Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

26.01.

1983 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுபன்


_________________________________________________________________________________________________________

வள்ளலின் குழந்தைகள் ஆகி அனைவருக்கும் சகயோகம் கொடுங்கள்.

இன்று பாப்தாதா தன்னுடைய சேவாதாரி துணையானவர்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்.


எப்படி தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து கொண்டு எல்லைக்கப்பாற்பட்ட
சேவைக்காக பொறுப்பாளராக இருக்கிறார், அதே போல் நீங்கள் அனைவரும் இவ்வுலகில் உயர்ந்த
ஸ்தானத்தில் இருந்துக் கொண்டு எல்லைக்கப்பாற்பட்ட சேவைக்காக பொறுப்பாளர்களாக
இருக்கிறீர்கள். அந்த ஸ்தானத்தின் பக்கம் தான் அனேக ஆத்மாக்களின் பார்வை இருக்கிறது. எப்படி
தந்தையின் யதார்த்த ஸ்தானத்தை தெரிந்திருக்காவிட்டாலும் அனைவரின் பார்வை இருந்தும் மேல்
பக்கம் தான் செல்கிறது, அதே போல் இவ்வுலகில் அனைத்து ஆத்மாக்களின் பார்வை இந்த மஹான்
ஸ்தானத்தின் மேல் தான் சென்று கொண்டிருக்கிறது. மேலும் செல்லும் இதுவரையிலும் எங்கே
இருக்கிறது? என்ற இதே தேடுதல் இருக்கிறார்கள். ஏதாவது உயர்ந்த புகடலிம் கிடைக்க வேண்டும்
என்று நினைக்கிறார்கள். ஆனால் அதுவே இந்த இடம் என்று தெரிந்து கொள்வதற்காக
நாலாபுறங்களிலும் அறிமுகம் கொடுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த
எல்லைக்கப்பாற்பட்ட விசேஷ காரியம் தான், கிடைக்க வேண்டும் அல்லது அடைய வேண்டும்
என்றால் இங்கிருந்து தான் என்று இந்த சேவையை பிரசித்தியாக்கும். இது தான் நம்முடைய
சிரேஷ்ட புகடலிம்.உலகின் இந்த மூலையிலிருந்து தான் நிரந்தரமான வாழ்க்கையின் தானம்
கிடைக்கும். இந்த எல்லைக்கப்பாற்பட்ட காரியம் மூலமாக இந்த விளம்பரம் விசால ரூபத்தில்
ஆகும். எப்படி நிலத்திற்கடியில்புதைந்திருந்த, மறைந்திருந்த பொருள் திடீரென்று கிடைத்து
விட்டால் மிகவும் குஷியோடு அனைத்து பக்கங்களிலும் பிரச்சாரம் செய்வார்கள். அதே போலவே
இப்பொழுது குப்தமாக (மறைவாக) இருக்கும் ஆத்மீக பொக்கிஷங்கள் கிடைக்கும் ஸ்தானத்தை
அனுபவத்தின் கண்கள் மூலமாகப் பார்த்து, இழந்த மற்றும் தொலைத்து விட்ட குப்த
பொக்கிஷங்களின் ஸ்தானம் மீண்டும் கிடைத்து விட்டது என்று நினைப்பார்கள். மெது, மெதுவாக
அனைவரின் மனதிலிருந்தும், வாயிலிருந்தும் இந்த மாதிரியான மூலையில் இவ்வளவு
பிராப்திக்கான ஸ்தானம் இருக்கிறது என்ற வார்த்தை வெளியாகும். இதையோ மிக அதிகமாக
பிரசித்த ஆக்குங்கள். பிறகு விசித்திர தந்தை, விசித்திர லீலை, மற்றும் விசித்திர ஸ்தானம், இதைப்
பார்த்துப் பார்த்தே மகிழ்ச்சியடைவார்கள்,. அதிசயமான விஷயம், அதிசயக் காரியம் என்று
அனைவரிடமிருந்து இதைத் தான் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், அந்த மாதிரி சதாக் கால
அனுபவம் செய்விப்பதற்காக என்ன என்ன தயார் செய்திருக்கிறீர்கள்?

ஹாலையோ (பெரிய அறை) தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள், ஹாலின் கூடவே நடைத்தையும்


சரியாக இருக்கிறதா? ஹாலின் கூடவே நடத்தையும் பார்ப்பார்கள் இல்லையா! ஹாலும் மற்றும்
சாலும் (நடத்தை) எல்லைக்கப்பாற்பட்ட மற்றும் விசாலமாக இருக்கிறது தான் இல்லையா! எப்படி
வேலையாட்களிலிருந்து பெரிய பெரிய பொறியாளர்கள் இருவர்களின் சகயோகம் மற்றும்
அனைவரும் குழுவாக இருந்து ஹாலின் அழகான ரூபத்தை தயார் செய்திருக்கிறீர்கள். ஒருவேளை
வேலை செய்பவர்கள் இல்லையென்றால் பொறியாளர்களும் என்ன செய்ய முடியும்! அவர்கள்
காகிதத்தில் கட்டிட வடிவத்தை வரைய முடியும். ஆனால் அதன் நடைமுறை சொரூபமோ இந்த
வேலை செய்பவர்கள் இல்லாமல் ஆகாது தான் இல்லையா! எப்படி ஸ்தூல சகயோகத்தின்
ஆதாரத்தில் ஒவ்வொருவரும் விரல் கொடுத்ததினால் ஹால் தயாராகி விட்டது. அந்த மாதிரி
ஹாலின் கூடவே அதிசயமான நடத்தையைக் காண்பிப்பதற்காக அந்த மாதிரியான விசேஷ
சொரூபத்தை பிரத்யக்ஷ ரூபத்தில் காண்பியுங்கள். புத்தியில் எண்ணத்தை மட்டும் வைத்தீர்கள்
என்றிருக்க வேண்டாம். ஆனால் எப்படி பொறியாளரின் புத்தியின் உதவி மற்றும் வேலையாட்கள்
செய்த வேலையின் உதவி மூலம் காரியம் நிறைவேறியது. இதே முறையில் மனதின் சிரேஷ்ட
எண்ணத்தின் கூடவே ஒவ்வொரு காரியம் மூலமாகவும் விசித்திர நடவடிக்கைகளின் அனுபவம்
ஆகவேண்டும். ஒவ்வொரு காரியம் மூலமாகத்தான் பிரத்யக்ஷ சொரூபம் தென்படும். எனவே அந்த
மாதிரி நடப்பது மற்றும் செய்வதை எண்ணம், வார்த்தை, கை மற்றும் கால் மூலம் குழு ரூபத்தில்,
விசித்திர சொரூபம் மூலம் காண்பிப்பதற்காக எண்ணத்தை வைத்தீர்களா? அந்த மாதிரியான
நடத்தைக்கான வரைபடத்தைத் தயார் செய்திருக்கிறீர்களா? 3 ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை
மட்டுமல்ல, ஆனால் 3 ஆயிரத்தில் எப்பொழுதும் மும்மூர்த்திகள் தென்பட வேண்டும். இவர்கள்
அனைவரும் பிரம்மாவிற்குச் சமமாக கர்மயோகி, விஷ்ணுவிற்குச் சமமாக அன்பு மற்றும் சக்தி
மூலம் பாலனை செய்பவர்கள், சங்கருக்குச் சமமாக தபஸ்யாவின் வாயுமண்டலத்தை
உருவாக்குபவர்கள் என்று ஒவ்வொருவர் மூலமாக அனுபவம் ஆகவேண்டும். அந்த மாதிரி தனக்குள்
அனைத்து சக்திகளின் ஸ்டாக்கை(கையிருப்பை) சேமித்திருக்கிறீர்களா? இந்த பண்டாராவையும்
நிரப்பியிருக்கிறீர்களா? இந்த இருப்பை சோதனை செய்திருக்கிறீர்களா? அல்லது சோதனை செய்ய நேரமே
இல்லாதது போல் பிஸியாகி விட்டீர்களா?

சேவையின் அழியாத வெற்றிக்காக தன்னுடைய விசேஷ எந்த பரிவர்த்தனையின் (மாற்றம்) ஆஹீதி


(அர்ப்பணம்) போடுவீர்கள்? அப்படி தனக்குத் தானே திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா?
அனைத்தையும் விட மிகப்பெரிய கொடை-வள்ளலின் குழந்தையாகி அனைவருக்கும் சகயோகம்
கொடுப்பது. கெட்டுப் போன காரியத்தை, கெட்டுப் போன சமஸ்காரத்தை, கெட்டுப்போன
மனநிலையை, சுபபாவனை வைத்து பரிவர்த்தனை செய்வதில் எப்பொழுதும் அனைவரின் சகயோகி
ஆவது என்ற இது தான் அனைத்தையும் விட மிகப்பெரிய கொடை. இவர் இதைச் சொன்னார், இதைச்
செய்தார் என்பதை பார்த்தும், கேட்டும், புரிந்து கொண்ட போதிலும் தன்னுடைய சகயோகத்தின்
கையிருப்பு மூலமாக பரிவர்த்தனை செய்து விடுவது. எப்படி ஏதாவது காலி இடம் இருக்கிறது
என்றால் அனைத்து விதமான சேவை செய்பவர் நேரத்திற்கு தகுந்தாற் போல் இடத்தை நிரப்பி
விடுவார், அந்த மாதிரி ஒரு வேளை யார் மூலமாவது ஏதாவது சக்தியின் குறை அனுபவம்
ஆகிறதுஎன்றாலும் தன்னுடைய சகயோகம் மூலம் மற்றவர்களின் குறை கூட வேறு யாருக்கும்
அனுபவம் ஆக வேண்டாம். இதைத் தான் வள்ளலின் குழந்தையாகி நேரத்திற்குத் தகுந்தபடி
அவருக்கு சகயோகத்தின் கொடை கொடுப்பது. இவர் இதைச் செய்தார், அந்த மாதிரி செய்தார் என்று
யோசிக்காதீர்கள், ஆனால் என்ன நடக்க வேண்டுமோ, அதைச் செய்து கொண்டே இருங்கள்.
யாருடைய குறையையும் பார்க்காதீர்கள், ஆனால் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள்.
நல்லதிலும் நல்லதாக என்ன நடக்க முடியுமோ, அதை யோசிக்க மட்டும் கூடாது, ஆனால் செய்ய
வேண்டும். இதைத் தான் விசித்திர நடவடிக்கையின் பிரத்யக்ஷ சொரூபம் என்று கூறுவது.
எப்பொழுதும் மிக நல்லது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் எப்பொழுதும் மிக நல்லது செய்து
கொண்டிருக்க வேண்டும் என்ற இந்த சக்திசாலியான எண்ணத்தைத் தான் தன்னுடன் வைத்துக்
கொள்ள வேண்டும், வர்ணனை மட்டும் செய்ய வேண்டாம். ஆனால் நிவாரணம் செய்து கொண்டே,
புதுப் படைப்பின் காரியத்தின் வெற்றியை பார்த்துக் கொண்டும், காண்பித்துக் கொண்டும் இருக்க
வேண்டும், அந்த மாதிரி ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது தான் இல்லையா? ஏனென்றால்
அனைவரின் பொறுப்பு இருந்த போதிலும் விசேஷமாக மதுபன் நிவாசிகளுக்கு பொறுப்பு இருக்கிறது.
இரட்டை பொறுப்பை எடுத்திருக்கிறீர்கள் தான் இல்லையா? எப்படி ஹாலின் திறப்பு விழா
ஆகிவிட்டது என்றால் (நன்) நடத்தையின் துவக்க விழாவும் ஆகிவிட்டதா? அதன் ஒத்திகையும்
நடந்ததா அல்லது இல்லையா? இரண்டின் இணைதல் ஆனால் தான் வெற்றி முழக்கம் நாலா
புறங்களின் வரை சென்றடையும். எவ்வளவு உயர்ந்த ஸ்தானமாக இருக்கிறதோ அந்தளவு ஒளி
நாலாபுறங்களிலும் அதிகமாகப் பரவும். இதுவோ அனைத்தையும் விட உயர்ந்த ஸ்தானம். எனவே
இங்கிருந்து வெளிப்படும் ஓசை நாலாபுறங்கள் வரை சென்றடைய வேண்டும். அதற்காக லைட் -
மைட் ஹவுஸ் ஆக வேண்டும். நல்லது.

எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்தி சம்பன்னமாக்கி சாட்சாத் தந்தை


சொரூபமாகி அனைவருக்கும் சாட்சாத்காரம் செய்விக்கக் கூடிய, எப்பொழுதும் விசித்திர நிலையில்
நிலைத்திருந்து சாகார சித்திரம் அதாவது ஸ்தூல உடல் மூலமாக தந்தையை பிரத்யக்ஷம் செய்யக்
கூடிய, மிக உயர்ந்த நிலை மூலமாக மிக உயர்ந்த ஸ்தானத்தை, மிக உயர்ந்த பிராப்திகளின்
களஞ்சியத்தை பிரத்யக்ஷம் செய்யக்கூடிய, அனைவரின் மனதிலிருந்து கிடைத்து விட்டது,
அடைந்து விட்டோம் என்ற பாடல் வெளியாவதற்கான சுபபாவனை மற்றும் சுப விருப்பங்கள்
வைக்கக் கூடிய, அந்த மாதிரி மிக சிரேஷ்டமான எல்லைக்கப்பாற்பட்ட சேவாதரிகளுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

மதுபன் நிவாசிகளுடன் சந்திப்பு:


வரதான பூமியில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் திருப்தியாக இருப்பதற்கான வரதானம்
கிடைத்திருக்கிறது தான் இல்லையா, யார் எந்தளவு தன்னை அனைத்து பிராப்திகளினால்
நிரம்பியவராக அனுபவம் செய்வாரோ, அவர் எப்பொழுதும் திருப்தியாக இருப்பார். ஒருவேளை
கொஞ்சமாவது குறைவின் உணர்வு ஏற்பட்டது என்றால், எங்கு குறை இருக்கிறதோ, அங்கு
அதிருப்தி இருக்கும். உங்களுக்கு அனைத்து பிராப்திகளும் இருக்கிறது தான் இல்லையா?
இருந்தாலும் எண்ணத்தின் சித்தியோ ஆகிக் கொண்டிருக்கிறது தான் இல்லையா? கொஞ்சம் கடின
உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய இராஜ்யமே இல்லையே,
எந்தளவு மற்றவர்களின் எதிரில் பிரச்சனை வருகிறதோ, அந்தளவு இங்கு இல்லை, இங்கு
பிரச்சனையோ ஒரு விளையாட்டாகி விட்டது. இருந்தாலும் தேவையான நேரத்தில் மிகுந்த
சகயோகம் கிடைத்துக் கொண்டே இருந்தது. ஏனென்றால் தைரியம் வைத்தீர்கள். எங்கு தைரியம்
இருக்கிறதோ, அங்கு சகயோகம் கிடைத்தே விடுகிறது. தன்னுடைய மனதில் எந்த சஞ்சலமும்
இருக்கக் கூடாது. மனம் எப்பொழுதும் லேசாக இருப்பதினால் அனைவரிடமும் உங்களுக்காக
லேசான நிலை இருக்கும். கொஞ்சம் கணக்கு வழக்கோ இருக்கத்தான் செய்யும், ஆனால் அந்த
கணக்கு வழக்குகளையும் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று கடந்து விடுங்கள். சின்ன
விஷயத்தை பெரியதாக்காதீர்கள். சிறியதாக்குவது அல்லது பெரியதாக்குவது தன் புத்தியை
பொறுத்து இருக்கிறது. இப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட சேவை செய்வதற்கான நேரம் என்றால்,
புத்தியையும் எல்லைக்கப்பாற்பட்டதாக வையுங்கள். சூழ்நிலையை சக்திசாலி ஆக்க வேண்டியதை
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய பொறுப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது ஒருவர்
இன்னொருவரின் சுபாவம், சம்ஸ்காரத்தைத் தெரிந்து கொண்டீர்கள் என்றால், ஞானம் நிறைந்தவர்
ஒரு பொழுதும் யாருடைய சுபாவம் எப்படி இது குழி, இது மலை என்று ஒருவருக்கு தெரிகிறது
என்றால் அவ்வாறு தெரிந்திருப்பவர் ஒருபோதும் அதோடு மோத மாட்டார். ஒதுங்கிச் சென்று
விடுவார். அந்த மாதிரி தன்னை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்பொழுது ஒருவர் மோதவில்லை என்றால் இன்னொருவர் தானாகவே பாதுகாப்பாகி விடுவார்.
ஒதுங்கி விடுங்கள் என்றால், தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும். செய்ய
வேண்டிய காரியத்திலிருந்து ஒதுங்கக் கூடாது. தன்னுடைய பாதுகாப்பு சக்தியினால்
மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும், இது தான் ஒதுங்கி விடுவது. அந்த மாதிரி சக்தியோ வந்து
விட்டது தான் இல்லையா?
சாகார ரூபத்தில் பின்பற்றி நடப்பதின் கணக்குப்படி அனைவருக்கும் மதுபன் தான் தென்படுகிறது,
ஏனென்றால் உயர்ந்த ஸ்தானம். மதுபன்னை சேர்ந்தவர்களோ எப்பொழுதும் ஊஞ்சலில்
ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கேயோ அனைத்தும் ஊஞ்சல், ஸ்தூல பிராப்தியும் அதிகம்,
எப்பொழுதும் ஊஞ்சலில் இருந்தீர்கள் என்றால் தவறுகள் நடக்காது. பிராப்தி என்ற ஊஞ்சலிருந்து
இறங்கினீர்கள் என்றால் தன்னுடைய மேலும் மற்றவர்களின் தவறும் தென்படும். ஊஞ்சலில்
அமருவதினால் பூமியை விட வேண்டியதாக இருக்கும். மதுபனைச் சேர்ந்தவர்களோ, அனைத்து
பிராப்திகள் என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். பிராப்தியின் ஆதாரத்தில் மட்டும்
வாழ்க்கை இருக்க வேண்டாம். பிராப்தி உங்கள் எதிரில் வந்தாலும் நீங்கள் பிராப்தியை ஏற்றுக்
கொள்ளாதீர்கள். ஒரு வேளை இச்சை வைத்தீர்கள் என்றால், அனைத்து பிராப்திகளும் இருந்த
போதிலும் குறைவின் உணர்வும் ஏற்படும். தன்னை எப்பொழுதும் காலியாக இருப்பதாக
நினைப்பார்கள். உழைக்காமல் பிராப்தி அதுவாக தானாகவே வருகிறது. அந்த மாதிரி பாக்கியம்
இருக்கிறது. எனவே இந்த பாக்கியத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். எந்தளவு நீங்கள் சுய
நலமற்றவராக ஆவீர்களோ அந்தளவு பிராப்தி உங்கள் எதிரில் தானாகவே வரும். நல்லது.

சேவாதாரிகளுடன் சந்திப்பு :
சேவாதாரியின் அர்த்தமே பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர். சேவை செய்தீர்கள்,
குஷியின் அனுபவம் ஆனது என்றால், இந்த பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை சாப்பிட்டீர்கள்
இல்லையா! சேவாதாரி ஆவது என்றால் இதுவோ மிகப்பெரிய பாக்கியத்தின் அடையாளம். பல
ஜென்மங்களுக்கு தன்னை இராஜ்ய அதிகாரி ஆக்குவதற்கான சாதனம். எனவே சேவை செய்வது
என்றால் பாக்கிய நட்சத்திரம் மின்ணுவது. அந்த மாதிரி புரிந்து கொண்டு சேவை செய்கிறீர்கள் தான்
இல்லையா. சேவை என்று படுகிறதா அல்லது பிராப்தி என்று படுகிறதா? பெயர் சேவை ஆனால் இது
சேவை செய்வதில்லை, கிடைப்பது எவ்வளவு கிடைக்கிறது? செய்வது ஒன்றும் இல்லை, ஆனால்
கிடைப்பது அனைத்தும். செய்வதில் அனைத்து சுகத்தின் சாதனம் கிடைக்கிறது. ஏதாவது
கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. எவ்வளவு தான் கடின வேலையாக இருந்தாலும்,
வசதிகளும் கூடவே கிடைக்கிறது, எனவே அது கடின வேலையாகப் படுவதில்லை, விளையாட்டு
மாதிரி இருக்கிறது, எனவே சேவாதாரி ஆவது என்றால் பிராப்திகளின் அதிபதி ஆவது. முழு நாளில்
எவ்வளவு பிராப்தி செய்கிறீர்கள்? ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணி நேரத்தின் பிராப்தியை ஒரு
வேளை கணக்கு போட்டுப் பார்த்தீர்கள் என்றால், எண்ணிலடங்காததாக இருக்கும், எனவே
சேவாதாரி ஆவது பாக்கியத்தின் அடையாளம். சேவைக்கான வாய்ப்பு கிடைத்தது என்றால்,
பிராப்தியின் களஞ்சியம் நிரம்பி விட்டது. ஸ்தூல பிராப்தியும் இருக்கிறது. சூட்சம் பிராப்தியும்
இருக்கிறது. எங்கேயாவது ஏதாவது சேவை செய்தீர்கள் என்றால் எவ்வளவு ஸ்தூல சாதனம்
மதுபன்னில் கிடைக்கின்றனவோ, அந்த அளவு மற்ற இடங்களில் கிடைப்பதில்லை, இங்கு
சேவையின் கூடவே முதலிலோ தன்னுடைய ஆத்மாவிற்கு, உடலுக்கு பாலனை கிடைக்கிறது,
இரட்டை பாலனை கிடைக்கிறது. அதனால் சேவை செய்து குஷி ஏற்படுகிறதா அல்லது களைப்பு
ஏற்படுகிறதா? சேவை செய்து கொண்டிருக்கும் பொழுது நான் இரட்டை சேவை செய்து
கொண்டிருக்கிறோனா என்று சோதனை செய்யுங்கள். மனசக்தி மூலமாக வாயு மணடலத்தை
சிரேஷ்டமாக்குவதற்கு மற்றும் காரியங்கள் மூலமாக ஸ்தூல சேவை செய்ய வேண்டும்,. ஒரு
சேவை மட்டும் செய்யக் கூடாது. ஒரே நேரத்தில் இரட்டை சேவாதாரி ஆகி தன்னுடைய இரட்டை
வருமானத்திற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் திருப்தியாக இருக்கிறீர்களா? அனைவரும் அவரவர்களின் காரியத்தில் தடையற்று


நல்ல முறையில் இருக்கிறீர்களா? எந்தக் காரியத்திலும் எந்தப் பிரச்சனையும் இல்லையே? நீங்கள்
உங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் செய்வதில்லையே? எப்போதாவது என்னுடையது,
உன்னுடையது, நான் செய்தேன், நீ செய்தாய், என்ற இந்த மாதிரி எண்ணங்கள் வருவதில்லையே?
ஏனென்றால் ஒரு வேளை, செய்தீர்கள் மேலும் நான் செய்தேன் என்பது எண்ணத்தில் வந்தது
என்றால் கூட அனைத்தும் முடிவடைந்து விட்டது. நான், எனது என்று வருவது என்றால் செய்த
அனைத்துக் காரியத்திலும் தண்ணீர் ஊற்றி விடுவது. அந்த மாதிரி செய்வதில்லையே? சேவாதாரி
என்றால் செய்விப்பவர் தந்தை கருவியாக்கி செய்வித்துக் கொண்டிருக்கிறார். செய்விப்பவரை
மறக்காதீர்கள். எங்கு நான், எனது என்பது வருகிறது என்றால் மாயாவும் வந்தது. கருவியாக
இருக்கிறேன். பணிவாக இருக்கிறேன் என்றால் மாயா வரமுடியாது. எண்ணத்திலும், கனவிலும்
மாயா வருகிறது என்றால் எங்கேயோ நான், எனது என்ற வாசல் திறந்திருக்கிறது. நான், எனது என்ற
வாசல் மூடி இருந்தது என்றால் மாயா வர முடியாது. நல்லது.

You might also like