Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் !

இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

Published : 14 Jul 2021 03:54 PM


Last Updated : 14 Jul 2021 03:54 PM

மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் !


இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் வரும் !
தோஷங் கள் ... பரிகாரங் கள் ! - 11

- ‘சொல் வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

மாந்தி தோஷம் பற்றி பார்த்து வருகிறோம்.

முந்தைய பதிவில் மாந்தியின் பிறப்பு, அவருடைய குணங் கள் , அவர்


எந்த பாவகத்தில் இருந்தால் என் ன மாதிரியான பலன் கள் தருவார்
என் பதையெல்லாம் பார்த்தோம். சிம்மத்தில் அமர்ந்த மாந்தி எந்த
தோஷத்தையும் தருவதில்லை என் பதையும் பார்த்தோம். நிறைய பேர்
சனியின் பிள்ளை மாந்தி என் கிறீர்களே, அப்படியானால் குளிகன்
என் பவரும் சனியின் பிள்ளைதானே! அவர் ஏன் ஜாதகத்தில் இடம்
பெறவில்லை? என் று கேட்டிருக்கிறார்கள் .

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 1/6
11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் ! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

உண் மைதான் . சனி பகவானுக்கு இரண் டு மைந்தர்கள் ஒருவர் மாந்தி,


மற்றொருவர் குளிகன் . இதில் குளிகன் சனி பகவானுக்கும் நீலா
தேவிக்கும் பிறந்தவர். ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலில்
இருந்து உருவானவர். மேலும் ராசி கட்டத்திலேயே இந்தப் பிறப்பு
உருவானதால் அவருக்கு ராசிக்கட்டத்தில் இடம் கிடைத்தது.
ஆனால் குளிகன் நீலாதேவிக்கு பிறந்தவர், அவருக்கு ராசிக்கட்டத்தில்
இடமில்லை. ஆனால் அவருக்கும் சில பொறுப்புகள்
கொடுக்கப்பட்டுள்ளன. அதுதான் குளிகை காலம் என் னும் குளிகை
நேரம் ஆகும். ஒவ் வொரு நாளிலும் இந்த குளிகனுக்கு குறிப்பிட்ட
காலம் ஒதுக்கப்பட்டுள்ளது,

ஞாயிறு குளிகை நேரம் -மாலை 3 - 4. 30

திங் கள் - மதியம் 1. 30 - 3

செவ் வாய் - மதியம் 12 - 1. 30

புதன் பகல் 10.30 - 12

வியாழன் காலை 9 - 10.30

வெள்ளி காலை 7.30 - 9

சனி காலை 6 - 7.30

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 2/6
11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் ! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

குளிகன் நற்பலன் களைத் தரக்கூடியவர். சுபகாரியங் களைத்


தொடர்ச்சியாக தருபவர்., ஒரு சில காரியங் களைத் தவிர மற்ற
அனைத்து காரியங் களும் குளிகையில் செய் யலாம்.

பதவியேற்பது, வீடு மனை பத்திரம் பதிவு செய் வது, தங் க நகைகள்


வாங் குவது, ஆடை ஆபரணங் கள் வாங் குவது, வங் கியில் கணக்கு
தொடங் குவது, சேமிப்பு ஆரம்பிப்பது, இப்படி புதிதாக ஆரம்பிக்கக்
கூடிய சுப விஷயங் கள் அனைத்தும் இந்த குளிகை நேரத்தில்
தொடங் கலாம். கடனை அடைக்கவும் இந்த நேரத்தைப்
பயன் படுத்திக் கொள்ளலாம். குளிகை நேரத்தில் செய் வதால் அந்த
விஷயங் கள் மீண் டும் மீண் டும் நடைபெறும் என் பது குளிகையின்
சிறப்பம்சமாகும்.

தவிர்க்கக் கூடிய காரியங் கள் சில எனச் சொன் னேன் அல்லவா...


அவை என் ன என் பதையும் பார்த்துவிடலாம்!

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 3/6
11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் ! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

பெண் பார்க்கும் படலம் செய் யக்கூடாது, திருமண வைபவத்தை


குளிகை நேரத்தில் செய் யக் கூடாது. சவம் எடுக்கக்கூடாது. கடன்
வாங் கக் கூடாது. வரன் தேடுவதை குளிகையில் ஆரம்பித்தால்
திருமணம் நடக்காது. வரன் களை தேடிக்கொண் டே இருக்கவேண் டிய
நிலைக்கு ஆளாக நேரிடும்.

திருமணம் குளிகை நேரத்தில் நடந்தால் மீண் டும் மீண் டும் திருமணம்


செய் ய வேண் டிய சூழ்நிலைகளை உண் டாக்கித் தரும். அது
இழப்புகளால் இருக்கலாம். பிரிவுகளாலும் இருக்கலாம். கடன்
வாங் கினால் கடன் வாங் கிக் கொண் டே இருக்க வேண் டிய சூழ்நிலை
உருவாகும். இப்படி சில விஷயங் களை குளிகை நேரத்தில் செய் யக்
கூடாது.

சரி, மீண் டும் மாந்தி பற்றி பார்ப்போம்.

மாந்தி என் பவர் வெட்டுப்பட்ட கால் என் பதைப் பார்த்தோம்.


வெட்டுப்பட்ட கால் என் றாலே அது சவத்துக்கு சமம். எனவே சவ
ஊர்வலங் கள் வரும்போது எழுந்து நின் று மரியாதை செய் வதும்,
இறந்தவரின் ஆன் மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 4/6
11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் ! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

செய் வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன் ற உதவிகளைச்


செய் வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும்.
இன் னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர்


எனும் ஸ் தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார்.
அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன் கள் குளிகன் மற்றும்
மாந்தி என குடும்பத்தோடு அருள் பாலிக்கிறார். அங் கே சென் று
முறையாக பூஜை செய் து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.
பஞ் ச சபைகளில் ஒன் றான திருவாலங் காடு ஆலயம், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங் கம்
உள்ளது, அங் கே சென் று அந்த சிவலிங் கத்தை வழிபட்டாலும் மாந்தி
தோஷம் நீங் கும்.

பட்டுகோட்டைக்கு அருகே விளங் குளம் எனும் ஊரில் அமைந்துள்ள


சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார்.
அங் கே சென் று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள்


பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய் யுங் கள் .
அவர்களுக்குத் தேவையான உபகரணங் களை வாங் கிக் கொடுத்து
இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை
செய் வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள் .

குடும்பத்தில் அமைதியின் மை, நிம்மதியற்ற நிலை, வருமானம்


போதுமான அளவிற்கு இல்லையே என் று கலங் குபவர்கள் ,
குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண் டு சேர்ந்து
வாழ முடியாமல் தவிப்பவர்கள் என் றிருந்தால்,
மேற்கண் ட பரிகாரங் கள் மிகப்பெரிய பலன் களைக் கொடுக்கும்!
பிரச்சினைகள் விரைவாகத் தீரும். தொடர்ந்து சிவபெருமானை
வழிபாடு செய் வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய் வதும்,
ஆதித்யஹிருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின்
வீரியத்தைக் குறைக்கும்.

பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது,


அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை
தூற்றுவது "பிரேத சாபம்" என் னும் கடுமையான தோஷத்தைத் தரும்.
இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச்
சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம்

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 5/6
11/28/21, 2:56 PM மாந்தி தோஷம் நீங் குவதற்கான பரிகாரங் கள் ! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் …

செய் து பேசாதீர்கள் . அது உங் களுக்கு மட்டுமல்ல உங் கள்


குடும்பத்தினரையும் பாதிக்கும் என் பதைப் புரிந்து கொள்ளுங் கள் .
உங் கள் செயல்பாடுகளே உங் கள் குடும்பத்தின் முன் னேற்றத்திற்கு
உதவும் என் பதை மறந்துவிடாதீர்கள் !

அன் பார்ந்த வாசகர்களே, அடுத்த பதிவில் மற்றுமொரு தோஷம் பற்றி


பார்ப்போம்!

- வளரும்
*************

https://www.hindutamil.in/news/astrology/special-articles/693089-dhoshangal-parikarangal-11.html 6/6

You might also like