Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 52

ELECTRONIC MIRACLES

டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

பாகம் - 1 ஓர் அறிமுகம்

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 1


2 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்

https://www.clubhouse.com/club/core-electronics-career
டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

பாகம் - 1
ஓர் அறிமுகம்

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்
whatsapp: 97908 73099
https://www.quora.com/profile/Balajee-Seshadri
1,60,00,000 Content Views
33,000 Followers
1,200 Answers

https://www.linkedin.com/in/balajeeseshadri/
12,000+ Connections
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்
1
பாலாஜி

முதல் பதிப்பு: ஜூன் 2017


வெளியிடுவ�ோர்: சார்க் பப்ளிகேஷன்
நெ.28, டாக்டர் அம்பேத்கர் ர�ோடு, க�ோடம்பக்கம்,
சென்னை - 600 024.
வடிவமைப்பு: சார்க் டிசைனிங் சென்டர்
பக்கங்கள்: 48

விலை: Rs.50
0

DIGITAL ELECTRNOCS
Balajee

© SHARK PUBLICATION
First Edition: June 2017
Published by SHARK PUBLICATION
No.28, Dr.Ambedkar Road, Kodambakkam, Chennai - 600 024.
Layout: Shark Designing Centre - 90250 44447
Pages: 48

Price: Rs.50

புத்தகம் வாங்க த�ொடர்புக்கு

அச்�ப் �த்தகங்கள் அேமசான்


இைணய தளத்தில்
கிைடக்கின்றன.

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic,
mechanical or other means, now known or hereafter invented, including photocoping and recording, or in any informa-
tion storage or retrieval system, without permission in writing from the Author.

4 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


முன்னுரை

"டிஜிட்டல்",

இன்று இது ஒரு மந்திர வார்த்தை. டிஜிட்டல் டிவி, டிஜிட்டல்


பணம், டிஜிட்டல் எகனாமி என எங்கும் டிஜிட்டல் மயம். ஆனால்
நிறைய பேருக்குத் தெரியாது டிஜிட்டல் என்பதன் அடிப்படை,
நாம் வட்டில்
ீ தினமும் ஸ்விட்சை ஆன்/ஆப் செய்வது என்று.
மனிதன் எப்பொழுது ஆம்/இல்லை என்றும் கூற ஆரம்பித்தான�ோ,
அப்பொழுதே டிஜிட்டல் துவங்கிவிட்டது. இன்று ஒவ்வொரு
எலக்ட்ரானிக் மாணவனும் "டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்” பற்றி மிகவும்
தெளிவுடனும், விரிவாகவும் அறிந்திருப்பது அவசியம். மிகவும்
எளிதில் புரிந்து க�ொள்ளக்கூடியது "டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்".

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக் க�ொள்ள எலக்ட்ரானிக்


மாணவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், நிறைய
செய்து பார்க்க வேண்டும். இதற்கான செலவுகள் மிகவும் குறைவு.
ஒவ்வொரு எலக்ட்ரானிக் மாணவரும், வட்டிலேய�ோ
ீ அல்லது
விடுதி அறையில�ோ ஒரு குட்டியான டிஜிட்டல் லேப் வைத்திருப்பது
மிகவும் அவசியம். முதலில் மிகவும் சிறிய ச�ோதனைகளைச் செய்து
பார்க்க வேண்டும். பின்னர் மெதுவாக கடினமான ச�ோதனைகளை
செய்து பார்க்க வேண்டும். இதுவே மெதுவாக HW அல்லது VLSI
அல்லது EMBEDDED லேப் ஆக மாறிவிடும். இதற்கான செலவு
மிகவும் குறைவு. “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது”, அதேப�ோல்
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் மிகவும் எளிமையாக இருந்தாலும், ஒரு
நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக உதவியாக இருக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 5


நன்றியுரை

எந்நன்றி க�ொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை


செய்ந்நன்றி க�ொன்ற மகற்கு.
- குறள்: 110

நான் வாழ்வில் உயர்வதற்கு உதவியவர்கள் ஏராளம்.


ஒவ்வொருவருக்கும் எனது ஒவ்வொரு புத்தகத்தையும் காணிக்கை
யாக்குகிறேன். இந்தப் புத்தகத்தினை எனது கல்லூரிப் பேராசிரியர்
திரு. நாகராஜன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். B.E., EEE
பிரிவில் நான்காவது செமஸ்டர் படித்துக் க�ொண்டிருந்த ப�ோது
நானும் எனது நண்பர் சுவாமிநாதனும் ஒருவித ஆனந்தத்தோடு
"டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்" சர்க்யூட்களை லேபில் செய்து
பார்த்துக் க�ொண்டிருந்தோம். எங்களுக்கு செய்முறையில் வரும்
சந்தேகங்களை தீர்த்துக் க�ொள்வதற்கு நாங்கள் அடிக்கடி திரு.
நாகராஜன் அவர்களை அணுகுவ�ோம். எதையும் எளிய முறையில்
மாணவர்களுக்குப் புரியும்படி விளக்குவது அவரது சிறப்பு. அவரைச்
சுற்றி எப்பொழுதும் மாணவர்கள் இருந்து க�ொண்டே இருப்பார்கள்.
எங்களது ஆர்வத்தைக் கண்டு ஒரு நாள் எங்களைப் பார்த்து B.E.
பகுதி நேர வகுப்புகள் இரவில் நடைபெறுவதாகவும், இரவு 9.30
வரை லேப் திறந்திருக்கும் என்றும், லேபில் டிஜிட்டல் சர்க்யூட்களை
செய்து பார்க்குமாறும் கூறினார். அது எனது வாழ்வில் எவ்வளவு
பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்பதனை வார்த்தைகளால்
விவரிக்க இயலாது. ஏதாவது ஒரு மின்னணு ப�ொருள் வேலை
செய்யவில்லை என்றால், முதலில் நம்மைப் பிரித்துப் பார்த்து
சரி செய்யச் ச�ொல்வார், பிறகு மெக்கானிக்கிடம் தரச் ச�ொல்வார்.
மாணவர்களுடன் உரையாடி, செய்முறைகள் ச�ொல்லிக் க�ொடுத்த
திரு. நாகராஜன் ப�ோல் எல்லோருக்கும் ஓர் ஆசிரியர் கல்லூரியில்
கிடைத்துவிட்டால் வாழ்வில் அவர்களது வெற்றி உறுதி.

நன்றி.

6 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


பதிப்புரை

சார்க் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இந்த புத்தகத்தை வெளியிடு


வதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு. தமிழில் இதுப�ோன்ற
புத்தகம் நிறைய இருந்தாலும் இது சற்று புதியது. காரணம், இதன்
ஆசிரியர் 30 ஆண்டுகள் மின்னணு துறையில் அனுபவம் நிறைந்தவர்.
அந்த அனுபவ அறிவையே புத்தகமாகத் தந்துள்ளார்.

கற்றதும் பெற்றதும் சேரும்போது, அதன் பலன் அதிகம்.


இப்புத்தகத்தை நீங்கள் படிப்பத�ோடு மட்டும் இல்லாமல், இதில்
க�ொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி முயற்சி செய்தீர்கள்
என்றால் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவர்கள்.

வாழ்த்துக்களுடன்

சார்க் பதிப்பகம்

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 7


டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸ்
(DIGITAL ELECTRONICS)

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பற்றி விரிவாக படிக்கும் முன், டிஜிட்டல்


எலக்ட்ரானிக்ஸ் நமக்கு ஏன் தேவைப்படுகிறது என்று பார்க்கலாம்.
பள்ளியில் கணிதம் கற்கும் ப�ோது நமக்கு கூட்டல், கழித்தல்,
பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கு செயல்பாடுகளைப் பற்றி
கற்பிக்கப்படுகிறது. இந்த நான்கு செயல்பாடுகளும் நமது வாழ்விற்கு
அடிப்படையானவை. நாம் இந்த நான்கு செயல்பாடுகளைத் தவிர,
வேறு சிலவற்றையும் செய்கிற�ோம். ஆனால் அதற்கு அதிக
முக்கியத்துவம் க�ொடுப்பதில்லை.

முதலாவதாக “எல்லோரும்” வந்துவிட்டால் பேருந்து புறப்படும்.


இங்கு நாம் அந்தப் பேருந்தில் 10 இடங்கள் இருக்கிறதா? 20 இடங்கள்
இருக்கிறதா? என்று பார்ப்பதில்லை.

அதேப�ோல் வகுப்பறையில் யாரேனும் ஒருவர் வந்திருந்தால்


மின் விளக்கு மற்றும் மின் விசிறியை ஆன் செய்யவும். இங்கும் 4
பேரா அல்லது 10 பேரா என்று ஆய்வு செய்வதில்லை. யாரேனும்
ஒருவர் வந்திருந்தால் ப�ோதும்.

அதேப�ோல் வட்டில்
ீ EB தரும் மின் சப்ளை நின்றுவிட்டால்
எமர்ஜென்சி விளக்கு ஆன் ஆகிறது.. மீ ண்டும் EB தரும் மின் சப்ளை
வந்து விட்டால், எமர்ஜென்சி விளக்கு ஆப் ஆகிறது.

இந்த மூன்று செயல்பாடுகளைப் பற்றி பள்ளி நாட்களில் அதிகம்


படிப்பதில்லை. ஆனால் இந்த கம்ப்யூட்டர் யுகத்திற்கு அடிப்படையே
இந்த மூன்று செயல்பாடுகள் தான். கம்ப்யூட்டரில் இவற்றைக்
க�ொண்டு தான் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 9


ஆகிய செயல்பாடுகளை உருவாக்குகிறார்கள். ஆகவே நாம் இந்த
மூன்று செயல்பாடுகளைப் பற்றி விரிவாக இந்தப் புத்தகத்தில்
படிக்கப் ப�ோகிற�ோம்.

முதல் செயல்பாடு: எல்லோரும் வந்தவுடன் காரில் புறப்படலாம்.


உதாரணமாக கணேஷ், ஜேம்ஸ், சமீ ர் மற்றும் கவிதா ஆகிய
நால்வரும் காரில் பயணம் செய்கிறார்கள் என்றால், இதனை
கீ ழ்க்கண்டவாறு கூறலாம்.

கணேஷும், ஜேம்ஸும், சமீ ரும், கவிதாவும் அமர்ந்தவுடன் கார்


புறப்படும். இதனைக் கீ ழ்க்கண்டவாறும் எழுதலாம்.

கணேஷ் “AND” ஜேம்ஸ் “AND” சமீ ர் “AND” கவிதா அமர்ந்தவுடன்


கார் புறப்படும்.

இதில் “AND” என்ற செயல்பாடு எல்லோரையும் இணைப்பதால்


இதனை “AND” logic என்று அழைத்தனர். இதில் யார�ோ ஒருவர்
வரவில்லை எனில் கார் புறப்படாது. அதேப�ோல் இரண்டு பேரிலிருந்து
எவ்வளவு பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒருவர் வருவதை “1” என்றும், வரவில்லை என்பதை “0” என்றும்


அழைத்தால், அதேப�ோல் கார் புறப்படுவதை “1” என்றும் கார்
புறப்படாததை “0” என்றும் அழைத்தால்

10 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இந்த நால்வரில் யாராவது ஒருவர் வரவில்லை என்றாலும், கார்
புறப்படாது. இதனைக் கீ ழ்க்கண்டவாறும் கூறலாம்.

இந்த செயல்பாட்டினை “AND” செயல்பாடு என்று அழைப்பர்.

இரண்டாவது செயல்பாடு: யாராவது ஒருவர் வகுப்பறைக்கு


வந்திருந்தால், மின் விளக்கை ஆன் செய்யவும். ராஜன், சலீம், மேரி
இவர்களில் யாராவது ஒருவர் வகுப்பறைக்கு வந்திருந்தால், மின்
விளக்கை ஆன் செய்யவும். இதனைக் கீ ழ்கண்டவாறும் எழுதலாம்.

ராஜன் அல்லது சலீம் அல்லது மேரி, வகுப்பறைக்கு வந்திருந்தால்,


மின் விளக்கை ஆன் செய்யவும். இதனைக் கீ ழ்கண்டவாறும் குறிப்
பிடலாம்.

ராஜன் “OR” சலீம் “OR” மேரி, வகுப்பறைக்கு வந்திருந்தால்,


விளக்கை ஆன் செய்யவும். இதில் “OR” செயல்பாடு எல்லோரையும்
இணைப்பதால் இதனை “OR” Logic என்று அழைப்பர். இதில்
யாராவது ஒருவர் வந்திருந்தால் வகுப்பறையில் மின் விளக்கு ஆன்
ஆகிவிடும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 11


வகுப்பறைக்கு வருவதை “1” என்றும், வராததை “0” என்றும்
அழைத்தால், மின்விளக்கு ஒளிர்தலை “1” என்றும், ஒளிராததை
“0” என்றும் அழைத்தால், இந்த செயல்பாட்டினை “OR” செயல்பாடு
என்று அழைப்பர்.

மூன்றாவது செயல்பாடு: வட்டில்


ீ EB தரும் மின்சாரம் வர
வில்லையா? எமர்ஜென்சி விளக்கு ஆன் ஆகும். EB தரும் மின்சாரம்
வந்துவிட்டதா? எமர்ஜென்சி விளக்கு ஆப் ஆகும். இதனைக்
கீ ழ்கண்டவாறு எழுதலாம்.

“NO” EB மின்சாரம், மின்விளக்கு “ஆன்” ஆகும். “YES” EB மின்சாரம்,


மின் விளக்கு “ஆப்” ஆகும்.

இதில் “NOT” செயல்பாடு பிரதானமாக இருப்பதால், இதனை “NOT”


logic என்று அழைப்பர்.

12 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


EB மின்சாரம் இருப்பதை “1” என்றும் இல்லாததை “0” என்றும்
அழைத்தால், எமர்ஜென்சி விளக்கு ஒளிர்தலை “1” என்றும்,
ஒளிராததை “0” என்றும் குறிப்பிட்டால்

இதுவரை நாம் விவாதித்த “AND”, “OR” மற்றும் “NOT” செயல்பாடு


கள் மிகவும் எளிதாகப் புரிந்தாலும், இவை மூன்றும் தான் டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை. ஆகவே இவற்றை எவ்வாறு
எலக்ட்ரானிக்ஸ் ப�ொருள்கள் க�ொண்டு உருவாக்குவது என்று
பார்க்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ் என்பது மின்சாரத்தைக் க�ொண்டே மின்சாரத்தைக்


கட்டுப்படுத்துவதாகும். இதற்கு நாம் டிரான்சிஸ்டர் என்ற மின்னணு
(எலக்ட்ரானிக்ஸ்) ப�ொருளை உபய�ோகிக்கிற�ோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 13


நாம் மின்சாரத்தை இரண்டு வகைகளில் கட்டுப்படுத்தலாம்.
முதல் வகையில் சுவிட்ச் மூலமாகவும், இரண்டாம் வகையில்
ரெகுலேட்டர் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். சுவிட்ச் மூலமாகக்
கட்டுப்படுத்தப்படும் எலக்ட்ரானிக்ஸை “டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்”
என்றும் ரெகுலேட்டர் மூலமாகக் கட்டுப்படுத்தப்படும் எலக்ட்
ரானிக்ஸை “அனலாக் எலக்ட்ரானிக்ஸ்” என்றும் அழைப்பர். அதாவது
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் டிரான்சிஸ்டரை சுவிட்சாகவும்,
அனலாக் எலக்ட்ரானிக்ஸில் டிரான்சிஸ்டரை ரெகுலேட்டராக
உபய�ோகிக்கிற�ோம். இதனைப் பற்றி விரிவாக எமது எலக்ட்ரானிக்ஸ்
புத்தகத்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் விரிவாக டிஜிட்டல்
மின்னணுவியலைப் பற்றி படிக்கலாம்.

டிரான்சிஸ்டரை சுவிட்சாக உபய�ோகிக்கும் ப�ோது அதன்


கண்ட்ரோல் பின்னில் 0V க�ொடுத்தால், அது சுவிட்சை ஆப் செய்யும்.
அதேப�ோல் கண்ட்ரோல் பின்னில் 5V க�ொடுத்தால், அது சுவிட்சை
ஆன் செய்யும்.

டிரான்சிஸ்டரை சுவிட்சாக உபய�ோகிப்பதால் இனி, நாம்


டிரான்சிஸ்டருக்கு பதிலாக சுவிட்ச் குறியீட்டை உபய�ோகிப்போம்.

நாம் மின்னணு சுவிட்சை (டிரான்சிஸ்டர் சுவிட்சை) கட்டுப்படுத்து


வதற்கு 0V அல்லது 5V மின் அழுத்தத்தை உபய�ோகிக்கிற�ோம்.
ஆனால் சுவிட்ச் மின்சார ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. மின்சார
ஓட்டத்தை (Current) எப்படி மீ ண்டும் voltage-ஆக மாற்றுவது, நாம்
அதற்கு மின்தடையை உபய�ோகித்து V=IR என்ற ஓம்ஸ் விதியை
பயன்படுத்துகிற�ோம்.

14 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


NOT GATE

மேலே கண்ட படத்தில் சுவிட்சின் கண்ட்ரோல் 0V பின்னில்


க�ொடுத்தால் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும். அப்பொழுது Y
பின்னில் என்ன வ�ோல்டேஜ் இருக்கும்? இதனை ஆராய்வோம்.

மேலே உள்ள இணைப்பில் சுவிட்ச் ஆப் நிலையில் இருப்பதால்,


மின்தடை வழியாக மின்சார ஓட்டம் ஏற்படாது. ஆகவே மின்தடையின்
இடையே உள்ள வ�ோல்டேஜ் அளவு 0V-ஆக இருக்கும்.

Vr = I x R
Vr = 0A x 1K Ω = 0V
ஆகவே Y பின்னில் 5V இருக்கும்.
Y = 5V - Vr = 5V - 0V = 5V

ஆகவே இந்த இணைப்பில் A பின்னில் 0V க�ொடுத்தால் Y பின்னில்


5V இருக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 15


இப்பொழுது A பின்னில் 5V க�ொடுத்தால், Y பின்னில் என்ன
வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

A பின்னில் 5V க�ொடுத்தால் மின்னணு சுவிட்ச் ஆன் ஆகும்.


ஆகவே மின்தடை வழியாக மின்சார ஓட்டம் ஏற்படும். சுவிட்சின்
மின்தடை 0Ω-ஆக இருப்பதால், Y பின்னில் 0V கிடைக்கும்.
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் 0V மற்றும் 5V-ஐ, 0 மற்றும் 1 என்று
குறிப்பிடுகிற�ோம். இணைப்பில் A-க்கும் Y-க்கும் உள்ள த�ொடர்பை
ஓர் அட்டவணை மூலம் பார்க்கலாம்.

இதனை நாம் கீ ழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.

16 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இதனைப் பார்த்தவுடன் A-க்கும் Y-க்கும் உள்ள த�ொடர்பை
நம்மால் கூறமுடியாது. ஆகவே ப�ொறியாளர்கள் இதற்கு கீ ழ்க்கண்ட
குறியீட்டை க�ொடுத்தனர்.

இந்த இணைப்பை எப்படி அழைப்பது என்று ப�ொறியாளர்கள்


ஆல�ோசித்த ப�ோது, NOT மின்னணு இணைப்பு என்றும் அல்லது
NOT மின்னணு சுவிட்ச் என்றும் அழைக்கலாம் என்று முடிவு
செய்தனர். ஆனால் மின்னணு சுவிட்ச் என்பதனைச் சுருக்கி ஒரே
வார்த்தையில் அழைக்க விரும்பினார்கள்.

ஆகவே சுவிட்ச் என்று அழைத்தால் அது ப�ொதுவாக மின்சார


சுவிட்சையே குறிக்கும். ஆகவே புதுப் பெயரிட்டு அழைக்க
முயன்றார்கள். கதவும், சுவிட்சும் ஒரே வேலையைச் செய்கிறது.
சுவிட்ச் மின்சார ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. கதவு மனித
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே மின்னணு சுவிட்சை
GATE (கதவு) என்று அழைத்தனர். இனி நாமும் மின்னணு சுவிட்சை
கேட் (GATE) என்றே அழைக்கலாம். ஆகவே NOT மின்னணு
சுவிட்சை NOT GATE என்று அழைக்கலாம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 17


AND GATE

மேலே உள்ள இணைப்புப் படத்தில் A, B என இரண்டு பின்கள்


உள்ளதால் (0V, 0V), (0V, 5V), (5V,0V) மற்றும் (5V, 5V) என நான்கு
வழிமுறைகள் உள்ளன. இனி, ஒவ்வொரு வழிமுறையிலும் Y
பின்னில் என்ன வ�ோல்டேஜ் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

18 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


முதலில் நாம் A மற்றும் B பின்களில் 0V க�ொடுத்தால் Y பின்னில்
என்ன வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேலே உள்ள படத்தில் A மற்றும் B பின்னில் 0V க�ொடுப்பதால்


S1 மற்றும் S2 சுவிட்சுகள் ஆப் நிலையில் இருக்கும். ஆகவே m
பின்னில் 5V கிடைக்கும். (மின்சார ஓட்டம் 0A-ஆக இருப்பதால்)

Vr = I x R, = 0 x R = 0V

m = 5V - 0V = 5V

m பின்னில் 5V இருப்பதால் n பின்னிலும் 5V இருக்கும். இதன்


காரணமாக சுவிட்ச் S3 ஆன் நிலையில் இருக்கும். இதனால் Y
பின்னில் 0V கிடைக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 19


A மற்றும் B பின்களில் 0V மற்றும் 5V க�ொடுக்கலாம்.

A மற்றும் B பின்னில் 0V மற்றும் 5V க�ொடுப்பதால் S1 ஆப்


நிலையிலும் S2 ஆன் நிலையிலும் இருக்கும். இதனால் Y பின்னில்
0V கிடைக்கும்.

Vr = I x R, = 0 x R = 0V

m = 5V - 0V = 5V

இதன் காரணமாக, m பின்னில் 5V கிடைக்கும். m பின்னில் 5V


இருப்பதால் n பின்னிலும் 5V இருக்கும். இதன் காரணமாக சுவிட்ச்
S3-ஆன் நிலையில் இருக்கும். இதனால் Y பின்னில் 0V கிடைக்கும்.

20 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இங்கே A மற்றும் B பின்களில் 5V மற்றும் 0V க�ொடுத்தால் Y
பின்னில் என்ன வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

A மற்றும் B பின்னில் 5V மற்றும் 0V க�ொடுத்திருப்பதால் S1 ஆன்


நிலையிலும் S2 ஆப் நிலையிலும் இருக்கும். இதனால் Y பின்னில்
0V கிடைக்கும்.

Vr = I x R, = 0 x R = 0V

m = 5V - 0V = 5V

இதனால் m பின்னில் 5V கிடைக்கும். m பின்னில் 5V இருப்பதால்


n பின்னிலும் 5V இருக்கும். சுவிட்ச் S3 ஆன் நிலையில் இருக்கும்.
இதனால் Y பின்னில் 0V கிடைக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 21


இனி A மற்றும் B பின்களில் 5V இருந்தால் Y பின்னில் என்ன
வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

A மற்றும் B பின்னில் 5V க�ொடுத்திருப்பதால் S1 மற்றும் S2


சுவிட்சுகள் ஆன் நிலையில் இருக்கும். அப்போது m பின்னில் 0V
கிடைக்கும். m பின்னில் 0V இருப்பதால் n பின்னிலும் 0V இருக்கும்.
இதனால் சுவிட்ச் S3 ஆப் நிலையில் இருக்கும். இதனால் Y பின்னில்
5V கிடைக்கும்.

22 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இப்பொழுது A மற்றும் B பின்களின் எல்லா காம்பினேஷன்களையும்
அட்டவணையில் பட்டியலிடலாம்.

இதனைக் கீ ழ்க்கண்ட குறியீடு முறையில் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு சுவிட்சுகள் (A மற்றும் B) த�ொடர் முறையில் இணைக்கப்-


பட்டிருப்பதாலும் A மற்றும் (AND) B இரண்டுக்கும் 5V க�ொடுத்தால்
தான் Y பின்னில் 5V கிடைக்கும் என்பதால், இதனை AND GATE என்று
அழைக்கின்றனர்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 23


நாம் இரண்டல்ல, மூன்று, நான்கு என்று எவ்வளவு பின்களை
வேண்டுமானாலும் உள்ளீடு பின்னாக உபய�ோகப்படுத்தலாம்.

இந்த இணைப்பு முறையில் எவ்வளவு உள்ளீடு பின்கள் வேண்டு


மானாலும் இருக்கலாம்.

24 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


OR GATE

மேலே உள்ள இணைப்புப் படத்தில் A, B என இரண்டு பின்கள்


உள்ளதால் (0V, 0V), (0V, 5V), (5V,0V) மற்றும் (5V, 5V) என நான்கு
வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு வழிமுறையிலும் Y பின்னில்
என்ன வ�ோல்டேஜ் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 25


முதலில் நாம் A மற்றும் B பின்களில் 0V க�ொடுத்தால் Y பின்னில்
என்ன வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

A மற்றும் B பின்களில் 0V க�ொடுப்பதால் S1 மற்றும் S2 சுவிட்சுகள்


ஆப் நிலையில் இருக்கும். ஆகவே m பின்னில்5V கிடைக்கும்.
(மின்சார ஓட்டம் 0A-ஆக இருப்பதால்)

Vr = I x R, = 0 x R = 0V
m = 5V - 0V = 5V

m பின்னில் 5V இருப்பதால் n பின்னிலும் 5V இருக்கும். இதன்


காரணமாக சுவிட்ச் S3 ஆன் நிலையில் இருக்கும். இதனால் Y
பின்னில் 0V கிடைக்கும்.

26 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் A மற்றும் B பின்களில் 0V மற்றும் 5V க�ொடுத்தால் Y பின்னில்
என்ன வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நாம் A மற்றும் B பின்னில் 0V மற்றும் 5V க�ொடுப்பதால் S1 ஆப்


நிலையிலும், S2 ஆன் நிலையில் இருக்கும். ஆகவே மின்சார
ஓட்டம் மின்தடையில் ஏற்படும். ஆகவே m பின்னில் 0V கிடைக்கும்.
m பின்னில் 0V இருப்பதால் n பின்னிலும் 0V இருக்கும். இதன்
காரணமாக சுவிட்ச் S3 ஆப் நிலையில் இருக்கும். இதனால் Y
பின்னில் 5V கிடைக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 27


நாம் A மற்றும் B பின்களில் 5V மற்றும் 0V க�ொடுத்தால் Y
பின்னில் என்ன வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்ப்போம்.

நாம் A மற்றும் B பின்னில் 0V மற்றும் 5V க�ொடுப்பதால் S1 ஆன்


நிலையிலும், S2 ஆப் நிலையில் இருக்கும். ஆகவே மின்சார ஓட்டம்
மின் தடையில் ஏற்படும். ஆகவே m பின்னில் 0V கிடைக்கும். m
பின்னில் 0V இருப்பதால் n பின்னிலும் 0V இருக்கும். சுவிட்ச் S3
ஆப் நிலையில் இருக்கும். இதனால் Y பின்னில் 5V கிடைக்கும்.

28 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் A மற்றும் B பின்களில் 5V க�ொடுத்தால் Y பின்னில் என்ன
வ�ோல்டேஜ் கிடைக்கும் என்று பார்ப்போம்.

நாம் A மற்றும் B பின்னில் 5V மற்றும் 5V க�ொடுப்பதால் S1


ஆன் நிலையிலும், S2 ஆன் நிலையில் இருக்கும். ஆகவே மின்சார
ஓட்டம் மின் தடையில் ஏற்படும். ஆகவே m பின்னில் 0V கிடைக்கும்.
m பின்னில் 0V இருப்பதால் n பின்னிலும் 0V இருக்கும். சுவிட்ச் S3
ஆப் நிலையில் இருக்கும். இதனால் Y பின்னில் 5V கிடைக்கும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 29


A மற்றும் B பி ன்க ளின் எ ல்லா க ாம்பினே ஷ ன்களையு ம்
அட்டவணையில் பட்டியலிடலாம்.

இ ந ்த இ ணைப ் பை ந ா ம் கீ ழ ்க்கண்ட கு ற ி யீ டு மூ ல ம்
குறிப்பிடுகிற�ோம்.

30 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் AND Gate-ல் பார்த்தது ப�ோலவே இதிலும் 2,3,4 உள்ளீடு
பின்கள் இருக்கலாம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 31


நாம் இதுவரை AND, OR மற்றும் NOT GATE-கள் என்றால்
என்ன என்றும், அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்றும்
பார்த்தோம். மீ ண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிற�ோம் GATE-ன்
உள்ளே இருப்பது டிரான்சிஸ்டர்களும், ரெசிஸ்டர்களும் மட்டுமே.
சுவிட்சு இருக்கும் இடங்களில் எல்லாம் டிரான்சிஸ்டரை மாற்றிப்
பார்க்கவும்.

AND GATE

OR GATE

32 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


NOT GATE

ஆரம்பகாலங்களில் இந்த GATE-களை தனித் தனி டிரான்சிஸ்டர்கள்


மற்றும் ரெசிஸ்டர்களை உபய�ோகித்து உருவாக்கினார்கள்.

AND GATE

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 33


OR GATE

NOT GATE

எலக்ட்ரானிக்ஸ் ப�ொறியாளர்கள் மேலே ச�ொல்லப்பட்ட ப�ோர்டு


களை சிறிய பெட்டிகளில் வைத்து, உடனடியாக உபய�ோகிக்க
இயலும்படி உருவாக்கினார்கள்.

34 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


மேலே க�ொடுக்கப்பட்ட Vcc பின்னில் 5V-ஐயும்,
பெட்டிகளில்
GND பின்னில் 0V-ஐயும் தந்தால் மட்டுமே, இந்த GATE-கள் வேலை
செய்யும். இதை உபய�ோகித்துதான் ஆரம்ப காலங்களில் கால்
குலேட்டர் முதல் கம்ப்யூட்டர் வரை உருவாக்கினார்கள். பிறகு
IC-களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இந்த GATE-களை IC-க்குள்
அமைத்தார்கள்.

AND IC

OR IC

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 35


NOT IC

மேலே உள்ள IC-க்கள் வெளித் த�ோற்றத்திற்கு ஒரே மாதிரி


த�ோன்றும். ஆகவே எந்த IC என்ன செயல் புரிகிறது என்பதைத்
தெரிவிப்பதற்காக ப�ொறியாளர்கள், ஒவ்வொரு IC-க்கும் ஒரு
எண்ணை பெயராக அளித்தார்கள். உதாரணமாக 100 என்றால் ‘AND’
GATE, 101 என்றால் ‘OR’ GATE, 102 என்றால் ‘NOT’ GATE என்றும்
அழைத்தார்கள். அந்த எண், IC என்ன செயல் புரிகிறது என்று மட்டும்
உணர்த்துவதில்லை,

மேலும் அந்த எண், எந்த பின் என்ன செயல் செய்கிறது என்றும்


குறிக்கிறது. உதாரணமாக 100 எண்ணுள்ள IC ‘AND’ செயல் புரிகிறது.
மேலும் அதன் பின் 1, ‘A’ உள்ளீடாகவும், பின் 2, ‘B’ உள்ளீடாகவும்,
பின் 5 ‘Y’ வெளியீடாகவும், பின் 6 ‘Vcc’ சப்ளை பின்னாகவும்

36 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


பின் 3 ‘GND’ சப்ளை ‘Ground’ பின்னாகவும் பின் 4 NC (NO
connection) பின்னாகவும் செயல்படுகிறது. இதனைக் கீ ழ்க்கண்டவாறு
அட்டவணையில் குறிப்பிடலாம்.

பின்னர் ஒரே IC-ல் அதிக டிரான்சிஸ்டர்கள் மற்றும்


ரெசிஸ்டர்களை உள்ளே வைக்க முடிந்ததால் ஒரே IC-ல் பல
GATE-களை உள்ளே வைத்தார்கள். இங்கே மிகவும் பிரபலமான
சில IC-களை குறிப்பிடுகிற�ோம் மற்ற IC-களைப் பற்றி அடுத்த
பாகங்களில் படிக்கலாம்.

IC7408 - Four 2 input AND GATEs

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 37


மேலே உள்ள IC-ல் நான்கு 2 INPUT AND GATE-கள் உள்ளன. இந்த
நான்கு AND GATE-களும் ஒன்றுக்கொன்று த�ொடர்பில்லாதவை.
இவற்றை தனித் தனியாக உபய�ோகிக்கலாம்.

ஆனால் இந்த IC-க்கு Power supply க�ொடுத்தால் தான் இந்த IC


வேலை செய்யும்.

IC-7432 - Four 2 input OR GATEs

IC7406 - Six NOT GATEs

38 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் இந்த 7408, 7432 மற்றும் 7406 IC-களை எப்படி உபய�ோகிப்பது
என்று ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இதற்கு நாம் கீ ழே
உள்ள டிஜிட்டல் சர்க்யூட்டை உபய�ோகிக்கலாம். இது எவ்வாறு
வேலை செய்கிறது என்பதனை எமது அடுத்த புத்தகங்களில்
படிக்கலாம்.

மேலே உள்ள சர்க்யூட்டை வடிவமைக்க நமக்கு 2NOT


GATE-கள், 2 AND GATE-கள் மற்றும் 1 OR GATE தேவை. 7408-ல்
4 AND GATE-களும், 7406-ல் 6 NOT GATE-களும், 7432-ல் 4 OR
GATE-களும் உள்ளதால், நமக்கு ஒரு 7408, ஒரு 7406 மற்றும் ஒரு
7432 IC-கள் மட்டும் ப�ோதும். அடுத்து, நாம் மேலே உள்ள சர்க்யூட்டில்
ஒவ்வொரு IC-க்கும் சரியான பின் எண்ணை ஒதுக்குவ�ோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 39


நாம் இந்த IC-களை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.

இந்த IC-களை எப்படி நடைமுறையில் இணைப்பது என்று


பார்க்கலாம். ஒரு IC-ன் ஒரு பின்னையும் மற்றொரு IC-ன் ஒரு
பின்னையும் எவ்வாறு இணைப்பது. இதற்கு பல வழிகள் உள்ளன.
அவற்றைப் பற்றி நமது பிற புத்தகங்களில் படிக்கலாம். இங்கே நாம்
‘‘Bread board’’-ஐ உபய�ோகித்து எவ்வாறு IC பின்களை இணைப்பது
என்று பார்க்கலாம்.

BREAD BOARD

40 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


மேலே உள்ள ‘‘Bread board’’-ல் 24 Column-கள் உள்ளன.
ஒவ்வொரு Column-ம் தனித் தனியானவை. அவற்றுக்கிடையே எந்த
இணைப்பும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு Column-ன் 5 row-களும்
இணைக்கப்பட்டிருக்கும்.

நமது சர்க்யூட்டை எவ்வாறு “Bread Board”-ல் அசம்பிள் செய்வது


என்று கீ ழே உள்ள படத்தில் பார்க்கலாம்.

மேலே “Bread Board”-ல் அசெம்பிள் செய்த சர்க்யூட்டை General


Purpose PCB-யிலும் அசெம்பிள் செய்யலாம் அல்லது இந்த சர்க்யூட்
டிற்காக தனியாக PCB தயாரிக்கலாம். இவற்றைப் பற்றி விரிவாக
எமது “எலக்ட்ரானிக்ஸ் - PCB” என்ற புத்தகத்தில் படிக்கலாம்.

இதுவரை நாம் எவ்வாறு டிஜிட்டல் IC-களை உபய�ோகித்து


டிஜிட்டல் சர்க்யூட்களை உருவாக்குவது என்றும், எவ்வாறு
இணைப்பது என்றும் பார்த்தோம். இப்பொழுது நாம் உருவாக்கிய
சர்க்யூட் சரியாக வேலை செய்கிறதா என்று பரிச�ோதிக்க வேண்டும்.
நமது எலக்ட்ரானிக் சர்க்யூட்டில் இரண்டு உள்ளீடு பின்களும், ஒரு
வெளியீடு பின்னும் உள்ளது. இந்த உள்ளீடு பின்களில் (0,0), (0,1), (1,0)
மற்றும் (1,1) ஆகிய உள்ளீடுகளைக் க�ொடுத்து வெளியீடு பின்னில்
சரியான வெளியீடு வருகிறதா என்று பரிச�ோதிக்க வேண்டும். நமது

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 41


டிஜிட்டல் சர்க்யூட்டிற்கு ஏற்ற அட்டவணையைப் ப�ோல் உள்ளீடு
மற்றும் வெளியீடு சரியாக இருக்கிறதா என்று பரிச�ோதிக்க வேண்டும்.
இந்த சர்க்யூட்டிற்கான அட்டவணை கீ ழே க�ொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சர்க்யூட்டிற்குத் தரும் பவர் சப்ளை பின்னிலிருந்து 5V


மற்றும் GND-ஐ உள்ளீடு பின்களுக்குத் தரலாம். பின்னர் வெளியீடு
பின்னை பரிச�ோதிப்பதற்கு பல வழிகள் உள்ளன. மல்டிமீ ட்டரைக்
க�ொண்டு வெளியீடு பின்னின் வ�ோல்டேஜை பார்க்கலாம் அல்லது
ஒரு LED-ஐக் க�ொண்டும் பார்க்கலாம்.

இவற்றைப் பற்றி விரிவாக எமது “எலக்ட்ரானிக்ஸ் - செய்முறை”


புத்தகங்களில் படிக்கலாம்.

இதுவரை நாம் பார்த்த AND, OR மற்றும் NOT ஆகிய 3 மின்னணு


சுவிட்சு இணைப்பு முறைகளும் டிஜிட்டல் எலக்ட்ரானிஸிற்கு

42 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


அடிப்படை. மேலும் பல்வேறு மின்னணு இணைப்பு முறைகள் இருந்
தாலும் இவை மூன்றுமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. ஆகவே
இவை மூன்றையும் நன்றாகப் புரிந்துக�ொள்வது அவசியம்.

இதுவரை நாம் AND, OR மற்றும் NOT இணைப்பு முறைகளில்


உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் உள்ள த�ொடர்புகளைப் பார்த்தோம்.
அதேப�ோல் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் இடையே உள்ள நேர
இடைவெளியைப் பற்றி பார்ப்போம். அதாவது உள்ளீட்டுப் பின்னில்
மாற்றம் ஏற்படுத்தினால் அது வெளியீட்டுப் பின்னில் மாற்றம்
ஏற்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதாகும்.

மேலே உள்ள NOT GATE-ல் உள்ளீடு பின் “1”-ஆகவும் அதனால்


வெளியீடு பின் “0”-ஆகவும் இருக்கிறது. நாம் உள்ளீடு பின்னை
“0”-ஆக மாற்றினால் வெளியீடு பின்னில் “1” கிடைக்கும். ஆனால்
அது நமக்கு உடனடியாக ஏற்படுவது ப�ோல் த�ோன்றினாலும்,
இதற்குச் சிறிது நேர தாமதம் ஏற்படும். இதனை Propagation delay
என்று அழைப்பர்.

ஆனால் இதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனை


நாம் வினாடிகளில் ச�ொல்வதில்லை. வினாடியில் 1,000,000,000-ல்
ஒரு பங்கில் ச�ொல்கிற�ோம். இதனை நான�ோ வினாடி (nano second-
ns) என்று அழைப்பர்.

1 / 1,000 - 10-3 - milli second - 1ms


1 / 1000,000 - 10-6 - micro second - 1μs
1 / 1000000000 - 10-9 - nano second - 1ns
1 / 1000,000,000, 000 - 10-12 - pico second - 1ps

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 43


ஆனால் அதிக எண்ணிக்கையில் Gate-களைத் த�ொடர் முறையில்
இணைக்கும் ப�ோது இந்த சிறிய தாமதங்கள் பெரியதாகிவிடும்.

உதாரணமாக A பின்னில் ஏற்படுத்தும் மாற்றம் E பின்னில்


மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படும். ஏனெனில்
இது B,C,D வழியாக E-ஐ அடைகிறது. இப்பொழுது நாம் ஒவ்வொரு
GATE-ற்கும் ஏற்படும் நேர தாமதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

உதாரணமாக NOT GATE-ஐ எடுத்துக்கொள்வோம்.

A உள்ளீடு பின்னில் “0” இருந்தால் Y வெளியீடு பின்னில் “1”


இருக்கும். இப்பொழுது A உள்ளீடு பின்னை “1”-ஆக மாற்றினால் அது
Y பின்னில் “0”-ஐத் தரும். ஆனால் இதற்கு சிறிது நேர தாமதம்
ஏற்படும். இதற்கு Propagation delay என்று பெயர். இதனைக் கீ ழ்க்
கண்டவாறு படத்தில் குறிப்பிடலாம்.

44 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


உள்ளீடு பின் 0V-லிருந்து 5V-ற்கு t1 என்ற நேரத்தில் மாறும்போது
வெளியீடு பின் 5V-லிருந்து 0V-ற்கு t2 என்ற நேரத்தில் மாறுகிறது.
இந்த நேர இடைவெளி tpd (t2-t1)க்கு Propagation delay என்று பெயர்.
இது ப�ொதுவாக ns-களில் இருக்கும். உதாரணமாக 5ns, 6ns, 7nsஎன்று
இருக்கும்.

இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்த டிரான்சிஸ்டர்கள் எல்லாம்


ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆகவே டிரான்சிஸ்டர்களைக் க�ொண்டு
உருவாக்கப்படும் GATE-களும் வெவ்வேறு tpd க�ொண்டிருக்கும்.
ஆகவே ப�ொறியாளர்கள் இந்த GATE-களின் tpd-ஐக் குறிப்பிடும் ப�ோது
குறைந்தபட்சம், அதிகபட்சம் மற்றும் ப�ொதுவான tpd என்று குறிப்
பிடுவர்.

Minimum (min) tpd -> குறைந்தபட்ச நேர இடைவெளி

Maximum (max) tpd -> அதிகபட்ச நேர இடைவெளி

typical (typ) tpd -> ப�ொதுவான நேர இடைவெளி

உதாரணமாக NOT GATE-ன் tpd-ஐக் கீ ழ்க்கண்டவாறு குறிப்பிடுவர்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 45


ஆக, நாம் த�ொடராக GATE-களை இணைக்கும்போது, அதன் உள்ளீடு
மற்றும் வெளியீடு பின்களுக்கு இடையே ஏற்படும் குறைந்தபட்ச
மற்றும் அதிகபட்ச நேர இடைவெளியைக் கணக்கிடமுடியும்.

மேலே கண்ட இணைப்பில் A-D, B-D மற்றும் C-D என்ற மூன்று


உள்ளீடு - வெளியீடு த�ொடர்புகள் உள்ளன. A-D இணைப்பில்
G1, G2 மற்றும் G3 GATE-களும் B-D இணைப்பில் G2 மற்றும் G3
GATE-ளும் C-D இணைப்பில் G3 GATE மட்டும் இருக்கிறது. ஆகவே,
நாம் ஒவ்வொரு GATE-டின் tpd-ஐக் கூட்டல் செய்து ஒவ்வொரு
இணைப்பிலும் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் இடையே உள்ள
நேர இடைவெளியைக் கணக்கிடலாம். இதனைப் பற்றி தெளிவாக
எமது “Digital Electronics-Timing” புத்தகத்தில் படிக்கலாம்.

ப�ொதுவாக, இந்த GATE-களின் நேர இடைவெளி (tpd) மிகவும்


குறைவாக இருப்பதால் ஓரிரு GATE-களை இணைத்தால் இந்த
நேர இடைவெளியைப் பற்றி அதிகம் ப�ொருட்படுத்துவதில்லை.
அதிக வேகமாக செயல்படும் மின்னணு ப�ொருள்களிலும், அதிக
GATE-களை உபய�ோகப்படுத்தும் இணைப்புகளிலும் இந்த நேர
இடைவெளி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

46 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இதுவரை டிஜிட்ட ல் எ லக்ட்ரானிக் ஸ் செ யல்பாட்டில்
உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் உள்ள செயல்பாடு (functional)
த�ொடர்பு மற்றும் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் இடையே உள்ள
நேர இடைவெளி (Timing delay) ஆகியவற்றைப் பற்றி பார்த்தோம்.
இப்பொழுது உள்ளீடு மற்றும் வெளியீடு பின்களின் வ�ோல்டேஜ்
மற்றும் கரண்ட் தேவைகளை பற்றிப் பார்க்கலாம். நமக்கு நன்றாகவே
தெரியும் மின்சார ஓட்டம் அதிக வ�ோல்டேஜ் பகுதியிலிருந்து
குறைந்த வ�ோல்டேஜ் பகுதிக்குள் செல்லும்.

அதாவது அதிக வ�ோல்டேஜ் உள்ள பகுதியிலிருந்து மின்சாரம்


வெளியேறும். குறைந்த வ�ோல்டேஜ் பகுதியின் உள்ளே மின்சாரம்
வரும். இதனை sourcing (க�ொடுத்தல்) மற்றும் sinking (பெறுதல்)
என்றும் அழைப்பர். ஆகவே டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் 0V
வ�ோல்டேஜ் பகுதி மின்சாரத்தைப் பெறும். 5V வ�ோல்டேஜ் பகுதி
மின்சாரத்தைத் தரும். இதனால் 0V பகுதியை Sinking என்றும் 5V
பகுதியை sourcing என்றும் அழைக்கின்றனர்.

இந்த எலக்ட்ரானிக்ஸ் ப�ொருட்களில் முக்கியமாக கவனிக்க


வேண்டியது அதன் தயாரிப்பாளர்கள் கூறிய அளவிற்கு அதிகமாக
உள்ளீடு மற்றும் வெளியீடு பின்களில் மின்சார ஓட்டம்

பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 47


இருக்கக்கூடாது. இதை மீ றினால் மின்னணு ப�ொருள் வணாகிவிடும்.

ஆகவே இதனை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

உள்ளீடு மின்சாரத்தைப் பெறுதல் - - (5V) IiH

உள்ளீடு மின்சாரத்தைத் தருதல் - (0V) IiL

வெளியீடு மின்சாரத்தைத் தருதல் - (5V) IoH

வெளியீடு மின்சாரத்தைப் பெறுதல் - (0V) IoL

ஒரு குறிப்பிட்ட மின்னணுப் ப�ொருளில் இந்த நான்கின் அளவுகளும்


வெவ்வேறாக இருக்கும். இதில் மிகவும் கவனம் தேவை.

உதாரணமாக ஒரு மின்னணுப் ப�ொருளின் வெளியீடு பின்னில்


அதன் மின்சாரம் தரும் அளவு 1 mA என்றால், நாம் அதற்கு மேல்
மின்சார ஓட்டத்தின் அளவு இருக்கக்கூடாது.

48 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


அதேப�ோல் எலக்ட்ரானிக்ஸ் ப�ொருளின் வெளியீடு பின்னில்
அதன் மின்சாரம் பெறும் அளவு 10 mA என்றால், நாம் அதற்கு மேல்
மின்சாரத்தைத் தரக்கூடாது.

இந்த மின்தடைகளை Current Limiting Resistor என்று அழைப்பர்.

இதுவரை நாம் படித்தது “டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸின்”


அடிப்படைகளே. இது பற்றி விரிவாக எமது அடுத்த பாகங்களில்
படிக்கலாம். ஆனால் இந்த அடிப்படைகள் சரியாக புரியாமல், அடுத்த
பாகங்களைப் படிக்க இயலாது. ஆகவே இந்த புத்தகத்தைப் புரியும்
வரைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.quora.com/Balajee-Seshadri/answers
எங்களின் பிற வெளியீடுகள்

50 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்


பாகம் 1 - ஒர் அறிமுகம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 51
பாலாஜி 1963ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்பொழுது
திருவாரூர்) உள்ள கூத்தனுர் கிராமத்தில் பிறந்தார். கூத்தனுர்
கிராமத்தில் உள்ள “அப்பு குட்டை” பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை
படித்தார். பின்னர் மன்னார்குடியில் உள்ள கணபதி விலாஸ் பள்ளியில்
8ஆம் வகுப்பு வரை படித்தபின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
மன்னார்குடியில் உள்ள நேஷனல் மேல்நிலை பள்ளியில் படித்தார்.
பி.இ (EEE) ப�ொறியியல் படிப்பினை காரைக்குடி அழகப்பா ப�ொறியியல்
கல்லூரியில் படித்த பின் கரக்பூர் ஐஐடில் M.Tech (Instrumentation)
படிப்பினை 1986ஆம் வருடம் முடித்தார்.

1987ஆம் ஆண்டு சனவரி மாதம் HCL கம்பெனியில் R&D (H/W)


பிரிவில் வேலை செய்யத் துவங்கி இன்று வரை (2017) கடந்த 30
வருடங்களில் மின்னணுதுறையில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு
கம்பெனிகளில் வேலை செய்துள்ளார். ச�ொந்தமாகவும் கம்பெனிகள்
நடத்தியுள்ளார்.

30 வருட மின்னணு துறை அனுபவத்தில் 10 வருடங்கள் அமெரிக்கா,


ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பணிபுரிந்துள்ளார். மின்னணு
துறையில் HW, SW மற்றும் VLSI பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
நிறைய மின்னணு ப�ொருட்கள் வடிவமைத்துள்ளார்.

தமிழ் மீ தும், தமிழ் மக்கள் மீ தும், தமிழ்நாட்டின் மீ தும் உள்ள


தீராத ஆசையினால் தனது 30 வருட மின்னணு துறை அனுபவங்களை
புத்தகங்களாக எழுதுகிறார்...

~ 50

52 டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1 - ஒர் அறிமுகம்

You might also like