Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது


கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக
இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல
நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய


உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும்.
மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில்
திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு
ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு
ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்


ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி
முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி
தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது,
மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை
4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக்
குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம
முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

You might also like