Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அரசு ஆணையின்படி ஓய்வு பெற்ற பணியாளரை பணிக்கு அமர்த்த வேண்டாம் என்ற மனு

நாள் : 12.06.2023
அனுப்புதல்
கழகப் பணியாளர்கள் ,
தா. அ போ. கழகம் (சேலம்) வரை.,
சேலம் .

பெறுதல்
தலைவர் ,
அனைத்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள்,
போக்குவரத்து துறை ,
தலைமை செயலகம், சென்னை .
அய்யா ,
பொருள் : த. அ. போ. க சேலம் - திரு கே. பழனிசாமி , உதவி மேலாளர் (ஓய்வு ) மீண்டும்
கழகப்பணிக்கு அமர்த்துவது – அரசு ஆணைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுதல் –
தொடர்பாக.
------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலத்தில் 2019-ஆம் வருடத்திற்கு
முன்பு ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ஒருவரை ஒழுங்கு நடவடிக்கை கோப்பு
விசாரணை அலுவலராக, ஒரு கோப்புக்கு ரூ 500 /- வீதம் விசாரணை நடைபெற்றது.
அச்சமயத்தில் பெறப்பட்ட அரசு கடிதத்தில் ஓய்வு பெற்றவரோ அல்லது வெளி
ஆட்களையோ கொண்டு எந்த ஒரு பணியினையும் மேற்கொள்ள கூடாது, என
தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அப்போது இருந்த விசாரணை அலுவலர் அந்த
பணிக்கு பயன்படுத்துவதில் இருந்து நிறுத்தப்பட்டார்.

தற்போது அந்த அரசு கடிதம் இருந்தாலும், பணி ஓய்வு பெற்ற திரு கே.
பழனிச்சாமி, உதவி மேலாளர் ஓய்வு) என்பவரை அந்த பணிக்கு பயன்படுத்திக்
கொள்ள இயக்குனர் குழும கூட்டத்தில் பேசு பொருளாக வைக்கப்பட உள்ளது
என்பது தெரிய வருகிறது. தற்போது அந்த பணிக்கு கண்காணிப்பாளர் ஒருவர்
பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆள் பற்றாக்குறை ஏற்படாத நிலையில் மேற்படி
ஓய்வு பெற்றவரை பயன்படுத்துவது அரசு வழிகாட்டுதலுக்கு எதிரானது. மேலும், திரு
கே. பழனிச்சாமி ஓய்வு பெற்றவர் சட்டம் பயின்றவர். இவரது மகன் சட்டக்கல்லூரியில்
படித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவரது சகோதரர் சேலம் நீதிமன்றத்தில்
வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருக்கிறார்.
மேற்படி திரு கே பழனிச்சாமி மேற்படி கழகப் பணிக்கு பயன்படுத்தினால்
அனைத்து அலுவலக கோப்புகளும் பிறருக்கு சாதகமாக மாற்றம் செய்யப்பட்டது நமது
கழகத்திற்கு எதிராகவே பல வழக்குகள் தொடர வாய்ப்புள்ளது. எனவே நிர்வாக நலன்
கருதி மேற்படி பணியாளருக்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
கழக நலன் நாடும் பணியாளர்கள்

Copy to the Special Officer, Chairaman’s Office, Transport Dept., Secretariat, Chennai.

You might also like