Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ஒன்பதாம் வகுப்பு

இயல் - 1 (தொடர் இலக்கணம்)


சரியான விடையைத் தெரிவுசெய்க.
1. கந்தன் தண்ணீர் ஊற்றினான்- இத்தொடரில் தண்ணீர் என்பது
அ) செயப்படுபொருள் ஆ)வினைப்பயனிலை
இ) பயனிலை ஈ) எழுவாய்
2. பகுபத உறுப்புகளில் பெரும்பான்மையாக இடம்பெறும் அடிப்படை உறுப்புகளைத்
தெரிவுசெய்க.
அ) பகுதி, விகுதி ஆ) பகுதி, சந்தி, சாரியை
இ) விகுதி, இடைநிலை, விகாரம் ஈ) சாரியை, சந்தி, பகுதி
3. ஆடினான்- இச்சொல்லின் பகுதியைத் தெரிவுசெய்க.
அ) ஆடி ஆ) அடி இ) ஆடு ஈ) ஆட்டு
4. ) எடுத்துக்காட்டுடன் பொருந்தாத தொடரைத் தெரிவுசெய்க.
அ) நாள்தோறும் உடற்பயிற்சி செய் - கட்டளைத் தொடர்.
ஆ) 'பாண்டியன் பரிசு' பாவேந்தரால் இயற்றப்பட்டது-செயப்பாட்டுவினைத்தொடர்.
இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்
ஈ) இராமன் நாளை வாரான்- எதிர்மறைவினைத் தொடர்.
5. வினைமரபைத் தெரிவுசெய்து வினைமுற்றாக மாற்றுக.
அ) முருகன்பால் __________ (குடி/பருகு)
ஆ)யாழிசை, மாத்திரைகளை __________ (தின்/விழுங்கு)
இ) வேடன் பறவையை நோக்கி அம்பு ________ (எய்/விடு)
ஈ) மலர்விழிபூ ________ (பறி/கொய்)
6. பெயரடை, வினையடை கண்டறிக.
நல்ல பாடல் ஒன்று கேட்டேன் - என்னும் தொடரில் பாடல் என்பது _______
பள்ளி வாகனம் மெதுவாகச் சென்றது - என்னும் தொடரில் சென்றது என்பது _________.
7.செய்தித் தொடரை வினாத்தொடராக மாற்றுக.
நாளை பள்ளி விடுமுறை.
8. ஒவ்வொரு தொடர்வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.
அ) கட்டளைத்தொடர் -
ஆ) வினாத்தொடர் -
இ) உணர்ச்சித்தொடர் -
ஈ) செய்தித்தொடர் -
உ) உடன்பாட்டுத்தொடர் -
9. ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும்......... சொல்லாக இருக்கும்.
அ) பெயர் ஆ) வினை இ) இடை ஈ) உரி
10. ஒரு தொடரில் ......... இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) துணைவினை
11. 'படித்தேன்' என்ற தொடருக்குரிய எழுவாய் எது?
அ) அவன் ஆ) அவள் இ) நான் ஈ) நீ
12. 'சொன்னவள் கலா' இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை.
அ) பெயர் ஆ) வினை இ) இடை ஈ) உரி
13. பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்.
அ) ஐந்து ஆ) ஆறு இ) ஏழு ஈ) எட்டு
14. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ......... எனப்படும்.
அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) துணைவினை
15. ' வந்தேன் நான் ' இதில் வரும் பயனிலை.
அ) பெயர்ப் பயனிலை ஆ) வினைப் பயனிலை
இ) உரிப் பயனிலை ஈ) வினா பயனிலை
16. ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ------ ஆகும்.
அ) பயனிலை ஆ) பெயர் இ) பண்பு ஈ) ஏதுமில்லை
17. செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை ------
அ) உடன்பாட்டுவினை ஆ) பிறவினை இ) தன்வினை ஈ ) செய்வினை
18. படித்த மாணவன் - இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம்
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) பண்புத்தொக
19. சொன்னது யார்? - இது ------- பயனிலை ஆகும்.
அ) வினைப்பயனிலை ஆ) பெயர்ப்பயனிலை
இ) வினாப்பயனிலை ஈ.) வேற்றுமைத்தொக
20. ஒரு தொடரில் ------ இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை.
அ) செயப்படுபொருள் ஆ) எழுவாய் இ) பயனிலை ஈ ) வினை
21. பந்து உருண்டது என்பது ----- வினை
அ ) செய்வினை ஆ ) செயப்பாட்டு வினை
இ) தன்வினை ஈ ) பிறவினை
22. நல்ல நூல் ஒன்று படித்தேன்
இத்தொடரில் நல்ல என்னும் சொல் -----
அ) வினையடை ஆ) பெயரடை இ) ஆகுபெயர் ஈ) உரிச்சொல்
23. மகிழ்நன் மெல்ல வந்தான் - இத்தொடரில் மெல்ல என்னும் சொல் -----
அ) பெயரடை ஆ) வினையடை இ) அடுக்குத்தொடர் ஈ) பெயரெச்சம்
24. பதம் ----- வகைப்படும்.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
25. பகுதி என்பதன் மற்றொரு பெயர் -----
அ) இடைநிலை ஆ) இறுதிநிலை இ) முதனிலை ஈ) பயனிலை
26. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் உறுப்பு ------
அ) இடைநிலை ஆ) சந்தி இ) சாரியை ஈ) எழுத்துப்பேறு
27. சொல்லின் இறுதியில் நின்று திணை, பால் , எண் , இடம் காட்டுவது ----- ஆகும்.
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
28. தமிழமுதன் நேற்று வந்தான் ------ தொடர்.
அ) தன்வினை ஆ) பிறவினை இ) செய்வினை ஈ) செயப்பாட்டுவினை
29. பூக்களைப் பறிக்காதீர் ----- தொடர்.
அ) உணர்ச்சித்தொடர் ஆ) வினாத்தொடர்
இ) கட்டளைத்தொடர் ஈ) தன்வினைத்தொடர்
30. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை
உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ------ ஆகும்.
அ) சந்தி ஆ) சாரியை இ ) விகாரம் ஈ ) எழுத்துப்பேறு

இயல் - 2 (துணைவினைகள்)
1. பகுபதமாக உள்ள வினையடிகளை ....... வினையடிகள் என்பர்.
அ) கூட்டு ஆ) முதல் இ) துணை ஈ) தனி
2. கூட்டுவினைகள் பொதுவாக........வகையாக ஆக்கப்படுகின்றன.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஆறு
3. ........ மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) திசை ஈ) வட
4. ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருள் தரும் வினை
......... வினை எனப்படும்.
அ) தனி ஆ) கூட்டு இ) முதல் ஈ) துணை
5. ........... வினை, வினையடி வடிவில் இருக்கும்
அ) தனி ஆ) கூட்டு இ) முதல் ஈ) துணை
6.......... வினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
அ) தனி ஆ) கூட்டு இ) முதல் ஈ) துணை
7. தமிழில் ஏறத்தாழ ...... துனைவினைகள் உள்ளன.
அ) 20 ஆ) 30 இ) 40 ஈ) 50
8. கூட்டுவினையின் முதல் வினை ........ அல்லது ......... என்னும் வினையெச்ச வடிவில்
இருக்கும்.
அ) செய, செய்து ஆ) செய், செய இ) செய்து, செய்பு ஈ) செய்யூ, செய்யிய
9. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.
அ) தந்தியடி ஆ) சுட்டிக்காட்டு இ) ஓடப் பார்த்தேன் ஈ) முன்னேறு
10. 'இரு' என்பதன் துணைவினைத் தொடர் எது?
அ) புத்தகம் மேசையில் இருக்கிறது.
ஆ) நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்.
11. வினைகள் எத்தனை வகைப்படும்.
அ) ஒன்று ஆ) ஐந்து இ) இரண்டு ஈ) மூன்று
12. புத்தகம் மேசையில் இருக்கிறது? – இதில் இரு என்பது _____
அ) முதல் வினை ஆ) துணைவினை இ) கூட்டுவினை
ஈ) எதுவுமில்லை
13. முன்னேறு என்ற கூட்டுவினையின் அமைப்பு _______
அ) பெயர் + வினை ஆ) வினை + வினை இ) இடை + வினை
14. மழை பெய்ய போகிறது. – என்பது _____
அ) முதல் வினை ஆ) துணைவினை இ) கூட்டுவினை
15. ஆசிரியர் செய்யுளை பாடிக் காட்டினார் - இத்தொடரில் உள்ள வினையடி
அ) பாடு ஆ) காட்டு இ) பாடிக்காட்டு

16. முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப் பொருண்மைக்கு மெருகூட்டுபவை

...............*
அ) தனிவினைகள் ஆ) துணைவினைகள்
இ) கூட்டுவினைகள் ஈ) முதல்வினைகள்
17. செய், வை, பண்ணு இவை ______ ஆகும்.
அ) தனிவினைகள் ஆ) துணைவினைகள்
இ) கூட்டுவினைகள் ஈ) முதல்வினைகள்

இலக்கணம் – 3 (வல்லினம் மிகும் இடங்கள்)

1. நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது இடையில் ஓர் எழுத்து புதிதாக


வருவது ________
அ) திரிதல் புணர்ச்சி ஆ) தோன்றல் புணர்ச்சி இ) கெடுதல் புணர்ச்சி
2. வல்லினம் மிக காரணமான எழுத்துகள் _________
அ) ய் ர் ல் வ் ள் ஆ) க் ட் த் ப் ற் இ) க ச த ப
3. வல்லினம் மிகும் இடம் ______
அ) நிலைமொழியின் ஈற்றில் ஆ) வருமொழியின் முதலில்
இ) வருமொழியின் இறுதியில்
4. அந்த இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின் _________ மிகும்.
அ) வல்லினம் ஆ) இடையினம் இ) மெல்லினம்
5. மொழியை பிழையின்றி படிக்கவும் எழுதவும் பேசவும் ______ தேவை.
அ) இலக்கியம் ஆ) இலக்கணம் இ) உரைநடை
6. பொருத்துக
உம்மைத்தொகை - வாழ்க வாழ்க
வினைத்தொகை - முத்துபவளம்
பெயரெச்சம் - வளர்பிறை
அடுக்குத்தொடர் - சலசல
இரட்டைக்கிளவி - வந்த பையன்
7. சேர்த்து எழுதுக.
அ) கோயில்+ஐ + கட்டினான் ஆ) மோர் + ஐ + குடித்தான்
இ) பள்ளி + கு + சென்றேன் ஈ) மதி+ கு + கொடுத்தேன்
8. _______, _____ என்ற எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
அ) ஐந்து, பத்து ஆ) எட்டு, பத்து இ) ஆறு, ஒன்பது
9. கண்டெடுக்கப்பட்டுள்ளன.
A. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
10. ஓரெழுத்து ஒருமொழிக்கு பின் வல்லினம் மிகும். – இக்கூற்று சரியா? தவறா?
அ) சரி ஆ) தவறு
சான்று தருக
1. வலிமிகும் ஆறாம் வேற்றுமைத் தொகை
அ) தவச் சிறிது ஆ) உலகப்பந்து இ) புலித்தோல்
2. வலிமிகும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ___
அ) கூவாக் குயில் ஆ) தாமரைப் பாதம் இ) மார்கழித்திங்காள்
3. இருபெரொட்டுப் பண்புத்தொகை ___________
அ) சாரைப்பாம்பு ஆ) மல்லிகைப் பூ இ) இரண்டும் சரி
4. எதிர்மறைப் பெயரெச்சம் _______
அ) வந்த மாணவன் ஆ) வராத மாணவன் இ) பாடாக் குயில்
கூறியவாறு செய்க
1. தீ + பிடித்தது (வல்லினம் மிகுமாறு புணர்க்க)
அ) தீப்பிடித்தது ஆ) தீபிடித்தது இ) தீயும் பிடித்தது
2. தனிச்சிறப்பு (வல்லினமெய் சுட்டுக)
அ) க் ஆ) ப் இ) ச்
நிரப்புக.
1. இந்தக் காலம் என்பது _______
அ) சுட்டெழுத்து ஆ) சுட்டுப்பெயர் இ) வினாப்பெயர்
2. விகாரப்புணர்ச்சி ______ வகைப்படும்.
அ) ஐந்து ஆ) மூன்று இ) ஆறு
3. வல்லுழுத்துகள் க,ச,த,ப நான்கும் மொழிக்கு ______ வரும்.
அ) முதலில் ஆ) இடையில் இ) இறுதியில்
இலக்கணக் குறிப்பு தருக.
1. வடக்குப் பக்கம் _________
அ) உவமைத்தொகை ஆ) திசைப்பெயர் இ) பண்புத்தொகை
2. தாமரைப்பாதம் _________
அ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) பண்புத்தொகை
3. பூச்செடி _______
அ) வன்தொடர் ஆ) திசைப்பெயர் இ) ஓரெழுத்து ஒருமொழி
4. முதியவருக்குக் கொடு என்பது ____
அ) இரண்டாம் வேற்றுமை ஆ) நான்காம் வேற்றுமை இ) ஆறாம் வேற்றுமை

You might also like