Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 7

Soalan dan skima Bahagian D 912/2

எண் வினா புள்ளி

D பிரிவு [25 புள்ளிகள்]


Bahagian D [25 markah]

கீழ்வரும் வினாக்களுள் ஒன்றிற்கு விடை எழுதுக.


Jawab satu soalan sahaja
7.

ஒரு நாவலாசிரியர் கதையைச் சுவைப்பட கூறுவதற்கு உத்தி [25]

8. இன்றியமையாததாகும். அவ்வகையில் அந்திம காலம் நாவலில்

அதன் ஆசிரியர் கையாண்டுள்ள உத்திகளைச் சான்றுகளுடன்


[25]
விளக்குக.

அந்திம காலம் நாவலின் சுந்தரத்தின் பாத்திரப்படைப்பு

இன்றைய குடும்பத்தலைவர்களுக்கு நல்லதொரு

வழிகாட்டியாகும். இக்கூற்றினை ஆராய்க.


எ விடைப்பட்டி புள்ளி

ண்
7 முன்னுரை:

 ரெ.கார்த்திகேசு.

 மலேசிய எழுத்தாளர்களில் பாராட்டிற்குரியவர்.


[3]
 சிறுகதை,நாவல்,கவிதை,நாடகம் – பன்முகப் படைப்பாளர்.

 மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.

 வானத்து வேலிகள், தெடியிருக்கும் தருணம், காதலினால் அல்ல.

 அந்திம காலம் நாவல் அவர் கைவண்ணத்தில் உருவானது.

 முதுமை வாழ்வை எதிர்கொள்ளும் சூழல் மனித வாழ்வின்

வாழ்வியல் போராட்டங்களை முன்வைக்கிறது.

 கதையை நகர்த்த ஆசிரியர் சில உத்தி முறைகளைக்

கையாண்டுள்ளார்.
[4]
சுருக்கம் :

பணி ஓய்வு பெற்ற சுந்தரம் மூளை புற்று நோயால் அவதியுறுகிறார்.

தன்னுடைய வாழ்வில் நோயோடு போராடியவாறு பல்வேறு குடும்பச்

சிக்கல்களைச் சந்திக்கின்றார். தொடர்ந்து நோய்க்கான சிக்கிச்சையைப்

பெறுவதிலும் போராட்டங்களை எதிர்கொள்கின்றார். மகள் ராதாவின்

குடும்பத்தில் வீசிய புயலிலும் சாய்ந்து விடுகிறார். தொடர்ந்து சிகிச்சைப்

பெற்றுவருவதில் நோயிலிருந்து குணமடைந்து வருகின்றார். இரத்தப்


[ 5 x 3]
புற்றுநோயினால் பேரன் பரமாவை இழக்கின்றார். ராதாவும் சிவமணியும்

மீண்டும் வாழ்வில் இணைகின்றனர். தனது பிரியத்திற்குரிய ஜிம்மி, ஜானகி,

அத்தை அனைவரையும் இழந்து தன் அக்காள் அன்னத்துடன் தன் அந்திம

நாட்களை கடத்துகிறார்.
கருத்துகள் :

 அந்திம காலம் நாவலில் ஆசிரியர் பல உத்திகளைப்

பயன்படுத்தியுள்ளார். அவை:

1. பின்னோக்கு உத்தி

2. உரையாடல் உத்தி

1. நனவோடை உத்தி

2. கடித உத்தி

3. குறள் உத்தி

4. கவிதை உத்தி

1. பின்னோக்கு உத்தி.

கடந்த கால சம்பவங்களைக் கதையோட்டத்திற்கு ஏற்ப பின்னோக்கிக்

காண்பதே பின்நோக்கு உத்தியாகும். அத்தியாயம் நான்கில் சுந்தரம் தன்

கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கின்றார். அவரது தந்தையின்

மரணம், ஜானகியுடனான காதல் பிறகு திருமண வாழ்க்கை ஆகியவற்றை

ஒவ்வொன்றாக பின்னோக்கி அசைபோடுகின்றார். அத்தியாயம் ஐந்தில்

தனது ஆசிரியர் பணியில் கட்டொழுங்கு ஆசிரியராக டத்தோ மொக்தார்

என்பவருடன் ஏற்பட்ட மோதலை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றார்.

2. உரையாடல் உத்தி.

நாவலில் கதைப்பாத்திரங்களை உரையாடச் செய்து அதன் மூலம்

நாவலாசிரியர் தன் கருத்துகளை வெளிப்படுத்த பயன்படுத்தும்

உத்தியையே உரையாடல் உத்தி என்கிறோம். அந்திம காலம் நாவல்

முழுவதும் இவ்வுத்தியை நாம் காண முடிகின்றது. காட்டு : அத்தியாயம்

ஒன்றில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய சுந்தரமும் ஜானகியும்

உரையாடிக் கொள்வது.
“ஏங்க இவ்வளவு நேரம்?”..

“ராதா போன் பண்ணுனாங்க ...இப்பத்தான்..”

3. நனவோடை உத்தி.

நாவலில் பாத்திரத்தின் மன உணர்வுகளை முன்னோட்டமாக எடுத்துரைக்க

உதவும் அணுகுமுறையே நனவோடை உத்தியாகும். பாத்திரம் தம் மனக்கண்

வழியே காணுகின்ற காட்சியாகவும் எண்ணங்களின் பதிவாகவும் இஃது

அமையும். இதன்வழி வாசகர்கள் பாத்திரத்தின் மன ஓட்டத்தை அறிந்து

கொள்ள முடியும். அந்திம காலம் நாவலில் ஆசிரியர் சில இடங்களில் இந்த


[சிறப்புக்
நனவோடை உத்தியைக் கையாண்டுள்ளதைக் காண முடிகிறது.
கூறு + 1]

காட்டு : அத்தியாயம் ஒன்றில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய சுந்தரம்

அறையில் ஓய்வெடுக்கின்றார். நோயின் தாக்கம் அவரை வாட்டுகின்றது.

மனைவி ஜானகியோ மகள் ராதாவும் பேரன் பரமாவும் தங்குவதற்கான

ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.


[2]
சுந்தரத்தின் மனவோட்டத்தை இவ்வாறு ஆசிரியர் பதிவு செய்கின்றார்.

“மகளுக்கு அறை மட்டும் தயார் பண்ணுவதோடு உன் கடமை

முடிந்துவிடாது ஜானகி. கையோடு இந்தக் கணவனுக்கும் ஒரு கல்லறை

தயார் பண்ணி விடு”.

4. கடித உத்தி

நாவலாசிரியருக்குக் கடித உத்தியும் கைக்கொடுக்கும் உத்தியாக

அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. கதையில் வருகின்ற பாத்திரங்கள்

கடிதம் எழுதுவதாகப் படைத்து அதன் மூலம் கதையை நகர்த்தவும்

கருத்துகளைச் சொல்லவும் கதையாசிரியர் முயல்கின்றார். இந்த உத்தி

அந்திம காலம் நாவலில் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை

நாம் காண முடிகின்றது.


காட்டு : அத்தியாயம் நான்கு : சுந்தரம் உயர் கல்விக்காக கெர்க்பியில்

இருந்தபோது அன்னப்பூரணி எழுதிய கடிதங்கள்.

அத்தியாயம் 6 : ராதா எழுதிய கடிதம். சுந்தரத்திற்குக் கடிதம் எழுதி

வைத்துவிட்டு தன் கதலனைச் சந்திக்க இலண்டன் செல்வது.

5. குறள் உத்தி

நாவலின் கதை ஓட்டத்திற்காக ஆங்காங்கே குறட்பாக்கள்

பயன்படுத்தப்பட்டுள்ளன.

காட்டு : அத்தியாயம் இரண்டு. ராதாவிற்கு அறிவுரை கூறுவதற்காக சுந்தரம்

குறளைக் கையாளுகின்றார். ‘சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி...’(பக்21)

அத்தியாயம் 12: தைப்பிங் ஏரிக்கரையில் பேரன் பரமாவிற்குச் சுந்தரம்

திருக்குறள் சொல்லிக் கொடுப்பது. (பக்133) ‘அகர முதல எழுத்தெல்லாம்....’

6. கவிதை உத்தி

கதைச் சூழலுக்கேற்பவும் கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் கவிதை

உத்தியின் வழி நாவலுக்குச் சுவை கூட்டுகின்றார் நாவலாசிரியர்.

காட்டு: அத்தியாயம் 3, நோயின் வேதனையில் புரண்டு கொண்டிருந்த

சுந்தரம் பாரதியின் வரிகளை அசைபோடுகின்றார்.

“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்”.

முடிவுரை : ஏற்புடையது.

8. முன்னுரை:
 ரெ.கார்த்திகேசு.

 மலேசிய எழுத்தாளர்களில் பாராட்டிற்குரியவர்.

 சிறுகதை,நாவல்,கவிதை,நாடகம் – பன்முகப் படைப்பாளர்.

 மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.

 வானத்து வேலிகள், தெடியிருக்கும் தருணம், காதலினால் அல்ல. [3]

 அந்திம காலம் நாவல் அவர் கைவண்ணத்தில் உருவானது.

 முதுமை வாழ்வை எதிர்கொள்ளும் சூழல் மனித வாழ்வின்

வாழ்வியல் போராட்டங்களை முன்வைக்கிறது.

 கதையை நகர்த்த ஆசிரியர் சில உத்தி முறைகளைக்

கையாண்டுள்ளார்.

சுருக்கம் : [4]
பணி ஓய்வு பெற்ற சுந்தரம் மூளை புற்று நோயால் அவதியுறுகிறார்.

தன்னுடைய வாழ்வில் நோயோடு போராடியவாறு பல்வேறு குடும்பச்


[5 x 3]
சிக்கல்களைச் சந்திக்கின்றார். தொடர்ந்து நோய்க்கான சிக்கிச்சையைப்

பெறுவதிலும் போராட்டங்களை எதிர்கொள்கின்றார். மகள் ராதாவின் சிறப்புக்

குடும்பத்தில் வீசிய புயலிலும் சாய்ந்து விடுகிறார். தொடர்ந்து சிகிச்சைப் கூறு 1 பு

பெற்றுவருவதில் நோயிலிருந்து குணமடைந்து வருகின்றார். இரத்தப்

புற்றுநோயினால் பேரன் பரமாவை இழக்கின்றார். ராதாவும் சிவமணியும்

மீண்டும் வாழ்வில் இணைகின்றனர். தனது பிரியத்திற்குரிய ஜிம்மி, ஜானகி,

அத்தை அனைவரையும் இழந்து தன் அக்காள் அன்னத்துடன் தன் அந்திம

நாட்களை கடத்துகிறார். [2]

கருத்துகள் :

1. தமிழ்ப்பற்று மிக்கவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

2. பொறுமை குணம் மிக்கவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

3. கடமையுணர்ச்சி தவறாதவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

4. நன்றி மறவாதவராகப் படைக்கப்பட்டுள்ளார்.


5. அன்பும் மரியாதையும் மிக்கவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

6. பொறுப்புள்ள குடும்பத் தலைவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

7. பிறருக்குச் சுமையாக இருக்க விரும்பாதவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

8. நேர்மையானவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

9. சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை மிக்கவராகப்

படைக்கப்பட்டுள்ளார்.

*ஏதேனும் ஐந்து பாத்திரப்படைப்பை இன்றைய குடும்பத்

தலைவர்களுக்கு நல்வழிகாட்டியாகத் தொடர்புப்படுத்தி எழுத

வேண்டும்.

முடிவுரை : ஏற்புடையது

You might also like