Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

தூயனின் பண்புநலன்

பிசிராந்தையார் நாடகத்தில் தூயன் துணை கதாப்பாத்திரமாக இடம்

பெற்றுள்ளான்.தூயன் உதவும் மனப்பான்மை உடையவன்.பச்சைக்கிளி தன்

தோழிகளுடன் விளையாடும் போது அங்கு ஒரு கரடி வருகிறது.தோழிகள்

அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடி

விடுகின்றனர்.ஆனால் அவ்வழி வந்த தூயன் பச்சைக்கிளியைக்

காப்பாற்றுகிறான்.அது மட்டுமல்லாமல் அவளைப் பத்திரமாக வீடு வரை அழைத்துச்

செல்கிறான்.இச்செயல் அவன் உதவும் மனப்பான்மை உடையவன் என்பதனை

உணர்த்துகிறது.

அடுத்ததாக தூயன் பழிவாங்கும் குணமுடையவன்.பச்சைக்கிளி தன் காதலை

மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு அவளைப்

பழிவாங்குகிறான்.பச்சைக்கிளியின் கணவரிடம் இலந்தை பழத்தைக் காட்டி தனக்கு

கிடைத்த அன்பளிப்பு என்கிறான்.இதனால் பச்சைக்கிளியின் மீது சந்தேகம் கொண்ட

அவளது கணவன் அவளைக் கொலை செய்கிறான்.இச்சம்பவத்தின் மூலம் தூயன்

பழிவாங்கும் குணமுடையவன் என்பது தெளிவாகிறது.

இறுதியாக, தூயன் செய்த தவறை உணர்ந்து வருந்துபவன்.பச்சைக்கிளி

கொலை செய்யப்படுவதற்குத் தான் தான் காரணம் என்று எண்ணி வருந்துகிறான்.

மேலும், பச்சைக்கிளியைத் தானே கொன்றதாக ஒப்புக் கொண்டு தன்னைத்

தூக்கிலிடுமாறு பாண்டிய மன்னனை வேண்டுகிறான்.தூயனின் இச்செயலானது

அவன் செய்த தவறை உணர்ந்து வருந்துபவன் என்பதனைப் புலப்படுகிறது.

மான்வளவனின் பண்புநலன்

பிசிராந்தையார் நாடகத்தில் மான்வள்வன் துணை கதாப்பாத்திரமாக இடம்

பெற்றுள்ளான்.மான்வளவன் மனைவி மீது அன்பு கொண்டவன்.பச்சைக்கிளியைக்


காதல் திருமணம் செய்து கொண்ட அவன், அவளை மிகவும் அன்புடன் கவனித்துக்

கொள்கிறான்.மேலும் கர்ப்பவதியான பச்சைக்கிளி ஆசைப்பட்டு கேட்கும் இலந்தை

கனியை அவளுக்குக் கொண்டு வந்து கொடுக்கிறான். இச்செயல் அவன் மனைவி

மீது அன்பு கொண்டவன் என்பதனைப் பறைசாற்றுகிறது.

அடுத்ததாக, மான்வளவன் சந்தேக குணமுடையவன்.பச்சைக்கிளிதான் தனக்கு

இலந்தை கனியைத் தந்தாள் என்று தூயன் சொன்ன பொய்யை நம்பி பச்சைக்கிளி

மீது சந்தேகம் கொள்கிறான்.அதே வேகத்தோடு வீட்டிற்குச் சென்று உறங்கிக்

கொண்டிருந்த பச்சைக்கிளி கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் கொலையும்

செய்கிறான்.இக்கொடுர செயலின் மூலம் மான்வளவன் சந்தேக குணமுடையவன்

என்பது தெளிவாகிறது.

இறுதியாக, மான்வளவன் செய்த தவறை உணர்ந்து

வருந்துபவன்.பச்சைக்கிளியைச் சந்தேகப்பட்டு கொலை செய்ததை எண்ணி

வருந்துகிறான்.மேலும்,பச்சைக்கிளியைத் தானே கொன்றதாக ஒப்புக் கொண்டு

தன்னைத் தூக்கிலிடுமாறு பாண்டிய மன்னனை வேண்டுகிறான்.மான்வளவனின்

இச்செயல் அவன் செய்த தவறை உணர்ந்து வருந்துபவன் என்பதனைப்

புலப்படுத்துகிறது.

பிசிராந்தையாரின் பண்புநலன்

பிசிராந்தையார் நாடகம் பாவேந்தர் பாரதிதாசன் கைவண்ணத்தில் மலர்ந்த

நாவலாகும். இந்நாவல் அறமும் உயர்நட்பும் என்ற கருப்பொருளைக்

கொண்டுள்ளது. இந்நாவலில் பிசிராந்தையார் முதன்மைக் கதாப்பாத்திரமாகப்

படைக்கப்பட்டுள்ளார்.

பிசிராந்தையார் நட்பைப் போற்றுபவர். கோப்பெருஞ்சோழன் மீது கொண்ட

ஆழ்ந்த நட்பால் தன் பேரன் முருகுவை கோப்பெருஞ்சோழன் என்று அழைக்கிறார்.


தன் மகன்களுடன் போரிட விரும்பாத கோப்பெருஞ்சோழன் வடக்கிலிருந்து உயிர்

துறக்க நினைத்ததை அறிந்து தானும் சோழனோடு உண்ணாந்நோன்பிருந்து உயிர்

துறக்கிறார். இதன் மூலம் இவர் நட்பைப் போற்றுபவர் என்பது தெளிவாகிறது.

மேலும், பிசிராந்தையார் உதவும் குணம் கொண்டவர். தன் குடும்பம்

வறுமையில் வாடுகிறது என்பதனை மேற்படியார் கூறும் போது பிசிராந்தையார் தன்

மார்பில் இருந்த கல்லிழைத்த பதக்கத் தொங்கலைக் கழற்றி மேற்படியாரிடம்

கொடுத்து மனைவி மக்களின் பசியைப் போக்குமாறு கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல், புயல் காற்றைப் பற்றி மக்களை எச்சரிக்கிறார்.இவரின் உதவும்

குணம் இச்சூழலின் மூலம் வெளிப்படுகிறது.

அடுத்ததாக, பிசிராந்தையார் நகைச்சுவை மிக்கவர். புயல் காற்றால்

வீசியெறியப்பட்ட மேற்படியாரைக் கீழ்ப்படியார் என்று சொல்லி நகைச்சுவையாகப்

பேசுகிறார். கடும் காற்று மழையில் மேற்படியாரின் நிலை குறித்து வேடிக்கையாகப்

பேசிச் சிரிக்கிறார். இச்சம்பவம் இவரின் நகைச்சுவை தன்மையைக் காட்டுகிறது.

தொடர்ந்து, பிசிராந்தையார் மக்களுக்குத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும்

பக்குவம் வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர். ஒவ்வொரு மனிதரும் தன்னைத்

தற்காத்துக் கொள்ளும் ஆற்றலோடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

பச்சைக்கிளி தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆற்றல் இல்லாதவளாக இருந்ததால்

கொலை செய்யப்பட்டாள் என்கிறார். இச்சான்றுகளே பிசிராந்தையார் மக்களுக்குத்

தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்

என்பதனை உணர்த்துகிறது.

இறுதியாக, பிசிராந்தையார் மதிநுட்பம் கொண்டவர். பச்சைக்கிளி கொலை

வழக்கை விசாரிக்கும் போது, அவள் உடல் அதிக நாள் தாங்காது என்பதால் கொலை

செய்தவரைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் இறந்த பெண்ணைப் போல

மரப்பொம்மை ஒன்றைத் தச்சுப்புலவரைக் செய்யச் சொல்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல், இளங்கோற்சோழனின் பேச்சை வைத்தே அவன்


இளவரசன் என்பதனை கண்டு கொள்கிறார். இச்சம்பவங்களே இவரின்

மதிநுட்பத்தைப் பறைசாற்றுகின்றன.

ஆகவே, பிசிராந்தையாரிடம் உள்ள இது போன்ற நல்ல பண்புகளை

கடைப்பிடித்தால் நாமும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதோடு பிறருக்கு

வழிகாட்டியாகவும் இருக்கலாம்.

மொழிநடை (நாடகம்)

பிசிராந்தையார் நாடகத்தில் பல மொழிநடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று இலக்கிய நடையாகும். இலக்கிய நடை என்பது இயல்பான

நடையில்லாமல் அழகிய கூறுகளைக் கொண்டு அமைவதாகும். சான்றாக,

பச்சைக்கிளியின் உடலைக் கண்டு அரசியும் பெண்களும் துன்பக்கண்ணீர்

சிந்துவதைக் கண்டு பிசிராந்தையார் “சிலந்தி வலை மலையையா தாங்கும்! செவ்விய

உள்ளம் தீச்செயல் தாங்குமா? அரசியாரே! அம்மையாரே! விரைவில் இவ்விடம்

விட்டு விலக வேண்டும்” என்கிறார்.

அடுத்ததாக, வசைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. வசைமொழி என்பது

கோபத்தைக் காட்டும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி ஒருவரைத்

திட்டுவதைக் குறிக்கும். உதாரணமாக, தன் மகன்கள் இருவரும் தனக்கு எதிராக படை

திரட்டியுள்ளதை அறிந்த கோப்பெருஞ்சோழன் வாளை உருவி கோபத்தில் “

பெற்றவள் பிள்ளைகளை இழக்கட்டும்.என் நாடு தான் பெற்ற இன்னலை

இழக்கட்டும். என் ஆட்சி தன் பெரும்படையை இழக்கட்டும்.என் பெரும்படையினர்

தம் தலைகளை இழக்கட்டும்” என்கிறார்.

இறுகியாக, பேச்சு வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சு வழக்கு என்பது

அன்றாட வாழ்வில் மக்கள் இயல்பாக பேசும் மொழியாகும்.பச்சைக்கிளியும்

பொன்னனும் பேசுவது பேச்சு வழக்காகும்.


பச்சைக்கிளி :பள்ளிக்குச் செல்வது உனக்குப் பெருங்கசப்பு.சென்றுவிட்டால் அங்கு

சிறிது

நேரம் தங்கியிருப்பதும் பிடிக்கிறதில்லை.

பொன்னன் : அப்பா இலந்தைப் பழம் கொண்டாருவாங்க.

மொழிநடை (நாவல்)

வாடாமலர் நாவலில் பல மொழிநடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று இலக்கிய நடையாகும். இலக்கிய நடை என்பது இயல்பான

நடையில்லாமல் அழகிய கூறுகளைக் கொண்டு அமைவதாகும்.சான்றாக,திரு.வி.க

சொற்பொழிவு இலக்கிய நயத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது.”அன்பு இல்லாமல்

புறக்கணிப்பைக் கொடுத்தால்,ஏய்ப்பை விதைத்தால், ஏமாற்றத்தை உண்டாக்கினால்,

இளமனதில் வன்பு வளரும்; கோணல் வளரும்; கொடுமை வளரும்.

அடுத்ததாக, வசைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. வசைமொழி என்பது

கோபத்தைக் காட்டும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி ஒருவரைத்

திட்டுவதைக் குறிக்கும். உதாரணமாக,குழந்தைவேலைத் தானப்பன் சித்தி

திட்டுகிறார். யாருடா நீ? கூட்டாளி வந்து விட்டாயா? வேலை இல்லையா வீட்டில்?

நாளையிலிருந்து இந்தப் பக்கம் தலை காட்டாதே. சோம்பேறிக் கழுதைகள்”.

இறுகியாக, பேச்சு வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சு வழக்கு என்பது

அன்றாட வாழ்வில் மக்கள் இயல்பாக பேசும் மொழியாகும். எடுத்துக்காட்டு,

“அய்யோ! தெய்வம் சாட்சியாச் சொல்றேங்க; நான் இந்த வீட்டில் எத்தனை

வருசமாய் இருக்கிறேன். ஒரு கொடுமையும் செய்ததில்லைங்க” என்று தானப்பன்

வீட்டுச் சமையலாள் கூறுகிறார்.

உத்திகள் (நாடகம்)
பிசிராந்தையார் நாடகத்தில் பல உத்தி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பின்னோக்கு உத்தியாகும். பின்னோக்கு உத்தி என்பது கடந்தகால

நிகழ்வுகளைப் பின் நோக்கிக் கூறுவதாகும்.பச்சைக்கிளி கொலையில் குற்றத்தை

ஒப்புக் கொண்ட தூயனும் மான்வளவனும் பச்சைக்கிளி கொல்லப்படுவதற்கு முன்

நடந்ததைக் கூறுகின்றனர்.

அடுத்ததாக, நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது.கதைப்பாத்திரம் தன்

மனக்கண்வழி காணுகின்ற காட்சியாகவும் எண்ணங்களின் பதிவாகவும் இவ்வுத்தி

அமையும்.சான்றாக, “மேலுக்கு அமைதி; உட்புறம் குமுறல். தெருவில் நடிப்பு;

திரைமறைவில் கொலைக்கான சூழ்ச்சிகல். அடுக்களையில் அமிழ்தின் தோற்றம்;

அகப்பை நிறைய நஞ்சு” என்று அரசர் எண்ணுவதாக அமைகிறது.

இறுதியாக, முன்னோக்கு உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.எதிர்காலத்தில்

நடக்கப்போகும் நிகழ்வை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவது முன்னோக்கு

உத்தியாகும்.இளங்கோச் சோழன் தன் தந்தைக்கு எதிராகச் செயல்படுவான் என

முன்கூட்டியே நமக்கு உணர்த்துதல்.”மனதில் வைத்திரு! அரசர் என் தந்தையார்தாம்

என் பகைவர் நம் பகைவர். விரைவில் தெரியும் செய்தி .சுருக்கமாகச் சொல்கிறேன்.

நான் தான் இந்நாட்டுப் பேரரசன்” என இளங்கோச் சோழன் கூறுவது முன்னோக்கு

உத்தியாகும்.

உத்திகள் (நாவல்)

வாடாமலர் நாவலில் பல உத்தி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பின்னோக்கு உத்தியாகும். பின்னோக்கு உத்தி என்பது கடந்தகால

நிகழ்வுகளைப் பின் நோக்கிக் கூறுவதாகும். சான்றாக, “இரண்டு வயதுக்கும்

குறைவாக இருக்கும்.என் தாயின் முகம் எனக்கு நினைவே இல்லை.சின்னம்மாதான்

என்னை அன்போடு வளர்த்தார்கள்” என்று குழந்தைவேலின் தந்தை கூறுவது

பின்னோக்கு உத்துயாகும்.

அடுத்ததாக, நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது. கதைப்பாத்திரம் தன்

மனக்கண்வழி காணுகின்ற காட்சியாகவும் எண்ணங்களின் பதிவாகவும் இவ்வுத்தி


அமையும். தானப்பன் மனைவியும் வச்சிரநாதனும் நெருங்கிப் பழகுவதை எண்ணிப்

பார்த்துக் குழந்தைவேல் வருத்தமும் குழப்பமும் அடைதல். ”இந்த ஒரு வழியை

நண்பனிடம் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது! அவனுடய மனைவியின் மேல்

நான் ஐயுற்றது போல் ஆகுமே”.

இறுதியாக, முன்னோக்கு உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்

நடக்கப்போகும் நிகழ்வை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவது முன்னோக்கு

உத்தியாகும். அன்று இரவு தானப்பன் தன் மனைவியோடு போராடி அவளைக்

கொன்றுவிட்டதாகக் கனவு கண்டு அலறி எழுகிறான் குழந்தைவேல்; வீணான

கற்பனைகள் கூடாது எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்கிறான். பின்னாளில்

தானப்பனும் கனகமும் மரணம் அடையப்போகின்றனர் என்பதனை முன்கூட்டியே

இஃது உணர்த்துவதாக இக்கனவு நாவலில் வருகிறது.

You might also like