Professional Documents
Culture Documents
சிற்பம் - தமிழ்
சிற்பம் - தமிழ்
பண்டைய பண்பாட்டு
கலாச்சாரங்களின் எச்சமாக
மண்பாண்டங்களைத் தவிர்த்த
ஏனைய படைப்புகள் யாவும்
அழிவுற்றன.மனிதனின்
படைப்புகளில் காலத்தால்
அழியாமல் வாழக்கூடிய
கலைப்படைப்பு சிற்பமாகும்.
மற்றையவை விரைவில்
அழியக்கூடிய பொருட்கள் கொண்டு
செய்யப்பட்டவையாகும்.
பழங்காலத்தில் செய்யப்பட்ட
மரச்சிற்பங்கள் இன்று
கிடைக்கப்பெறவில்லை. அவை
முற்றிலும் அழிந்துவிட்டன.
அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான
வண்ணம் தீட்டப்பட்டன. இவை
தற்போது தேய்வுற்றும் வண்ணம்
மங்கியும் காணப்படுகின்றன.[2]
பல்வேறு கலாச்சாரங்களில்
சிற்பங்கள் பெரும்பாலும் மத
வழிபாடுகளை மையமாகக்
கொண்டு அதன் அடிப்படையில்
உருவாக்கப்பட்டன. அது
போன்றதொரு பெரிய சிற்பங்களை
படைத்தல் என்பது தற்போதைய
நூற்றாண்டு வரை ஒரு தனி
நபருக்கு மிகவும் விலை உயர்ந்ததும்
அதிக செலவு பிடிக்கக்
கூடியதுமாகும். சிற்பங்கள்
வழக்கமாக அன்றைய சமய அல்லது
அரசியல்வெளிப்பாடாக இருந்தன.
கலாச்சாரத்தின் எச்சமாக இன்று
வரை அழியாதுள்ள சிற்பங்கள்
மூலம் அக்கலாச்சாரமும்
வாழ்ந்துகொண்டுள்ளன எனலாம்.
பண்டைய மத்தியதரைக் கடல்
நாகரிகம், இந்தியா, சீனா,
ஆப்பிரிக்கா மற்றும் பல தென்
அமெரிக்கக் கலாச்சாரங்கள் இது
போன்றே அதன் பேரளவு சிற்பங்கள்
மூலம் இன்றளவும்
வாழ்ந்துகொண்டுள்ளன.
மேற்கத்தைய சிற்பக்கலைப்
பண்பாடு பண்டைய கிரேக்கத்தில்
தொடங்கியது. மேலும் கிரேக்கர்களே
செவ்வியல் காலத்தில்
பெரும்பாண்மையான புகழ்பெற்ற
படைப்புகளித் தந்தவர்கள் ஆவர்.
மத்திய காலத்தில் கோத்திக்
என்பப்படும் சிற்பக்கலை வடிவம்
அகோனி மற்றும் கிறித்துவ
நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக
அமைந்தது. மறுமலர்ச்சிக் காலத்தில்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட்
என்ற சிற்பங்களைப் போன்ற
படைப்புகளை உருவாக்கும்
மேதைகள் சிற்பக்கலைக்கு
உயிரூட்டினர். நவீனச் சிற்பங்கள்
பண்டைய மரபு முறையான
சிற்பங்களிலிருந்து முற்றிலும்
மாறுபட்டு மனித உடலமைப்பை
அருதியாகப் படைக்கும்
கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டன.
இவை ஒரு முழுமையான
கலைப்படைப்பின் அம்சமாக
திகழ்ந்தன.
சிற் ப வகைகள்
சில பொதுவான சிற்ப வகைகள்:
தனிச் சிற்பம்: இவ்வகைச்
சிற்பங்களின் அடிப்படையான
தனித்தன்மை என்னவெனில்
அவை
அனைத்துப்பகுதியிலிருந்தும்
பார்ப்பதற்கேற்ப
அமைக்கப்பட்டவையாகும். இதன்
அடிப்பகுதியைத் தவிர ஏனைய
பகுதிகள் எதனோடும்
இணைக்கப்படாமல் வெளியால்
சூழப்பட்டிருக்கும் இது நாற்புறமும்
இருந்து பார்ப்பதற்கானது.
சிலைகள் இவ்வகையைச்
சார்ந்தன. (சிலை: குறிப்பிட்ட
பொருள், மனிதர், நிகழ்ச்சி,
விலங்கு போன்றவற்றைப் போலச்
செய்யப்படும் சிற்பம்.)
புடைப்புச் சிற்பம்: இவை
பின்னணியுடன் பகுதியளவு
இணைந்து புடைத்தாற்போன்று
அமைக்கப்படும். இவற்றுள் பல
வகை உண்டு. இவை சுவரிலிருந்து
புடைத்திருக்கும் அளவிற்கேற்ப
அடித்தளத் தோற்றம், உயர்
தோற்றம், இடைத்தோற்றம்,
புதைவுறுத் தோற்றம் என
வகைப்படுத்தப்படுகின்றன.
பண்டைய எகிப்திய சுவர்
சிற்பங்கள் புதைவுறு தோற்றச்
சிற்பங்களாகும். புடைப்புச்
சிற்பங்கள் பெருமளவு குழுவான
உருவங்கள் அல்லது ஒரு
குறிப்பிட்ட செய்திகளைச்
சொல்லும் கதையமைப்பினை
வெளிப்படுத்த
பயன்படுத்தப்படுவன. இது
கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்
ஓர் அரிய தொழில் நுணுக்கத்
திறனாகும். இவை கட்டிடங்களின்
தூண்கள்,சுவர்கள் இவற்றை
அலங்கரிக்க
அமைக்கப்படுகின்றன. சிறிய
அளவிலான சிற்பங்கள்
மண்பாண்டங்கள், உலோக
வேலைப்பாடுகள், அணிகலன்கள்
ஆகியவற்றிலும் இவ்வகைச்
சிற்பங்கள் காணப்படுகின்றன.
இவை நினைவுச்
சின்னங்கள்,நடுகற்கள்,
கற்சிலைகள் மற்றும்
கல்வெட்டுகளை அலங்கரிக்கும்
வகையிலும்
அமைக்கப்பட்டுள்ளன.
செதுக்குச் சிற்பங்கள்: மற்றொரு
வகையான சிற்பங்கள் செதுக்குச்
சிற்பங்கள் ஆகும். இவை சிலை
செய்யப்பயன்படும் உலோகம்
அல்லது பொருட்களிலிருந்து
தேவையற்ற பொருட்களை
செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம்
பெருபவையாகும். ஒரு சாதாரண
மரம், கல் அல்லது
உலோகத்திலிருந்து இவை நவீன
தொழில் நுட்பங்கள் மூலம்
தேவையற்ற பகுதிகளை நீக்க
சிற்பங்களாக
உயிர்த்தெழுகின்றன. மேலும்
பற்றவைத்தல், முத்திரையிடுதல்,
உருக்கிவார்த்தல் போன்ற
முறைகளாலும் சிற்பங்கள்
உருவாக்கப்படுகின்றன
இம்முறையின் மூலம் மிக
அதிகமான சிற்பங்களை குறைந்த
நேரத்தில் உருவாக்க இயலும்.
சிற்பம் என்ற சொல் அதே
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
உருவாக்கப்படும் முப்பரிமாண
வடிவங்கள் அனைத்தையும்
உள்ளடக்கியதாகும். சான்றாக
நாணயம், பதக்கங்கள்,
கற்சிற்பங்கள் போன்றனவற்றைக்
குறிப்பிடலாம். கற்களில் செய்யும்
சிறிய செதுக்கல் வேலையிலிந்து
மிகப்பெரிய விரிவான நுட்ப
வேலைப்பாடுகள் வரையுள்ள
அனைத்தையும் இச்சொல்
குறிக்கின்றது
சிற்பங்களுக்கு பெரும்பாலும்
வர்ணம் பூசப்படுகின்றன, ஆனால்
அவை நேரடியாக தங்கள்
ஓவியத்தை நேரத்தை இழக்கின்றன
அல்லது மீட்டெடுக்கின்றன.
சிற்பங்களுக்கு வண்ணமிட பல
நுட்பங்கள்
பயன்படுத்தப்படுகின்றன, இதில்
பதவண்ணம், எண்ணெய் ஓவியம்,
தங்கமுலாம் பூச்சு (gilding), வீட்டு
வண்ணம், தூவாணமாகத் தெளிப்பு
(aerosol), மின்பூச்சு (enamel) மற்றும்
மண்ணூதையிடல் (sandblasting)
ஆகிய நுட்பங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
கற்கள்
முகலாயப் பேரரசில்
ஷாஜகானால் பயன்படுத்தப்பட்ட
பச்சைக்கல் மதுக் கோப்பை
உலோகம்
வெண்கலம் மற்றும் செப்பு
உலோகக்கலவையைப் பயன்படுத்தி
சிலைகள் செய்யும் முறை
பழமையான இன்றளவும்
பயன்பாட்டில் உள்ள முறை ஆகும்.
வெண்கலத்தில் செதுக்கிய
சிற்பங்கள் வெண்கலம் என்றே
வழங்கப்படுகின்றன. பொதுவான
வெண்கல உலோகக்கலவைகள்
அச்சுகளில் நிரப்பும் போது நன்றாகப்
இடுக்குகளில் பரவி சிலையின்
நுண்ணிய வேலைப்பாடுகள் கூட
சிறந்த முறையில் தெளிவாகத்
தெரிகின்ற காரணத்தால்
விரும்பத்தக்க வகையில்
பயன்படுத்தப்படுகிறது.கற்கள்
மற்றும் பல்வேறு பீங்கான்
பொருட்களை ஒப்பிடும் போது
உலோகங்களின் வலிமையும்
நொருங்காத தன்மையும்
உருவங்கள் செய்ய அனுகூலமாக
உள்ளது.மிக மென்மையானதும்,
அதிக விலைமதிப்பு மிக்கதுமாக
தங்கம் நகைகள் செய்யவும் அதே
போல தங்கத்துடன் வெள்ளியும்
சுத்தியல் மற்றும் வேறு
கருவிகளைக் கொண்டு அச்சில்
வார்த்தெடுத்தல் (cast),
சித்திரவுலோகவேலை (repousse),
உருச்செதுக்குதல் (chasing), போன்ற
நுட்பங்களைப் பயன்படுத்தி நகை
செய்யும் பொற்கொல்லுத்
தொழிலிலும் மற்றும் வெள்ளியைக்
கொண்டு சிற்ப வேலைப்பாடுகள்
செய்யுமிடங்களிலும்
பயன்படுகின்றன.
வார்த்தெடுத்தல் (Casting)
வார்த்தெடுத்தல் என்பது
பொதுவாக திரவநிலையில்
இருக்கும் உலோகங்களான
வெண்கலம், செப்பு, கண்ணாடி,
ஈயம் இரும்பு போன்றவற்றை
அதற்குறிய வடிவ உள்ளீடற்ற
அச்சுகளில் ஊற்றி வார்க்கும்
குழுவான தயாரிப்பு
செயல்முறையாகும்.உருக்கிய
உலோகம் அல்லது
உலோகக்கலவைகளை
விரும்பத்தக்க வடிவ அச்சுகளில்
ஊற்றி சில நேரம் அவை
திடநிலை அடையும் வரை
அனுமதிக்க வேண்டும். பின்னர்
அச்சுகளை உடைத்தோ (மண்
மற்றும் பாரிசச் சாந்து அச்சுகள்
உடைக்கப்படுகிறது) தட்டியோ
வார்ப்புகள்
வெளியேற்றப்படுவதோடு
இச்செயல்முறை
நிறைவடைகிறது [3] .
நான்காம் நூற்றாண்டைச்
சேர்ந்த ரோமானிய
லைகுர்கஸ் கண்ணாடிக்
கோப்பை
கண் ணாடி
கண்ணாடியை கொண்டு சிற்பங்கள்
செய்ய பரந்த அளவிலான செயல்
நுட்பங்கள் தேவைப்படுகிறது.
இருப்பினும் பெரிய சிற்ப
வேலைகளுக்காக அதைப்
பயன்படுத்துவது சமீபத்திய
வளர்ச்சியாகும். கண்ணாடியை
செதுக்குவது மிகச் சிரமமான
பணியாகும்.இரு வண்ண ரோமன்
லைகுர்கஸ் கோப்பை கண்ணாடிச்
சிற்பத்துக்கு தனித்துவ
அடையாளமாகும் [4].
"https://ta.wikipedia.org/w/index.php?
title=சிற்பம்&oldid=3659469" இருந்து
மீள்விக்கப்பட்டது