Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 9

செய்தி 1

வெள்ளத்தால் தேர்வுக்கு வர முடியவில்லை என்றால் உடனே


தெரிவியுங்கள் !

தொடர்ந்து மோசமடைந்து வரும் வெள்ளப் பிரச்சனையால் பாதிக்கப்படும்


SPM தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதி அவர்களை
இடமாற்றம் செய்யவோ அல்லது அத்தேர்வை நிறுத்தி வைக்கவோ கல்வி
அமைச்சு ஆவண செய்யும் என அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தொடங்க விருக்கும் இத்தேர்வி


சுமூகமாக நடக்கவும் மாணவர்கள் யாரும் வெள்ளத்தல் பாதிக்காமல்
அத்தேர்வை எழுதவும் கல்வி அமைச்சு பல முன்னேற்பாடுகளை செய்து
வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்ய


கவனமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதால், வெள்ளம் பாதித்த
பகுதிகள் உட்பட, SPM தேர்வு நடைபெறும் என்று ஃபத்லினா கூறியதாக
இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், வெள்ளப் பேரிடர் காரணமாக தேர்வு மையத்திற்கோ


அல்லது அருகிலுள்ள ஏதேனும் தேர்வு மையத்திற்கோ செல்ல முடியாமல்
போனால், உடனடியாக பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்கு
தெரிவிக்குமாறு மாணவர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Banjir: Segera lapor jika tak hadir peperiksaan SPM


செய்தி 7

மீ வியாபாரிக்கு கத்திக் குத்து !

ஈப்போ, Taman Cemerlang Rapat இல் உள்ள உணவகத்தில் மீ வியாபாரம்


செய்பவரைக் கத்தியால் குத்திய ஆடவரை காவல் துறை வலை வீசி தேடிக்
கொண்டிருக்கிறது.

இது குறித்து தகவல் அளித்த ஈப்போ காவல் துறைத் தலைவர் Yahaya Hassan
தெரிவிக்கயில், நேற்று காலை 6.00 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில் 44
வயது மீ வியாபாரியை அடையாளம் தெரியாத வாடிக்கையாளராக வந்த
ஆடவர் கத்தியால் குத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈப்போ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மீ


வியாபாரிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக
Yahaya கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை


தொடங்கி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

Peniaga mi ditikam di Ipoh, polis buru suspek


செய்தி 3

சிலாங்கூரில் புலி அச்சுறுத்தல் இல்லை !

இவ்வாண்டு சிலாங்கூரில் மலாயா புலியின் அச்சுறுத்தல் பதிவு


செய்யப்படவில்லை என சிலாங்கூர் மானில வன விலங்கு பாதுகாப்பு,
வனப்பூங்கா துறையின் இயக்குநர் Mohd Adib Wan Mohd Yusoh தெரிவித்தார்.

இருந்தபோதிலும், கடந்த ஆகஸ்டு மாதம் புலியின் நடமாட்டம் பதிவு


செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார்.

உலு சிலாங்கூர் வனப் பகுதியில் பொது மக்களால் புலியின் நடமாட்டம்


குறித்து புகார் பெறப்பட்டிருந்தாலும் எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை
எனவு அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, அந்தப் பகுதியில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.

Tiada ancaman pak belang di Selangor


செய்தி 2

அமைச்சரவை சீரமைப்பு பிரதமரிப் முடிவு !

அமைச்சரவை சீரமைப்பு என்பது பிரதமர் Datuk Seri Anwar Ibrahimஇன்


உரிமை. அமைச்சரவையை பிரதமர் வழிநடத்தும் திறனை வலியுறுத்தும்
என்று துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof கூறினார்.

அமைச்சரவை சீரமைப்பு இருக்கிறதா எனத் தமக்கு தெரியாது எனவும்


எந்தவிதமான விவாதமும் இவ்விவகாரம் குறித்து நடக்கவில்லை
எனவும் அவர் சொன்னார். குறிப்பிட்ட அமைச்சு அந்த நபரிடம் உள்ள
திறன்களுயும் அறிவுக்கும் இணையாக இருக்கிறதா என பிரதமர் மதிப்பீடு
செய்து அறிவிப்பார் என Datuk Seri Fadillah Yusof குறிப்பிட்டார்.

Keputusan rombak kabinet hak PM - Fadillah


செய்தி 4

இரண்டு பெயர்களை பிரதமரிடம் கொடுத்துள்ளது அமானா

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி காலியாக


இருக்கின்ற நிலையில் அந்தப் பதவிக்காக 2 பெயர்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ
அன்வார் இபுராகிம்மிடம் அமானா கட்சி கொடுத்துள்ளது.

அக்கட்சியின் தேசிய உச்சமன்ற உறுப்பினர் Mohd Sany Hamzan கூறுகயில்,


அமைச்சர் நியமனம் என்பது பிரதமரின் முழு உரிமையாகும்.

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்கள், குறிப்பாக ள்நாட்டு வாணிபம்,


வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவிக்கு தேவையான தகுதிகளை பூர்த்தி
செய்வதை உறுதி செய்ய பிரதமர் மதிப்பீடு செய்ய வேண்டும் என Mohd Sany
Hamzan குறிப்பிட்டார்.

அப்பதவிக்கு உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்


பரிந்துரைக்கப்படலாம் எனவும் Mohd Sany Hamzan கூறினார்.
அதே சமயம், அப்பதவிக்கு தன்னை பிரதமர் நியமிக்கும் நிலையில், அதனை
இறைவன் ஆணையாக ஏற்று நன்றி கூறுவேன் என அவர் மேலும்
சொன்னார்.

Menteri KPDN: Amanah kemuka dua nama kepada PM

செய்தி 8

57 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் !

பினாங்கில் நடத்தப்பட்ட Ops Bersepadu: Samseng Jalanan Digempur எனும் அதிரடிச்


சோதனையில் 57 மோட்டார் சைக்கிள்களை காவல் துறை பறிமுதல்
செய்துள்ளது. மேலும் 88 அபராதச் சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த Barat Daya மாவட்டக் காவல் துறைத் தலைவர்
Superintendan Kamarul Rizal Jenal குறிப்பிடுகயில், நேற்று இரவு 11.30 மணி
அளவில் தொடங்கி அதிகாலை 1.00 மணி வரை இந்தச் சோதனை
மேற்கொள்ளப்பட்டது எனவும் இந்தச் சோதனையில், மாட் ரெம்பிட்
எனப்படும் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபடும்
பேர்வழிகளும் காவல் துறை விரித்த வலையில் சிக்கியதாகவும் அவர்
சொன்னார்.
குறிப்பாக, Jalan Sultan Azlan Shah, Persiaran Mahsuri ஆகிய சாலைகள்
மூடப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், தெருக் குண்டர் கும்பலின்
நடவடிக்கைகளைத் தடுப்பதோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள்
எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதையும் உறுதி
செய்வதையும் இந்தச் சோதனை நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது
என்று Kamarul Rizal கூறினார்.

Mat rempit dikepung, masuk 'perangkap' polis

செய்தி 6

கோவிட்-19 நேர்வுகள் 57 விழுக்காடு அதிகரிப்பு !

முந்தைய வாரம் 2,305 ஆகப் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 நேர்வுகள்,


கடந்த வாரம் 3,626 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதார
அமைச்சின் தலைமை இயக்குநர் Dr Radzi Abu Hassan தெரிவித்தார்.
அதிகரித்த மொத்த எண்ணிக்கையில், 48 விழுக்காட்டினர் 20 முதல் 40
வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் 98 விழுக்காட்டினர் சொற்ப
அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்கள் என அவர் சொன்னார்.

கோவிட்-19 நேர்வுகள் அதிகரித்து இருதாலும், நிலைமை கட்டுப்பாட்டில்


இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பு குறித்து பொது மௌத்துமனை


ஊழியர்களும். தனியார் சுகாதாரப் பணியாளர்களும் விழிப்புடன்
இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கடுமையான சுவாசக்குழாய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு,


குறிப்பாக அதிக ஆபத்துள்ள தரப்பினர்களைக் கவனிக்கும் போது அதிக
கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Kes baharu Covid-19 naik 57% kepada lebih 3,600 minggu lepas

செய்தி 5

சட்டவிரோத குப்பையால் துர்நாற்றம் !

ஏழு கிராமங்களில் வசிக்கும் சுமார் 3 இலட்சம் குடியிருப்பாளர்கள் கடந்த


மூன்று ஆண்டுகளாக இங்குள்ள di Batu 14, Kapar பகுதியில் சட்டவிரோத
கழிவுகளைக் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றத்தாலும் புகையாலும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து காப்பார் செயல் அமைப்பின் தலைவர் Rahim Iska


குறிப்பிடுகயில், Kampung Sungai Serdang, Jalan Suara, Tambak Jawa, Kampung Batu 12,
Kampung Tok Muda, Kampung Bukit Kerayong, Kampung Bukit Kapar ஆகிய பகுதிகள் மிக
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த வட்டாரங்களுக்கு உள்ள 1.2 hektar நிலப்பரப்பில் சில பொறுப்பற்றத்


தரப்பினரின் செயலால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என Rahim Iska
தெரிவித்தார்.

கட்டுமானக் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றால் துர்நாற்றம்


வீசுவதையும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலம் தொட்டே இந்த
விவகாரம் நடந்து வருவதாகவும் அவர் சொன்னார். இந்தப் பிரச்சனையால்
இங்குள்ள மக்களுக்கு சுவாசப் பிரச்சனை, வாந்தி, தலை வலி, போன்ற
உபாதைகளால் அவதியுறுவதாகவும் சொன்னார்.

300,000 penduduk derita bau sampah haram

You might also like