Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில், கொரோனாவைரஸ் (சார்ஸ் கோவ்-2)-

உருமாற்றங்களுக்கு எதிரான ஸ்பைக் புரதத் தடுப்பூசிகளின் செயல்திறன்


தக்கவைக்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தடுப்பூசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் டி-செல் நோய்


எதிர்ப்பு சக்தி, டெல்டா பிளஸ், காமா, ஜீட்டா, மிங்க், ஒமிக்ரான் போன்ற
குறிப்பிட்ட சார்ஸ் கோவ்-2 உருமாற்றங்களுக்கு எதிராக மிகச்சிறந்த
வகையில் செயல்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருப்பினும்
தொடர் பரிசோதனைகள் மூலம் இதனை சரிபார்க்க வேண்டி உள்ளது.

சென்னை, xx செப்டம்பர் 2022: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்


கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவைரஸ்-ன் (சார்ஸ்
கோவ்-2) பலதரப்பட்ட உருமாற்றங்களுக்கு எதிராக ஸ்பைக் புரத
தடுப்பூசிகள் பயனுள்ள வகையில் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

டெல்டா பிளஸ், காமா, ஜீட்டா, மிங்க், ஒமிக்ரான் போன்ற குறிப்பிட்ட


உருமாற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது, நோய் எதிர்ப்புத்திறன் உருவாகி
எதிர்கொள்வதுடன் தடுப்பூசியால் தூண்டப்பட்ட டி-செல்களும் அவற்றை
எதிர்கொள்ளும்.

பரிசோதனைகள் மூலம் இவற்றை சரிபார்க்க வேண்டிய அவசியம்


இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், தற்போதைய ஸ்பைக்
புரத தடுப்பூசிகள் கொரோனாவைரஸ் (சார்ஸ் கோவ்-2) உருமாற்றங்களுக்கு
எதிராக திறம்பட செயல்படுவதாகக் கருதுகின்றனர்.

வுஹானில் முதலில் உருவான நோய்த்தொற்றை அடிப்படையாகக்


கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிந்தைய
உருமாற்றங்களால் நோய்த்தொற்று ஏற்பட்டதால் அதன் எதிர்வினை
என்னவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறியத் தொடங்கி
உள்ளனர். சார்ஸ்கோவ்-2 ன் உருமாற்றங்களில், வைரசின் ஸ்பைக்
புரதத்தில் மூலக்கூறு நிலை மாற்றங்கள் உள்ளன. இந்த உருமாற்றங்கள்
எபிடோப்கள் என்றழைக்கப்படும் டி-செல்களால் ஆன புரத வரிசைகளையும்
உள்ளடக்கி இருக்கும்.
நோய் எதிர்ப்பைத் தரும் இந்த உருமாற்றங்களின் விளைவை அறிந்து
கொள்வதன் மூலம், சார்ஸ் கோவ்-2 உருமாற்றங்களுக்கு எதிரான
தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தெளிவு கிடைக்கும்.

ஐஐடி மெட்ராஸ் பூபத்-ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின்


உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் வாணி
ஜானகிராமன் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர் வாணி ஜானகிராமனுடன், ஐஐடி மெட்ராஸ் உயிரித்


தொழில்நுட்பத் துறை மாணவர்களான திரு.எஸ்.சங்கரநாராயணன், செல்வி
முக்தா முகேத்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ஆய்வறிக்கை
முடிவுகள் அண்மையில் BBA - Molecular Basis of Disease
(https://doi.org/10.1016/j.bbadis.2022.166432) என்ற மதிப்புமிக்க ஆய்வுமதிப்பீட்டு
இதழில் வெளியிடப்பட்டது.

ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ்


பூபத்-ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத்
துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் வாணி ஜானகிராமன், இந்த
ஆய்வின்படி, ஸ்பைக் புரதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு வடிவ
தடுப்பூசிகளின் செயல்திறன், நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டுவது
மட்டுமின்றி டி-செல்களால் ஏற்கக் கூடியதா என்பதையும் பொருத்ததாகும்.
வெவ்வேறு உருமாற்றங்களால் ஏற்படும் பிறழ்வுகளை எபிடோப்
வரிசைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், தடுப்பூசி செலுத்தும்போது
டி-செல்களை எந்த அளவுக்குத் தூண்டுகிறது என்பதைப் பொருத்தும்
உருமாற்றங்களின் செயல்திறனை மதிப்பிடலாம்.

ஸ்பைக் புரதங்களில் குறைவான பிறழ்வு எபிடோப்புகள் இருப்பதைப்


பொருத்தும், அசல் எபிடோப்புகளுடன் ஒப்பிடுகையில் பிறழ்வு
எபிடோப்புகளால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும்
தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டதாக உள்ளன
என்பதைக் கண்டறிய முடியும்.

டாக்டர் வாணி ஜானகிராமன் மேலும் கூறுகையில்,


மேலும், டாக்டர் வாணி ஜானகிராமன் கூறுகையில், “உடலின் நோய்
எதிர்ப்பு சக்தியில் டி-செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. T-செல்கள்
பாதிக்கப்பட்ட செல்லின் மேற்பரப்பில் MHC எனப்படும் பெரிய
மூலக்கூறுடன் இணைந்து வழங்கப்படும் எபிடோப்புடன் பிணைக்கும்
ஏற்பிகளைக் கொண்டுள்ளன. இது புதிதாகவோ அல்லது தடுப்பூசி
நினைவகத்தின் மூலமாகவோ நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது."

தடுப்பூசி என்பது ஒரு செயல்முறையாகும், இதில் வைரஸின் லேசான


வடிவம் அல்லது வைரஸின் ஒரு பகுதி உடலில்
அறிமுகப்படுத்தப்படுகிறது. உட்செலுத்தப்பட்ட வைரஸ் / வைரஸ்
பகுதியின் எபிடோப்ஸ் எனப்படும் புரதத்தின் துண்டுகள் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன.

ஸ்பைக் புரோட்டீன் எம்ஆர்என்ஏ தடுப்பூசி விஷயத்தில், மெசெஞ்சர்-


ஆர்என்ஏவின் ஒரு இழை ஹோஸ்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது, இது
புரதத்தை உருவாக்க செல்களை கற்பிக்கிறது, இது சிறிய துண்டுகளாக
(எபிடோப்கள்) வெட்டப்பட்டு டி-செல்களுக்கு வழங்கப்படுகிறது. . இது
இறுதியில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இரண்டு
சந்தர்ப்பங்களிலும், எதிர்கால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்க
உடலின் பதில் நினைவில் வைக்கப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ் குழு, மாறுபாடுகளில் உள்ள பல எபிடோப்கள் எவ்வாறு


மாற்றப்பட்டுள்ளன என்பதையும், தடுப்பூசியின் செயல்திறனை
மதிப்பிடுவதற்காக தடுப்பூசிக்கான நோயெதிர்ப்பு சக்தியை
மாற்றியமைக்கப்பட்ட எபிடோப்கள் மாற்ற முடியுமா என்பதையும் ஆராய
முயன்றது.

You might also like