Mozhi Urimai

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 34

தாள்:2 பாடம்:4

ம�ொழி உரிமை
cF‚è†C õóô£Á
 1 ð£ì‹- 3

அனைத்து நிலைகளுக்கும்
Þ¬ì郎ô

பேரா.அ.இராமசாமி
²ð. ió𣇮ò¡
பேரா.சுப.வீரபாண்டியன்
Fó£MìŠðœO
நூல் தலைப்பு : ம�ொழி உரிமை
நூல் ஆசிரியர்கள் : பேரா.அ.இராமசாமி
பேரா.சுப.வீரபாண்டியன்
வெளியீடு : திராவிடப்பள்ளி,
எண் 120, என்.டி.ஆர். தெரு,
ரங்கராஜபுரம், க�ோடம்பாக்கம், சென்னை
த�ொடர்பு எண் : 044 24726408
நூல் வடிவமைப்பு : க.கதிரவன்
அச்சாக்கம் : மாணவர் நகலகம், சென்னை- 600001
ம�ொழி உரிமை
பேரா.அ.இராமசாமி
பேரா.சுப.வீரபாண்டியன்
அரசியல் விடுதலையும்
ம�ொழி விடுதலையும்
பேரா.அ.இராமசாமி

இந்தி யத் து ண ைக் கண்ட த்தி ன் மீ து பி ற ந ா ட ்டா ர்


படையெடுத்து வந்த ப�ோதெல்லாம், அவர்களிடம் த�ோற்று
ஓடுவதையே, இந்தியர் வாழ்க்கையாகக் க�ொண்டிருந்த
காலக்கட்டத்தில் இந்தியாவிற்கு வெளியே படையெடுத்துச்
சென்று, கடல் கடந்த நாடுகளை வென்று, குடியேற்றங்களை
ஏற்படுத்திப் பரந்த ஒரு பெரும் பேரரசை ஆண்ட பெருமை
தமிழினத்திற்கு மட்டுமே உண்டு!

அத்தகைய பெருமைக்குரிய தமிழனம், கி.பி.14ஆம்


நூற்றாண்டு அளவில், தன்னுடைய அரசியல் உரிமையைப்
ப ல ்வே று க ா ர ண ங ்க ளி ன ா ல் கு றி ப்பா க ஒ ற் று ம ை க்
குறைவினால் - பறிக�ொடுத்துவிட்டது. அதைத் த�ொடர்ந்து,
ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் காலம், தமிழ்நாட்டில்
அ ய ல ்மொ ழி யி ன ரி ன் ஆ தி க்க ம் ஏ ற்பட் டு , த மி ழ ர்
தங்கள் ம�ொழி உரிமையையும் பறிக�ொடுத்து விட்டனர்.
இந்நிலையில், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை
பெ று வ தற்கா க இ ந் தி ய ா மு ழு வ தி லு ம் ப �ோ ர ா ட ்ட ம்
த�ொடங்கப்பட்டப�ோது விடுதலைக்குப் பின்னர் தங்களுடைய
நியாயமான உரிமைகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற
நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தமிழர்களும்
அந்தப் ப�ோராட்டத்தில் கலந்து க�ொண்டனர். அதை

உணர்த்தும் வகையில்தான், பாரதியார் -


“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!”

பேரா.அ.இராமசாமி 5
என்று, ம�ொழிக்கு முதன்மை இடம் க�ொடுத்துப் பாடினார்.
அரசியல் விடுதலையையும், ம�ொழி விடுதலையையும் மக்கள்
ஒன்றாகவே கருதினர். அரசியல் விடுதலை, இறுதியில் ம�ொழி
விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்பினர். ம�ொழியை
அடையாளம் கண்டு, அதன் விடுதலைக்காக மக்கள்
எழுப்பிய குரல் அதிகமாகிக் க�ொண்டே வந்தது. அந்த
வகையில் ம�ொழி அடிப்படையில் அமையும் மாநிலங்கள்
தங்கள் ம�ொழிகளுக்குப் பாதுகாப்பாக அமையும் என்று
மக்கள் கருதினர்.

ம�ொழிவழி மாநிலங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ம�ொழியைப் பற்றிய�ோ


அல்லது பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய�ோ கருத்தில்
க�ொள்ளாமல், அரசியல் கட்டாயத்தாலும், நிருவாக
வசதிக்காகவும் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ம�ொழி
வழியே மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்று
முதலில் கருத்துத் தெரிவித்த தேசியத் தலைவர் பாலகங்காதரத்
திலகர்தான். அவர் 1891ஆம் ஆண்டிலேயே அவ்வாறு
எழுதினார்.

அதனை ஏற்றுக் க�ொண்ட காங்கிரசுக் கட்சியும்,


1927இல் நடைபெற்ற மாநாட்டில், ம�ொழிவழி மாநிலங்கள்
அமைக்குமாறு க�ோரித் தீர்மானம் நிறைவேற்றியது. 1928இல்
வெளியிடப்பட்ட நேரு குழுவின் அறிக்கையும் இதை
ஆதரித்தது. ஆனால், ம�ொழிவழி மாநிலங்கள் பற்றிய தன்
கருத்தை விடுதலைக்குப் பின்பு நேரு மாற்றிக் க�ொண்டார்.
பாகித்தான் பிரிந்ததுப�ோல், ம�ொழிவழி மாநிலங்களும்
பிரிவினைக்கே வழிவகுக்கும் என்று காங்கிரசுத் தலைவர்கள்
அஞ்சினர். எனவே, அவர்கள் ம�ொழிவழி மாநிலங்கள்
க�ோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு, நாட்டின் ஒற்றுமையை
வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.

ஆனால், தனி மாநிலக் க�ோரிக்கையை வலியுறுத்தி


ஆந்திராவில் ப�ோராட்டம் தீவிரமானது. விடுதலைப்

6 ம�ொழி உரிமை
ப�ோராட்ட தியாகி ப�ொட்டி சிரிராமுலு, சென்னையைத்
தலை ந க ர ம ா க க் க�ொ ண ்ட ஆ ந் தி ர த் த னி ம ா நி ல ம்
அமைக்க வலி யுறுத்தி 19 5 2 அக்டோ ப ர் 1 9 ஆ ம் ந ா ள்
காலவரையற்ற உண்ணாந�ோன்பைத் த�ொடங்கினார். 58
நாட்கள் உண்ணாந�ோன்பு இருந்த அவர் திசம்பர் 15ஆம்
நாள் உயிர்நீத்தார். அவருடைய மறைவைத் த�ொடர்ந்து
ஆந்திராவில் வன்முறைக் கலவரம் வெடித்தது. மறுநாள்,
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நேரு தனி ஆந்திரா
மாநிலக் க�ோரிக்கையை மையஅரசு ஏற்றுக் க�ொண்டதாக
அறிவித்தார். அதன்படியே, 1953 அக்டோபர் முதல்நாள்
தனி ஆந்திரா மாநிலம் அமைக்கப்பட்டது. ம�ொழி வழி
மாநிலங்கள் அமைக்க வேறு சில மாநிலங்களில் இருந்தும்
க�ோரிக்கைகள் வந்ததால், அவைபற்றி ஆராய, நீதிபதி
பசல்அலி ஆணையத்தை மையஅரசு 1953இல் நியமித்தது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, 1956
நவம்பரில் நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் சீரமைப்புச்
சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 14 மாநிலங்களும்,
ம ை ய அ ர சி ன் நே ர டி நி ரு வ ா க ப் ப கு தி க ள ா க ஆ று ம்
உருவாக்கப்பட்டன.

“ வ டவே ங ்கட ம் தெ ன் கு ம ரி ய ா யி டை த் த மி ழ் கூ று
ந ல் லு ல க ம் ” எ ன் று த�ொ ல ்கா ப் பி ய ம் கூ று கி ன்ற து .
மார்சல் நேசமணி நடத்திய நெடிய ப�ோராட்டத்திற்குப்
பின்பு, திருவிதாங்கூர் ஆதிக்கத்திலிருந்து கன்னியாகுமரி
பி ரி க்கப்பட் டு த மி ழ ்நாட் டு ட ன் இ ண ை க்கப்ப ட ்ட து .
அ வ ்வகை யி ல் தற்கால த் த மி ழ ்நாட் டி ன் தெ ற் கு
எல்லையாகக் குமரிமுனை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
ஆனால், வடக்கு எல்லையான வேங்கடத்திற்காகத் தமிழகம்
நடத்திய பெரும் ப�ோராட்டம் த�ோல்வியில் முடிவடைந்தது;
அது தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக
அமைந்து விட்டது.

தமிழகம் - ஆந்திரம் எல்லைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான


நடுவராக, மையஅரசின் சட்டத்துறை துணையமைச்சர்

பேரா.அ.இராமசாமி 7
எச்.வி. பதாக்கர் நியமிக்கப்பட்டார். அவர் அளித்த
தீர்ப்பின்படி 1960 ஏப்ரல் முதல்நாள் திருத்தணி, புத்தூர்,
சித்தூர் வட்டங்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்திலிருந்து
ம�ொத்தம் 394 கிராமங்கள் தமிழகத்திற்குக் கிடைத்தன.
தமிழகத்தின் வடக்கு எல்லையாகத் திருப்பதி கிடைக்கவில்லை
என்பது ஒரு குறைதான்.

எனினும், திருத்தணியையே வடக்கு எல்லையாகக்


க�ொண்டு தமிழகம் திருப்தி அடைந்துவிட்டது. பன்னூறு
ஆண்டுகளுக்குப் பிறகு, திருத்தணி முதல் தென்குமரி
வரையிலான தமிழ்கூறு நல்லுலகம் ஒரே நிருவாகத்தின் கீழ்,
ஒரே மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர்
ஆட்சிக் காலத்தைப் ப�ோன்றே, அது சென்னை மாநிலம்
என்றே த�ொடர்ந்து அழைக்கப்பட்டது. அதை மாற்றி,
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க
வேண்டுமென்று தமிழறிஞர்களும், அரசியல் தலைவர்கள்
பலரும் க�ோரிக்கைகள் எழுப்பினர்.

அ க்க ோ ரி க்கையை வ லி யு று த் தி வி டு தலை ப்


ப�ோராட்ட வீரர் சங்கரலிங்கனார், தனது 78ஆவது
வயதில், 1956 சூலை 27ஆம் நாள் முதல் காலவரையற்ற
உண்ணாந�ோன்பைத் த�ொடங்கினார். அண்ணா அவரைப்
ப�ோய் பார்த்தார்.

சங்கரலிங்கனார் அண்ணாவின் கைகளைப் பிடித்துக்


க�ொண்டு, “நீங்கள்தான் இதைச் செய்ய உதவ வேண்டும்,”
என்று கேட்டுக் க�ொண்டார். அண்ணாவும் தன்னால்
முடிந்ததைச் செய்வதாகக் கூறினார். அண்ணா தான்
முதலமைச்சராக வந்து அதைச் செய்யப் ப�ோகிறார். என்பது
அண்ணாவுக்கும் அப்போது தெரியாது;

சங்கரலிங்கனாருக்கும் தெரியாது. ஆனால், அதுதான்


நடந்தது. 78 நாட்கள் உண்ணாந�ோன்பு இருந்த சங்கரலிங்கனார்
அக்டோபர் 13ஆம் நாள் உயிர் நீத்தார்.

8 ம�ொழி உரிமை
1967 இல் அண்ணா முதலமைச்சராக வந்தபின்பு, சூலை
18ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு
என்று பெயர் மாற்றும் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில்
நிறைவேற்றச் செய்தார். மையஅரசும் இதற்கு ஒப்புதல்
அளித்தது; அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான
திருத்தங்களைச் செய்தது. 1968 சனவரி 15ஆம் நாள் முதல்
தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு,
ஒரு நெடிய ப�ோராட்டத்திற்குப் பின்புதான் புதிய தமிழ்நாடு
உருவானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க 1946


திசம்பர் 9ஆம் நாள் அரசியலமைப்பு அவையின் முதல்
கூட்டம் த�ொடங்கியது; அத்துடன் ம�ொழிச் சிக்கலும்
த�ொடங்கியது. பிற ப�ொருள்களைப் பற்றி விவாதிப்பதற்கு
முன்பாக, அவையின் நடவடிக்கைகள் எந்த ம�ொழியில் இருக்க
வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டியதாக
இருந்தது. ஆங்கிலம், இந்துத்தானி அல்லது தாய்மொழி
ஆகியவற்றில் உறுப்பினர்கள் பேசலாம் என்று திசம்பர் 14
ஆம் நாள் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தை எந்த ம�ொழியில்


எ ழு து வ து எ ன்ற கே ள் வி எ ழு ந ்த து . இ ர ா சே ந் தி ர
பிரசாத் தலைமையில் இந்தி வெறியர்கள் இந்தியிலேயே
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டும் என்று தகராறு
செய்தனர். ஆனால், நேரு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே, ஆங்கிலத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதத் தீர்மானிக்கப்பட்டது.

மூன்றாவதாக, ஆட்சி ம�ொழிச் சிக்கல் உறுப்பினர்களிடையே


க�ொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே, மற்ற ப�ொருள்களைப்
பற்றி விவாதித்து முடிவு எடுத்த பின்பு, இறுதியில் ஆட்சி
ம�ொ ழி ச் சி க்கலை வி வ ா த த் தி ற் கு எ டு த் து க்க ொள்ள
முடிவு செய்யப்பட்டது. அதனால்தான் 1948 பிப்ரவரியில்
அரசியலமைப்புச் சட்டவரைவு, அரசியலமைப்பு அவையில்

பேரா.அ.இராமசாமி 9
முன் ம�ொழியப்பட்போது, அதில் ஆட்சிம�ொழி பற்றி எதுவும்
கூறப்படவில்லை.

அ ர சி ய லம ை ப் பு அ வை யி ல் க ா ங் கி ர சு க் க ட் சி
உறுப்பினர்களே மிகப்பெரும்பான்மையாக இருந்தனர்.
எனவே, மிகவும் க�ொந்தளிப்பை ஏற்படுத்தும் ஆட்சி ம�ொழிச்
சிக்கலை காங்கிரசுக் கட்சிக் கூட்டத்தில் பேசி முடிவு காண
முயற்சி செய்யப்பட்டது. 1949 ஆகத்து முதல் வாரத்திலிருந்து
செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்ற காங்கிரசு
அ ர சி ய லம ை ப் பு அ வை உ று ப் பி ன ர்க ள் கூ ட ்ட த் தி ல்
ம�ொழிச்சிக்கல் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஒரு
கட்டத்தில் நேரு, கண்கள் சிவக்கத் தன் இருக்கயை விட்டு
எழுந்தார். “இங்கு நடக்கும் ம�ோதலைப் பார்த்தால், இது
க�ொலையில் முடிவடையும் ப�ோலிருக்கிறது. அப்படி ஒரு
க�ொடூரமான காட்சியைக் காண நான் விரும்பவில்லை;
எனவே, நான் இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.”
என்று கூறிவிட்டுக் க�ோபமாக நேரு சென்றுவிட்டார்.

அ த ன் பி ன் பு , அ வ ரை அ ம ை தி ப்ப டு த் தி மீ ண் டு ம்
அவைக்குக் கூட்டி வந்தனர். இரகசிய வாக்கெடுப்பின்
மூலம் இச்சிக்கலுக்குத் தீர்வு காண ஒத்துக் க�ொள்ளப்பட்டது.
அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆங்கிலத்திற்கு
ஆதரவாக 44 வாக்குகளும், இந்திக்கு ஆதரவாக 44 வாக்குகளும்
கிடைத்தன. எனவே, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கூடி
விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

அவ்வாறு, மீண்டும் கூடிய காங்கிரசு அரசியலமைப்பு


அவை உறுப்பினர்கள் கூட்டத்தில், நடைபெற்ற இரகசிய
வாக்கெடுப்பில் ஆங்கிலம், இந்தி இரண்டுக்குமே சமமாக 77
வாக்குகள் கிடைத்தன. உடனே, கூட்டத்திற்குத் தலைமை
தாங்கிய பட்டாபி சீதாராமையா, தன்னுடைய சிறப்பு
வாக்கை, இந்திக்கு ஆதரவாக அளித்து, ஒருவாக்குப்
பெ ரு ம்பான்மை யி ல் இ ந் தி தேர்ந்தெ டு க்கப்ப ட ்ட த ா க
அறிவித்தார்.

10 ம�ொழி உரிமை
இதற்கிடையே அரசியலமைப்பு அவையில் செப்டம்பர் 12
முதல் மூன்று நாட்களுக்கு ஆட்சி ம�ொழி பற்றிய விவாதம்
ஒப்புக்கு நடைபெற்றது. ஒரு சில உறுப்பினர்கள் தாங்கள்
தாய்மொழியை ஆட்சி ம�ொழியாக்க வேண்டும் என்று
க�ோரினார்.

தமிழை ஆட்சி ம�ொழியாக்க வேண்டும் என்று க�ோரிய


ஒரே தமிழர் முகம்மது இசுமாயில் தான்! எனினும், காங்கிரசு
அரசியலமைப்பு அவையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,
இந்திதான் இந்த நாட்டின் அலுவல் ம�ொழி என்ற தீர்மானம்
ஒருமனதாக நிறைவேறியது.

அந்தத் தீர்மானம் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்


ப ட ா மலேயே நி றைவே றி ய த ா க அ றி வி க்கப்ப ட ்ட து
குறிப்பிடத்தக்கதாகும்.

அலுவல் ம�ொழி

இந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அதை எப்படி


அழைக்கலாம்; “ம�ொழி” என்ற ச�ொல்லுக்கு முன்பாக
எ ன்ன மு ன்ன ொட் டு ப �ோடல ா ம் எ ன்ப து ப ற் றி யு ம்
அரசியலமைப்பு அவையில் காரசாரவிவாதம் நடைபெற்றது.
1. ப�ொது; 2. த�ொடர்பு; 3. அரசு; 4. அலுவலக; 5. அரசின்;
6. செயலக; 7. ஆட்சி; 8. தேசிய; 9. நிருவாக - என்ற பல
முன்னொட்டுகள் முன்மொழியப்பட்டன. இறுதியில்,
டாக்டர் அம்பேத்கர் கருத்துப்படி ம�ொழி என்பதற்கு
முன்பாக அலுவலக (official) என்ற ச�ொல் சேர்க்கப்பட்டது.
எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி - அலுவலக
ம�ொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தமிழில்
ஆட்சிம�ொழி என்று கூறும் வழக்கம் வந்துவிட்டது.

அலுவலகங்களில் இந்தியே ஆட்சி செய்வதால், அதை


ஆட்சிம�ொழி என்று அழைப்பதில் கூடத் தவறில்லை. ஆனால்,
வேறு பெயர்களால், குறிப்பாகத் தேசிய ம�ொழி என்று
அழைப்பது தவறாகும். இந்தியைத் தேசிய ம�ொழி என்று

பேரா.அ.இராமசாமி 11
அழைத்தல், பிற ம�ொழிகள் தேசிய ம�ொழிகள் இல்லையா,
வேறு தேசத்து ம�ொழிகளா, அல்லது தேசத்துக்கு எதிரான
ம�ொழிகளா என்ற கேள்விகள் இயற்கையாகவே எழுகின்றன.
இக்கேள்விகளுக்குச் சவகர்லால் நேருவே விடையளித்தார்.

“தேசிய ம�ொழி என்றால், அரசியலமைப்புச் சட்டத்தில்


சேர்க்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள
ம�ொழிகள் அனைத்தும் என்று ப�ொருளாகும்” என்று, 1963
ஏப்ரல் 24ஆம் நாள் மக்களவையில் பேசும்போது தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது அட்டவணை

இந்தியாவில் உள்ள மற்ற ம�ொழிகளுக்கும் மரியாதையும்,


ம தி ப் பு ம் அ ளி க்கப்பட வேண் டு ம் எ ன்பதற்கா க ,
அ ர சி ய லம ை ப் பு ச் ச ட ்ட த் தி ல் , ம�ொ ழி க ள் எ ன்ற
தலைப்பில் எட்டாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
“ இ ம்மொ ழி க ள ை வெ று மனே ம�ொ ழி க ள் எ ன் று
அழைக்காமல், அதிகாரப்பூர்வமாக ‘அறிந்தேற்பு பெற்ற
ம�ொழிகள்’(Officially Recognized Languages) என்று தலைப்பிட்டு
அழைக்கலாம்”என்று நேரு அறிவுரை கூறினார். ஆனால், அது
ஏற்றுக் க�ொள்ளப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டம்
நடைமுறைக்கு வந்த ப�ோது, எட்டாவது அட்டவணையில் 14
ம�ொழிகள் மட்டுமே இருந்தன. தற்போது அதில் 22 ம�ொழிகள்
உள்ளன. க�ோடிக்கணக்கான மக்கள் பேசும் தமிழ், தெலுங்கு,
வங்காளி, மராத்தி ப�ோன்ற ம�ொழிகளும் அதில் உள்ளன.
சுமார் 20,000 மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமற்கிருதமும்
அதில் உள்ளது.

ஒரு சார்பான அரசியலமைப்புச் சட்டம்

ஐவார் சென்னிங் என்ற அரசியலமைப்புச் சட்டமேதை,


“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 15(1)ஆவது பிரிவில்
சமயம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின்
அ டி ப்படை யி ல் வே று ப ா டு க ா ட ்ட க் கூ ட ா து எ ன் று

12 ம�ொழி உரிமை
கூறப்பட்டுள்ளது. இனத்தின் அடிப்படையில் வேறுபாடு
காட்டக்கூடாது என்று ச�ொல்லப்பட்டுள்ள நிலையில்,
ம�ொழியின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது
என்று ச�ொல்லப்படவில்லை. இது விசித்திரமாக இருக்கிறது;
ஏனெனில் இந்தியாவில் இனம் என்று கூறப்படுபவையெல்லாம்
உண்மையில் ம�ொழிக்குழுக்கள்தான் என்பது நமக்குத்
தெரியும்,” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்
உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே,
சமத்துவம் பேசும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்
ம�ொழிச் சமத்துவம் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள்
மட்டுமே பேசக் கூடிய ஒரு ம�ொழிக்கு - இந்திக்கு - ஆதரவாக,
ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பு ஏன்?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களுக்கு ஆங்கில


ம�ொழியைச் ச�ொல்லிக் க�ொடுத்தார்கள். அதற்குக் காரணம்
- இந்தியர்கள் ஆங்கில ம�ொழியைப் படித்து நவீன அறிவியல்,
த�ொழில் நுட்ப வளர்ச்சியைப் புரிந்து க�ொள்ள வேண்டும்;
மேலை ந ா டு க ளி ன் வ ர ல ா ற்றை த் தெ ரி ந் து க�ொள்ள
வேண்டும் என்பதற்காக அல்ல! அவர்களுக்கு அடிமைகள்
தேவைப்பட்டார்கள் - அவர்கள் பேசுவதை இந்தியர்கள்
கேட்க வேண்டும்; அவர்கள் கடிதங்களுக்குப் பதில் எழுத
வேண்டும்; அவர்கள் ப�ோடும் உத்தரவை நிறைவேற்ற
வேண்டும்! அதற்கு ஆங்கிலம் தெரிந்த அடிமைகள் தேவை
என்பதால், இந்தியர்களுக்கு ஆங்கிலத்தைச் ச�ொல்லிக்
க�ொடுத்தார்கள்.

அதைப் ப�ோலத்தான், தில்லி ஏகாதிபத்தியத்திற்கு


அடிமைகள் தேவை; இந்திம�ொழி தெரிந்த அடிமைகள் தேவை;
அவர்கள் இந்தியில் பேசுவதைக் கேட்க வேண்டும்; இந்தியில்
எழுதும் கடிதங்களுக்குப் பதில் எழுத வேண்டும்; இந்தியில்
ப�ோடும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு
அவர்களுக்கு அடிமைகள் தேவை. அதற்காகத்தான், இந்தியை

பேரா.அ.இராமசாமி 13
மற்ற ம�ொழியினர் படிக்க வேண்டும் என்கிறார்கள். மற்றபடி,
இந்தியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்பதெல்லாம்
ப�ொய்; பித்தலாட்டம்!

அப்படி ஓர் அடிமைத்தனத்தில் தமிழன் சிக்கிவிடக்கூடாது


என்பதற்காகத்தான், இந்தி எதிர்ப்புப் ப�ோராட்டத்தைப்
பெரியார் ஈ.வெ.ரா. த�ொடங்கினார். அதை இன்றளவும்
தி.மு.க. த�ொடர்ந்து நடத்தி வருகிறது.

திமுகவின் அணுகுமுறை

ஆட்சி ம�ொழிச் சிக்கலைத் தி.மு.க. இரண்டு வகைகளில்


அணுகி வருகிறது. ஒன்று ப�ோராட்ட முறை; மற்றொன்று
சட்டமுறை! இந்தித் திணிப்பை எதிர்த்துத் தி.மு.க.

அ ர சி ய லம ை ப் பு ச் ச ட ்ட ந க ல் எ ரி ப் பு உ ள்பட
பல்வேறு ப�ோராட்டங்களை நடத்தி வருகிறது. அதன்
விளைவாகத்தான் இந்தி மட்டுமே ஆட்சி ம�ொழி என்ற
நிலையிலிருந்து மாறிய மத்திய அரசு, இந்தியுடன் ஆங்கிலமும்
நீடிக்கலாம் என்பதற்காக, 1963இல், ஆட்சி ம�ொழிகள்
சட்டத்தைக் க�ொண்டு வந்தது. பின்னர், இந்தியுடன்
ஆங்கிலமும் ஆட்சி ம�ொழியாக நீடிக்க வேண்டும் என்று
வலியுறுத்தி, ஒரு திருத்தத்தை, 1967இல் ஆட்சி ம�ொழிகள்
சட்டத்தில் க�ொண்டுவந்தது. எனவே, இன்றைக்கு இந்தியுடன்
ஆங்கிலமும் மத்திய அரசின் ஆட்சி ம�ொழியாக நீடிக்கிறது
என்றால், அதற்குத் தி.மு.க. நடத்திய ப�ோராட்டங்களே
காரணமாகும்!

அடுத்து, ஆட்சிம�ொழிச் சிக்கலைச் சட்டப்படியாகவும்,


தி.மு.க. அணுகியது. 1982 அக்டோபர் 8ஆம் நாள் முரச�ொலி
மாறனும், 2013 மார்ச் 8ஆம் நாள் திருச்சி சிவாவும், தமிழை
மத்திய அரசின் ஆட்சி ம�ொழியாக்கக் க�ோரித் தனிநபர்
சட்டமுன்வரைவை மாநிலங்களவையில் க�ொண்டு வந்தனர்.
ஆனால், ஆளும்கட்சியின் ஆதரவு இல்லாததால், அந்தச்
சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட முடியாமல் ப�ோனது.

14 ம�ொழி உரிமை
2 0 0 4 இ ல் பி ர தம ர் மன்மோ க ன் சி ங் வெ ளி யி ட ்ட ,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தளவு
செயல் திட்டத்தில், கலைஞரின் வலியுறுத்தலுக்கிணங்க,
அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்
உள்ள ம�ொழிகள் அனைத்தையும் மத்தியஅரசின் ஆட்சி
ம�ொ ழி க ள ா க் கு வ து ப ற் றி ஆ ர ா ய்வதற்கா க ஒ ரு கு ழு
அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி,
டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா தலைமையில் ஒரு குழுவை
மத்திய அரசு நியமித்தது. அந்தக் குழுவும் தன்னுடைய
ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டது. அந்த
அறிக்கை வெளியான பின்பு, தமிழை மத்திய அரசின் ஆட்சி
ம�ொழியாக்குவதற்கான நடவடிக்கைகள் த�ொடரும் என்று
தி.மு.க. அறிவித்துள்ளது.

1965 மார்ச் 4ஆம் நாள், மாநிலங்களவையில் பேசிய


அண்ணா, “தமிழ் என்ற த�ொன்மையான ஒரு ம�ொழிக்குச்
ச�ொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது.
என்னுடைய முன்னோர்கள் எந்த ம�ொழியில் பேசினார்கள�ோ,
என்னுடைய கவிஞர்கள் எந்த ம�ொழியில் காவியங்களையும்
தத்துவங்களையும் வழங்கினார்கள�ோ, வற்றாத அறிவுச்
சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த
ம�ொழியில் நாங்கள் பெற்றிருக்கிற�ோம�ோ, அந்தத் தமிழ்
ம�ொழி மையஅரசின் ஆட்சி ம�ொழியாக ஆகும் நாள் வரையில்
நான் ஓயமாட்டேன்.” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என்று கலைஞர்
அறிவித்தபடி, மையஅரசின் ஆட்சி ம�ொழியாகத் தமிழ்
ஆக்கப்படும் நாள்வரையில் தி.மு.க. ஓயப்போவதில்லை.

பேரா.அ.இராமசாமி 15
ம�ொழி உரிமை என்றால் என்ன?
சுப. வீரபாண்டியன்

ம�ொழி உரிமை என்றால் என்ன?

ஒவ்வொரு ஜனநாயக நாடும், தன் குடிமக்களுக்கு


எழுத்துரிமை, பேச்சுரிமை. வழிபாட்டு உரிமை ப�ோன்ற பல
உரிமைகளை வழங்குதல் வழக்கம். அந்த அடிப்படையில், தன்
தாய்மொழியில் பேசவும் எழுதவும், தன் தாய்மொழியையே
தன் நாட்டில் ஆட்சிம�ொழியாகக் க�ொள்ளவும் பெறக்கூடிய
உரிமையே ம�ொழி உரிமை ஆகும்.

அத்தகைய ம�ொழி உரிமையை நம் நாட்டுக் குடிமக்களுக்கு


இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளதா?

!!! இல்லை என்றுதான் ச�ொல்ல வேண்டும். இந்திய


அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பாகத்தின் 14 முதல்
32 வரையிலான பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றிப்
பேசுகின்றன. அதனுடைய சாரமாக ஆறு உரிமைகளைக்
குறிப்பிடுவர். அவற்றை நாம் இவ்வாறு புரிந்து க�ொள்ளலாம்.

சமத்துவ உரிமை Right to equality (Articles. 14-18)


சுதந்திர உரிமை Right to Freedom (Articles. 19-22)
சுரண்டலுக்கு எதிரான உரிமை Right Against Exploitation
(Articles. 23-24)
விரும்பும் மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை Right to
Freedom of Religion (Articles. 25-28)
பண்பாட்டு மற்றும் கல்வி உரிமை Cultural and Educational
Rights (Articles. 29-30), and

16 ம�ொழி உரிமை
அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு பெறும் உரிமை Right
to Constitutional remedies (Articles. 32)

இவற்றை விரிக்கும்போது, சுதந்திர உரிமை என்பதற்குள்,


எழுத்துரிமை, பேச்சுரிமை ஆகியன அடங்குகின்றன. ஆனால்
தாய்மொழியில் பேசும் உரிமை, தாய்மொழியில் எழுதும்
உரிமை, தாமிம�ொழியில் கல்வி கற்கும், நீதிமன்றங்களில்
வாதிடும்,வழிபடும் உரிமை என்று ப�ொருள் க�ொள்ள
இடமில்லை.

இதனால் ஏதும் சிக்கல் எழுந்துள்ளதா?

ஆம் இதனால்தான் விடுதலை பெற்ற நாள் த�ொடங்கி


இன்றுவரையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இன்றும்
அவை தீர்ந்தபாடில்லை. முதலில், அரசமைப்புச் சட்ட
வடிவமைப்பு அரங்கில் எந்த ம�ொழியில் பேச வேண்டும்
என்று சிக்கல், அரசமைப்புச் சட்டத்தை எந்த ம�ொழியில்
எழுத வேண்டும் என்ற சிக்கல், எந்த ம�ொழி ஆட்சி ம�ொழியாக
இருக்க வேண்டும் என்ற சிக்கல் என்று பல்வேறு சிக்கல்கள்
எழுந்தன. அவை எப்படி விவாதிக்கப்பட்டு, எது ந�ோக்கி
நகர்ந்தன என்பது குறித்த கூடுதல் செய்திகள், இதே நூலில்,
பேராசிரியர் அ. ராமசாமி அவர்களின் கட்டுரையில் இடம்
பெற்றுள்ளது.

இவ்வாறு ம�ொழிஉரிமை குறித்த சிக்கல்கள் இந்தியாவைத்


தாண்டிப் பிற நாடுகளிலும் எழுந்துள்ளனவா?

ப�ோதுமான அளவிற்கு எழுந்துள்ளன என்றே ச�ொல்ல


வேண்டும். ம�ொழிச் சிக்கல் முறையாகத் தீர்க்கப்படாத
காரணத்தால், நாடுகள் பிரிந்தே ப�ோயிருக்கின்றன. அதற்கு
நம் நாட்டிற்கு அருகிலேயே எடுத்துக்காட்டு ஒன்றைச்
ச�ொல்ல வேண்டுமென்றால், வங்கதேசத்தைச் ச�ொல்லலாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளாகப் பிரிந்ததற்கு


அடிப்படையில் மதம் காரணம். நிலவழித் தேசியத்தைப்

சுப.வீரபாண்டியன் 17
புறக்கணித்து, பாகிஸ்தான் மத வழித் தேசியம் க�ோரியது.
ஆனால் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்க தேசத்து
மக்களும் இஸ்லாமியர்களே! எனினும் 1971 ஆம் ஆண்டு அது
ஏன் தனி நாடாகப் பிரிந்து ப�ோயிற்று?

அங்கு மதம் ஒன்றாக இருந்தாலும், தாய்மொழிகள்


வேறு வேறாக இருந்தன. கிழக்கு வங்கத்திலிருந்த மக்கள்
தங்களின் தாய்மொழியான வங்க ம�ொழிக்கு உரிய இடம்
தரப்படவில்லை என்று குரல் எழுப்பினர். அது ஒரு தேச
விடுதலைப் ப�ோராட்டமாகவே உருவெடுத்தது. அதன்
ப�ொருட்டே பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது. இங்கே
மதவழித் தேசியத்தை ம�ொழிவழித் தேசியம் வென்றது.

இது தவிர, வேறு நாடுகளிலும் இம்மொழி உரிமைச் சிக்கல்


எழுந்துள்ளதா?

ஆம், பல நாடுகளில் எழுந்துள்ளது. த�ொடக்கத்தில்


ச�ோவியத்தின் ஒரு பகுதியாக இருந்த பின்லாந்து, பிறகு
அதிலிருந்து பிரிவதற்கு ம�ொழி உரிமைச் சிக்கலும் ஒரு
காரணம்.

ம�ொழி உரிமைச் சிக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்


குர்து இனமக்கள். அவர்கள் துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்
என்று பல நாடுகளில் பரவியிருந்தனர். எல்லா நாடுகளிலும்
அவர்களுக்கான ம�ொழி உரிமைச் சிக்கல் எழுந்தது. ஓரிரு
நாடுகள் அவர்களின் தாய்மொழியான குர்தீஷ் ம�ொழியை
எங்கும் பயன்படுத்தவே அனுமதிக்கவில்லை. ஒரே இனத்தைச்
சேர்ந்த அவர்கள் தங்களின் ம�ொழி உரிமைக்காகப் பல
நாடுகளில் பல அரசுகளுடன் ப�ோராட வேண்டி வந்தது.

எல்லா தேசிய இனமக்களின் ம�ொழிகளுக்கும் சம


உரிமை வழங்கி நாட்டில் அமைதியைப் பேணிய நாடுகளும்
உலகில் உண்டு. அவற்றுள் சுவிற்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய
நாடுகளைச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் க�ொள்ளலாம்.

18 ம�ொழி உரிமை
இந்தியாவின் ம�ொழி உரிமைச் சிக்கலை எப்படித் தீர்ப்பது?

பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் இந்தியா


ப�ோன்ற நாடுகளில். எல்லோரும் ஏற்கத்தக்க ம�ொழிக்கொள்கை
வகுக்கப்பட வேண்டும். ம�ொழிக்கொள்கையே அடிப்படையில்
தவறாக இருந்தால், ஒவ்வொரு தேசிய இனமும் தங்களின்
ம�ொழி உரிமையை மீட்கப் ப�ோராடியே தீரவேண்டி வரும்.

அப்படியானால் இந்தியாவின் ம�ொழிக்கொள்கை எப்படியிருக்க


வேண்டும்?

ஒரே இனம் ஒரே அரசு (Nation State) என்று இருக்குமானால்,


இந்த ம�ொழிச் சிக்கலே எழாது. ஆனால் இந்தியா ப�ோன்று
பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாட்டில் (Multi National
State) ம�ொழி உரிமை என்பதும், அதற்கு அடித்தளமாக உள்ள
ம�ொழிக்கொள்கை என்பதும் உயிர்நாடி ப�ோன்றது.

ம�ொழிக்கொள்கையை நான்கு விதமாகப் பார்க்கலாம்.


ஒ ரு ம�ொ ழி க் க�ொள்கை , இ ரு ம�ொ ழி க் க�ொள்கை ,
மு ம்மொ ழி க்க ொள்கை , ப ன்மொ ழி க் க�ொள்கை எ ன
அவற்றைப் பிரிக்கலாம்.

முன்பு இருந்ததை விட, உலக நாடுகளுக்கான த�ொடர்புகள்


மட்டுமின்றி, உலக மக்களுக்கான த�ொடர்பும் இன்று
பன்மடங்கு மிகுதியாகி விட்டது. எனவே ஒருவர�ோட�ொருவர்
த�ொடர்பில் இருந்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
அவரவர் தாய்மொழி மட்டுமே அவரவர்க்குப் ப�ோதுமானது
என்று முடிவெடுத்தால், அண்டை நாட்டினர�ோடு - ஏன் -
அண்டை மாநிலத்தவர�ோடும் கூட நம்மால் த�ொடர்பில்
இருக்க முடியாது.

ஒரு காலத்தில் தங்களின் தாய்மொழியை மட்டுமே


கற்றுவந்த ஜப்பானியர்களும் இன்று ஆங்கிலம் கற்கத்
த�ொடங்கிவிட்டனர். இன்றைய சூழலில் தாய்மொழிய�ோடு
இன்னொரு ம�ொழியையும் காற்றாக வேண்டிய நிலை

சுப.வீரபாண்டியன் 19
ஏற்பட்டுவிட்டது. அது எந்த ம�ொழியாக இருக்கலாம் என்பது
குறித்துப் பேச வேண்டும். அது எந்த ம�ொழியானாலும்,
இன்னொரு ம�ொழி தேவை என்பது உறுதியாகின்றது. எனவே
ஒரும�ொழிக் க�ொள்கை என்பது இனிமேல் ப�ோதுமானதாக
இருக்காது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை


ஏற்றுக்கொண்டுள்ள 14 ம�ொழிகளையும் (இப்போது 22)
ஆட்சி ம�ொழியாக்குங்கள் என்று அறிஞர் அண்ணா 1963
ஆம் ஆண்டே தில்லி மாநிலங்களவையில் எடுத்துரைத்தார்.
இ து வே ப ன்மொ ழி க்க ொள்கை . இ ந் தி ய ா வி ல் உ ள்ள
அனைவரும் 14 ம�ொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
என்பது இதன் ப�ொருளன்று. எந்த ஒரு செய்தியையும் அரசு
14 ம�ொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதே இதன்
ந�ோக்கம்.

இ ந் தி ய ா வ ரை க் கு ம் இ ம்மொ ழி க் க�ொள்கையை
ப �ோ ற் றி ஏ ற் று க்க ொ ண ்டா லு ம் , உ ல க ந ா டு க ள�ோ டு
த�ொடர்பு க�ொள்வதற்கு, இந்த 14 அல்லது 22 ம�ொழிகளைத்
தாண்டி, இன்னொரு ம�ொழி வேண்டுமே என்ற எண்ணம்
எழுகிறது.

இங்குதான் மும்மொழிக்கொள்கை உருப்பெறுகிறது.


அவரவர் தாய்மொழி, இந்தியாவில் உள்ள அனைவர�ோடும்
த�ொடர்பு க�ொள்ள இந்தி, உலக அளவில் த�ொடர்புக்கு
ஆங்கிலம் என்று மும்மொழிக் க�ொள்கை வரையறுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த திமு கழகமும், அதன் தலைவர்


அறிஞர் அண்ணாவும், அதற்குரிய காரணங்களை விளக்கினர்.
ஆ ங் கி ல த் தி ன் மூ ல ம் உ ல க மக்க ள் அ னை வ ர�ோ டு ம்
த�ொட ர் பு க�ொள்ள இ ய லு மென்றால் , ஏ ன் அ தே
ஆங்கிலம் மூலம் இந்திய மக்கள�ோடும் த�ொடர்பு க�ொள்ள
முடியாது என்று அண்ணா கேட்டார். எடுத்துக்காட்டாக,
ஒரு பெரிய பூனை ப�ோவதற்கு ஒரு பெரிய துளையும், சிறிய
பூனை ப�ோவதற்குச் சிறிய துளையும் தேவையா? பெரிய பூனை

20 ம�ொழி உரிமை
ப�ோகும் துளையிலேயே சின்னப் பூனையும் ப�ோய்விடாதா
என்று ஓர் உவமையையும் அவர் முன்வைத்தார்.

எனவே பெரியார் காலம் த�ொடங்கி, அண்ணா, கலைஞர்


காலங்களைக் கடந்து இன்றும் திராவிட இயக்கத்தின்
ம�ொழிக் க�ொள்கை இரும�ொழிக் க�ொள்கையாகவே இருந்து
வருகின்றது.

எங்கோ இருந்து வந்த ஆங்கில ம�ொழியை ஏற்கும் திராவிட


இயக்கம், இந்திய ம�ொழிகளில் ஒன்றான இந்தியை ஏன் மறுக்க
வேண்டும்?

ம�ொழிகளை ப�ொறுத்தவரையில், தாய்மொழி, அந்நிய


ம�ொழி என்று இரண்டே பிரிவுகள்தாம் உண்டு. இந்தியை
இந்திய ம�ொழி என்றால், சீன ம�ொழியை ஆசிய ம�ொழி
என்று அழைத்து நெருக்கம் காட்ட முடியுமா? தாய்மொழி
அல்லாத பிற ம�ொழிகள் அனைத்தும் அந்நிய ம�ொழிகளே!
அந்நிய ம�ொழி என்றால் பகை ம�ொழி என்று ப�ொருளில்லை.
எந்த ம�ொழிய�ோடும், எந்த இனமக்கள�ோடும் நமக்குப்
பகையில்லை. ஆனாலும் எந்த ஒரு பிற ம�ொழியும் நம்
தாய்மொழி ஆகாது என்பதே ப�ொருள்.

சரி, பிற ம�ொழிகளில் ஏத�ோ ஒன்றைக் கற்றுக்கொள்ள


முடிவெடுத்த பின், 5000 மைல்களுக்கு அப்பால் இருக்கும்
ஆங்கிலத்தை விட, அருகில் இருக்கும் இந்தியைத்தானே நாம்
தேர்ந்தெடுக்க வேண்டும்?

இ ன்ன ொ ரு ம�ொ ழி யை ந ா ம் தேர்ந்தெ டு த் து க்


கற்றுக்கொள்வதன் ந�ோக்கம் என்ன என்பதே முதன்மையானது.
ம�ொழித்திறன் பெறுவதற்காக இரண்டாவது ம�ொழியை நாம்
கற்கவில்லை. அதுதான் ந�ோக்கம் என்றால் பத்து ம�ொழிகளைக்
கூ ட ந ா ம் க ற் று க்க ொண் டு ப ன்மொ ழி ப் பு ல வ ர ா க
விளங்கலாம். நம் ந�ோக்கம் அதுவன்று. எந்த ம�ொழியை
அறிந்தால், உலகெங்கும் சென்று வருவதற்கு, அறிவியல்
செய்திகளைப் பகிர்ந்து க�ொள்வதற்கு, வெளிநாடுகளில்

சுப.வீரபாண்டியன் 21
வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவியாய் இருக்கும�ோ
அதனைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடைமையாகும். அப்படி
ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு தேசிய
இனமக்களுக்கும் வேண்டும்!

நம் எல்லையிலிருந்து எவ்வளவு த�ொலைவில் ஒரு ம�ொழி


பேசப்படுகிறது என்பதைக் கணக்கில் க�ொள்ளல் கூடாது.
“அண்டை வீட்டில் இருப்பதால், பகைவன் நண்பனாகி
விட மாட்டான்” என்பார் திராவிட ம�ொழிநூல் ஞாயிறு
தேவநேயப் பாவாணர். ஆகவே திராவிட இயக்கத்தின்
இரு ம�ொழிக் க�ொள்கையே ந ம் ம�ொ ழி உரிம ை யைப்
பாதுகாத்துக் க�ொள்ளவும் உதவும்.

இது ஒருவிதமான ஆங்கில ம�ோகம் என்று விமர்சிக்கப்படுகிறதே?


இந்தியை எதிர்த்துவிட்டு, ஆங்கிலத்திற்கு அடிமையாவது
சரியா?

ஆங்கிலத்திற்கு நாம் அடிமையாகவில்லை. ஆங்கிலத்தைப்


பயன்படுத்துகிற�ோம். அதனால் பயன் அடைகிற�ோம்
என்பதே உண்மை.

பெரியார் த�ொடங்கித் திராவிட இயக்கத் தலைவர்கள்


எல்லோரும் ஆங்கில ம�ோகம் க�ொண்டவர்கள் என்பதும்
உண்மையன்று!

அய்யா பெரியார் தமிழ்ப்பற்று இல்லாதவர் என்று


கு றை கூ று கி ன்ற ன ர் . இ தனை ய ா ரு ம் க ண் டு பி டி க்க
வேண்டியதில்லை. அவரே ச�ொல்லிவிட்டார். எனக்குத்
தேசாபிமானம�ோ, பாஷாபிமானம�ோ கிடையாது’ என்று!
பிறகு அவருக்கு என்ன அபிமானம்தான் உண்டு? ஒரே ஒரு
அபிமானம்தான். அது மனிதாபிமானம்!

அவருக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பது மட்டுமில்லை,


அவர் ஓர் ஆங்கில ம�ோகம் க�ொண்டவர், வீட்டில் வேலை
செய்யும் மனிதர்கள�ோடு கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று

22 ம�ொழி உரிமை
ச�ொல்லி இருக்கிறார் என்கின்றனர். அப்படிச் ச�ொல்லி
இருப்பது உண்மைதான். ஆனாலும், அதற்கு ஆங்கில
ம�ோகம்தான் காரணமா என்பதை அவர் வரலாற்றை
அறிந்தவர்களாலதான் புரிந்து க�ொள்ள முடியும். அவர் ஏன்
அப்படிச் ச�ொன்னார் என்றும் நாம் சிந்திக்கலாம்.

தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று


பெரியார் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். ஏன்?

அதனை அடிய�ொற்றியே, அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடு


முதமைச்சர் ஆன பின்பு, 23.01.1968 அன்று, சட்டமன்றத்தைக்
கூட்டி, தமிழ், ஆங்கிலம் என்னும் இரும�ொழிக் க�ொள்கையைச்
சட்டமாக நிறைவேற்றினார். ஏன்? நமக்குத் தமிழ் மட்டும்
ப�ோதாதா? எதற்காக இங்கே ஆங்கிலம்?

பெரியார் தமிழ் அறிந்தவர். அண்ணா தமிழால் வளர்ந்தவர்.


பிறகு ஏன் இருவரும் ஆங்கிலம் வேண்டும் என்று வாதாடினர்?

தாய்மொழிப் பற்று என்னும் கண்ணோட்டத்தில் மட்டும்


பார்க்காமல், நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், இருவரும்
எவ்வளவு த�ொலைந�ோக்குப் பார்வை உடையவர்கள்
என்பது புரியும். இது வெறும் ம�ொழிச் சிக்கலன்று. இதற்குள்,
ப�ொருளாதாரம், உலகத் த�ொடர்பு, அறிவியல் பார்வை எனப்
பலவும் இருக்கின்றன.

சமூக வலைத்தளத்தில் “நான் ஆங்கிலம் படித்ததால், US


வந்து, தகவல் த�ொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறேன்.
இந்தி படித்திருந்தால், UP சென்று, பாணி பூரிதான் விற்றிருக்க
முடியும்” என்று அண்மையில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு
அமெரிக்கா ப�ோவது பெருமை என்றோ, உத்திரப்பிரதேசம்
செல்வது சிறுமை என்றோ ப�ொருள் க�ொள்ளக் கூடாது.
அவ்வாறே, தகவல் த�ொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவது
உயர்வு என்றும், பாணி பூரி விற்பது தாழ்வு என்றும் கருதக்
கூடாது. ப�ொருளாதார முன்னேற்றத்திற்கு ஆங்கிலம்தான்
பயன்பட்டுள்ளது என்பதும், இந்தி கற்றுப் ப�ொருளியலிலும்,

சுப.வீரபாண்டியன் 23
வாழ்விலும் மேம்பாடு அடைய இயலாது என்பதும் இதன்
உட்பொருள்.

ஆங்கிலத்தின் துணைய�ோடு, வெளிநாடுகளுக்கு நம்


பி ள்ளை க ள் ப �ோ க மு டி ந ்த து எ ன்ப து மட் டு மி ல ்லை ,
இங்கும் ப�ொருளாதார முன்னேற்றத்திற்கு ஆங்கிலம்தான்
பயன்படுகிறது.

எப்படி அவ்வாறு ச�ொல்ல முடியும்?

இன்று நம் பிள்ளைகள் பலரும், கணிப்பொறி கற்று,


தகவல் த�ொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகின்றார்களே,
அ வ ர்க ளி ல் மி க ப் ப ல ர் , ‘ அ வு ட ்சோ ர் சி ங் ’ எ ன ச்
ச�ொல்லப்படும், பிற நாட்டு வேலைகளை இங்கிருந்தே செய்யும்
பணிகளில்தானே உள்ளனர். அது உற்பத்தித் துறையன்று,
சேவை(service)த் துறை. மேலை நாட்டவர்ளுக்கான
வேலையை நாம் செய்து க�ொடுக்கிற�ோம், அவ்வளவுதான்!
அதனால்தான், நம் பெண், ஆண் பிள்ளைகள் எல்லோரும்,
இரவில் கூட அலுவலகம் சென்று வேலை செய்கின்றனர்,
(நமக்கு இரவு என்றால், அமெரிக்காவிற்குப் பகல்). பெண்கள்
வேலைக்குப் ப�ோவது இழிவு என்றும், பாதுகாப்பு அற்றது
என்றும் நினைத்த சமூகம், இன்று இரவிலும் கூட வேலை
செய்ய அனுமதிக்கிறது. ப�ொருள் ஈட்ட வேண்டிய தேவையை
யாராலும் மறுக்க இயலாது.

இ ந ்த சேவை ப் ப னி மூ லமே பெ ரு ம் ப ண ம்
இப்போது நம் நாட்டிற்கு வருகின்றது. அரசாங்கத்தின்
பு ள் ளி வி வ ர ப்ப டி ச�ொ ல ்ல வேண் டு ம ா ன ா ல் , 5 4 . 5 %
தகவல் த�ொழில்நுட்பத் துறை வருமானம், சேவைத் துறை
சார்ந்ததாகவே உள்ளது.

இத்துறையில் பணியாற்ற, வெறும் கணிப்பொறி அறிவு


மட்டும் ப�ோதாது. ஆங்கில அறிவும் வேண்டும். அதுவும்,
அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறையைப் புரிந்து
க�ொள்ளும் அளவிற்கு ஆங்கில அறிவு வேண்டும். அதனைப்

24 ம�ொழி உரிமை
பெற்றிருக்கும் காரணத்தினால்தான், இந்தியாவிலேயே,
தமிழகம் பல துறைகளில் முன்னேறி நிற்கிறது.

தமிழக முன்னேற்றத்திற்கு மட்டுமில்லை, இந்தியப்


ப�ொருளாதார முன்னேற்றத்திற்கே தமிழகம் உதவுகிறது.
தமிழ்நாட்டிற்கு ஆங்கில அறிவு உதவுகிறது.

இதனை அன்றே த�ொலைந�ோக்குப் பார்வையுடன்


கண்டறிந்தவர்கள்தாம் நம் அய்யா பெரியாரும், அறிஞர்
அண்ணாவும், தலைவர் கலைஞரும்! அய்யா, அண்ணா
காலத்தில், கணிப்பொறியும் கிடையாது, அவுட் ச�ோர்சிங்
என்ற ச�ொல்லும் கிடையாது. ஆனாலும், அவர்களின்
‘வருமுன்னர் காத்திட்ட’ அறிவு நமக்கு இன்று பயன்படுகிறது.

அ வ ்வாற ா யி ன் , பி ற ம ா நி லத ்த வ ர் ய ா ரு ம் இ தனை
உணரவில்லையா?

இப்போது அவர்களும் உணரத் த�ொடங்கி விட்டனர்.


சில ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் நடைபெற்ற ஒரு
ப�ோராட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். 2015
ஜூலையில், குஜராத்தில், பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,
தங்களை இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க
வேண்டும் என்று க�ோரி, ஒரு பெரும் ப�ோராட்டத்தில்
ஈடுபட்டனர். 2015 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை அங்கு
வன்முறை தலைவிரித்து ஆடியது. எங்கு பார்த்தாலும்
ப�ோர்க்கோலம்.

அப்போராட்டம் குறித்து, குஜராத்தின் புகழ் பெற்ற


எழுத்தாளர் ப�ோல�ோபாய் பட்டேல் (Bholopai Patel ) ஒரு
கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் சாகித்திய அகாதமி
விருது பெற்றவர். 2008 இல் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவர்
ச�ொன்னார், “எங்கள் சமூகம் (பட்டேல்) சமூக அங்கீகாரமும்,
ப�ொருளாதார வசதியும் உள்ள சமூகம்தான். ஆனால்,
ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு, குஜாராத்தியும், இந்தியும்
மட்டுமே கற்றுக்கொண்டதால், அறிவியல் முன்னேற்றத்தை

சுப.வீரபாண்டியன் 25
எட்ட முடியவில்லை. இளைஞர்களுக்கு வெளிநாடுகளில்
பெரிய வேலையும் கிடைக்கவில்லை. வணிகம் மட்டுமே
எங்களைக் காப்பாற்றவில்லை”

பெரியாரும், அண்ணாவும் இல்லையென்றால் நம்


நிலையும் இப்படித்தான் ஆகியிருக்கும்.

இப்போதைய எடுத்துக்காட்டு ஒன்றையும் ச�ொல்கிறேன்.


இ ன்றை ய க�ொர�ோ ன ா ஊ ர டங் கி ல் கூ டு தல ா க ப்
பாதிக்கப்பட்டவர்கள், பீஹார் மக்கள்தான். அவர்களுக்கு
இந்தி நன்றாகத் தெரியும். ஆனால் அது அவர்களைக்
க ா ப்பாற்ற வி ல ்லை . இ ந் தி ய ா மு ழு வ து ம் , க ட் டி ட ப்
பணிகளிலும், பிறவற்றிலும், கூலித் த�ொழிலாளர்களாகவே
இருந்தனர். ஊரடங்கு வந்தபிறகு, தங்கள் ச�ொந்த ஊருக்குத்
திரும்பவும் வழியின்றி அந்தச் சக�ோதரர்கள் பட்ட பாட்டினை
நாம் அறிவ�ோம். பலர் நடந்தே ஊர் திரும்பினர். பாதியில்
சிலர் சுருண்டு விழுந்து மடிந்தும் ப�ோயினர்.

இப்போது, ஹைதராபாத் மாநகரில் உள்ள, நூற்றாண்டு


கண்ட, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
பணியாற்றிவரும், பட்டியலின மக்களுக்காக அன்றாடம்
பாடுபட்டுவரும் பேராசிரியர் காஞ்ச அய்லய்யா (Kancha
Iylaiah) ஆங்கில ம�ொழியே தலித் மக்களை உயர்த்தும் என்று
த�ொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றார்.

அவர் ஒரு படி மேலே சென்று, ஆங்கிலம் ஒரு பாடமாக


மட்டுமின்றி, ஆங்கில வழிக் கல்வியே வேண்டும் என்றும்,
அ து த ா ன் , அ ங் கு ள்ள ஏ ழை எ ளி ய த லி த் மக்க ளி ன்
எதிர்காலத்திற்கு உதவும் என்றும் வெளிப்படையாகக் கூறி
வருகின்றார். தெலுங்கின் மீது பற்றுக் க�ொள்ளுங்கள், ஆனால்
ஆங்கில வழியில் கற்றுக் க�ொள்ளுங்கள் என்பதே அவரின்
க�ோட்பாடாக உள்ளது.

2019 நவம்பர் 27 அன்று நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகக்


கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “தலித் மக்களின் வளமான

26 ம�ொழி உரிமை
எதிர்காலம் த�ொலைதூரக் கனவாகவே இருப்பதற்கு,
ஆங்கிலக் கல்வியில் பின்தங்கியிருப்பதே காரணம், அதுவே
பெரும் தடையாக உள்ளது” (The main barrier is the lack of
English education, still a faraway dream for most Dalits) என்று
குறிப்பிட்டுள்ளார்.

அங்குள்ள ஜன சேனா கட்சியின் தலைவர் பவன்


கல்யாண், ஆங்கிலத்தைப் புறக்கணித்து, தெலுங்கு வழிக்
கல்வியை வலியுறுத்தும் வரையில் தேர்தலில் வெற்றியே பெற
முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

.ஆங்கிலத்தை ஆதரித்ததால், பெரியார் சந்திக்காத


த ா க் கு த ல ்கள ா ? ஒ ரு மு றை மேடை யி ல் அ வ ர்
பேசிக்கொண்டிருக்கும் ப�ோது ஒருவர் ஒரு துண்டுத தாளில்
ஒரு வினாவை எழுதி அனுப்பினார். அந்த மேடையில்
அண்ணாவும் இருந்தார். “நீங்கள் ஆங்கிலத்தை ஆதரித்தே
பேசிக் க�ொண்டிருக்கின்றீர்களே, நீங்கள் ஆங்கிலேயனுக்கா
பிறந்தீர்கள்?” என்பதே அந்த வினா.

அதற்கும் அய்யா பெரியார் ப�ொறுமையாக விடை


ச�ொன்னா ர் . “ ஒ ரு வ ர் ய ா ரு க் கு ப் பி ற ந ்த வ ர் எ ன்ப து
அவரவருடைய அம்மாவிற்குத்தான் தெரியும். எனக்கு
மட்டுமில்லை, கேள்வி கேட்டவருக்கும் இது ப�ொருந்தும்.
அது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை. அது குறித்துச் சந்தேகம்
உள்ளவர்கள் தனித்தனியாக ஆராய்ச்சி செய்து க�ொள்ளலாம்.
இங்கு ஆங்கிலம் பற்றிய ப�ொதுப் பிரச்சினையை நாம்
பேசலாம். ஆங்கிலம் அந்நிய ம�ொழிதான். ஆனால், அது
நமக்குப் பயன்படுகின்ற ம�ொழியாக. நம் முன்னேற்றத்திற்கு
உதவுகின்ற ம�ொழியாக உள்ளது. எனவே அதனைக் கற்று,
அதை நாம் பயன்படுத்திக் க�ொள்ள வேண்டும் என்கிறேன்
நான்” என்கிறார் பெரியார்.

இதே க�ொச்சையான கேள்வியைத்தான், நம் காலத்தில்,


ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், கவிதையில் கேட்டார்.
“தமிழா நீ பேசுவது தமிழா’ எனது த�ொடங்கும் பாடலில்,

சுப.வீரபாண்டியன் 27
“தலையில் இருப்பது ரிப்பனா, உனக்கு வெள்ளைக்காரன்தான்
அப்பனா?” என்று கேட்டார். இவையெல்லாம் வெறும்
உணர்ச்சி வயப்பட்ட ச�ொற்கள். அறிவு வளர்ச்சிக்கும்,
ப�ொருளியல் வளர்ச்சிக்கும் உதவாது.

ஆ ங் கி ல த் தி ற் கு க�ொ டு க் கு ம் மு த ன ்மை , த மி ழ ர ்க ளி ன்
தமிழ்ப்பற்றைக் குறைத்து விடாதா?

தமிழ்ப்பற்றில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.


நம் தாய்மொழியை நாம் பின்னுக்குத் தள்ளவுமில்லை.
ஆனாலும், தாய்மொழி தமிழ�ோடு சேர்த்து ஆங்கிலத்தையும்
நாம் சரியாகவும், ஆழமாகவும் கற்றுக் க�ொள்ள வேண்டியது
இன்றைய மிகப் பெரும் தேவைகளில் ஒன்றாகும். ஆங்கிலம்
அந்நிய ம�ொழி, இந்திதான் நம் நாட்டு ம�ொழி என்று
கூறும் பார்ப்பனர்கள், ஆங்கிலத்தைச் சரியாகக் கற்றுக்
க�ொண்டதன் மூலமாகவே, ஆங்கிலேயர் ஆட்சியில், நிதி, நீதி,
நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளிலும் கால் பதித்து நின்று,
நம்மை அடிமைகள் ஆக்கினர்.

இப்போதும் அவர்கள் ஆங்கிலம் வேண்டாம் என்று


ச�ொல்வது, ‘உங்களுக்கு ஆங்கிலம் வேண்டாம்’ என்னும்
ப�ொருளில்தான்! ஆங்கிலம் படிக்காத பார்ப்பனர் வீட்டுப்
பி ள்ளை க ள ை ப் ப ா ர்க்க மு டி ய ா து . சமஸ் கி ரு த த் தி ல்
பேசிக்கொள்ளும் பார்ப்பனர்களையும் பார்க்க முடியாது.
சங்கராச்சாரியர்களே தமக்குள் கூட சமஸ்கிருதத்தில் பேசிக்
க�ொள்வதில்லை. அது வெறும் மந்திர ம�ொழி! நாம் ஆங்கிலம்
படித்து முன்னேறி விடுகின்றோம் என்னும் ஆதங்கத்தில்தான்
அவர்கள் ஆங்கிலம் வேண்டாம் என்கின்றனர். ஆங்கிலம்
படித்து நாம் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்
அய்யாவும், அண்ணாவும், கலைஞரும் ஆங்கிலம் படி
என்கின்றனர்.

தாய்மொழிப் பற்று என்னும் எண்ணத்தில�ோ, இந்திய


தேசியப் பற்று என்னும் மாயையில�ோ, தமிழையும்,
இந்தியையும் மட்டும் கற்றுக்கொண்டால் ப�ோதும் என்று

28 ம�ொழி உரிமை
நினைத்தால், நம் அடுத்த தலைமுறை வீழ்ந்து ப�ோகும்!

அப்படியானால், தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய


இரண்டு ம�ொழிகளை மட்டும் சரியாகக் கற்றுக்கொண்டால்
ப�ோதுமானதா?

கண்டிப்பாகப் ப�ோதுமானது. அதே நேரம், வேறு எத்தனை


ம�ொழிகளை வேண்டுமானாலும், நாம் நம் தேவைக்கும்,
திறமைக்கும் ஏற்பக் கற்றுக்கொள்ளலாம். அதுவும் நம் ம�ொழி
உரிமையே. அதனை யாரும் தடுக்கவில்லை.

த ா ய்மொ ழி யை யு ம் , ஆ ங் கி லத்தை யு ம் ச ரி ய ா க க்
கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தேசிய இனமும் முன்னேறும்.
ஏன் ஆங்கிலம் என்று கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை.
ஆங்கிலத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாற்றின்
அடிப்படையில், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி ஆங்கிலம்
ஏற்கனவே நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டது.

நம் தாய்மொழி தமிழ், நம் உணர்வில், உயிரில் கலந்த


ம�ொழி! எனினும் அந்நிய ம�ொழியானாலும், ஆங்கிலம்
உலகத் த�ொடர்புக்கு, கூடுதல் அறிவியல் அறிவுக்கு உதவுகின்ற
ம�ொழி! இரண்டும் நமக்கு வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளதைப் ப�ோல இந்தியா முழுவதும்


இரும�ொழிக் க�ொள்கையை (தாய்மொழியும், ஆங்கிலமும்)
நடைமுறைப்படுத்தினால் நாடு முன்னேறும். வடநாட்டில்
உள்ளதைப் ப�ோல, மும்மொழிக் க�ொள்கையை இங்கும்
நடைமுறைப்படுத்தினால் தமிழகமும் கெட்டழியும்!

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பேசும் ம�ொழி இந்திதானே!


பெரும்பான்மையை மதிப்பதுதானே ஜனநாயகம்?

இந்திதான் பெரும்பான்மை மக்கள் பேசும் ம�ொழி என்பதிலும்


சில விவாதங்கள் உண்டு. பல்வேறு கிளைம�ொழிகளையும்
சேர்த்துத்தான் இந்தி என்று கூறுகின்றனர். சரி, அம்மொழி

சுப.வீரபாண்டியன் 29
பேசுவ�ோர்தான் பெரும்பான்மையினர் என்று வைத்துக்
க�ொண்டாலும், பெரும்பான்மைவாதம் (majoritarianism)
ஜனநாயகத்திற்கு உரம் சேர்க்காது. கேடுதான் செய்யும்.
பெரும்பான்மையினருக்கு அடங்கிப் ப�ோவதே ஜனநாயகம்
என்று ஒரு தவறான புரிதல் நம்மிடையே இருக்கிறது.
மாறாக, சிறுபான்மையினரின் உணர்வுகளையும் மதிப்பதே
ஜ ன ந ா ய க ம் ! அ வ ்வா றி ல ்லை ய ெ னி ல் , ஜ ன ந ா ய க மு ம்
பிழைக்காது, ம�ொழி உரிமையும் பிழைக்காது!

இறுதியாக, நம் ம�ொழி உரிமையைக் காப்பாற்றிக்கொள்ள என்ன


செய்ய வேண்டும்?

உறுதியாகப் ப�ோராட வேண்டும். “இந்தித் திணிப்பை


என்றும் எதிர்ப்போம்” என்பது நம் உறுதியான க�ொள்கை
முழக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தைப் பார்த்துப் பிற
மாநிலங்களிலும் இவ்வுணர்ச்சி எழுந்திருக்கிறது. அதனை
வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியா முழுவதிலும் உள்ள ஒத்த
கருத்து உள்ளவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். ‘மாநில
சுயாட்சி’ என்னும் க�ோட்பாட்டை இந்தியா முழுவதும்
க�ொண்டு செல்ல வேண்டும். ம�ொழி உரிமையில் சமரசத்திற்கு
இடமே இல்லை என்பதை மத்திய அரசுக்குத் தெளிவுபடுத்த
வேண்டும்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பேசும் ம�ொழி இந்திதானே!


பெரும்பான்மையை மதிப்பதுதானே ஜனநாயகம்?

!!! இந்திதான் பெரும்பான்மை மக்கள் பேசும் ம�ொழி


என்பதிலும் சில விவாதங்கள் உண்டு. 1950 ஆம் ஆண்டு, இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 14
ம�ொழிகள் தேச ம�ொழிகளாக ஏற்கப்பட்டன. அதன்பின்,
1967 இல் சிந்தி ம�ொழியும், 1992 இல் க�ொங்கணி, மணிப்புரி,
நேபாளி ஆகிய மூன்று ம�ொழிகளும், 2004 ஆம் ஆண்டு
ப�ோடா, ட�ோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய நான்கு ம�ொழிகளும்

30 ம�ொழி உரிமை
எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன. இப்போது
ம�ொத்தம் 22 ம�ொழிகள் அந்தப் பட்டியலில் உள்ளன.

1961 ஆம் ஆண்டு மக்கள் த�ொகைக் கணக்கெடுப்பில், முதலில்


ஏற்றுக்கொள்ளப்பட்ட 14 ம�ொழிகளைத் தாய்மொழிகளாகக்
க�ொண்டோரின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. அந்தப்
பட்டியல் இதுதான் :-

1. அசாமி ம�ொழி 68,03,460


2. வங்க ம�ொழி 3,38,88,279
3. குஜராத்தி ம�ொழி 2,03,04,461
4. இந்தி ம�ொழி 13, 34,33,207
5. கன்னட ம�ொழி 1,74,15,826
6. காஷ்மீரி ம�ொழி 19,56,114
7. மலையாள ம�ொழி 1,70,15,671
8. மராத்தி ம�ொழி 3,32,86,710
9. ஒரியா ம�ொழி 1,57,19,387
10. பஞ்சாபி ம�ொழி 1,09,50,660
11. சம்ஸ்கிருத ம�ொழி 2,544
12. தமிழ் ம�ொழி 3,05,62,671
13. தெலுங்கு ம�ொழி 3,76,68,106
14. உருது ம�ொழி 2,33,23,399

இ ப்பட் டி ய லி ன்ப டி , இ ந் தி ம�ொ ழி ப ே சு வ�ோ ரி ன்


எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது. அதாவது 13 க�ோடிக்கும்
மேலே. அன்று ம�ொத்த மக்கள் த�ொகையே 54 க�ோடிதான்
(54 க�ோடியே 60 லட்சம்). ஆனால் அந்த 13 க�ோடிப் பேர்
என்பது இந்தியைத் தாய்மொழியாகக் க�ொண்டவர்களின்
எண்ணிக்கை அன்று. இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கை
மட்டுமே.

சுப.வீரபாண்டியன் 31
இந்தி ம�ொழி என்பது மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி,
பிஹாரி என மூன்று வகைப்படும் என்பார் தமிழறிஞர்
மறைமலை அ டி க ள ா ர் . அ வை வே று வே ற ா ன வை .
ஓரிடத்தில் பேசப்படும் இந்தி இன்னோரிடத்தில் புரியாது.
பல்வேறு கிளைம�ொழிகளையும் சேர்த்துத்தான் இந்தி என்று
கூறுகின்றனர். உண்மை நிலவரம் என்ன என்பதைச் சற்று
விரிவாகவே பார்க்கலாம்.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு


உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு

உ.பி யின் தாய்மொழி ப�ோஜ்புரி, பிரதாப்கர். மத்திய உ.பி யில்


பேசப்படுவது ஆவ்தி, பிறகு கன்னோஜி என்கிற ம�ொழியும்
பேசப்படுகிறது

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிம�ொழியும்


ஹிந்திதான் ! ப�ோதாதற்கு சமஸ்கிருதம் கூடுதல் அலுவலக
ம�ொழி.ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி
கடுவாலி மற்றும் கும�ோனி

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக ம�ொழியும்


இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி

ராஜஸ்தானில் ஆட்சி ம�ொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள்


ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, ராஜஸ்தானி ம�ொழியை
இன்று 5 க�ோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். ஆனால்
அம்மொழிக்கு இன்றுவரை எட்டாவது அட்டவணையில்
கூட இடமில்லை.

மத்ய பி ர தேச த் தி ன் ஆ ட் சி ம�ொ ழி இ ந் தி . ஆ ன ா ல்


தாய்மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி, பகேலி.

ஜ ம் மு வி ன் த ா ய்மொ ழி ட�ோ க் ரி , ப ா டி , லட ா க் கி ன்
ம�ொழி லடாக்கி, ஆட்சிம�ொழியாக இந்தி சமீபத்தில்
அறிவிக்கப்பட்டுள்ளது

32 ம�ொழி உரிமை
சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, க�ோர்பா, ஆனால்
ஆட்சிம�ொழியாக ஹிந்தி.

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி, சந்த்தலி

இவை அனைத்தையும் கழித்த பின்னரும், இந்தி ம�ொழி


பேசுவ�ோர்தான் பெரும்பான்மையினர் என்று வாதிடுகின்றனர்.
அப்படியே வைத்துக் க�ொண்டாலும், பெரும்பான்மைவாதம்
(majoritarianism) ஜனநாயகத்திற்கு உரம் சேர்க்காது. கேடுதான்
செய்யும். பெரும்பான்மையினருக்கு அடங்கிப் ப�ோவதே
ஜனநாயகம் என்று ஒரு தவறான புரிதல் நம்மிடையே
இருக்கிறது. மாறாக, சிறுபான்மையினரின் உணர்வுகளையும்
மதிப்பதே ஜனநாயகம்! அவ்வாறில்லையெனில், ஜனநாயகமும்
பிழைக்காது, ம�ொழி உரிமையும் பிழைக்காது!

சுப.வீரபாண்டியன் 33
உறுதியாகப் ப�ோராட வேண்டும். “இந்தித் திணிப்பை என்றும்
எதிர்ப்போம்” என்பது நம் உறுதியான க�ொள்கை முழக்கமாக
இருக்க வேண்டும். தமிழகத்தைப் பார்த்துப் பிற மாநிலங்களிலும்
இவ்வுணர்ச்சி எழுந்திருக்கிறது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும்.
இந்தியா முழுவதிலும் உள்ள ஒத்த கருத்து உள்ளவர்களை
ஒருங்கிணைக்க வேண்டும். ‘மாநில சுயாட்சி’ என்னும் க�ோட்பாட்டை
இந்தியா முழுவதும் க�ொண்டு செல்ல வேண்டும். ம�ொழி உரிமையில்
சமரசத்திற்கு இடமே இல்லை என்பதை மத்திய அரசுக்குத்
தெளிவுபடுத்த வேண்டும்.

You might also like