இக்கால இலக்கியம் - புதுமைப்பித்தன் சிறுகதைகள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 94

அலகு - 4 – சிறுகதைகள்

புதுமைப்பித்தன் – 1. ஒரு நாள் கழிந்தது

"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது


வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக


உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு
கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித்
தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த
வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன்
கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின்
புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே
விரிக்க வேண்டும். முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது
இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.
மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார்.

சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக,


அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு
எட்டவில்லை.
சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன்,
குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக்
கொள்ளுவானோ என்னமோ!
'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை
நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார். உள்ளே வீட்டின் பாக
வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை.
அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல்
வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை
எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை
உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம்
சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி
யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர். பக்கத்தில் இருந்த
அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப்
பிரயாணமானார்.

இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக்


கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு
வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில்
கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ
லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே!
ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே
என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று
வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.
"தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின்
நோக்கி நடந்தார். "இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க
அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!"
என்றாள் கமலம்.
"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக்
கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.
"ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை
விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா. முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை
எதிர்பார்க்கவில்லை.

"வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம்


இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார். "அங்கே, எங்கே
போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!"
"எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார்
முருகதாசர். "அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி -
ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி)
இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"

"வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு
இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன
பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"
"சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு
வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப்
போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே
என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"

இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப்


பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி
விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால்
சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான்


முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின்
ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக்
கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும்
வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை
எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்;


'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக்
கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக்
குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத
சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல்
மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின்
காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய
பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத
வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான்
அந்த முப்பது ரூபாய்!

வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால்


அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம்.
எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே
இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.

பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம்


ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர்
இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை
வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை.
கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க
வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய
குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய
முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக்
காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல்,
கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு
என்றால், சர்க்கார் செலவாகுமா?

கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை


மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி
வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை
அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன்
காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு.
இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.

முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக்


காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை.
ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள
வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை.
யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி
அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ
(ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும்
சகித்துக் கொண்டிருப்பார்கள். சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து
கொண்டிருந்தது.

"ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.


அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள்.
ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்!
"ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும்.

"இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக்


கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.
"தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர்.
"கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!"
"குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?"
"அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க.
வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக்
காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான்
ரிக்ஷாக்காரன்.

"அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம்


எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்!
அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?

"அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று


குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா


கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு.
பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான்
பொளைக்க வந்தவன்!" என்றான்.

"நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே


பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?"

"போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?"

"தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!"

"பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?"

"எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை


இல்லாவிட்டால் திங்கள்கிழமை."

"திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான்.

"சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர்.

"பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!"

ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை. பாதி வழியில் போகையில்,


"அப்பா!" என்றது குழந்தை.
அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம்
கடினமாக, "என்னடி!" என்றார்.

"நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!"

"கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"

"அதோ பார். பல்லு மாமா!"


முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை
வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக்
கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

"எங்கடி!"

"அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து


வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.

"மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?

"மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ?


அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.

பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர்


பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

"தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக்


கொண்டு குழந்தை எழுந்தது.

"என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே


சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.

"என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி


மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு
பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த
ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்!
விளக்கை ஏத்துகிறேன்."

குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக


உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.
"குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?"
என்றார் நண்பர்.
"ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு
கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை
உயர்த்திக் கொண்டே.

"நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார்


சுப்பிரமணிய பிள்ளை.

"அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய


தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது
வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த
ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..."
என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.
"அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி
ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?"

"சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும்


அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல
வாயெடுத்தீர்கள்?"

"அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப்


பேசிக்கொண்டிருந்தான்..."

"இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன்,


இவனுக்கென்ன?..."

அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ


கூப்பிட்டார்கள்.

"அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..."

"'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று


முணுமுணுத்தார் முருகதாசர்.

பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார்.

"என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த
குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய
சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.

"என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார்
முருகதாசர்.

எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது.

"அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!"

"நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்."

"வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு


'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா
வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ?
ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம்
இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல்
ஐடியா' என்ன தெரியுமா?..."

"நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார்


சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த
கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக்
கொண்டிருப்பார்!

"அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று


சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக்
காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.

"அம்மா எங்கே?"

"அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!"

"சரி! இதோ வாரேன், போ!"

"வாயேன்!"

"வாரேன்னா, போடீ உள்ளே!"

"காப்பி ஆறிப்போயிடும், அப்பா!"

"இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார்.

"மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை


மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள்
அலமு.

"அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம்


பிள்ளை.

"வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.


முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே
நுழைந்தார்.

"என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?"

"உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு."

"மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.


முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.

சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு
ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார்.
மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா!
எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.

"வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர்.

"மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில்


அலமுவைக் குடிக்கச் செய்தார். பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை.

"இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.

"வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

"நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக்


கொண்டார் தாசர்.

"நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம்.


"அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.

"கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக்


கொண்டு வெளியேறினார் சுந்தரம்.

கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு


நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.

தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது


சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.

"ஏது அவசரம்!"

"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை


கொடுத்துவிடுகிறேன்!"

"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான்


இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

"இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.

"அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

"பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை


பெற்றுச் சென்றார்.

முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில்


உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு,
நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!

"நீதான் இங்கே வாயேன்!"

கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும்


சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.

"சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"

"உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு


திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது.
நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.

"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"

"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"

"அதற்கென்ன இப்பொழுது!"

"போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"

"திங்கட்கிழமைக்கு?"

"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"

புதுமைப்பித்தன் – 2. சாப விமோசனம்

சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக்


கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன
வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே
பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ
என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால்
அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில்
அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும்
தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும்
சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு
அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.
அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த
சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு
பார்க்கும் துறவி போன்ற இயற்கையின் மடியிலே
கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை
கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும்
குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக -
கல்லாக - கிடக்கிறாள்.
சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில்
ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம்
கிடக்கிறான் கோதமன். இயற்கை, அவனையும்
அபேதமாகத்தான் போஷிக்கிறது.

இன்னும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிகளின்


குடும்பக் கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு
நிழல் கொடுத்த கூரையும் தம்பம் இற்று வீழ்ந்து
பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் கரைந்தது.
மிஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின்
வடுப் போலத் தென்பட்டது அது.

தூரத்திலே கங்கையின் சலசலப்பு. அன்னை கங்கை,


இவர்களது எல்லையற்ற சோகத்தை அறிவாளோ என்னவோ!

இப்படியாக ஊழி பல கடந்தன, தம்பதிகளுக்கு.

ஒரு நாள்...

முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும்


கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்துவரும் காற்றும்,
உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும்
வலுவையும் தரும் சமய தத்துவம் போல, இழைந்து மனசில்
ஒரு குளுமையைக் கொடுத்தன.

ஆண் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து, எடுத்த


கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை மனசில் 'அசை
போட்டுக்கொண்டு' நடந்து வருகிறான் விசுவாமித்திரன்.
மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரியவில்லை. தாடகை
என்ற கிழட்டுக் கொடுமை நசித்து விட்டது. நிஷ்டையில்
ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில்
ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும் சாதனமாகத்
தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு திருப்தி.

அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறான்.


பார்வையில் என்ன பரிவு! இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து
விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல;
அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர்
நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் பொறுப்புத்
தெரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள்.

ஓட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி


வருகிறான் லக்ஷ்மணன்; துரத்தி வருபவன் ராமன். புழுதிப்
படலம் சிலையின் மீது படுகிறது...

என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதுகலிப்புடன்


திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தபடியே
நிற்கிறார்.

புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.

எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள்


துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப் போன
ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி
உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.

கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை


தெரிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!

தெய்வமே! மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்தரம்


அடைந்தது.

தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த


தெய்விக புருஷன் எவன்? அந்தக் குழந்தையா?

அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன்


ஆச்சரியத்தால் ரிஷியைப் பார்க்கிறான்.

விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை.


அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை.
கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின்
விளைவாக, தன் உடம்பை, மாய வேஷத்தால் ஏமாறி,
மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் மனைவி.
அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும்
புற்று இருக்கிறதே; அதில் வலை முட்டையில்
மோனத்தவங்கிடக்கும் பட்டுப்பூச்சி போலத் தன்னை மறந்து
நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்து
விட்டானே!

நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல்


சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு
பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின்
கேவலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதவனைப்
போலத் தயங்கித் தயங்கி வருகிறான்.

மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சாப


விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு
அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது
பிரம்மாண்டமான மதிலாக அவனது வாழ்வைச் சுற்றியே
மண்டலிக்கிறது. அவள் மனமும் மிரளுகிறது.

ராமனுடைய கல்வி, தர்மக்கண்கொண்டு பார்த்தது.


தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில்
பட்டை பிடிக்காதது; வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு
நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த
வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது.
புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.

உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக


முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் கரணசக்தியின்
நிதானத்துக்கும் கட்டுப் படாமல் நிகழ்ந்த ஒரு
காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? "அம்மா!"
என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான்
ராமன்.

இரண்டு ரிஷிகளும் (ஒருவன் துணிச்சலையே அறிவாகக்


கொண்டவன்; மற்றவன் பாசத்தையே தர்மத்தின்
அடித்தலமாகக் கண்டவன்) சிறுவனுடைய நினைவுக்
கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு
குதுகலிக்கிறார்கள். எவ்வளவு லேசான, அன்புமயமான,
துணிச்சலான உண்மை!

"நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ


ஏற்றுக்கொள்ளுவதுதான் பொருந்தும்" என்கிறான்
விசுவாமித்திரன் மெதுவாக.

குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கரகரப்பு


ரஸபேதம் காட்டுகிறது.

கோதமனும், அவள் பத்தினியும், அந்தத் தம்பமற்றுத்


திரடேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை.
முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள
நினைத்தது.

சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை


மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப்
பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது
சாயும்பொழுதாவது போக வேண்டாமா? மணவினை, இரு
கைகளை நீட்டி அழைக்கிறதே.

கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப்


பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று
சுட்டது, தன் நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல
இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது?

"என்ன வேண்டும்?" என்றான் கோதமன். அறிவுத் திறம்


எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற
வார்த்தையை உந்தித் தள்ளியது.

"பசிக்கிறது" என்றாள் அகலிகை, குழந்தை போல.


அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச்
சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல்
மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில்
துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில்
தேக்கத்தில் காட்டின.

'அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்னர்ப்


பூத்திருந்தாலும் ஏமாற்றின் அடிப்படையில் பிறந்ததுதானே!
பசுவை வலம் வந்து பறித்து வந்ததுதானே!' என்று
கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித் தன்னையே
சுட்டுக் கொண்டது.

அகலிகை பசி தீர்ந்தாள்.

அவர்களது மனசில் பூர்ணமான கனிவு இருந்தது.


ஆனால் இருவரும் இருவிதமான
மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள்.
கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின்
கவலை.அகலைகைக்குத் தான் ஏற்றவனா என்பதே
கோதமனின் கவலை.
சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப்
பார்த்துச் சிரித்தன.

அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி


மதில்களுக்குச் சற்றுத் ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடி
படராத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக்
கொண்டு தர்மவிசாரம் செய்து கொண்டிருந்தான்
கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது
பரிபூர்ண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால்
கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு
பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி
இல்லாவிடின் தனது தர்மவிசாரமே தவிடுபொடியாகிவிடும்
என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.
அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர்
அன்பால் தழைக்க வைத்தாள். அவனை நினைத்துவிட்டால்
அவள் மனமும் அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன
போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல்
அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி,
விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட இடங்கொடாதபடி
நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில்
இயற்கையின் தன்மை மறைந்து இயல்பு மாறியது. தன்னைச்
சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத்
தென்பட்டார்கள்; அகலிகைக்குப் பயம் நெஞ்சில்
உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த பேச்சும்
விளையாட்டும் குடியோடிப் போயின. ஆயிரம் தடவை
மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம்
பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை
நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான்
எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச்
சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் உண்டோ
என்று பதைப்பாள்.

வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று.

அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததீசி வந்தார்.


மதங்கரும் வாரணாசி செல்லும்போது கோதமனைக் குசலம்
விசாரிக்க எட்டிப் பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும்
பரிவும் இருந்தபோதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக்
கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட
வழுவிவிடும்போல் இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப்
பார்க்கிறவர்களையும் களங்கமற்ற கண்கொண்டு பார்க்கக்
கூசியது. குடிசையில் ஒளிந்து கொண்டாள்.

கோதமனுடைய சித்தாந்தமோ இப்பொழுது புதுவித


விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும்
மனமறிந்து செய்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல்
வழு ஏற்பட்டு, அதனால் மனுஷ வித்து முழுவதுமே
நசித்துவிடும் என்றாலும் அது பாபம் அல்ல; மனலயிப்பும்,
சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே
கறைப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசையில்
மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மையில்
இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத்
திருப்பிவிட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை
மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை
இல்லை; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை
மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்.

சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயாசமயங்களில்


அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக்
குழந்தை, கோதமனின் மனசில் லக்ஷ்ய வாலிபனாக
உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும்
விளையாட்டுமே தர்மசாஸ்திரத்தின்
தூண்டாவிளக்குகளாகச் சாயனம் (வியாக்கியானம்)
பண்ணின. அந்த இளம் தம்பதிகளின் பந்தந்தான் என்ன?
அது கோதமனுக்குத் தனது அந்தக் காலத்து வாழ்வை
ஞாபகப்படுத்தும்.

அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா


சீதை. அவளது பேச்சும் சிரிப்பும் தன்மீதுள்ள கறையைத்
தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு. அவள்
வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் புன்சிரிப்பால்
நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளி காட்டும்.

வசிஷ்டரின் கண்பார்வையிலே வளரும் ராஜ்ய


லக்ஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் ஓரத்தில் ஒதுங்கி
இரு தனி வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் ஜீவன்களிடையே
பழைய கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள்.

அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போவதற்குப்


பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது
மனச்சுமையை நீக்கிச் சற்று தெம்பை அளித்தது.

பட்டாபிஷேக வைபவத்தின் போது அயோத்திக்கு


வருவதாக ஒப்புக்கொண்டிருந்தாள். ஆனால்
அரண்மனைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புக்குத்தான்
என்ன வலிமை! ஒரே மூச்சில் தசரதன் உயிரை வாங்கி,
ராமனைக் காட்டுக்கு விரட்டி, பரதனைக் கண்ணீரும்
கம்பலையுமாக நந்திக்கிராமத்தில் குடியேற்றிவிட்டது.

மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத


சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச்
சொக்கட்டான் ஆடியது போல், நடந்து முடிந்துவிட்டது.

விசிஷ்டர்தான் என்ன, சர்வ ஜாக்கிரதையோடு மனுஷ


தர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கக்
கண்ணில் எண்ணெயூற்றி வளர்த்தார். அவருடைய
கணக்குகள் யாவும் தவிடுபொடியாகி, நந்திக்கிராமத்தில்
நின்றெரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று.

சரயூ நதிக் குடிசை மறுபடியும் தம்பமற்று விழுந்தது என்று


சொல்ல வேண்டும். கோதமன் தர்மவிசாரமெல்லாம் இந்தப்
பேய்க் காற்றில் சூறை போயிற்று. மனசில் நம்பிக்கை வறண்டு
சூன்யமாயிற்று.

அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்தால்


வார்த்தைக்குள் அடைபடாது. அவளுக்குப் புரியவில்லை.
நைந்து ஓய்ந்துவிட்டாள். ராமன் காட்டுக்குப் போனான்.
அவன் தம்பியும் தொடர்ந்தான்; சீதையும் போய்விட்டாள்.
முன்பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இருண்டு கிடந்த
மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பாரத்தின் பிரக்ஞை
மட்டும் தாங்க முடியவில்லை.

கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்கொண்டு


கரையேறிக்குடிசைக்குள் நுழைந்தார்.

அவர் பாதங்களைக் கழுவுவதற்காகச் செம்பில் ஜலத்தை


ஏந்தி நின்ற அகலிகையின் உதடு அசைந்தது.

"எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப்


போய் விடுவோமே."

"சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெகு


நாட்களாயின" என்று வெளியே இறங்கினார் கோதமர்.
இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள். இருவர்
மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று
நின்றார்.

பின் தொடர்ந்து நடந்து வந்த அகலிகையினுடைய


கையை எட்டிப் பிடித்துக் கொண்டார்; நடந்தார்;
"பயப்படாதே" என்றார்.

இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.

பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும்


சென்று கொண்டிருக்கிறார்கள்.

யாரோ ஆற்றுக்குள் நின்று கணீரென்ற குரலில்


காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஜபம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்து


நின்றார்கள்.

"சதானந்தா!" என்று கூப்பிட்டார் கோதமர்.

"அப்பா... அம்மா!" என்று உள்ளத்தின் மலர்ச்சியைக்


கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தான் சதானந்தன்.
அகலிகை அவனை மனசால் தழுவினாள். குழந்தை
சதானந்தன் எவ்வளவு அன்னியனாகிவிட்டான், தாடியும்
மீசையும் வைத்துக் கொண்டு ரிஷி மாதிரி!

கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக்


குளுமையூட்டியது.

சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச்


சென்றான்.

சிரமப்பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி


செய்துவைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார
மண்டபத்துக்குப் புறப்படலானான்.
கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார். மகனுக்கு
அவரை அழைத்துச் செல்லுவதில் பிரியந்தான்.
நெடுந்தூரத்துப் பிரயாணமாச்சே என்று ரத்த பந்தத்தின்
பரிவால் நினைத்தான். ஊழிகாலம் நிஷ்டையில் கழித்தும்
வாடாத தசைக்கூட்டமா, இந்த நடைக்குத் தளர்ந்துவிடப்
போகிறது? அவனுக்குப் பின் புறப்பட்டார். அவருடைய தத்துவ
விசாரணையின் புதிய போக்கை நுகர ஆசைப்பட்டான்
மகன்.

மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும்போது


அயோத்தியில் பிறந்த மனத்தொய்வும் சோகமும் இங்கும்
படர்ந்திருப்பதாகப் புலப்பட்டன கோதமருக்கு. அடங்கிவிட்ட
பெருமூச்சு காற்றினூடே கலந்து இழைந்தது.

ஜனங்கள் போகிறார்கள், வருகிறார்கள்; காரியங்களைக்


கவனிக்கிறார்கள்; நிஷ்காம்ய சேவை போல எல்லாம்
நடக்கிறது; பிடிப்பு இல்லை; லயிப்பு இல்லை.

திருமஞ்சனக் குடம் ஏந்திச் செல்லும் அந்த யானையின்


நடையில் விறுவிறுப்பு இல்லை; உடன் செல்லும் அர்ச்சகன்
முகத்தில் அருளின் குதுகலிப்பு இல்லை.

இருவரும் அரசனுடைய பட்டிமண்டபத்துக்குள்


நுழைந்தார்கள். சத்சங்கம் சேனா சமுத்திரமாக
நிறைந்திருந்தது. இந்த அங்காடியில் ஆராய்ச்சி எப்படி
நுழையும் என்று பிரமித்தார் கோதமர். அவர் நினைத்தது
தவறுதான்.

ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள்.

அவன் ஓடோ டியும் வந்து முனிவருக்கு அர்க்கியம்


முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று
அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.

ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது.


ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு இல்லை; அவனுடைய
சித்தம் நிதானம் இழக்கவில்லை என்பதைக் காட்டியது.
என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத்
தயங்கினார்.

"வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு


அமைக்கவில்லை" என்றான் ஜனகன், மெதுவாகத் தாடியை
நெருடிக் கொண்டு.

ஜனகனின் வாக்கு, வர்மத்தைத் தொட்டுவிட்டது.

"உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்"


என்றார் கோதமர்.

"துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத்திக்


கொள்ளத் தெரியாது போனால். ராஜ்யத்தைக் கட்ட
ஆசைப்படும்போது அதற்கும் இடம் போட்டு வைக்க
வேண்டும்; இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது" என்றான்
ஜனகன்.

"தங்களதோ?" என்று சந்தேகத்தை எழுப்பினார்


கோதமர்.

"நான் ஆளவில்லை; ஆட்சியைப் புரிந்து கொள்ள


முயலுகிறேன்" என்றான் ஜனகன்.

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

"தங்களது தர்மவிசாரணை எந்த மாதிரியிலோ?" என்று


விநயமாகக் கேட்டான் ஜனகன்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல் தான்


புரிந்துகொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல
புலன்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன" என்று
சொல்லிக்கொண்டே எழுந்தார் கோதமர்.

மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்துக்குப்


போகவில்லை. புத்தியிலே பல புதிர்கள் ஹிமாசலத்தைப்
போல ஓங்கி நின்றன. தனிமையை விரும்பினார். ஆனால்
நாடிச் செல்லவில்லை. அகலிகை மனசு ஒடிந்துவிடக்
கூடாதே!

மறுநாள் ஜனகன், "முனீசுவரர் எங்கே?" என்று


ஆவலுடன் கேட்டான்.

"அவர் எங்கள் குடிசைக்கு எதிரே நிற்கும் அசோக


மரத்தடியில் தான் பொழுதைக் கழிக்கிறார்" என்றார்
சதானந்தர்.

"நிஷ்டையிலா?"

"இல்லை; யோசனையில்."

"அலை அடங்கவில்லை" என்று தனக்குள்ளே மெதுவாகச்


சொல்லிக்கொண்டான் ஜனகன்.

அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம். இங்கே


கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் என்று தனியாக
உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்றுவிடுவாள்.

இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதியாகத் தனது


மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி
விட்டு, அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன்
குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர் மொண்டு வருவாள்.

இது நீடிக்கவில்லை.

குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை


இழைய விட்டுக்கொண்டு நடந்துவந்து கொண்டிருந்தாள்.

எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷி பத்தினிகள் யாரோ!


அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள்.
அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டதுபோல ஓடி
விலகி, அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
"அவள்தான் அகலிகை" என்பது தூரத்தில் கேட்டது.
கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக்கொண்டு பிறந்த
சாபத் தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள்.

அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து


தகித்தது. சிந்தனை திரிந்தது. "தெய்வமே! சாபவிமோசனம்
கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா?" என்று
தேம்பினாள்.

யந்திரப் பாவை போல அன்று கோதமருக்கும்


சதானந்தருக்கும் உணவு பரிமாறினாள். 'மகனும்
அன்னியனாகிவிட்டான்; அன்னியரும்
விரோதிகளாகிவிட்டார்கள்; இங்கென்ன இருப்பு?' என்பதே
அகலிகையின் மனசு அடித்துக் கொண்ட பல்லவி.

கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர் போல் ஒரு


கவளத்தை வாயிலிட்டு நினைவில் தோய்ந்திருந்தார்.

இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு


சதானந்தனையும் மூச்சுத் திணற வைத்தது.

பளுவைக் குறைப்பதற்காக, "அத்திரி முனிவர்


ஜனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப்
பார்த்துவிட்டு வருகிறார். மேருவுக்குப் பிரயாணம். ராமனும்
சீதையும் அகத்தியரைத் தரிசித்தார்களாம். அவர்கள்
இருவரையும், 'நல்ல இடம் பஞ்சவடி. அங்கே தங்குங்கள்'
என்று அகத்தியர் சொன்னாராம். அங்கே இருப்பதாகத்
தான் தெரிகிறது" என்றான் சதானந்தன்.

"நாமும் தீர்த்த யாத்திரை செய்தால் என்ன?" என்று


அகலிகை மெதுவாகக் கேட்டாள்.
"புறப்படுவோமா?" என்று கைகளை உதறிக் கொண்டு
எழுந்தார் கோதமர்.

"இப்பொழுதேயா?" என்றான் சதானந்தன்.

"எப்பொழுதானால் என்ன?" என்று கூறிக்கொண்டே


மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக்
கொண்டு வாசலை நோக்கினார் கோதமர்.

அகலிகை பின் தொடர்ந்தாள்.

சதானந்தன் மனம் தகித்தது.

பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ


நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கி வந்து
கொண்டிருக்கிறார்கள்.

பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்தில்


ஐக்கியமாகிவிட்டன. அவர்கள் பார்க்காத முனிபுங்கவர்
இல்லை; தரிசிக்காத க்ஷேத்திரம் இல்லை. ஆனால்
மனநிம்மதி மட்டிலும் அவர்களுக்கு இல்லை.

வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும்


சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல, திடமற்றவர்களின்
கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச்
சிகரங்களின்மேல் நின்று தரிசித்தார்கள்.

தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை


உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள்.

தம் உள்ளம் போலக் கொழுந்துவிட்டுப் புகைமண்டிச்


சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை
வலம்வந்து கடந்தார்கள்.

தமது மனம் போல ஓயாது அலைமோதிக்கொண்டு


கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத்
திரும்பினார்கள்.

தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து


வந்துவிட்டார்கள்.

'இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பிவிடுவான்;


இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும்' என்ற
ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது.

பதினான்கு வருஷங்களுக்கு முன் தான் கட்டிய குடிசை


இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள்.

இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாகக் கோதமர்


அதைச் செப்பனிட்டார். வேலை முடியும்போது உதய வெள்ளி
சிரித்தது.

இருவரும் சரயூவில் நீராடித் திரும்பினார்கள்.

கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முனைந்தாள்


அகலிகை. இருவரது மனசும் ராமனும் சீதையும் வரும்
நாளை முன்னோடி வரவேற்றது. இருந்தாலும் காலக்
களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றப்படித்
தாண்டிவிட முடியுமா?

ஒருநாள் அதிகாலையில் அகலிகை நீராடச்


சென்றிருந்தாள்.

அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை


குளித்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தாள்; யார்
என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை; ஆனால்
எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.
ஓடோ டியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும்
தரையில் பட விழுந்து நமஸ்கரித்தாள்.

தேவி கைகேயி! தன்னந்தனியளாக, பரிசனங்களும்


பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே!

குடத்தை இறக்கிவைத்துவிட்டு அவளை இரு


கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக்
கைகேயின் செயல் புரியவில்லை.

"தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு


இடம் கொடுக்க மறந்துவிட்டான்" என்றாள் கைகேயி.
குரலில் கோபம் தெறிக்கவில்லை; மூர்த்தண்யம்
துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி வேறு; பார்த்த
கைகேயி வேறு. படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும்
மனசைத்தான் பார்த்தாள் அகலிகை.

இருவரும் தழுவிய கை மாறாமல், சரயுவை நோக்கி


நடந்தார்கள்.

"பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?"


என்றாள் அகலிகை. அவளுடைய உதட்டின் கோணத்தில்
அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.

"குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால்


குழந்தையைக் கொன்றுவிடுவதா?" என்றாள் கைகேயி.

குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது


அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. "ஆனால்
எரிந்தது எரிந்ததுதானே?" என்று கேட்டாள். "எரிந்த
இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து
வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் மட்டும்
போதுமா?" என்றாள் கைகேயி.

"சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து


விடுவானே" என்றாள் அகலிகை.

"ஆமாம்" என்றாள் கைகேயி. அவள் குரலில் பரம நிம்மதி


தொனித்தது. ராமனை எதிர்பார்த்திருப்பது பரதனல்ல;
கைகேயி.

மறுநாள் அவள் அகலிகையைச் சந்தித்தபொழுது முகம்


வெறிச்சோடியிருந்தது; மனசு நொடிந்து கிடந்தது.

"ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அனுப்பிப்


பார்த்தாகிவிட்டது. ராமனைப் பற்றி ஒரு புலனும்
தெரியவில்லை. இன்னும் நாற்பது நாழிகை நேரத்துக்குள்
எப்படி வந்துவிடப் போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம்
செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு
செய்து வருகிறான்" என்றாள் கைகேயி.

பரதன் எரியில் தன்னை அவித்துக் கொள்ளுவது


தன்மீது சுமத்தப்பட்ட ராஜ்ய மோகத்துக்குத் தக்க
பிராயச்சித்தம் என்று அவள் கருதுவது போல இருந்தது
பேச்சு.

சற்று நிதானித்து, "நானும் எரியில் விழுந்துவிடுவேன்;


ஆனால் தனியாக, அந்தரங்கமாக" என்றாள் கைகேயி.
அவள் மனசு வைராக்கியத்தைத் தெறித்தது.

பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே


உணர்ச்சிச் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடு
நீங்கவில்லையா?

அகலிகையின் மனசு அக்குத்தொக்கு இல்லாமல்


ஓடியது. தனது காலின் பாபச் சாயை என்றே சந்தேகித்தாள்.

"வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடைசெய்யக்


கூடாதோ?" என்றாள் அகலிகை.

"பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்;


வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்" என்றாள் கைகேயி.

"மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச்


சத்துரு" என்று கொதித்தாள் அகலிகை.

தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒரு வேளை


கட்டுப்படக் கூடாதோ என்ற நைப்பாசை. மறுபடியும்
அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்துவிடக்
கூடாதே என்ற பீதி.

கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் பலன்


கூடவில்லை.
பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தேவன்
விரும்பவில்லை. அனுமன் வந்தான்; நெருப்பு அவிந்தது.
திசைகளின் சோகம், கரை உடைந்த குதுகல வெறியாயிற்று.
தர்மம் தலை சுற்றியாடியது.

வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழிந்த


பிறகாவது கனவு பலிக்கும் என்று மீசை மறைவில் சிரிப்புத்
துள்ளாடியது.

இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வேலை என்று


திரும்பி விட்டான் கோதமன்.

சீதையும் ராமனும் தன்னை பார்க்க வருவார்கள் என்று


அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம்
ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி
வந்தார்கள்.

ரதத்தைவிட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அநுபவம்


வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு
அநுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும்
மோக்ஷ லாகிரியை ஊட்டியது.

ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெளியே


உலாவச் சென்றுவிட்டான்.

தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் சுரக்கும்


ஒரு பரிவுடன் அகலிகை அவளை உள்ளே அழைத்துச்
சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.

ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு


எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை.
ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம்
இடம் ஏது?

அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை


துடித்து விட்டாள்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டாள்.

"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை,


அமைதியாக.

"அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை;


அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?

ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

இருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர்.

"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று கூறி,


மெதுவாகச் சிரித்தாள் சீதை.

"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை


உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை.
வார்த்தை வறண்டது.

"நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப்


போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்?
நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை.

வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள்


திரும்பிவிட்டார்கள்.

சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே


வந்தாள். அகலிகை வரவில்லை.

ராமன் மனசைச் சுட்டது; காலில் படிந்த தூசி அவனைச்


சுட்டது.

ரதம் உருண்டது; உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது.

கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தான்.


நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன்
கண்ணில் பட்டது.
புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப்
பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை
வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன்
பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கிவிடாவா?

உள்ளே நுழைந்தான்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும்


இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம்,
மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

கோதமன் அவளைத் தழுவினான்.

கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப் பட்டது


அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன
நிம்மதி!

கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச் சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப்


பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டிருந்தது.
அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது.

அவன் தான் கோதமன்.

அவன் துறவியானான்.

புதுமைப்பித்தன் – 3. செல்லம்மாள்
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது;
நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு
ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார்
உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே,
பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.

நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த


பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று
எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த
உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை
மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து
கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார்.
இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது.
அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக்
கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும்
மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன
உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப்
புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.

ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம்


கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு
இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம்
மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச்
செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு
ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே
அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது.


சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை.
அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த
யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது
மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, 'போதி' மரம்
வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப்
பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு
மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.
பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப்
பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள்
யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின்
கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு
ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.

குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும்


வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி
கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு
துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும்
அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம்
பிள்ளையின் பிதா.

பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில்


படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக்
கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப்
படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள்
வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி
வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக்
கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில்
பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து,
அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம்
கிடைத்தது.

பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார்.


சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய
எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க,
பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச்
செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு
சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.

சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து


அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே
அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச்
சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு
உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா
தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.
பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை
பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள்
உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு
ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில்
பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில்
வெளியிலும் படருகிறது.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள்,
முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன
வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை.
தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து,
அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து,
பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல
இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன்
கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர்
கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே
அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை.
இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத்
தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த
தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு
ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத்
தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம்
பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை
என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம்
செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத


மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக்
கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில்
அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை
உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து,
சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி
இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை
ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால்
நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின்
நிலைக்களத்துக்கு வந்துவிடுவார். பிறகு அங்கிருந்து
நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக்
களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார்.
செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான்
அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு
இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது
என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி
அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு
மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம்
உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப்
பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால்
வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில
சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான
பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக்
கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம்
குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக்
கொடுப்பார்.

இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து


வருஷங்களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு
சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற
துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால்
அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த
ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு
எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை
வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப்
பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச்
சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில
சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள
சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட
உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று
சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு,
தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக,
போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு
உபயோகப்பட்டு வந்தது.

அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று


மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது
செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர்
திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான
காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப்
போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன்
புழைக்கடைக்குச் சென்றாள்.

"இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ.


வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே" என்று நடைப்படியைத்
தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை
எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச்
சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து,
நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை
விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு
தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக்
கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி
நடந்தார்.

அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப்


பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின்
அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.

செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள்


இரவு, நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது,
"வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும்.
ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது
நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும்
எடுத்துக்கிட்டு வரணும்" என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன.
அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி
கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி
சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப்
பட்டிரா.

"அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம்


புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி
நினைக்கணும்?" என்றார்.

"அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு


வளி பண்ணுவாக!" என்று அவகாச அவசியத்தை
விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை
முதலாளிப் பிள்ளையைத்தான்.

"தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே;


கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு
என்னவாம்?" என்று கேட்டாள்.

"எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப்


போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி
உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.

வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில்


எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே
தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக்
கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம்
எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து
சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய
மூலையில் வைத்தார்.

"என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு


வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே
எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703
எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன்
கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா" என்ற
முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில்
இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு,
பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் -
என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு
லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம்
பிள்ளை.

மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம்


தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி,
மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு
செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி
நடந்தார்.

நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை


இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில்
வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார்.
தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக்
கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல்
அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.

பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து


கொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி இருப்பாள். நாளியாகலே...'
என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த
நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி
விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத்
திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம்
அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட
வைத்தது.

முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள்


புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து
இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை
பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த
நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம்
பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப்
பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும்
சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல்
ஓடிக்கொண்டிருந்தது.

நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார்.


போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது.
உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி
இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.

சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால்


கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள்
நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை
நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த
மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப்
பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி
வந்தார்.

சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை


ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார்.
கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை
உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு,
கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார்.
பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப்
பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார்.
பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும்
நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம்
இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை
மூக்கருகில் பிடித்தார்.

முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக


இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க
வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.

இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத்


தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள்.
உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும்
மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை
மாதிரி அழுதுகொண்டே, "தண்ணி..." என்று கேட்டாள்
செல்லம்மாள்.

"இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ" என்று


சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க
முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.

பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட


சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.

செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள்.


எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல
அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.

"நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச்


சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு
இருப்பா?" என்றாள்.

பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில்


சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத்
தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில்
சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில்
சொன்னால் போதும்.

திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக்


கொண்டு, "அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம்.
அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்...
துரோகி! துரோகி..." என்று உச்ச ஸ்தாயியில் கத்திக்
கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம்
பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில்
நனைத்து நெற்றியில் இட்டார்.

செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள்.


எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை.
"அம்மா, அம்மா... நீ எப்போ வந்தே?... தந்தி
கொடுத்தாங்களா...?" என்றாள்.
"ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு
எப்படி இருக்கிறது?" என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக
நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள்
ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல்
வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை
தொடர்ந்து ஏற்படும்.

"அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா ... இவுங்க


இப்படித்தாம்மா... என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக்
கடைக்குப் போயிடுதாக... எப்ப ஊருக்குப் போகலாம்?... யாரு
எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?...
இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக் கட்டிப்
போடாதிய... மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப்
போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான்
உங்களை என்ன செஞ்சேன்?... கொஞ்சம் அவுத்துவிட
மாட்டியளா?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு
வந்திடுதேன்... அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."

மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.

வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று


நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. 'இவளை இப்படியே
தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?'

மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.

நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம்


பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.

அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும்


துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு
உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு
நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன்
என்ற ஒரு மலைப்பு.
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச்
சரிந்து படுத்தாள்.

என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு


ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த
பிரமநாயகம் பிள்ளை, "என்ன வேண்டும்?" என்று
கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன்,
சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள்
மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள்.
முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி
அகன்றது.

பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக்


கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று
தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக்
கோவை செய்ய முயன்றாள்.

"தலையை வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.

"மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது" என்று


சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.

"மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு;


காலையில் சரியாகப் போய்விடும்" என்றார்.
"உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை
வறட்டுது; தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.

"ஏந்திரியாதே; விளப்போறே" என்று கொண்டே முதுகைத்


தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத்
தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி
கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.

"பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு


நல்லது" என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி
அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக்
கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு
மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும்,
"உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?" என்றாள்.

"நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா


ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார்
பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது;
பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.

பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல்


கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, "முருகா" என்று
கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது.
உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று
உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக்
கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம்
மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத்
தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.

பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத்


தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள்,
வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில்
காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல்
பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது.
உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக
மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள்
ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக்


கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச்
சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம்
சென்றார்.

அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில்


இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து
எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக்
கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே
ஏறிட்டுப் பார்த்தாள்.
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல
இருக்கே" என்றார் பிரமநாயகம் பிள்ளை.

"மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா


இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை"
என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச்
சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.

"அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத்


தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி
எடுத்துத் தரட்டுமா?" என்றார்.

"வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான்


போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள் செல்லம்மாள்.

"நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த


கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது."

"ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம்


இல்லாமெப்போகுது" என்று சொல்லிக் கொண்டே சுருட்டி
வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.

மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை


ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று
பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.

"பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு


விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே"
என்றாள்.

அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக்


கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில்
கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.

பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற


அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில்
வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன்
தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.

பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு,


"பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே"
என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக்
கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக்
கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு
கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.

"அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்"


என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம்
எடுத்துவந்து தந்தார்.

காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக


ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு
மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க
என்ன சாப்பிட்டிய?" என்றாள்.

"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ


காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப்
போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்" என்றார்.

"வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்.


எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக.
புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு
இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.

"புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக்


குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக்
கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து
போச்சுப் போலே!" என்று எழுந்தார்.

"அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க


சாப்பிடுங்களேன்" என்றாள் செல்லம்மாள்.
வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை,
பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி
ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்.
இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில்
செல்லம்மாளைக் காணவில்லை.

அடுப்பங்கரையில் 'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம்


கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து
உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும் காதுலே
ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று
குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.

வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய


காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை
மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து
கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய்
மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக்
கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை
ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள்.

"போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர்


வந்திருக்கிறார். ஏந்திரி" என்று அவளைக் கையைப்
பிடித்துத் தூக்கினார்.
"இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்."

"நீ ஏந்திரி" என்று சொல்லிக்கொண்டே வெந்து


கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி
எடுத்து அகற்றினார்.

"நீங்க போங்க. நானே வருதேன்" என்று குலைந்த


உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின்
தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.

வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச்


சொல்லிக் கவனித்தான்.
"அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு
நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே
இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால்
கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும்
மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி
நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால்.
மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே
கூடாது. ஐயா, மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத்
தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை
மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள்
கழிஞ்சு வருகிறேன்" என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய்
வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

"பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப்


புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன
காச்சக்காரியா? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக்
கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம்
வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது" என்றாள்
செல்லம்மாள்.

இந்தச் சமயத்தில் வெளியில், "ஐயா, ஐயா!" என்று ஒரு


குரல் கேட்டது.

"என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு


விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே;
நேத்துத் தப்பினது மறு பிழைப்பு; நாளைக்கு முடிஞ்சா
வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு
காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத்
தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு
இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று
கூட்டிக்கொண்டு வா" என்று அனுப்பினார்.

"என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே


இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ
வாங்கிக்கிட்டு வாருங்க" என்றாள் செல்லம்மாள்.

"அடெடே! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை


எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு.
வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்" என்று மூட்டையை
எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.

"விடியன்னையே மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு


நெனச்சேன்; மறந்தே போச்சு" என்று கூறிக்கொண்டே
மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப்
பார்த்தாள்.

"எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன


வெலையாம்?" என்றாள்.

"அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ"


என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில்
வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச்
சுவரோத்தில் வைத்தார்.

"கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு,


பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான்
இப்பவே சொல்லிப் பிட்டேன்" என்று கண்டிப்புப் பண்ணினாள்
செல்லம்மாள்.

வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச்


சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை
முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும்,
சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும்
முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.

அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து


செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று.
க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக்
கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக, அடுப்பில்
கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட,
பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி
அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால்
அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து
விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள்
நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல்
தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை
தூக்க ஆரம்பித்தன.

அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும்


பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று
மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக்
கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம்
அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும்
கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.

"எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு


வைத்தியனைப் பார்த்தால் தேவலை" என்றாள் செல்லம்மாள்.

"உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது.


சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக்
கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப்
போயிடும்" என்றார் பிரமநாயகம் பிள்ளை.

அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது.


"கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி
வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன்.
குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம்
எழுதட்டா?" என்றார்.

"எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா


தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா?
கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா?
இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்" என்று
சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள்.

"இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே


ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்" என்று
அடுப்பங்கரைக்குச் சென்றார்.

அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர்


இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது
பால்காரனும் வந்தான்.

கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில்


வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி
வைத்துவிட்டு, "நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு
வருகிறேன்" என்று வெளியே புறப்பட்டார்.

"சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது" என்று


மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள்.
அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம்
பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.

அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது.


எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில்
அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும்
வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல
மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும் விலாசமும்
தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி
எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர்


கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில்
மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி
வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.

அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை


எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக்
கழுவி, அவளைத் தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார்.

வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத்


தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால்
கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை.
மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும்
தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து
மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.

அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. "ஸார்!


உள்ளே யார் இருக்கிறது?" என்று குரல் கொடுத்துக்
கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே
வந்தார்.
"நல்ல சமயத்தில் வந்தீர்களையா!" என்று
சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம்
பிள்ளை.

"இப்போ என்ன?" என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து


கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார்.
பல் கிட்டிவிட்டிருந்தது.

"ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க;


ஊசி குத்தணும்" என்றார்.

பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும்


நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு
ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக
மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு
மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஸ்பிரிட்'
விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில்
சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப்
பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று
கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச்
சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி
சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு
விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.

டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப்


பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி
இருந்தால் கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம்
பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக்
கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு,
"தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால்
பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில்
வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா;
ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே
பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.

முன் தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?" என்று


விநயமாகக் கேட்க, "இப்பொழுது ஒன்றும்
சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து
என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு
பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா
கொடுங்கள்" என்று சொல்லிக் கொண்டே வண்டியில்
ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின்
மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு
உள்ளே திரும்பினார்.

செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து


உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.

அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது.


மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப்
பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது
உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு
அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது.
கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.

"தூ தூ" என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால்


தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.

சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக்


கொண்டிருந்தாள்.

"உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை.


என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே" என்று கடிந்து
கொண்டாள்.
"நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?"
என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத்
தடவிக்கொடுத்தார்.

"நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத்


தடபுடல் பண்ணாதிய" என்று சொல்லிவிட்டுக் கண்ணை
மூடினாள்.

"உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித்


தோணுது; காலைப் பிடிக்கட்டா?" என்று மெதுவாகத்
தடவிக்கொடுத்தார்.

"அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே


ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப்
பக்கத்திலேயே இருங்க" என்று அவர் கையைச் செல்லம்மாள்
தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை
மூடிக் கொண்டாள்.

சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "அம்மையெப்


பாக்கணும் போல இருக்கு" என்று கண்களைத் திறக்காமலே
சொன்னாள்.

"நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது;


அதுக்கென்ன பிரமாதம்?" என்றார் பிள்ளை. அவருக்குப்
பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?

"ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால்


போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க
கடைக்குப் போங்க" என்றாள் செல்லம்மாள்.

"நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ"


என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது
கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக்
கொடுத்தார்.

"வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி"


என்றாள்.
"வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே
வாந்தியெடுத்தது?" என்றார். மெதுவாக அவள் கைகள்
இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த
முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம்
பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை
நக்கிக் கொண்டாள்.

"நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது"


என்றாள் மறுபடியும்.

"எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே" என்று


நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.

ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான்


தூங்குதேன்" என்றாள் செல்லம்மாள்.

"இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச் சென்றார்


பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது.
அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன
எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து
சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக்
கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக்
குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.

"செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.

"செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன்.


குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார்.

"ஆகட்டும்" என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.

சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார்.


இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை
அசைத்துவிட்டாள்.

"ஏன், வெளக்கை..." - விக்கலுடன் உடல் குலுங்கியது.


நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.

அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக்


கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.

பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப்


பார்த்தார்.

உடல்தான் இருந்தது.

வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில்


விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள்
செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப்
பிடுங்குவனபோல் இருந்தன.

சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக்


கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல்
ஆவது ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம்
கொடுத்துப் பார்த்தார்.

அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண்


இமையில் சொட்டியது.

அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார்.


குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார்.
கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில்
தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக்
கேட்டது.

உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும்


பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.

உடலை எடுத்து வந்தார். "செல்லம்மாள் இவ்வளவு


கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!" என்று
எண்ணமிட்டார்.

தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.

கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து


வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக்
குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால்
அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை
வைத்து உடலைத் துவட்டினார்.

மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில்


கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை
அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும்
குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை
ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு
வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து
வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார்.

செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான


பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து
நின்றார்.

கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது.


வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.

ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.

வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த


நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர்
கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது.
சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக்
கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ
உதயமாகவோ முடியாமல் தவித்தது.

அருகில், "ஐயா!" என்றான் முனிசாமி.


"முதலாளி குடுத்தாங்க" என்று நோட்டுகளை நீட்டினான்;
"அம்மாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.

"அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை


வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக்
குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு.
வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா" என்றார்.

நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல்


தொனிக்கவில்லை.

பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.

பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார்.


கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.

அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு


உட்கார்ந்தது.

பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல்


விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே
இருந்தார்.

அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம்


தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட
வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு
பிலாக்கணம் தொடுத்தது.
கல்கி – 1. கேதாரியின் தாயார்
சமீபத்தில் பத்திரிகைகளில் 'அம்மாமி அப்பளாம்' என்னும்
விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி
வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது.
அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண
சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது
உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேருமென்று
யார் நினைத்தார்கள்? இது போன்ற சம்பவங்களை எண்ணும்போது
தான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின்
வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது.

கேதாரி நோய்ப்பட்டு கிடந்தபோது அவனை வந்து பரிசோதனை


செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. ஆயினும்
அவர்களில் யாரும் அவனுடைய நோயின் மூல காரணத்தைக்
கண்டுபிடிக்கவில்லை. ஏதேதோ வியாதியென்றும், காம்ளிகேஷன்
என்றும் சொல்லி வைத்தியம் செய்தார்கள். கேதாரி
பிழைக்கவுமில்லை. அவனுடைய சிநேகிதர்களையும்
உறவினர்களையும் பரிதவிக்க விட்டு இறந்துதான் போனான். இதுபற்றி
அச்சமயம் டாக்டர்களுக்கே ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது.
"என்ன வைத்திய சாஸ்திரம்? என்ன டாக்டர்கள்? எல்லாம் வெறும்
படாடோ பந்தான்" என்று ஜனங்கள் சொன்னார்கள்.

கேதாரியின் விஷயத்தில் டாக்டர்கள் பேரிலாவது வைத்திய


சாஸ்திரத்தின் மேலாவது யாதொரு தவறுமில்லை யென்பதை
வெளிப்படுத்துவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். அவனுடைய
உடல் நோயின் வேர் அவனுடைய மனோ வியாதியில் இருந்தது
என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல
வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதும்
டாக்டர்களுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய அருமைத்
தாயாருக்கும், இளம் மனைவிக்கும் கூட அது தெரியாத விஷயமே.
அவனுடைய அத்தியந்த நண்பனான நான் ஒருவனே அந்த
இரகசியத்தை அறிந்தவன். கேதாரி மரணமடைந்த புதிதில்
அதைப்பற்றிப் பேசவோ எழுதவோ முடியாதபடி துக்கத்தில்
ஆழ்ந்திருந்தேன். இப்போது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது.
என்னுடைய ஆத்ம சிநேகிதனுக்கு நான் செய்யவேண்டிய
கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன்.

ஆமாம்; ரொம்பவும் துயரமான கதைதான். நம்முன் சிலர் சோக


ரசத்தை அநுபவிப்பதற்காக நாடகங்களுக்குப் போவோம்; ஆனால்
வாழ்க்கையில் நம் கண் முன் நிகழும் சோக சம்பவங்களைப் பார்க்கப்
பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்வோம். அத்தகையவர்கள்
கேதாரியின் கதையைப் படிக்காமல் விடுவதே நல்லது!

கேதாரிக்கு அவனுடைய தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது.


அவன் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த போது அவனுடைய
தந்தை வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். ஒரு
நாடகக்காரியின் மையலில் அகப்பட்டு அவர் தம்முடைய இளம்
மனைவியையும், மூன்று வயதுப் பிள்ளையையும் அநாதையாக
விட்டுவிட்டுப் போனார். இந்த விவரமெல்லாம் எங்களுக்கு வெகு நாள்
வரையில் தெரியாது. கேதாரிக்குக் கலியாணப் பேச்சு நடந்த
போதுதான் அவனுடைய தாயார் சொல்லித் தெரிந்து கொண்டோம்.

பெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி


சொன்னபோது, "நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான், அம்மா! ஒரு
மூளிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும்
பண்ணிக் கொள்கிறேன்" என்றான் கேதாரி.

"பின், என்ன, அம்மாமி உங்களுக்கு? இந்தக் கலியுகத்தில் இந்த


மாதிரி பிள்ளை இன்னொருவனைக் காணவே முடியாது. நீங்களே
முடிவு செய்து விடுங்களேன்" என்றேன் நான்.

ஆனால் பாகீரதி அம்மாமி கேட்கவில்லை. "கேதாரி போய்ப்


பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது" என்று சொன்னால்தான்
கலியாணம் நிச்சயம் பண்ணுவேன் என்று சொன்னாள்.
அப்போதுதான் கேதாரியின் தகப்பனாரின் பேச்சை அவள் எடுத்து
நான் கேட்டது.

"இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம்


கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான் குடும்பங்களில்
கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார்
எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத்
திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும்
அடைத்துக் கொண்டு தான் வந்தது. நாற்பது நாள் படுத்த
படுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆற அமர யோசித்துப்
பார்த்ததில் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று.
என்னைக் கலியாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே
இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால்
பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கலியாணம் செய்து
வைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருஷம் பல்லைக் கடித்துக்
கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி
வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்."

இப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்த போது, நானும்


பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும்
அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு
வாட்ட சாட்டமாய் ஆள் நன்றாயிருப்பாராம். ரொம்ப நன்றாய்ப்
பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபாலாபீஸில் அவருக்குக்
குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர் பெற்ற
நாடகக்காரி அவ்வூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு
நாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு ரொம்ப உடம்பு
சரிப்படவில்லையென்றும், அன்று அநேகமாய் நாடகம்
நடைபெறாதென்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு
நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா
நாடகங்களும் நெட்டுரு; பாட்டுக்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே இவர்
போய் "நான் ராஜபார்ட் போட்டுக் கொள்கிறேன்" என்றார். சில
பாட்டுக்களும் பாடிக் காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம்
நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார்
நடித்தார். அம்மாமிக்குக் கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம்
திருமங்கலத்தில் அந்தக் கம்பெனி இருந்தவரையில்
அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜீனாமாக் கொடுத்து
விட்டாரென்றும், தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப்
போகிறாளென்றும் ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் பாகீரதி
அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடகக்
கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள்
சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனி
இலங்கைக்குப் போயிற்றென்றும், அங்கே போய் இவரும் சேர்ந்து
கொண்டாரென்றும் பின்னால் தகவல் தெரிய வந்தது.

அதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை.


மேற்படி நாடகக் கம்பெனியார் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு
முதலிய வெளி நாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகத்
தெரிந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டொரு தடவை
சென்னை நகருக்கும் வந்திருந்தனராம். ஆனால் பாகீரதி அம்மாமி
அதற்குள் அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டு விட்டாள்.

இப்போது அவளுடைய ஆசை முழுவதையும் கேதாரியின் மேல்


வைத்திருந்தாள்.

சுந்தரராமையர் ஓடிப் போன செய்தியறிந்து, பாகீரதி அம்மாமியின்


தாய் தந்தையர்கள் திருமங்கலத்துக்கு வந்து அவளைத் தங்களுடன்
கிராமத்துக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் சொற்பக்
குடித்தனக்காரர்கள். பாகீரதியைத் தவிர அவர்களுக்கு வேறு
பிள்ளைக் குட்டி கிடையாது. கிராமத்தில் ஐந்தாறு வருஷம்
இருந்தார்கள். அப்புறம் கேதாரியைப் படிக்க வைப்பதற்காகத்
திருச்சிராப்பள்ளிக்குக் குடி வந்தார்கள்.

நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. அப்போது


திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதம் ஸ்டோ ரில் நானும் என்
பெற்றோர்களும் குடியிருந்தோம். நான் முதலாவது பாரத்தில் படித்துக்
கொண்டிருந்தேன். ஸ்டோ ரில் எங்களுக்கு எதிர் வீடு சில நாளாகப்
பூட்டிக் கிடந்தது. அன்றைக்கு யாரோ புதிதாகக் குடி வரப்
போகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆவலுடன் அவர்களுடைய
வரவை எதிர்பார்த்தேன். ஒரு தாத்தா, ஒரு பாட்டி, ஒரு அம்மாமி, ஒரு
பையன் - இவர்கள் பழைய தகரப் பெட்டிகளுடனும் மூட்டை
முடிச்சுகளுடனும் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பையன் கையில்
தங்கக் காப்புப் போட்டுக் கொண்டும், தலை பின்னிக் கொண்டும்,
குல்லா வைத்துக் கொண்டும் இருந்ததை நான் வியப்புடன் பார்த்துக்
கொண்டு நின்றது நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

அந்தப் பையன் தான் கேதாரி. அவனுடன் முதல் தடவை பேசின


உடனேயே எனக்குப் பிடித்துப் போயிற்று. பட்டிக்காட்டிலிருந்து
வந்தவனாதலால் எதைப் பார்த்தாலும் அவனுக்கு
ஆச்சரியமாயிருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதைக்
கண்டு இடியிடியென்று சிரித்தான். காலையில் தாயுமான
ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் கொண்டு வருவதற்காகப் போன
யானையை அவன் பார்த்த பார்வையில் விழி பிதுங்கிவிடும் போல்
இருந்தது. ஓயாமல் அது என்ன, இது என்ன என்று கேட்டுக்
கொண்டேயிருப்பான். நானும் சலிக்காமல் பதில் சொல்லி வந்தேன்.

நான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பில் கேதாரியைச்


சேர்த்தார்கள். நாங்கள் இணைபிரியாத சிநேகிதர்கள் ஆனோம்.
நிஜத்தைச் சொல்லிவிடுகிறேனே; படிப்பிலே நான் கொஞ்சம் சுமார்
தான். மற்றபடி விளையாட்டு, வம்பு முதலியவற்றில் நான் தான் முதல்.
அவனோ படிப்பில் முதல்; மற்றவற்றில் ரொம்ப சுமார். எல்லாப்
பள்ளிக்கூடங்களிலும் இந்த மாதிரி படிப்பில் கெட்டிக்காரனாயுள்ள
பையனைப் பரிகாசம் பண்ணி உபத்திரவப்படுத்துவதற்குச் சில
போக்கிரிப் பையன்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள்
பள்ளிக்கூடத்தில் எனக்குப் பயந்து கேதாரியின் வழிக்கு ஒருவரும்
போவதில்லை.

அவர்கள் திருச்சிக்கு வந்து மூன்று வருஷத்துக்கெல்லாம், தாத்தா


காலமானார். அதற்குள் அவர் கையிலிருந்த பணமும் அநேகமாகச்
செலவழிந்து போயிற்று. கேதாரிக்கு உபகாரச் சம்பளம்
கிடைத்திருந்தபடியால், பள்ளிக்கூடச் செலவு கிடையாது. ஊரில்
விளைந்து வரும் நெல் சாப்பாட்டுக்குப் போதும். ஆனால் வீட்டு
வாடகைக்கும் மேல் செலவுக்கும் என்ன செய்வது? அம்மாமியும்
பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தார்கள்.

அதென்னவோ, சில சமயம் முன்பின் தெரியாதவர்களிடம் கூட


நமக்குப் பிரியம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை முதன் முதல் நாம்
பார்க்கும் வேளையைப் பொருத்ததோ என்னவோ தெரியவில்லை.
பாகீரதி அம்மாமியிடம் என் சொந்தத் தாயாரைவிட அதிகப் பிரியம்
எனக்கு ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தார்கள் அவளை 'வாழா
வெட்டி' என்று அவமதிப்பாய்ப் பேசுவதுண்டு. இதெல்லாம் அவளிடம்
எனக்கிருந்த அபிமானத்தை அதிகமேயாக்கிற்று. என்
பள்ளிக்கூடத்துச் சிநேகிதர்களுக்கெல்லாம் சொல்லி, பாகீரதி
அம்மாமியின் அப்பளங்களை நானே ஏராளமாய் விற்றுக்
கொடுத்திருக்கிறேன்.

பாட்டியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு இறந்து போய்விட்டாள்.


தாயும் பிள்ளையும் அதே வீட்டில் இருந்து வந்தார்கள். கேதாரி
அவனுடைய தாயார் அவன் விஷயத்தில் பட்ட கஷ்டத்துக்கெல்லாம்
பாத்திரமாய் நடந்து கொண்டான். ஒவ்வொரு வகுப்பிலும்
பரீட்சையில் முதன்மையாகத் தேறி வந்து கடைசியில் பி.ஏ.
பரீட்சையில் சென்னை இராஜதானியிலேயே முதலாவதாகத்
தேறினான். அந்தச் சந்தோஷத்தில், நான் அவ்வருஷம் 'கோட்' அடித்த
வெட்கத்தைக் கூட அதிகமாய் உணரவில்லை.

கேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனதிலிருந்தே பெண்ணைப்


பெற்றவர்கள் அவனுடைய தாயாரைப் பிய்த்து எடுத்த
வண்ணமாயிருந்தார்கள். அந்த நிலைமையில் வேறு
யாராயிருந்தாலும் "அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது" என்று
எண்ணி, ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின் கழுத்தில்
கட்டியிருப்பார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி, வாழ்க்கை என்னும்
பள்ளிக்கூடத்தில் மிகவும் கடினமான பாடங்களைப் படித்து அறிவு
பெற்றவள். "பி.ஏ. முடிகிற வரையில் கல்யாணப் பேச்சே கூடாது" என்று
பிடிவாதமாய்ச் சொல்லி வந்தாள்.

ஆகவே, இப்போது கேதாரி, பி.ஏ. தேறியதும் கலியாணத்தைப் பற்றி


யோசிக்க வேண்டியதாயிற்று. மணிபுரம் பண்ணையார் என்று
கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் அப்போது எங்கள் காலேஜ்
பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்தார். ஒவ்வொரு
வருஷமும், கேதாரி வகுப்பில் முதலாவதாகத் தேறி முதற்பரிசுகள்
பெற்று வருவதைக் கவனித்திருந்தார். பையனுடைய முகவெட்டு,
நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆகவே
தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுப்பதென்று பேசத்
தொடங்கினார். பையனைக் கேட்டதில் அம்மாவைக் கேட்க
வேண்டுமென்று சொல்லிவிட்டான். பாகீரதி அம்மாமி இவ்வளவு
பெரிய சம்பந்தம் கிடைக்கப் போகிறதை எண்ணியபோது பிரமித்துப்
போய்விட்டாள். ஆனாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள்.
இன்னொரு ஸ்திரீயாயிருந்தால், "ஐயாயிரம் வேணும்; பத்தாயிரம்
வேணும்" என்று கேட்டிருப்பார்கள். பாகீரதி அம்மாமியோ, "பணங்காசு
ஒன்றும் வேண்டாம்; கலியாணம் சீர்வகையரா எல்லாம் உங்கள்
இஷ்டம். பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்க வைப்பதற்கு
மட்டும் ஒப்புக் கொண்டால் போதும்" என்றாள்.

இந்த மாதிரி எண்ணம் அம்மாமிக்கு உண்டென்று எனக்கு


முன்னாலேயே தெரியும். ஏனென்றால், ஐ.ஸி.எஸ்.ஸுக்குப் போவது
பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு நாள் என்னை அவள் கேட்டது
உண்டு. அக்கம் பக்கத்தில் எல்லாரும் அதிசயப்பட்டார்கள்; சிலர்
அம்மாமியை வையக்கூட வைதார்கள். "பார்! என்ன நெஞ்சழுத்தம்
இவளுக்கு? ஒரு பிள்ளை; அதைச் சீமைக்கு அனுப்புகிறாளே?"
என்றார்கள்.

பண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப்பற்று உள்ளவர். ஆகையால்


முதலில் தயங்கினார். கடைசியில், பெரிய சாஸ்திரிகள் தீக்ஷிதர்கள்
எல்லாருடனும் யோசித்து, "சாஸ்திரங்களில் சமுத்திரப்
பிரயாணத்துக்குப் பிராயச்சித்தம் இருக்கிறது" என்று
உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். எனக்கென்னவோ, "ஒரு
ஸ்திரீக்குள்ள மனோதிடம் நமக்கு வேண்டாமா?" என்ற
எண்ணத்தினாலேதான் அவர் சம்மதித்தார் என்று தோன்றிற்று.

இதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண்ணைப்


பார்த்துவிட்டு வரும்படி அம்மாமி சொன்னது. நானும் கூடப்
போயிருந்தேன். கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை
எவ்வளவு நியாயமானது என்று விளங்கிற்று. கிளி என்றால் கிளி,
பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினாலு வயது
இருக்கலாம்.

அந்தக் கதையையெல்லாம் இப்போது வளர்ப்பதில் பயன் என்ன?


கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி
இங்கிலாந்துக்குப் பிரயாணமானான். பம்பாய் வரையில் நான் சென்று
கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன்.

பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்க வேண்டும்


என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்தி அழைத்தார்கள். அம்மாமி
கேட்கவில்லை. அவளுடைய சித்தி ஒருத்தி இரண்டு குழந்தைகளை
அநாதையாய் விட்டு விட்டு, இறந்து போய்விட்டாள். அவர்களைக்
கிராமத்திலிருந்து தருவித்துத் தனியாக ஒரு வீட்டில் ஜாகை
ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் பராமரித்து வந்தாள். ஆனால்
சம்பந்திகளின் கௌரவத்தையும் மற்ற விஷயங்களையும் உத்தேசித்து
அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள்.

கேதாரி சீமைக்குப் போய் எழெட்டு மாதங்களுக்குப் பிறகு,


மணிபுரம் மிராசுதார் வீட்டிலிருந்து ஆள் வந்து என்னைக்
கூப்பிட்டான். அவ்வாறே போயிருந்தேன். நரசிம்மய்யர் ஒரு கடிதத்தை
என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது இரங்கூனிலிருந்து
சுந்தரராமய்யர் என்பவரால் எழுதப்பட்டது. தம்முடைய புதல்வனுக்கு
இவர்கள் பெண்ணைக் கொடுத்திருப்பதாக அறிந்து
சந்தோஷப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சமீபத்தில்
இரங்கூனுக்கு வந்து ஒருவர் மூலம் சகல விவரமும் தெரிந்து
கொண்டதாகவும், தாம் இப்போது திரும்பவும் ஜன்மதேசம் வந்து
எல்லாரையும் பார்க்க விரும்புகிறபடியால் அதற்குப் பிரயாணச்
செலவுக்காகப் பணம் அனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தது.
என்ன, சங்கரா! இது நிஜமாயிருக்குமா?" என்று நரசிம்மய்யர்
கேட்டார்.

"நிஜமாயிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும்


அம்மாமியைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்" என்று
சொல்லிவிட்டுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்றேன்.

அம்மாமியிடம் கடிதத்தைக் கொடுத்தேன். அவள் ஒருவேளை


அழுது கண்ணீர் விட்டுத் தடபுடல் செய்வாளோ என்று நான்
பயந்ததெல்லாம் வீண் எண்ணம் என்று தெரிந்தது. தன்னுடைய ஏக
புதல்வனைச் சீமைக்கு அனுப்பி வைக்கும்படி நெஞ்சைக் கல்லாகச்
செய்து கொண்டவள் அல்லவா? கடிதத்தைப் படித்து விட்டு "இது
அவருடைய கையெழுத்துத்தான்" என்றாள். பிறகு மௌனமாய்
யோசனையில் ஆழ்ந்தவள் போல் இருந்தாள். இரண்டொரு தடவை
பெருமூச்சு மட்டும் வந்தது. ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.

"அம்மாமி! நரசிம்மய்யர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்"


என்றேன்.

அம்மாமி அவசரமாய் உள்ளே எழுந்து போய் பெட்டியிலிருந்த பண


நோட்டுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். எண்பது ரூபாய்
இருந்தது.

"சங்கரா! நான் அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இது.


அவருக்கு என் பேரால் இதை அனுப்பு. இந்த வீட்டு விலாசம்
கொடுத்து இங்கேயே நேரே வந்து சேரும்படி எழுது" என்றாள்.

அம்மாமியின் குரல் கொஞ்சம் கம்மியிருந்தது; அவ்வளவுதான்.


எனக்கோ கண்ணில் ஜலம் வந்தது.

மேல் சம்பவங்களைப் பற்றி நினைத்தாலே எனக்கு நெஞ்சு


படபடவென்று அடித்துக் கொள்கிறது; கைகூட நடுங்குகிறது.

பத்து நாளைக்கெல்லாம் மணியார்டர் திரும்பி வந்துவிட்டது.


மணியார்டரை எந்த விலாசத்துக்கு அனுப்பினோமோ, அந்த
வீட்டிலிருந்து ஒருவர் மணியார்டர் வருவதற்கு முன் சுந்தரராமைய்யர்
காலஞ்சென்று விட்டதாகவும், அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் செய்யப்
பட்டதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.

பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காகப்


பாகீரதி அம்மாள் துக்கம் காத்தாள். பத்தாம் நாள், பிராமண
சாதியில் வழக்கமான அலங்கோலங்கள் அம்மாமிக்கும்
செய்யப்பட்டது.
கேதாரிக்கு இதைப்பற்றி ஒன்றும் எழுதக்கூடாதென்றும், திரும்பி
ஊருக்கு வந்த பிறகு தெரிவித்தால் போதுமென்றும், அம்மாமி
கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

காலம் எப்படியோ சென்றது. நானும் மலையைக் கல்லி எலியைப்


பிடித்தது போல பி.ஏ. பாஸ் செய்து, நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே
உபாத்தியாயர் ஆனேன். கேதாரி சீமையிலிருந்து திரும்பி வரும்
காலம் சமீபித்தது.

எதிர்பார்த்தது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐ.ஸி.எஸ்.


தேறினான். அவனுடைய தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும்,
மற்ற விவரங்களைப் பற்றியும் அவனைத் திடுக்கிடச் செய்யாத
விதத்தில் கடிதம் எழுதி, அது பம்பாயில் அவன் கையில்
கிடைக்கும்படி அனுப்பியிருந்தோம். ஆனால் அவனுக்கிருந்த
அவசரத்தில், கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்து விட்டானாதலால்,
மேற்படி கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிய
வந்தது.

அவன் வரும் விவரம் தந்தியில் தெரிவித்திருந்தானாதலால் வீட்டு


வாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தைக்
கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு அவசரமாய் உள்ளே
போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மேல் அவன்
பார்வை விழவில்லையோ, அல்லது விழுந்தும் அடையாளம்
தெரியவில்லையோ, நான் அறியேன். அவன் பாட்டுக்கு "அம்மா!
அம்மா!' என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.

அம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை முதன் முதலாக


அப்போதுதான் நான் பார்த்தேன்.

"அடே கேதாரி! என்னடா இது? அம்மா இதோ இருக்கிறாள்;


எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே!" என்றேன்.

கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து


மொட்டைத் தலையை முக்காடால் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த
பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.

"ஐயோ! அம்மா!..." என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டுத்


தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக்
கொண்டான்.
*****

கேதாரிக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது.


திருச்சிராப்பள்ளியில் அவனை வந்து பார்க்காத டாக்டர் இல்லை;
அவனுக்குச் செய்யாத சிகிச்சை பாக்கி கிடையாது. ஒன்றும்
பயன்படவில்லை.

அவனுடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்ததைப் போல்


உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரே நினைவு, ஒரே
ஞாபகந்தான். நான் தனியாய் அவனுடன் இருக்க நேர்ந்து விட்டால்
போதும்; உடனே ஆரம்பித்து விடுவான்.

"சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப்


போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன்
செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்!
அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!"
என்பான்.

"இதோ பார், சங்கர்! என் தாயார் ரொம்ப புத்திசாலி, இந்த


முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உட்பட்டிருக்க மாட்டாள். எல்லாம்
என்னால் வந்ததுதான். நான் பெரிய இடத்தில் - வைதிகக்
குடுக்கைகளின் வீட்டில் - கலியாணம் செய்து கொண்டேன்
அல்லவா? அவர்களுடைய ஏச்சுக்குப் பயந்துதான் அம்மா இதர்குச்
சம்மதித்திருக்க வேண்டும்" என்பான்.

ஒரு நாள் வாசலில் இரண்டு கூலி வேலைக்காரர்கள் பேசிக்


கொண்டு போனார்கள். ஒருவன், "அண்ணே! இன்று காலை புறப்படும்
போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அது தான் வேலை
அகப்படவில்லை" என்று சொன்னது கேதாரியின் காதில்
விழுந்துவிட்டது.

"சங்கர்! கேட்டாயா? என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல


பீடைகளும் நீங்குமென்று சொல்வார்களடா! இப்போது அவளும்
அபசகுனந்தானே?" என்று புலம்பினான்.

எவ்வளவோ சமாதானம் சொல்லித் தேற்றினேன். ஆனாலும் அவன்


அந்தப் பேச்சை மட்டும் விடுவதில்லை.
"இதைக் கேள், சங்கர்! உத்தியோகமும் ஆயிற்று. மண்ணும்
ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தேனானால் ஒரே ஒரு
காரியந்தான் செய்யப் போகிறேன். பிராமண ஸ்திரீகள், புருஷனை
இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தையொழிக்க ஒரு
பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம்
நம்முடைய சாதிக்கு மட்டும் வேண்டாம்" என்றான்.

ஆனால் ஐ.ஸி.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த மாதிரி


அற்பமான காரியங்களில் இறங்குவது யமதர்மனுக்கே விருப்பமில்லை
போலிருக்கிறது. கேதாரி உடல் குணமடையாமலே, சீமையிலிருந்து
வந்த இருபத்தோராம் நாள் காலஞ் சென்றான்.

இந்த பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்றே


ஒன்று தான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய
புகைப்படம் ஒன்று இருந்தால் கொண்டு தரும்படி எனக்குச்
சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்
ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை
மட்டும் தனியாக எடுக்கச் செய்து சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு
போனேன். அப்போது அவர்களுடைய வீட்டில் தற்செயலாய்க்
கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும்
என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளைக் "கிளி" என்று
சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை
மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்!

கல்கி – 2. வீணை பவானி

இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள்


சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட
வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது
வானம் ஏதோ சொல்ல முடியாத துயரத்துடன் கண்ணீர் விடுவது
போல் தோன்றியது.

இந்தக் காட்சியைப் பார்க்கச் சகியாமல் வீட்டுக்குள்ளே வந்தேன்.


என் உள்ளமும் சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்தது. இருட்டடிப்பு
உபத்திரவத்தை முன்னிட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்தி
விட்டுப் பிரகாசமாக விளக்கைப் போட்டுக் கொண்டேன்.
மனத்திலுள்ள சோர்வை மாற்றுவதற்காகக் கதைப் புத்தகம்
படிக்கலாமென்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.

சோர்வு, சோர்வு என்று சொல்லுகிறேன். அப்படி என்ன சோர்வு


வந்தது என்று நேயர்கள் அறிய விரும்பலாம். சோர்வுக்குக்
காரணங்களா இல்லை? உலக நிலைமையிலும் தேச நிலைமையிலும்
மனச்சோர்வுக்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. போதாதற்கு
அன்று சாயங்காலம் தினசரி பத்திரிகையில் வந்த ஒரு செய்தி
மனத்தில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உற்சாகத்தையும் போக்கடித்து
விட்டது.

அது கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் இடையில் நேர்ந்த ரயில்


விபத்தைப் பற்றிய செய்திதான். நேற்று ராத்திரி எழும்பூரிலிருந்து
கிளம்பிய போட்மெயில் அங்கே பெரும் விபத்துக்கு உள்ளாயிற்று.
காரணம் நன்றாகத் தெரியவில்லை. நகரில் பலவித வதந்திகள்
உலவின. திடீரென்று பெருகிய மழை வெள்ளத்தினால் தண்டவாளம்
பெயர்ந்து விட்டதாக உத்தியோக முறையில் செய்தி. அந்த ரயிலில்
பெரிய உத்தியோகஸ்தர் யாரோ போவதாகத் தெரிந்து
தண்டவாளத்தை யாரோ வேண்டுமென்று பிடுங்கிப் போட்டதாக ஒரு
வதந்தி. விபத்தில் செத்துப் போனவர்களின் கணக்கைப் பற்றி உலவிய
வதந்திகளுக்கு அளவே இல்லை.

"நூறு பேர் செத்துப் போனார்கள். இருநூறு பேர் செத்துப்


போனார்கள்" என்றெல்லாம் கேள்விப்பட்டபோது கூட என்மனம்
அவ்வளவு கலங்கிவிடவில்லை. ஆனால், பத்திரிகையில் இறந்து
போனவர்களின் பெயர்களை வரிசை வரிசையாகப் படித்து வந்த
போது அதிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்ததும் - ரயில் வண்டி
கவிழ்ந்து என் மேலேயே விழுந்தது போலிருந்தது.

வாசகர்களில் பலருக்கு ஐயம்பேட்டை கந்தப்பன் பெயர்


ஞாபகமிருக்கலாம். "திருவழுந்தூர் சிவக்கொழுந்து" கதையை
எனக்குச் சொன்ன தவுல் வித்வான் கந்தப்பன் தான். ரயில் விபத்தில்
இறந்து போனவர்களின் ஜாபிதாவில் கந்தப்பப் பிள்ளையின் பெயரைப்
பார்த்தவுடனேதான் எனக்கு அவ்வளவு மன வேதனை உண்டாயிற்று.
அதென்னமோ பகவான் நம்மை அவ்விதம் படைத்து விட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் எரிமலை விபத்தில் இருபதினாயிரம் பேர் செத்துப்
போனார்கள் என்று அறிந்தால், நமக்கு ஒரு உணர்ச்சியும்
உண்டாவதில்லை. நமக்குத் தெரிந்த மனிதர்களில் ஒருவர்
மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டால் நம்மை என்னமோ
செய்கிறது. "ஆஹா! ஐயம்பேட்டை கந்தப்பனுக்கு இந்த முடிவா
ஏற்படவேண்டும்? எப்பேர்ப்பட்ட மனுஷன்? என்ன தேசபக்தி?
எத்தகைய நல்லொழுக்கம்? பழகியவர்களிடத்தில் தான் எவ்வளவு
அபிமானம்? என்ன ரஸிகத்தனம்?" என்று எண்ணமிட்டுக்
கொண்டிருக்கும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும்
சத்தம் கேட்டது. "இந்த நேரத்தில் யார் வருகிறது?" என்று சிறிது
வெறுப்புடன் எண்ணினேன். என் உள்ளம் அப்போதிருந்த
நிலைமையில், யாரையாவது பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ
பிடிக்கவில்லை.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம் வாசற் கதவு திறந்தது. அடால்ப்


ஹிட்லரோ, ஜெனரல் டோஜோவோ வாசற்படியில் வந்து நின்றிருந்தால்
கூட, எனக்கு அவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்காது. அங்கு நின்றவர்
வேறு யாருமில்லை; ஐயம்பேட்டை கந்தப்பன் தான்.

"பயப்பட வேண்டாம்! நான் தான் வந்திருக்கிறேன். என்னுடைய


ஆவி இல்லை" என்று கந்தப்பனுடைய குரலைக் கேட்டதும்,
என்னுடைய திகைப்பு மாறி அளவிறந்த சந்தோஷம் உண்டாயிற்று.

"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவருடைய கையைப் பிடித்து


உள்ளே அழைத்து கொண்டு போய் உட்கார வைத்தேன்.

"என்ன சேதி? என்ன சமாசாரம்? ரயில் விபத்திலிருந்து எப்படிப்


பிழைத்து வந்தீர்கள்? இப்போதுதான் பத்திரிகையில் உங்கள்
பெயரைப் படித்து விட்டுக் கதிதலங்கிப் போனேன். அதெப்படி தப்புச்
செய்தி அனுப்பினார்கள்? வெட்கக் கேடாக அல்லவா இருக்கிறது?"
என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.

"நல்லவேளை, நான் போகவே இல்லை; நேற்று இரவு வண்டியில்


எனக்கு ஸீட் ரிசர்வ் செய்திருந்தேன். தவுல் முதலிய
சாமான்களையும் முன்னால் கொண்டு போய் ஏற்றியாகி விட்டது.
நான் ஸ்டேஷனுக்கு வருவதில் தான் இரண்டு நிமிஷம்
தாமதமாயிற்று. நல்ல காலந்தான்."
"ரயிலில் உங்கள் பெயர் கட்டித் தொங்கியதாக்கும். அதையும்
தவுலையும் பார்த்துவிட்டுப் பத்திரிகை நிருபர்கள் உங்களையும்
சேர்த்து வைகுண்டத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது."

"அப்படித்தான் இருக்க வேண்டும்."

"உங்கள் வீட்டில் எல்லோரும் கவலைப்பட மாட்டார்களா?


இன்றைக்கு ஏன் ஊருக்குப் போகவில்லை" என்று கேட்டேன்.

"ஊருக்குத் தந்தி கொடுத்து விட்டேன். உங்களைக் கொஞ்சம்


பயமுறுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"என்னையா பயமுறுத்தப் பார்த்தீர்கள்?"

"ஆமாம்; மகுடபதி கதையில் வெறுமனேயாவது


பெரியண்ணனுடைய ஆவி வந்து நின்றதாகச் சொல்லி
எங்களையெல்லாம் பயமுறுத்தினீர்களல்லவா? அதற்குப் பழிக்குப்
பழியாக..."

"அதெல்லாம் கதையிலே நடக்கும். நிஜத்தில் நடக்குமா?" என்றேன்.

"நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு" என்றார் ஐயம்பேட்டை கந்தப்பன்.

"என்ன? அவ்வளவு கண்டிப்பாகச் சாப்புக் கொடுக்கிறீர்களே?"

"ஆமாம்; வாழ்க்கையில் அந்த மாதிரி நடந்திருக்கிறது."

"எந்த மாதிரி?"

"செத்துப் போனதாக நினைத்திருந்த மனுஷர் திடீரென்று


தோன்றியதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது."

"என்ன ஆபத்து?"

"உயிருக்கே ஆபத்து!"

ஏதோ ஒரு ரஸமான சம்பவத்தைச் சொல்லத்தான் ஐயம்பேட்டை


கந்தப்பன் வந்திருக்கிறார் என்று அப்போது தெரிந்து கொண்டேன்.
"சொல்லுங்கள், கேட்கிறேன்; என் மனது இன்றைக்கெல்லாம்
சரியாகவேயில்லை. ரொம்பவும் உற்சாகக் குறைவாயிருக்கிறது.
உங்களுடைய கதையைக் கேட்டாலாவது."

"என்னுடைய கதை உற்சாகந் தருவதல்ல; ரொம்பவும் சோகமானது.


இன்னொரு நாளைக்கு வேண்டுமானால்..."

"கூடவே கூடாது. மனத்தில் உற்சாகமில்லாத போது தான் சோகக்


கதை கேட்க வேணும். சொல்லுங்கள்" என்றேன்.

ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளை எப்போதும் ஒரு கேள்வியுடனே


தான் கதையை ஆரம்பிப்பது வழக்கம். அவ்விதமே இப்போதும்,
தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "பூந்தோட்டம்
பவானி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதா?" என்றார்.

அந்த மாதிரி ஒரு பெயர் ஏதோ பூர்வ ஜன்மத்தில் கேள்விப்பட்டது


மாதிரி எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. கிராமபோன் பிளேட் கூட
ஒன்றிரண்டு கேட்டிருக்கும் நினைவு வந்தது. ஆனால் நான்
ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் சொல்லும் வரையில் கந்தப்பப்
பிள்ளை காத்திருக்கவில்லை. மேலும் சொல்லத் தொடங்கினார்.

"முப்பது வருஷத்துக்கு முன்னால் 'பூந்தோட்டம் பவானி' என்னும்


பெயர் மிகவும் பிரசித்தமாயிருந்தது. 'வீணை பவானி' என்றும்
சொல்வதுண்டு. வீணையை வைத்துக் கொண்டு பாடினாளானால்,
ஸரஸ்வதி தேவியே அவதாரம் எடுத்து வந்திருப்பது போல் தான்
தோன்றும். அவளுடைய குரலுக்கு உபமானம் சொல்ல
வேண்டுமானால், வீணைத் தந்தியை அவள் மீட்டும் போது
உண்டாகும் ரீங்கார நாதத்தைத்தான் சொல்லலாம். அந்த வீணைத்
தந்தியின் ரீங்காரத்துகோ அவளுடைய குரலைத் தவிர வேறு
உபமானம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான ஜனங்கள்
கூடியுள்ள சபைகளில் அவளுடைய கச்சேரிகள் நடப்பதுண்டு.
நிசப்தமாய் இருந்து கேட்பார்கள்; பரவசப்படுவார்கள்; கோவில்களிலே
முக்கியமாகத் திருவாரூர்க் கோவில் - உற்சவ சமயங்களில்
அவளுடைய கச்சேரி அடிக்கடி நடக்கும். இந்தக் காலத்தில் வரவர
நாதஸ்திகம் அதிகமாகி வருகிறது. சுயமரியாதை இயக்கம், அது
இது என்று உலகமே கெட்டுப் போய் வருகிறது. போதாதற்கு சினிமா
வேறு வந்து சேர்ந்து விட்டது. உற்சவங்களைச் சிரத்தையாக
நடத்துவோரும் இல்லை. அந்தக் காலத்தில் ஜனங்களுக்கெல்லாம்
கோவில் திருவிழா - இம்மாதிரி காரியங்களிலே தான் கொண்டாட்டம்.
ஒரு கோவிலில் உற்சவம் என்றால் சுற்று வட்டாரத்தில் இருபது மைல்
தூரத்திலுள்ள ஜனங்கள் எல்லாம் திரண்டு வந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்தில் திருக்கல்யாண மண்டபத்தில்
சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். ஒவ்வொரு கச்சேரிக்கும்
அபரிதமான கூட்டம் சேரும். அதிலும் பூந்தோட்டம் பவானியின்
கச்சேரி என்றால் கேட்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் பெரிய
கூட்டத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் 'பூந்தோட்டம்
பவானியின் கச்சேரிக்குக் கூடுகிறார் போல் கூடியிருக்கிறதே!'
என்பார்கள். அப்படி ஜனக் கூட்டம் கூடியிருக்கும் இடத்தில்
கசகசவென்று எவ்வளவு சந்தடியிருக்கும்? ஆனால் பவானியின்
விரல்கள் வீணையின் தந்திகளைத் தொட வேண்டியதுதான்;
முகத்தைச் சிறிது நிமிர்த்திக் கொண்டு அவளுடைய இனிய
குரலைக் காட்டிச் சுருதி கூட்ட வேண்டியது தான்; அவ்வளவு
இரைச்சலும் ஒரு நொடியில் 'கப்' என்று அடங்கிவிடும்! இரைச்சல்
ஓடுவதும், பவானியின் இனிய குரல் ஒலியும் வீணைத் தந்தியின்
நாதமும் சேர்ந்து கிளம்புவதும், ஒரு இந்திரஜாலம் போல் தோன்றும்.

பவானியின் கச்சேரி கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், நான்


அதை விடுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி
கிடைப்பதும் உண்டு. கல்யாணங்களிலோ, கோவில் உற்சவங்களிலோ,
பவானியின் கச்சேரிகள் நடக்குமிடங்களில், நானும் என்னுடைய
தொழிலுக்காகப் போய்ச் சேரும்படி அடிக்கடி நேரும். பவானியின்
கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி
கண்ணில் ஜலம் வந்து விடும். பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து
பரிகசிக்கப் போகிறார்களே என்று ஏதோ தலை வலிக்கிற
பாவனையாகத் தரையை நோக்கிக் குனிந்து கொள்வேன்.
கண்ணீருக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அது தான்
எனக்குத் தெரியாது. ஆனந்தக் கண்ணீர் தானா அல்லது இவ்வளவு
அற்புதமான சங்கீதம் நீடித்து நிற்க வேண்டுமே என்ற அநுதாபத்தில்
பெருகிய கண்ணீரா? ஜனங்கள் பேசிக் கொண்டு போவார்கள். "இது
எங்கேடா நிலைத்து நிற்கப் போகிறது? இப்படிப் பாடினால் உலகம்
தாங்குமா!" என்று கவலைப்படுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு நான்
பவானியைப் போய்ப் பார்ப்பேன். "தங்கச்சி! அம்மாவை திருஷ்டி சுற்றிப்
போடச் சொல்லு!" என்பேன். பவானியின் தாயாரும் பெண்ணை
எத்தனையோ கண்ணும் கருத்துமாய்த்தான் காப்பாற்றி வந்தாள்.
ஆனாலும், கடைசியில் திருஷ்டி பட்டே விட்டது.

பவானியின் தாயாருக்குப் பூந்தோட்டம் பிரஹதாம்பாள் என்று


பெயர். அவள் பரம்பரையான பணக்காரி. அதோடு அவளுடைய
குணத்திலும் பிரசித்தி பெற்றவள். ஒரு பெரிய மனிதரோடு மட்டும்
சிநேகம் வைத்துக் கொண்டுடிருந்து, அவருக்கு உண்மையான
தர்மபத்தினியாக நடந்து கொண்டிருந்தாள். அவன் காலஞ்சென்ற
பிறகு அவள் பகவானுடைய பக்தியில் சிந்தையைச் செலுத்தி
வந்தாள்.
தாயாருடைய சுபாவம் பெண்ணிடமும் இருந்தது. நெற்றியில்
திவ்வியமாக விபூதியைப் பூசிக் கொண்டு தான் கச்சேரிக்கு வந்து
உட்காருவாள். பக்திரஸமுள்ள பாட்டுக்களைத்தான் பாடுவாள்.
வீட்டிலே தினம் ஸ்நானம், பூஜை எல்லாம் பிரமாதமாக நடக்கும்.
இதனாலெல்லாம் பவானிக்கு ஞானப் பைத்தியம் பிடித்திருப்பதாகப்
பலர் பேசினார்கள்.

பிரஹதாம்பாளுக்குத் தன் பெண்ணை ஒரு யோக்கிமான நல்ல


பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க
வேண்டுமென்று விருப்பம். ஆனால் பவானியோ தான் ஆண்டாளைப்
போல் கன்னியாகவே இருந்து கடவுளின் பாதத்தை அடையப்
போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இவர்கள் இரண்டு
பேருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. எல்லாம் ஒரு மனுஷன்
பராபரியாய் யாரிடமோ சொல்லிக் கொண்டு போன ஒரு வார்த்தையில்
அடிபட்டுப் போய்விட்டது.

ஒரு தடவை திருவாரூர்க் கோவிலில் கச்சேரி செய்து விட்டுப்


பவானி வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொள்ளப் போகும்
சமயத்தில், ஒரு மனுஷன் தன் சிநேகிதனுடன் பேசிக்கொண்டு போன
ஒரு வார்த்தை அவள் காதில் தற்செயலாக விழுந்தது. "பாட்டு, பாட்டு
என்கிறாயே, பிரமாதமாய் பாட்டு இருக்கட்டும், அப்பா! அவள்
முகத்திலே சொட்டுகிற களையைச் சொல்லு!" என்றான், அந்த
மனிதன. இதைக் கேட்டதும் பவானிக்குச் சிரிப்பு வந்தது. கலீரென்று
சிரித்துவிட்டாள். யார் சிரிக்கிறதென்று அந்த மனுஷன் திரும்பிப்
பார்க்கவே பக்கத்தில் பவானி நிற்பதைக் கண்டு வெட்கிப் போனான்.
பவானியும் சட்டென்று வண்டியில் ஏறிக் கொண்டாள்.

விதி என்று சொல்லுகிறார்களே! இது தான் விதி! அவ்வளவு


கூட்டத்திற்கு நடுவிலே, இருட்டிலே அந்த மனுஷன் அந்த
வார்த்தையைப் பவானி வண்டி ஏறுகிற இடத்திலே வந்து
சொல்வானேன்? அது இவள் காதில் விழுவானேன்? பவானி
வீட்டுக்குப் போனதும், அவள் தாயாரிடம் "அம்மா! நீ ஏன்
இன்றைக்கு நான் கச்சேரிக்குப் போன போது கைக்குட்டை
வைக்கவில்லை?" என்று கேட்டாளாம். அவள் தாயார் "இதென்ன
கேள்வி?" என்று சும்மாயிருக்கவே, "மண்டபத்திலே இறுக்கம்
அசாத்தியம், ஓயாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது"
என்றாளாம். அதோடு விடவில்லை. "கேட்டுக்கோ, அம்மா! என்
முகத்திலே வியர்வை கொட்டிக் கொண்டே இருந்ததா? அதைப்
பார்த்து விட்டு ஒரு மனுஷர், 'களை சொட்டுகிறது' என்று சொல்லிக்
கொண்டு போனார் அம்மா" என்று கூறி இடி இடி என்று சிரித்தாளாம்.
இதையெல்லாம் பவானியும், அவள் தாயாரும் எனக்கு அடிக்கடிச்
சொல்வார்கள். இப்படி வேடிக்கையும் சிரிப்புமாக ஆரம்பித்த
காரியம்தான் பிற்பாடு பெரிய வினையாக முடிந்தது.
அந்த மனுஷரும் எனக்குத் தெரிந்தவர்தான். மன்னார்குடிக்குப்
பக்கத்தில் தும்பை வனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்த
ஊரில் அவர் மிராசுதார்; கோபாலசாமி என்று பெயர். இளம் வயது
தான். அவருடைய கல்யாணத்துக்குக் கூட நான் தவுல்
வாசித்திருக்கிறேன். கல்யாணம் நடந்து அப்போது ஐந்தாறு
வருஷத்துக்கு மேல் இருக்கும். அவருக்குக் குழந்தைகளும் உண்டு.

இந்த மனுஷருக்கும் பவானிக்குந்தான் விதி வசத்தினால் தொடர்பு


ஏற்பட்டது. அவர்கள் மறுபடியும் எப்படிச் சந்தித்தார்கள், சிநேகம் எப்படி
வளர்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விதி இருக்கும்
போது எப்படியாவது வழியும் ஏற்பட்டு விடுகிறது. பவானியின் ஞானப்
பைத்தியம் நீங்கி விட்டது என்ற பிரஸ்தாபம் மட்டும் எங்கும் பரவியது.
அதோடு தும்பைவனம் கோபாலசாமி முதலியாரின் பெயரும்
தஞ்சாவூர் ஜில்லாவெங்கும் அடிபட்டது.

இந்தச் செய்தியெல்லாம் எனக்கு அவ்வளவு நிம்மதி


அளிக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயந்தான் உங்களுக்குத்
தெரியுமே? இம்மாதிரி ஒரு ஜாதியும், இந்த மாதிரி ஒரு தொழிலும்
கூடவே கூடாது என்பதுதான். 'கடைசியில் இப்படித்தானா ஆக
வேண்டும்? யாரையாவது ஒழுங்காகக் கல்யாணம் செய்து
கொண்டிருக்கக் கூடாதா?' என்று எண்ணினேன். கோபாலசாமி
முதலியாரின் மனைவி, மக்களை நினைத்தும் வருத்தப்பட்டேன்.
இதையெல்லாவற்றையும் விட இந்த சிநேகத்தினால் பவானியின்
தெய்வீக சங்கீதத்துக்குக் கேடு வராமலிருக்க வேண்டுமே என்ற
கவலையும் உண்டாயிற்று.

நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை - கோபாலசாமி


முதலியார் நல்ல சங்கீத ரஸிகர். அதோடு பவானியின் பாட்டைக்
குறித்து அவருக்கு ரொம்பப் பெருமையும் இருந்தது. என்னிடம் ஒரு
சமயம் அவர் சொன்னது நன்றாய் ஞாபகமிருக்கிறது. "பவானியை
மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை;
கல்யாணியையும், மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப்
படைத்திருக்கிறார்! நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப்
போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி
ராகங்களாகப் போய்விடும்!" என்று கோபாலசாமி முதலியார்
சொன்னபோது, "இருக்கலாம்; ஆனால் அதை நீங்களும் நானும்
பார்க்க மாட்டோ ம். நமக்குப் பிறகு பவானி ரொம்ப காலம் பாடிக்
கொண்டிருக்கும்" என்றேன். ஆனால் வருங்காலத்தையறியும்
சக்தியைப் பகவான் நமக்குக் கொடுக்கவில்லையே?
கொடுத்திருந்தால் உலகத்திலே துன்பம் ஏது? இன்பந்தான் ஏது?
ஆமாம் பவானியின் சங்கீதத்தைப் பற்றியல்லவா சொல்லிக்
கொண்டு வந்தேன்? அவளுடைய சங்கீதம் மேலும் மேலும்
பிரமாதமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்னுடைய பழகிய
காதுக்கு அதில் என்னவெல்லாமோ, அதிசயமான மாறுதல்கள்
தோன்றின. ஒரு கச்சேரியைப் போல் இன்னொரு கச்சேரி இராது.
ஒருநாள் அவளுடைய பாட்டில் குதூகலம் பொங்கித் ததும்பும். காலை
வேளையில் உதய சூரியனை வரவேற்கும் புள்ளினங்களின்
குரலிலுள்ள ஆனந்தமும், பௌர்ணமியன்று வெண்ணிலவைக்
கண்டு பொங்கும் கடலின் ஆரவார உற்சாகமும் தொனிக்கும்.
இன்னொரு நாள் கச்சேரியிலோ, அவளுடைய பாட்டைக் கேட்கும்
போது உள்ளமானது காரணந் தெரியாத சோகத்தை அடையும்.
தாயைப் பிரிந்த குழந்தையின் தீனக்குரலையும், பகவானைப் பிரிந்த
பக்தனின் தாபக் கதறலையும் அவளுடைய பாட்டிலே கேட்பது போல்
இருக்கும். அவள் வீணை வாசிக்கும்போது கையிலுள்ள
வாத்தியத்தின் கம்பிகளைத்தான் மீட்டுகிறாளா, அல்லது
கேட்பவர்களின் இருதய வீணையின் கம்பியைத்தான்
மீட்டுகிறாளா? என்ற சந்தேகம் தோன்றும்.

முதலில், இதெல்லாம் எனக்கு விந்தையாயிருந்தது; விளங்காத


மர்மமாயிருந்தது. அப்புறம் அப்புறம், ஒருவாறு விஷயம் புரிந்தது.

அன்பு, காதல் என்று சொல்கிறார்களே, ஸ்வாமி, ரொம்ப


அதிசயமான காரியம். காதலில் மனிதர்கள் அடைவது என்ன?
துன்பமா? இன்பமா? சொல்ல முடியாத துயரமா? அளவிட முடியாத
ஆனந்தமா?

பவானியையும் தும்பை வனம் முதலியாரையும் பற்றி நான்


கேள்விப்பட்ட விஷயங்கள் இம்மாதிரி சந்தேகங்களையெல்லாம்
உண்டாக்கின. அவர்கள் சந்தோஷமாயிருந்த காலம் அதிகமா,
சண்டை போட்டுக் கொண்டு வேதனையில் முழுகியிருந்த நாட்கள்
அதிகமா என்று சொல்ல முடியாமலிருந்தது. 'இந்தப் பெண்ணுக்கு
ஏதோ பிடித்திருக்கிறது தம்பி!' என்று அவள் தாயார் சொன்னாள். சில
சமயம் பவானி எல்லார் மேலும் எரிந்து எரிந்து விழுவாளாம். சின்னச்
சின்னக் காரியத்துக்கெல்லாம் ரகளை செய்வாளாம். கூச்சல்
போடுவாளாம். முகத்தைக் கூட அலம்பிக் கொள்ளாமல் பிரமஹத்தி
பிடித்தது போல் உட்கார்ந்திருப்பாளாம். இன்னும் சில சமயம் இதற்கு
நேர்மாறாக இருக்குமாம். பிரமாதமாக அலங்காரம் செய்து
கொள்வாளாம். ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருப்பாளாம்.
இதையெல்லாம் அறிந்த போது, பவானியின் சங்கீதத்தில் தொனித்த
மாறுதல்களின் காரணத்தை ஒருவாறு அறிந்தேன். 'யாராவது
மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்லலாமா' என்று
பவானியின் தாயார் கேட்டதற்கு 'மந்திரமும் வேண்டாம் மாயமும்
வேண்டாம், நாளடைவில் எல்லாம் தானே சரியாய்ப் போய்விடும்' என்று
சொல்லிவிட்டு வந்தேன்.

இரண்டு மூன்று வருஷங்கள் சென்றன. இந்தக் காலத்தில் தும்பை


வனம் முதலியாருடைய சொந்தக் காரியங்கள் ரொம்பவும் சீர்கெட்டு
வந்தன. அவருக்கு விரோதிகள் அதிகமாகி வந்தார்கள். பவானி
விஷயத்தில் எத்தனையோ பணக்காரப் பிரபுக்களுக்கு அபிப்பிராயம்
இருந்திருக்குமென்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே?
அவர்களெல்லாம் கோபாலசாமி முதலியாரைத் தீர்த்துக் கட்டி
விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள். முதலில் ஒரு
கோவில் பஞ்சாயத்து சம்பந்தமாகக் கேஸ் ஏற்பட்டது. அந்தக் கோவில்
தர்மகர்த்தாக்கள் மூன்று பேரில் கோபாலசாமி முதலியார் ஒருவர்.
மற்ற இரண்டு பேரும் இவரைத் தள்ளிவிட்டு காரியங்களை
நடத்தியதுடன், கோவில் உற்சவத்தின் போது இவரை
அவமரியாதையாக நடத்தி விட்டார்கள். கோபாலசாமிக்குக் கோபம்
வந்து கேஸ் போட்டார். இதிலிருந்து சிவில் கேஸுகளும் கிரிமினல்
கேஸுகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. அக்கம் பக்கத்து
மிராசுதார்கள், பிரபுக்கள் எல்லாரும் கோபாலசாமியைத்
தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக்
கொண்டு, பிடிவாதமாக வேலை செய்தார்கள். கோபாலசாமிக்கு
நாளுக்கு நாள் கடன் முற்றிக் கொண்டு வந்தது. வருஷா வருஷம்
நிலத்தை விற்றுக் கொண்டு வந்தார்.

ஒரு தடவை தும்பைவனம் கோவில் உற்சவத்துக்கு நான் போயிருந்த


சமயத்தில், முதலியார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் சம்சாரம்
ஐயம்பேட்டைக்குப் பக்கத்து ஊர்ப் பெண்தான். அந்த அம்மாளை
எனக்கு நன்றாகத் தெரியும். பாவம்! அவள் ஒரே துக்கத்தில்
ஆழ்ந்திருந்தாள். "கந்தப்பா! இவ்வளவும் அந்தப் பூந்தோட்டத்து
மூதேவியால் தான் வந்தது!" என்று சொல்லி அழுதாள். எனக்கு மனது
ரொம்பவும் கஷ்டப்பட்டது. இந்த மாதிரி ஒரு ஜாதியை நம் தேசத்தில்
எதற்காக ஏற்படுத்தினார்கள் என்று எண்ணி மனம் நொந்தேன்.
அடுத்த தடவை திருவாரூருக்குப் போகும் போது என் கோபத்தை
பவானியின் மேல் காட்டி விடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், அங்கே போய்ப் பவானியின் நிலையைப் பார்த்தபோது, என்
கோபமெல்லாம் பறந்து போய் விட்டது. சோகமே உருவெடுத்தவள்
போலிருந்தாள். "என்னால் இப்படியெல்லாம் கஷ்டம் அவருக்கு வந்து
விட்டதே!" என்று சொல்லிச் சொல்லி உருகினாள். அவளுக்கு
சமாதானமாக நான், "நீ என்ன அம்மா செய்வாய்? உன் பேரில் என்ன
தப்பு?" என்று திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

"அண்ணே! அவரை அவ்விடத்து நிலம் வீடு வாசல்


எல்லாவற்றுக்கும் தலை முழுகி விட்டு இங்கேயே வந்து விடும்படிச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேட்க மாட்டேனென்கிறார்.
நீயாவது சொல்லேன்; தினம் பொழுது விடிந்தால் கோர்ட்டுக்குப்
போவதே வேலையாகி விட்டதே, என்னத்திற்காக இந்த மாதிரி
வம்புக்கும் தும்புக்கும் போக வேண்டும்? நாலு குடும்பத்தைக்
காப்பாற்றுவதற்கு வேண்டிய சொத்து இங்கே இருக்கிறதே?
இதையெல்லாம் யார் கட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?"
என்றாள்.

"அது நடக்கிற காரியமா தங்கச்சி! அவர் ஆண் பிள்ளை


இல்லையா? ரோஸம் இராதா? வீண் வம்புக்கு இழுக்கிறவர்களுக்குப்
பயந்து கொண்டு ஊரை விட்டு வந்து விடுவாரா? அதுவும் இங்கே?
அவர் சம்மதித்தாலும் சம்சாரம் குழந்தைகள் இருக்கிறார்களே?"
என்றேன்.

பிறகு பவானி, அவருடைய சம்சாரத்தையும் குழந்தைகளையும்


பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

பவானியின் தாயாரிடம் பேசினேன். "ஏன் அக்கா என்னத்துக்காக


நமக்கு இந்தக் கெட்டப் பெயர். பவானியினாலே ஒரு பெரிய குடும்பம்
அழிந்து போகிறது என்று இந்த ஜில்லா முழுவதும் பேசிக்
கொள்கிறார்களே?" என்றேன்.

"யார் என்னத்தையாவது சொல்லட்டும் தம்பி; அவர்கள் இரண்டு


பேரையும் பிரிப்பது மகாபாவம். பிரித்தால் என் மகள் உயிரை வைத்துக்
கொண்டிருக்க மாட்டாள்" என்றாள்.
"இப்படி எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அக்கா! நாம்
பார்த்ததில்லையா!" என்றேன் நான்.

"பவானியின் சமாச்சாரம் உனக்குத் தெரியாது தம்பி" என்றாள்.

பிறகு, "இப்பொழுது அவர்களுக்குள் எப்படியிருக்கிறது?


முன்னேயெல்லாம் போல் கோபதாபம் உண்டா?" என்று கேட்டேன்.

பவானியின் குணமே அடியோடு மாறிவிட்டதென்றும் அவள்


சாந்தமே உருக் கொண்டவளாகி விட்டாள் என்றும் தெரிந்தது.
இதற்கு நேர்மாறாகக் கோபாலசாமி முதலியாருக்குக் கோபதாபங்கள்
அதிகமாகி வந்தனவாம். அதோடு, அடிக்கடி இல்லாத பொல்லாத
சந்தேகங்கள் அவருக்குத் தோன்றி வந்தனவாம். "இது என்ன மனித
சுபாவம்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பவானி எதற்காக
அவரிடம் அன்பு வைக்க வேண்டும்? நிர்ப்பந்தம், கட்டாயம் ஏதாவது
உண்டா? தன் மனமொப்பி அவரையே தெய்வம் என்று எண்ணி
இருப்பவள் மேல் ஒரு மனிதன் சந்தேகப்படுவதென்றால்? எனக்கு
ரொம்பக் கோபமாயும் வெறுப்பாயுமிருந்தது. நமக்கென்னவென்று
பேசாமல் போய் விட்டேன்.
இதற்கப்புறம் ஏறக்குறைய ஒரு வருஷ காலம் ஏதேதோ
அசௌகரியங்களினால் நான் திருவாரூர்ப் பக்கம் போகவில்லை.
பவானியின் தாயார் இறந்து போனாள் என்று தெரிந்ததும், துக்கம்
விசாரிப்பதற்குப் போயிருந்தேன். அதற்கப்புறம் அங்கே போவதையே
நிறுத்தி விட்டேன். "நமக்கு என்னத்திற்கு வம்பு?" என்ற
எண்ணந்தான் காரணம்.

தும்பைவனம் முதலியாரின் காரியங்கள் வரவரச் சீர்கெட்டு


வருகின்றன என்று மட்டும் அடிக்கடி காதில் விழுந்து
கொண்டிருந்தது. சென்னைப் பட்டிணத்தில் ஹைகோர்ட்டில்
அவருக்கு ஒரு பெரிய கேஸ் நடந்து வந்தது. அதில் தோற்றுப்
போனால், ஆள் திவால்தான் என்று சொன்னார்கள்.

இப்படியிருக்கும் போது தான் ஒருநாள் அந்தப் பயங்கரமான ரயில்


விபத்தைப் பற்றி செய்தி வந்தது. விழுப்புரத்துக்கும், கூடலூருக்கும்
நடுவில் ரயில் கவிழ்ந்துவிட்டது. மூன்று வண்டிகள் அடியோடு
நாசமாயின. நாற்பது ஐம்பது பேருக்கு மேல் செத்துப் போனார்கள்
என்று தெரிந்தது. அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பத்திரிகை
படிப்பதில் ஆசை உண்டு. அதுவும் இந்தப் பயங்கர ரயில் விபத்து நடந்த
சமயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் படிப்பதற்காக, வெகு
ஆவலுடன் சுதேச மித்திரன் பத்திரிகையை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன். விபத்து நடந்த மறுநாள், பத்திரிகையில் இறந்து
போனவர்களின் பெயர் விவர ஜாபிதா வந்திருந்தது. அதில்
தும்பைவனம் முதலியாரின் பெயரைப் பார்த்ததும், எனக்கு எப்படி
இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ள
வேண்டியதுதான். உடனே எனக்குப் பூந்தோட்டம் பவானியின்
கதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோ, அந்தப் பெண் ஒரு
வருஷத்திற்குள்ளே தாயாரையும் இழந்து, ஆசை நாயகனையும்
இழந்து, அநாதையாய்ப் போய் விட்டாளே? இனிமேல், அவளுடைய
வாழ்க்கை எப்படியாகுமோ?

கோபாலசாமி முதலியாரின் சம்சாரம், குழந்தைகளின் ஞாபகமும்


வந்தது. ஐயோ பாவம்! அவர்களுடைய சொத்தெல்லாம் கோர்ட்டு
விவகாரங்களில் தொலைந்து போயிருக்கும். சாப்பாட்டுக்கே
கஷ்டப்படும்படியான நிலைமை வந்து விடுமோ என்னமோ?

ஒரு வாரத்துக்கெல்லாம் மன்னார்குடிக்குப் போக


வேண்டியிருந்தது. அங்கிருந்து அப்படியே தும்பை வனத்துக்குப்
போனேன். முதலியாரின் மனைவி பட்டத் துக்கத்தையும் அழுத
அழுகையையும் பார்க்கச் சகிக்கவில்லை. தகப்பனாரை இழந்த
குழந்தைகளைப் பார்க்கவும் பரிதாபமாய்த்தானிருந்தது. நல்ல
வேளையாக ஊரிலிருந்து அவர்களுடைய தாத்தாவும் பாட்டியும்
வந்திருந்தார்கள்! குழந்தைகளை அவர்கள் பார்த்துக்
கொண்டதுடன், பெண்ணுக்கும் தேறுதல் கூறினார்கள். "என்ன
செய்வதடி, அம்மா? உன் தலையெழுத்து அப்படியிருந்தது.
குழந்தைகளுக்காக நீ உயிரை வைத்துக் கொண்டிருக்க
வேண்டுமோ, இல்லையோ?" என்று சொல்லித் தேற்றி, பட்டினி
கிடக்காமல் அரை வயிறாவது சாப்பிடும்படியும்
பலவந்தப்படுத்தினார்கள். நானும் எனக்குத் தெரிந்தவரையில்
ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

இவர்களைப் பார்த்த பிறகு பவானியையும் அவசியம் பார்க்க


வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று. நேரே திருவாரூருக்குப்
போனேன். அவளுடைய வீட்டுக்குப் போகும்போது, என் மனம்
ரொம்பவும் வேதனைப்பட்டது. ஒரே துக்கசாகரத்தில்
மூழ்கியிருப்பாளே, எப்படி அவளைப் பார்த்துப் பேசுகிறது, எப்படி
ஆறுதல் சொல்கிறது என்று என் மனம் தவித்தது. ஆனால்
வீட்டுக்குள் போய் பவானியைப் பார்த்ததும், ஒருவாறு கவலை
நீங்கிற்று. ஏனெனில், நான் பயத்துடன் எதிர்பார்த்தபடி அவள்
கண்ணீருங் கம்பலையுமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லை.
என்னைக் கண்டதும் அலறி அழவில்லை. சாதாரணமாய்த்தான்
இருந்தாள். "வாருங்க அண்ணே!" என்று ஆர்வத்துடன் என்னை
அழைத்தாள்.

கவலை நீங்கிற்று என்றா சொன்னேன்? ஆமாம்; கவலை நீங்கிற்று


என்பது தான் உண்மை. ஆனால் மனத்திற்குள் பெரும் ஏமாற்றமும்
உண்டாயிற்று. கடைசியில் 'சாதிக்குணம்' என்று உலகம் சொல்வது
சரியாய்ப் போய் விட்டதல்லவா? தாலி கட்டிய மனைவி அங்கே படுகிற
துக்கத்துக்கும், இங்கே இவள் சாதாரணமாய் வந்தவர்களை 'வா'
என்று அழைத்துக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?

அதையெல்லாம் நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.


என்னுடைய பொறுப்பைக் கழித்துக் கொள்வதற்காக, ஏதோ ஆறுதல்
வார்த்தை கூறிவிட்டுக் கிளம்பினேன். கிளம்பும் போது பவானி
"அண்ணே! நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று, அம்மன் சந்நிதியில்
கச்சேரி செய்யப் போகிறேன், நீங்கள் கட்டாயம் வரவேணும்"
என்றாள். எனக்குச் சுருக்கென்று தைத்தது. கச்சேரியா
இதற்குள்ளேயா?

"இந்த வருஷம் கச்சேரி செய்ய வேண்டியதுதானா, தங்கச்சி!


அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளக்கூடாதா?" என்றேன்.

"இல்லே அண்ணே! கச்சேரி செய்வதாக முன்னமே ஒப்புக்


கொண்டு விட்டேன். உற்சவப் பத்திரிகையிலே கூடப் போட்டு
விட்டார்கள். அதைமாற்ற இஷ்டமில்லை" என்றாள்.
எனக்கு அப்போது அவள் மீதும், கோவில் தர்மகர்த்தாக்கள் மீதும்
கூடக் கோபம் வந்தது.

"சௌகரியப்பட்டால் வருகிறேன், தங்கச்சி" என்றேன்.

"அப்படிச் சொல்லக் கூடாது அண்ணே! ஒரு வேளை இது தான்


நான் செய்கிற கடைசிக் கச்சேரியாயிருக்கும். நீங்கள் கட்டாயம் வர
வேண்டும்" என்றாள்.

இதைக் கேட்டதும் என் மனம் உருகிவிட்டது. "ஏனம்மா! அப்படிச்


சொல்கிறாய்? எது எப்படியானாலும் உன் சங்கீதம் மட்டும் வளர
வேண்டும்" என்றேன். பிறகு நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு
அவசியம் வருவதாகச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு
சென்றேன்.

பவானிக்கு வாக்குக் கொடுத்தபடியே நவராத்திரி


வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்குப் போனேன். அவள்
வீட்டுக்கு நான் போனபோது கச்சேரிக்கு அவள் கிளம்புகிற
சமயமாயிருந்தது. பவானியைப் பார்த்ததும் நான் பிரமித்துப்
போய்விட்டேன். அவ்வளவு பிரமாதமாக ஆடை ஆபரண
அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தாள். கல்யாண
மண்டபத்துக்குப் போகும் பெண் மாதிரி தோன்றினாள்.
இயற்கையிலேயே நல்ல ரூபவதி. இப்போது பார்த்தால்,
தேவலோகத்திலிருந்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை
ஆகியவர்களில் ஒருத்தி இறங்கிப் பூலோகத்துக்கு வந்து விட்ட
மாதிரியே இருந்தது. மனதிற்குள் எனக்கு ஏற்பட்ட வேதனையைச்
சொல்லி முடியாது.

என்னைப் பார்த்ததும் பவானி புன்னகையுடன், "அண்ணே! வந்து


விட்டீர்களா" என்றாள்.

எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் "ஆமாம்;


வந்துவிட்டேன் தங்கச்சி!" என்று சாவதானமாகப் பதில் சொன்னேன்.

"அண்ணே! இன்று காலையிலிருந்தே உங்களை நான் எதிர்


பார்த்துக் கொண்டிருந்தேன். போனால் போகட்டும். கச்சேரி
முடிந்ததும் நீங்கள் நேரே இங்கு வரவேணும், ரொம்ப முக்கியமான
காரியம்; தவறக் கூடாது" என்றாள்.

"ஆகட்டும் தங்கச்சி!" என்றேன்.

"உங்கள் தலைமேல் ஆணை! கட்டாயம் வரவேணும்" என்று


சொல்லிவிட்டுப் பவானி வண்டியில் போய் ஏறிக் கொண்டாள்.

பவானி இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதில்லை. 'என்னமோ


விஷயம் இருக்கிறது. எல்லாம் இராத்திரி தெரிந்து போகிறது' என்று
எண்ணிக் கொண்டு கோவிலுக்குப் போனேன்.

என் வாழ்நாளில் நானும் எத்தனையோ சங்கீதக் கச்சேரிகள்


கேட்டிருக்கிறேன். பிரபல வித்துவான்கள், பாடகிகள் எல்லாருடைய
பாட்டையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நவராத்திரி
வெள்ளிக்கிழமையன்று பவானி செய்த கச்சேரியைப் போல்
கேட்டதும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பவானியின் குரல்
அன்று தேனாக இருந்தது. விரல் வீணையின் தந்தியை மீட்டிய
போது அமுதவாரி பெருகிற்று. இதையெல்லாம் விட அன்று
அவளுடைய பாட்டில் இன்னும் ஏதோ ஒன்று இருந்தது! அது
கேட்பவர்களின் இருதயத்தில் ஒரு அதிசயமான இன்ப வேதனையை
உண்டு பண்ணிற்று. சபையில் அன்று ஒரே நிசப்தம். மூச்சு விடும்
சப்தம் கூடக் கேட்கவில்லை. 'ஆஹா', 'பேஷ்', 'சபாஷ்' முதலிய
குரல்களும் இல்லை. எல்லாரும் மந்திரத்தால் கண்டுண்டது போல்,
அந்தத் தெய்வீக சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் பவானி 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'
என்ற திருவாசகத்தைக் காம்போதி ராகத்தில் பாடியபோது நான்
கர்ப்பக்கிரஹத்துக் குள்ளிருந்த அம்மன் விக்ரஹத்தை
நோக்கினேன். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு, அந்தக் கல் விக்ரஹம்
உருகிக் கரைந்து போகவில்லையே என்று எனக்கு ஆச்சரியமளித்தது.
ஆனால் ஒரு தடவை விக்ரஹத்தின் கண்களில் நீர்த்துளிகள்
நின்றது போல் தோன்றியது. இது என்ன பிரமை என்று என்
கண்களைத் துடைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் ஜனங்களைப்
பார்த்தேன். சபை ஓரமாக நாலாபுரத்திலும் ஜனங்கள் சுவர் வைத்தாற்
போல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலின் பின் வரிசையில்
ஒரு மூலையில் நின்ற ஒரு முகத்தின் மேல் தற்செயலாக என் பார்வை
விழுந்தது. அந்த மனுஷர் தலையில் பாதி நெற்றியை மறைத்த பெரிய
முண்டாசுக் கட்டிக் கொண்டிருந்தார். கண்வலி வந்தவர்கள் போட்டுக்
கொள்வது போன்ற பெரிய பச்சைக் கண்ணாடி அவர் கண்களை
மறைத்தது. எதனாலேயோ திரும்பத் திரும்ப அந்த முகத்தின் மீது
என் பார்வையும் கவனமும் சென்றன. அதற்குப் பிறகு பாட்டில் கவனம்
குன்றியது. "பார்த்த முகம் மாதிரியிருக்கிறதே, யாராயிருக்கும்?"
என்று அடிக்கடி மனது யோசித்தது. சட்டென்று உண்மை தெரிந்தது.
என் உடம்பெல்லாம் பதறியது. ஏதோ விபரீதம் நேரிடப் போகிறது என்று
மனதிற்குள் ஏதோ சொல்லிற்று. நானும் கூட்டத்தின் ஓரத்தில் தான்
இருந்தேனாதலால், மெதுவாக எழுந்திருந்து நின்று கொண்டிருந்த
ஜனங்களின் பின்புறமாக சென்று, அந்தப் பச்சைக்
கண்ணாடிக்காரரின் சமீபத்தில் போய் நின்றேன்.
கச்சேரி முடிந்தது! எல்லோருக்கும் முன்னால் அந்த மனுஷர்
விரைவாக அவ்விடமிருந்து கிளம்பிச் சென்றார். நானும் பின்னோடு
போனேன். கோவிலுக்கு வெளியில் கொஞ்சம் ஒதுக்குப் புறமான
இடத்துக்கு வந்ததும், நான் அவருடைய கையைப் பிடித்துக்
கொண்டு, "என்ன தம்பி! இது என்ன வேஷம்?" என்று கேட்டேன்.

கையை உதறிய கோபாலசாமி முதலியார் என்னைப் பார்த்ததும்,


"யார், கந்தப்பனா?" என்றார். பிறகு அவர் "ஆமாம் கந்தப்பா! ஆமாம்
வேஷந்தான். இந்த உலகமே வேஷந்தான். பார்த்தாயல்லவா உன்
தங்கச்சி போட்ட வேஷத்தை? முன்னே போட்டது ஒரு வேஷம்" என்று
மனங் கசந்து பேசிக் கொண்டே போனார்.

"இல்லை தம்பி! நீங்கள் எல்லா விஷயமும் தெரிந்து


கொள்ளவில்லை! பவானி இன்றைக்குச் செய்த கச்சேரிதான்
கடைசிக் கச்சேரி என்று சொல்லிற்று. அதனால் தான் இவ்வளவு
ஆவேசமாய்ப் பாடிற்று" என்று சமாதானம் சொன்னேன்.

"கந்தப்பா யாரிடம் காது குத்துகிறாய். என்னைப் பச்சைக் குழந்தை


என்று நினைத்துக் கொண்டாயா? பாட்டாம் பாட்டு! கச்சேரியாம்
கச்சேரி! மனது வந்ததே! கடவுள் என்னுடைய கண்ணைத்
திறப்பதற்காகவே, இந்த ரயில் விபத்தை உண்டு பண்ணினார்!"

பேச்சை மாற்றுவதற்காக, நான் "ஆமாம் தம்பி! கடவுள்தான்


உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். அந்த
அதிசயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பத்திரிகையில் ஏன் அப்படித்
தவறாகச் செய்தி வந்தது? நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள்?
இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்!" என்று கேள்விகளை
அடுக்கினேன்.

"அதையெல்லாம் அப்புறம் விவரமாகச் சொல்கிறேன் கந்தப்பா!


பெரிய கதை எழுதலாம். ஏதோ செத்துப் போனவன் தான், கடவுள்
அருளால் பிழைத்தேன். பத்து நாள் சுய நினைவு இல்லாமல்
ஆஸ்பத்திரியில் கிடந்தேனாம். அப்புறம் பழைய பத்திரிகைகளைப்
பார்த்துச் செத்துப் போனவர்களின் ஜாபிதாவில் என் பெயரும்
இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யாருடைய நிலைமை
எப்படியெப்படி, என்னோடு உடன் கட்டை ஏறுவேன் என்று
சொன்னவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று
பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அதற்காக, இந்த வேஷத்துடன்
வந்தேன். இப்போது பார்த்தாகிவிட்டது!" என்று மிகவும் வெறுப்புடன்
சொன்னார்.

பேசிக் கொண்டே நாங்கள் தெருவோடு போய்க்


கொண்டிருந்தோம். "அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இப்போது
எங்கே போகிற உத்தேசம்" என்று கேட்டேன்.

"அங்கேதான் போகிறேன். அவளை அடித்து விடுவேன்,


கொன்றுவிடுவேன் என்று நினைக்காதே! கச்சேரி பேஷாயிருந்தது
என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவேன்;
அவ்வளவுதான். நீயும் வேணுமானால் பின்னோடு வந்து பார்" என்றார்
கோபாலசாமி முதலியார்.

இரண்டு பேருமாகவே போய்ச் சேர்ந்தோம். பவானி குதிரை


வண்டியில் முன்னாலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அவளைத்
தனியாக முதலில் பார்த்துத் தயார் செய்ய வேண்டுமென்று
எண்ணினேன். அதற்கு கோபாலசாமி முதலியார்
இடங்கொடுக்கவில்லை.

என்னைப் பின்னால் தள்ளிக் கொண்டு, அறைக்குள் அவர் முதலில்


போனார்! நாங்கள் போகும் போது பவானி ஜலமோ, பாலோ ஒரு
கிண்ணத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பச்சைக்
கண்ணாடியும் பெரிய முண்டாசுமாக உள்ளே வந்தவரைப்
பார்த்துவிட்டுப் பவானி ஒரு நிமிஷம் திகைத்து நின்றாள். முதலியார்
கண்ணாடியையும் முண்டாசையும் எடுத்ததும் அவளுடைய
முகத்தில் ஏற்பட்ட பயங்கர மாறுதலைப் பார்த்தேன். என் இருதயம்
அப்படியே நின்று விட்டது.

எத்தனை நேரம் இப்படி மூன்று பேரும் ஸ்தம்பித்துப் போயிருந்தோம்


என்று தெரியாது. பவானி திடீரென்று சுருண்டு போய்க் கீழே விழுந்த
போதுதான், எனக்குப் பிரக்ஞை வந்தது. எனக்கு முன்னாலேயே
கோபாலசாமி ஓடி அவளைத் தூக்கித் தமது மடியில் வைத்துக்
கொண்டார். சற்று நேரம் நான் அங்குமிங்கும் பார்த்து விழித்துக்
கொண்டு நின்றேன். பிறகு டாக்டரை அழைத்து வருவதற்காக
ஓடினேன். டாக்டருடன் நான் திரும்பி வந்தபோது சந்தேகத்துக்கே
இடமிருக்கவில்லை. பவானியின் உயிர் போய் அரைமணி நேரத்துக்கு
மேலாகி விட்டது.

கந்தப்பப் பிள்ளை மேற்கண்ட விதம் கூறி கதையை நிறுத்தினார்.


அப்பொழுதுதான் ஒவ்வொரு சம்பவமும் நடப்பது போல் அவ்வளவு
தெளிவாகவும் உணர்ச்சியுடனும் அவர் சொல்லிக் கொண்டு
வந்தபடியால், என் உள்ளம் முன்னைக் காட்டிலும் இளகிக் கனிந்து
போயிருந்தது. சற்று நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல்
மௌனமாயிருந்தேன்.

எங்கள் சம்பாஷணை எப்படி ஆரம்பமாயிற்று என்பது ஞாபகம்


வந்தது.

"திடீரென்று தோன்றிய கோபாலசாமி முதலியாரை அவருடைய


ஆவி என்பதாக நினைத்து பவானி பயந்து போய் விட்டாளாக்கும்.
அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று கேட்டேன்.

"அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? டாக்டரிடம் 'எதிர்பாராத


ஷாக்கினால் மரணம்' என்று சர்டிபிகேட் எழுதி வாங்கிக்
கொண்டேன். கோபாலசாமி முதலியாரும் நானுமாகச் செய்ய
வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து முடித்தோம். பாவம்! அந்த
மனுஷர் பட்ட துக்கத்துக்கு அளவே இல்லை."

"பவானியின் மனம் களங்கமற்றது என்று அப்புறமாவது


முதலியாருக்கு தெரிந்ததா? அவரிடம் அவள் வைத்திருந்த அன்பின்
பெருமையை அறிந்து கொண்டாரா?" என்று கேட்டேன்.

"அது எப்படித் தெரியும்? அவருக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும்


இன்னொரு பக்கத்தில் பவானி தன்னுடைய துரோகம் தெரிந்து போய்
விட்டதே என்ற பயங்கரத்தினால் செத்துப் போய் விட்டாள் என்று
எண்ணினார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து வெளியான விஷயம்
அவருக்குப் பவானியின் மேல் இருந்த அவநம்பிக்கையை ஒருவாறு
போக்கிற்று. பவானி தன்னுடைய சொத்தையெல்லாம் கோபாலசாமி
முதலியாரின் குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தாள். உயில்
வக்கீலிடமிருந்தது."

வியப்புடன் "ஓஹோ! அப்படியா" என்றேன்.

இன்னமும் சொல்வதற்கு விஷயம் பாக்கியிருக்கிறது என்று


கந்தப்பப் பிள்ளை முகபாவத்திலிருந்து தெரிந்தது.

"எல்லாம் சரிதான். டாக்டரிடம் எதற்காகச் சர்டிபிகேட் எழுதி


வாங்கினீர்கள்?" என்று கேட்டேன்.

"இந்த மாதிரித் திடீர் மரணங்களில் போலீஸ் தொந்திரவு


ஏற்படுமல்லவா? அதற்காகத்தான். கோபாலசாமி முதலியாருக்கே
நான் உண்மையைச் சொல்லவில்லை. டாக்டருக்கும், எனக்கும்
மட்டுந்தான் தெரியும்!" என்றார்.
ஏதோ விஷயம் பாக்கி இருக்கிறதென்று நினைத்தேன். "உண்மைக்
காரணந்தான் என்ன?" என்று கேட்டேன்.

"நடந்து இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இனிமேல் சொன்னால்


என்ன? - பவானி மயங்கி விழுந்ததும் முதலியாருக்குப் பின்னால்
நானும் ஓடினேனல்லவா? பக்கத்தில் இருந்த சிறு முக்காலிப்
பலகையின் மேல் பவானி, பால் குடித்த கிண்ணத்துக்குப் பக்கத்தில்
ஒரு கடிதம் கிடந்தது. அதன் மேல் என் பெயர் எழுதியிருக்கவே,
சட்டென்று எடுத்து, முதலியாருக்குத் தெரியாமல் மடித்து வைத்துக்
கொண்டேன். டாக்டரைக் கூப்பிடப் போனபோது தெரு லாந்தர்
வெளிச்சத்தில் படித்தேன். அந்தக் கடிதம் இதுதான்" என்று கூறி,
கந்தப்பப் பிள்ளை மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக்
கொடுத்தார். அது வெகுநாட்பட்ட பழுதடைந்த காகிதம். அதில்
மங்கிப் போன முத்தான எழுத்தில் பின் வருமாறு எழுதியிருந்தது.

'அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்கு தங்கச்சி பவானி எழுதிக்


கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான் உயிர் வாழ
விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக்
கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர
மோதிரத்திலிருந்த வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி
வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு விடுவேன்.
என் சொத்தில் பாதியைக் கோவிலுக்கும், பாதியை அவருடைய
குழந்தைகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். உயில் வக்கீல் ...
ஐயரிடம் இருக்கிறது. நான் செய்வது பிசகாயிருந்தால் என்னை
மன்னிக்கவும். அவரைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது.
இப்படிக்கு
பவானி'

இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு, "இதை


ஏன் கோபாலசாமி முதலியாரிடம் நீர் சொல்லவில்லை?" என்று
கேட்டேன்.

"சொன்னால் என்ன லாபம்? ஏற்கனவே ரொம்பத் துக்கப்பட்டார்.


இது தெரிந்தால் அவரும் உயிரை விட்டாலும் விட்டிருப்பார். அல்லது
அவருடைய மனைவி மக்கள் மேல் பாசமில்லாமல் போயிருக்கலாம்.
ஒரு குடும்பத்தை அநியாயமாகக் கெடுப்பானேன் என்று தான்
சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்து "நான் போய் வருகிறேன், ஸ்வாமி!" என்று


கந்தப்பப் பிள்ளை எழுந்திருந்தார். கடிதத்தை அவரிடம் திருப்பிக்
கொடுத்தேன்.
வாசற் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியே சென்றார்.
ஜில்லென்று காற்று அடித்தது. இருண்ட வானத்திலிருந்து சிறு
தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது.

கல்கி – 3. தீப்பிடித்த குடிசைகள்


1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின்
மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல்
வருத்தமடைந்தவர்கல் யாரும் இருக்கமுடியாதென்று
நினைக்கிறேன். என் துக்கத்தின் காரணங்களைச் சொல்கிறேன்,
கேளுங்கள். (1) இந்த வருஷத்தில் தேர்தல் நடந்து நான் இந்திய
சட்டசபைப் பதவிக்கு நின்றிருக்கும் பட்சத்தில், என் எதிரி
யாராயிருப்பினும் அவர் தேர்தலுக்கு முதல் நாள் யமலோகத்துக்கு
வோட்டு கேட்கப் போய்விடுவாரென்றும், நான் போட்டியின்றித்
தேர்ந்தெடுக்கப்படுவேனென்றும், ஜோசியர் சொல்லியிருந்தார். அது
இல்லாமற்போயிற்று. (2) தேர்தல் விநோதங்களைப் பற்றிச் சிற்சில
கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அதற்கும் இடமில்லை.

புதுத் தேர்தலைப்பற்றி எழுத இடமில்லையே என்று


நினைத்துக்கொண்டிருந்தபோது, பழைய தேர்தலில் நடந்த சம்பவம்
ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பல்லில்லாத கிழவன் பாலிய பருவத்தில்
வெல்லச் சீடை தின்றதை எண்ணிச் சந்தோஷப் படுவதுபோல், அந்தப்
பழைய தேர்தல் சம்பவத்தைப்பற்றியாவது எழுதலாமென்று
தீர்மானித்தேன்.

1626-ம் வருஷத்தில், சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் பல


அதிசயமான முடிவுகள் ஏற்பட்டன. வெற்றி நிச்சயமென்று
எண்ணியிருந்தவர்கள் பலர் தோல்வி அடைந்தார்கள்.
நம்பிக்கையெல்லாம் இழந்து சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருந்த பலர்,
பெரும் வெற்றியடைந்தார்கள். இந்த அதிசயமான
முடிவுகளுக்குள்ளே மிகவும் அதிசயமானது ஸ்ரீமான் காவடி
கோவிந்தப்பிள்ளையின் வெற்றியேயாகும். இவர் தமது ஜில்லாவில்
முதன்மையாக வெற்றி பெறுவார் என்று அரசியல் ஜோதிடத்தில் வல்ல
பத்திரிக்கை நிருபர்கள் கூட எதிர் பார்க்கவில்லையென்றால்,
நீங்களும் நானும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியமடைந்ததில்
வியப்பில்லையன்றோ?

ஆம், இப்போது நினைத்தாலும் அந்தக் காட்சி என் கண் முன்னே


நிற்கின்றது. தேர்தல் முடிவுகள் பெருவாரியாக
வெளியாகிக்கொண்டிருந்த அன்று, சென்னையில் தினசரிப்
பத்திரிகாலயங்களின் வாயில்களில் கும்பல் கும்பலாய் ஜனங்கள்
காத்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிப் பெற்றவர்களின் பெயர்கள்
வர வர, வாசலில் ஒரு கருப்புப் பலகையில் எழுதப்பட்டு வந்தன. பிரபல
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் தோற்றுப்போனார் என்று
தெரிந்ததும், காங்கிரஸ் அபிமானி ஒருவர் அவசரமாகப் பக்கத்துக்
கடைக்குச் சென்று ஒரு டஜன் சுருட்டுக் கட்டுகள் வாங்கி வந்து,
எல்லாருக்கும் வழங்கினார். (யாராவது இறந்துபோனால் புகையிலை
வழங்குவது சென்னையில் வழக்கம்) இந்த வினோதத்தை நான்
பார்த்துக் கொண்டிருக்கையில்....ஜில்லாத் தேர்தல் முடிவுகள் கருப்புப்
பலகையில் எழுதப்பட்டன. வெற்றி பெற்ற மூவரில் ஸ்ரீமான் காவடி
கோவிந்தப்பிள்ளை முதன்மையாக நின்றார். அவருக்கடுத்தபடியாக
வந்தவருக்கும் அவருக்கும் 5000 வாக்கு வித்தியாசம்!

ஒரு துள்ளுத் துள்ளி மூன்று முழ உயரம் மேலெழும்பிக் குதித்தேன்.


உடனே எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சுற்று முற்றும் பார்த்தேன்.
மற்றவர்கள் என்னைவிட மோசம் என்று தெரிந்த பிறகுதான்
கொஞ்சம் சமாதனமாயிற்று. என்னைப் போலவே ஆகாயத்தில்
கிளம்பிய பலர் அப்போதுதான் தரையிலிறங்கினார்கள்.
அவர்களிலொருவர் கீழே கிடந்த சுருட்டு நெருப்பில் காலை
வைத்துவிட்டு மறுபடியும் மேலெழும்புவதையும் கண்டேன். வேறு
சிலரோ, ஆச்சரியத்தினால் திகைத்துப் போய்ப் பிளந்த வாய் மூடாமல்
நின்றார்கள். ஆனால், இப்படி ஆச்சரியப்பட்டவர்களில் எவரும்
துக்கமோ மகிழ்ச்சியோ காட்டவில்லை. ஏனெனில், ஸ்ரீமான்
காவடிப்பிள்ளை காங்கிரஸ் கட்சியையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ
சேர்ந்தவரல்லர். அவர் சுயேச்சைவாதி.
அதுதான், சுவாமிகளே! இதில் பெரிய அதிசயம். ஸ்ரீமான் காவடி
கோவிந்தப்பிள்ளை எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்லர். அவரை
ஆதரிக்கப் பத்திரிக்கைகள் இல்லை. பிரசாரகர்கள் இல்லை. அவர்
பெரிய வக்கீல் அல்ல; ஜில்லா போர்டு தலைவர் அல்ல; பெரும்
பணக்காரருமல்ல. அந்த ஜில்லாவுக்கு வெளியே அவர் பெயரை யாரும்
கேட்டது கிடையாது. பின் எப்படி அவர் இம்மாதிரி ஒரேயடியாகத்
தாண்டிக் குதித்தார்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடியவர்
சென்னைப் பட்டணத்தில் யாரும் இல்லை. கூளிப்பட்டி ஜமீந்தாரைப்
பிடித்தால் ஒருவேளை இந்த மர்மம் விளங்கலாமென்று நினைத்தேன்.

கூளிப்பட்டி ஜமீந்தாரைக் குறித்து நீங்கள்


கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் எனது பழைய நண்பர். இது
குறித்து நீங்கள் என் மீது பொறாமைப்படவேண்டாம். மேலும், அது
என்னுடைய தப்புமன்று; ரயில்காரனுடைய தவறு. நாங்களிருவரும்
ஒரு தடவை ஒரே ரயில்வே ஸ்டேஷனில் ரயிலேறும்படி நேர்ந்தது.
இல்லை ரயிலேறாதிருக்க நேர்ந்தது. நாங்கள் கையில் மூட்டையை
வைத்துக் கொண்டு தயாராய்க் காத்துக்கொண்டுதானிருந்தோம்.
நான் நின்ற இடத்துக்கு நேரே இரண்டாம் வகுப்பு வண்டி வந்து
நின்றது. அந்த மனிதருக்கு நேரே மூன்றாம் வகுப்பு ஸ்திரீகளின்
வண்டி நின்றது. நான் மூன்றாம் வகுப்பையும் அவர் இரண்டாம்
வகுப்பையும் தேடிக் கொண்டு போனோம். நான் என் வண்டியை
விரைவில் கண்டு பிடித்து விட்டேன்.

"ஸார்! ஸார்!! ஸார்!!! கதவைக் கொஞ்சம் திறவுங்கள்" என்றேன்.

"ஸார்! ஸார்!! ஸார்!!! தயவு செய்து கொஞ்சம் அடுத்த வண்டிக்குப்


போங்கள்" என்று உள்ளிருந்து பதில் வந்தது.

மீறி ஏறுவதற்கு முயன்றேன். உடனே என்னை நோக்கி ஒரு டஜன்


கைகள் முன் வந்தன. எனவே, நான் பின்வாங்க வேண்டியதாயிற்று.
இந்த மாதிரி இரண்டு வண்டி பரிசோதிப்பதற்குள் ரயில்
கிளம்பிவிட்டது. கொஞ்சம் தூரம் ரயிலுடன் நானும் ஓடினேன்.
பின்னர், "சை! சை! இந்த ரயிலுக்கு நம்முடன் கூட ஓடும் சக்தி
உண்டா?" என்று தீர்மானித்து நின்று விட்டேன். திரும்பிப்
பார்த்தபோது கூளிப்பட்டி ஜமீன்தாரும் கையில் பெட்டியுடன் நின்று
கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பில் தம்பதி சமேதராய்
எழுந்தருளியிருந்த ஒரு வெள்ளைக்காரன் அவரை "நரகத்துக்குப்
போகும்படி" ஆக்ஞாபித்ததாய் எனக்குப் பின்னால் தெரியவந்தது.
ரயில் போனதும் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.

"இந்த ரயில் நாசமாய்ப் போனாலென்ன?" என்று நான் கேட்டேன்.

"ரயில் கம்பெனி பாதாள லோகத்துக்குப் போனாலென்ன?" என்று


ஜமீன்தார் திருப்பிக் கேட்டார்.

"கொஞ்சமும் ஆட்சேபமில்லை" என்றேன்.

இவ்வாறுதான் நாங்கள் நண்பர்களானோம்.

கூளிப்பட்டி ஜமீன்தார் மிக்க செல்வாக்குள்ளவர். அந்த ஜில்லாவில்


4000 வாக்குகள் அவர் கைக்குள் அடக்கம் என்று பலர் சொல்லக்
கேட்டிருக்கிறேன். ஏழை எளியவர்களிடம் அவர் மிக்க
கருணையுள்ளவர் என்பதும் பிரசித்தியான விஷயம்....ஆனால், அவர்
அரசியல் விஷயங்களில் மட்டும் தலையிட்டுக்கொள்வது கிடையாது.
தலையை மட்டுமன்று; கால், கை, காது முதலிய எந்த
அவயத்தையுமே அவர் அரசியலில் இடுவது கிடையாது. சட்டசபை
அபேக்ஷகர்களாக நின்ற ஒவ்வொருவரும் ஜமீன்தாரின் ஆதரவைப்
பெறப் பிரயத்தனம் செய்தார்கள். எல்லோருக்கும் "ஆகட்டும்,
பார்ப்போம்" என்ற பதிலே அவர் சொல்லி வந்தார். ஆகவே, இப்பொழுது
காவடி கோவிந்தப்பிள்ளையின் மகத்தான வெற்றியைப் பற்றி தெரிய
வந்ததும், ஒருக்கால் நமது நண்பரின் கைவேலை இதில்
இருக்குமோவென்று நான் சந்தேகித்தது இயல்பேயல்லவா?

கூளிப்பட்டிக்குப் போனேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். ஜமீன்தார்,


"எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று ஒரேயடியாகச்
சாதித்துவிட்டார். எவ்வளவோ சாமர்த்தியமாகவெல்லாம் கேட்டும்
பயன்படவில்லை. ஆனால், கூளிப்பட்டிக்குப் போனதில்,
லாபமில்லாமலும் போகவில்லை. தேர்தலுக்கு நாலு தினங்களுக்கு
முன்பு அங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
அதை இங்கே சொல்லிவிடுகிறேன். அதற்கும் கோவிந்தப்
பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டாவென்று
நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். தேர்தலுக்கு நாலு நாளைக்கு
முன்பு, கூளிப்பட்டிக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்திலுள்ள
கிராமத்தில் பெரிய சமூக மாநாடு ஒன்று நடந்ததாம்.
ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அங்கே கூடுவதை முன்னிட்டுச்
சட்டசபை அபேட்சகர்கள் எல்லாரும் தங்கள் தங்கள்
பரிவாரங்களுடன் மகா நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.
ஜமீன்தாரும் போயிருந்தார். திரும்பிப் போகும்போது அபேட்சகர்கள்
எல்லாரும் கூளிப்பட்டி வழியாகத்தான் போக வேண்டியிருந்தது.
மாலை ஐந்து மணிக்கு மாநாடு "பலமான கரகோஷங்களுக்கிடையே
இனிது நிறைவேறிய" பின்னர், அபேட்சகர்களின் மோட்டார் வண்டிகள்
ஒவ்வொன்றாகப் புறப்பட்டன.

இப்பொழுது வாசகர்கள் என்னுடன் கிளம்பி மோட்டார்


வண்டிகளைவிட வேகமாய்ப் பிரயாணம் செய்து, கூளிப்பட்டிக்கு
வடக்கே ஒரு மைல் தூரத்திலிருந்த 'சேரி'க்கு வந்துவிட வேண்டும்.
ஆஹா! என்ன பயங்கரமான காட்சி! சேரியிலுள்ள குடிசைகளில் சில
தீப்பற்றி எரிகின்றன. தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
காற்று பலமாக அடிக்கிறது. ஐயோ! குடிசையிலிருந்து பக்கத்திலுள்ள
வைக்கோற் போரிலும் தீப்பிடித்துக் கொண்டது. "வானை நோக்கிக்
கைகள் தூக்கி வளரும் தீயின் காட்சி" என்ன பயங்கரம்! தீயை
அணைப்பதற்கு எவ்வித முயற்சியும் காணப்படவில்லை. மக்களையே
அதிகமாய் அங்கே காணோம். ஸ்திரிகளும் குழந்தைகளுந்தான்
சுற்றிச் சுற்றி வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த
இரண்டோ ர் ஆண் மக்கள் அந்த ஸ்திரீகளையும் தீ
விபத்துக்காளாகமல் தப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். எரியும்
குடிசைகளுக்கருகே அவர்கள் போகாவண்ணம் தடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

ஜில்லா போர்டு பெரியசாலை இந்தச் சேரியைப் பிளந்துகொண்டு


போகிறது. சாலைக்கு இடது புறத்திலிருந்த குடிசைகள் எல்லாம்
ஏறக்குறைய எரிந்து போயின. வலது புறத்திலுள்ள குடிசைகளுக்கு
இன்னும் நெருப்பு வரவில்லை. ஐயோ! காற்று இப்படிச்
சுழன்றடிக்கின்றதே! ஒரு ஜுவாலை பறந்து சென்று வலது புறத்துக்
குடிசைகளில் ஒன்றின்மீது விழுகின்றது! ஆகா! சட்டென்று சென்று,
அந்த ஒரு கீற்றை இழுத்தெறிந்து ஒரு குடம் தண்ணீரைக்
கொட்டினால் நெருப்பு பரவாமல் தடுக்கலாம். யாரேனும் அப்படிச்
செய்யப் போகிறார்களா? ஒருவரையும் காணோம். பெண்களும்,
சிறுவர் சிறுமிகளும் சுற்றிச் சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும்
அடித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் பெரிய
ஆட்களுக்கு இவர்களை வெளியே பத்திரமாய்க் கொண்டு வந்து
சேர்ப்பதே பெரிய காரியமாயிருக்கிறது. அது வரையில்
புத்திசாலிகள்தான். அப்படியும் ஒரு சிறுவன்மீது நெருப்புப்பட்டு
முதுகு வெந்து போயிற்று. அவனைச் சாலையில் கொண்டுவந்து
போட்டார்கள்.

பூம்! பூம்! பூம்! ஒரு மோட்டார் வண்டி அதிவேகமாய் வருகிறது.


சமூக மகாநாட்டுக்குச் சென்றிருந்த திவான் பகதூர்
வீரண்ணப்பிள்ளையும் திருவாளர் பெரியசாமித் தேவரும் அதிலே
வருகிறார்கள். தீப்பிடித்த குடிசைகளுக்கருகே மோட்டார் வண்டி
நிற்குமா? ஏழை ஆதித்திராவிடர் மீது இப்பெரிய மனிதர்கள்
கண்ணோட்டம் செலுத்துவார்களா? இல்லை; இல்லை;
கண்மூடித்திறக்கும் நேரத்தில் மோட்டார் பறந்து போகிறது. அன்றிரவு
ஜில்லா கலெக்டர் விருந்துக் கச்சேரி. அவர்களெப்படி இங்கே நிற்க
முடியும்?

ஒரு நிமிஷத்திற்கெல்லாம் மீண்டும் பூம், பூம் என்ற சத்தம்,


ராவ்பகதூர் சடையப்ப முதலியாரின் மோட்டார் அதிவேகமாய்
வருகிறது; இதுவும் இங்கு நில்லாமலே போய்விடுகின்றது;
அடுத்தாற்போல் ஸ்ரீமான் வராகவதாரமையங்காரின் வண்டி. ஆகா
இவரல்லவோ புண்ணியவான்! ஏழைகளின் நண்பர்! வண்டி மெதுவாக
நிற்கிறது. உடனே பலர் ஓடிவந்து, மோட்டாரைச் சூழ்கிறார்கள்.

ஐயங்கார்:- தீ எப்படிப் பிடித்தது?

கூட்டத்தில் பலர்:- சாமி! தெரியவில்லை. (கூச்சலும் அழுகையும்).

ஐயங்கார்:- அட, சனியனே! சும்மாயிருங்கள். வெறும் மூடத்தனம்,


தீப்பிடித்தவுடன் ஏன் அணைக்கக் கூடாது? இப்படி வெறுங்கூச்சல்
போட்டால் என்ன பிரயோசனம்?

ஒருவன்:- ஐயா, சாமி! இந்தப் பையன் முதுகு எரிந்து போய்விட்டது.

ஐயங்கார்:- டிரைவர்! பலமான காயமா, பார்.

டிரைவர்:- அதெல்லாம் இல்லை. சொற்பக் காயந்தான்.

ஐயங்கார்:- சரி, தேங்காய் எண்ணெய் தடவு, தெரிகிறதா? சீக்கிரம்


வண்டியை விடு.

அடுத்த கணத்தில் மோட்டார் மாயமாய்ப் பறந்து போகிறது.

மேற்கூறியவையெல்லாம் ஐந்து நிமிஷத்திற்குள்


நடந்தனவென்பதை நேயர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
கடைசியாகக் காவடி கோவிந்தப்பிள்ளையின் மோட்டார் வந்து
குடிசைகளுக்கருகில் நின்றது. பிள்ளை சட்டென்று மோட்டாரிலிருந்து
வெளியே குதித்தார். வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றில்
இப்பொழுதுதான் தீப்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் உடனே
கவனித்தார். "டிரைவர்! ஓடி வா! ஓடி வா!" என்று கூவிக் கொண்டே
அவர் அந்தக் குடிசையை நோக்கி ஓடினார். டிரைவரும் பின்னால்
சென்றான். இருவரும் அக்குடிசையின் கூரையில் தீப்பிடித்திருந்த
கீற்றை இழுத்துக் கீழே போட்டார்கள். "குடம்! குடம்!" என்று
காவடிப்பிள்ளை கத்தினார், சில பெண்கள் மண்குடம் கொண்டு
வந்தார்கள்! அவற்றுள் ஒன்றைப் பிள்ளை வெடுக்கென்று பிடுங்கிக்
கொண்டு போய்ப் பக்கத்திலிருந்த வாய்க்காலிலிருந்து ஜலம்
கொண்டு வந்தார். அவரைப் பின் தொடர்ந்து இன்னும் பலரும்
ஜலங்கொண்டு வந்து கொட்டினார்கள். தீ அணைந்தது. சாலைக்கு
வலது புறத்திலிருந்த இருபது குடிசைகள் தப்பிப் பிழைத்தன.

காவடிப் பிள்ளையும், டிரைவரும் திரும்பி வந்து மோட்டாரில்


உட்கார்ந்தார்கள்.

டிரைவர்: சுத்த மூட ஜனங்கள்! சுலபமாய்த் தீயை


அணைத்திருக்கலாம். பக்கத்திலே வாய்க்கால்.

காவடிப் பிள்ளை: பாவம்! அவர்களைக் குறை சொல்லி என்ன


பயன்? அவர்களை மூடர்களாய் வைத்திருப்பது யார்? மேலும்
ஆண்பிள்ளைகளெல்லாம் வயல்வெளிக்குப் போய்விட்டார்கள்.
குழந்தைகளும் ஸ்திரீகளும் என்ன செய்வார்கள்?

டிரைவர்: சுமார் ஐம்பது குடிசை போயிருக்கும்.

காவடிப் பிள்ளை: பட்ட காலிலே படும். எல்லாம் ஏழைகளுக்குத்தான்


வருகிறது. இரவு தங்க என்ன செய்வார்களோ?

கூட்டத்தில் ஒருவன்: சாமி! இந்தப் பையன் முதுகு வெந்து போய்


விட்டது.

காவடிப் பிள்ளை: எங்கே? எங்கே? கொண்டு வா!

பையனைக் கொண்டு வந்தார்கள். பிள்ளையை பார்த்துவிட்டு


உடனே அவனை மோட்டாரில் தூக்கிப் போடச் செய்தார். பின்னர்
வண்டி கிளம்பிற்று.

மறுநாள் காவடிப் பிள்ளையிடமிருந்து கூளிப்பட்டி ஜமீன்தாருக்கு


ஒரு கடிதமும், 50 ரூபாய் பணமும் கிடைத்தன. "இந்த சிறு
தொகையைப் புதிய குடிசைகள் போட்டுத்தர உபயோகப்படுத்துங்கள்.
பையன் வைத்தியசாலையில் குணமடைந்து வருகிறான் என்று அவன்
பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்துங்கள்" என்று பிள்ளை
எழுதியிருந்தார்.

மேற்கண்ட சம்பவத்துக்கும் காவடிப் பிள்ளையின் வெற்றிக்கும்


ஏதேனும் சம்பந்தமுண்டா வென்று நான் ஜமீன்தாரை ஆனமட்டும்
கேட்டுப் பார்த்தேன். அவர் வாயிலிருந்து பதில் வருவிக்க
முடியவில்லை. ஆயினும் பின்வரும் விஷயங்களைக் கோவை செய்து
நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்:- (1) அந்த நேரத்தில்
அந்த ஏழைகளின் குடிசைகள் தீப்பிடிக்கக் காரணமே இல்லை. ஒரு
வீட்டிலும் அப்போது அடுப்புக் கூட மூட்டவில்லையென்றும் எல்லாரும்
சத்தியம் செய்கிறார்கள். (2) ஒருவர் இருவரைத் தவிர பெரிய ஆட்கள்
யாருமில்லாமல் அச்சமயம் மாயமாய்ப் போனார்கள்.

அம்பை – 1. அம்மா ஒரு கொலை செய்தாள்


அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே
நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம்
போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும் வயதில்லை
எனக்கு. நான்கு வயது.

விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம்


கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப்
பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து
இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே
சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே
தொட்டிலில் இருக்கிறான்.

You might also like