அனுப்புநர்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

அனுப்புநர்

குலமங்களம் கிராம இறைமக்கள்,


கீழஉச்சாணி பங்கு ,
சிவகங்கை மறைமாவட்டம் ,
சிவகங்கை.

பெறுநர்
மேதகு ஆயர் அவர்களுக்கு ,
சிவகங்கை மறைமாவட்டம் ,
சிவகங்கை.

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆயர் அவர்கள் ,


கீழஉச்சாணி பங்கு, குலமங்களம் கிராம இறைமக்கள்
தெரிவித்துக்கொள்வது, எங்கள் கிராமத்தில் 27 கத்தோலிக்க கிறிஸ்தவ
குடும்பங்களும், இந்து மக்கள் 35 குடும்பங்களும் வசித்து வருகின்றோம். சில
குடும்பங்களிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, துபாய் போன்ற நாடுகளில்
பிழைப்பிற்காக சென்று வேலை பார்க்கின்றனர்.அழகானதொரு ஆரோக்கியநாதர்
ஆலயம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
பழைய ஆலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயத்தை கட்ட ஆரம்பித்தோம். ஆலய
கட்டுமான மதிப்பீடு சுமார் 75 இலட்சம். கட்டுமான பணிகள் நிறைவு பெற இருக்கும்
சூழலில் எலக்ட்ரிக்கல் வேலை, பெயிண்டிங், டைல்ஸ் ஒர்க் நடைபெற வேண்டி
இருக்கிறது. குலமங்களம் கிராமமே எல்லா நிதிச்சுமையையும் ஏற்று முடிப்பதில்
சிரமப்படுகின்றோம் . ஆலய பணி நிறைவு பெரும் சமயத்தில் ரூ .50000
மறைமாவட்டம் தருவதாக உறுதியளித்திருந்தார்கள். ஆயர் அவர்கள் கருணை
கூர்ந்து இந்த நிதியினை உயர்த்தி தருவீர்களே என்றால் எங்களுக்கு உதவியாக
இருக்கும். நிதியினை உயர்த்தி ஆவண செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
குலமங்களம்
கிராம இறைமக்கள்

You might also like