Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

TAMIL ESSAYS

சுற்றுப்புற தூய்மை
கட்டுரை – SUTRUPURA
THUIMAI KATTURAI IN TAMIL
By radangfx
November 14, 2021
சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in
Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான
சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான இந்த
பூமியின் தூய்மையை கட்டுக்குள் வைத்திருக்கு சிறுமுயற்சி
செய்கிறாரோ,அவரே இன்றைய காலகட்டத்தின் சிறந்த மனிதராக
போற்றப்படுகிறார்.
இயற்கைக்கு நமக்கு உகந்த பல கொடைகளை வழங்கியுள்ளது
தூய்மையான காற்று ,தூய குடிநீர் ,சுகாதாரமான வீட்டு சூழல் என இந்த
பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது,ஆனால் தற்போதைய
சூழ்நிலையில் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் காற்று மாசு ,நீர்மாசு
,மண் மாசு என மனிதன் தன் சுயநலத்திற்க்காக இந்த பூமியின்
வயிற்றில் தீராத வடுவை ஏற்படுத்திவிட்டான் ,இதன் காரணமாக
எப்போதும் இல்லாத அளவுக்கு இயற்க்கை பேரிடர்கள் ,தீரா தொடர்
நோய்கள் என மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் அரங்கேற
தொடங்கிவிட்டதா,இவற்றை கட்டுக்குள் வரவழைக்கும் முதல் படி
சுற்றுப்புற தூய்மையே ஆகும்
அது எப்படி ஓசோனில் ஓட்டை , பூமி வெப்பமயமாதல் ,பனி மலை
உருக்கம் போன்ற உலக பிரச்சனைகள் தனி மனிதனால் சரி செய்ய
முடியும் என்ற கேள்விக்கு ,இத்தகைய இடர்பாடுகளை முதல் முக்கிய
காரணியே தனிமனித நடவடிக்கைகள் தான் என்பது அறிவியல் உலகம்
சொல்லும் உண்மை ,தனிமனிதன் உபயோகிக்கும் வாகனத்தை
பொறுத்தே காற்றின் தரம் நிர்ணயிக்க படுகிறது ,நாம் ஒருவர் வாகனம்
ஓட்டுவதை குறைத்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழும்போது
,ஒன்று என்பது லட்சம் மடங்கு என்ற கணக்கின் படி சில நிமிடம்
வாகனத்தி அனைத்து வைப்பது மிக பெரிய மாற்றத்தை
கொட்டுவருகிறது

சுற்றுப்புற தூய்மையை கடை பிடிக்க


வேண்டிய அவசியம்
நான் எனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன் ஆனால் எனது
தெருவை சுத்தமாக வைக்க அரசின் உதவி வேண்டும் என்ற
நிலைப்பாடே சுற்றுப்புற சீர்கேட்டிற்கு முதற்படியாகும் ,மக்களுக்கு
சேவை செய்யும் அரசு எவ்வளவு முயன்றாலும் இந்த தனி மனித
சுகாதாரம் கொடுக்கும் தீர்வுக்கு ஈடு ஆகாது.வீடுகளில் உள்ள
குப்பைகளை அகற்ற அதை வீதியில் தள்ளுவது மிக பெரிய கொடூர
சிந்தனையாகும் ,நம் வீடு என்ற எண்ணத்தை மாற்றி எனது தெரு என்ற
எண்ணத்திற்ற்கு மாறுவதே முதல் படியாகும் ,பின் எனது ஊர் ,எனது
நாடு ,எனது உலகம் என்று தொடர் செயல்பாடுகளால் இந்த பூமி
மீண்டும் மனிதர்க்கு சிறந்த இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை

திட கழிவு மேலாண்மை


தற்போதைய அறிவியல் காலகட்டத்தில் மக்காத ஒரு முறை
பயன்படுத்தும் பொருட்களே மிகுந்த பாதிப்பை தருகின்றன ,மரம் நாட
குழி தோண்டும் பொது கூட பல ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட
பிளாஸ்டிக் பைகள் மக்காத நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம்
,இவற்றிற்க்கான தீர்வு அரசு செய்யும் மறுசுழற்சிக்கு நம்மால் உகந்த
உதவியை செய்வதே ஆகும் ,இதில் சிறு முயற்சியாக நமது
குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து
அதற்கான குப்பை தொட்டில்களில் போடுவதும் ஒருவகையான நல்ல
செயலே ஆகும் ,இலகுவாக மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யும்
அரசு அல்லது தனியார் நிறுவனத்திற்கு கிடைக்கும்படி
செய்வோமானால்,அவர்கள் மறுசுழற்சி தீவிரமாக செய்து நாட்டின்
குப்பை அகற்றும் பணியை துரிதமாக செய்து நன்மை பயக்கும்

கழிவு நீர் அகற்றம்


வீட்டில் இருந்து கழிவு நீரை பொதுவாக வாய்க்கால் மூலமாகவே நாம்
அகற்று கின்றோம் ,ஆனால் அந்த கால்வாய்கள் நேரடியாக நமக்கு
குடிநீர் கொடுக்கும் நதி,ஓடை ,குளம் போன்ற இடங்களில் கலப்பதினால்
நீர் மாசு படுகிறது ,இதற்க்கு பல தீர்வுகள் சொல்ல பட்டாலும்
,நம்முடைய பங்காக நச்சுத்தண்மை உடைய துணி துவைக்கும்
பொடிகள் ,சோப்பு வகைகளை தவிர்த்தல் ,மிக அதிக ரசாயன பூச்சுக்கள்
கொண்ட பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற சிறு
செயல்கள் மட்டுமே,நமது சுற்றுப்புறத்தில் உள்ள நன்னீர் வளங்களை
பாதுகாப்பதில் முதல் பாடியக கொள்ளப்படுகிறது ,பூமியில்
குழிதோண்டு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் நவீன
பழக்கங்கள் நகரம் முதல் கிராமம் வரை கொண்டுவரப்பட வேண்டும்
,அரசின் உதவியுடன் இது போன்ற சுத்திகரிப்பு தொட்டிகள் வீட்டில்
அமைக்கலாம்

You might also like