Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 9

செய்தி 6

இரசாயன கழிவுகளை அகற்றும் மையத்தை உருவாக்குங்கள் !

ஆறு, கடல் மாசுபாட்டைத் தவிர்க்க தொழிற்சாலைகளில் இருந்து


வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகளை அகற்றும் மையத்தை ஜோகூரில்
உருவாக்க வேண்டும் என பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan
Abdul Karim வலியுறுத்தினார்.

நவீனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன் கூடிய


ஒருங்கிணைந்த கழிவு சுத்திகரிப்பு மையத்தை பாசிர் குடாங்கிலோ அல்லது
Pengerang இலோ கட்டப்பட வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், வானிலை மாற்ற அமைச்சர் Nik Nazmi Nik


Ahmad இடம், தாம் னிப்பட்ட முறையில் இப்பிரச்சனை குறித்து முன்னரே
பேசி இருப்பதாகவும், குறிப்பாக சுங்கை கிம் கிம் சம்பவம் போன்று மீண்டும்
நிகழாமல் இருக்க இரசாயனக் கழிவு சுத்திகரிப்பு மையம் தேவை என்பதை
அவரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அந்த சுத்திகரிப்பு மையம் கட்டப்படுமேயானால், இரசாயனக் கழிமுகள்


முறையாகக் கையாளப்படும். மேலும், நெகிரி செம்பிலான் மாநிலம் வரை
கழிவுகளைக் கொண்டு செல்லும் செலவும் குறைக்க முடியும.

Bina pusat pelupusan sisa kimia tangani pencemaran sungai, laut


செய்தி 5

பேராவில் வறிய நிலையில் உள்ளவர்கள் 51 விழுக்காடு குறைந்தது

பேரா மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் 51 விழுக்காடு


குறைந்துள்ளது. பேராவில் வருமையை ஒழிக்கும் செயல் திட்டத்தின் வழி
இந்த வெற்றியை அம்மாநிலம் அடைந்துள்ளது என முதல்வர் Datuk Seri
Saarani Mohamad தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தில் மாவட்ட நிலையிலான பல துறைகளைச் சார்ந்த பல்வேறு


ஏஜென்சிகள் உடடுத்தப்பட்டன.

இவ்வாண்டு சனவரி தொடங்கி குடும்பங்களின் தகவல்கள் திரட்டும் முயற்சி


மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பல திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டு 51 விழுக்காடு, அதாவது 4,583 வறிய நிலை குடும்பங்கள்
அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக சராணி குறிப்பிட்டார்.

Miskin tegar di Perak turun 51 peratus


செய்தி 3

அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ காணாமல் போகும்

அம்னோவும் டிஏபி-யும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நிச்சயமாக, 16


வது பொதுத் தேர்தலின்போது அம்னோ காணாமல் போகும் என
கெமாமான் இடைத் தேர்தல் முடிவை சுட்டிக் காட்டி பேசினார் முன்னாள்
பிரதமர் துன் மகாதீர்.

அம்னோவுக்கு ஆதரவு குறைகின்றது என்பதை கெமாமான் இடைத் தேர்தல்


முடிவு காட்டி விட்டது. டிஏபி யுடன் கூட்டணி தொடர்ந்தால் அது அடுத்தப்
பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் அம்னோ தொடர்ந்து


உயிர்பெற்று நிலைத்திருக்க டிஏபியை விட்டு விலக வேண்டும் என்று
மகாதீர் பரிந்துரைத்தார்.

கடந்தகாலத்தில் வறுமையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதில்


அம்னோவின் பங்கு குறித்து இளம் வாக்காளர்களுக்கு தெரியாது என்றார்.
பழைய தலைவர்களை நீக்க வேண்டும். மலாய்க்காரர்களின்
பிரச்சனைகளுக்காக, அவர்களின் ஏழ்மை குறித்து மீண்டும் போராட
வேண்டும் என அம்னோவின் முன்னாள் தலைவரான மகாதீர் கூறினார்.

Umno akan ‘berkubur’ pada PRU16, kata Dr M


செய்தி 8

பதவி விலக புற்று நோய் காரணமா ? மறுக்கிறார் ஸாஹிட்

புற்று நோய் காரணமாக தாம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து


விலகுவதாகப் பரவி வரும் தகவலில் உண்மையில்லை எனக் கூறினார் Datuk
Seri Dr Ahmad Zahid Hamidi

அவர் சமீபத்தில் செய்த அறிவை சிகிச்சை புரோஸ்டேட்


தொடர்புய்டையதாகும். அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என விளக்கி
உள்ளார்.

இது மிகச் சாதாரணமாக விஷயமாகும், உண்மையை அறியாமல் தங்கள்


விருப்பத்திற்கு யாரும் பொய்யானத் தகவலை மக்கள் மத்தியில் பரப்ப
வேண்டாம் என ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாம் நலமாக இருப்பதோடு மீண்டும் பணிக்குத்


திரும்பி இருப்பதாக கூறியுள்ள நிலையில், தாம் குணமாக இறைவனை
வேண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்
கொண்டார்.

Ahmad Zahid nafi letak jawatan, hidap kanser


செய்தி 2

பகாங் அரசு ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ்

பகாங் மாநில அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில்


அவர்களுக்கு ஊக்குவிப்பித் தொகையாக குறைந்தது 2 ஆயிரம் வெள்ளி
அல்லது ஒன்றரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது என அம்மாநில
முதல்வர் Datuk Seri Wan Rosdy Wan Ismail அறிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பகாங் மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையை


இன்று அம்மாநில சட்டமன்றத்தில் வாசிக்கும்போது, இந்த அறிவிப்பை அவர்
செய்தார்.

இதற்காக மொத்தம் 39.6 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர்


குறிப்பிட்டார்.

Bonus sebulan setengah gaji kepada penjawat awam di Pahang


செய்தி 4

பாஸ் கட்சிக்கு ஆதரவு பெருக வில்லை !

கடந்த சனிக்கிழமை நடந்த கெமாமான் இடைத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு


ஆதரவு பெருக வில்லை என அம்னோவின் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid
Hamidi உறுதியாகக் கூறுகிறார்.

மாறாக, அத்தொகுதியில் அம்னோவின் 10 ஆயிரம் வாக்காளர்கள்


பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
68.3 விழுக்காடு அம்னோ வாக்காளர்கள் மட்டுமே அந்த இடைத்தேர்தலில்
வாக்களித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஒப்பிடும்போது, பாஸ் கட்சிக்கு ஆதரவு கூடி
இருப்பதாகட் தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என ஸாஹிட்
விளக்கினார்.

Datuk Seri Ahmad Samsuri Mokhtar ரின் வெற்றியை ஒரு அளவுகோலாக மதிப்பிட
முடியாது. கெமாமானில் 141,000 வாக்காளர் இருக்கிறார் எனக் கூறி பகல்
கனவு காண வேண்டாம் என பாஸ் கட்சிக்கு ஸாஹிட் ஹமிடி
நினைவுறுத்தினார்.

Tidak ada peningkatan sokongan kepada Pas - Ahmad Zahid

செய்தி 7

மலாய் மொழி சரளமாகப் பேசவில்லை என்றால் கடப்பிதம் புதிப்பிப்பதில்


சிக்கலா ?

ஜோகூர் UTC யில் அமைந்துள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்தில்


மாது ஒருவருக்கு மலாய் மொழி சரளமாகப் பேச முடியாததால் அவரது
கடப்பிதழ் புதிப்பிப்பது தடுத்து வைக்கப்பட்டது குறித்து உள்துறை
அமைச்சர் Saifuddin Nasution Ismail தற்காத்து பேசி இருக்கிறார்.

தேசிய மொழியில் சரளமாக பேச முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட


நபரின் குடியுரிமை நிலை குறித்து சந்தேகம் எழுந்திருக்கக் கூடும்.
ஆகையால், குடிநுழைவுத் துறை அதிகாரி அவ்வ்வாறான நடவடிக்கை
முன்னெடுத்திருக்கலாம் என்று சைபுதீன் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டப்படி, மலாய் மொழி நம் நாட்டு தேசிய மொழி.


மற்ற மொழிகளைப் படிக்கலாம், பயன்படுத்தலாம். ஆனால், தேசிய
மொழி அடிப்படையானத் தேவை ஆகும்.

அண்மையில், ஜோகூர் UTC யில் கடப்பிதழ் புதுப்பிக்க முடியாத நிலை


குறித்து மாது ஒருவர் சமூக வலைத்தளத்தில் தமது அனுபவத்தைப்
பகிர்ந்துள்ளார்.

தனது மகளின் கடப்பிதழைப் புதுப்பிக்க வந்த போது, மலாய் மொழியில்


சரளமாக பேசாததற்காக, குடிநுழைவு அலுவலகத்தில் அதிகாரி ஒருவர்
தன்னை திட்டியதாக அந்த பெண் கூறினார்.

Menteri pertahan imigresen tak perbaharui pasport individu tidak fasih BM

செய்தி 1

யாகாவராயினும் நா காக்க ! சனுசியை எச்சரித்த அமைச்சர் King Sing


கெடா மாநிலத்திற்கு அதிகமான சுற்றுப் பயணிகள் வர வேண்டும்
என்றால் அம்மாநில முதல்வர் சனுசி நோர் தமது சொற்கலில் கவனம்
தேவை என எச்சரித்துள்ளார் சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் Tiong
King Sing.

கடந்த வாரம் கெடா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சனுசி Tiong கை


"மொட்டைத் தலை. பானை வயிறு கொண்ட கோயில்" என்று மரியாதை
இல்லாமல் பேசியதாகக் கூறப்பட்டது.

கடந்த மாதம் தாய்லாந்தின் சடாவோவில் அந்நாட்டுப் பிரதமர் Srettha


Thavisin உ டனான சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சென்றபோது,
கெடாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தியோங் போதுமான
அளவு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சனுசி குற்றம் சாட்டினார்.

தமது நா காக்கப்பட வில்லை என்றால் நடப்புச் சூழலைக் காட்டிலும் மிக


மோசமான பின் விளைவுகளை அம்மாநிலச் சுற்றுலாத் துறை சந்திக்க
நேரிடுவதோடு யாருக்கும் பயனில்லாத நிலை ஏற்படும் என தியொங்
எச்சரித்துள்ளார்.

சனுசி வெளியிட்ட மரியாதை அற்றக் கூற்றை மீட்டும் கொண்டு


தியோங்கிடம் மன்னிப்பு கேட்க வேன்டும் என சரவாக் மாநில சுற்றுலாத்
துறை, புத்தாக்கத் தொழில்துறை, கலைத்துறை அமைச்சர் Abdul Karim Rahman
Hamzah வலியுறுத்தினார்.

இருப்பினும், தியோங் சனுசியின் கேலியை நிராகரித்தார், ஏனெனில்


தியோங்கைப் பொறுத்தவரை இது சனுசியின் அரசியலில் ஒரு பகுதியாகும்
என தியோங் கூறினார்.

Tiong minta Sanusi jaga mulut, jangan burukkan keadaan

You might also like