Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

செம்மொழிகளுக்கான 11 தகுதிகள்

1.தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6.பண்பாட்டுக்கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு,
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9.உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11.மொழிக் கோட்பாடு

ஆகியவை செம்மொழிக்கான தகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.

தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை


படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம்
ஆண்டிற்கும் மேலாகப்பேசி,எழுதி,படைத்துதனக்குள்ளே பெரும்
இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும்
மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது.

தனித் தன்மை

தமிழில் இருந்து பல மொழிகள் தோன்றினாலும் தமிழ் தனது


தனித்தன்மை மாறாமல், தனித் இயங்கும் தன்மை உடையதாக
திகழ்கிறது.

பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக்


கட்டமைப்பு கொண்ட மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழின்
இலக்கணப் பொதுமைப் பண்பு, இயற்கை மொழிகள் அனைத்திற்கும்
பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது, இதன் பொதுமைப் பண்பை
வெளிப்படுத்துகிறது.

நடுநிலைமை

தமிழின் இலக்கண விதி சிறப்பான நெறியுடைய பன்முகத் தன்மை


கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும்
சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குகிறது.

தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி


தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட
அடிப்படையாக விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய
வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக்
குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும்
தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.
இத்தன்மை தமிழ் மொழிக்கு உண்டு.

பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கியவளங்கள்தாம்.தமிழரின்


அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப்
படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின்
வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல்
கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப்
படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் காணப்படும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த்


திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால்
பிறமொழிகளின் தாக்கத்தை பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி
மட்டுமே எத்தனை புதிய சொற்கள் தோன்றினாலும் அவற்றிற்கான
தமிழ் சொற்களை தோன்றுவித்துக்கொண்டே இருக்கின்றன. இது தமிழ்
மொழியின் பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மையை
நிறுவுகின்றது.

இலக்கிய வளம்

உலகில் உள்ள பலமொழிகளுக்கு இல்லாத சிறப்பான


இலக்கியவளத்தினை தமிழ் மொழி பெற்றுள்ளது. தமிழ் இனத்தின்
தனித் தன்மைகளை காட்டும் கண்ணாடியாக தமிழ் இலக்கியங்கள்
திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்கள் வழியாக தமிழரின் பண்பாட்டை,
சமூக,பொருளாதார,இயற்கைக்கோட்பாட்டுடன் இணைந்த வாழ்வை,
வளத்தை அறிய முடிகிறது. தமிழ் மொழியில் காணப்படும்
இலக்கியங்கள் அனைத்தும் பொதுமைப் பண்புடைய இலக்கண
கட்டமைப்பு உடையதாக படைக்கப்பட்டுள்ளது தமிழ் இலக்கியங்களின்
வளத்தினை காட்டுகிறது.

உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக


இருந்தாலும் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடியதாக விளங்க வேண்டும்.
சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக திகழும் அகத்திணையும்,
புறத்திணையும், அறவியலும் தமிழர்வாழ்வுடன் இணைந்த
உயர்சிந்தனை மரபாகும்.தனிமனிதன் தொடங்கி சமூகம், அரசு என்ற
மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை. வாழ்வியல் நெறிகளை
வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு
உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்க
முடியா உண்மை.

கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு தனித்தன்மை


தமிழுக்கு மட்டுமே உள்ளது. அதுதான் 'முத்தமிழ்' என்ற தனிப்பெரும்
சிறப்பாகும். உலகிலுள்ள மொழிகள் அனைத்தையும் ஒரு மொழி என்ற
அளவில் மட்டுமே அணுகுகின்றனர், ஆய்கின்றனர் ஒரு மொழியின்
இலக்கிய வடிவங்களைப் பல்வேறு வகை உடையனவாக காண்பது
உலகியல் நடைமுறை. ஆனால் தமிழ் மொழியில் மட்டுமே
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் மூன்று பிரிவுகள் உள்ளன. இது
தமிழ் மொழியின் கலை இலக்கியத் தனித் தன்மையை
வெளிப்படுத்துகிறது.

மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது.


அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின்
பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும்
பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு
கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக்
கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு. அத்துடன்
வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று
தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை
அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழிவிளங்குகிறது.
இத்திறனே அதன் கோட்பாடாகத் திகழ்கிறது.

செம்மொழி தமிழ்

உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன்


ஆகிய மொழிகளுக்குக் கூட செம்மொழி அங்கிகாரம்
வழங்கப்படவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும்
அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையாக அமைவது
செம்மொழிகளுக்கான 11 தகுதிகளையும் தமிழ் மொழி
பெற்றிருப்பதேயாகும். தமிழ் மொழி காலம் தொட்டு சொல், மரபு,
கலாச்சாரம், பாண்பாட்டு, பழக்க வழக்கம் ஆகியவற்றில்
தனித்தன்மையுடையதாக திகழ்கிறது. இவை அனைத்திற்கும் சான்றாக
திகழும் தமிழ் மொழி ஒரு உயர் தனி செம்மொழியாகும்.

You might also like