நான் கடவுளைச் சந்தித்தால்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

.

நான் கடவுளைச் சந்தித்தால்

வணக்கம். என் பெயர் _______________________________. நான் தேசிய வகை

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயில்கிறேன். நான் ____________________ அகவை

எய்திய மாணவன்/மாணவி ஆவேன்.

அன்பிற்கினிய நடுவர்களே,
இன்று உங்கள் முன் நான் கடவுளைச் சந்தித்தால் எனும் தலைப்பில் உரை ஆற்ற

வந்துள்ளேன்.

அன்புசார் அவையினரே,

எதிர்பார்ப்புகள், பிரச்சனைகள், தேவைகள் இவற்றை அவர் முன் வைத்தால் எல்லாம்

சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நாம் நாடும் ஒரே நபர் கடவுள். அப்படிப்பட்ட

ஒருவரை நான் சந்தித்தால் முதலில் அவரிடம் உலகை விட்டுக் கொரோனாவை

ஒழிக்கும் வரத்தைக் கேட்பேன். நினைவுக்கு எட்டிய மனித வரலாற்றில் இந்தப் பூமி

பந்தில் உலவும் முழு மனித குலமும் ஒரு சேர எதிர் நோக்கும் சவால் கொரோனா

என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வீட்டில் அடங்கிய வாழ்க்கை, நடமாட்டக்

கட்டுப்பாடு, தனியாக இருப்பதே வைத்தியம் போன்ற புதிய நடைமுறை வாழ்க்கை

நம்மைப் பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. ஆகவே, இந்தக் கொடிய கிருமியான

கொரோனா தாக்கத்திலிருந்து உலக மக்களைப் காப்பாற்றுவதே நான் கேட்கும் முதல்

வரமாகும்.

சபையினரே,

மானிடனுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகப் பள்ளி வாழ்க்கையைக் கூறலாம்.

ஆம் சபையினரே, உணர்ச்சிகள் சங்கமிக்கும் இடமான பள்ளியில், மாணவர்களைப்

பக்குவப்படுத்தி பாடம் போதிக்கும் முறை மாறி இன்று இல்லிருப்புக் கற்றல்

கற்பித்தல் நடைபெறுகிறது. இதனால், என்னைப் போன்று மற்ற மாணவர்களும்

நிறைய விஷயங்களை இழந்துள்ளனர், மனதளவில் பாதிப்பும் அடைந்துள்ளனர்.


எனவே, நான் கடவுளைச் சந்தித்தால், கடவுளே! எனக்கு மீண்டும் பள்ளிக்குப்

போகும் வாய்ப்பைத் தர வேண்டும் எனக் கேட்பேன்.

மீண்டும் பள்ளிக்குப் போகலாம், நம்மை நாம் அங்கே தேடலாம், எனும் பாடல்

வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.

அன்புசார் அவையினரே,

நான் கடவுளைச் சந்தித்தால், ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும்படி வேண்டி

கேட்பேன். உடலினை உறுதி செய், ஊண்மிக விரும்பு எனும் பாரதியாரின் புதிய

ஆத்திசூடி தற்போதைய சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கொரோனா

நமக்குப் பாடம் புகட்டி உள்ளது. எனவே, கடவுளிடம் எனக்கு மட்டுமின்றி

அனைவருக்கும் நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும்படி

கேட்டுக் கொள்வேன்.

அவையோரே,

நம்மால் இன்னமும் மறக்க முடியாத ஒரு சம்பவம் சுனாமி என்றால் அது

மிகையாகாது. இவ்வுலகையே ஆட்டிப் படைத்தப் பேரிடர் ஆகும். நான் கடவுளிடம்

பல அழிவுகளை ஏற்படுத்தும் பேரிடர்களைத் தடுக்கும் வரத்தைத் தரும்படி

கேட்பேன். எந்த ஒரு சேதாரமும் பாதிப்பும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியான

வாழ்க்கையை வாழ அவரது ஆசிர்வாதத்தை வழங்க வேண்டும் என கேட்பேன்.

சபையினரே,

இன்னும் நிறைய கேட்க வேண்டும் என தோன்றினாலும் நேரம் அதற்கு இடம்

கொடுக்காததால் என் கோரிக்கைகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நான்

கேட்ட கோரிக்கைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பார் எனப் பெரிதும் எதிர்பார்த்து

எனது உரையை முடித்துக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்.

You might also like