

தமிழ் மொழியின் சிறப்பு

உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று


என்றால் அது மிகையாகாது. இவற்றுள் சில மொழிகளே எழுதவும் பேசவும்
பயன்படுகின்றன. மேலும், வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் அதனிலும் குறைவே!
இவற்றிற்கெல்லாம் தாயாகத் திகழ்பவை ஆறு மொழிகள் என்று பகரலாம். தமிழ்மொழி
இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துக்களை
உச்சரிக்கும் போது சுவாசப் பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது. உலகிலுள்ள
பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்ற கூடிய வகையில்
அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல்
உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல்
இருந்தோமானால் நீண்டநாள் வாழலாம் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

Menguasai
Tidak menguasai

Menguasai
Tidak menguasai

Menguasai
Tidak menguasai

வாசிப்போ
ம் வாரீர்!!!!!
அடுத்து, தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கையில், திருக்குறளை
விட்டுவைக்க முடியாது. இன்று உலகிலேயே அதிகாமான மொழிகளில்
மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்றால் அது
மிகையாகாது. அறம், பொருள், இன்பம், என்னும் முப்பொருள் உண்மையை
உலகிற்கு எடுத்துணர்த்தும் ஒரு பொதுமறையாகவே இது போற்றப்படுகிறது.
ஆறறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியினை
திருவள்ளுவர் இதில் திட்டவட்டமாக வறையறை செய்துள்ளார். எத்தகைய
வாழ்க்கையை வாழ விரும்பினாலும் அவரவருக்கு ஏற்ற வகையில் அறத்தை
வடித்துக்கொடுத்துள்ளார். உதாரணத்திற்கு அறத்தை உணரத்
தலைபட்டவர்களுக்கு இஃது ஓர் அறநூலாகவும், அரசியலை விரும்புவோர்க்கு
ஒரு ஞானநூலாகவும், கவிச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காவியமாகவும்,
காமச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காமநூலாகவும், வாழ்க்கை நெறியை
விரும்புபவர்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் திகழ்கிறது.

இது ஒன்று போதாதா தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு!

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப்,


தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில்
‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

Tags:

தமிழ்

You might also like