Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 52

ELECTRONIC MIRACLES

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

பாகம் - 2 காம்பினேஷனல் லாஜிக்


(Combinational Logic)

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 1


2 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்

https://www.clubhouse.com/club/core-electronics-career
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

பாகம் - 2
காம்பினேஷனல் லாஜிக்
(Combinational Logic)

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்
whatsapp: 97908 73099
https://www.quora.com/profile/Balajee-Seshadri
1,60,00,000 Content Views
33,000 Followers
1,200 Answers

https://www.linkedin.com/in/balajeeseshadri/
12,000+ Connections
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் - பாகம் 2
2
பாலாஜி

முதல் பதிப்பு: ஜூன் 2017


வெளியிடுவ�ோர்: சார்க் பப்ளிகேஷன்
நெ.28, டாக்டர் அம்பேத்கர் ர�ோடு, க�ோடம்பக்கம்,
சென்னை - 600 024.
வடிவமைப்பு: சார்க் டிசைனிங் சென்டர்
பக்கங்கள்: 48

விலை: Rs.50
M¬ô: `50

DIGITAL ELECTRONICS - Part 2


Balajee

© SHARK PUBLICATION
First Edition: June 2017
Published by SHARK PUBLICATION
No.28, Dr.Ambedkar Road, Kodambakkam, Chennai - 600 024.
Layout: Shark Designing Centre - 90250 44447
Pages: 48

Price: Rs.50

புத்தகம் வாங்க த�ொடர்புக்கு

அச்�ப் �த்தகங்கள் அேமசான்


இைணய தளத்தில்
கிைடக்கின்றன.

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic,
mechanical or other means, now known or hereafter invented, including photocoping and recording, or in any informa-
tion storage or retrieval system, without permission in writing from the Author.
முன்னுரை

எலக்ட்ரானிக்ஸ் துறை த�ோன்றிய ஆரம்ப நாட்களில் ‘அனலாக்


எலக்ட்ரானிக்ஸ்’, அந்த துறையை பெருமளவு ஆக்கிரமித்திருந்தது.
பின்னர் மெதுவாக ‘டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்’ துறையும்
வளர ஆரம்பித்தது. 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸ்’ துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அது மைக்ரோபிராஸசரின் கண்டுபிடிப்பே. மைக்ரோபிராஸசர்
கண்டுபிடித்த பின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி அதிக
வேகம் எடுத்தது. மெதுவாக சாப்ட்வேர் எலக்ட்ரானிக்ஸ் துறையை
ஆக்கிரமிக்கத் துவங்கியது. இந்த காலகட்டத்தில் VLSI துறையும்
அதி வேகமாக வளர்ந்தது. அதனால் எலக்ட்ரானிக்ஸ் துறையில்
ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒரு IC தயாரிக்க முடிந்தது. ஒரே
சர்க்யூட்டில் பல்வேறு IC-களை உபய�ோகித்தனர். உதாரணமாக
நமது கம்ப்யூட்டர்களில் கீ ப�ோர்டு, ம�ௌஸ், Display, USB, Harddisk
என்று ஒவ்வொரு ப�ொருளையும் கட்டுப்படுத்துவதற்கு தனி IC-
களை உருவாக்கினர். அந்த IC-களை சாப்ட்வேர் மைக்ரோபிராஸசர்
உதவியுடன் கட்டுப்படுத்தியது. ஒவ்வொரு IC-க்கும் ஒரு பெயர்
உண்டு. மைக்ரோபிராஸசர் அந்த பெயரை உபய�ோகித்து அந்த
IC-ஐ கட்டுப்படுத்தும். அவ்வாறு IC-ன் பெயரை செலக்ட் செய்யும்
டிஜிட்டல் சர்க்யூட்டிற்கு ‘காம்பினேஷனல் லாஜிக்’ என்று பெயர்.
இதன் உதவியால்தான் சாப்ட்வேர், ஹார்டுவேரின் பல்வேறு IC-
களைக் கட்டுப்படுத்துகிறது. இது மிகவும் எளிதில் புரியக்கூடிய ஒரு
பகுதியாகும். ஆகவே சிறிது கவனம் செலுத்தி இந்த புத்தகத்தில்
எழுதியுள்ளவற்றைப் புரிந்துக�ொள்ள முயற்சி செய்யுங்கள். பின்னர்
Embedded Systems , Computer Architecture, VLSI ப�ோன்றவற்றைப்
பற்றிப் படிக்கும்போது அதிக உதவியாக இருக்கும்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 5


நன்றியுரை

எந்நன்றி க�ொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை


செய்ந்நன்றி க�ொன்ற மகற்கு.

நான் வாழ்வில் உயர்வதற்கு உதவியவர்கள் ஏராளம். என்


ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொருவருக்கும் காணிக்கையாக்கு
கிறேன். இந்த புத்தகத்தினை எனது சிறுவயது நண்பர் முரளி
தரனுக்குக் காணிக்கையாக்குகிறேன். நான் 1973ஆம் ஆண்டு
கூத்தனுர் கிராமத்தில் இருந்து மன்னார்குடிக்கு குடிப்பெயர்ந்த
ப�ோது இது எனது வாழ்வில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்
என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மன்னார்குடிக்கு வந்த
சில நாட்களிலேயே முரளிதரனுடன் த�ொடர்பு ஏற்பட்டது. நாங்கள்
நிறைய பகுத்தறிவு பற்றிய செய்திகளைப் பற்றி விவாதிப்போம்.
கணிதத்தையும், விஞ்ஞானத்தையும் பற்றி நேரம் ப�ோவது
தெரியாமல் பேசிக்கொண்டேயிருப்போம். சுஜாதா, எம்.எஸ்.
உதயமூர்த்தி, வ.அருணாசலம் ப�ோன்றோரின் புத்தகங்களைப்
படித்துவிட்டு, அதில் உள்ள கருத்துக்களைப் பற்றி விவாதிப்போம்.
பாமினி ஆற்றின் (காவிரின் கிளை நதி) மணற்பரப்பில் நடப்பது
எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இருவரும் அடிக்கடி செஸ்
விளையாடுவ�ோம். நான் ஒரு நகர்த்தலை முடித்துவிட்டு முரளியின்
நகர்த்தலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கமே
ப�ோட்டுவிட முடியும். எதையும் தீர ஆராய்ந்து, தர்க்கம் செய்து
பின்னரே ஏற்றுக்கொள்ளும் அவரது குணம் எனக்கு மிகவும் பிடித்த
ஒன்று. அவருடைய கேள்விகளுக்கு விடை அளித்துவிட்டால் பிறகு
யாருடைய கேள்விகளுக்கும் விடையளிக்கலாம். பள்ளி நாட்களில்
இந்த நட்பின் சிறப்பைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பின்னர்
கல்லூரிகளில் படிக்கும் ப�ோதும், அலுவலகங்களில் வேலைசெய்யும்
ப�ோதும் முரளியுடன் விவாதித்து கற்றது அதிக பயனளித்தது.
என்னைப் ப�ோல ஒவ்வொருவருக்கும் முரளிதரனைப் ப�ோல் ஒரு
நண்பர் பள்ளி நாட்களில் கிடைத்தால் வாழ்வில் அவர்களது உயர்வு
நிச்சயம்.

6 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


பதிப்புரை

சார்க் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இந்த புத்தகத்தை வெளியிடு


வதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு. தமிழில் இதுப�ோன்ற
புத்தகம் நிறைய இருந்தாலும் இது சற்று புதியது. காரணம், இதன்
ஆசிரியர் 30 ஆண்டுகள் மின்னணு துறையில் அனுபவம் நிறைந்தவர்.
அந்த அனுபவ அறிவையே புத்தகமாகத் தந்துள்ளார்.

கற்றதும் பெற்றதும் சேரும்போது, அதன் பலன் அதிகம்.


இப்புத்தகத்தை நீங்கள் படிப்பத�ோடு மட்டும் இல்லாமல், இதில்
க�ொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி முயற்சி செய்தீர்கள்
என்றால் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவர்கள்.

வாழ்த்துக்களுடன்

சார்க் பதிப்பகம்

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 7


டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உள்ளது.


பெயர் என்பது என்ன? அது ஓர் அடையாளம் (id - identification). நாம்
ஒரு குறிப்பிட்ட நபரை அழைக்கவேண்டும் எனில், அவரது பெயரை
ச�ொல்லி அழைக்கிற�ோம்.

பெயர்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.


ஒருவர் பிறக்கும் ப�ோது அவரது பெற்றோர்கள் அவருக்கு
பெயரிடுகின்றனர். அவர்கள் அந்தப் பெயரை எப்படி கண்டறிகிறார்கள்?
தங்களது மற்ற குழந்தைகளுடைய பெயராக இல்லாமல் தனது
குடும்பத்தில் யாருக்கும் அதேப�ோல் பெயர் இல்லாமல் இருக்கும்படி
பெயரிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் கூப்பிடும் ப�ோது அது
ஒருவரைத் தவிர மற்றவர்களைக் குறிக்காமல் இருக்கவேண்டும்.
பெயர் என்பது சில எழுத்துக்களின் சேர்க்கையே, ஜேம்ஸ் (ஜே+ம்+ஸ்),
பாலா (பா+லா), அகமது (அ+க+ம+து). அதாவது எழுத்துக்களின்
சேர்க்கையே பெயர்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 9


தமிழில் பெயர் இருந்தால், அது தமிழ் எழுத்துக்களின் சேர்க்கை.
பெயர் ஆங்கிலத்தில் இருந்தால், அது ஆங்கில எழுத்துக்களின்
சேர்க்கை. எழுத்துக்களை ஆங்கிலத்தில் Alphabets என்று அழைப்பர்.
எழுத்துக்களின் ‘Combination of Alphabets’ என்று
சேர்க்கையை
அழைப்பர். ஆகவே பெயர் (id) என்பது ‘Combination of Alphabets’
ஆகும்.

எப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என்று பல ம�ொழிகள்


உள்ளனவ�ோ, அதே ப�ோல் 0 முதல் 9 வரை எண்கள் உள்ள உலகை
ய�ோசித்துப் பார்ப்போம். 0 முதல் 9 வரை எண்கள் உள்ள உலகில்
ஒருவருடைய பெயர் எப்படி இருக்கும்.

இந்த உலகில் நாம் பெயரை எண்களின் சேர்க்கை என்று


கூறலாம். அதையே ‘Combination of Numbers’ என்று அழைக்கலாம்.
இப்பொழுது நாம் 0 மற்றும் 1 ஆகிய இரண்டு எண்கள் உள்ள உலகை
நினைத்துப் பார்க்கலாம். இந்த உலகில் ஒருவருடைய பெயர் (id)
எப்படி இருக்கும்.

10 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


அது 0 மற்றும் 1 ஆகிய எண்களின் சேர்க்கையாக இருக்கும்.
இதனை “Combination of Binary Numbers” என்று அழைக்கலாம்.
Binary என்றால் இரண்டு. இந்த 0 மற்றும் 1 ஆகிய எண்களுக்கு பல
பெயர்கள் உண்டு.

எண்கள் உலகில் - பைனரி (Binary) 0/1

கணித உலகில் - லாஜிக் (Logic) True/False

மின்சார உலகில் - 0V/5V

கம்ப்யூட்டர் உலகில் - ஆம்/இல்லை Yes/No

மின்னணுவியல் உலகில் - ஆன்/ஆப் On/Off

இயந்திரவியல் உலகில் - திறந்து/மூடு Open/Close

இந்த உலகை நாம் டிஜிட்டல் உலகம் என்று அழைக்கிற�ோம்.


இங்கு எல்லாமே 0 அல்லது 1 மட்டுமே. ஆகவே இந்த உலகில்
பெயரை (id) “Combination of Binary Numbers” என்று அழைத்தனர்.
அதையே “Combination of Logic” என்று மாற்றி, பின்னர் “Combinational
logic” என்று கடைசியாக மாற்றினர். அதாவது டிஜிட்டல் உலகில்,
ஒருவருடைய பெயரை (id) “Combinational logic” என்று அழைத்தனர்.

உலகில் ஒருவருடைய பெயர், அவர் பிறக்கும்போது அவருடன்


வருவதில்லை. பெயர் சூட்டப்படுகிறது. அதனை எப்போது வேண்டு-
மானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 11


நாம் அழைக்கும் பெயரும் ஒரு மனிதனுடைய பெயரும் சரியாக
இருக்கும் பட்சத்தில் அந்த மனிதன் ‘ஆம்’ என்று உரைக்கிறான். ஒரு
மனிதனுடைய சேமிக்கும் பகுதியில் என்ன பெயர் இருக்கிறத�ோ,
அது அவனுடைய பெயராகிவிடுகிறது.

அதேப�ோல்தான் இந்த டிஜிட்டல் உலகில் ஒரு டிஜிட்டல்


ப�ொருளின் பெயரை இந்த “Combinational Logic”-ன் உதவியுடனே
நிர்ணயிக்கிற�ோம்.

ஒரு மனிதனுடைய மூளையில் உள்ள ஞாபகப்பகுதியில்


அவனுடைய பெயர் சேமிக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம்
அவனது பெயர் காது வழியாகவ�ோ அல்லது கண் வழியாகவ�ோ
மூளைக்கு வரும்போது, அது ஏற்கனவே சேமித்துவைத்துள்ள
பெயருடன் சரிபார்த்து, பின்னர் ஆம் அல்லது இல்லை என
விடையளிக்கிறது.

மனிதன் இயற்கையின் படைப்பு. மூளை பெயரை எவ்வாறு


சரிபார்க்கிறது என்ற நமக்குத் தெரியாது. மூளையைப் பற்றி அறிய
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக முயற்சித்துவருகிறார்கள். ஆனால்
டிஜிட்டல் மின்னணுப் ப�ொருள்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை.
ஆகவே அவற்றைப் பற்றி புரிந்துக�ொள்வது எளிது. நாம் “Combinational
Logic”-ஐப் பற்றி பார்க்கலாம்.

12 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


நமது காது, பாலாஜி என்ற பெயரை ஒவ்வொரு எழுத்தாக
‘பா’ முதலில், பிறகு ‘லா’, பிறகு ‘ஜி’ என மூன்று எழுத்துக்களை
ஒவ்வொன்றாகப் பெற்று மூளைக்கு அனுப்புகிறது. மூளை பின்னர்
தனது பெயரா என பரிச�ோதித்து, பின்னர் ஆம் அல்லது இல்லை
என உரைக்கிறது.

அதேப�ோல் டிஜிட்டல் “Combinational Logic”-க்கும் தனது உள்ளீடு


வழியாக எண்களை ஒவ்வொன்றாகப் பெற்று, தனது எண்ணுடன்
சரிபார்த்து, பின்னர் ஆம் (1) அல்லது இல்லை (0) என வெளியீடு
தருகிறது.

இந்த முறையில் ஒரு சிறிய பிரச்சனை. பெயரில் உள்ள


எழுத்துக்கள் அதிகமாக அதிகமாக பெயரை உச்சரிப்பதற்கு அதிக
நேரமாகும். இந்த முறையில் ஒரே ஒரு உள்ளீட்டு பின் மட்டும்

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 13


இருப்பதால் பெயரை ஒவ்வொன்றாகத்தான் தர முடியும். பெயர்
பெரியதாக இருந்தால், இந்த முறையில் அதிக நேரம் பிடிக்கும்.
உதாரணமாக ‘1011’ என்ற பெயரை விட ‘110111000’ என்ற பெயருக்கு
இரண்டு மடங்கு நேரம் பிடிக்கும். ஆகவே, இந்த முறையை
மின்னணுப் ப�ொறியாளர்கள் விரும்பவில்லை. இந்த முறையில்
எண்கள் ஒவ்வொன்றாக வருவதால் இதனை த�ொடர்முறை (Serial
Method) என்று அழைத்தனர். இந்த முறையில் ஒரு அனுகூலம்
உண்டு. அது ஒரே ஒரு உள்ளீடு பின் ப�ோதுமானது. ஆனால் மிகவும்
மெதுவானது (Slow). ஆகவே மின்னணுப் ப�ொறியாளர்கள் ஒரு
புதுமுறையைக் கண்டுபிடித்தார்கள்.

இந்த புதுமுறையில் டிஜிட்டல் மின்னணுப் ப�ொருளின் பெயரில்


எவ்வளவு எண்கள் உள்ளனவ�ோ, அத்தனை உள்ளீடு பின்களை
“Combinational Logic”-ன் உள்ளீட்டில் வழங்கினர். உதாரணமாக
டிஜிட்டல் மின்னணுப் ப�ொருளின் பெயர் “1011” என்று இருந்தால்
கீ ழ்க்கண்டவாறு இணைப்புகள் இருக்கும்.

அந்த மின்னணுப் ப�ொருளில் அதன் பெயரை அழைப்பதற்கு 4


உள்ளீடு பின்கள் இருக்கும். ஆகவே பெயரை ஒரே நேரத்தில்
தரலாம்.

உதாரணமாக டிஜிட்டல் மின்னணுப் ப�ொருளின் பெயர் “110110”


என்று இருந்தால் கீ ழ்க்கண்டவாறு இணைப்புகள் இருக்கும்.

14 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


பெயரில் உள்ள எல்லா எண்களையும் ஒரே சமயத்தில் தர இயலும்.
இந்த முறையில் அனுகூலமற்றது அதன் உள்ளீடு பின்கள். பெயரில்
உள்ள எண்கள் அதிகமாக உள்ளீடு பின்கள் அதிகமாகிக் க�ொண்டே
இருக்கும். ஆனால் இதன் அனுகூலம் வேகம். ஆகவே மின்னணுப்
ப�ொறியாளர்கள் இந்த முறையை உபய�ோகித்தார்கள். இந்த முறை
எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்கலாம். உதாரணமாக,

இந்த 4 எண்கள் உள்ள “1011” பெயர் க�ொண்ட “Combinational Logic”


எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்க்கலாம். இதற்கு நாம் “AND
Gate”-ஐ அப்படியே உபய�ோகப்படுத்த முடியாது. ஏனெனில் ஒரு
உள்ளீடு பின்னில் “0” இருப்பதால், இதன் வெளியீடு பின்னில் “0”
மட்டுமே வரும். ஆகவே “0” உள்ள உள்ளீடு பின்னை “1”-ஆக மாற்றி

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 15


“AND Gate”-ற்கு க�ொடுத்தால் “1”-ஐ வெளியீட்டுப் பின்னில் தரும்.

இது மிகவும் எளிமையாகத் த�ோன்றினாலும், இதுதான்


டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸின் ஆதாரம். இது மிகவும் எளிமையாக
இருப்பதால் புரிந்துக�ொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். மேலும் சில
உதாரணங்களைப் பார்க்கலாம்.

16 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


மேலே கூறப்பட்ட மூன்று உதாரணங்களிலும் அந்த குறிப்பிட்ட
எண்களின் சேர்க்கையைத் தவிர, வேறு எந்த எண்களின்
சேர்க்கையைக் க�ொடுத்தாலும் வெளியீடு பின்னில் “0” மட்டுமே
வரும்.

ஆகவே, இந்த தீர்வில் ஒரு குறிப்பிட்ட எண் சேர்க்கைக்கு


மட்டுமே வெளியீட்டு பின்னில் “1” ஐத் தரும். இந்த முறையில் ஒரு
குறிப்பிட்ட எண் சேர்க்கைக்குத் தீர்வு காண்பதற்கு மூன்று Step-கள்
உள்ளன.

Step 1:
எண் சேர்க்கையில் எவ்வளவு எண்கள் உள்ளனவ�ோ, அவ்வளவு
உள்ளீடு பின்கள் உள்ள “AND Gate”-ஐத் தேர்வு செய்யவேண்டும்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 17


உதாரணம்:

3 உள்ளீடு பின்கள் உள்ள AND Gate

உதாரணம்:

5 உள்ளீடு பின்கள் உள்ள AND Gate

Step 2:
எந்த உள்ளீடு பின்னில் “1” இருக்கிறத�ோ, அந்த பின்னை நேரடியாக
“AND Gate”- உடன் இணைக்கவும்.

18 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


உதாரணம்:

Step 3:
எந்த உள்ளீடு பின்னில் “0” இருக்கிறத�ோ அந்த பின்னை “Not
Gate” வழியாக “AND Gate” உடன் இணைக்கவும்.

உதாரணம்:

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 19


டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் உள்ள C-L பிரச்சனைக்குத் தீர்வு
காண்பது மிகவும் சுலபம். நாம் ஏற்கனவே ஒரு அடியை எடுத்து
வைத்துவிட்டோம். அதாவது ஒரு குறிப்பிட்ட எண் சேர்க்கை (C-L)
உள்ள டிஜிட்டல் எலக்ட்ரானிக் பிளாக்கிற்கு எப்படி தீர்வு காண்பது
என்று இதுவரைப் பார்த்தோம். ஒரு டிஜிட்டல் எலக்ட்ரானிக் பிளாக்
கிற்கு இரண்டு பெயர்கள் இருந்தால் எவ்வாறு தீர்வு காண்பது என்று
பார்க்கலாம். உதாரணமாக நமக்கு இரண்டு பெயர்கள் இருந்தால்
(வட்டில்
ீ ஒரு பெயர், கல்லூரியில் ஒரு பெயர்) யார் இந்த இரண்டு
பெயர்களில் ஒரு பெயரைக் கூப்பிட்டாலும் உடனே “ஆம்” என்று
ச�ொல்வோம். அதேப�ோல் டிஜிட்டல் எலக்ட்ரானிக் பிளாக்கிற்கு 2
பெயர்கள் இருந்தால், எந்த பெயரைக் கூப்பிட்டாலும் அந்த பிளாக்
அதன் வெளியீடு பின்னில் “1” மட்டுமே தரும்.

உதாரணம்:

20 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


தீர்வு:

மேலே உள்ள பிளாக்கில் 1101 என்ற உள்ளீட்டு எண் சேர்க்கைக்கு


பிளாக் “X”-ம், 1001 என்ற உள்ளீடு எண் சேர்க்கைக்கு பிளாக்
“Y”-ம், “1”-ஐ அந்த அந்த பிளாக்கின் வெளியீடு பின்னில் தரும்.
இந்த இரண்டு பிளாக்குகளின் வெளியீடு பின்களின் “OR Gate”-ன்
உள்ளீடு பின்களாக இருப்பதால், இந்த இரண்டு உள்ளீடு பின்களில்
எந்த பின்னில் “1” வந்தாலும் வெளியீடு பின்னில் “1” வரும். ஆகவே
“1101” அல்லது “1001” என்ற இரண்டு எண் சேர்க்கைகளுக்கும் “OR
Gate”-ன் வெளியீடு பின்னில் “1” கிடைக்கும். ஆனால் இந்த இரண்டு
எண் சேர்க்கைகளைத் தவிர, மற்ற எல்லா எண் சேர்க்கைகளுக்கும்
X மற்றும் Y பிளாக்குகள் “0” என்ற வெளியீட்டினைத் தருவதால்
“OR Gate”-ன் வெளியீட்டு பின்னில் “1” மட்டுமே வரும். அடுத்து X
மற்றும் Y பிளாக்குகளை விரிவாக்கிப் பார்க்கலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 21


இந்த முறையை டிஜிட்டல் பிளாக்குகளுக்கு எவ்வளவு பெயர்
இருந்தாலும் உபய�ோகப்படுத்தலாம்.

அதேப�ோல் இந்த முறையை டிஜிட்டல் பிளாக் உள்ளீடு பின்கள்


எவ்வளவு இருந்தாலும் உபய�ோகப்படுத்தலாம்.

22 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


இதனைப் ப�ொதுவாக ப�ொறியாளர் கீ ழ்க்கண்ட முறையில்
குறிப்பிடுவர்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 23


அதாவது 3 உள்ளீடு பின்கள் இருப்பதால் 23=8 விதமான
சேர்மாணங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை சேர்மாணங்களுக்கு ‘0’
வெளியீடாகவும், எத்தனை சேர்மாணங்களுக்கு ‘1’ வெளியீடாகவும்
வரும் என்பதை அந்த அட்டவணைப் பட்டியலிடுகிறது. ஆனால்
நமது முறை யில் எத்தனை சேர்மாணங்களுக்கு ‘1’ மட்டும்
வெளியீடாக வருகிறது என்பதைக் குறிப்பிடுகிற�ோம். இந்த
அட்டவணை முறையிலும் நாம் எந்த சேர்மாணங்களில் ‘1’
வெளியீடாக வருகிறத�ோ, அவற்றை மட்டும் தனியே எடுத்து தீர்வு
காண்கிற�ோம். ‘1’ வெளியீட்டிற்கு தீர்வு கண்டால், அது தானாகவே ‘0’
வெளியீட்டிற்கும் தீர்வாக அமை கிறது.. இப்பொழுது நாம் இதனை
மேலும் உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இந்த உதாரணத்தில் 4
உள்ளீடு பின்கள் உள்ளன. ஆகவே 24= 16 சேர்மாணங்கள் உள்ளன.
இவற்றில் சில சேர்மாணங்களுக்கு மட்டுமே ‘1’ வெளியீடாக உள்ளது.
அவற்றிற்கு மட்டும் நாம் தீர்வு காணவேண்டும்.

24 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


நாம் இதுவரை ஒரே ஒரு வெளியீடு பின் உள்ள டிஜிட்டல்
பிளாக்குகளைப் பற்றி பார்த்தோம். இனி, இரண்டு அல்லது அதற்கு
மேல் வெளியீடு பின் உள்ள டிஜிட்டல் பிளாக்குகளைப் பற்றி
பார்க்கலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 25


மேலே உள்ள டிஜிட்டல் பிளாக்கில் மூன்று உள்ளீடு பின்களும்
இரண்டு வெளியீடு பின்களும் உள்ளன. இந்த டிஜிட்டல் பிளாக்கிற்கு
எப்படி தீர்வு காண்பது என்று பார்ப்போம். இந்த டிஜிட்டல் பிளாக்கில்
இரண்டு வெளியீடு பின்கள் உள்ளன. ஆகவே, நாம் இந்த ஒரு
பிரச்சனையை இரண்டு பிரச்சனைகளாக மாற்றுவ�ோம்.

இந்த இரண்டு டிஜிட்டல் பிளாக்குகளையும் ஒவ்வொன்றாக தீர்வு


காணலாம்.

26 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


முதலில் ‘X’ பிளாக்கைப் பற்றி பார்க்கலாம். நாம் மேலே உள்ள
அட்டவணையில் ‘Y0’ வெளியீட்டுப் பின்னில் எந்த சேர்க்கைகளில்
‘1’ இருக்கிறத�ோ, அதனை வேறு ஒரு அட்டவணையில் ப�ோட்டு
தீர்வு காணவேண்டும்.

இதே ப�ோல் ‘y1’ வெளியீட்டு பின்னுக்கும் தீர்வு காணலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 27


இதே முறையை உபய�ோகித்து எத்தனை வெளியீடு பின்கள்
இருந்தாலும், எத்தனை உள்ளீடு பின்கள் இருந்தாலும் பிரச்சனையை
எளிதாகத் தீர்க்கமுடியும்.

‘n’ உள்ளீட்டு பின்கள், ‘m’ வெளியீட்டு பின்கள் என்பது ப�ொதுவாக


எல்லா “Combinational Logic” பிரச்சனைகளும் குறிப்பிடும் முறை.

28 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


இதில் ‘n’ மற்றும் ‘m’-ஐக் குறிப்பிடும்போது, நாம்

என்று குறிப்பிடுகிற�ோம். இதற்கு n இணைப்புகள் அல்லது m


இணைப்புகள் என்று ப�ொருள். n-ற்கு பதிலாக எந்த எண்ணையும்
மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக n=5 என்றால் 5 இணைப்புகள்
என்றும், n=4 என்றால் 4 இணைப்புகள் என்றும் ப�ொருள். அதே
ப�ோல் m-ற்கு பதிலாக எந்த எண்ணையும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக m=3 என்றால் 3 இணைப்புகள் என்றும், m=4 என்றால்
4 இணைப்புகள் என்றும் ப�ொருள். இந்த காம்பினேஷனல் லாஜிக்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் எளிது. நாம் அதனை
ஒரு செயல்பாடாகக் (Process) கருதி சில விதிமுறைகளைக் கடை
பிடிக்க வேண்டும்.

பிரச்சனை:

இதற்கு கீ ழ்க்கண்ட வழிமுறைகளை ஒன்றன் பின் ஒன்றாய்


பயன்படுத்தினால் சுலபமாக தீர்வு காணலாம். இதற்கு திட்டமிடுதல்
(Planning) மற்றும் செயல்படுத்துதல் (Execution) என்று பெயர்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 29


எந்த ஒரு பிரச்சனையையும் முதலில் தெளிவாக திட்டமிட
வேண்டும். ப�ொறுமையாக சிறிய பிரச்சனைக்கு முதல் தீர்வுகாண
வேண்டும்.

எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த முறையை உபய�ோகித்தால்


எளிதில் தீ ர் வு காணப்பட்டுவிடும். நாம் இந்த முறையை
“காம்பினேஷனல் லாஜிக்” பிரச்சனைக்குத் தீ ர் வு காண்பதற்கு
உபய�ோகப்படுத்தலாம்.

பிரச்சனை:

திட்டமிடுதல்:

STEP 1:

ஒரு பெரிய பிரச்சனையை இரண்டு சிறிய பிரச்சனைகளாக (‘x’


மற்றும் ‘y’) பிரித்துக�ொள்வோம்.

30 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


STEP 2:

ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியாக தீர்வுகாண வேண்டும்.


அதற்கு ஒவ்வொரு டிஜிட்டல் பிளாக்கின் வெளியீடு பின்னிற்கு
ஒரு புது அட்டவணை தயாரிக்கவேண்டும். அதனை முக்கிய
அட்டவணையிலிருந்து ஒவ்வொரு வெளியீடு பின்னிற்கும் ஏற்றாற்
ப�ோல் ‘வெளியீடு’ பின்னில் ‘1’ வரும் எண் சேர்க்கைகளை மட்டும்
அட்டவணையிட வேண்டும்.

Y0 வெளியீடுபின்

புது அட்டவணையில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு “டிஜிட்டல்


பிளாக்”-ஐ வரையலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 31


Y1 வெளியீடு பின்

STEP 3:

இந்த சிறிய டிஜிட்டல் பிளாக்குகளை ஒவ்வொன்றாகப் பிரிக்க


வேண்டும்.

32 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


நாம் பிரச்சினையை மிகவும் சிறியதாக்கிவிட்டோம். இனி
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்.

தீர்வு காணுதல்:

STEP 4:

STEP 5:

Step 4-ல் தீர்வு கண்ட டிஜிட்டல் பிளாக்குகளை ஒன்று சேர்ப்போம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 33


STEP 6:

நாம் Step 5-ல் தீர்வு கண்ட ‘x’ மற்றும் ‘y’ டிஜிட்டல் பிளாக்குகளை
ஒன்றிணைத்து பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

இந்த முறையை உபய�ோகித்து சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


டிஜிட்டல் பிளாக்குகளை எவ்வாறு வடிவமைப்பது.

உதாரணம் 1: பைனரி கூட்டல் செய்யும் பிளாக்

நாம் எவ்வாறு எண்களைக் கூட்டுகிற�ோம்.

34 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


4 + 5 = 9

ஆனால் சில சமயம் இரட்டை இலக்க எண் வெளிவரும்.

7 + 8 = 15

ஆனால், ஒரு வெள ீயிடு பின்னில் ஒரே ஒரு இலக்க எண் தான்
வெளியிட முடியும் என்றால், இதனைக் கீ ழ்க்கண்டவாறு குறிப்
பிடலாம்.

இதில் ‘5’-ஐ SUM என்றும் ‘1’-ஐ CARRY என்றும் அழைக்கிற�ோம்.


எண்களை A,B என்று அழைக்கலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 35


இதே முறையை எப்படி இரண்டு பைனரி எண்களை கூட்டுவதற்குப்
பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

0+0 = 00 0+1 = 01 1+0 = 01 1+1 = 10

இதில் நமக்குத் தேவையான டிஜிட்டல் பிளாக் மற்றும் அட்ட


வணை கிடைத்துவிட்டது. ஆகவே இந்தப் பிரச்சனைக்கு எளிதில்
தீர்வு காணலாம்.

36 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


STEP 1:

STEP 2:

STEP 3:

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 37


STEP 4:

STEP 5:

STEP 6:

38 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


நாம் முழு பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிட்டோம்.

இதுவரை ஒரு சிறிய கூட்டலை எவ்வாறு “காம்பினேஷனல்


லாஜிக்” மூலம் செய்வது என்று பார்த்தோம். அடுத்து இதனைக்
க�ொண்டு எவ்வாறு இரண்டு இலக்க பைனரி எண்களை கூட்டல்
செய்வது என்று பார்ப்போம். முதலில் இரண்டு இலக்க டெசிமல்
எண்களை எவ்வாறு நாம் கூட்டல் செய்வோம் என்று பார்ப்போம்.

இதில் முதல் இலக்கத்தை கூட்டும்போது நாம் 6, 8 ஆகிய இரண்டு


ஒற்றை இலக்க எண்களைக் கூட்டின�ோம். நமக்கு 14 என்ற விடை
கிடைத்தது. இந்த எண் இரண்டு இலக்க எண்ணாக இருப்பதால்
நமக்குக் கிடைத்த 14 என்ற விடையை 1 மற்றும் 4 என இரண்டு
எண்களாகப் பிரித்து 4-ஐ விடையில் எழுதின�ோம். ஆனால் 1-ஐ
அடுத்த இலக்கத்தின் மேல் எழுதின�ோம். இதனை “Carry Forward”
என்று அழைக்கிற�ோம். அடுத்து இரண்டாவது இலக்கத்தைக் கூட்டல்
செய்யலாம். இதில் இரண்டு எண்கள் உள்ளன. அவை 7 மற்றும்
6. ஆனால் நாம் இந்த இரண்டு எண்களுடன் Carry-யும் சேர்த்து
கூட்டல் செய்கிற�ோம். ஆகவே இரண்டாவது இலக்கத்தைக் கூட்டல்
செய்யும்போது, நாம் மூன்று எண்களைக் கூட்டல் செய்கிற�ோம்.

நமக்கு 14 என்ற விடை கிடைக்கிறது. இந்த எண்கள் இரண்டு


இலக்க எண்கள் என்பதால், நாம் 14-ஐ அப்படியே எழுதுகிற�ோம்.
ஆகவே நமக்கு 144 என்ற விடை கிடைக்கிறது. ஆகவே முதல்
இலக்கக் கூட்டலுக்கும் மற்ற இலக்கக் கூட்டலுக்கும் வித்தியாசம்
உள்ளது. முதல் இலக்கத்தில் 2 எண்களைக் கூட்டல் செய்கிற�ோம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 39


இரண்டாம் இலக்கத்தில் 3 எண்களை (Carry-யும் சேர்த்து) கூட்டல்
செய்கிற�ோம். இதே முறையைத்தான். பைனரி எண்கள் கூட்டலிலும்
செய்கிற�ோம்.

இதற்கான அட்டவணையைப் பார்க்கலாம்.

இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று நமக்குத்


தெரியும். இனி இந்த இரண்டு டிஜிட்டல் பிளாக்குகளையும் இணைத்து
எவ்வாறு இரண்டு இலக்க பைனரி எண்களைக் கூட்டல் செய்வது
என்று பார்க்கலாம். இதற்கு முன், மீ ண்டும் ஒருமுறை நாம் எப்படி
இரண்டு இலக்க டெசிமல் எண்களை கூட்டல் செய்கிற�ோம் என்பதை
தெரிந்துக�ொள்வோம்.

40 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


முதலில் இரண்டு எண்களின் முதல் இலக்கத்தைக் கூட்டுகிற�ோம்.
முதல் எண்ணை “A” என்றும் இரண்டாம் எண்ணை “B” என்றும்
அழைத்தால், அதன் இலக்கங்களை (A1, A0), (B1, B0) என்று
அழைக்கலாம்.

76+48 என்ற கூட்டலில் 76-ஐ முதல் எண்ணாகவும் (A), 48-ஐ


இரண்டாம் எண்ணாகவும் (B) எடுத்துக்கொண்டால், முதல் எண்ணின்
முதல் இலக்கம் 6(A0) இரண்டாம் இலக்கம் 7(A1). இரண்டாம்
எண்ணின் முதல் இலக்கம் 8(B0) இரண்டாம் இலக்கம் 4(B1). நாம்
இந்த இரண்டு இலக்க எண்ணைக் கூட்டலாம்.

நமக்கு 124 என்ற விடை கிடைத்தது. இதனை கீ ழ்க்கண்டவாறு


வரையலாம்.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 41


இதே முறையை பைனரி எண்ணிற்கும் உபய�ோகப்படுத்தலாம்.

எண் A10 A1= 1; A0 = 0;

எண் B11 B1= 1; B0 =1;

A1 A0 + B1 B0 = C1 S1 S0

42 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 43
இதேப�ோல் எத்தனை இலக்க (bit) பைனரி எண்களை
வேண்டுமானாலும் கூட்டல் செய்யலாம். உதாரணமாக 2 இலக்க,
3 இலக்க, 4 இலக்க, … n இலக்க. ‘n’-ற்கு பதிலாக எந்த எண்ணை
வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, 8 இலக்க
பைனரி எண்களை எவ்வாறு கூட்டுவது என்று பார்க்கலாம்.

இந்த 8 இலக்க Adder டிஜிட்டல் சர்க்யூட்களில் அதிகமாக


உபய�ோகப்படுத்தப்படுகிறது. இதேப�ோல் 16 இலக்க / 32 இலக்க/
64 இலக்க Adder-களும் உள்ளன. இதனைக் கீ ழ்க்கண்டவாறும்
குறிப்பிடலாம்.

44 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


மேலே உள்ள படத்தில் A,B மற்றும் S எண்களுக்கு 8 பின்களும்
C-க்கு ஒரே ஒரு பின் மட்டுமே உள்ளது.

இது வரை நாம் எப்படி டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸை உபய�ோகித்து


கூட்டல் செய்வது என்று பார்த்தோம். அடுத்து டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸை உபய�ோகித்து கழித்தல் செய்வது என்பதை
தெரிந்துக�ொள்வோம்.

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் கழித்தலுக்கும் கூட்டலையே


உபய�ோகிக்கலாம். உதாரணமாக நாம் 9 - 3 என்ற கழித்தலை
9-லிருந்து 3-ஐ கழித்து விடை 6 என்று கூறுவ�ோம். இதனையே 9 +
(9 - 3) +1 என்று செய்யலாம். இது சிறிது குழப்பமாகத் தெரிந்தாலும்,
9’S Compliment, 10’s Compliment என்று இதனை அழைப்பர். இதை
பள்ளியில் நாம் படித்திருப்போம்.

எண் #1 = 9

எண் #2 = 3

எண் #1 - எண் #2 = 6

இதே கழித்தலை எவ்வாறு கூட்டல் மூலம் செய்வது என்று


பார்க்கலாம். இதற்கு முதலில் எண் #2-ன் 10’s Compliment-ஐ கண்டு
பிடிக்கவேண்டும்.

9 - 3 = 6 - 9’S Compliment

(9 - 3) + 1 = 7 - 10’s Compliment

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 45


அதாவது எதிர் திசையில் இருந்துவருவது.

நாம் எவ்வாறு கூட்டல் முறையில் கழித்தல் செய்வது என்று


பார்க்கலாம்.

எண் #1 - 9

எண் #2-ன் 2’s Compliment - 7

விடை - 16 (1-ஐ நீக்கிவிட்டால் விடை 6)

பைனரி எண் கணிதத்தில் இரண்டே எண்கள் மட்டும் இருப்பதால்,


1’s Compliment 0-விற்கு ‘1’ என்றும், 1-ற்கு ‘0’-ம் வரும்

இத்துடன் ‘1’-ஐ கூட்டினால் 2’s Compliment வரும்.

முதலில் எவ்வாறு பைனரி முறையில் கழித்தல் செய்வது என்று


பார்க்கலாம்.

எண் #1 - 9 - 0 0 0 0 1 0 0 1

எண் #2 - 3 - 0 0 0 0 0 0 1 1

46 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


விடை - 6 - 0 0 0 0 0 1 1 0

இதனையே எவ்வாறு கூட்டல் மூலம் செய்வது என்று பார்க்கலாம்.


எண் 2-ன் 2’s Compliment-ஐ கண்டுபிடிக்கலாம்.

எண் #1 - 0 0 0 0 1 0 0 1

எண் #2-ன் 2’s Compliment - 1 1 1 1 1 1 0 1

விடை - 0 0 0 0 0 1 1 0 = 6

இதனை எவ்வாறு டிஜிட்டல் சர்க்யூட்டில் செய்வது என்று


பார்க்கலாம்.

Adder சர்க்யூட்:
B input-ல் NOT Gate உபய�ோகித்தால் நமக்கு 1’s Compliment

கிடைக்கிறது. Cin input-ல் 5V தருவதால் நமக்கு 2’s Compliment


கிடைக்கிறது.

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 47


Adder எண் 1-ஐயும், எண் 2-ன் 2’s Compliment-ஐயும் கூட்டுகிறது.
இதில் நமக்கு எண் 1-லிருந்து எண் 2-ஐ கழித்த விடை கிடைக்கிறது.
இப்படித்தான் subtractor வேலை செய்கிறது.

இது வரை Adder மற்றும் Subtractor எவ்வாறு வேலை செய்கிறது


என்று பார்த்தோம். இவற்றைப் பற்றி மேலும் விரிவாக அடுத்த
பாகங்களில் பார்ப்போம். அதேப�ோல் Multiplier, Divider, Mux, Demux,
Encoder, Decoder ப�ோன்ற செயல்பாடுகள் எவ்வாறு வேலை செய்
கின்றன என்பதைப் பற்றி எமது அடுத்த பாகங்களில் படிக்கலாம்.

48 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்


இதேப�ோல் “காம்பினேஷனல் லாஜிக்”-ல் எண்ணற்ற உபய�ோகங்கள்
உள்ளன. இவற்றைப் பற்றியும் அடுத்த பாகங்களில் விரிவாகப்
படிக்கலாம்.

கடைசியாக “காம்பினேஷனல் லாஜிக்”-ஐ ப�ொதுவாக கீ ழ்க்கண்ட


வாறு குறிப்பிடுவர்.

‘n’ உள்ளீடு பின்களும் ‘m’ வெளியீடு பின்களும் உள்ளன. ‘n’ உள்ளீடு


பின்கள் இருப்பதால் 2n சேர்க்கைகள் உள்ளன. உதாரணமாக n = 3-ஆக
இருந்தால் 23-8 சேர்க்கைகள் (000, 001, 010, 011, 100, 101, 110, 111)
உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் எந்த வெளியீடுகள், வெளியீடு
பின்னில் தேவை என்று முதலில் கணிக்கவேண்டும். (உதாரணமாக
m=2 என்று வைத்துக்கொண்டால் (000-00, 001-01, 010-01, 011-10,
100-01, 101-10, 110-10, 111-11) என எல்லா 8 சேர்க்கைகளுக்கும்
வெளியீடு பின்கள் தெரியும். இதனை உபய�ோகித்து இந்த டிஜிட்டல்
பிளாக்கிற்கு எளிதில் தீர்வு காணலாம். இந்த ‘காம்பினேஷனல்
லாஜிக்’-ல் எந்த ஒரு குறிப்பிட்ட உள்ளீடு பின் சேர்க்கைக்கு ஒரு
குறிப்பிட்ட வெளியீடு கிடைக்கும். இது எப்போதும் மாறாது.

https://www.quora.com/Balajee-Seshadri/answers

பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 49


எங்களின் பிற வெளியீடுகள்
பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 51
பாலாஜி 1963ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்பொழுது
திருவாரூர்) உள்ள கூத்தனுர் கிராமத்தில் பிறந்தார். கூத்தனுர்
கிராமத்தில் உள்ள “அப்பு குட்டை” பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை
படித்தார். பின்னர் மன்னார்குடியில் உள்ள கணபதி விலாஸ் பள்ளியில்
8ஆம் வகுப்பு வரை படித்தபின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
மன்னார்குடியில் உள்ள நேஷனல் மேல்நிலை பள்ளியில் படித்தார்.
பி.இ (EEE) ப�ொறியியல் படிப்பினை காரைக்குடி அழகப்பா ப�ொறியியல்
கல்லூரியில் படித்த பின் கரக்பூர் ஐஐடில் M.Tech (Instrumentation)
படிப்பினை 1986ஆம் வருடம் முடித்தார்.

1987ஆம் ஆண்டு சனவரி மாதம் HCL கம்பெனியில் R&D (H/W)


பிரிவில் வேலை செய்யத் துவங்கி இன்று வரை (2017) கடந்த 30
வருடங்களில் மின்னணுதுறையில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு
கம்பெனிகளில் வேலை செய்துள்ளார். ச�ொந்தமாகவும் கம்பெனிகள்
நடத்தியுள்ளார்.

30 வருட மின்னணு துறை அனுபவத்தில் 10 வருடங்கள் அமெரிக்கா,


ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பணிபுரிந்துள்ளார். மின்னணு
துறையில் HW, SW மற்றும் VLSI பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
நிறைய மின்னணு ப�ொருட்கள் வடிவமைத்துள்ளார்.

தமிழ் மீ தும், தமிழ் மக்கள் மீ தும், தமிழ்நாட்டின் மீ தும் உள்ள


தீராத ஆசையினால் தனது 30 வருட மின்னணு துறை அனுபவங்களை
புத்தகங்களாக எழுதுகிறார்...
~ 50

52 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 2 - காம்பினேஷனல் லாஜிக்

You might also like