Untitled Document 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 13

1

எதிர் மேல் முறையீட்டாளரின் எழுத்துப்பூர்வ வாதுரை

விரிவான வாதுரை

மேல் முறையீட்டு மனுதாரர் தொடுத்துள்ள சிறப்பு மேல்

முறையீட்டு மனு நிலைக்கத்தக்கதா ?அல்லது முன் தீர்ப்பு

தடை கோட்பாட்டின்படி இம்மேல்முறையீடு ஏற்கத்தக்கதா

மேல் முறையீட்டு மனுதாரர் தொடுத்துள்ள சிறப்பு மேல்

முறையீட்டு மனு நிலைக்கத்தக்கது அல்ல. முன் தீர்ப்பு

தடை கோட்பாட்டின்படி இம்மேல் முறையீடு

ஏற்கத்தக்கதும் இல்லை.

இதன் மூலம் இந்த மாண்பமை பொருந்திய உச்ச

நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது யாதெனில் இந்திய

அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 136 இன் படி சிறப்பு

மேல்முறையீட்டு மனு நிலைக்கத்தக்கது இல்லை

.உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 11 ன் படி முன்


2

தீர்ப்பு தடை கோட்பாடு மூலம் இம்மேல்முறையீடு

ஏற்கத்தக்கதும் இல்லை.1

1.1 இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 136 இன்

விளக்கம்

பிரிவு 136 உச்சநீதிமன்றத்தால் மேல்முறையீடு

செய்வதற்கான சிறப்பு அனுமதியை குறிக்கிறது. உச்ச

நீதிமன்றம் தன் விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தி

இந்தியாவில் எந்த ஒரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயமும்

வழங்கிய தீர்ப்பு ,ஆணை, தண்டனை அல்லது உத்தரவை

எதிர்த்து தன்னிடம் மேல்முறையீடு செய்து கொள்ள

சிறப்பு அனுமதி வழங்கும் மேற்படி ஷரத்து உச்ச

நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்திய ராணுவம்

தொடர்பான சட்டங்கள் வாயிலாக அமைக்கப்பட்ட

நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்கள் விலக்கி

வைக்கப்பட்டுள்ளன.

1.2 முன் தீர்ப்பு தடை கோட்பாட்டின் விளக்கமும்

நோக்கமும்

1 இந்திய அரசியலமைப்புச் சட்டம் 136 இன் விளக்கம்


3

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 11 ன் படி, “எந்த

ஒரு உரிமையியல் வழக்கிலும் அல்லது பிரச்சனையிலும்

நேரடியாக மற்றும் கணிசமான அளவில் பிரச்சனைகள்

இருக்கும் விஷயமானது ஒரே பாத்தியத்தின் கீழ்

வழக்காடும் ஒரே தரப்பினர்கள் இடையே அல்லது

அவர்கள் அல்லது அவர்களின் எவரும் எந்த

தரப்பினர்களின் கீழ் உரிமை கோருகின்றார்களோ அந்த

தரப்பினர்களிடையேயான ஒரு முந்திய வழக்கிலும்

அத்தகைய பிந்திய உரிமையியல் வழக்கை அல்லது

அத்தகைய பிந்திய பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிற

உரிமையியல் வழக்கை விசாரிப்பதற்கு தகுதி உடைய

ஒரு நீதிமன்றத்தில் நேரடியாக மற்றும் கணிசமான

அளவிலே பிரச்சனையில் இருந்திருந்து அத்தகைய

நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு அறுதியாக

தீர்மானிக்கப்பட்டு இருக்கையில் என் நீதிமன்றமும் அந்த

உரிமையியல் வழக்கை அல்லது பிரச்சனையை

விசாரித்தல் ஆகாது” என்பதை மிகத் தெளிவாக


4

கூறுகின்றது . இந்த 23
மாண்பமை பொருந்திய

நீதிமன்றத்தில் வாயிலாக பணிவன்போடு

சமர்ப்பிக்கின்றோம்.

நோக்கம்

ஆக இந்த பிரிவின் தலையாய நோக்கமே ,

“Nemo debt lis vexeri pro uno et eaden causa”

ஒருவன் ஒரே காரணத்திற்கு இரண்டு முறை துன்பத்திற்கு

ஆளாக கூடாது.

“Res judicata provaritate occipitur”

ஒரு நீதிமுறை தீர்ப்பு சரியானது தான் என ஏற்றுக்

கொள்ளப்பட வேண்டும் . சரியல்ல என்று தோன்றினால்

மேல்முறையீடு தான் செய்ய வேண்டுமே ஒழிய மீண்டும்

அதே காரணத்தைக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கிட

கூடாது என்பதே இதன் நோக்கமாகும் . முந்தைய

2 “ Nemo debt lis vexari pro uno et eaden causa”

“Res Judicata provaritate occipitur”

3
5

உரிமையியல் வழக்கில் தீர்மானிக்கப்பட்ட எந்த ஒரு

விஷயத்தையும் பிந்தைய உரிமையியல் வழக்கில் முன்

தீர்ப்பு தடையாக வாதுரைக்க முடியாது என்றும், ஒரு

விஷயத்தை முன் தீர்ப்பு தடையாக ஆக்குவதற்கு

பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

என்றும் பின்வரும் வழக்கில் உச்ச நீதிமன்றம்

குறிப்பிட்டுள்ளது.

Sheodan Singh vs. Daryao Kumar

i) மாண்பமை பொருந்திய இந்திய உச்ச நீதிமன்றம் இந்த

வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகளை மிக

தாழ்மையுடன் இங்கு சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ii) ஒரு பிந்தைய வழக்கில் அல்லது பிரச்சனையில்

நேரடியாக மற்றும் கணிசமான அளவில் பிரச்சனையில்

உள்ள விஷயமானது முந்தைய வழக்கில்

வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ

நேரடியாகவும் கணிசமான அளவிலும் பிரச்சனையில்

உள்ள அதே விஷயமாக இருத்தல் வேண்டும்.


6

iii) முந்தைய உரிமையியல் வழக்கானது அதே

தரப்பினர்களுக்கிடையிலான அல்லது அவர்கள் அல்லது

அவர்களின் எவரேனும் கீழ் உரிமை கோரும்

தரப்பினர்களிடையே எழுந்த ஒரு உரிமையியல் வழக்காக

இருக்க வேண்டும்.

iv) அத்தகு பரப்பினர்கள் முந்தைய உரிமையியல் வழக்கில்

அதே பாத்தியத்தின் கீழ் வழக்காட வேண்டும்.

v) முந்தைய வழக்கை விசாரித்து தீர்மானித்த நீதிமன்றம்

பிந்தைய வழக்கையும் அல்லது அத்தகப் பிரச்சனை

பின்னதாக எழுப்பப்பட்ட வழக்கையும் விசாரிக்க தகுதி

படைத்த ஒரு நீதிமன்றமாக இருத்தல் வேண்டும்.4

பிந்தைய வழக்கின் பிரச்சினையில் நேரடியாக மற்றும்

கணிசமான அளவில் உள்ள விஷயம் முந்தைய வழக்கில்

நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு அறுதியாக

தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Sivathanu and another vs. kaliammal

4 Sheodan Singh vs. Daryao Kumar AIR 1966 SC (1332) : (1966) 3 SCR 300
7

இந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூறியது இவ்வழக்கில் நீதியரசர் ரத்தினம் அவர்கள்

இக்கோட்பாட்டினை விவரமாக கூறியுள்ளார் .அதன்படி

இந்த “முன் தீர்ப்பு தடை” கோட்பாடானது இத்தடை புதிய

உண்மைகளையோ அல்லது அக்கறையோ உள்ளடக்காது

என்றும், முன் தீர்ப்பு சரியா அல்லது தவறா என்றும்

,இப்பிரிவு நோக்காது . தனிப்பட்டவர் ஒரே

காரணத்திற்கான இரு முறை அளக்களிக்கப்படுவதை

தடுக்கவும் வழக்கிற்கு முடிவு கட்டவுமே கோட்பாடு

கடைபிடிக்கப்படுகிறது எனவும் கோட்பாட்டினை பற்றி

தெளிவாக விளக்கிக் கூறுகிறார் என்பதனை மாண்பை

நீதிமன்றத்தில் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.5

P.M.A. Metropolitan Vs. Moran Mar Marthoma

ஒரு வழக்கானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்

விசாரிக்கப்பட்டு நியாயமான தகுதியான முறையில்

தீர்ப்புகள் கொடுக்கப்பட்டவுடன் அத் தீர்ப்பே இறுதியானது.

மீண்டும் அதே வழக்கிற்கான காரணத்தைக் கொண்டு

அதே வழக்கின் தரப்பினர்கள் வேறொரு நீதிமன்றங்களில்

5 Sivathanu and another vs. Kaliammal 1983 (II) M.L.J. 110


P.M.A. Metropolitan Vs Moran Mar Marthoma (1955 AIR SCW 3133 )
8

வழக்கினை தொடுக்க முடியாது. ஏனென்றால்

மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பே

இறுதியான தீர்ப்பாக கருதப்பட்டு விடும். இந்த வழக்கில்

கூறியுள்ளவை என்னவென்றால் மேல்முறையீட்டு

நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பே இறுதியானது என்றும்

தீர்ப்பினை எதிர்த்து வேறொரு நீதிமன்றங்களில் மீண்டும்

அதே வழக்கிற்கான காரணங்கள் அடிப்படையில் வழக்கு

தொடுத்தால் அந்த வழக்கை “முன் தீர்ப்பு தடையாக”

எடுத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளதை

மாண்பமை பொருந்திய நீதிமன்றத்தில் பணிவன்புடன்

சமர்ப்பிக்கிறோம் .

Ramo Barman Vs.Dagripriya


இந்த வழக்கில் நீதிமன்றமானது முன் தீர்ப்பு தடை

கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது

அதாவது ஒரு வழக்கானது இந்திய அரசியலமைப்பு

சட்டம் ஷரத்து 226 இன் கீழ் ஒரு வழக்கு உயர்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பொழுது அந்த

வழக்கிற்கு எதிராக முன் தீர்ப்பு தடையை பயன்படுத்திக்

கொள்ள முடியும் என்பதனை கூறியுள்ளது என்பதை


9

மாண்பமை பொருந்திய நீதிமன்றத்தில் பணிவன்புடன்

சமர்ப்பிக்கிறோம்.

கொள்நிலை முன் தீர்ப்புத்தடை கோட்பாடு

நேரடி விவாத விஷயம் குறித்து விசாரணை செய்யப்பட்டு

நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பின்

அவ்விவாத விஷயம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதப்படும்

.6அதே விவாத விஷயம் குறித்து மீண்டும் மறு வழக்கிற்கு

நீதிமன்றம் அனுமதிக்காது . இவ்வாறு நேரடி விவாத

விஷயம் காரணமாக தடை செய்யப்படும் வழக்கு

தடைக்கு “நேரடி முன் தீர்ப்பு தடை” 7என்று பெயர் .

முன்னாள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரச்சினையில்

உள்ள கொள்நிலை விவாத விஷயம் காரணமாக

பின்னால் தாக்கல் செய்யப்படும் வழக்கு தடை

செய்யப்படும் . இப்படி கொள்நிலை விவாத விஷயம்

காரணமாக தடை செய்யப்படும் வழக்கு தடைக்கு

கொள்நிலை முன் தீர்ப்பு தடை என்று பெயர்.

6 Ramo Barman Vs.Dagripriya AIR 1992 Gaw 72


7 Venugopal pillai vs Sri kanchaleeswarar Devasthanam, kanchipuram 1983 (II) M.L.J.365
10

Venugopal pillai vs. Sri kanchaleeswarar Devasthanam ,


kanchipuram

ஒரு வழக்கில் வாதி சொல்லிருக்க வேண்டிய

விஷயங்களை சொல்லாமலும் ,அதை பிரதிவாதி

மறுத்திருக்க முடியாத சூழ்நிலையிலும் தோன்றும் விவாத

விஷயங்கள் “கொள்நிலை விவாத விஷயங்களாகும்”

இவ்வாறு சொல்லாது போனாலும் அவ்விவாத விஷயம்

இறுதியானதாகும் . அவ்வழக்கில் கொடுக்கப்படும் தீர்ப்பு

அக்கொள் நிலை விவாத விஷயத்தையும் கட்டுப்படுத்தும்

. எனவே அவ்வாறு வாதி சொல்லாமலும் விட்ட

விஷயங்களை மீண்டும் சொல்லி அக்கொள்நிலையின்

விவாத விஷயம் குறித்து மீண்டும் மறு வழக்கிட

நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறியுள்ளதை

மாண்பமை பொருந்திய நீதிமன்றத்தில் பணிவன்புடன்

சமர்ப்பிக்கிறோம் .

State of U.P.N. Nawab Hussain

இந்த வழக்கில் , வாதி முதலில் ஒரு வழக்கினை

தொடுக்கும்பொழுது அந்த வழக்கிலேயே அவரது

தரப்பினாலான ஆட்சபனைகளை தெரிவிப்பதற்கு


11

அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும் அவர் அந்த

வழக்கிற்கான ஆட்சியேபனைகளை தெரிவிக்காமல்

மீண்டும் அதே வழக்கிற்கான விசாரணை

செய்யப்படுவதற்கு வேறொரு நீதிமன்றத்தில் வழக்கினை

தொடுத்து ஆட்சபனைகளை தெரிவித்தல் முடியாது .

ஏனென்றால் முதல் வழக்கிலேயே வாதிக்கு அவர் தரப்பு

ஆட்சேபனைகள் தெரிந்திருந்தும் அதை கூறாமல் இருந்து

மீண்டும் அதே ஒரு வழக்கினை வேறொரு நீதிமன்றத்தில்

தொடுத்து ஆட்சபனைகளை தெரிவிப்பது கொள்நிலை

முன்பு தடையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதன்

அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்

என்றும் கூறப்படுகிறது என்பதை மாண்பமை பொருந்திய

நீதிமன்றத்தில் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றோம் .

எதிர் மேல்முறையீட்டாளர் தரப்பு வாதம்

ஆகவே இந்த மாண்பமைபொருந்திய உச்ச நீதிமன்றத்தில்

எதிர் மேல்முறையீட்டாளராக சமர்ப்பிப்பது யாதெனில்,

இந்த வழக்கில் தாஹிரா பேகம் அவர் கொடுத்த முதல்

வழக்கிலேயே தனது பெற்றோர் படிக்கத் தெரியாதவர்


12

என்றும், அவருக்கு கையெழுத்து போடத் தெரியாது

என்றும், கைரேகை தான் வைப்பார் என்றும் ,எந்த

விஷயத்தையும் சொல்லாமல் பிறிதொரு வழக்கில்

இதனை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர்

தொடுத்த நீதிப்பேராணை மனுவினை முன் தீர்ப்பு தடை

கோட்பாட்டின்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

செய்தது 8இதனை எதிர்த்து இவர் உச்ச நீதிமன்றத்திற்கு

சிறப்பு மேல்முறையீடு மனு செய்வது

ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை . 9ஏனென்றால்

இவ்வழக்கின் மனுதாரர் எதிர்மனுதாரரான ரஹ்மான்

அலியின் வாரிசுதாரர்களை வேண்டுமென்றே அலையவிட

வேண்டும் 10
என்பதற்காகவே இவ்வழக்கானது இந்திய

அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 136 இன் படி சிறப்பு

மேல்முறையீட்டு மனுவின் மூலம் உச்ச நீதிமன்றத்தில்

வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளார் என்பதே உண்மை .

ஆதலால் வழக்கின் மனுதாரர் சிறப்ப மேல் முறையீட்டு

மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஏற்றுக்கொள்ள

தக்கது இல்லை என்பதே எதிர் மேல்முறையீட்டாளர் தரப்பு

8 எதிர் மேல்முறையீட்டாளர் தரப்பு வாதம்


9 எதிர் மேல்முறையீட்டாளர் தரப்பு வாதம்
10
13

வாதமாகும் என்பது பணிவன்புடன் மாண்பமை பொருந்திய

நீதிமன்றத்தில் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்.

You might also like