Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 21

ச ோற்றுக்கணக்கு [ ிறுகதை]

ஜெயச ோகன்
February 3, 2011

கெத்தேல் சாெிப் என்றால் தெள்விப்பட்டிருக்ெ மாட்டீர்ெள்.


ேிருவனந்ேபுரம் சாலை பஜாரில் இப்தபாது ஸ்ரீபத்மநாபா ேிதேட்டர்
இருக்கும் இடத்ேிற்கு அருெில் அந்ேக்ொைத்ேில் அவரது
சாப்பாட்டுக்ெலட இருந்ேது. அறுபது எழுபதுெளில் அங்தெ
சாப்பிடாேவர்ெள் ேிருவனந்ேபுரத்ேில் இருந்ோல் அவர்ெள் லசவச்
சாப்பாட்டுக்ொரர்ெளாெ இருப்பார்ெள்.

எழுபத்ேிஎட்டில் கெத்தேல் சாெிப் சாவது வலர ெலட நடந்ேது.


இப்தபாதும் மென் பை இடங்ெளில் ெலடலே நடத்துெிறார். அதே
இடத்ேில் அவரது உறவினர்ெள் ெலட நடத்துெிறார்ெள். இப்தபாதும்
அங்தெ மீ ன்ெறிக்கும் தொழிக்குழம்புக்கும் அதே சுலவோன். இப்தபாது
முபாரக் ஓட்டல் என்று கபேர். இன்றும் கூட்டம்கூட்டமாெ வந்து
ொத்துக்ெிடந்து சாப்பிடுெிறார்ெள். முபாரக் ஓட்டைில் சாப்பிட்டால்ோன்
ேிருவனந்ேபுரம் வந்ேோெதவ ஆகும் என நம்பும் அலசவப்பிரிேர்ெள்
தெரளம் முழுக்ெ உண்டு. ஆனால் கெத்தேல் சாெிப் தசாற்றுக்ெலட
தவறு ஒரு விஷேம், கசான்னால்ோன் புரியும்.

இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் ேெரக்கூலர தபாட்ட


கொட்டலெோெதவ இருக்ெிறது. அன்கறல்ைாம் அது ஓலை தவய்ந்ே
பேிலனந்ேடிக்கு எட்டடி கொட்டலெ. மூங்ெிலை ெட்டி கசய்ே கபஞ்சு.
மூங்ெிைால் ஆன தமலஜ. கொட்டலெ நான்குபக்ெமும் ேிறந்து
ெிடக்கும். கவேில்ொைத்துக்கு சிலுசிலுகவன ொற்தறாட்டமாெ
இருந்ோலும் மலழேில் நன்றாெதவ சாரைடிக்கும். தெரளத்ேில்
மலழக்ொைம்ோதன அேிெம். இருந்ோலும் கெத்தேல் சாெிபின்
ஓட்டைில் எந்தநரமும் கூட்டமிருக்கும்.
எந்தநரம் என்றா கசான்தனன்? அவர் எங்தெ எந்தநரமும் ெலட ேிறந்து
லவத்ேிருக்ெிறார்? மேிேம் பன்னிரண்டு மணிக்கு ேிறப்பார்.
மூன்றுமணிக்கெல்ைாம் மூடிவிடுவார். அேன்ப்பின்பு சாேங்ொைம்
ஏழுமணிக்கு ேிறந்து ராத்ேிரி பத்து மணிக்கு மூடிவிடுவார். ொலை
பேிதனாரு மணிக்தெ ெலடேின் முன்னால் ஒட்டுத்ேிண்லணேிலும்
எேிர்ப்பக்ெம் ரஹ்மத்விைாஸ் என்ற லேேல்ெலடேிலும்
ெரு.பழ.அருணாச்சைம் கசட்டிோர் அண்ட் சன்ஸ் கமாத்ேப்பைசரக்கு
வணிெம் ெலடேின் குதடானின் வாசைிலும் ஆட்ெள் ொத்து நிற்பார்ெள்.
பாேிப்தபர் மாத்ருபூமிதோ தெரளகெௌமுேிதோ வாங்ெிவந்து
வாசிப்பார்ெள். கெ.பாைெிருஷ்ணனின் சூடான அரசிேல்
ெட்டுலரெலளப்பற்றி விவாேம் நடக்கும். சமேங்ெளும் வாக்தெற்றமும்
உண்டு.

எல்ைாம் சாெிப் ெலடலே ேிறப்பேற்கு அறிகுறிோெ வாசைில்


கோங்ெவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுோலவ தமதை தூக்ெி சுருட்டி
லவப்பதுவலரோன். கூட்டம் கூட்டமாெ உள்தள தபாய்
உட்ொர்ந்துவிடுவார்ெள். கெத்தேல் சாெிப் ராட்சேன் தபாை இருப்பார்.
ஏழடி உேரம். தூண்தூணாெ லெொல்ெள். அம்லமத்ேழும்பு நிலறந்ே
கபரிே முெம். ஒரு ெண் அம்லமதபாட்டு ெைங்ெி தசாழி தபாை
இருக்கும். இன்கனாரு ெண் சிறிோெ சிவப்பாெத் ேீக்ெங்கு தபாை.
ேலைேில் கவள்லள வலைத்கோப்பி. மீ லசேில்ைாே வட்டத்ோடிக்கு
மருோணி தபாட்டு சிவப்பாக்ெிேிருப்பார். இடுப்பில் ெட்டம்தபாட்ட
லுங்ெி அேன்தமல் பட்லடோன பச்லசகபல்ட். மலைோளிோனாலும்
கெத்தேல் சாெிப்புக்கு மலைோளம் தபசவராது. அரபிமலைோளம்ோன்.
அவரது குரலைதே அேிெம் தெட்ெ முடிோது. தெட்டாலும் ஓரிரு
கசாற்கறாடர்ெள் மட்டுதம. ‘பரீன்’ என்று அவர் ெனத்ே குரைில்
கசால்ைி உள்தள கசன்றால் ஆட்ெள் கபஞ்சுெளில்
நிலறந்துவிடுவார்ெள்.

அலழக்ெதவ தவண்டிேேில்லை. உள்தள இருந்து தொழிக்குழம்பும்,


கபாரித்ே தொழியும், கொஞ்சுவறுவலும், ெரிமீ ன் கபாள்ளலும்,
மத்ேிக்கூட்டும் எல்ைாம் ெைந்து மணம் ஏற்ெனதவ
அலழத்துக்கொண்டிருக்கும். நானும் இத்ேலன நாள் சாப்பிடாே ஓட்டல்
இல்லை. கெத்தேல் சாெிபின் சாப்பாட்டு மணம் எப்தபாதுதம
வந்ேேில்லை. வாசுதேவன் நாேர் ‘அதுக்கு ஒரு ெணக்கு இருக்குதட.
சரக்கு வாங்ெிறது ஒருத்ேன், லவக்ெிறது இன்கனாருத்ேன்னா எப்பவுதம
சாப்பாட்டிதை ருசியும் மணமும் அலமோது. கெத்தேல் சாெிப்பு மீ னும்
தொழியும் மட்டுமில்ை அரிசியும் மளிலெயும் எல்ைாம் அவதர தபாேி
நிண்ணு பாத்துத்ோன் வாங்குவார். குவாைிட்டிேிதை ஒரு எள்ளிலட
வித்ேிோசம் இருந்ோ வாங்ெ மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு
சிலறேின்ெீ ழ் ொேைிதை இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிலள
புடிச்சு வலைதோட அதுெலள ேண்ணிக்குள்தளதே தபாட்டு
இழுத்துக்ெிட்டு தோணி துலழஞ்சு வருவான். அப்டிதே தூக்ெி அப்டிதே
சலமக்ெ கொண்டுதபாவாரு சாெிப்பு.. மக்ொ தநர்லமோ இருந்ோ
அதுக்குண்டான ருசி ேன்னாை வரும் பாத்துக்தொ’

என்ன கசய்வாதரா, அவர் ெலடேில் சாப்பிட்ட பேிலனந்ோண்டுெளில்


ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்கபாருள்கூட மிெச்சிறந்ே ருசி என்ற
நிலைேில் இருந்து ெீ தழ வந்ேதே இல்லை. அலே எப்படிச் கசால்ைி
விளக்குவகேன்தற கேரிேவில்லை. தநர்லம மட்டுமல்ை.
ெணக்கும்கூடத்ோன். சாெிப் ெலடேில் குழம்பும் கபாரிேலும் எப்தபாதும்
தநராெ அடுப்பில் இருந்து சூடாெ ெிளம்பி வரும். வரும் கூட்டத்லே
முன்னதர ெணித்து அேற்தெற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார்.
அவரும் அவரது பீபியும் இரு லபேன்ெளும் இரண்டு
உேவிோளர்ெளும்ோன் சலமேல். அவர்ெள் அலனவரும் சாெிப்புக்கு
ெட்டுப்பட்டவர்ெள். அவர் மூக்ொதைதே ருசி ெண்டுபிடிப்பார். ஆனால்
இகேல்ைாம் சும்மா கசால்வதுோன். அங்தெ ஒரு தேவலே
குடிகொண்டிருந்ேது என்றுோன் கசால்ைதவண்டும்.சரி, தேவலே
இல்லை, ஜின். அதரபிோவில் இருந்து வந்ே ஜின் அல்ை, மைபாரில்
ஏதோ ெிராமத்ேில் பிறந்து ெல்ைாேிப்புலழேின் ேண்ணர்ீ குடித்ே ஜின்.

கெத்தேல் சாெிப்பின் பூர்வெம்


ீ மைபாரில். யூசஃபைி தெச்தசரி எழுேிே
‘ெல்ைாேி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒைிக்ெக் தெட்டதபாது
அவரது மென் ‘ஞம்ம பாப்பான்தற கபாழேல்தை’ என்றார். மற்றபடி
அவலரப்பற்றி கேரிோது. அவர் தபசுவதேேில்லை. அவலர ோராவது
மனவசிேம் கசய்து தபசலவத்ோல்ோன் உண்டு. பஞ்சம்பிலழக்ெ வந்ே
குடும்பம். சிறுவேேிதைதே சாெிப் கேருவுக்கு வந்துவிட்டார். இருபது
வேதுவலர லெேில் கபரிே கெட்டிலுடன் டீ சுமந்து
விற்றுக்கொண்டிருந்ோர். அந்ேப்கபேர் அப்படி வந்ேதுோன். அேன்பின்
சாலைதோரத்ேில் மீ ன் கபாரித்து விற்ெ ஆரம்பித்ோர். கமல்ை
சப்பாட்டுக்ெலட. ’கெத்தேல் சாெிபின் லெோல் குடிச்ச சாோவுக்கு
பிறகு இன்லனக்கு வலர நல்ை சாோ குடிச்சேில்தை’ என்று அனந்ேன்
நாேர் ஒருமுலற கசான்னார். சாட்சாத் கெௌமுேி பாைெிருஷ்ணதன
சாெிப் லெோல் டீ குடிக்ெக் ெழக்கூட்டத்ேில் இருந்து சாலை பஜாருக்கு
வருவார் என்றார்ெள்.

சாெிப்புக்கு ஒரு குலறயும் இல்லை. அம்பைமுக்ெில் கபரிே வடு.



கூட்டுக்குடும்பம். நெரில் ஏகழட்டுக் ெலடெள். மூன்று கபண்ெலள
ெட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புேிோப்ள’ெளுக்கும் ஆளுக்கொரு
ெலட லவத்து கொடுத்ேிருந்ோர். எல்ைாம் ஓட்டைில் சம்பாேித்ேது
என்று கசான்னால் ஆச்சரிேப்படமாட்டீர்ெள். ஆனால் அவரது
விோபாரமுலறலேச் கசான்னால் ஆச்சரிேப்படத்ோன் கசய்வர்ெள்.

சாெிப் சாப்பாட்டுக்குக் ொசு வாங்குவேில்லை. டீ விற்ற ொைம் முேதை
உள்ள பழக்ெம். ெலடேின் முன்னால் ஒரு மூலைேில் சிறிே
ேட்டிோல் மலறக்ெப்பட்டு ஒரு ேெர டப்பா உண்டிேல்
லவக்ெப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் தபாெிறவர்ெள் அேில்
எவ்வளவு தவண்டுமானாலும் தபாடைாம். ோரும்
பார்க்ெப்தபாவேில்லை. தபாடாமலும் தபாெைாம். எத்ேலன நாள்
தபாடாமல் தபானாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாெிப்
அலே ெவனிக்ெதவ மாட்டார்.

கேருவில் சட்லடதபாடாமல் ொக்ெி நிக்ெரும் வட்டத்கோப்பியுமாெ


அலைந்ே டீப்லபேனாெ இருக்கும்தபாதே கெத்தேல் சாெிப்
அப்படித்ோன். ஒரு சின்ன டப்பா அவர் அருதெ இருக்கும், அேில்
விரும்பினால் ொசு தபாட்டால் தபாதும். விலைதெட்ெக் கூடாது,
கசால்ைவும் மாட்டார். ஆரம்பத்ேில் சிை சண்டிேர்ெளும்
கேருப்கபாறுக்ெிெளும் வம்பு கசய்ேிருக்ெிறார்ெள். அேில் ொெிேங்ெலள
மடித்து தபாட்டிருக்ெிறார்ெள். அந்ே டப்பாலவதே தூக்ெிக்கொண்டு
தபாேிருக்ெிறார்ெள். மாேக்ெணக்ெில் வருடக்ெணக்ெில் சும்மா டீ
குடித்ேிருக்ெிறார்ெள். கெத்தேல் சாெிப்புக்கு அவர்ெளின் முெம் கூட
நிலனவிருப்பது தபாை கேரிோது.

ஒதர ஒருமுலற கெத்தேல் சாெிப் ஒருவலன அலறந்ோர்.


கவளியூர்க்ொரி ஒருத்ேி, சாலைேில் மல்ைி மிளகு சீரெம் புலடத்து
கூைி வாங்கும் ஏலழப்கபண், எங்தொ ேமிழ்நாட்டு ெிராமத்ேில் இருந்து
பஞ்சம்பிலழக்ெ வந்ேவள், டீ குடித்துக்கொண்டிருந்ோள். அன்று
புெழ்கபற்ற சட்டம்பி ெரமன கொச்சுகுட்டன்பிள்லள ஒரு டீக்குச்
கசால்ைிவிட்டு அந்ேப் கபண்லண பார்த்ோர். என்ன நிலனத்ோதரா
அந்ேப் கபண்ணின் முலைலேப் பிடித்துக் ெசக்ெ ஆரம்பித்ோர். அவள்
அைற ஆரம்பித்ேதும் உற்சாெகவறி ஏறி அவலள அப்படிதே தூக்ெிக்
கொண்டு ஓரத்துச் சந்துக்குள் கசல்ைமுேன்றார். கெத்தேல் சாெிப்
ஒன்றுகம கசால்ைாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்லளலே ஓங்ெி ஓர்
அலற விட்டார். சாலைமுழுக்ெ அந்ேச் சத்ேம் தெட்டிருக்கும்.
குட்டன்பிள்லள ொதும் மூக்கும் வாயும் ரத்ேமாெ ஒழுெ அப்படிதே
விழுந்து பிணம் தபாை ெிடந்ோர். கெத்தேல் சாெிப் ஒன்றும் நடக்ொேது
தபாை தமற்கொண்டு டீ விற்ெ ஆரம்பித்ோர்.

குட்டன்பிள்லளலே அவரது ஆட்ெள் தூக்ெிக் கொண்டு கசன்றார்ெள்.


பேிகனட்டு நாட்ெள் ஆஸ்பத்ேிரிேில் ெிடந்ேவர் பின்னர் எழுந்து
நடமாடதவ இல்லை. ொது தெட்ொமைாெிேது. ேலை எந்தநரமும்
நடுங்ெிக் கொண்டிருக்கும். அடிக்ெடி வைிப்பு வந்ேது. ஏழு மாசம் ெழித்து
ெரமலன ஆற்றில் குளிக்லெேில் வைிப்பு வந்து ஆற்றுக்குள்
தபானவலர ஊேிப்தபான சடைமாெத்ோன் எடுக்ெ முடிந்ேது. ஒரு
மாப்பிள்லள எப்படி குைநாேலர அடிக்ெைாம் என்று ெிளம்பி வந்ே
கும்பலை சாலை மொதேவர் தொேில் டிரஸ்டி அனந்ேன் நாேர் ‘தபாேி
தசாைி மேிலர பாருங்ெதட. நிோேத்ே விட்டு ெளிச்சா சிைசமேம்
துலுக்ென் லெோதை சாவணும்னு இருக்கும், சிைசமேம் எறும்பு
ெடிச்சும் சாவு வரும்…’ என்று கசால்ைிவிட்டார். அவர் கசான்னபின்னர்
சாலை பஜாரில் மறு தபச்சு இல்லை.

நான் முேன்முேைாெ கெத்தேல் சாெிப் ெலடக்குச் சாப்பிட வந்ேது


அறுபத்ேிகேட்டில். என் கசாந்ே ஊர் ென்னிோகுமரி பக்ெம் ஒசரவிலள.
அப்பாவுக்கு தொட்டாற்றில் ஒரு லரஸ்மில்ைில் ெணக்குப்பிள்லள
தவலை. நான் நன்றாெ படித்தேன். பேிகனான்று கஜேித்ேதும்
ொதைஜில் தசர்க்ெ தவண்டும் என்றார்ெள். அப்பாவின் சம்பாத்ேிேத்ேில்
அலே நிலனத்துக்கூட பார்த்ேிருக்ெக் கூடாது. ஆனால் கசாந்ேத்ேில்
ஒரு மாமா ேிருவனந்ேபுரம் தபட்லடேில் இருந்ோர். ஒரு சுமாரான
அச்செம் லவத்ேிருந்ோர். அவர் மலனவிக்குத் ோழக்குடி. எல்ைாம்
ஒன்றுக்குள் ஒன்றுோன். அப்பா என்லன லெபிடித்துக் கூட்டிக்கொண்டு
பஸ் ஏறி ேம்பானூரில் இறங்ெி தபட்லட வலர நடத்ேிக்
கொண்டுகசன்றார். நான் பார்த்ே முேல் நெரம். ேலைேில் லவத்ே
தேங்ொகேண்லண முெத்ேில் விேர்லவயுடன் தசர்ந்து வழிே
ெணுக்ொல்தமதை ஏறிே ஒற்லறதவட்டியும் பாலனக்குள் சுருக்ெி
லவத்ே சட்லடயும் கசருப்பில்ைாே ொல்ெளுமாெ பிரலம பிடித்து
நடந்து தபாதனன்.

மாமாவுக்கு தவறு வழி இல்லை. அவலரச் சின்ன வேேில் அப்பா


தூக்ெி வளர்த்ேிருக்ெிறார். யூனிவர்சிட்டி ொதைஜில் ஆங்ெிை இைக்ெிேம்
படிக்ெ தசர்ந்துகொண்தடன். அப்பா மனநிலறவுடன் ெிளம்பிச் கசன்றார்.
ஒரு ரூபாலே என் லெேில் லவத்து ‘வச்சுக்தொ, கசைவு கசய்ோதே.
எல்ைாம் மாமன் பாத்து கசய்வான்’ என்று கசான்னார். ’இந்ோ
சுப்பம்மா, உனக்கு இவன் இனிதம மருதமான் மட்டுமில்ை.
மெனுமாக்கும்’ என்று ெிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ேோ
என்பது எனக்கு இன்றும் சந்தேெம்ோன். மாமிக்கு கொஞ்சம்கூட
மனமில்லை என்பது அன்லறக்குச் சாேங்ொைம் சாப்பிடும்தபாதே
கேரிந்ேது. எல்ைாரும் அப்பளம் கபாரிேல் சாம்பாருடன் சாப்பிடும்தபாது
என்லன அலழக்ெவில்லை. சாப்பிட்டு முடித்ேபின்னர் அடுப்படிேில்
ஒரு அலுமினிே பாத்ேிரத்ேில் எனக்கு ேண்ண ீர்விட்ட தசாறு
அேிதைதே விடப்பட்ட குழம்புடன் இருந்ேது.

அவமானங்ெளும் பட்டினியும் எனக்குப் பழக்ெம்ோன்.


எல்ைாவற்லறயும் கபாறுத்துப்தபாதனன். கபாறுத்துப்தபாெப்தபாெ அலவ
அேிெமாெ ஆேின. வட்டில்
ீ எல்ைா தவலைெலளயும் நாதன கசய்ே
தவண்டும். ெிணற்றில் இருந்து குடம்குடமாெ ேண்ணர்ீ பிடித்து லவக்ெ
தவண்டும். வட்லட
ீ ேினமும் கூட்டிப்கபருக்ெதவண்டும். அவளுலடே
இரு கபண்ெலளயும் பள்ளிக்கூடம் கொண்டுகசன்று விடதவண்டும்.
மூத்ேவள் ராமைட்சுமி எட்டாம் ெிளாஸ். அவளுக்கு ெணக்குச்
கசால்ைிக்கொடுத்து அவள் வட்டுப்பாடத்லேயும்

கசய்துகொடுக்ெதவண்டும். இரவு சலமேைலறலே ெழுவிவிட்டு
படுக்ெதவண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்ெள் கொடுத்ேது
ேிண்லணேில் ஓரு இடம். இரண்டுதவலள ஊறிே தசாறும் ஊறுொயும்.
எந்தநரமும் மாமி அேிருப்ேியுடன் இருந்ோள். வட்டுக்கு
ீ வரும்
ஒவ்கவாருவரிடமும் என்லனப்பற்றி புைம்பினாள். நான் உண்ணும்
தசாற்றால் அவர்ெள் ெடனாளி ஆெிக்கொண்டிருப்போெச் கசான்னாள்.
நான் புத்ேெத்லே விரிப்பலேப்பார்த்ோதை அவளுக்கு கவறி ெிளம்பி
ெத்ே ஆரம்பிப்பாள்.

நான் எலேயும் அப்பாவுக்கு எழுேவில்லை. அங்தெ வட்டில்


ீ இன்னும்
இரு ேம்பிெளும் ஒரு ேங்லெயும் இருந்ோர்ெள். பாேிநாள்
லரஸ்மில்ைில் அரிசி புலடப்பவர்ெள் பாற்றிக் ெழித்து தபாடும் ெருப்பு
ெைந்ே குருலணஅரிசிலே ெஞ்சிோெக் ொய்ச்சித்ோன் குடிப்தபாம்.
ஓலடக்ெலரேில் வளரும் கொடுப்லபக்ெீ லர குழம்லபத்ோன் என்
நிலனவு கேரிந்ே நாள்முேல் ேினமும் சாப்பிட்டு வந்தேன்.
தேங்ொய்கூட இல்ைாமல் ெீ லரலே தவெலவத்து பச்லசமிளொய் புளி
தபாட்டு ெலடந்து லவத்ே குழம்பு. பைசமேம் பசிதவெத்ேில் அந்ே
மணதம வாேில் நீரூறச் கசய்யும். என்றாவது ஒருநாள் அம்மா
துணிந்து நாைணாவுக்கு மத்ேிச்சாலள வாங்ெினால் அன்கறல்ைாம்
வகடங்கும்
ீ மணமாெ இருக்கும். அன்றுமட்டும் நல்ை அரிசிேில்
தசாறும் சலமப்பாள். நாள் முழுக்ெ ேிோனம் தபாை மத்ேிக்குழம்பு
நிலனப்புோன் இருக்கும். எத்ேலன முேன்றாலும் மனலே தவகறங்கும்
கசலுத்ே முடிோது. அம்மா ெலடசிேில் சட்டிேில் ஒட்டிே குழம்பில்
கொஞ்சம் தசாற்லறப் தபாட்டு துலடத்து பிலசந்து வாேில்
தபாடப்தபானால் அேிலும் பங்கு தெட்டு ேம்பி தபாய் லெலே
நீட்டுவான்.

ெல்லூரிக்கு ஃபீஸ் கொடுக்ெ தவண்டிேிருந்ேது. பைமுலற சுற்றி


வலளத்து மாமாவிடம் கசான்தனன். ெலடசிேில் தநரடிோெதவ
தெட்தடன். ‘உங்ெப்பாவுக்கு எழுேிக்தெளு…இங்ெ ேங்ெி சாப்பிடத்ோன்
நான் கசால்ைிேிருக்தென்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவேில் அர்த்ேதம
இல்லை என்று கேரியும். ஒருவாரம் ெழித்து என்லன ொதைஜில்
இருந்து நின்றுவிடச் கசால்ைிவிட்டார்ெள். ஃபீஸ் ெட்டிேபிறகு வந்ோல்
தபாதும் என்றார்ெள். நான் பித்துப்பிடித்ேவன் தபாை அலைந்தேன்.
ேம்பானூர் ரேில் நிலைேத்ேிற்குச் கசன்று நாகளல்ைாம்
இரும்புச்சத்ேத்லேக் தெட்டுக்கொண்டு அமர்ந்ேிருந்தேன். விேவிேமாெ
ஆேிரம் முலற ேண்டவாளத்ேில் விழுந்து கசத்தேன். அப்தபாதுோன்
என்னுடன் படித்ே குமாரபிள்லள என்ற மாணவன் ஒரு வழி
கசான்னான். என்லன அவதன கூட்டிக்கொண்டு கசன்று சாலைேில்
கெ.நாெராஜப் பணிக்ெர் அரிசி மண்டிேில் மூட்லடக்ெணக்கு எழுதும்
தவலைக்குச் தசர்த்து விட்டான். சாேங்ொைம் ஐந்து மணிக்கு
வந்ோல்தபாதும். இரவு பன்னிரண்டு மணிவலர ெணக்கு
எழுேதவண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய்
அட்வான்ஸ்ொெக் கொடுத்ோர். அலேக்கொண்டு கசன்று ஃபீஸ்
ெட்டிதனன்.

ேினமும் வடு
ீ கசன்று தசர ஒருமணி இரண்டுமணி ஆகும். ொலைேில்
ஏழுமணிக்குத்ோன் எழுந்ேிருப்தபன். ொதைஜ் இலடகவளிெளில்
வாசித்ோல்ோன் உண்டு. ஆனாலும் நான் நல்ை மாணவனாெ
இருந்தேன். வகுப்புெளில் கூர்ந்து ெவனிக்கும் வழக்ெம் எனக்ெிருந்ேது.
தநரம்ோன் தபாேவில்லை. யூனிவர்சிட்டி ொதைஜில் இருந்து
கசெரட்டரிதேட் வழிோெ குறுக்ொெப் பாய்ந்து, ெரமலன வழிோெ
சாலை பஜாருக்கு தபாெ முக்ொல்மணி தநரமாெிவிடும்.
சண்முெம்பிள்லள ெலடசி ெிளாஸ் எடுத்ோகரன்றால் நாைலர
மணிவலர கொண்டு தபாவார். நான் தபாவேற்கு ோமேமானால்
பரமசிவம் ெணக்கு பார்க்ெ வந்து அமர்ந்துவிடுவான். அேன்பின்
தபானாலும் பிரதோசனமில்லை. வாரத்ேில் நான்குநாட்ெள்ோன் சரக்கு
வரும். அேில் ஒருநாள் தபானால் வாரத்ேில் ொல்பங்கு வருமானம்
இல்ைாமைானதுதபாை.

முேல் மாசம் எனக்கு பணதம ேரப்படவில்லை. வரதவண்டிே


பேிலனந்து ரூபாலேயும் பணிக்ெர் முன்பணத்ேில் வரவு
லவத்துவிட்டார். நான் ொலை எழுந்ேதும் மாமி என் முன்னால் ஒரு
தநாட்டுப்புத்ேெத்லே கொண்டு லவத்துவிட்டு தபானாள்.
புரட்டிப்பார்த்தேன். பலழே தநாட்டு. நான் வந்ே நாள்முேல் சாப்பிட்ட
ஒவ்கவாருதவலளக்கும் ெணக்கு எழுேப்பட்டிருந்ேது. ஒருதவலளக்கு
இரண்டணா ெணக்குப் தபாட்டு கமாத்ேம் நாற்பத்கேட்டு ரூபாய் என்
பற்றில் இருந்ேது. எனக்கு ேலை சுற்றிேது. கமதுவாெ
சலமேைலறக்குப் தபாய் ‘என்ன மாமி இது?’ என்தறன். ‘ஆ, தசாறு
சும்மா தபாடுவாளா? நீ இப்ப சம்பாரிக்ெிதறல்ை? குடுத்ோத்ோன்
உனக்கும் மரிோே. எனக்கும் மரிோே’ என்றாள். ‘ெணக்கு ேப்பா
இருந்ோ கசால்லு, பாப்பம். நான் அப்பதம இருந்து ஒரு நாள் விடாம
எழுேிட்டுோன் வாதறன்’

நான் ெண்ெைங்ெி கோண்லட அலடத்து தபசாமல் நின்தறன். பின்பு


‘நான் இப்டீன்னு நிலனக்ெலை மாமி…எனக்கு அவ்ளகவாண்ணும்
கெலடக்ொது. ஃபீஸ் ெட்டணும். புக்கு வாங்ெணும்…’ என்தறன். ‘இந்ே
பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா தசாறு தபாடணும்? எனக்கு
கரண்டு கபண்மக்ெள் இருக்கு. நாலளக்கு அதுெலள ஒருத்ேன்ெிட்ட
அனுப்பணுமானா பணமும் நலெயுமா எண்ணி லவக்ெணும்
பாத்துக்தொ. ெணக்கு ெணக்ொ இருந்ோ உனக்கும் மரிோே. எனக்கும்
மரிோே’ நான் கமல்ைிே குரைில் ‘இப்ப எங்ெிட்ட பணமில்லை மாமி.
நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்ேிடதறன்’ என்தறன். ‘குடுப்தபன்னு
எப்டி நம்பறது?’ என்றாள். நான் ஒன்றும் கசால்ைவில்லை. அன்று
மாலைதே நான் அங்ெிருந்து ெிளம்பிவிட்தடன். தநராெ பணிக்ெரின்
குதடானிதைதே வந்து ேங்ெிவிட்தடன். பணிக்ெருக்கும் இைவசமாெ
வாட்ச்தமன் ெிலடத்ே சந்தோஷம். மாமி என் முக்ெிேமான
புத்ேெங்ெலள பணத்துக்கு அடொெ பிடித்து லவத்துக்கொண்டாள்.

சாலைேில் நான் சந்தோஷமாெதவ இருந்தேன். ெரமலன ஆற்றில்


குளிேல். அங்தெதே எைிசாம்மா இட்ைிக்ெலடேில் நான்கு இட்ைி.
தநராெ ொதைஜ். மேிேம் சாப்பிடுவேில்லை. சாேங்ொைம்
தவலைமுடிந்ேபின்னர் ஒரு கபாலற அல்ைது டீ குடித்துவிட்டு
படுத்துவிடுதவன். ெணக்ெில் ஒருதவலள உணவுோன். எந்தநரமும் பசி
இருந்துகொண்தட இருக்கும். எலே தோசித்ோலும் சாப்பாட்டு
நிலனவில் வந்து முடியும். குண்டான ஒருவலர பார்த்ோல் ெண்லண
எடுக்ெதவ முடிோது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நிலனப்புோன்.
சாலைமொதேவர்தொேில் வழிோெச் கசல்லும்தபாது பாேச வாசலன
வந்ோல் நுலழந்துவிடுதவன். இலைக்ெீ ற்றில் லவத்து ேரப்படும்
பாேசமும் பழமும் ஒருநாள் இட்ைி கசைலவ மிச்சப்படுத்ேிவிடும்.
சாஸ்ோவுக்கு சுண்டல், இசக்ெிேம்லமக்கு மஞ்சள்தசாறு என அடிக்ெடி
ஏோவது ெிலடக்ொமைிருக்ொது. ஆனாலும் எனக்கு பணம்
தபாேவில்லை. முன்பணத்லே அலடத்து முடிப்பேற்குள் அடுத்ே
ொதைஜ் ஃபீஸுக்கு தெட்டுவிட்டார்ெள். இலேத்ேவிர மாேம் ஐந்துரூபாய்
வேம்
ீ தசர்த்து கொண்டுதபாய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்லசக்கு
முன்னாதைதே புத்ேெங்ெலள மீ ட்டாெதவண்டும்.

நான் கமைிந்து ெண்ெள் குழிந்து நடமாட முடிோேவனாெ ஆதனன்.


ெணக்கு தபாட்டுக்கொண்டிருக்கும்தபாது சட்கடன்று ெிர்ர் என்று எங்தொ
சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் தபாய் மீ ண்டு வருதவன். வாேில்
எந்தநரமும் ஒரு ெசப்பு. லெொல்ெளில் ஒரு நடுக்ெம். தபட்லட வலர
ொதைஜுக்கு நடப்பேற்கு ஒருமணிதநரம் ஆெிேது. என் ெனகவல்ைாம்
தசாறு. ஒருநாள் சாலைேில் ஒரு நாய் அடிபட்டு கசத்துக்ெிடந்ேது.
அந்ே நாேின் ெறிலே எடுத்துக்கொண்டுதபாய் குதடான் பின்பக்ெம்
ெல்ைடுப்பு கூட்டி சுட்டு ேின்பலேப்பற்றி ெற்பலன கசய்தேன் என்றால்
பார்த்துக்கொள்ளுங்ெள். எச்சில் ஊறி சட்லடேில் வழிந்து விட்டது
அன்று.

அப்தபாதுோன் கூைி நாராேணன் கசான்னான், கெத்தேல் சாெிப்


ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்ெதவண்டாம் என்பது எனக்கு
நம்பமுடிோேோெ இருந்ேது. பைரிடம் தெட்தடன், உண்லமோன்
என்றார்ெள். இருந்ோல் கொடுத்ோல்தபாதுமாம். எனக்கு லேரிேம்
வரவில்லை. ஆனால் கெத்தேல் சாெிப் ஓட்டலைப்பற்றிே நிலனப்பு
எந்தநரமும் மனேில் ஓடிேது. நாலைந்துமுலற ஓட்டலுக்கு கவளிதே
கசன்று நின்று பார்த்துவிட்டு தபசாமல் வந்தேன். அந்ே நறுமணம்
என்லன ெிறுக்ொக்ெிேது. நான் கபாரித்ே மீ லன வாழ்க்லெேிதைதே
இருமுலறோன் சாப்பிட்டிருக்ெிதறன். இருமுலறயும் கசாந்ேத்ேில் ஒரு
பண்லணோர் வட்டில்ோன்.
ீ ஒருவாரம் ெழித்து மூன்று ரூபாய் ேிரண்ட
பின் அந்ேப் பணத்துடன் கெத்தேல் சாெிப் ஓட்டலுக்குச் கசன்தறன்.
சாெிப் ஓட்டலை ேிறப்பது வலர எனக்கு உடல் நடுங்ெிக்கொண்தட
இருந்ேது. ஏதோ ேிருட்டுத்ேனம் கசய்ே வந்ேவலனப்தபாை
உணர்ந்தேன். கும்பதைாடு உள்தள தபாய் ஓரமாெ ோருதம
ெவனிக்ொேது தபாை அமர்ந்துகொண்தடன். ஒதர சத்ேம். சாெிப்
புேல்தவெத்ேில் தசாறு பரிமாறிக்கொண்டிருந்ோர். ெவிழ்க்ெப்பட்ட
ோமலர இலைேில்ோன் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச்
தசாற்லற கபரிே சிப்பைால் அள்ளி கொட்டி அேன்தமல் சிவந்ே மீ ன்
ெறிலே ஊற்றினார். சிைருக்கு தொழிக்குழம்பு. சிைருக்கு
வறுத்ேதொழிக்குழம்பு. அவர் எவலரயுதம ெவனிக்ெவில்லை
என்றுோன் பட்டது. அேன் பிறகு ெவனித்தேன், அவருக்கு
எல்ைாலரயுதம கேரியும். பைரிடம் அவர் எலேயுதம தெட்பேில்லை.
அவதர மீ லனயும் ெறிலேயும் லவத்ோர். ஆனால் ோரிடமும்
உபச்சாரமாெ ஏதும் கசால்ைவில்லை. அவதர பரிமாறினார்.
இரண்டாம்முலற குழம்பு பரிமாற மட்டும் ஒரு லபேன் இருந்ோன்.

என்னருதெ வந்ேவர் என்லன ஏறிட்டுப் பார்த்ோர். ‘எந்ோ புள்தளச்சன்,


புத்ேனா வந்நோ?’ என்றார். என்லன கவள்ளாளன் என்று எப்படி
ெவனித்ோர் என்று விேந்து தபசாமல் இருந்தேன். தசாற்லறக் கொட்டி
அேன் தமல் குழம்லப ஊற்றினார். ஒரு கபரிே கபாரித்ே சிக்ென் ொல்.
இரண்டு துண்டு கபாரித்ே மீ ன். ‘ேின்னு’ என்று உறுமிேபின்
ேிரும்பிவிட்டார். அேற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குதமல் ஆெிவிடும்.
என் லெொல்ெள் பேற ஆரம்பித்ேன. தசாறு கோண்லடேில் அலடத்ேது.
சட்கடன்று ேிரும்பிே சாெிப் ‘நிங்ங அவிதட எந்து எடுக்ெிணு? ேின்ன ீன்
பிள்தளச்சா’ என்று ஒரு பேங்ெர அேட்டல் தபாட்டார். அள்ளி அள்ளி
சாப்பிட்தடன். அந்ே ருசி என் உடம்கபல்ைாம் பரவிேது. ருசி !
ெடவுதள, அப்படி ஒன்று உைெில் இருப்பலேதே மறந்து விட்தடதன.
என் ெண்ெளில் இருந்து ெண்ண ீர் கொட்டி வாய் வலரக்கும் வழிந்ேது.

ஒரு சின்ன ெிண்டிேில் உருெிே கநய்தபான்ற ஒன்றுடன் கெத்தேல்


சாெிப் என்னருதெ வந்ோர். என் தசாற்றில் அலேக்கொட்டி இன்னும்
கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு ேிந்தநா
ஹம்க்தெ…மீ ன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீ னின் கொழுப்பு அது.
அேன் கசவிள்பகுேிேில் இருந்து மஞ்சளாெ கவட்டி கவளிதே
எடுப்பார்ெள். ெறிக்கு அது ேனி ருசிலேக் கொடுத்ேது. அேிெமாெச்
சாப்பிட்டு பழக்ெமில்ைாேேனால் ஒரு ெட்டத்ேில் என் வேிறு
அலடத்துக்கொண்டது. சட்கடன்று இன்னும் இரு சிப்பல் தசாற்லற என்
இலைேில் கொட்டினார் சாெிப். ‘அய்தோ தவண்டாம்’ என்று
ேடுக்ெப்தபான என் லெேில் அந்ே ேட்டாதைதே ெண ீர் என்று அலறந்து
‘தசாறு வச்சா ேடுக்குந்தநா? எரப்பாளி..ேின்னுடா இபிலீதஸ ’ என்றார்.
உண்லமேிதைதே லெேில் வைி கேறித்ேது. எழுந்ேிருந்ோல் சாெிப்
அடித்துவிடுவார் என்று அவரது ரத்ேக் ெண்ெலளக் ெண்டதபாது
தோன்றிேது. தசாற்லற மிச்சம் லவப்பது சாெிப்புக்குப் பிடிக்ொது என்று
கேரியும். உண்டு முடித்ேதபாது என்னால் எழ முடிேவில்லை. கபஞ்லச
பற்றிக்கொண்டு நடந்து இலைலே தபாட்டு லெ ெழுவிதனன்.

அந்ே கபட்டிலே கநருங்ெிேதபாது என் ொல்ெள் நடுங்ெின. எங்தொ


ஏதோ தொணத்ேில் கெத்தேல் சாெிப் பார்த்துக்கொண்டுோன் இருப்பார்
என்று தோன்றிேது. ஆனால் அவர் தவறு ஆட்ெலள
ெவனித்துக்கொண்டிருந்ோர். பைர் பணம் தபாடாமல் தபானார்ெள்
என்பலே ெவனித்தேன். சிைர் தபாட்டதபாதும் சாோரணமாெத்ோன்
இருந்ோர்ெள். நான் லெ நடுங்ெ மூன்று ரூபாலே எடுத்து உள்தள
தபாட்தடன். ஏதோ ஒரு குரல் தெட்கும் என முதுகெல்ைாம் ொோெ ,
ெண்ணாெ இருந்தேன். கமல்ை கவளிதே வந்ேதபாது என் உடதை
ெனமிழக்ெ ஆரம்பித்ேது. சாலை எங்கும் குளிர்ந்ே ொற்று
வசுவதுதபால்
ீ இருந்ேது. என் உடம்பு புல்ைரித்துக்கொண்தட இருக்ெ
எவலரயும் எலேயும் உணராமல் பிரலமேில் நடந்துகொண்டிருந்தேன்.

நாலைந்து நாள் நான் அப்பகுேிக்தெ கசல்ைவில்லை. மீ ண்டும் இரண்டு


ரூபாய் தசர்ந்ேதபாது துணிவு கபற்று கெத்தேல் சாெிபு ெலடக்குச்
கசன்தறன். அவர் என்லன அலடோளம் ெண்டுகொண்டார் என்பது
அதேதபாை கொழுப்லபக் கொண்டுவந்து ஊற்றிேதபாதுோன் கேரிந்ேது.
அதே அேட்டல், அதே வலச. அதேதபாை உடல்கவடிக்கும் அளவுக்கு
சாப்பாடு. இம்முலற பணத்லே நிோனமாெதவ தபாட்தடன். மீ ண்டும்
மூன்றுநாட்ெள் ெழித்து கசன்றதபாது என் லெேில் ஏழு ரூபாய்
இருந்ேது. அன்றுமாலை நான் அலே மாமிக்குக் கொண்டு
கொடுக்ெதவண்டும். அேில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடைாம் என
நிலனத்தேன். இரண்டணாவுக்கு தமல் சாப்பிடுவகேன்பது
என்லனப்கபாறுத்ேவலர ஊோரித்ேனத்ேின் உச்சம். ஆனால் ருசி
என்லன விடவில்லை. அந்நாட்ெளில் என் ெனவுெளில்கூட கெத்தேல்
சாெிப் ஓட்டைின் மீ ன்குழம்பும் தொழிப்கபாரிேலும்ோன்
வந்துகொண்டிருந்ேன. ஏன் , தநாட்டுப்புத்ேெத்ேின் பின்பக்ெம் ஒரு
ெவிலேகூட எழுேி லவத்ேிருந்தேன். உட்ொர்ந்து சாப்பிட்டு எழுந்து
கசன்றதபாது பணம் தபாடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்ேது

அந்ே நிலனப்தப வேிற்லற அேிரச்கசய்ேது. தமற்கொண்டு சாப்பிடதவ


முடிேவில்லை. பந்லே ேண்ண ீரில் முக்குவதுதபாை தசாற்லற
கோண்லடேில் அழுத்ேதவண்டிேிருந்ேது. ெண்ெள் இருட்டிக்கொண்டு
வந்ேன. எழுந்து லெெழுவி விட்டு ெனத்ே குளிர்ந்ே ொல்ெலள தூக்ெி
லவத்து நடந்தேன். சிறுநீர் முட்டுெிறோ, ேலை சுழல்ெிறோ, மார்பு
அலடக்ெிறோ ஒன்றும் புரிேவில்லை. தபசாமல் பணத்லே
தபாட்டுவிடைாம் என்று தோன்றிேது. கமல்ை நடந்து உண்டிேல்
அருதெ வந்தேன். அலே ோண்டிச்கசல்ை முடிேவில்லை. ொதுெளில்
ஒரு இலரச்சல். சட்கடன்று ஏழு ரூபாலேயும் அப்படிதே தூக்ெி உள்தள
தபாட்டு விட்டு கவளிதே வந்தேன். கவளிக்ொற்று பட்டதும்ோன் என்ன
கசய்ேிருக்ெிதறன் என்று புரிந்ேது. அலரமாே சம்பாத்ேிேம் அப்படிதே
தபாய்விட்டது. எத்ேலன பாக்ெிெள். ெல்லூரி ஃபீஸ் ெட்ட எட்டு
நாட்ெள்ோன் இருந்ேன. என்ன கசய்துவிட்தடன். முட்டாள்ேனத்ேின்
உச்சம்.

மனம் உருெி ெண்ணர்ீ வந்துகொண்தட இருந்ேது. ,மிெ கநருங்ெிே ஒரு


மரணம் தபாை. மிெப்கபரிே ஏமாற்றம் தபாை. ெலடக்குச் கசன்று
அமர்ந்தேன். இரவுவலர உடம்லபயும் மனத்லேயும் முழுக்ெ
பிடுங்ெிக்கொள்ளும் தவலை இருந்ேேனால் ேப்பித்தேன்.
இல்ைாவிட்டால் அந்ே கவறிேில் ஏோவது ேண்டவாளத்ேில்கூட
ேலைலவத்ேிருப்தபன். அன்றிரவு தோன்றிேது, ஏன் அழதவண்டும்?
அந்ே பணம் ேீர்வது வலர கெத்தேல் சாெிப் ஓட்டைில் சாப்பிட்டால்
தபாேிற்று. அந்நிலனப்பு அளித்ே ஆறுேலுடன் தூங்ெிவிட்தடன்.
மறுநாள் மேிேம் வலரத்ோன் ொதைஜ். தநராெ வந்து கெத்தேல் சாெிப்
ஓட்டைில் அமர்ந்து நிோனமாெ ருசித்து சாப்பிட்தடன். அவர் கொண்டு
வந்து லவத்துக்தொண்தட இருந்ோர். கொஞ்சம் இலடகவளி
விட்டால்கூட எழப்தபாெிதறன் என நிலனத்து ‘தடய், வாரித்ேின்னுடா,
ஹிமாதற’ என்றார். சாப்பிட்டுவிட்டு லெெழுவி தபசாமல் நடந்ேதபாது
உள்தள கெத்தேல் சாெிப் தெட்டால் கசால்ைதவண்டிே ொரணங்ெலள
கசாற்ெளாக்ெி லவத்துக்கொண்டிருந்தேன். அவர் ெவனிக்ெதவ இல்லை.
கவளிதே வந்ேதபாது ஏமாற்றமாெ இருந்ேது. சட்கடன்று அவர் தமல்
எரிச்சல் வந்ேது. கபரிே புடுங்ெி என்று நிலனப்பு. ேர்மத்துக்கு
ெட்டுப்பட்டு எல்ைாரும் பணம் தபாடுவேனால் இவன் கபரிே
ேர்மவானாெ தோற்றமளிக்ெிறான். ரம்சானுக்கு சக்ொத்து
கொடுப்பவர்ெள் பணத்லேக் கொண்டுவந்து உண்டிேைிதை
தபாடுவேனால் பிலழக்ெிறான். சும்மாவா கொடுக்ெிறான்? இப்படி
ெிலடத்ே பணம்ோதன வடும்
ீ கசாத்துமாெ ஆெிேிருக்ெிறது?
தபாடாவிட்டால் எதுவலர கபாறுப்பான். பார்ப்தபாதம. அந்ே எரிச்சல்
எேனால் என்று கேரிேவில்லை. ஆனால் உடம்பு முழுெக் ஒரு
ேினவுதபாை அது இருந்துகொண்தட இருந்ேது.

அந்ே எரிச்சலுடன்ோன் மறுநாள் கசன்று அமர்ந்தேன். கெத்தேல் சாெிப்


தெட்ெமாட்டார் என நான் அறிதவன். ஆனால் அவர் பார்லவேில்
நடத்லேேில் ஒரு சிறிே மாற்றம் கேரிந்ோல்கூட அன்றுடன் அங்தெ
கசல்வலே நிறுத்ேிவிடதவண்டும் என நிலனத்துக்கொண்தடன்.
கொஞ்சம் அேிெமாெ உபசரித்ோல்கூட அவருக்கு ெணக்கு இருக்ெிறது,
ெவனிக்ெிறார் என்றுோதன அர்த்ேம். ஆனால் கெத்தேல் சாெிப் அவரது
வழக்ெமான அதே தவெத்துடன் பரிமாறிக்கொண்டிருந்ோ. கொழுப்பு
ஊற்றினார். ‘தொழி ேின்னு பிள்தளச்சா’ என்று ஒரு அலரக்தொழிலே
லவத்ோர். பின்னர் மீ ன் லவத்ோர். அவர் இந்ே உைெில்ோன்
இருக்ெிறாரா? உண்லமேிதைதே இது ஒரு மாப்பிலளோனா இல்லை
ஏோவது ஜின்னா? பேமாெக்கூட இருந்ேது. ெலடசிோெச் தசாறு தபாட்டு
சாப்பிடப்தபானதபாது கெத்தேல் சாெிப் ெறி கபாரித்ே
மிளொய்க்ொரத்ேின் தூலளயும் கொஞ்சம் ெருெிே தொழிக்ொலையும்
கொண்டு லவத்ோர். நான் அலே விரும்பிச் சாப்பிடுவலே கவளிதே
ொட்டிக்கொள்ளக்கூடாது என எப்தபாதும் முேல்தவன். ஆனால்
அவருக்கு கேரிந்ேிருந்ேது ஆச்சரிேமளிக்ெவில்லை.

அந்ே ொரத்லே தசாற்றில் தபாட்டுப்பிலசந்ேதபாது சட்கடன்று மனம்


ேதும்பி விட்டது. ெண்ண ீலர அடக்ெதவ முடிேவில்லை. என்
வாழ்நாளில் எவருதம எனக்கு பரிந்து தசாறிட்டேில்லை. ஆழாக்கு
அரிசிலேக் ெஞ்சி லவக்கும் அம்மாவுக்கு அந்ே ெடுெடுப்பும் வலசெளும்
சாபங்ெளும் இல்ைாவிட்டால் எல்ைாருக்கும் பங்கு லவக்ெதவ
முடிோது. நான் நிலறந்து சாப்பிடதவண்டும் என எண்ணும் முேல்
மனிேர். எனக்கு ெணக்கு பார்க்ொமல் சாப்பாடு தபாடும் முேல் லெ.
அன்னமிட்ட லெ என்ெிறார்ெதள, அந்ேிமக் ெணம் வலர கநஞ்சில்
நிற்கும் அன்லனேின் லெ என்ெிறார்ெதள. ோேத்துெட்டிே
மணிக்ெட்டும், ேடித்து ொய்த்ே விரல்ெளும் ,மேிரடர்ந்ே முழங்லெயும்
கொண்ட இந்ே ெரடிக்ெரமல்ைவா என் ோேின் லெ? அேன்பின் நான்
கெத்தேல் சாெிப்புக்கு பணதம கொடுத்ேேில்லை. கசைகவன நிலனத்து
கொடுக்ொமைிருக்ெவில்லை என்று என் கநஞ்லச கோட்டுச் கசால்ை
முடியும். அது என் அம்மாவின் தசாறு என்பேனால்ோன்
கொடுக்ெவில்லை. ஒன்றிரண்டல்ை முழுசாெ ஐந்து வருடம் ஒரு
லபசா கூட கொடுத்ேேில்லை.

ேினமும் ஒருதவலள அங்தெ சாப்பிடுதவன். மாலை அல்ைது மேிேம்.


அதுதவ எனக்கு தபாதுமானோெ இருந்ேது. தமற்கொண்டு ஒரு நான்கு
இட்ைி தபாதும். என் லெொல்ெள் உரம் லவத்ேன. ென்னம் பளபளத்ேது.
மீ லச ேடித்ேது. குரல் ெனத்ேது. நலடேில் மிடுக்கும் தபச்சில்
ெண்டிப்பும் சிரிப்பில் ேன்னம்பிக்லெயும் வந்ேன. ெலடேில் என் இடம்
ெிட்டத்ேட்ட மாதனஜருக்கு நிெரானோெ ஆெிேது. சரக்குெலள வரவு
லவத்து தேலவக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்ெ
என்கபாறுப்புோன். படிப்புச்கசைவுதபாெ ஊருக்கும் மாேம் தோறும்
பணம் அனுப்பிதனன். நான் பீஏ லே முேல்வகுப்பில் முேைிடத்ேில்
கவன்றபின் யூனிவர்சிட்டி ெல்லூரிேிதைதே எம்ஏ படிக்ெச் தசர்ந்தேன்.
சாலைேில் அருணாச்சைம்நாடார் ெலடதமல் ஒரு அலறலே
வாடலெக்கு எடுத்துக்கொண்தடன். ஒரு நல்ை லசக்ெிள்
வாங்ெிக்கொண்தடன்.
ஒவ்கவாரு நாளும் கெத்தேல் சாெிப்பின் லெோல் சாப்பிட்தடன்.
கமதுவாெ தபச்சு குலறந்து அவர் என்லன பார்க்ெிறாரா என்ற
சந்தேெம்கூட வர ஆரம்பித்ேது. ஆனால் என் இலைதமல் அவரது
ெனத்ே லெெள் உணவுடன் நீளும்தபாது கேரியும் அது அன்தப
உருவான அம்மாவின் லெ என்று. நான் அவர் மடிேில் பிறந்து
அவரிடம் முலையுண்டவன் என்று. ேம்பி சந்ேிரன் பேிகனான்று
முடித்துவிட்டு டிலரவிங் லைசன்ஸ் எடுத்து அரசு தபாக்குவரத்துக்
ெழெத்ேில் தசர்ந்ேதபாது வட்டுக்
ீ ெஷ்டம் குலறந்ேது. நான்
அவ்வப்தபாது வட்டுக்குப்
ீ தபாதவன். அம்மா நல்ை அரிசி வாங்ெி
மீ ன்குழம்பு லவத்து அவதள பரிமாறுவாள். ஆனால் எத்ேலனதோ
ொைமாெ நீண்டு நின்ற வறுலம. அவளுக்கு பரிமாறத்கேரிோது. ஒரு
ெண் எப்தபாதும் பாலனேில் இருக்கும் தசாலறயும் சட்டிேில் இருக்கும்
குழம்லபயும் ெணக்குதபாடுவலே ேவிர்க்ெ கேரிோது. அெப்லபேில்
அவள் தசாதறா குழம்தபா அள்ளினால் அலரவாசி ேிரும்ப
கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுலடே
அெப்லப சிை கசாட்டுெள் ோன் அள்ளும். லெதோ மனதமா
குறுெிவிட்டது. சாலளப்புளிமுளமும் சம்பா அரிசி தசாறும் அவள்
அள்ளி லவக்லெேில் நான் நாைாவது உருண்லடச் தசாறில் வேிறு
அலடத்ே உணர்லவ அலடதவன். அந்ே தசாற்லற அள்ளி வாேில்
தபாடுவதே சைிப்பாெ கேரியும். பைவனமாெ
ீ ’சாப்பிடுடா’ என்பாள்
அம்மா. ேலைேலசத்து முெம் ெழுவிக்கொள்தவன்.

எம்.ஏ ேில் பல்ெலைக்ெழெத்ேில் இரண்டாமிடத்ேில் வந்தேன். உடதன


அதே யூனிவர்சிட்டி ெல்லூரிேில் விரிவுலரோளராெ தவலை
ெிலடத்ேது. ஆலண லெக்கு வந்ே அன்று மேிேம் தநராெ கெத்தேல்
சாெிப் ெலடக்குத்ோன் தபாதனன். ெலட ேிறக்ெவில்லை. நான்
பின்பக்ெம் கசன்தறன். சாக்குப்படுோலவ விைக்ெிப் பார்த்தேன். கபரிே
உருளிேில் கெத்தேல்சாெிப் மீ ன்குழம்லப ெிண்டிக்கொண்டிருந்ோர்.
முெமும் லெெளும் சிந்ேலனயும் எல்ைாம் குழம்பில் இருந்ேன. அது
ஒரு கோழுலெ தபாை. அவலர கூப்பிடுவது சரிேல்ை என்று
தோன்றிேது. ேிரும்பி விட்தடன். மேிேம் கெத்தேல் சாெிப் என்
இலைக்கு தசாறு தபாடும்தபாது நிமிர்ந்து அவர் முெத்லேப்பார்த்தேன்.
அேில் எனக்ொன எந்ே பார்லவயும் இல்லை. கசால்ைதவண்டாம் என்று
தோன்றிேது. அந்ேச் கசய்ேிக்கு அவரிடம் எந்ே அர்த்ேமும் இல்லை.

சாேங்ொைம் ஊருக்குச் கசன்தறன். அம்மா மெிழ்ச்சி அலடந்ோளா


என்தற கேரிேவில்லை. எலேயும் ெவலைோெதவ ொட்டும் முெ
அலமப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்?’ என்றார்.
‘அது கெலடக்கும்…’ என்தறன் சாோரணமாெ. ‘ என்ன, எரநூறு
குடுப்பானா?’ என்றார் . நான் அந்ே தெள்விேில் இருந்ே அற்பத்ேனம்
மிக்ெ குமாஸ்ோலவக் ெண்டுகொண்டு சீண்டப்பட்தடன்.’
அைவன்தஸாட தசத்து எழுநூறு ரூபா…’ என்தறன். அப்பாவின்
ெண்ெளில் ஒரு ெணம் மின்னி மலறந்ே வன்மத்லே இறுேிக்ெணம்
வலர மறக்ெமுடிோது. மாேம் இருபது ரூபாய்க்குதமல் சம்பளதம
வாங்ொமல் ஓய்வுகபற்றவர் அவர். ேம்பிோன் உண்லமோன
உற்சாெத்துடன் துள்ளினான். ‘நீ இங்ெிலீஷிதைோதன ெிளாஸ்
எடுக்ெணும்…உனக்கு அப்டீன்னா நல்ைா இங்ெிலீஷ் தபசத்கேரியும்
இல்ை? துலர மாேிரி தபசுதவ இல்ை?’ என்று ேதும்பிக்கொண்தட
இருந்ோன். அம்மா தொபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்லே
தசத்து ெீ ழ உள்ள கொமருெலள ெலரதேத்துற வழிேப்பாருங்ெ’
என்றாள்.

ோர்மிெமான ஒரு ொரணத்லே ெண்டுகொண்டபின் அவளுலடே


ஆங்ொரம் அவ்வழிோெ கவளிவர ஆரம்பித்ேது. ‘துள்ளினவள்ைாம்
எங்ெ கெடக்ொன்னு ெண்தடல்ை? ோழக்குடிக்ொரிே அன்லனக்கு
சம்முவம் ெல்ோணத்ேிதை பாத்தேன். பூஞ்சம்புடிச்ச ெருவாடு
ெணக்ொட்டுல்ைா இருந்ோ…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி
நிண்ணு குடுக்கும்ைா?’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன தபசுதெ? இந்நா
நிக்ொதன உனக்ெ மவன், அவ தபாட்ட தசாத்ேிதைல்ைா படிச்சு
ஆளானான்? நண்ணி தவணும் பாத்துக்ெ. நண்ணி தவணும்…’ என்றார்
அப்பா. ‘என்ன நண்ணி? இம்பிடு தசாறும் கொளம்பும் தபாட்டா. அதுக்கு
உள்ளே ெணக்கு தபாட்டு அவ மூஞ்சிேிதை விட்கடறிஞ்சா
தபாருதம…இல்தைண்ணா நாலளக்குப்பின்ன தவற ெணக்தொட வந்து
நிப்பா வாசைிதை, எளகவடுத்ே சிறுக்ெி’ அம்ம கசான்னாள் . அப்பா ‘சீ
ஊத்ே வாே மூடுடீ’ என்று சீறி எழ சண்லட எழுந்ேது
மறுநாள் ோழக்குடிக்குப் தபாதனன். மாமா இறந்து இரண்டு
வருடங்ெளாெிவிட்டிருந்ேது. ேிடீகரன்று ஒரு ொய்ச்சல். நான்ோன்
ஆஸ்பத்ேிரிேில் கூடதவ இருந்தேன். ஈறில் ஏற்பட்ட ொேம் வழி
இேேம் வலர பாக்டீரிோ கசன்று விட்டது. மூன்றாம்நாள் இரவில்
தபாய்விட்டார். ொடாத்து முடிந்து அச்செக் ெணக்குெலளப்பார்த்தோம்.
இரண்டாேிரம் ரூபாய் வலர ெடன் இருந்ேது. ெட்டிட உரிலமோளர்
அச்செத்லே ொைிகசய்ேதவண்டும் என்று கசான்னார். இேந்ேிரங்ெலள
விற்று ெடலன அலடத்ேபின் மாமி எஞ்சிே மூவாேிரம் ரூபாய்
பணத்துடன் ோழக்குடிக்தெ வந்துவிட்டாள். அவள் வட்டு
ீ பங்குக்கு
கொஞ்சம் நிைம் இருந்ேது. ஒரு வட்லட
ீ ஒத்ேிக்கு எடுத்துக்
கொண்டாள். ராமைட்சுமி பேிகனான்றுக்கு தமல் படிக்ெவில்லை.
சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்தபாய்விட்டாள். நாள்கசல்ை
நாள்கசல்ை பணம் ெலரந்து அந்ே பீேி முெத்ேில் படிந்து அவள்
கமைிந்து வறண்டு நிழல்தபாை ஆவலேக் ெண்தடன். ஊருக்கு
வரும்தபாது கசன்று பார்த்து மரிோலேக்ொெ கொஞ்சம் தபசிவிட்டு
தமலஜேில் ஒரு பத்து ரூபாய் லவத்துவிட்டு வருதவன்.

வட்டில்
ீ மாமி இல்லை. ராமைட்சுமி மட்டும்ோன் இருந்ோள். அவளும்
கொஞ்சம் புலெபடிந்ேதுதபாைத்ோன் இருந்ோள். ஒரு அங்ெணமும்
ேிண்லணயும் சலமேல்சாய்ப்பும் மட்டும்ோன் வடு.
ீ சுருட்டப்பட்ட
பாய்ெள் கொடிேில் கோங்ெின. ேலர சாணிகமழுெப்பட்டிருந்ேது. சிறிே
தமலஜ தமல் ராணிமுத்து நாவல். ராமைட்சுமி கொல்லைப்பக்ெம்
வழிோெ கவளிதே தபாய் பக்ெத்துவட்டில்
ீ இருந்து சீனிதோ டீத்தூதளா
வாங்ெி வந்து எனக்கு ெறுப்புடீ தபாட்டுக்கொடுத்ோள். தமலஜ தமல்
டம்ளலர லவத்துவிட்டு ெேவருதெ கசன்று பாேி உடல் மலறே
நின்றுகொண்டாள். நான் அவள் வெிலட மட்டும்ோன் பார்த்தேன். அவள்
சூட்டிலெோன கபண். ஆனால் ெணக்கு மட்டும் வரதவ வராது.
ேிருவனந்ேபுரத்ேில் அவளுக்கு கூட்டு வட்டிலே மட்டும் நான்
இருபதுநாளுக்குதமல் கசால்ைிக் கொடுத்ேிருக்ெிதறன். என்ன
தபசுவகேன்று கேரிேவில்லை. அவள் தவறு ோதரா ஆெ இருந்ோள்.

பத்து நிமிடம் ெழித்து எழுந்துகொண்தடன். ‘வாதறன்’ என்தறன்.


‘அம்லம வந்ேிருவா’ என்றாள் கமல்ைிே குரைில். ‘இல்ை வாதறன்…’
என்றபின் தமலஜேில் ஒரு ஐம்பது ரூபாய் ோலள எடுத்து
லவத்துவிட்டு கவளிதே வந்தேன். ஊடுவழிேில் நடக்கும்தபாது எேிதர
மாமி வருவலேக் ெண்தடன். அழுக்கு தசலைலே சும்மாடாெ சுற்றி
லவத்து அேில் ஒரு நார்ப்கபட்டிலே லவத்ேிருந்ோள். என்லன
சாோரணமாெ பார்த்து அலரக்ெணம் ெழித்தே புரிந்துகொண்டாள்.
‘அய்தோ மக்ொ’ என்றாள். கபட்டிலே நான் பிடித்து இறக்ெி லவத்தேன்.
அேில் ேவிடு இருந்ேது. எங்தொ கூைிக்கு கநல்குற்ற தபாெிறாள்.
ேவிடுோன் கூைி. அலே விற்ெக் கொண்டுதபாெிறாள் தபாை.‘வட்டுக்கு

வா மக்ொ’ என்று லெலே பிடித்ோள். ‘இல்ை. நான் தபாெணும்.
இண்லணக்தெ ேிருவனந்ேபுரம் தபாதறன்…’ என்றபின் ‘தவை
கெலடச்சிருக்கு…ொதைஜிதை’ என்தறன். அவளுக்கு அது சரிோெ
புரிேவில்லை. வறுலம மூலளலே உரசி உரசி மழுங்ெடித்துவிடுெிறது.

சட்கடன்று புரிந்துகொண்டு ‘அய்தோ…என் மக்ொ.. நல்ைா இரு…நல்ைா


இருதட’ என்று என் லெலே மீ ண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு
தவலை ெிலடச்சபிறவு தெக்ெைாம்னு இருந்தேன். தெக்ெ எனக்கு
நாேிேில்தை மக்ொ. இந்நான்னு ேர என் லெேிதை ொல்சக்ெரம்
இல்லை. பாத்ேிோ, ெண்டவனுக்கு கநல்லுக்குத்ேி குடுத்து
ெஞ்சிகுடிக்ெிதறாம்… ேவிடு விக்ெதைன்னா அந்ேிப்பசிக்கு
பச்சத்ேவிலடோக்கும் ேிங்ெிறது மக்ொ…ஆனா நல்ை ொைத்ேிதை நான்
உனக்கு தசாறு தபாட்டிருக்தென். என் லெோதை ெஞ்சியும் பற்றும்
குடிச்சுத்ோன் நீ ஆளாதன. எட்டுமாசம் ேினம் கரண்டு
தவலளன்னாக்கூட அஞ்ஞூறு தவலள நான் உனக்கு தசாறும் ெறியும்
கவளம்பிேிருக்தென் பாத்துக்தொ. அகேல்ைாம் உனக்ெ அம்லமக்கு
இப்ப கேரிோது. அந்ே நண்ணி அவளுக்ெில்தைண்ணாலும்
உனக்ெிருக்கும்… மக்ொ ராமகைச்சுமிக்கு உன்லன விட்டா ஆருமில்தை.
சவத்துக்கு ராத்ேிரியும் பெலும் உனக்ெ நிலனப்பாக்கும்…அவளுக்கு ஒரு
சீவிேம் குடு ராசா…ேிண்ண தசாத்துக்கு நண்ணி ொட்தடல்தைண்ணா
அதுக்குண்டான ெணக்ெ நீ கசன்மகசன்மாந்ேரமா ேீக்ெணும்
பாத்துக்தொ’

அவளிடம் விலடகபற்று பஸ்ஸில் ஏறிேதபாது தவப்பங்ொய் உேட்டில்


பட்டது தபாைக் ெசந்ேது. வாதே ெசப்பது தபாை பஸ்ஸில் இருந்து
துப்பிக்கொண்தட வந்தேன். தநராெத் ேிருவனந்ேபுரம் வந்தேன்.
தவலைக்குச் தசர்ந்து அந்ே புேிே கபாறுப்பின் பரபரப்பிலும் மிேப்பிலும்
மூழ்ொமல் இருந்ேிருந்ோல் அந்ேக்ெசப்லப உடம்கபங்கும் நிலறத்து
லவத்ேிருப்தபன். முேல்மாேச் சம்பளம் வாங்ெிேதும் அம்மாவுக்குப்
பணம் அனுப்பிேிருந்தேன். அம்மா பேில் ெடிேத்ேில் ’சுப்பம்மா வந்து
உன் அப்பாெிட்தட தபசிேிருக்ொள். உங்ெ அப்பாவுக்கும் அலர
மனசுோன். அது நமக்கு தவண்டாம் தெட்டிோ? அவங்ெ கசய்ேதுக்கு
நூதறா ஆேிரதமா அந்ேக்குட்டி ெல்ோணத்துக்கு குடுத்ேிருதவாம். நாம
ோருக்கும் தசாத்துக்ெடன் வச்சமாேிரி தவண்டாம். இப்பம் நல்ை
எடங்ெளிதை தெக்ெிறாங்ெ. நல்ைாச் கசய்வாங்ெ. பூேப்பாண்டிேிதை
இருந்து ஒரு ேரம் வந்ேிருக்கு. பாக்ெட்டுமா’ என்று தெட்டிருந்ோள்.
இரகவல்ைாம் தோசித்துக்கொண்டிருந்தேன். சைித்துப்தபாய்
தூங்ெிவிட்தடன். ொலைேில் மனம் கேளிவாெ இருந்ேது. அம்மாவுக்கு
‘பாரு. கபாண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்ெணும்’ என்று எழுேிப்
தபாட்தடன்.

முேல் மாேதம தெண்டீன் சாமிநாே அய்ேர் நடத்ேிே இருபோேிரம்


ரூபாய் சீட்டு ஒன்றில் தசர்ந்ேிருந்தேன். மாேம் ஐநூறு ரூபாய் ேவலண
வரும். அலே நாைாேிரம் ரூபாய் ேள்ளி ஏைத்ேில் எடுத்தேன்.
பேினாறாேிரம் ரூபாய் கமாத்ேமாெ மாத்ருபூமி நாளிேழ்ோளில் சுருட்டி
லெேில் கொடுத்துவிட்டார். எல்ைாதம நூறு ரூபாய்க்ெட்டுெள்.
அத்ேலன பணத்லே நான் என் லெோல் கோட்டேில்லை.
ஒருவிேமான ேிெில் லெெலளக் கூச லவத்ேது. அலறேில் கொண்டு
வந்து லவத்து அந்ே தநாட்டுக்ெலளதே பார்த்துக்கொண்டிருந்தேன்.
இத்ேலன பணத்லே என் லெோல் நான் சம்பாேிப்தபன் என எப்தபாதும்
எண்ணிேேில்லை. அலேலவத்து ேிருவனந்ேபுரத்ேில் புறநெரில் ஒரு
சிறிே வட்லடக்கூட
ீ வாங்ெிவிடமுடியும். கொஞ்ச தநரத்ேில்
அந்ேப்பணம் என் லெக்கும் மனதுக்கும் பழெிப்தபான விந்லேலே
நிலனத்துப் புன்னலெத்துக்கொண்தடன்.

மேிே தநரம் கெத்தேல் சாெிப் ெலடக்குப்தபாதனன். ெலட ேிறந்ேதும்


உள்தள கசன்று உண்டிேைில் பணத்லே தபாட ஆரம்பித்தேன். கபட்டி
நிலறந்ேதும் கெத்தேல் சாெிபிடம் தவறு கபட்டி தெட்தடன் .’டா அமீ தே
கபட்டி மாற்கறடா’ என்றார். லபேன் கபட்டிலே மாற்றிலவத்ேதும்
மீ ண்டும் தபாட்தடன். கமாத்ேப்பணத்லேயும் தபாட்டபின்
லெெழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாெிப் இலைதபாட்டு
எனக்குபிரிேமான கொஞ்சு கபாரிேலை லவத்ோர். தசாறு தபாட்டு
குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்ே மாறுேலும் இருக்ொகேன்று எனக்கு
நன்றாெ கேரிந்ேிருந்ேது. ஒரு கசால் இல்லை. அப்பால் இரு
லபேன்ெள் ஒண்டிேது தபாை அமர்ந்ேிருந்ோர்ெள். கவளிறிே நாேர்
லபேன்ெள். சத்ேற்ற பூசணம்பூத்ே சருமம். கவளுத்ே ெண்ெள்.
கெத்தேல் சாெிப் அள்ளி லவத்ே ெறிலே முட்டி முட்டி
ேின்றுகொண்டிருந்ோர்ெள். கெத்தேல் சாெிப் இன்கனாரு துண்டு ெறிலே
ஒருவனுக்கு லவக்ெ அவன் ‘அய்தோ தவண்டா’ என்று எழுந்தே
விட்டான். கெத்தேல் சாெிப் ‘ேின்னுடா எரப்பாளிதட தமாதன’ என்று
அவன் மண்லடேில் ஓர் அடி தபாட்டார். பைமான அடி அவன் பேந்து
அப்படிதே அமர்ந்துவிட்டான். ெண்ணில் ொரத்தூள் விழுந்ேதோ
என்னதவா, அழுதுகொண்தட சாப்பிட்டான்.

கெத்தேல் சாெிப் மாறி மாறி தொழியும் குழம்பும் மீ னும் கொஞ்சுமாெ


பரிமாறிக்கொண்டிருந்ோர். நான் எேிர்பார்த்ேது அவரது ெண்ெளின் ஒரு
பார்லவலே. நானும் ஒரு ஆளாெிவிட்தடன் என்று என் ோய்க்கு
கேரிேதவண்டாமா இல்லைோ? அனால் அவரது ெண்ெள் வழக்ெம்தபாை
என்லன சந்ேிக்ெதவேில்லை. மீ ண்டும் மீ ன்கொண்டுலவக்கும்தபாது
ெனத்ே ெரடிக்ெரங்ெலளப் பார்த்தேன். அலவ மட்டும்ோன்
எனக்குரிேலவதபாை. அலவ என் வேிற்லற மட்டுதம
அளகவடுக்கும்தபாை.

அன்று ஊருக்கு ெிளம்பிச்கசன்தறன். ராமைட்சுமிலே அடுத்ே


ஆவணிேில் ேிருமணம்கசய்து கூட்டிவந்தேன்.

You might also like