Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

விக்டோரியா பொது மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விக்டோரியா பொது மண்டபம் அல்லது
டவுன் ஹால் (Victoria Public Hall) என்பது விக்டோரியா பொது மண்டபம்
சென்னையில் உள்ள வரலாற்று Victoria Public Hall
சிறப்புமிக்க ஒரு கட்டடம் ஆகும். டவுன் ஹால்
இக்கட்டடதுக்கு விக்டோரியா
மகாராணியின் பெயர் இடப்பட்டது.
விக்டோரியா மகாராணியின்
பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட
இது,[1] பிரித்தானிய கட்டிடக்கலையில்,
சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு
சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக
உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலும் இது ஒரு நாடக The Victoria Public Hall
அரங்கமாகவும், மாநாட்டு அரங்கமாகவும்
பயன்படுத்தப்பட்டது. இது தற்போது
தென்னிந்திய தடகள சங்கத்தின் வசம்
உள்ளது.

வரலாறு
1882 மார்ச்சில் சென்னை ஜார்ஜ் டவுனின்
பச்சையப்பா மண்டபத்தில் சென்னையில்
வசித்து வந்த முக்கியப் பிரமுகர்கள் ஒன்று
கூடி, சென்னை நகரில் ஒரு டவுன் ஹால் பொதுவான தகவல்கள்
கட்ட முடிவு செய்தனர். இந்த திட்டத்தை வகை பொதுக் கட்டடம்
நிறைவேற்ற, அக்கூட்டத்தில் கலந்து
கட்டிடக்கலை பாணி இந்தோ
கொண்ட 30 பேரால் சுமார் 16,425 ரூபாய் சாரசெனிக்
திரட்டப்பட்டதோடு, இந்தத் திட்டத்தை
இடம் சென்னை,
நிறைவேற்றுவதற்காக 12 பேரைக்
பூந்தமல்லி
கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலை
இதைத் தொடர்ந்து அன்றைய சென்னை
மாநகராட்சி, 1883 திசம்பர் 17 அன்று முகவரி தமிழ்நாடு,
‘பீப்பிள்ஸ் பார்க்’ என்ற பகுதியில் இருந்து பூங்கா நகர் 600
57 கிரவுண்ட் (3.14 ஏக்கர்) நிலத்தை 003
ஒதுக்கிக் கொடுத்தது. ஒரு கிரவுண்ட் கட்டுமான ஆரம்பம் 1886
இடத்துக்கு எட்டு அணாக்கள் வீதம் ரூபாய் நிறைவுற்றது 1888-1890
28ஐ ஆண்டுதோறும் வாடகையாகச்
துவக்கம் 1888-1890
செலுத்த வேண்டும் என்ற
செலவு ₹ 16,425
நிபந்தனையுடன் 99 ஆண்டுகள் உரிமையாளர் சென்னை
குத்தகைக்குக் கொடுப்பட்டது. இதைத் மாநகராட்சி
தொடர்ந்து 1883 திசம்பர் 17 ஆம் நாள் மேலாண்மை விக்டோரியா
விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீ பௌசபதி பப்ளிக் ஹால்
அனந்த கஜபதி ராஜு, புதிய கட்டிடத்திற்கு அறக்கட்டளை
அடிக்கல் நாட்டினார். மேலும் கட்டடம் கட்ட
தொழில்நுட்ப விபரங்கள்
நன்கொடை மொத்தும் ரூபாய் 10000ஐ
அளித்த 35 பேரின் பெயர் பொறித்த தள எண்ணிக்கை 3

கல்வெட்டையும் பதித்தார். தளப்பரப்பு 25,883 sq ft


இந்தப்பட்டியலில் திருவிதாங்கூர் மன்னர் (2,000 m2)
(₹ 8,000), மைசூர் மன்னர், புதுக்கோட்டை வடிவமைப்பும் கட்டுமானமும்
மன்னர், சென்னை உயர்நீதிமன்ற கட்டிடக்கலைஞர்(கள்) ராபர்ட் சிசோம்
முன்னாள் நீதியரசர் முத்துசாமி ஐயர்
அமைப்புப் நம்பெருமாள்
(இவர்கள் தலா ₹ 1,000 ), நகரத்தை
பொறியாளர் செட்டியார்
அடிப்படையாக கொண்டு இயங்கிய பி. ஓர்
அண்டு சன்ஸ் என்ற கடிகார நிறுவனம் (₹
1,400) மற்றும் பிற நன்கொடையாளர்களாக
இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி, எட்டையபுரம்
சமீன்தார், ஹாஜி அப்துல் பச்சா சாஹிப்
போன்றோர்கள் ஆவர்.[2] இதன் கட்டுமானம் ஐந்து
ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.
விக்டோரியா பப்ளிக் ஹால்
இந்த அரங்கமானது இந்தோ சாரசெனிக் பாணி
கட்டடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இதை
ராபர்ட் சிசோமால் (1840-1915) ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையால்
வடிவமைக்கப்பட்டு, நம்பெருமாள் செட்டியாரால் 1888 முதல் 1890 வரையிலான
காலகட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது 1887 ஆம் ஆண்டு கன்னிமார பிரபுவால்
திறக்கப்பட்டது, வேரொரு தரவானது 1886-1890 ஆண்டுகளில் சென்னை மாகாண
கவர்னராக இருந்த சர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்பால் இந்த
மண்டபத்தை திறந்து வைத்தார் என்கிறது. அக்கால சென்னை மாநகராட்சி
தலைவரான ஏ. டி. அருண்டேலின் முன்முயற்சியின்பேரில், 1888 சனவரியில் நடந்த,
நகர மக்கள் கூட்டத்தில், கட்டடத்துக்கு விக்டோரியா மகாராணியின் பெயரைச் சூட்ட
முடிவு செய்யப்பட்டது.[3]

விரைவில் இந்த மண்டபமானது ஒரு முக்கியமான பொது மற்றும் சமூக


நிகழ்வுகளுக்கான இடமாக மாறியது. மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர்
போன்ற பல புகழ்பெற்ற நபர்கள் இந்த அரங்குக்கு வந்துள்ளனர். சுவாமி
விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே, சுப்பிரமணிய பாரதியார், சர்தார்
வல்லபாய் படேல் போன்ற தேசிய தலைவர்கள் இந்த அரங்கில் கூட்டங்களை
நடத்தியுள்ளனர். தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு போன்ற தெலுங்கு நாடக
முன்னோடிகள், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ்
நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கு நடத்தினர்.

1891 ஆம் ஆண்டு ராவ் பகதூர் பம்மல் சம்பந்த முதலியாரால் நிறுவப்பட்ட சுகுண
விலாச சபா இந்த அரங்குடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது.
சென்னையின் முதல் மாலை நேர நாடக நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. 1906
அக்டோபரில், காதலர் கண்கள் என்னும் நாடகம் இந்த அரங்கில் நடத்தப்பட்டது.
பிற்காலத்தில் சபாவானது அண்ணா சாலை தேவாலயத்துக்கு அருகில் 36
கிரவுண்டு இடத்தை வாங்கி தன் சொந்தக் கட்டிடத்துக்கு இடம்பெயர்ந்த்து.
அதுவரை அதாவது 1935வரை சுமார் 33 ஆண்டுகள் இங்கேயே அது நாடகங்களை
நடத்தி மக்களை மகிழ்வித்திருந்தது.

சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது இங்குதான். மெட்ராஸ்


போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீவன்சன் என்பவர் பத்து
குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார்.[4]

நகரம் தெற்குப் பகுதியில் வளர்ந்ததாலும், திரைப்பட ஊடகம் மிகுந்த


பிரபலமடைந்ததாலும், இக்கட்டடம் படிப்படியாக பொது கவனத்திலிருந்து
விலகியது. 1985 ஆம் ஆண்டில் குத்தகைக் காலம் முடிவடைந்ததையடுத்து, குத்தகை
ஒப்பந்தத்தை நீட்டிக்க மாநகராட்சி விரும்பாததால், ஒரு சட்டப் போராட்டம் ஏற்பட்டது.
இந்த விசயத்தில் ஒரு சமரசம் எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டட வளாகத்தின்
பகுதிகள் உள்குத்தகை விடப்பட்டுள்ளதை எதிர்த்த மனு நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படது.[5] அரங்கத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிகள் அரங்கம்
புதிப்பிக்கப்பட்ட 2010க்கு முன்பு பல்வேறு அமைப்புகளால்
ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அரங்கத்துக்கு சொந்தமான 5.25 கிரவுண்ட் இடத்தை
ஆக்கிரமித்து கட்டப்பட்ட, ஒரு கட்டிடத்தில் ஆந்திர மகிளா சபா செயல்பட்டு வந்தது.
2010 புனரமைப்பின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. விக்டோரியா
பப்ளிக் ஹால் அறக்கட்டளையிடமிருந்து ஹோட்டல் பிக்னிக் என்ற ஒரு தனியார்
ஓட்டலுக்கு, உள் குத்தகையாக 13 கிரவுண்ட் இடம் அளிக்கப்பட்டிருந்தது அந்த
குத்தகை 1985 ஏப்ரல் 13 அன்று முடிந்தது. ஓட்டலானது மாநகராட்சிக்கு மாதாந்திர
வாடகையாக ரூபாய் 4,000 ரூபாயை செலுத்தியது. அந்த இடத்தை சென்னை
மாநகராட்சிவசம் ஒப்படைக்குமாறு 2010இல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.[6][7]
அரங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 32 கடைகள்
புதுப்பித்தலின்போது அகற்றப்பட்டன.

கட்டடம்
இந்தக் கட்டடமானது ஈ. வே. ரா. பெரியார் சாலையில் மூர் மார்கெட்டுக்கு அருகில்,
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கும், ரிப்பன் மாளிகை
கட்டிடத்துக்கும் இடையில் உள்ளது. இத்தாலிய பாணி கோபுரத்தின் உச்சியில்
திருவிதாங்கூர் கூரையுடன், செந்நிற சீன செராமிக் கற்களால் கட்டப்பட்ட
மூன்றடுக்கு மன்றமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடமே விக்டோரியா பப்ளிக்
ஹால் ஆகும். இதன் தரைதளக் கட்டடமானது 13,342 சதுர அடி பரப்பளவில் உள்ளது.
முதலாவது தளமானது 12,541 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. தரைதளம் மற்றும்
முதல் தளங்களில், இரண்டு பெரிய கூடங்களாக ஒவ்வொன்றிலும் 600-க்கும்
மேற்பட்டவர்கள் அமரத்தக்கவாறும், அதனுடன் 200 பேருக்கு மேற்பட்டவர்கள்
அமரக்கூடியதாக மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகம் அமைந்துள்ளது.[8]

சீரமைப்பு
1967 அக்டோபரில் அரங்கத்தில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கி, அப்போதைய
முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரையால் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அர்ப்பணிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கட்டிடம் 40
ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. 1990களின் துவக்கத்தில்,
சென்னையின் அப்போதைய செரீப் சுரேஷ் கிருஷ்ணா, கட்டிடத்தின் ஒரு பகுதியை
அழிவிலிருந்து காக்க சில முயற்சிகளை எடுத்தார். முன்னாள் மகாராட்டிர ஆளுநர்
சி. சுப்ரமணியம், இந்த கட்டிடத்தை 1993 திசம்பரில் புனரமைத்தார்.

சென்னை மாநகராட்சியானது 2009 ஏப்ரலில் சவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற


புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் 39.6 மில்லியன் ரூபாய் செலவில் மண்டபத்தை
புதுப்பிக்கத் தொடங்கியது. இந்தப் புணரமைப்புப் பணிகளில் சேதமடைந்த
கூரையை மாற்றுதல் மற்றும் மரத் தரையையும், மாடிப்படிகளையும் சரிசெய்தல்
போன்ற பணிகள் உள்ளடக்கிதாக இருந்தது. இதன் கூரையானது தேக்கு
மரத்தினால் சீரமைக்கப்பட்டு, மங்களூர் ஓடுகள் கட்டிடத்தை அழகுபடுத்துகின்றன.
பழைய கடப்பா கற்களுக்கு பதிலாக ஓரளவு பளபளப்பான கற்கள் அண்மையில்
பதிக்கப்பட்டன.

பராமரிப்பு வேலை முடிந்தபிறகு, தரைத் தளத்தில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள்


நடத்தப்பட உள்ளன. முதல் தளமானது கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த
பயன்படுத்தப்பட உள்ளது.[9] இந்த அரங்கமானது 600 பேரைக் கொண்டிருக்கும்
வகையில், பணிகள் முடிக்கப்பட்டன.[10]

மேலும் காண்க
சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள்

மேற்கோள்கள்
1. "Victoria Public Hall - Chennai, South India" (http://indiancolumbus.blogspot.com/2011/02/vi
ctoria-public-hall-chennai-south.html). Indian Columbus. 14 February 2011. பார்க்கப்பட்ட
நாள் 30 Oct 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
2. "Inauguration of Victoria Public Hall delayed" (http://expressbuzz.com/cities/chennai/inaugur
ation-of-victoria-public-hall-delayed/295108.html). Express Buzz (Express Buzz). 18 July
2011. http://expressbuzz.com/cities/chennai/inauguration-of-victoria-public-hall-
delayed/295108.html. பார்த்த நாள்: 30 Oct 2011.
3. Ramakrishnan, T. (18 July 2006). "Victoria Public Hall likely to get new life" (https://web.archi
ve.org/web/20071220090417/http://www.hindu.com/2006/07/18/stories/2006071803400200.
htm). The Hindu (Chennai) இம் மூலத்தில் இருந்து (http://www.hindu.com/2006/07/18/stor
ies/2006071803400200.htm) 20 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/20071220090417/http://www.hindu.com/2006/07/18/stories/2006
071803400200.htm. பார்த்த நாள்: 29 Oct 2011.
4. Ramakrishnan, Deepa H. (29 January 2012). "Refurbished Victoria Public Hall likely to be
thrown open in June" (http://www.thehindu.com/news/cities/chennai/article2840572.ece).
The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/article2840572.ece.
பார்த்த நாள்: 31 Jan 2012.
5. Ramakrishnan, Deepa H. (12 April 2009). "Corporation takes over Victoria Public Hall" (http
s://web.archive.org/web/20090415152813/http://www.hindu.com/2009/04/12/stories/2009041
259370400.htm). The Hindu (Chennai) இம் மூலத்தில் இருந்து (http://www.hindu.com/20
09/04/12/stories/2009041259370400.htm) 15 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/20090415152813/http://www.hindu.com/2009/04/12/stories/2009
041259370400.htm. பார்த்த நாள்: 30 Oct 2011.
6. "HC clears takeover of Hotel Picnic" (https://web.archive.org/web/20111011123858/http://ww
w.infomagic.com/news/news_details.aspx?newsid=3569&title=HC-clears-takeover-of-Hotel-
Picnic). The Times of India (InfoMagic.com). 16 September 2011 இம் மூலத்தில் இருந்து
(http://www.infomagic.com/news/news_details.aspx?newsid=3569&title=HC-clears-takeover
-of-Hotel-Picnic) 11 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/20111011123858/http://www.infomagic.com/news/news_details.
aspx?newsid=3569&title=HC-clears-takeover-of-Hotel-Picnic. பார்த்த நாள்: 30 Oct 2011.
7. TNN (29 October 2011). "Long legal dispute ends, corpn takes over hotel" (https://archive.tod
ay/20130126055038/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-29/chennai/3033636
7_1_legal-battle-ripon-buildings-metro-station). The Times of India (Chennai: The Times
Group) இம் மூலத்தில் இருந்து (http://articles.timesofindia.indiatimes.com/2011-10-29/che
nnai/30336367_1_legal-battle-ripon-buildings-metro-station) 26 ஜனவரி 2013 அன்று.
பரணிடப்பட்டது..
https://archive.today/20130126055038/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-
29/chennai/30336367_1_legal-battle-ripon-buildings-metro-station. பார்த்த நாள்: 29 Oct
2011.
8. Ramakrishnan, Deepa H. (17 January 2010). "Victoria Public Hall repair works to begin
tomorrow" (https://web.archive.org/web/20100125220321/http://www.hindu.com/2010/01/17/s
tories/2010011759710300.htm). The Hindu (Chennai) இம் மூலத்தில் இருந்து (http://ww
w.hindu.com/2010/01/17/stories/2010011759710300.htm) 25 ஜனவரி 2010 அன்று.
பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/20100125220321/http://www.hindu.com/2010/01/17/stories/2010
011759710300.htm. பார்த்த நாள்: 30 Oct 2011.
9. "Victoria Public Hall restoration to be completed by June" (http://www.thehindu.com/news/citi
es/Chennai/article1986368.ece). The Hindu (Chennai). 3 May 2011.
http://www.thehindu.com/news/cities/Chennai/article1986368.ece. பார்த்த நாள்: 29 Oct
2011.
10. "Victoria Hall spruce-up to be over by Aug" (https://web.archive.org/web/20120910202856/htt
p://articles.timesofindia.indiatimes.com/2011-07-14/chennai/29772424_1_victoria-public-hall
-restoration-floor). The Times of India (Chennai: The Times Group). 14 July 2011 இம்
மூலத்தில் இருந்து (http://articles.timesofindia.indiatimes.com/2011-07-14/chennai/297724
24_1_victoria-public-hall-restoration-floor) 10 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/20120910202856/http://articles.timesofindia.indiatimes.com/201
1-07-14/chennai/29772424_1_victoria-public-hall-restoration-floor. பார்த்த நாள்: 16 Jul
2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_பொது_மண்டபம்&oldid=3437862" இலிருந்து
மீள்விக்கப்பட்டது

You might also like