Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டத்தில் அமைந்துள்ள

க.அம்பலம் எனும் சிற்றூரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலின்


கருவறை வெளிப்புரசுவற்றில் காணப்படும் முதலாம் இராஜராஜ சோழரின்
13 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த (பொ.ஆ. 998) துண்டு கல்வெட்டானது,
இத்திருவோயோத்தியை கோயிலுக்கு விலையாவணம் செய்து கொடுத்த
செய்தியை கூறுகிறது. ஆனால் என்ன பொருள் எதற்காக கொடுக்கப்பட்டது,
எனும் செய்தியை அறிய முடியவில்லை.

கல்வெட்டு;

1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை கல மறுத்த கோவிராஜ:

2. ஜகேசரி வர்ம்மக்கு யாண்டு யங வது மிலாட்டு பாலூ..

3. றத்து ப்ரமதேயம் அலம்பட சதுர்வ்வேதி மங்கலத்து ஸன.....

4. விலையாவண கைய்யெழுத்து இந்நாட்டு வீரசோழபுரத்து

5. ....ரந் திருவாரூரடிகள் இவ்வூர் தேவர் தி(ரு)வை யோத்யை

அலம்பலம் கல்வெட்டுக்கள். நடன.காசிநாதன், வீரராகவன், முத்து


எத்திராசன், தடயம் – 2003, ப. 51-56

மேற்படி கோயிலில் காணப்படும் முதலாம் இராஜராஜ சோழரின்


14 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த (பொ.ஆ. 999) துண்டு கல்வெட்டானது,
இத்திருவோயோத்தியை கோயில் ஆழ்வாருக்கு மிலாட்டு வீரசோழபுரத்து
வியாபாரி குறிபரன் திருவாரூரடிகள் என்பவன் நொந்தா
விளக்கெரிப்பதற்காக இருநூற்ற்ரிருபதைந்து ஆடுகள் கொடை அளித்ததை
கூறுகின்றது.

கல்வெட்டு;

1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலைகல மறுத்து வேங்கை....

2 ப்பாடியும் தடிகை வழியுங் கொண்ட கோவி....

3. கு யாண்டு யச லாவது மிலாட்டு பாலூர் கூற்.....


4. படு சதுர்வேதி மங்கலத்து தேவர் திரு வையோ

5. ர சோழபுரத்து வியாபாரி குறிபரத திருவா ரூரடி.....

6. கும் ஆடு தொண்ணூற்றாக இரு நூற்றிரு பத்தைஞ்....

7. .....கொண்டு நொந்தாவிளக்....

அலம்பலம் கல்வெட்டுக்கள். நடன.காசிநாதன், வீரராகவன், முத்து


எத்திராசன், தடயம் – 2003, ப. 51-56

மேற்படி திருவையாத்தியை ஆழ்வார் கோயிலில் வீரராஜேந்திர


சோழரின் 5 ஆம் ஆட்சியாண்டைச் (பொ.ஆ.1070) சேர்ந்த கல்வெட்டானது,
மிலாடு நாட்டைச் சேர்ந்த கிளியூர் மலையமான் பெருமாள் என்னும்
விக்கிரம சோழ மலைய குலராயன் என்பவன் ஒரு வேலி நிலம் தானம்
அளித்ததை கூறுகின்றது.

கல்வெட்டு;

1. ...... க்ரவத்திகள் ஸ்ரீவீரராஜேந்த்ர......

2. கு ரு ஆவது மலாடாந ஜநநாத.....

3. ற்றத்து ப்ரமதேயம் அலம்படச்.....

4. வயோத்யை ஆழ்வார்க்கு இந்நாட்டு.....

5. (கி)ளியூர் மலையமான் பெருமாள்.....

6. கிரம சோழ மலைய குலராயநெ......

7. நிலம் ஒரு வேலிக்கும் தீபா....

8 றணக்கு மேற்கு பழம் தேவதா....

அலம்பலம் கல்வெட்டுக்கள். நடன.காசிநாதன், வீரராகவன், முத்து


எத்திராசன், தடயம் – 2003, ப. 51-56

You might also like