Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை

அனுப்புனர் பெறுநர்
திரு.கோ.மோகன்,M.Sc., (GIS) வட்டாட்சியர்,
உதவி இயக்குநர், வட்டாட்சியர் அலுவலகம்,
நில அளவை பதிவேடுகள் துறை, திருக்கழுகுன்றம்.
செங்கல்பட்டு.

ந‌க‌அ 4/1590/2023 நாள் :


பொருள்: மனு - செங்கல்பட்டு மாவட்டம் - திருக்கழுக்குன்றம் வட்டம் - மாமல்லபுரம்
குறுவட்டம் - வருவாய் கிராமம் எண்: 169 மணமை கிராமம் மற்றும் காடம்பாடி
கிராமம் ஆகிய கிராமங்களில் சுமார் 70 ஏக்கர் நஞ்சை நிலங்களை முறைகேடான
முறையில் வாங்கியது மட்டுமல்லாமல் மனை பிரிவுகளுக்கு உண்டான துறை
ரீதியிலான அனுமதிகளும், தடையில்லா சான்றுகளும், நில வகைப்பாடுகள் மாற்றல்
சான்று பெறாமலும் மழைக்காலங்களில் இரண்டு கிராம ஏரிகளின் கலிங்கு வழியாக
வரும் உபரி நீரின் வெள்ளப்பெருக்கினை தடுத்து பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்
வகையில் தடுப்பு சுவர் அமைக்கும் மற்றும் சாலைகள் தெருக்கள் கட்டிடங்கள்
போன்றவை சட்டத்திற்கும், நிபந்தனைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும்,
இயற்கைகளுக்கு மீறி செயல்படுவதை நடவடிக்கை எடுக்க கோரி மனு செய்தது
தொடர்பாக.

பார்வை : 1. திரு. M.P.வீராசாமி Ex தலைவர் & EA, மணமை ஊராட்சி மற்றும் அஞ்சல் வழி
திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டு‌.

பார்வையில் காணும் மனுதாரர் கடிதத்தில் திருக்கழுகுன்றம் வட்டம் மணமை கிராமம்


மற்றும் கடம்பாடி கிராமங்களில் சுமார் 70 ஏக்கர் நஞ்சை நிலங்களை முறைகேடான முறையில்
எவ்வித அனுமதியும் சான்றிதழ்களும் பெறாமல் உட்பிரிவு செய்த வாங்கியதாக தெரிவித்துள்ளார்
இரண்டு கிராம ஏரிகளின் களிங்கு வழியாக வரும் உபரி நீரின் வெல்லப்பெருக்கினை தடுத்து
ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் சாலைகள் தெருக்கள் கட்டிடங்கள்
போன்றவை இயற்கைக்கு மீறி செயல்படுவதால் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.
எனவே, மேற்காணும் பொருள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை
மனுதாரருக்கு தெரிவித்து அதன் அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு வட்டாட்சியர் கேட்டுக்
கொள்ளப்படுகிறார். மனுதாரர் அசல் மனு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கிறேன்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு - அசல் மனு
(ஓம்) /- கோ.மோகன்
உதவி இயக்குநர்

நகல்: வட்டத் துணை ஆய்வாளர்,


திருக்கழுக்குன்றம் வட்டம்.
(உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பும் பொருட்டு)
நகல்: வட்ட சார் ஆய்வாளர்,
திருக்கழுக்குன்றம் வட்டம்.
(உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பும் பொருட்டு)

நகல்: ஆய்வாளர் ,
செங்கல்பட்டு கோட்டம்
(அறிக்கை பெற்று சமர்ப்பிக்கும் பொருட்டு)
நகல் : திரு.M.P. வீராசாமி, Ex தலைவர் & EA,
மணமை ஊராட்சி & அஞ்சல்,
வழி- கல்பாக்கம் - 603102,
திருக்கழுக்குன்றம் வட்டம்,
செங்கல்பட்டு மாவட்டம்.

/உ.ந.உ.ப/

தொழில்நுட்ப மேலாளர்

இந்த கடிதம் 21.03.2024-ல் அஞ்சல் மூலம் கிடைத்தது

You might also like