Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

பாரம்பரிய விளையாட்டு (கருத்து விளக்கக் கட்டுரை)

“ஓடி விளையாட்டு பாப்பா,

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா’’

என்ற மகாவி பாரதியின் இப்பாடல் வரிகள் சிறு பிள்ளைகளை விளையாடும்படி

வலியுறுத்துகிறது. இக்காலக்கட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் பாரம்பரிய

விளையாட்டுகளை விளையாடும் பழக்கம் குன்றிவருகிறது என்பது மிகவும்

வேதனையாளிக்கிறது. பாரம்பரிய விளையாட்டு என்பது வாழையடி வாழையாக

தமிழர்களால் விளையாடப்படும் விளையாட்டாகும். கால மாற்றத்தினாலும்

தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் வரும் தலைமுறையினர்களுக்குப் பாரம்பரிய

விளையாட்டுகளின் மீது நாட்டமில்லை. பாரம்பரிய விளையாட்டுகள் தமிழர்களின்

தனித்துவங்களை உலகிற்கு பறைசாற்றும் கூறுகளில் முக்கியமானதாக விளங்குகிறது.

பாரம்பரிய விளையாட்டுகள் நிறைய வகை உள்ளன. அவை, பல்லாங்குழி, கபடி,

கள்ளங்காய், நொண்டி ஆட்டம் மற்றும் பலவகையான பாரம்பரிய விளையாட்டுகள்

இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகளைப் போற்றிக் காப்பது வரும்

தலைமுறையினர்களின் கடமையாகும். பாரம்பரிய விளையாட்டுகள்

விளையாடுவதால் எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படுகின்றன.

பாரம்பரிய விளையாட்டுகளைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை

விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதாவது, நாம் பாரம்பரிய

விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் உடலிலுள்ள இரத்தவோட்டம் சீராக

இருக்கும். இதன்வழி, அனைவராலும் உடலை ஆட்டிப்படைக்கும் நொய்

நொடிகளிலிருந்து இலாவகமாகத் தவிர்க்கலாம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற

செல்வம்” என்பதற்கேற்ப தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்

பழக்கத்தை நடைமுறைப்படுத்துவர்களுக்கு ஆரோக்கியம் என்ற செல்வம்

அதிகளவில் குவிக்கப்படும். தொடர்ந்து, நமது மூளையும் சுறுசுறுப்பாகவும்

புத்துணர்ச்சியுடனும் இயங்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய


விளையாட்டுகளை விளையாடும் பழக்கத்தை அன்றாட வாழ்வில்

நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, பாரம்பரிய விளையாட்டுகளை

விளையாடுவதால் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்க முடியும்.

You might also like