8 Model QP Miterm - 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பின்குஷன் மாண்டசரி சர்வதேசப் பள்ளி

வகுப்பு VIII - தமிழ் - இடைத்தேர்வு – 1 (2022 - 2023)

பெயர்: காலம்: 1.30 மணி நேரம்


தேதி: மதிப்பெண்கள்: 40

பகுதி - அ (17 மதிப்பெண்கள்)


அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கவும்.

வினா.1
பின்வரும் கடிதம் எழுதுக:-
(8)

1. வருமானச் சான்றிதழ் வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் கடிதம்


எழுதுக:-

வினா 2
பின்வரும் உரைநடைப் பகுதியைப் படித்துணர்ந்து, அதன் கீழே வரும்
ஐந்து வினாக்களுக்கு விடையளி:-

சட்டமேதை அம்பேத்கர்

பிறப்பு

அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதினான்காம் நாள் ராம்ஜி


சக்பால்-பீமாபாய் இணையருக்குப் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவரது
ஊர் மகாராட்டிர மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
அம்பவாதே என்பதாகும். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில்
ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

கல்வி

அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத்


தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்
பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர்
என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.
இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ்
ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்குக்


குடிபெயர்ந்தது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல்
தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு,
பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1912
ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின்
அரண்மனையில் உயர் அலுவலராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் உயர்கல்வி

பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க


அமெரிக்கா சென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து
பொருளாதாரம், அரசியல்,தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக்
கற்றார். 1915-ல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக
முதுகலைப்பட்டம் பெற்றார். இந்தியாவில் சாதிகளின் தோற்றமும்
வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றைப்
படைத்தளித்தார். அதைச் சிறு புத்தகமாகவும் வெளியிட்டார். அச்சில்
வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் இதுவே. பின்னர் இந்தியாவின்
தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம்
அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்ற


அந்தப் பெயரைப் பதிவு செய்து கொண்டார் நூலகம் திறக்கும்போது நுழைந்து
மூடும் போது கடைசியாக வெளியேறுவார் இத்தகைய அயராத உழைப்பின்
பயனாக 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு
ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர்
பட்டமும் பெற்றார் அதே ஆண்டில் சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டமும்
பெற்றார்.

சமூகப்பணிகள்

படிப்பை முடித்து இந்தியா திரும்பினார் அம்பேத்கர். இந்தியாவில்


நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான
போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும்
முடிவு செய்தார். 1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின்
முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற
அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின்
கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார். 1930 ஆம் ஆண்டு
இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப்
புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ,
அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு
மனத்துடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.

வினாக்கள். (5*1=5)

1. அம்பேத்கார் பிறந்த மாநிலம் மற்றும் மாவட்டம்?


2. அம்பேத்கார் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில்
இளங்கலை பட்டம் படித்தார்?
3. அம்பேத்கார் பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்ற ஆண்டு?
4. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை நிறுவிய ஆண்டு?
5. 1930 வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள __________ சென்றார்.
வினா 3
கீழ்வரும் துணைப்பாடம் குறித்து உன்னுடைய சொந்த நடையில் எழுது:- (4)

1. அன்னப்பறவை சொன்ன தகவல்கள்.

பகுதி - ஆ (23 மதிப்பெண்கள்)

இந்தப் பகுதியிலிருந்து மூன்று கேள்விகளை முயற்சிக்கவும்.

வினா 4
பின்வரும் மனப்பாடபாடல் எழுதுக:- (4)

1. "தமிழ்மொழி வாழ்த்து" என்னும் மனப்பாடபாடல் எழுதுக:-

வினா 5
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி:- (5*2=10)

1. ஓலைச்சுவடிகளில் நேர் கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை பயன்படுத்த


இயலாமைக்கு காரணம் என்ன?
2. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து சீர்திருத்தங்களில் எவையேனும்
இரண்டினை எழுதுக:-
3. உயிர் எழுத்துக்கள் முயற்சி பிறப்பு எவையேனும் இரண்டினை எழுதுக:-
4. மெய் எழுத்துக்கள் முயற்சி பிறப்பு எவையேனும் இரண்டினை எழுதுக:-
5. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
6. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?
7. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாக கோணக்காத்துப்பாட்டு கூறுவது யாது?
8. கொல்லிமலை பற்றிய பாடல் கூறும் செய்தி யாது?
வினா 6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:- (3*3=9)

1. தெரிநிலை வினைமுற்று எவற்றை காட்டும்?


2. குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?
3. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாக பாடல் குறிப்பிடும்
கருத்துகள் யாவை?
4. கோணக்காற்றல் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
5. எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன?

You might also like