Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W)


VIJAYABHARATHAM DAILY
nrhg»UJ, I¥gá - 20 â§fŸ 06.11.2023 ky® - 4, ïjœ - 202

எல்லா தடைகளையும் உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பர்

vijayabharatham.org

2024 தேர்தலில் எல்லா தடைகளையும் உடைத்து மக்கள்


பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பிரதமர் ம�ோடி தெரிவித்துள்ளார்.
”இந்தியா எல்லாத் தடைகளையும் உடைத்துவிட்டது. உண்மையி
லேயே இருந்த தடைகளும், ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட தடைகளும்
கடந்த 10 ஆண்டுகளில் தகர்க்கப்பட்டுவிட்டன. இப்போது தேசம் 2047-
ல் வளர்ந்த நாடாக உருவாகும் பாதையில் சென்று க�ொண்டிருக்கிறது.
வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு
உண்மையான தடைகளாக இருந்தன. ஆனால் பாஜக அரசு அதனை
முடிவுக்குக் க�ொண்டுவந்தது. இப்போது சாமானியர்கள் தங்களிடம்
கூடுதல் அதிகாரம் இருப்பதாக உணர்கிறார்கள்.
வறுமை ஒழிப்பில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
அரசின் க�ொள்கைகளால் நடுத்தர வர்க்கம் அதிகரித்துள்ளது. மாத
வருமானம் பெறுவ�ோரின் வருவாய் அதிகரித்துள்ளது. இன்று இந்தியா
நிலவில் வரலாற்று சிறப்புமிக்கு தடத்தைப் பதித்துள்ளது. ஜி20 உச்சி
மாநாட்டை நடத்தியுள்ளது. செல்போன் ஏற்றுமதியிலும், டிஜிட்டல்
பணப் பரிவர்த்தனையிலும் மிளிர்கிறது.
நாட்டில் வருமான வரி செலுத்துவ�ோரின் எண்ணிக்கை 2023ல்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்காக
அதிகரித்துள்ளது. அன்றாடம் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை
தூரத்தின் அளவு 12 கில�ோ மீட்டரில் இருந்து 30 கில�ோ மீட்டராக
அதிகரித்துள்ளது. செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின்
எண்ணிக்கை 70ல் இருந்து 150 ஆக அதிகரித்துள்ளது. 2014 வரை
நாட்டில் இருந்த ரயில் இருப்புப் பாதையின் தூரம் வெறும் 20
ஆயிரம் கில�ோ மீட்டர். இப்போது அது 40 ஆயிரம் கில�ோ மீட்டராக
அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து
செய்யப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அழிந்து சுற்றுலா மேம்பட்டு
வருகிறது. ஆகையால், 2024 தேர்தலில் எல்லா தடைகளையும்
உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பர். இவ்வாறு பிரதமர் ம�ோடி
பேசினார்.
1
நீதிபதி நெகிழ்ச்சி பேச்சால் கண் கலங்கிய மாணவர்கள்
அந்தியூரில் நடந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி
யின் நெகிழ்ச்சியான பேச்சை
கேட்டு மாணவர்கள் கண்கலங்கி
அழுதனர். ஈர�ோடு மாவட்டத்தில்
நீதித்துறை, நிர்வாகத்துறை,
காவல்துறை இணைந்து அந்தியூர்
vijayabharatham.org அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் ப�ோதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற ஈர�ோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன்
மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார்.
அதன்படி மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக்
க�ொள்ள நீதிபதி அறிவுறுத்தினார். 'நான் செல்லும் வரை யாரும்
கண்களை திறக்கக்கூடாது' என்றவர் த�ொடர்ந்து பேசினார். அப்போது
''உங்களுக்கு ஓட்டு வீடாவது இருக்கிறதா? அந்த வீடு ஒழுகாமல்
உள்ளதா? நேற்றிரவு உங்கள் அப்பா என்ன சாப்பிட்டார்? அவர்
சாப்பிட்டாரா; இல்லை சாப்பிடாமல் துாங்கினாரா? உங்கள் அப்பாவின்
உள்ளங்கைகளை பார்த்திருக்கிறீர்களா?
''முதலாளி அவமானப்படுத்தினாலும் அந்த வலியை உங்களிடம்
என்றாவது ச�ொல்லியிருக்கிறாரா? தீபாவளி, ப�ொங்கல் பண்டிகைகளில்
புதுத்துணி அணிந்திருக்கிறாரா? உங்கள் அப்பா உங்களுக்காக
உடலை உருக்கியிருக்கிறாரா?'' என்று நீதிபதி பேச்சை த�ொடர
ஒரு கட்டத்தில் மாணவ - மாணவியர் பலரும் கண் கலங்கி அழத்
த�ொடங்கினர். த�ொடர்ந்து தன் பேச்சை முடித்த நீதிபதி பெற்றோர்
பெருமைப்படும் வகையில் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு
அறிவுரை வழங்கினார்.

தி.மு.க.,வுக்கு ஒரு ப�ோதும் பா.ஜ. க, பயப்படாது:


எல். முருகன் சவால்
''குறிவைத்து வழக்கு ப�ோடும் தி.மு.க.,வுக்கு
ஒரு ப�ோதும் பா.ஜ., பயப்படாது'' என மத்திய
இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
க�ோவை விமான நிலையத்தில் எல்.முருகன்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு vijayabharatham.org
அனுப்பும் க�ோப்புகளில் எல்லாம் கவர்னர் கண்ணை மூடிக்கொண்டு
கையெழுத்து ப�ோட முடியாது. கவர்னருக்கு என்று தனி அதிகாரம்
உள்ளது. அதைத்தான் அவர் பயன்படுத்தி வருகிறார்.
மின் கட்டண உயர்வால் திருப்பூர் மற்றும் க�ோவை பகுதிகளில்
உள்ள த�ொழில் துறையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மின்கட்டணம் மூலம் க�ொள்ளையடிக்கிறது. தமிழக
அரசுதான் மின்கட்டணத்தை நிர்ணயிக்கிறது. தி.மு.க., அரசு தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கவர்னரை பாதுகாக்கும் ப�ொறுப்பு தமிழக அரசுக்கும் தமிழக
ப�ோலீசாருக்கும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கவர்னருக்கு பாதுகாப்பு
இல்லை. குறி வைத்து வழக்கு ப�ோடும் தி.மு.க.,வுக்கு ஒரு ப�ோதும்
பா.ஜ., பயப்படாது. தமிழக அரசின் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம்
பாஜ., நிர்வாகிகள் அஞ்சமாட்டார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

2
உலகில் எந்த சக்தியாலும் பாரதத்தை அச்சுறுத்த முடியாது
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை
அச்சுறுத்த முடியாது என்று பாதுகாப்புத்
துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய பிரதேச கனேட்டா கிராமத்தில்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
vijayabharatham.org பேசியதாவது: இந்தியாவை காங்கிரஸ்
ஆட்சி செய்தப�ோது வெளிநாடுகளில் உள்ள மக்கள், இந்தியாவை
ஒரு வலுவிழந்த நாடாக பார்த்தனர். ஆனால் பாஜக தலைமையில்
ஆட்சி அமைந்த பின்னர் நாடு வலிமையடைந்து வருகிறது. பிரதமர்
ம�ோடியின் நல்லாட்சியால் நாடு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியின் ப�ோது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா
பலவீனமான நாடு என்று கூறுவார்கள். அப்போது நாம் கூறிய
வார்த்தைகளை உலக நாடுகள் பெரிதாக எடுத்துக் க�ொள்ளவில்லை.
ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் வேகமாக
வலிமையடைந்து வருகிற�ோம். சர்வதேச அமைப்புகளில் நாம்
பங்கேற்கும் கூட்டங்களில் நாம் கூறும் வார்த்தைகளை கேட்கின்றனர்.
யாராவது, கீழ்த்தரமான செயலை செய்ய முயன்றால், அவர்களை
எல்லையின் இந்தப் பக்கத்திலும், தேவைப்பட்டால் மறுபக்கத்துக்கும்
சென்று இந்தியாவால் அழிக்க முடியும். உலகில் எந்த சக்தியாலும்
இந்தியாவை அச்சுறுத்த முடியாது. பிந்த் மாவட்டத்தில் 5 குடும்பங்களில்
ஒருவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர்களது
சேவையை நாடு ப�ோற்றும். அவர்களது குடும்பங்களுக்கு நான்
வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையை கனடா நிறுத்தியுள்ளது


பாரதத்துக்கும் கனடாவுக்கும் இடையிலான
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் த�ொடர்பான
பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது என மத்திய
அமைச்சர் பியூஷ் க�ோயல் தகவல் தெரிவித்
துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில்
சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். நம் நாட்டுக்கு
அடுத்தபடியாக சீக்கியர்கள் இங்குதான் அதிகம்
vijayabharatham.org
வசிக்கின்றனர். காலிஸ்தான் பயங்கரவாத
அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள்
செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள், கனடாவில் உள்ள
ஹிந்து க�ோவில்கள் மீது தாக்குதல் நடத்தின. கனடாவில் உள்ள
பாரத துாதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தின. மேலும், பாரத துாதரக
அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட�ோ, காலிஸ்தான்
பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் க�ொலை சம்பவத்தை இந்தியர்கள்
நடத்தி இருக்கலாம் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு இந்தியா
மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக
அதிகாரிகளை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது. இந்தியா-கனடா
உறவில் சில நாட்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக
ஒப்பந்தம் த�ொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது என மத்திய
அமைச்சர் பியூஷ் க�ோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

3
மேலும், அவர் கூறியிருப்பதாவது: '' இரு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தகம் 2022-23 இல் 8.16 பில்லியன் டாலராக
இருந்தது. இந்தியாவின் சந்தை பெரியது. அதிக வாய்ப்புகளை
வழங்குவதால் இந்த நடவடிக்கை கனடாவை மேலும் பாதிக்கும்.
ஒப்பந்தம் த�ொடர்பாக இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தை சீராக
முன்னேறி வருகிறது'' என்றார்.

ஆதாரம் எங்கே? கனடாவிடம் பாரதம் கேள்வி


பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
படுக�ொலையில், இந்திய ஏஜென்ட்கள்
த�ொடர்புள்ளதாக கனடா கூறிய குற்றச்
சாட்டிற்கு ஆதாரம் எங்கே என அந்நாட்டு
அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள இந்தியா,
ஏற்கனவே விசாரணை கறைபடிந்துவிட்டது
vijayabharatham.org
என குற்றம்சாட்டி உள்ளது.
இது த�ொடர்பாக கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார்
வர்மா கூறியதாவது: பயங்கரவாதி க�ொலை வழக்கு விசாரணையில்
உதவுவதற்கு ஏதுவாக இந்தியாவிடம் இதுவரை எந்த ஆதாரமும்
வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே உள்ளது? விசாரணை முடிவு
எங்கே ? இந்த விவகாரத்தில், ஒரு படி மேலே சென்று, விசாரணை
கறைபடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன்.
இந்த க�ொலை விவகாரத்தில் இந்தியா அல்லது இந்திய ஏஜென்ட்கள்
உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன் வைக்குமாறு மேல் மட்டத்தில்
இருந்து யார�ோ அழுத்தம் க�ொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதி க�ொலை விவகாரத்தில் இந்தியா பின்னணியில்
உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட�ோ குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
அந்நாட்டிற்கான நமது தூதரக உயர் அதிகாரி ஒருவரை கனடா
வெளியேற்றியது. கனடாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த
இந்தியா, டில்லியில் உள்ள அந்நாட்டிற்கான தூதரக அதிகாரி ஒருவரை
வெளியேற்றியதுடன், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும்
குறைக்க உத்தரவிட்டு பதிலடி க�ொடுத்தது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு பிரிவினைவாத


அமைப்பு மிரட்டல்
நவ.,19ல், சீக்கியர்கள் ஏர் இந்தியா
விமானங்களில் பயணிக்க வேண்டாம்.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் '' என சீக்கியர் பார்
ஜஸ்டிஸ் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத
அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இது
த�ொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் vijayabharatham.org
குர்பத்வந்த் பன்னுன் வெளியிட்ட வீடிய�ோவில் கூறியுள்ளதாவது:
வரும் நவ.,19ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்
என்று சீக்கியர்களை நாங்கள் கேட்டுக் க�ொள்கிற�ோம். சர்வதேச
அளவில் முற்றுகை இருக்கும். நவ.,19ம் தேதி ஏர் இந்தியாவில் பயணம்
செய்ய வேண்டாம். மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அன்றைய
தினம் டில்லி விமான நிலையம் மூடப்படும். அதன் பெயர் மாற்றப்படும்
என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர ம�ோடி பேசியதாவது: கடந்த
ஆண்டு த�ொடங்கப்பட்ட ர�ோஜ்கார் மேளா பயணம் இப்போது
முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை
4
மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம்
இதுவரை லட்சக்கணக்கான�ோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இன்று மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள்
வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
வழங்கப்படுவது மட்டுமல்லாமல் வெளிப்படையான நடைமுறையும்
அமல்படுத்தப்படுகிறது. பணியாளர் தேர்வு முறையில்
இளைஞர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பணி நியமனம்
த�ொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதுடன் தேர்வு
முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ஆட்டோமேஷன்
மற்றும் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி உள்ளிட்ட புதிய துறைகளில்
வேலைவாய்ப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதேநேரம்,
பாரம்பரிய துறைகளையும் அரசு பலப்படுத்தி வருகிறது.
இப்போது புதிதாக உருவாகி வரும் வேலை வாய்ப்புகளை
பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இளைஞர்களுக்கு உரிய
பாடதிட்டங்களும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு
வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர ம�ோடி தெரிவித்தார்.

"உச்சநீதிமன்றத்தை அணுகினால் குழப்பம் நீங்கும்":


கேரள கவர்னர் பதில்
''யாருக்காவது குழப்பம் ஏற்பட்டால்,
உச்சநீதிமன்றத்தை அணுகினால் குழப்பம்
நீங்கும்'' என தன் மீதான வழக்கு குறித்து
கேரள கவர்னர் ஆரிப் முகமது நிருபர்கள்
சந்திப்பில் பதில் அளித்தார்.
கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட vijayabharatham.org
மச�ோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் ஆரிப் முகமது கான்
காலம் தாழ்த்தி வருகிறார். இது, மக்களின் அடிப்படை உரிமையை
சிதைக்கும் செயல்.இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு
உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் கேரள
அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு,
'' யாருக்காவது மனதில் குழப்பம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை
அணுக வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டும். அப்போது தான்
மனதில் உள்ள குழப்பம் நீங்கும்'' என கேரள கவர்னர் ஆரிப் முகமது
பதில் அளித்துள்ளார்.

தேர�ோட்டம் சமுதாய நல்லிணக்கம்:


ஹிந்து முன்னணி கருத்து
'தேர�ோட்டம் என்பது சமுதாய
நல்லிணக்கம் ஏற்படுத்தும் பெருவிழா
என்பதை எல்லோரும் உணர வேண்டும்,'
என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஹிந்து முன்னணி
தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்
vijayabharatham.org
அறிக்கையில் சிவகங்கை மாவட்டம்,
தேவக�ோட்டை கண்டதேவி க�ோவில் தேர�ோட்டம் த�ொடர்ந்து சமூக
பிரச்னையாக இருப்பதற்கு திராவிட அரசியல் தான் காரணம். கடந்த,
இரண்டாண்டுகளாக பிரச்னை, இன்னமும் அதிகரித்துள்ளது என்பதை
மறுக்க முடியாது. இரு சமூகங்களிடையே பிரச்னை எனக்கூறி
அதிகாரிகளை க�ொண்டு க�ோவில்களை இழுத்து மூடுவது தான் தீர்வா?
5
அரசு எல்லோருக்குமானது என்ற நிலையில் செயல்பட வேண்டும்.
சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட அதிகாரிகளை
செயல்பட வைக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் சமூக
அக்கறையுடன் அனைத்து சமூகத்தினரையும், அழைத்து பேச்சு மூலம்
தீர்வு காண்பதற்கு பதிலாக க�ோவிலை, இழுத்து மூடுவதில் தான்
அதிகாரத்தை காட்டுகின்றனர்.
ஐக�ோர்ட் மதுரை கிளை, கண்டதேவி தேர�ோட்டம் பற்றி
கடுமையான கருத்துகளை தெரிவித்து இருக்கிறது. மாநில அரசால்
நடத்த முடியவில்லை என்றால், துணை ராணுவப்படையை வைத்து
நடத்தி காட்டவா என்று நீதிபதி கூறியிருப்பதற்கு திராவிட மாடல்
அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஆனால், தமிழக அரசு க�ோர்ட்டின் கருத்துகளை சிறிதும் மதிப்ப
தில்லை. தேர�ோட்டம் என்பது சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தும்
பெருவிழா என்பதை எல்லோரும் உணர வேண்டும். தேரினை
அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக சேர்ந்து வடம் பிடித்து
இழுக்கும் ப�ோது, மக்கள் ஒற்றுமையின் சக்தியை கண்டு இறைவன்
மகிழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு
ஊரிலும் தேர�ோட்டம் நடைபெற வேண்டும். வெவ்வேறு சமுதாய
மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு ஒற்றுமையின் சக்தி வெளிப்பட
வேண்டும் என்றார்.

“யார் பெண்ணும் யாருடனும் ஆடலாம்” - ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’


தமிழகத்தில் ஞாயிறு
த�ோறும் நடைபெற்று வரும்
‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை
நடிகர் ரஞ்சித் கடுமையாக
சாடியுள்ளார். தமிழகத்தில்
பல்வேறு மாவட்டங்களில்
வாரந்தோறும் ஞாயிற்றுக்
கிழமைகளில் காலைப்
ப�ொழுதில் ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ vijayabharatham.org

என்று நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ப�ொதுமக்கள்


திரளாக கலந்து க�ொள்ளும் இந்த நிகழ்வில் ஆடல், பாடல், கலை
நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து
நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் ரஞ்சித் கூறியதாவது: சமீபகாலமாக ஒரு
கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு
முக்கிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில்
நடத்தப்படுகிறது. நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள்
அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன்
தெருவில் ஆடவிடுவது எல்லாம் பெரிய மனவேதனையாக
இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள்
தண்டனை க�ொடுத்து விடுவேன். யார் மகன�ோ யாருடன�ோ ஆடுவது,
யார் பெண்ணோ யாருடனும் ஆடலாம். அதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்.
மன அழுத்தத்தைப் ப�ோக்க தெருவில் கூத்தடிப்பதுதான் இது. இந்த
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்தகட்டத்துக்கு ப�ோகும்.
ஒரு தாய்லாந்து ப�ோலவ�ோ, சிங்கப்பூரை ப�ோலவ�ோ மாறிவிடும்.
அப்படி வரக்கூடாது. வரவும் விடமாட்டோம்” இவ்வாறு ரஞ்சித்
கூறினார்.

6
'தமிழகத்தில் இயற்கை வளங்கள்
கட்டுப்பாடின்றி க�ொள்ளை'
"தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் ஆற்று
மணல், சவுடு மண் என
அனைத்து வகையான இயற்கை
வளங்களும் கட்டுப்பாடின்றி
க�ொள்ளை ய டி க ்க ப ்பட் டு
வருகின்றன. அதை உணர்ந்து vijayabharatham.org
தமிழகத்துக்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் க�ொள்ளையை
இரும்புக்கரம் க�ொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இதுத�ொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள
பதிவில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன த�ோட்டாளம்
என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை
சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல்
கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, க�ொலை செய்ய
முயன்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில்
ப�ொன்னையாற்றிலிருந்து மணல் க�ொள்ளையடிக்கப்படுவதை
படம் பிடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான
உமாபதி என்பவரை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி
காயப்படுத்தியுள்ளது.
ஒரே மாவட்டத்தில், ஒரே இரவில் நிகழ்ந்துள்ள இரு தாக்குதல்களும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க
முயலும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும்
தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் மணல்
கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர்
இரு நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம்
ஆயக்குடி பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மணல் க�ொள்ளையை
தடுத்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட
நான்கு அதிகாரிகளை வாகனங்களை ஏற்றி க�ொலை செய்ய முயற்சி
நடந்தது. இந்த இரு நிகழ்வுகளால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே
மணல் க�ொள்ளையை தடுக்க முயன்றவர்கள் மீது அடுத்த தாக்குதல்
நடத்தப்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தில் மணல் க�ொள்ளை எந்த
அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து க�ொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் க�ொள்ளைக்கு
எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது
அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் க�ொல்லப்பட்டது,
சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில்
ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம
நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்தியது என மணல்
க�ொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவது ஆர�ோக்கியமானதாக தெரியவில்லை. தடி எடுத்தவர்கள்
எல்லாம் தண்டல் காரர்கள் என்பார்கள்... ஆனால், இப்போது
தண்டல்காரர்கள் எல்லாம் தடி எடுக்கத் த�ொடங்கியிருக்கிறார்கள்.
உடனடியாக இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் தமிழகத்தின் சட்டம்
- ஒழுங்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அவர்
பதிவிட்டுள்ளார்.

7
தமிழகத்தில் 6 நாட்களுக்குப் பரவலாக
மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு
பரவலாக மழையும், ஒரு சில
இடங்களில் கனமழையும் பெய்ய
வாய்ப்பு உள்ளதாக சென்னை
வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இது குறித்து vijayabharatham.org
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்:
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நவம்பர் 6 ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி,
க�ோயம்புத்தூர், ஈர�ோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி,
சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.7 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்
பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, க�ோயம்புத்தூர்,
ஈர�ோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம்,
நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,
ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பு


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகைக்கு
இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், பட்டாசு
கடைகள் வைக்க விரும்புவ�ோருக்கு, இன்னும்
விற்பனைக்கான உரிமம் வழங்காமல் திமுக vijayabharatham.org
அரசு இழுத்தடித்துக் க�ொண்டிருக்கிறது.
பட்டாசுக் கடைகள் வைக்க இணைய வழியாக
விண்ணப்பித்தவர்களிடம் ரூ.600 கட்டணம் வசூலித்துவிட்டு, உரிமம்
வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை திமுக
அரசு அலைக்கழித்துக் க�ொண்டிருக்கிறது. உரிமம் கிடைக்காததால்,
ஆலைகளில் இருந்து பட்டாசுகளைக் க�ொள்முதல் செய்ய முடியாமல்
வணிகர்கள் தத்தளித்துக் க�ொண்டிருக்கின்றனர். விருதுநகர்
மாவட்டம் சிவகாசியில் மட்டும் பல ஆயிரம் க�ோடி மதிப்பிலான
பட்டாசுகள் ஆலைகளில் முடங்கிக் கிடக்கின்றன. பட்டாசு விற்பனை
உரிமம்பெற காலதாமதம் ஏற்படுவது, பெரும் விற்பனையாளர்களுக்கு
மட்டும் பலன் தரும். மேலும், ப�ொதுமக்கள் கடும் விலை உயர்வை
எதிர்கொள்ள நேரிடும். இதன்மூலம், திமுகவினர் த�ொடர்புடைய
தனியார் நிறுவனங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபடத் த�ொடங்கி
இருக்கிறார்கள�ோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
முந்தைய ஆண்டுகளில், காவல், தீயணைப்பு, உள்ளாட்சித்
துறைகளில் அனுமதிக் கடிதம் பெற்றாலே உரிமம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு கூடுதலாக தாசில்தார், தனிநபர் ஒருவர் என ம�ொத்தம்
5 அனுமதிக் கடிதங்களை வியாபாரிகள் பெற வேண்டும் எனத் திமுக
அரசு கூறியிருக்கிறது. இதில் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, உரிமம்
வழங்குவதை தட்டிக் கழிக்கிறது.
8
உரிமம் வழங்க தேவையின்றிக் காலம் தாழ்த்துவது முறைகேட்டுக்கே
வழிவகுக்கும். மேலும், அரசின் இந்த அலட்சியப் ப�ோக்கு,மக்களின்
தீபாவளி க�ொண்டாட்டத்தையும் பாதிக்கும். எனவே, பண்டிகை
க�ொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து
வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும். தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும்
ப�ொதுமக்களை ப�ோராட்டத்துக்கு தூண்ட வேண்டாம் என்றார்
அண்ணாமலை.

இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுக்கும் நீட்டிப்பு

vijayabharatham.org

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் ம�ோடி ப�ொதுக் கூட்டம் ஒன்றில்


பிரதமர் ம�ோடி நேற்று பேசியதாவது: சுய மரியாதை மற்றும்
நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது.
ஏழைகள் எப்போதும் தங்கள் முன் கையேந்த வேண்டும் எனவும்,
ஏழைகள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும் எனவும் காங்கிரஸ்
விரும்புகிறது. அதனால் மத்திய அரசு ஏழைகளுக்காக த�ொடங்கும்
திட்டங்களை இங்குள்ள காங்கிரஸ் அரசு, தடுக்கிறது.
ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிரதமரையும், ஓபிசி பிரிவினரையும்
காங்கிரஸ் இழிவாக பேசுகிறது. அதைக் கண்டு நான் அஞ்சவில்லை.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காங்கிரஸ் நிதி ஆதாயங்களுக்கே
முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ்
ஆட்சியின் அநீதி மற்றும் ஊழலை ப�ொறுத்துக் க�ொண்டீர்கள். இன்னும்
30 நாட்கள்தான் உள்ளது. அதன்பின் இந்த பிரச்சினையிலிருந்து
நீங்கள் விடுபடுவீர்கள். இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5
ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம்
நாட்டில் உள்ள 80 க�ோடி மக்கள் பயனடைவர். இவ்வாறு பிரதமர்
ம�ோடி பேசினார்.
இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும்
முடிவு சமீபத்திய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது ஏழை மக்களுக்கான புத்தாண்டு பரிசு என கூறப்படுகிறது. தேசிய
உணவு பாதுகாப்புசட்டத்தின் கீழ், அந்திய�ோதயா அன்ன ய�ோஜனா
குடும்பங்களுக்கு மாதம் 35 கில�ோ அரிசி அல்லது க�ோதுமை மானிய
9
விலையில் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு கர�ோனா
பெருந்தொற்று காலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன ய�ோஜனா
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உணவு தானியத்தை இலவசமாக
அளித்தது.
அந்த திட்டத்தை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்துடன் மத்திய
அரசு இணைத்தது. மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5
ஆண்டுகளுக்கு த�ொடர்வதால் 81.35 க�ோடி மக்கள் பயனடைவர்.

க�ொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில்


ஒருவர் உயிரிழப்பு

vijayabharatham.org

vijayabharatham.org

கேரள மாநிலம் க�ொச்சியில் உள்ள ‘ஐஎன்எஸ் கருடா’ விமான


தளத்தில் இருந்து 'சேட்டக்' ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட
சில ந�ொடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து ந�ொறுங்கியது.
இதில் ஓடுபாதையில் இருந்த ஊழியர் ஒருவர், ஹெலிகாப்டரின்
சுழலும் இறக்கைகள் (ர�ோட்டார் பிளேடுகள்) தாக்கி உயிரிழந்தார்.
இவர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த ய�ோகேந்தர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த விமானி உள்ளிட்ட இருவர்
காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக கடற்படை தளத்தில் உள்ள
சஞ்சீவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பராமரிப்பு
ச�ோதனையின்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதற்கான
காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்
கடற்படை தெரிவித்துள்ளது.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî« .
93613 99006
10

You might also like