Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 34

3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!!

- கதை திரி | Srikala Tamil Novel

2
Home Srikala Novels Forums What's new  Members  M   

New posts Find threads  Watched  Search forums Mark forums read

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording,
or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Forums  SMS Writer's Novels  Srikala’s Novels 

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 1/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி


 ஶ்ரீகலா ·  Jan 27, 2024

 Not open for further replies.

1 2 3 … 6 Next  Watch

Jan 27, 2024   #1

ஹாய் பிரெண் ட்ஸ் ,

இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன் . இந்தக் கதையைப் பற்றி என் ன சொல் ல?
ஶ்ரீகலா எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான் . ஆனால் என் னுடைய பாணியில் சற்று
Administrator
வித்தியாசமாய் !! கதையின் தலைப்பும் , திரைப்படப் பாடலின் வரிகளும் கதையைச்
சொல் லாது சொல் லியிருக்கும் என் று நம் புகின் றேன் . நாளையிலிருந்து நம் வழக்கமான
நேரத்தில் சந்திக்கலாம் என் னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி,
உற் சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன் றிகள்

தலைப்பு : எனக்காக வா! நான் உனக்காக வா!


நாயகன் : சூரியநாராயணன்
நாயகி : சந்திரவதனி

“வா வாவா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா
என் னைக் காண வா
என் னில் உன் னைக் காணவா வாவாவா

எனக்காக வா நான் உனக்காக வா


என் னைக் காண வா
என் னில் உன் னைக் காணவா வாவாவா

எனக்காக வா நான் உனக்காக வா


என் னைக் காண வா
என் னில் உன் னைக் காணவா வாவாவா
எனக்காக வா நான் உனக்காக வா”

அன் புடன் ,
ஶ்ரீகலா
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA

Report Like

You, Sankaradevi p., Roshani Fernando and 48 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 2/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

Jan 31, 2024   #2

அத்தியாயம் : 1

"முகம் வெள் ளை தாள் அதில் முத்தத்தால்


ஶ்ரீகலா ஒரு வெண் பாவை நான் செய் தேன் கண் ணே
Administrator
இதழ் எச்சில் நீ ர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங் கள் நீ செய் தாய் கண் ணே"

சந்திரவதனி தனது கைகளில் இருந்த மகவின் கள் ளமில் லா சிரிப்பினில் மனதை பறி
கொடுத்தாள் . குழந்தையை வாகாகத் தனது கைகளில் ஏந்தியவள் , "அகி குட்டிக்கு
அம் மாவை தெரியுதா?" என் று கேட்டுக் கொண் டே அதன் கன் னத்தில் முத்தமிட...
குழந்தைக்கு அவள் கூறியது புரிந்ததோ இல் லையோ! அவள் கொடுத்த முத்ததில்
உற் சாகமாகிய அகில் அவளது தலைமுடியை பிடித்திழுத்து முத்தம் கொடுக்கிறேன்
பேர்வழி என் று அவளது முகம் முழுவதும் தனது எச்சிலை தீர்த்தம் போல் வாரியிறைத்தான் .
அவளும் விழிகளை மூடி குழந்தையின் முத்தத்தில் , அன் பில் சுகமாய் த் திளைத்து
இருந்தாள் .

தொழில் , தொழில் என் று இயந்திரமாக ஓடி கொண் டிருந்தவள் இப்போது சிறிது


நாள் களாக அகிலின் அன் பில் சற்று இளைப்பாறுகின் றாள் . அவளுக்குமே இப்படி இருப்பது
பிடித்துத் தான் இருந்தது. அந்த நொடி அவளது மனதில் அவனது முகம் மின் னி மறைந்தது.
அடுத்த நொடி அவளது முகத்தில் இருந்த புன் னகை, மென் மை, இளக்கம் எல் லாம்
காணாமல் போனது. அவனால் தான் இப்போது அவள் குழந்தையின் அருகில்
இருக்கின் றாள் . அது தரும் இன் பத்தை அனுபவிக்கின் றாள் . ஆனாலும் அவளுக்கு அதை
ஏற்றுக் கொள் ள மனமில் லை.

அன் றொரு நாள் சந்திரவதனி தொழில் முறை கூட்டம் ஒன் று முடிந்து இரவு தாமதமாக
வீட்டிற்கு வந்தாள் . அவள் வந்த போது அங் கு வரவேற்பறையில் அவன் அமர்ந்து இருந்தான் .
அவனது பெயர் சூரியநாராயணன் . அவனது மடியில் குழந்தை அகில் நிம் மதியாகத்
துயின் று கொண் டிருந்தான் . அதைக் கண் டதுமே அவளுக்கு ஒருமாதிரியாகப்
போய் விட்டது. அவள் முகத்தை அஷ் டகோணலாகச் சுளித்துக் கொண் டு, முகத்தில்
அருவருப்பைத் தேக்கி கொண் டு,

"ஹேய் , நீ எப்படி இங் கே? அதுவும் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்க? கெட் அவுட்
மேன் ." என் று சந்திரவதனி பெருங் குரலெடுத்து கத்தினாள் . அவளது சத்தத்தில் குழந்தை
எழுந்து அழ தொடங் கியது.

சூரியநாராயணன் அவளைக் கண் டு, "ஷ் ..." என் று அதட்டலாய் வாயை மூட சொன் னவன்
பிறகு குழந்தையைத் தட்டி கொடுத்து தூங் க வைத்தான் . அவனது அலட்டி கொள் ளாத
செயலில் அவளுக்குத் தான் ஆத்திரம் அதிகரித்தது.

"ஹேய் , என் ன நினைச்சிட்டு இருக்க? என் வீட்டுக்கே வந்து என் னையவே அதிகாரம்
பண் ணுவியா?" அவள் கடுமையாகப் பேசினாலும் தனது குரலை உயர்த்தாது பேசினாள் .

"இதை முதலிலேயே செய் து இருக்கலாம் ." அவனும் அவளைப் போலவே குரலை


உயர்த்தாது சன் ன குரலில் பேசியவன் சின் னவனைச் சோபாவில் படுக்க வைத்துவிட்டு
அவனுக்கு அணைவாக அங் கிருந்த சிறு தலையணைகளைச் சுற்றிலும் அடுக்கி
வைத்தான் .

"முதல் ல நான் கேட்டதுக்குப் பதிலை சொல் லு?" அவள் மீண் டும் எகிற...

"உங் களால குழந்தையைப் பார்த்துக்க முடியாதுன் னு எனக்குத் தெரியும் . அதனால் தான்


குழந்தையை எங் க கிட்ட கொடுங் கன் னு சொன் னேன் ." அவனோ அவளது கேள் விக்குப்
பதில் அளிக்காது வேறு பேசினான் .

"குழந்தை பிறந்ததில் இருந்து இங் கே தான் இருக்கின் றான் . இப்போது என் ன புதிதாய் ?"
அவள் அலட்சியமாய் க் கேட்டாள் . அதைக் கேட்டு அவனது முகம் கருத்துப் போனது.
இருந்தாலும் தன் னைச் சமாளித்துக் கொண் டு,

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 3/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"அகில் எங் க வீட்டு வாரிசு. அதுவும் மூத்த வாரிசு. அப்படி என் றால் அவன் எங் க வீட்டில்
தான் இருக்க வேண் டும் ." என் று இறுகிய குரலில் உரைத்தான் .

"அடேங் கப்பா... எவ் வளவு பெரிய கண் டுபிடிப்பு!" அவள் போலி வியப்புடன் சத்தம்
இல் லாது தனது இரு கரங் களையும் தட்டினாள் .

"என் கண் டுபிடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் . நான் கேட்பதற்கு நீ பதில் சொல் லு."
என் றவனைக் கண் டு,

"ஏய் , மரியாதை, மரியாதை..." என் று அவள் கோபத்தோடு ஒற்றை விரல் நீ ட்டி அவனை
எச்சரிக்க...

"நீ என் னை விட வயதில் சின் னவள் தானே?" அவன் அவளை ஏற இறங் க பார்த்துக்
கொண் டு கேட்க...

"நான் வயசை வச்சு சொல் லலை." என் று சிடுசிடுத்தவளை உற்று பார்த்தவன் ,

"பின் னே?" என் று கேள் வி கேட்க...

"உன் னை விட அந்தஸ் தில் , படிப்பில் , பணத்தில் ... இப்படி நிறைய விசயங் களில் நான்
உன் னை விடப் பெரியவள் . அதற்கு உண் டான மரியாதையை நீ கொடுத்து தான்
ஆகவேண் டும் ." அவளது அலட்சியத்தில் அவன் முகம் கருக்காது அவளையே பார்த்துக்
கொண் டு இருந்தான் . ஆனால் அவனது மனமோ பலமாய் அடிப்பட்டுப் போனது.

'குறித்து வைத்து கொள் சூர்யா.' அவன் மனதிற்குள் முணுமுணுத்துக் கொண் டான் .

"ஆகமொத்தம் மரியாதைன் னா என் னென் னு உனக்குத் தெரியாது என் று சொல் ." அவன்
தன் னைச் சமாளித்துக் கொண் டு வார்த்தையால் அவளுக்கு ஒரு கொட்டு வைத்தான் .

"ஏய் ..." என் று மீண் டும் கை நீ ட்டி எச்சரித்தவளை கண் டு,

"ப்ச், நம் ம சண் டையைப் பிறகு வைத்துக் கொள் ளலாம் . இப்போ குழந்தையைப் பற்றிப்
பேசலாமா?" என் றவன் மேலே தொடர்ந்தான் . அவளும் அமைதியாக நின் றிருந்தாள் .

"ஈவினிங் நான் குழந்தையைப் பார்க்கலாம் ன் னு இங் கே வந்தேன் . இங் கே வந்ததும்


குழந்தையோட அழுகை தான் எனக்கு முதலில் கேட்டது. பதறி ஓடி போய் க் குழந்தையைத்
தூக்கிக்கிட்டேன் . நல் லவேளை அவனுக்கு என் னை அடையாளம் தெரிந்தது. அதனால்
அழுகையை நிறுத்தினான் ." என் று சொல் லி கொண் டே போனவனைக் கையமர்த்தித்
தடுத்தவள் ,

"குழந்தையைப் பார்த்துக்கிற கேர் டேக்கர் எங் கே?" என் று கேட்க...

"என் னைக் கேட்டால் ? நீ தான் புலன் விசாரணை செய் து கண் டுபிடிக்க வேண் டும் ." என் று
நக்கலாய் சொன் னவன் அவளது முறைப்பில் , "வாசலில் செக்யூரிட்டி, வீட்டினுள்
சமையல் க்கார அம் மாவை தவிர இங் கு யாரும் இருந்தது போல் தெரியலை. சமையல் க்கார
அம் மா தான் அகிலுக்குப் பால் ஆத்தி கொடுத்தாங் க." என் று அவன் முடிக்க... அவளுக்கு
வேலை ஆட்கள் மீது அத்தனை கோபம் வந்தது.

"இனி இது போல் நடக்காது." என் றவளை கண் டு அவனுக்கு நம் பிக்கை இல் லை.

"இனி இது சரிப்பட்டு வராது. எங் க வாரிசை நாங் க பார்த்துக்கிறோம் ." அவன் உறுதியான
குரலில் மறுப்புத் தெரிவித்தான் .

"கொடுக்க முடியாதுன் னு சொன் னால் ...?" அவளது தெனாவெட்டான பேச்சில் அவளைக்


கூர்ந்து பார்த்தவன் ,

"எப்படி எடுத்துக்கணும் ன் னு எனக்குத் தெரியும் ." என் று சவால் விட்டான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 4/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"அதையும் பார்க்கலாம் ..." அவளும் பதிலுக்குச் சவால் விட்டாள் .

அப்போது குழந்தையிடம் அசைவு தெரிய... இருவரும் குழந்தையை நோக்கி விரைந்தனர்.


இருவருமே ஒன் று போல் , "அகி குட்டி..." என் றழைத்தபடி குழந்தையைத் தூக்க செல் ல...
குழந்தையோ இருவரையும் ஒருங் கே கண் டதும் மகிழ் ச்சியில் உடலை தூக்கி துள் ளி
குதித்து, கால் களைப் படபடவென் று சோபாவில் அடித்தபடி, "ப்பா... ம் மா..." என் று
சொல் லியபடி ஆர்ப்பரித்தான் . இந்த மூன் று மாத காலமாகச் சூரியநாராயணனின்
வருகையினால் விளைந்த விளைவு இந்த 'அப்பா' என் றழைப்பு... இல் லையென் றால்
சூரியநாராயணன் யாரென் றே அகிலுக்குத் தெரியாது போயிருக்கும் . எல் லாம்
சந்திரவதனி பார்த்த பார்வை. அவளது இரக்கம் இப்போது அவளை இந்தளவிற்கு இறக்கி
இருக்கிறது.

அகில் தனது குட்டி கரங் களில் ஒன் றில் சந்திரவதனியின் கழுத்தில் தொங் கி
கொண் டிருந்த சங் கிலியை பிடித்துக் கொள் ள... அவனது மற்றொரு கரம்
சூரியநாராயணனின் சட்டையைப் பிடித்திருந்தது. சின் னவனின் செயலில்
குனிந்தவர்களின் தலை இரண் டும் தானாக முட்டி கொண் டது. பெரியவர்கள்
இருவருக்குமே சட்டென் று எழ முடியாத சூழ் நிலை.

சூரியநாராயணன் தான் பட்டென் று அகிலின் கரத்தினை விலக்கி விட்டு நிமிர்ந்தான் .


அதன் பிறகே சந்திரவதனி சின் னவனைத் தூக்கி கொண் டாள் . குழந்தையும் அவளது
தோளில் சுகமாய் ச் சாய் ந்து கொண் டது. குழந்தையின் செயலே சொல் லாது சொன் னது
அதற்கு அன் பு தேவை என் று... அதை உணர்ந்தார் போன் று அவளது கரங் கள் குழந்தையை
அழுத்தி அணைத்துக் கொண் டது. சூரியநாராயணனும் அதைக் கவனித்துக் கொண் டு
தான் இருந்தான் . ஆனாலும் தான் பேச வேண் டியதை பேசித்தான் ஆகவேண் டும் என் று
நினைத்து அவன் தொண் டையைச் செருமி கொண் டான் . அதைக் கண் டு அவளும் அவனை
உற்று நோக்கினாள் .

"நீ ங் க குழந்தையைப் பார்த்துக்கன் னு நூறு பேரை கூட வேலைக்கு வைப்பீங் க. ஆனா


அவங் க ஒருத்தரால கூடக் குழந்தைக்கு உண் மையான அன் பை கொடுக்க முடியாது."
என் றவனைக் கண் டு,

"ஏன் நாங் க இல் லையா?" அவள் சீற்றத்துடன் கேட்க...

"உங் களால அதைச் செய் ய முடிஞ் சிருந்தால் ... ஏன் அகில் அநாதை போல் அழுது
கொண் டிருக்கப் போகின் றான் ?" அவன் கேட்ட கேள் விக்கு அவளால் பதில் கொடுக்க
முடியவில் லை.

"உங் களை மாதிரி பணக்காரங் களுக்குக் குழந்தைங் க கூட ஸ் டேட்டஸ் க்காகத் தான் .
அப்படி ஒரு ஸ் டேட்டஸ் சிம் பலா அகில் வளர்வதை நான் விரும் பவில் லை."

"சோ...?" அவள் கேள் வியாய் அவனைப் பார்த்தாள் .

"எங் க வாரிசை எங் க கிட்ட கொடுத்திருங் க. உங் களை விட அருமை, பெருமையாய் நாங் க
வளர்த்துக்கிறோம் ."

"எப்படி, எப்படி? சேறுலயும் , சகதியிலயும் நீ ங் க எல் லாம் உருண் டு, புரண் டு வளர்ந்த
மாதிரியா?" அவளது கேலி குரலில் அவன் ஒன் றும் அசந்து விடவில் லை.

"அப்படி வளர்வது தான் நல் லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் ." அவன் அசராது
பதில் அளிக்க...
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA
Report  Like

Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 36 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 5/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

Jan 31, 2024   #3

"வீண் பேச்சு வேண் டாம் . குழந்தையைக் கொடுக்க முடியாது. இடத்தைக் காலி


செய் யலாம் ." அவள் திட்டவட்டமாகக் கூற...

ஶ்ரீகலா "எப்படிக் குழந்தையை எங் க கிட்ட கொண் டு வரணும் ன் னு எனக்குத் தெரியும் ?"
Administrator
என் றவனைக் கண் டு அவளது இதழ் கள் இகழ் ச்சியாய் வளைந்தது.

"எந்தக் கோர்ட்டுக்கு போனாலும் உன் னால் ஒண் ணும் செய் ய முடியாது. போடா..." அவளது
பேச்சில் , செயலில் அத்தனை அலட்சியம் . அவள் 'போடா' என் று தன் னை அழைத்தது
ஆண் மகனாக அவனுக்கு அத்தனை கோபத்தை வரவழைத்தது.

"போடி..." என் றவனைக் கண் டு அவள் திகைத்துப் போய் ப் பார்க்க...

"பதிலுக்கு இப்படிப் பேச எனக்கு ரொம் ப நேரமாகாது. நாவடக்கம் வேண் டும் . அது ஆணாக
இருந்தாலும் சரி, பெண் ணாக இருந்தாலும் சரி. இல் லை என் றால் அடக்கப்படும் ."
என் றவன் , "நீ சொன் ன கோர்ட்டுக்கு போய் என் குழந்தையை நான் வாங் குவேன் ." என் று
அவன் உறுதியான குரலில் சொன் னான் . அதைக் கேட்டு அவள் அலட்சியத்துடன்
முகத்தைத் திருப்பிக் கொண் டாள் .

சந்திரவதனி திரும் பியவுடன் அவளது தோளில் தலை சாய் த்துப் படுத்திருந்த அகில்
சூரியநாராயணனை கண் டு சிரித்தான் . சின் னவனின் புன் னகையைக் கண் டதும்
பெரியவனுக்கு அத்தனை நேர மனஸ் தாபம் சூரியனை கண் ட பனிப்போல் மறைந்து
போனது.

"ஒய் யாரமாய் ப் படுத்துட்டு என் னைப் பார்த்து சிரிக்கிற படவா?" அவன் செல் லமாய் ச்
சின் னவன் கன் னத்தைத் தட்டி கொண் டே அதன் நெற்றியோடு முட்ட வர... அவனது
செயலில் , நெருக்கத்தில் விதிர்த்துப் போய் த் திரும் பிய சந்திரவதனி, "ஹேய் மேன் , என் ன
பண் ற நீ ?" என் று பதட்டத்துடன் கேட்க... அவளது பதட்டத்தில் முதலில் புரியாது விழிகளைச்
சுருக்கியவன் பின் பு புரிந்ததும் , "சாரி..." என் று மன் னிப்பு கேட்டவன் அங் கிருந்து
விறுவிறுவெனச் சென் று விட்டான் .

சூரியநாராயணனின் செயலில் சந்திரவதனிக்கு தான் படபடவென் று வந்தது.


குழந்தையைத் தன் னோடு அழுத்தி பிடித்து வேகமாய் த் துடித்த இதயத்தைச் சமன் படுத்த
முயன் றாள் .

பெண் ணவளுக்குத் தான் திகைப்பு, படபடப்பு... ஆணவனுக்கு என் ன வந்தது! வெளியே


சென் று கொண் டிருந்த அவனும் தனது நெஞ் சுப்பகுதியை நீ வி விட்டபடி நடந்தான் . அந்தக்
கணம் அவள் அதை அறிந்திருக்கவில் லை.

நள் ளிரவில் கேளிக்கை விருந்து முடிந்து வீட்டிற்குள் நுழைந்த தனது பெற்றோர், தம் பி,
தங் கையைச் சந்திரவதனி ஒரு பிடி பிடித்து விட்டாள் . அவள் கோபத்தில் கொந்தளித்ததும்
என் னவென் று புரியாது விழித்த குடும் பத்தினர்... பிறகு விசயம் புரிந்ததும் அவர்களும்
கோபத்தில் குதிக்க ஆரம் பித்தனர். அவள் தான் அவர்களைச் சமாதானப்படுத்த
வேண் டியதாகிற்று.

பழைய நிகழ் வை நினைத்து பார்த்தப்படி இருந்த சந்திரவதனி 'ம் மா' என் ற அகிலின்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 6/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
அழைப்பில் தன் னுணர்வு பெற்றவள் , "அகி குட்டிக்கு பசிக்குதாடி?" என் று கேட்க... அதுவும்
பதிலுக்கு 'ப்பூஊஊஊ' என் று உற் சாகக் குரல் எழுப்பியது.

சந்திரவதனி அறையை விட்டு வெளியில் வந்தவள் நேரே சமையலறைக்குச் சென் றாள் .


அவள் நினைத்தால் இருந்த இடத்திலேயே இருந்து கொண் டு வேலையாளை அழைத்துக்
குழந்தைக்கு உணவு கொண் டு வர சொல் லியிருக்க முடியும் . ஆனால் அவள் அதைச் செய் ய
விரும் பவில் லை. அதற்குக் காரணம் 'உங் களால் குழந்தையைப் பார்த்துக்க முடியாது'
என் று ஆணித்தரமாக அவன் கூறிய வார்த்தைகள் . இன் னும் அந்த வார்த்தைகள் அவளது
காதுகளில் ஒலித்துக் கொண் டே இருக்கிறது.

குழைவான சாதத்தில் பருப்பு, நெய் விட்டு நன் றாகப் பிசைந்து அதைக் குழுந்தைக்கு
ஊட்டிவிட... பசியில் இருந்த குழந்தை மளமளவென் று சாப்பிட தொடங் கியது.

"சந்திரா, சந்திரா..." தந்தை வேணுகோபாலன் குரல் கேட்டு,

"அப்பா, இங் கே... ஃபிஷ் டேங் க் பக்கம் ." என் று அவள் கத்தி சொல் ல... வேணுகோபாலன்
மகள் இருந்த இடத்திற்கு வந்தார். அவரது முகத்தில் படபடப்பு இருந்தது. அவரது கையில்
ஏதோ காகிதம் ஒன் று இருந்தது. அவரின் பின் னேயே அவளது அன் னை சாந்தி வந்தார்.

"என் னப்பா என் ன விசயம் ?" அவள் கேட்டதும் ...

"அவன் ... அதான் அந்தச் சூரியநாராயணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கான் ." தந்தை
சொன் னதும் அவளது இரு விழிகளும் சுருங் கியது.

"அகில் அவங் க வீட்டு வாரிசாம் . அவங் களுக்குத் தான் ஏகபோக உரிமை இருக்கிறதாம் .
அதனால் குழந்தையை அவங் க கிட்ட ஒப்படைத்து விடணுமாம் ." வேணுகோபாலன்
சொன் னதைக் கேட்டு அவரது மனைவி சாந்தி,

"ஆமா, அப்படியே அவங் க வீட்டு வாரிசு ஆள் வதற்கு அங் கே பெரிய ராஜாங் கமே
காத்திருக்கு பாருங் க. இருக்கிறது ஒரு குடிசை வீடு, அதுவும் வாடகை வீடு... அது போக
நாலு அலுமினிய பாத்திரமும் . இதுக்கு இம் புட்டு அலட்டலா?" என் று கேலியாய் சொல் ல...

"அம் மா, யாரையும் லேசுல நினைக்காதீங் க. அவன் இவ் வளவு ஈசியா நோட்டீஸ் அனுப்பி
இருக்கான் னா...? இதுக்குப் பின் னாடி ஸ் ட்ராங் பாயிண் ட் அவன் பக்கம் இருக்கணும் . அது
என் னன் னு யோசிங் க?" சந்திரவதனியின் தொழில் மூளை எதிராளியின் பலத்தைப் பற்றி
ஆராயத் தொடங் கியது.

"என் பொண் ணு சொல் றது தான் சரி. அவன் கிட்ட ஏதோ பாயிண் ட் இருக்கப் போய் த்தான்
அவன் இப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கான் . முதல் ல அது என் னென் னு ஆராயணும் ."
வேணுகோபாலன் பலமாய் யோசிக்க ஆரம் பித்தார்.

"அப்பா, இதில் யோசிக்க ஒண் ணும் இல் லை. பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பிருங் க. பிறகு
லாயர் வச்சு விவகாரம் மேலே கோர்ட்டுக்குக் கொண் டு போகலாமா? இல் லை பேசி
தீர்த்துக்கலாமான் னு கேட்டு பாருங் க." சந்திரவதனி யோசனை சொல் ல...
வேணுகோபாலனும் சரியென் று தலையசைத்தார்.

தான் நினைத்தது போல் சூரியநாராயணன் இந்த விசயத்தை அவ் வளவு எளிதில் விட்டு
விடுவான் என் று அவளுக்குத் தோன் றவில் லை. அடுத்து என் ன செய் யலாம் ? என் று அவள்
யோசித்துக் கொண் டு இருந்தாள் .

*******************************

இரு குடும் பங் களும் சந்திரவதனியின் வீட்டினில் குழுமியிருந்தனர். அதாவது சந்திரவதனி


பக்கம் வேணுகோபாலன் , சாந்தி, தம் பி சஞ் சய் , தங் கை சம் யுக்தா இருந்தனர்.
சூரியநாராயணன் வீட்டின் சார்பில் அவனது தாத்தா கனகசபை, தந்தை பசுபதி, தாய்
வாசுகி மட்டுமே வந்திருந்தனர். அவனது பாட்டி காமாட்சி, இரட்டை தங் கைகள் சாவித்திரி,
சத்யவதி வரவில் லை. இதுபோக இன் னொரு தங் கை கங் கா திருமணமாகி கணவன்
வீட்டில் இருக்கிறாள் . அவளும் வரவில் லை. இவர்களோடு இருதரப்பு வழக்கறிஞர்கள்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 7/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
இருந்தனர். நீ திமன் றம் , வழக்கு என் று இழுத்தடிப்பதை விட இப்படிப் பேசி தீர்த்துக்
கொள் ளலாம் என் று வேணுகோபாலன் தனது வழக்கறிஞர் மூலம் தூது அனுப்பி விட்டார்.
நீ திமன் றம் சென் றால் தனது அந்தஸ் து, தொழில் பாதிக்கப்படும் என் று அவர் கருதினார்.
சூரியநாராயணனும் அவரது கூற்றை ஏற்றுக் கொண் டு தனது குடும் பத்தினரை இங் கு
அழைத்து வந்திருக்கின் றான் .

சூரியநாராயணன் குழந்தைக்காகக் காட்டிய ஆர்வத்தை அவனது வீட்டினர் யாரும்


காட்டவில் லை. வந்ததில் இருந்து வாசுகி கூடப் பேரனை பற்றி எதுவும் கேட்காது இருந்தார்.
இவ் வளவு ஏன் பேரனை பார்ப்பதற் கான ஆர்வம் ஏதுமின் றி அவர் அமைதியாக அமர்ந்து
இருந்தார். இதை எல் லாம் சந்திரவதனி கவனித்துக் கொண் டு தான் இருந்தாள் . தினமும்
தொழிலில் அவள் எத்தனை பேரை சந்திக்கின் றாள் . எல் லோரையும் பார்வையால் எடை
போடும் அவளுக்கு வாசுகி பற்றி எளிதில் கணிக்க முடிந்தது.

"பேச வர சொல் லிட்டு எதுவும் பேசாம இருந்தால் என் ன அர்த்தம் ?" சூரியநாராயணன் தான்
பேச்சை ஆரம் பித்து வைத்தான் .

"நாங் க பெண் ணைப் பெத்தவங் க... எங் க வீட்டில் எங் க பேரன் இருந்தால் தான் பாதுகாப்பா
இருப்பான் . அவன் நல் ல மாதிரியா வளரணும் . அதுக்குப் பணம் , வசதி தேவை. அதனால்
அவன் எங் க கூடத் தான் இருக்கணும் ." வேணுகோபாலன் தணிந்து பேசுவது போல் தனது
எண் ணத்தை உறுதியாய் தெரிவித்தார்.

"என் ன பாதுகாப்பா? என் ன நல் ல மாதிரியா?" என் று கோபத்தோடு கேட்ட


சூரியநாராயணன் தனது அலைப்பேசியில் இருந்து ஒரு காணொளி எடுத்து போட்டுக்
காண் பித்தான் . அகில் யாருமில் லாத தனியறையில் பயத்தில் முகம் எல் லாம் சிவக்க
ஓவென் று கத்தி அழுது கொண் டு இருந்தான் . இந்தக் காட்சி ஒன் று போதுமே... அகிலை
அவன் அழைத்துச் செல் வதற்கு... சந்திரவதனியின் குடும் பத்தினர் மனதிற்குள் அரண் டு
தான் போனார்கள் .

"இது தான் நீ ங் க பார்த்துக்கிற லட்சணம் . எங் க வீட்டில் இருந்தாலாவது அவன் பாசத்துக்கு


ஏங் காமலாவது இருந்திருப்பான் ." சூரியநாராயணன் வெறுப்பாய் சொல் ல...

அவனது பேச்சில் சுதாரித்துக் கொண் ட சந்திரவதனி, "என் ன பெரிய பாசம் ? இதோ


வந்ததில் இருந்து இவங் க..." என் று அவன் அம் மாவை சுட்டிக்காட்டியவள் மேலே பேச
முயலும் போது,

"இவங் க இல் லை... அத்தை." என் று சூரியநாராயணன் அவளைத் திருத்தினான் . அவள்


அவனை முறைத்து பார்த்தவள் ,

"இவங் க வந்ததில் இருந்து அவங் க பேரனை பத்தி ஒரு வார்த்தை கேட்டாங் களா? இல் லை
பேரன் எங் கேன் னு ஆர்வமா பார்த்தாங் களா? எதை வச்சு நம் பி குழந்தையை உங் க கூட
அனுப்புறது? பெண் கள் தான் குழந்தையைப் பார்த்துக்கணும் . ஆனா உங் க வீட்டில் மூத்த
தலைமுறையே இப்படி என் றால் ...?" அவள் கேள் வியாக அவனைப் பார்த்தாள் .

"அதைப் பத்தி உங் களுக்கு என் ன? எங் க வீட்டு வாரிசு எங் க கிட்ட தான் இருக்கணும் ."
சூரியநாராயணன் ஆணித்தரமாகக் கூற... அவனது தாத்தாவும் , தந்தையும் அவனது
கூற்றை ஆமோதித்து அமைதியாக இருந்தனர். சந்திரவதனியின் பேச்சு பிடிக்காது வாசுகி
முகத்தைச் சுருக்கி கொண் டு இருதலைக்கொள் ளி எறும் பாய் தவித்து அமர்ந்து இருந்தார்.
அவர் ஒன் றும் பாசம் இல் லாதவர் இல் லை. பெரிய வீட்டில் பெண் எடுத்து அவர் பட்ட அடி
அப்படி. அதனால் அவர் அமைதி காத்தார்.
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA
Report  Like

Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 37 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 8/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

Jan 31, 2024   #4

"முடியாது... அகில் எங் களுக்கும் வாரிசு தான் . அவனை நாங் க பார்த்துக்கிறோம் ."
சந்திரவதனி தனது கூற்றில் நிலையாக இருக்க... அவளது பெற்றோர் அதை
ஆமோதித்தனர்.
ஶ்ரீகலா
Administrator
"எப்படிப் பார்த்துப்பீங் க? கொஞ் சம் சொல் லுங் க பார்க்கலாம் ." என் றவனைக் கண் டு
'இதென் ன கேள் வி?' என் பது போல் அவள் அவனைப் பார்த்து வைத்தாள் .

"உனக்குக் கல் யாணமாகி நீ உன் புகுந்த வீட்டுக்கு போய் விட்டால் இந்தக் குழந்தையை யார்
பார்த்துப்பாங் க?" சூரியநாராயணனின் கேள் வியில் அவள் மட்டுமல் ல அவளது பெற்றோர்,
தம் பி, தங் கை அனைவருமே திகைத்து போயினர். இதை அவர்கள் சற்றும்
எதிர்பார்க்கவில் லை.

"உனக்கு வரும் கணவன் எங் க வீட்டு வாரிசை வேறு மாதிரியாக எண் ணி


கொடுமைப்படுத்தினால் ?" அவன் மேலே பேசும் முன் ,

"நான் கல் யாணமே பண் ணிக்கலை போதுமா?" சந்திரவதனி இடைப்புக...

"கேட்பதற்கு எல் லாம் நல் லா தான் இருக்கு. ஆனா நடைமுறைக்கு இது ஒத்து வராது.
அப்படியே இருந்தாலும் .... குழந்தைக்கு அப்பா, அம் மா பாசம் இரண் டும் வேண் டும் ."

"அங் கே மட்டும் என் ன வாழுதாம் ? நீ கல் யாணம் பண் ணிக்கிட்டால் ... உன் மனைவி
அகிலை கொடுமைப்படுத்தினால் ?" அவள் கேள் வியாய் அவனைப் பார்த்தாள் . அவளது
பார்வையை அசராது தாங் கியவன் ,

"முதலில் ஒண் ணு புரிஞ் சிக்கோ. அகில் எங் க வீட்டு வாரிசு. எங் க இரத்தம் . அதுவும் முதல்
வாரிசு. எப்படிப் பார்த்தாலும் நான் அவனுக்கு அப்பா தான் . எனக்கு வர போகிறவள்
அவனை மகனா தான் பார்க்கணும் . பார்த்தாக வேண் டும் ." உறுதியான குரலில்
சொன் னான் .

"இதே போல் தானே இங் கும் ... எனக்கு வர போகிறவரும் ..." அவள் முடிக்கும் முன் ,

"அது எப்படி ஒண் ணாக முடியும் ? உனக்கு வர போகிற கணவருக்கும் , அகிலுக்கும் எந்த
ரத்த சம் பந்தமும் இல் லையே. அவர் எப்படி அவனைத் தன் னோட வாரிசா பார்ப்பார்? உங் க
வீட்டில் எங் க வாரிசு அநாதையா வளர்வதை நாங் க விரும் பலை. இதுக்கு மேல் முடியாது,
உன் னால் ஆனதை பார்த்துக்கோ என் றால் ...?" என் று கேள் வியாய் நிறுத்தியவன் ,

"கோர்ட்டில் பார்த்துக்கலாம் ." என் றவன் தனது தாத்தா, பெற்றோரை கண் டு கண் ணைக்
காட்ட... அவர்கள் எந்த மறுபேச்சின் றி எழுந்து கொண் டனர்.

சூரியநாராயணன் முன் னே செல் ல... அவர்கள் அவனைப் பின் தொடர்ந்து சென் றனர்.

சந்திரவதனி யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் . சஞ் சய் , சம் யுக்தா இருவரும்


அங் கிருந்து சென் று விட்டனர். அவர்களுக்கு இது எல் லாம் பிரச்சினையே இல் லை. இது
அவர்களுக்குத் தேவையில் லாத விசயமும் கூட...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 9/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
"சந்திரா, நீ ரொம் ப யோசிக்காதே. கவலையை விடு. நாம கோர்ட்டில் பார்த்துக்கலாம் ."
வேணுகோபாலன் மகளைத் தேற்றினார்.

"எல் லாம் சங் கீதாவால் வந்தது. காதலித்தது தான் காதலித்துத் தொலைத்தாள் , நல் ல
பணக்காரனாய் பார்த்துக் காதலித்துத் தொலைத்து இருக்கக் கூடாதா? ஒன் றுமில் லாத
ஒருத்தனை கட்டிக்கிட்டு வந்து நம் மைத் தலைகுனிய வச்சது தான் மிச்சம் ." சாந்தி இறந்து
போன தனது இரண் டாவது மகளான சங் கீதாவை திட்டி கொண் டு இருந்தார்.

"இப்போ சங் கியை பத்தி பேசி என் னவாகப் போகிறது சாந்தி? பணம் இல் லைன் னாலும்
மாப்பிள் ளை கம் பீரம் , அழகு, படிப்பு எதிலும் குறை இல் லையே. அதை வைத்து தானே
ஆதியை வீட்டோட மாப்பிள் ளையா வச்சுக்கிட்டேன் . அவங் க ஆயுசு அவ் வளவு தான் .
இறந்து போனவைங் களைப் பத்தி பேச வேண் டாம் ." வேணுகோபாலன் சொல் லவும் சாந்தி
அமைதியாகி விட்டார்.

"சந்திரா, நீ என் ன சொல் ற?" வேணுகோபாலன் மகளிடம் கேட்க...

"அகில் நம் ம கூடத் தான் இருக்கணும் ப்பா. அதுக்கு என் ன செய் ய முடியுமோ செய் ங் க."
அவளது குரல் உறுதியுடன் ஒலித்தது.

"ம் , சரிம் மா... பார்த்துக்கலாம் ." என் றவர், "நீ எப்போ கம் பெனிக்கு வர போற? வேலை
எல் லாம் அப்படியே இருக்குது." என் று கேட்க... அப்போது அகிலின் அழுகை குரல்
அறையிலிருந்து கேட்டது.

"எல் லாத்தையும் நீ ங் களே பார்த்துக்கோங் க. முடிஞ் சா சஞ் சய் க்கு எல் லாத்தையும் சொல் லி
கொடுங் கப்பா." என் று அவசரமாய் ச் சொன் னவள் அகிலை தேடி விரைந்தாள் .

மகளைக் கண் டு பெற்றோர் இருவரும் யோசனையாய் பார்த்திருந்தனர். நான் கு மக்களில்


புத்திசாலி, திறமைசாலி எல் லாமே சந்திரவதனி மட்டுமே. இத்தனை வருடங் களாய் அவள்
தான் அவர்களது தொழில் களைப் பார்த்து கொண் டாள் . அதுவும் திறம் பட... ஒன் றை
பத்தாக்கி, பத்தை நூறாக்கி, நூறை ஆயிரமாக்கும் வித்தை அவளுக்கு மட்டுமே
வாய் த்திருந்தது.

"என் னங் க இப்படிச் சொல் லிட்டு போகிறாள் ?"

"அப்படின் னா நீ லேடிஸ் கிளப் அது இதுன் னு ஊரை சுத்தாம பேரனை பார்த்துக்கோ."

"அது எப்படி முடியும் ?" சாந்தி தயங் கினார். அவரது பிள் ளைகளையே அவர் வேலையாள்
போட்டு தான் வளர்த்தார். இந்த லட்சணத்தில் அவராவது பேரனை வளர்ப்பதாவது!

"அப்போ பேசாம இரு. சந்திரா என் ன செய் கிறாளோ செய் யட்டும் ."

"கல் யாணமாகாத பொண் ணு எப்படி?"

"அப்படின் னா அகிலை விட்டு கொடுக்கட்டும் ." என் று வேணுகோபாலன் சொல் ல...

"என் னங் க?" சாந்தி திகைத்து தான் போனார்.

"அகில் நமக்குத் தேவையில் லாத தொந்தரவு. அதுவும் இல் லாம அவங் க சொல் ற மாதிரி
இது அவங் க வாரிசு. அவங் க கிட்டேயே அகிலை கொடுத்திட்டு நிம் மதியா இருப்போம் ."
வேணுகோபாலன் எதார்த்தத்தைச் சொல் ல... சாந்தியும் அதை ஏற்றுக் கொண் டார்.

உறக்கத்தில் விழித்து அழுத அகிலை தட்டி கொடுத்து தூங் க வைத்து கொண் டிருந்தாள்
சந்திரவதனி. அகிலை காணும் போது எல் லாம் அவளுக்குத் தனது தங் கையின் நினைவு
வந்தது. சங் கீதாவுக்கு எல் லாவற்றிலும் அவசரம் தான் . எதிலும் பொறுமை என் பதே
கிடையாது. காதலில் அவசரம் , திருமணத்தில் அவசரம் , அடுத்து குழந்தையிலும் கூட
அவசரம் தான் . எல் லாமே அவசரகதியில் நடந்தது போல் அவளது வாழ் க்கையும் அற்ப
ஆயுசில் அவசரமாய் முடிந்து போனது. கணவன் , மனைவி இருவரும் சென் ற கார் விபத்தில்
உள் ளாகி அந்த இடத்திலேயே இருவருமே உயிரை துறந்து இருந்தனர். அப்போது

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 10/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
இருவருமே நல் ல போதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. அதை
வெளியிடாது மறைத்து விட்டனர். ஒரு குழந்தையைப் பெற்ற பின் பும் கூட இருவரும்
பொறுப்பு வராது பஃப், பார்ட்டி என் று ஊரை சுற்றி கொண் டிருந்தனர். அப்போதும் அகிலை
ஆள் வைத்து தான் பார்த்து கொண் டனர். இப்போது மட்டும் என் ன வந்ததாம் ? இறுதியில்
அவளது நினைவு அவனிடமே வந்து நின் றது.

சூரியநாராயணன் கூறியது அனைத்தையும் சந்திரவதனி யோசித்துப் பார்த்தாள் . அவன்


கூறியது அனைத்தும் உண் மை தான் . அதற் காக அகிலை விட்டு கொடுக்க முடியுமா?
அத்தோடு வழக்கறிஞர் கூறியது வேறு அவளது எண் ணத்தில் ஓடி கொண் டிருந்தது.

'மேடம் , உங் க தங் கை உயிரோடு இருந்திருந்தால் நடப்பதே வேறு. ஆனால் இப்போது உங் க
தங் கையும் , அவரது கணவரும் உயிரோடு இல் லை. அப்படி இருக்கும் போது கேஸ் அவங் க
பக்கம் தான் ஸ் ட்ராங் கா இருக்கு. அவங் க சொன் ன மாதிரி அகில் அவங் க இரத்தம் , அவங் க
வாரிசு. இடையில் நாம ஒண் ணுமே பண் ண முடியாது. கோர்ட்ல கேஸ் இழுத்துட்டே போகும் .
நமக்குச் சாதகமான முடிவு வராது.' என் று வழக்கறிஞரும் கையை விரித்து விட்டார்.

இது பற்றி நிரஞ் சனிடம் பேச வேண் டும் என் று சந்திரவதனி முடிவு எடுத்தாள் . நிரஞ் சனை
நினைத்ததும் அவளது இதழ் களில் அவளையும் அறியாது புன் னகை வந்து ஒட்டி
கொண் டது. நிரஞ் சன் அவளைக் காதலிப்பதாகச் சொல் லி அவளின் பின் னால்
அலைபவன் . இந்த நொடி வரை அவள் அவனிடம் தனது சம் மதத்தைத் தெரிவிக்கவில் லை.
காதல் , திருமணம் இதில் எல் லாம் அவளுக்குப் பெரிதாக விருப்பம் இருந்தது இல் லை.
அவளது உயிர் மூச்சே தொழில் தான் . இதுவரை அவள் தொழிலை தாண் டி எதையும்
யோசித்தது இல் லை. அப்படிப்பட்டவளை யோசிக்க வைத்து விட்டான் சின் னக் குட்டி
அகில் .

"உனக்காகத் தான் டா... எல் லாம் உனக்காகத் தான் குட்டிப்பையா." சந்திரவதனி மனம்
நெகிழ் ந்து அகிலின் நெற்றியில் முத்தமிட்டாள் .

எது அகிலை நோக்கி அவளை ஈர்த்தது? என் று இதுவரை அவளுக்குத் தெரியவில் லை.
காதல் , திருமணம் இதில் எல் லாம் நம் பிக்கை இல் லாதவளை தாய் மை கட்டியிழுத்து
விட்டது என் று சொல் வது தான் சரியே. அகில் பிறந்ததிலிருந்து அவளது பொறுப்பாகி
விட்டான் . அப்போதும் அவளால் அவனுடன் முழுநேரம் செலவளிக்க முடியாது வேலைக்கு
ஆள் போட்டு தான் அவனைப் பார்த்து கொண் டாள் . தங் களது நடத்தையை 'ஹை
ஸ் டேட்டஸ் ' என் று நினைத்தவளுக்கு இப்போது அகிலின் அநாதரவான நிலையைக் கண் டு
அந்த ஸ் டேட்டஸ் மீது வெறுப்பு வந்தது. அதனால் தான் அவள் பிஞ் சு குழந்தையின்
பொறுப்பினை தானாக முன் வந்து எடுத்துக் கொண் டு வீட்டில் இருக்கிறாள் . இதோ
இப்போதும் திருமணத்தை ஒதுக்கி இருந்த பெண் ணவள் சின் னவனுக்காகத் திருமணம்
பற்றி யோசிக்க ஆரம் பித்தாள் .

*******************************

சூரியநாராயணன் எப்போதடா சிக்னல் விழும் என் று எரிச்சலுடன் நினைத்தபடி தனது


இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான் . உச்சி வானில் தகித்த சூரியன் உடலில்
வியர்வையை ஆறாகப் பெருக்கெடுத்து ஓட செய் தான் . ஒழுகிய வியர்வையைத்
துடைத்தபடி பக்கவாட்டில் திரும் பியவன் அருகில் நின் றிருந்த காரை கண் டதும்
விழிகளைச் சுருக்கினான் . அது சந்திரவதனியின் கார் என் று அவனுக்கு நன் கு தெரியும் .
காரின் கருப்பு கண் ணாடியை ஊடுருவி உள் ளே உற்று நோக்கியவன் விழிகளில்
உள் ளிருப்பவர்கள் புலப்பட்டனர். சந்திரவதனி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் .
அவள் அருகில் அழகான வாலிபன் ஒருவன் அமர்ந்து இருந்தான் . இருவரும் தங் களுக்குள்
ஏதோ பேசி சிரித்தபடி இருந்தனர். அதைக் கண் டதும் சூரியநாராயணனின் உதடுகள்
இகழ் ச்சியாய் வளைந்தது. விழிகளில் பரிகாசம் குடி கொண் டது.

"போ, போ... எவ் வளவு தூரம் போக முடியுமோ அவ் வளவு தூரம் போ. ஆனால் உன் னை
எட்டிப்பிடிப்பது இந்தச் சூரியநாராயணன் மட்டுமே. அந்தச் சந்திரன் இந்தச் சூரியனுக்கு
மட்டுமே சொந்தம் ." அவனது உதடுகள் வன் மமாய் முணுமுணுத்துக் கொண் டது.

தொடரும் ...!!!

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 11/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
Please Subscribe my YouTube channel :

Report Like
SMS MEDIA

You, Vinu Sethu, Roshani Fernando and 59 others

Feb 1, 2024   #5

அத்தியாயம் : 2

"ஹேய் பிரதாப்... வாட் அ சர்ப்ரைஸ் மேன் ? எப்போ சென் னை வந்த?" வேணுகோபாலன்


ஶ்ரீகலா பிரதாப்பை ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றார்.
Administrator

"நேத்தே வந்துட்டானாம் ப்பா. ஆனா நம் ம கிட்ட ஒரு வார்த்தை சொல் லலை பாருங் க."
சந்திரவதனி சிரித்தபடி தந்தையிடம் புகார் வாசித்தாள் .

ஆம் , சூரியநாராயணன் நினைத்தது போல் கிடையாது. காரில் சந்திரவதனியுடன் பேசி


சிரித்துக் கொண் டிருந்த இளைஞன் அவளது உயிர்த்தோழன் பிரதாப். இருவருமே
எல் கேஜியில் இருந்து கல் லூரி வரை ஒன் றாகவே படித்தவர்கள் . எப்படி நட்பு ஏற்பட்டது?
என் று கேட்டால் இருவருக்குமே தெரியாது. ஆனாலும் அவர்களுக்கு இடையில் அழகான,
இறுக்கமான நட்பு இருந்தது. இவர்களது நட்பு பார்த்து வேணுகோபாலன் கூட இருவருக்கும்
திருமணம் நடத்தி வைக்க ஆசைப்பட்டார். அதை இருவரிடத்திலும் கேட்டும் விட்டார்.
ஆனால் இருவருமே ஒன் று போல் திருமணத்தை மறுத்தது தான் இங் கு ஆச்சிரியமான
விசயம் . இருவருமே தங் களது நட்பின் பிணைப்பை உணர்ந்தே இருந்தனர். நட்பில் காதலை
கலக்க அவர்கள் இருவரும் விரும் பவில் லை.

"சர்ப்ரைசா இருக்கட்டும் ன் னு சொல் லலை." பிரதாப் சொன் னதும் ,

"சர்ப்ரைசை ஒருநாள் கூடக் காப்பாத்த முடியலை. உடனே என் னைப் பார்க்க ஓடி வந்துட்ட."
சந்திரவதனி கலகலவெனச் சிரித்தாள் .

"உன் னைப் பார்க்காம இருக்க முடியுமா பேப்? அதான் ஓடி வந்துட்டேன் ." பிரதாப் அசடு
வழிந்தான் . பிரதாப் தொழில் முறை பயணமாக அமெரிக்கா சென் று ஆறு
மாதங் களாகிறது. இப்போது தான் அவன் இந்தியா திரும் பி இருக்கின் றான் .

"வழியுது... துடைச்சிக்கோ." என் று அவனைக் கலாய் த்த சந்திரவதனி பின் பு அவனிடம் ,


"ஒன் மினிட்." என் றபடி அருகிலிருந்த அறையினுள் சென் றாள் .

"பேப் இன் னும் அப்படியே தான் இருக்கிறாளா அங் கிள் ?" பிரதாப் வேணுகோபாலனிடம்
கேட்டான் .

"ஆமாம் ... சங் கி இறந்ததில் இருந்து அகில் கூடவே தான் இருக்கிறாள் . பிசினசை கூடக்
கவனிக்கிறது இல் லை." வேணுகோபாலன் கவலையுடன் சொன் னார்.

"அப்போ எப்படி இன் னைக்குக் கம் பெனிக்கு வந்திருந்தாள் ?" அவன் சந்திரவதனிக்கு
இனிய அதிர்ச்சி கொடுப்பதற் காக நேரே அவளது அலுவலகத்திற்குத் தான் சென் றான் .
அங் குத் தான் அவன் அவளைச் சந்தித்தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 12/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
"தெரியலை... ஏதோ வேலையிருக்குன் னு கிளம் பினாள் ." என் றவர், "அகிலோட பெரியப்பா
ஒருத்தன் தகராறு பண் றான் ." என் று கூடுதல் செய் தியாகச் சொன் னார்.

"ஏன் தகராறு பண் றான் ?" பிரதாப்புக்குக் கோபம் வந்தது.

"அகில் அவங் க வீட்டு வாரிசு. அவங் க கிட்ட தான் வளரணும் ன் னு..."

"நல் லது தானே... தூக்கிட்டுப் போகச் சொல் லுங் க." பிரதாப் எரிச்சலுடன் சொன் னான் .

"அது எப்படி முடியும் பிரதாப்?" என் று கேட்டபடி சந்திரவதனி அங் கு வந்தாள் . அவளது
கரத்தில் அகில் புது உடையில் புத்துணர்ச்சியுடன் தவழ் ந்தான் .

"அகில் , அங் கிள் கிட்ட வர்றியா?" பிரதாப் ஆசையுடன் அகிலை நோக்கி கை நீ ட்ட...
அகிலோ சந்திரவதனியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண் டு அவனை
ஓரக்கண் ணால் பார்த்தான் .

"சோ ஸ் வீட் அகில் ." பிரதாப் அவன் கன் னம் பிடித்துக் கொஞ் சியவன் பிறகு
சந்திரவதனியிடம் , "அவங் க கேட்கிறது நியாயம் தானே பேப். அகிலை அவங் க கிட்ட
கொடுத்துடுறது தான் சரி." என் று சொல் ல...

"அப்போ அகில் எங் க வீட்டு வாரிசு இல் லையா? என் தங் கை குழந்தை இல் லையா?"
அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

"இருக்கலாம் ... ஆனால் சட்டப்படி..."

"என் ன சட்டம் ? புல் ஷிட் சட்டம் ..." அவள் கோபமாய் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் .

"ஓகே கோபம் வேண் டாம் பேப். அகில் இங் கே தான் , உன் கூடத்தான் இருப்பான் . டோன் ட்
வொர்ரி." பிரதாப் அவளைச் சமாதானப்படுத்தினான் . அதில் சற்று சமாதானமானவள் ,

"நீ வந்த விசயம் என் னன் னு இன் னும் சொல் லவே இல் லையே?" என் று கேட்க...

"கல் யாணம் பண் ணிக்கலாம் ன் னு ஆசை வந்துச்சு. அதான் ஓடி வந்துட்டேன் ." பிரதாப் சிறு
வெட்கத்துடன் சொல் ல...

"பார்றா... அதுக்குள் ளேயா?" அவள் ஆச்சிரியமாய் நண் பனை கண் டு கேட்க...

"என் ன அதுக்குள் ளயா? உங் க ரெண் டு பேருக்கும் இருபத்தியேழு வயசாகிருச்சு. ஞாபகம்


இருக்கா? இல் லையா? பிரதாப் எல் லாமே சரியா தான் செய் கிறான் . ஆனால் நீ தான் ?"
வேணுகோபாலன் மகளைக் கண் டு முறைத்தார்.

"சீக்கிரமே நானும் கல் யாணம் பண் ணிக்கிறேன் ப்பா." என் று சொன் ன மகளைக் கண் டு
அவருக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

எப்போதும் திருமணத்தைப் பற்றிப் பேசினால் 'நோ' என் று ஒற்றைச் சொல் லோடு பேசாது
செல் பவள் இன் று சம் மதம் சொன் னது அவருக்குத் திகைப்பாய் இருக்கத்தானே செய் யும் .
அதிலும் சந்திரவதனியை விட வயதில் சின் னவளான சங் கீதா தனது கணவனுடன்
அந்நியோன் யமாய் இந்த வீட்டில் வளைய வரும் போது ஒரு தகப்பனாய் அவரது மனம்
மூத்த மகளுக்காக வருந்தத்தான் செய் தது. ஆனால் சந்திரவதனி அதை எல் லாம் பெரிதாக
எடுத்துக் கொண் டது இல் லை. உலகில் திருமணத்தைத் தாண் டி சாதிக்க வேண் டிய
விசயங் கள் நிறைய இருக்கிறது என் பது அவளது எண் ணம் .

"ஹேய் பேப், உண் மையாவா சொல் ற?" பிரதாப் மகிழ் ச்சியில் ஆர்ப்பரித்தான் .
வேணுகோபாலன் அதையே விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தார்.

"ம் , அதற் காகத் தான் இன் று வெளியில் கிளம் பினேன் . நீ வந்ததும் ப்ரோகிராமை
மாத்திட்டேன் ." அவள் அவர்களுக்குப் பதில் சொன் னாலும் அவளது கரம் அகிலை கொஞ் சி
கொண் டிருந்தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 13/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"என் ன ப்ரோகிராம் ?" பிரதாப் ஆர்வம் தாங் காது கேட்க...

"சர்ப்ரைஸ் ." அவனைப் போன் றே சொன் னவள் கண் சிமிட்டி சிரித்தாள் . அவளது சிரிப்புப்
பெரியவர்கள் இருவரையும் தொற்றிக் கொண் டது. அதைக் கண் டு சின் னவனும் தனது
அரிசி பற் களை ஈயென் று காட்டி சிரித்தான் .

"போக்கிரி, சிரிக்கிறியா?" சந்திரவதனி சின் னவனின் நெற்றியை முட்டி சிரித்தாள் .


அவளது செயலில் குழந்தை இன் னமும் சத்தமாய் க் கிளுக்கி சிரித்தது.

"ஆன் ட்டி, சஞ் சய் , சம் யுக்தா எல் லோரும் எங் கே?" பிரதாப் ஞாபகம் வந்தவனாய் கேட்க...

"ஆன் ட்டி வழக்கம் போல் லேடிஸ் கிளப், சஞ் சய் எங் கேயாவது ஊரை சுத்த போயிருப்பான் .
சம் யு காலேஜ் போயிருக்கிறாள் ." வேணுகோபாலன் சொன் னது கேட்டு பிரதாப் ஒன் றும்
சொல் லவில் லை.

ஆனால் சந்திரவதனிக்கு தான் ஒருமாதிரியாக இருந்தது. வீட்டில் கைக்குழந்தை இருக்கும்


போது அதைப் பார்க்காது எப்படி ஊர் சுற்ற மனம் வருகிறது. அவள் வீட்டில் இருந்தாலாவது
பரவாயில் லை. காலையில் அவள் கிளம் பும் போது குழந்தையைப் பார்த்துக் கொள் ளும்
பெண் மணியிடம் ஆயிரம் பத்திரங் களைக் கூறி எச்சரித்துவிட்டே கிளம் பினாள் . அதை
அவளது அன் னை சாந்தி பார்த்துக் கொண் டு தான் இருந்தார். இருந்தும் குழந்தை மீது
அத்தனை அலட்சியம் . சூரியநாராயணன் கூறியது உண் மை தான் என் பது போல்
இருக்கிறது அவளது வீட்டினர் நடவடிக்கை. அவளுக்கு மனம் கசந்து போனது. ஒரு நொடி
தான் சட்டென் று சுதாரித்துக் கொண் டவள் தன் னைத் தானே கடிந்து கொண் டாள் . எவனோ
ஒருவன் பேச்சை கேட்டு தனது வீட்டினரை தவறாக நினைப்பதா! என் று...

பிரதாப் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு செல் ல... சந்திரவதனி தனது எண் ணத்தைச்
செயல் படுத்த வேண் டி நிரஞ் சனுக்கு அழைத்துப் பேசினாள் . அவனும் உடனே அவளைக்
காண வருவதற்குச் சம் மதித்தான் . அகிலை மீண் டும் வேலை செய் யும் பெண் ணிடம் விட
மனம் இல் லாது அவள் அவனைத் தன் கூடவே அழைத்துச் சென் றாள் . உயர் நட்சத்திர
விடுதியில் நீ ச்சல் குளம் பக்கமாய் இருந்த மேசையை அவள் முன் பதிவு செய் திருந்தாள் .
அதில் சென் று அமர்ந்தவள் அகிலுக்கு நீ ச்சல் குளத்தைக் காண் பித்து விளையாட்டு காட்டி
கொண் டு இருந்தாள் . அவள் அங் கு வந்த சில நிமிடங் களில் நிரஞ் சனும் வந்துவிட்டான் .

"சாரி சந்திரா... இம் பார்ட்டென் ட் மீட்டிங் ஒண் ணு இருந்தது. அதைக் கேன் சல் பண் ண
முடியலை." நிரஞ் சன் தாமதமாக வந்ததற்குக் காரணத்தைக் கூறி மன் னிப்பு கேட்டுக்
கொண் டே அவளது எதிரில் இருந்த நாற் காலியில் வந்தமர்ந்தான் .

"உங் க பிசி டைமிலும் எனக்காக வந்தது ரொம் பச் சந்தோசம் . நான் முன் னமே
அப்பாயிண் ட்மென் ட் வாங் கி இருக்கணும் ." அவளும் தனது தவறினை ஒத்து கொண் டாள் .

"ஹேய் , நமக்குள் ள அப்பாயிண் ட்மென் ட் எல் லாம் தேவை இல் லை. நீ வான் னு சொன் னால் ...
நான் வர போகிறேன் ." என் று சொன் ன நிரஞ் சன் அழகாய் புன் னகைத்தான் .

நிரஞ் சன் அவர்களைப் போன் றே சமுதாயத்தில் சம அந்தஸ் து உள் ளவன் . அவளை விட இரு
வயது பெரியவன் . ஏதோ தொழில் சம் பந்தமான கூட்டத்தில் அவளைக் கண் டு காதல்
கொண் டு அவளின் பின் னே சுற்றி வருகின் றான் . சுற்றி வருகின் றான் என் றால் எந்நேரமும்
பின் னே வருவதல் ல. ஆனால் அவனது எண் ணம் முழுவதும் அவளின் மீது தான் இருக்கும் .
அது அவளுக்கும் நன் கு தெரியும் .

"என் ன விசயம் சொல் லு சந்திரா?" நிரஞ் சன் கேட்டதும் அவள் அவனை நிமிர்ந்து
பார்த்தாள் . கருப்பு நிற கோட், சூட்டில் கம் பீரமாய் க் கதாநாயகன் போன் று இருந்தவனைக்
கண் டு அவள் எப்படி விசயத்தைச் சொல் வது என் று தெரியாது தயங் கினாள் .

"என் ன விசயம் சொல் லு?" அவன் மேசை மீதிருந்த அவளது கரத்தினை மென் மையாய்
வருடியபடி கேட்டான் . சந்திரவதனி சட்டென் று தனது கரத்தினை விலக்கி கொண் டாள் .
மனதில் காதல் உணர்வு இல் லை. திருமணத்தில் விருப்பம் இல் லை. அப்படி இருக்கும்
போது ஆடவனின் தொடுகை அவளுக்கு ஒருவித அசூசையாக இருந்தது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 14/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"ஓகே, ஓகே தொடலை... நீ யே சொல் ." என் றவன் நாற் காலியில் நன் றாகச் சாய் ந்து
அமர்ந்தான் .

"ம் மா... ப்பூஊஊஊ..." அகில் தனது பிஞ் சு கரம் கொண் டு அவளது கன் னத்தில் அடித்தபடி
நீ ச்சல் குளத்தினைக் காட்டினான் .

"நாம வீட்டில் போய் ஸ் விம் பண் ணுவோம் அகி குட்டி." அவள் குழந்தையைச்
சமாதானப்படுத்த கூறினாள் .

"ப்ச்..." என் று நிரஞ் சன் ஆட்சேபணை ஒலியெழுப்ப... அந்தச் சத்தத்தில் அவள் நிமிர்ந்து
அவனைப் பார்த்தாள் . அப்போது தான் அவளது மூளையில் ஒரு விசயம் உறைத்தது.
நிரஞ் சன் வந்ததில் இருந்து அகிலை சிறிதும் கண் டு கொள் ளவில் லை என் று... அது
அவளுக்குச் சிறு மனச்சுணக்கத்தை ஏற்படுத்தியது.

"என் ன?" என் று அவள் அவனைக் கண் டு கேட்க...

"இவன் உன் தங் கை குழந்தை தானே. இவனை நீ ஏன் தூக்கி சுமக்கிற?" நிரஞ் சன்
முகத்தைச் சுளித்துக் கொண் டு கேட்க... அதைக் கேட்டு அவளது முகம் கருத்துப் போனது.

"அதைவிட இவன் உன் னை அம் மான் னு கூப்பிடுறான் . இது சரியில் லையே." நிரஞ் சன்
தனது பிடித்தமின் மையைச் செயலிலும் , சொல் லிலும் காட்ட...

"அம் மாவை அம் மான் னு கூப்பிடாம... அக்கான் னா கூப்பிட முடியும் மிஸ் டர் நிரஞ் சன் ?"
அவள் அழுத்தம் திருத்தமாய் அவனைக் கண் டு கேட்க... நிரஞ் சன் திகைத்து போய்
அவளைப் பார்த்தான் .

"நீ என் ன சொல் ற?"

"இன் னுமா நான் என் ன சொல் றேன் னு உங் களுக்குப் புரியலை? அகில் என் னோட மகன் .
நான் அவனுக்கு அம் மா. இந்தப் பந்தம் எப்போதும் பிரிக்க முடியாதது. இதைச்
சொல் லத்தான் உங் களை அழைத்தது. இதற்கு மேலும் உங் களுக்கு ஃபால் ஸ் ஹோப்
கொடுக்க என் னால் முடியாது. வீட்டில் சொல் லி உங் களுக்கு வேற ஒரு நல் ல பொண் ணா
பார்க்க சொல் லுங் க." என் றவள் அகிலை தூக்கி கொண் டு எழுந்தாள் .

"நீ பேசுறது அபத்தமா இருக்கு. உன் தங் கை குழந்தையை வளர்க்க போகிறேன்


பேர்வழின் னு உன் வாழ் க்கையை நீ நாசப்படுத்திக்கிற." நிரஞ் சன் அடக்கப்பட்ட
கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் .

"என் வாழ் க்கை ஏன் நாசமாகப் போகுது? என் னை அகிலோடு சேர்த்து ஏற்றுக் கொள் ளும்
பரந்த மனப்பான் மை உடைய ஆண் மகன் உலகத்தில் கிடைக்காமலா போய் விடுவான் ?
நிச்சயம் அவன் எனக்காகக் காத்திருப்பான் . என் னைத் தேடி வருவான் . ஆனால் அந்த
ஆண் மகன் நீ ங் க இல் லை மிஸ் டர் நிரஞ் சன் ." என் று அழுத்தி சொன் னவள் அவனது பதிலை
எதிர்பாராது சென் று விட்டாள் . நிரஞ் சன் கொஞ் சமும் கோபம் குறையாது அப்படியே
அமர்ந்திருந்தான் .

வீட்டிற்கு வந்த சந்திரவதனி தனது தந்தையிடம் தனது கன் டிசனை கூறி மணமகனை தேட
சொன் னாள் . நீ திமன் றம் , வழக்கு என் று போவதற்கு முன் தனது திருமணத்தை நடத்திட
அவள் துடித்தாள் . தனது திருமணம் மூலம் அகிலுக்கு ஒரு தந்தை உறவினை ஏற்படுத்திட
நினைத்தாள் . நினைப்பது எல் லாம் நடந்து விடுமா என் ன!

********************************************
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA

Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 37 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 15/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

Feb 1, 2024   #6

இரவு தாமதமாகக் களைத்து போய் வீடு திரும் பிய சூரியநாராயணன் தனது இருச்சக்கர
வாகனத்தை வீட்டின் வாயினுள் கொண் டு வந்து நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் . அவனது
அன் னை வாசுகி இன் னமும் உறங் காது அவனுக்காகக் காத்திருப்பதைக் கண் டு,
ஶ்ரீகலா
Administrator
"அம் மா, நீ ங் க எதுக்கு முழிச்சிருந்து உடம் பை கெடுத்துக்கிறீங் க? உங் களை நேரத்தோடு
சாப்பிட்டு தூங் க சொல் லியிருக்கேன் ல." என் று அன் பாய் கடிந்தபடி செருப்பைக் கழற்றி
விட்டு வீட்டினுள் நுழைந்தான் .

"அதெல் லாம் சாப்பிட்டாச்சு சூர்யா. சவியும் , சத்யாவும் பரீட்சைக்குப் படிச்சிட்டு


இருந்தாங் க. அவங் களுக்கு டீ போட்டுக் கொடுக்கத்தான் முழிச்சிட்டு இருந்தேன் .
அப்படியே உனக்காகவும் காத்துக்கிட்டு இருந்தேன் ." மகனுக்குப் பதில் கொடுத்தபடி
அவனது கையில் இருந்த சாப்பாட்டு கூடையை வாங் கினார்.

"அப்போ நேத்து முழிச்சிட்டு இருந்தது. முந்தாநேத்து முழிச்சிட்டு இருந்தது எல் லாம் எந்தக்
கணக்கு?" அவன் கேலியாய் கேட்க...

"இப்போ என் ன... நான் உண் மையைச் சொல் லணும் அவ் வளவு தானே. உனக்காகத் தான்
முழிச்சிட்டு இருந்தேன் . போ, போய் க் குளிச்சிட்டு வா. சூடா தோசை சுட்டு தர்றேன் ."
என் றவர் சமையலறைக்குச் செல் ல... அவனும் புன் னகை முகமாய் த் தனது அறைக்குச்
சென் றான் .

பத்து நிமிடங் களில் சூரியநாராயணன் குளித்துவிட்டு வரும் போது உணவு மேசையில்


அவனுக்காகச் சுட சுட தோசையும் , தக்காளி சட்னியும் காத்திருந்தது. வாசுகி சட்னியையும்
சூடு பண் ணி வைத்திருந்தார்.

"அம் மா, மூணு தோசை போதும் ." அவன் சமையலறை நோக்கி குரல் கொடுத்தவன்
தோசையைத் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட ஆரம் பித்தான் .

"நீ எத்தனை தோசை சாப்பிடுவன் னு எனக்குத் தெரியாதா? பால் காய் ச்சிட்டு இருந்தேன் ."
வாசுகி காய் ச்சிய பாலை மேசை மீது கொண் டு வைத்தார். வாசுகி மகனுக்காக
ஸ் பெசலாகப் பாலில் மிளகு, சீரகம் , மஞ் சள் , பனங் கற் கண் டு எல் லாம் சேர்த்து போட்டுக்
காய் ச்சி இருந்தார்.

"எதுக்கும் மா சிரமப்படுறீங் க?" என் றவன் பார்வை பால் மீது நிலைத்தது.

"இதெல் லாம் ஒரு சிரமமா? நீ படுற சிரமத்தை பார்க்கும் போது இது எல் லாம் தூசு சூர்யா."
என் றவரது குரல் தழுதழுத்தது.

"ப்ச், இப்போ எதுக்குச் சென் ட்டிமென் ட் படம் ஓட்டிட்டு இருக்கீங் க? நம் ம குடும் பத்துக்காகத்
தானே கஷ் டப்படுறேன் ." என் ற மகனை அந்தத் தாயின் விழிகள் வாஞ் சையுடன் பார்த்தது.

ஒரு மகன் சுயநலம் என் றால் ... ஒரு மகன் குடும் ப நலனை மட்டுமே கருத்தில் கொண் டு
ஓயாது உழைப்பவன் . சூரியநாராயணன் மட்டும் இல் லையென் றால் அவர்களது கதி?
தலைச்சன் பிள் ளை குடும் பத்தைத் தலையெடுத்து பார்த்துக் கொள் ளும் என் பது எவ் வளவு
உண் மை. அவனுக்கு என் று நல் ல உடை கிடையாது. நல் ல வண் டி கிடையாது. வண் டி கூட
யாரோ உபயோகப்படுத்தி விட்டு விற்ற வண் டி தான் . இப்படி எல் லாவற்றிலும் யோசித்து
யோசித்துச் சிக்கனமாய் ச் செலவு செய் து குடும் பத்தை நல் லவிதமாகக் கொண் டு
செல் லும் மகனின் தியாகத்தை எண் ணி அந்தத் தாயுள் ளம் உருகியது. எந்த ஜென் மத்தில்
என் ன புண் ணியம் செய் தாரோ! இப்படியொரு மகனை பெற்றெடுப்பதற்கு...

மகனை கண் டு நெகிழ் ந்த தாயுள் ளம் தனது மனதினை உறுத்தி கொண் டிருந்த விசயத்தை
மகனிடம் கேட்க நினைத்து அவனைப் பார்த்தவர்... பின் பு வேண் டாம் என் று அமைதி
காத்தார். இருமனதாய் அவர் அமர்ந்திருப்பதை மகன் இனம் கண் டு கொண் டானோ!

"என் னம் மா, ஏதோ கேட்க நினைக்கிறீங் க? ஆனா கேட்க மாட்டேங் கிறீங் க. என் ன
விசயம் மா?" அன் னையிடம் கேட்டவன் சாப்பிட்ட தட்டை சமையலறையினுள் தூக்கி

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 16/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
சென் று கழுவி வைத்து விட்டு வந்தான் . இன் னமும் வாசுகி யோசனையுடன்
அமர்ந்திருப்பதைக் கண் டு,

"அம் மா..." என் று அவன் அவரை உலுக்க...

"ஒண் ணும் இல் லைப்பா." என் று சமாளித்தவரை கண் டு விழிகளைச் சுருக்கியவன் ,

"கங் கா மாமியார் எதுவும் ஃபோன் போட்டாங் களா? பணம் , நகை எதுவும் கேட்டாங் களா?"
அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அது தானே.

"அது எப்பவும் இருக்கிறது தானே சூர்யா. அவங் களுக்கு நம் மளையே வித்துச் செஞ் சா
கூடப் பத்ததாது. பேராசை பிடிச்சவங் க. தெரியாம பொண் ணு கொடுத்துட்டு மாட்டிட்டு
முழிக்கிறோம் ." வாசுகி வருத்தத்துடன் சொல் ல...

"இன் னும் கொஞ் சம் பணம் சேர்த்ததும் கங் கா வீட்டில் கேட்டது எல் லாம் செஞ் சிரலாம் மா."
என் று சமாதானம் சொன் னவன் , "அப்போ வேற என் ன விசயம் ?" என் று கேட்க...

"ஆதியோட மகனை பத்தி..." வாசுகி தயக்கத்துடன் மகனை பார்த்தார்.

"அவன் ஆதியோட மகன் மட்டுமில் லைம் மா. நம் ம வீட்டு வாரிசு. என் னோட மகன் . அவனை
எப்படி அங் கே விட்டு வைக்க முடியும் ?"

"அவங் க கிட்ட நாம போட்டி போட முடியாது சூர்யா. அவங் க பணக்காரங் க. அவங் களால
என் னவும் பண் ண முடியும் . அவங் களை எதிர்த்துட்டு நம் மளால ஒண் ணும் பண் ண
முடியாது. எதுக்கு இந்த வீண் வம் பு?"

"இப்படிச் சொல் லி சொல் லி தான் ஆதியை அவங் க வீட்டுக்கு தாரைவார்த்து கொடுத்தோம் .


நம் ம உரிமையை, உறவை எல் லாத்தையும் விட்டு கொடுத்தோம் . இப்போ ஆதியின்
ஞாபகமா மிச்சம் இருக்கிறது அகில் மட்டும் தான் . அவனையும் விட்டுக் கொடுக்கச்
சொல் றீங் களா?" சூரியநாராயணன் கேட்டதும் நியாயம் தான் . ஆனாலும் ஏதோ ஒன் று
அவருக்குச் சரியாகப் படவில் லை. பின் பு ஏதோ நினைத்தவராய் ,

"சூர்யா, உனக்கும் முப்பது வயசாகிட்டது. கல் யாணத்துக்குப் பொண் ணு பார்க்கலாமா?"


என் று கேட்ட அன் னையைக் கண் டு ஒரு நொடி அமைதியாக இருந்தவன் மறுநொடி, "சரி
பாருங் க." என் றுவிட்டு சென் றுவிட்டான் .

மகன் சொன் னது கேட்டு அந்தத் தாயுள் ளம் நிம் மதி அடைந்தது. அவருக்கு மகனின்
நிலைப்பாடு கண் டு சற்றுப் பயமாக இருந்தது. இதில் அகில் வேறு சூரியநாராயணனை
அப்பா என் றும் , சந்திரவதனியை அம் மா என் றும் அழைப்பது வேறு அவருக்கு அச்சத்தை
அளித்திருந்தது. ஒரு மகனை இழந்தவருக்கு இன் னொரு மகனை இழக்க விருப்பம்
இல் லை. அவரது நியாயம் ஏற் க கூடியதே!

வீட்டின் வரந்தாவில் இருந்து மாடிக்குச் செல் லும் படியில் ஏறி மேலே இருக்கும் தனது
அறைக்கு வந்தான் சூரியநாராயணன் . மாடியில் ஒற்றை அறை மட்டும் இருக்க...
மீதமுள் ளவை எல் லாம் வெற்று இடமாக இருந்தது. தனது அறை கதவை திறந்து உள் ளே
வந்தவன் அங் கிருந்த கட்டிலில் படுத்தான் . அன் னை கூறிய வார்த்தைகள் அவனது
காதுகளில் ஒலித்துக் கொண் டே இருந்தது. அன் னை சொன் னது போல் அவனுக்கு முப்பது
வயதாகி விட்டது. ஆனால் இதுவரை காதல் , திருமணம் இதைப் பற்றி எல் லாம் நினைத்து
கூடப் பார்த்தது இல் லை. அப்படி நினைத்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமும்
இருந்ததில் லை.

சூரியநாராயணன் வாழ் க்கையை அனுபவித்து வாழ் ந்தது பதினேழு வயது வரை தான் .
அதன் பிறகு வீட்டின் கஷ் டம் உணர்ந்து பனிரெண் டாவது வகுப்போடு படிப்புக்கு முழுக்கு
போட்டு விட்டு தந்தையுடன் தொழிலில் அமர்ந்து விட்டான் . அவனது தாத்தா கனகசபை
பழைய இரும் பை பொறுக்கி எடுத்து அதை விற்றுப் பிழைப்பு நடத்தி கொண் டு இருந்தார்.
அவனது தந்தை பசுபதி கொஞ் சம் முன் னேறி பழைய இரும் பு கடை ஒன் றை ஆரம் பித்தார்.
சாதாரண வருமானம் , சாதாரண வாழ் க்கை என் று வாழ் க்கை மிகவும் சாதாரணமாகச்
சென் று கொண் டிருந்தது. இந்நிலையில் பசுபதி விபத்து ஒன் றில் அடிபட்டு படுத்துவிட...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 17/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
வருமானம் இல் லாது குடும் பம் மிகவும் கஷ் டப்பட... அன் று தான் சூரியநாராயணன்
படிப்பை விட்டு விட்டுக் கடையில் போய் அமர்ந்தான் . அதன் பின் னர்ப் பசுபதி உடல் நிலை
தேறி நன் றாக ஆன பின் பும் கூட அவன் தொழிலை விடவில் லை. தொழிலின் சூட்சமம்
பிடிபட்டது. தந்தையும் , மகனும் சேர்ந்து உழைக்கும் போது வருமானம் இரட்டிப்பானது.

பழைய இரும் பை வாங் கி என் ன செய் கிறார்கள் என் று ஆராய் ந்த போது... அதை உருக்கி
கட்டியாக்கி விற்பது தெரிந்தது. அதை அவனும் செய் ய விரும் பி அந்தத் தொழிலில் கால்
வைத்தான் . இதோ இப்போது வரை அது நன் றாகப் போய் க் கொண் டிருக்கிறது. தந்தைக்கு
ஓய் வு கொடுத்துவிட்டு தானே எல் லாவற்றையும் பார்த்துக் கொண் டான் . தம் பி ஆதித்யா
படிப்பு முடித்துவிட்டுத் தனக்குத் தோள் கொடுப்பான் என் று நம் பியிருந்த போது... அவன்
காதல் திருமணம் செய் து கொண் டு வீட்டோடு மாப்பிள் ளையாகப் பெண் ணின் வீட்டிற்குச்
சென் று விட்டான் . குடும் பமே அதற் காகக் கலங் கி நின் ற போதும் கூடச் சூரியநாராயணன்
கலங் கி நிற் கவில் லை. அவன் உழைத்துச் சம் பாதித்த பணத்தில் மூத்த தங் கை
கங் காவிற்குத் திருமணம் செய் து வைத்தான் . சாதாரணமாக இல் லை, ஐம் பது பவுன்
போட்டு தான் கட்டி கொடுத்தான் . இருந்தும் அவளது புகுந்த வீட்டினர் ஆசை
அடங் கவில் லை.

ஆதித்யா திருமணத்திற்குப் பிறகு சூரியநாராயணனின் வைராக்கியம் அதிகரித்தது.


பணம் , பணம் , பணம் மட்டுமே... பணம் சம் பாதிக்க வேண் டும் என் பதே அவனது
லட்சியமாக மாறியது. தொழிலில் அடுத்து இரும் பு கட்டியை முறுக்குக் கம் பியாக மாற்றும்
தொழிற் சாலையை வங் கி கடனில் சிறியளவில் ஆரம் பித்தான் . அவனது நல் ல நேரமோ
என் னவோ! அந்தத் தொழில் நல் லவிதமாகப் போனது. போதிய வருமானம் வந்தது. வங் கி
கடன் எடுத்து மற்றும் தொழிலில் வந்த இலாபம் எல் லாவற்றையும் மீண் டும் தொழிலில்
போட்டான் . தொழிலும் நன் றாக நடந்தது, வருமானமும் நன் றாக வந்தது. இந்த மூன் று
வருடங் களில் அவன் ஓரளவிற்கு நன் றாக வந்து விட்டான் என் று தான் கூற வேண் டும் .
அவர்களுக்கு என் று சிறிய அளவில் என் றாலும் சொந்த வீட்டினை கட்டி முடித்திருந்தான் .
இரு தங் கைகளின் படிப்பிற்கும் , திருமணத்திற்கும் பணம் சேர்த்து வருகின் றான் .
அத்தோடு பெரியவர்கள் நால் வரின் மருத்துவச் செலவுக்கு என் று கணிசமான தொகையை
வங் கியில் போட்டு வைத்திருக்கின் றான் .

இன் னும் கொஞ் சம் வங் கி கடன் பாக்கி இருக்கிறது. இனிவரும் நாள் களில் அதைக் கட்டி
முடித்து விடலாம் என் கிற நம் பிக்கை அவனுக்கு இருக்கிறது. இப்போது குடும் பம்
நல் லவிதமாக இருக்கிறது. ஆனாலும் பழையதை மறக்காது அதிக ஆடம் பரம் இல் லாது
இருந்தனர். வாசுகி இன் னமும் கழுத்தில் மஞ் சள் கயிறு தான் போட்டிருக்கிறார். தனக்கு
என் று வாங் கிய தங் க சங் கிலியை கூட மகள் களுக்கு என் று எடுத்து வைத்து விட்டார்.
கேட்டால் , 'பிறந்ததில் இருந்து இப்படித்தானே இருக்கிறேன் . இப்போ என் ன புதுசா?
கழுத்தில் போட்டிருக்கும் தங் கத்தைப் பார்த்து யாரும் நம் மை மதிக்க வேண் டாம் .' என் று
அவர் உறுதியாய் சொல் லி விட்டார்.

அதிலும் சூரியநாரயணன் ஒருபடி மேல் ... சிக்னம் என் றால் அப்படியொரு சிக்கனம் .
அநாவசியமாக ஒரு ரூபாயை கூடச் செலவளிக்க மாட்டான் . உணவு விடுதியில் கூட உணவு
உண் ண மாட்டான் . காலையில் செல் லும் போதே உணவினையும் கையோடு எடுத்துக்
கொண் டு சென் று விடுவான் . அப்படிப்பட்டவன் எப்படிச் சந்திரவதனி மீது கண் வைத்தான் .
அவனுக்கே திடுமெனச் சந்தேகம் தோன் றியதில் எழுந்து சென் று அங் கிருந்த இரும் பு
அலமாரியில் இருந்த கண் ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தான் .

மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் ... 'அடேய் , அதுக்குப் பெயர் கருப்பு' அவனது
மனசாட்சி அவனைக் கண் டு எள் ளி நகையாடியது. ஆமாம் , அவன் கருவறை கடவுள்
போன் று கரிய நிறமுடையவன் தான் . நல் ல உயரம் , உயரத்திற்கேற்ப உடல் வாகு. உடலில்
எங் கும் அதிகச் சதைப்பற்றைக் காண முடியாது. இரும் பு தொழிற் சாலையில் வேலை
செய் வதாலோ என் னமோ 'சிக்ஸ் பேக்ஸ் ' எனப்படும் படிக்கட்டுத் தேகம் தானாக
அவனுக்கு அமைந்திருந்தது. கூர்மையான கண் களும் , முறுக்கிவிடப்பட்ட மீசையும் என் று
கம் பீரமான ஆண் மகனாகத் தான் அவன் இருந்தான் . ஆனாலும் அவளின் முன் ???

அந்த நொடி அவனது மனக்கண் ணில் சந்திரவதனியின் பிம் பம் தோன் றியது. இளவரசி
போன் று அழகிய தோற்றமுடையவள் அருகே இவன் நின் றால் சுமார் ரகத்திற்கும் சற்று
கீழே தான் . இளவரசியும் , சிப்பாயும் போன் று...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 18/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
'விஜய் சேதுபதி, த்ரிஷா காம் பினேசன் மாதிரி இருக்கும் .' அவனது மனசாட்சி சம் பந்தம்
இல் லாது ஆஜராகி அவனைக் கேலி செய் தது.

"இருந்தால் தான் என் ன? என் னைத் தாண் டி அவள் வேறு யாரை திருமணம் செய் துவிட
முடியும் ? அவளுக்கு நானே... எனக்கு அவளே..." என் று சொன் னவனின் மனதில் விட்டதைப்
பிடித்துவிடும் வெறி இருந்தது என் றே சொல் லலாம் .

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :

Report
SMS MEDIA Like

You, Vinu Sethu, Roshani Fernando and 50 others

Feb 2, 2024   #7

அத்தியாயம் 3லிருந்து சிறு முன் னோட்டம் … முழு அத்தியாயம் இன் றிரவு 9 மணிக்கு

"எத்தனை பொண் ணுங் க ஃபோட்டோ தான் காண் பிக்கிறது சூர்யா? யாரையும் பிடிக்கலை
ஶ்ரீகலா பிடிக்கலைன் னு சொன் னால் ... என் ன அர்த்தம் ?" வாசுகி சலிப்பாக மகனிடம் கேட்டார்.
Administrator

"பிடிக்கலைன் னா பிடிக்கலைன் னு தான் சொல் ல முடியும் . எனக்குப் பிடிச்ச மாதிரி


பொண் ணைத் தேடி கண் டுபிடிங் க." என் றவன் தொழிற் சாலைக்குக் கிளம் பி கொண் டு
இருந்தான் .

"சூரியா கண் ணு, பொண் ணு நல் லா தானே இருக்கு." பாட்டி காமாட்சி மணமகள்
புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண் டு பார்த்திருந்தார்.

"ஆச்சி, முதல் ல கண் ணாடி போட்டு ஃபோட்டோ பாருங் க. அப்போ தான் குறை தெரியும் ."
சூரியநாராயணன் நக்கலாய் சொல் ல...

"ஹி ஹி..." என் று அசடு வழிந்த காமாட்சி கண் ணாடியை போட்டுக் கொண் டு
புகைப்படத்தைப் பார்த்தார். அவரது கண் களுக்குக் குறை ஒன் றும் தெரியவில் லை.

"ஒரு குறையும் தெரியலையே கண் ணு."

"இல் லையே. நல் லா பாருங் க. கண் ணு மாறுகண் மாதிரி இருக்கு." அவன் சொல் லவும் ...
உற்று பார்த்தவர்,

"ஆமா, நீ சொன் னது மாதிரி தான் இருக்கு." என் று பேரனுக்கு ஒத்து ஊத...

"நீ பொண் ணு பார்த்த லட்சணம் போதும் ." என் று கனகசபை புகைப்படத்தைப் பிடுங் கி
கொண் டார்.

"ஆச்சியே சொல் லிட்டாங் க. இந்தப் பொண் ணு வேண் டாம் ." அன் னையிடம் சொல் லியபடி
வாயிலுக்கு வந்தவன் அங் குக் காரிலிருந்து இறங் கி கொண் டிருந்த வேணுகோபாலனை
கண் டு அப்படியே நின் றுவிட்டான் . காரின் மறுபக்கம் இருந்து வேலைக்கார
பெண் மணியுடன் இறங் கிய அகிலை கண் டதும் அவன் முகம் மலர சின் னவனை நோக்கி
விரைந்தான் .

சூரியநாராயணன் அகிலை வாங் கிக் கொண் டதும் வேணுகோபாலன் அந்தப்


பெண் மணியிடம் , "நீ காரில் உட்கார்." என் று கூற... அந்தப் பெண் மணி அமைதியாகக்
காரில் அமர்ந்து கொண் டார்.

சூரியநாராயணனின் குடும் பத்தினர் அனைவரும் வாயிலில் நின் றபடி இவர்களைப்


பார்த்திருந்தனர். அருகில் செல் வதற்கு அவர்களுக்கு மிகுந்த தயக்கமாக இருந்தது.

"உங் க வீட்டு வாரிசு. உங் க ரத்தத்தை உங் க கிட்டேயே ஒப்படைச்சாச்சு." என் று அவனிடம்
சொன் னவர் அவன் பதிலை எதிர்பாராது காரிலேறி சென் று விட்டார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 19/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

சூரியநாராயணன் அப்படியே திக்பிரம் மை பிடித்தார் போன் று நின் றிருந்தான் . இதையா


அவன் எதிர்பார்த்தான் ? அவன் நினைத்தது நடக்காதது கண் டு அவனுக்கு இயலாமையில்
கோபம் வந்தது. அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது போய் விட்டதே! ஆத்திரத்தில்
அவனது விழிகள் மெல் ல சிவக்கலானது.

"ப்பா..." அகிலின் குரலில் தன் னுணர்வு பெற்றவன் மனம் நெகிழ தாயுமானவனாய்


குழந்தையைத் தன் னோடு அணைத்துக் கொண் டான் .
Please Subscribe my YouTube channel :

SMS MEDIA
Report  Like

Maheswari.G, NasreenSadam, meenaes and 28 others

Feb 2, 2024   #8

அத்தியாயம் : 3

ஶ்ரீகலா வேணுகோபாலன் நட்சத்திர விடுதியில் நடந்த தொழில் கூட்டம் ஒன் றில் கலந்து கொண் டு
Administrator
வெளியில் வந்தார். இப்போது எல் லாம் சந்திரவதனி தொழில் எதிலும் தலையிடுவது
இல் லை. அவரைத் தான் பார்த்துக் கொள் ளச் சொல் லியிருக்கிறாள் . அதற்கு மேல்
அவளிடம் வாதாட முடியாது. என் ன தான் இருந்தாலும் மகள் என் பவள் திருமணமாகி
அடுத்த வீட்டுக்கு போக வேண் டியவள் . எப்படிப் பார்த்தாலும் வேணுகோபாலன் தானே
அவரது தொழில் களைப் பார்த்துக் கொள் ள வேண் டும் . அவர் தனது மனதினை தேற்றிக்
கொண் டு தொழிலில் கவனத்தைச் செலுத்தினார். மகன் சஞ் சய் கொஞ் சம் அவருக்கு
ஒத்துழைக்கலாம் . ஆனால் அவனோ பொறுப்பில் லாது ஊரை சுற்றிக் கொண் டு
இருக்கின் றான் . அதில் அவருக்குச் சற்று வருத்தம் தான் .

இதை எல் லாம் விட இப்போது புதிதாய் சந்திரவதனியின் திருமண விசயம் வேறு அவரது
மனதினை போட்டு அரித்துக் கொண் டிருந்தது. மகள் வாய் திறந்து திருமணத்திற்குச்
சம் மதம் என் று கூறிய பிறகும் கூட... அவரால் உடனே மணமகனை தேடி கண் டுபிடித்து
அவளுக்குத் திருமணம் செய் து வைக்க முடியவில் லை. ஏனெனில் அவளது நிபந்தனை
அப்படி. அது வேறு அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது.

"அங் கிள் ..." மகளின் சிந்தனையில் உழன் று கொண் டிருந்த வேணுகோபாலன் அந்த
அழைப்பினை கண் டு கொள் ளாது செல் ல...

"வேணு அங் கிள் ..." தனது பெயர் கூறி அழைத்த குரலில் அவர் நின் று திரும் பி பார்த்தார்.
அங் கு நிரஞ் சன் நின் றிருப்பதைக் கண் டு அவரது முகம் புன் னகையில் மலர்ந்தது. அவன்
அவரை நோக்கி விரைந்து வந்தான் .

"நிரஞ் சன் , எப்படியிருக்க?" என் று அவர் கேட்க...

"என் ன யோசனை அங் கிள் ? நான் உங் களைக் கூப்பிட்டுட்டே இருக்கேன் . நீ ங் க கவனிக்காம
போய் க்கிட்டே இருக்கீங் க."

"பிசினஸ் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் . சரி அதை விடு. என் ன விசயம் ப்பா?"

"அங் கிள் , நான் கேட்கிறேன் னு தப்பா நினைக்கக் கூடாது." அவனின் பீடிகையில் அவரது
விழிகள் சுருங் கியது.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 20/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"இல் லை, தப்பா நினைக்கலை. நீ கேளுப்பா."

"சந்திராவுக்கு ஊரெல் லாம் மாப்பிள் ளை தேடி அலையறீங் கன் னு நான் கேள் விப்பட்டேன் .
ஆனா அந்த மாப்பிள் ளையாக நான் இருக்கக் கூடாதா அங் கிள் ?" நிரஞ் சன் சுற்றி வளைத்து
பேசாது நேரடியாக விசயத்திற்கு வந்தான் . அவன் சொன் னது கேட்டு வேணுகோபாலனின்
முகம் மகிழ் ச்சியில் மலர்ந்தது. நிரஞ் சன் எல் லாவிதத்திலும் சந்திரவதனிக்குப்
பொருத்தமாகத் தான் இருப்பான் .

"ரொம் பச் சந்தோசம் நிரஞ் சன் ." வேணுகோபாலன் சந்தோசத்தில் சட்டென் று அவனது
கரங் களைப் பற்றிக் கொண் டார்.

"தேங் க்ஸ் அங் கிள் ." அவர் உடனே தன் னை ஏற்றுக் கொண் டது கண் டு அவனுக்குச் சற்றுக்
கர்வமாக இருந்தது.

"ஆனால் ...?" மகளின் நிபந்தனையை நினைத்து வேணுகோபாலனின் முகம் வாடி போனது.


அவரது முக வாட்டத்தினைக் கண் ட நிரஞ் சன் ,

"அங் கே ரெஸ் ட்ராண் ட்டில் உட்கார்ந்துட்டுப் பேசலாம் . வாங் க அங் கிள் ." என் றவன்
அங் கிருந்த உணவு விடுதிக்கு அவரை அழைத்துச் சென் றான் .

உணவு விடுதிக்குள் நுழைந்து அமர்ந்ததும் இருவருக்கும் காபி சொன் ன நிரஞ் சன்


வேணுகோபாலனிடம் , "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங் க அங் கிள் ?" என் று அக்கறையுடன்
கேட்க...

"அது வந்து..." என் று தயங் கியவர் பின் னர்த் தனது தயக்கத்தை விட்டொழித்தவராய்
மகளின் நிபந்தனையைப் பற்றிக் கூறினார்.

அப்போது தான் நிரஞ் சனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தனது காதலுக்கு என் றுமே
பிரதிபலிப்பு காட்டாத சந்திரவதனி அன் று ஏன் தன் னைச் சந்திக்க வர சொன் னாள் என் று...
அதை அறியாது அவன் தான் சொதப்பி வைத்திருக்கிறான் . அவன் மானசீகமாகத்
தலையில் கை வைத்தான் . அவன் தேவையில் லாது அகிலை பற்றிப் பேசி பிரச்சினையைப்
பெரிது படுத்தி விட்டான் . தனது தவறு அவனுக்குமே புரிந்தது. திருமணம் என் றதும்
தன் னை நினைத்த சந்திரவதனியை நினைத்து அவனுள் காதல் பெருகியது. அவள்
மனதில் தான் இருப்பதை நினைத்து அவனுக்கு ஆணாய் கர்வம் வந்தது.

"அங் கிள் , சந்திராவை திருமணம் செய் ய நான் கொடுத்து வைத்திருக்கணும் . அதே போல்
அகிலும் எனக்கு ஒரு பிரச்சினை இல் லை." என் றவனைக் கண் டு வேணுகோபாலனின்
முகம் மலர்ந்தது.

"ஆனால் என் வீட்டில் அகிலை ஏத்துக்க மாட்டாங் க அங் கிள் . என் வீட்டில் மட்டும் இல் லை,
யார் வீட்டிலும் அகிலை ஏத்துக்க மாட்டாங் க. பிராக்ட்டிக்கலா பேசணும் அங் கிள் . சந்திரா
பிராக்ட்டிக்கலா யோசிக்க மாட்டேங் கிறாள் . அவளைக் குழந்தையோடு ஏத்துக்கணும் ன் னு
அடம் பிடிக்கிறாள் . அதுவும் அது அவள் குழந்தை கூட இல் லை. அப்படி இருக்கும் போது
அவள் சொல் லும் கன் டிசனை யார் ஏற்றுக் கொள் வார்கள் ? நீ ங் களாவது கொஞ் சம்
யோசிங் க அங் கிள் ." நிரஞ் சன் நிதர்சனத்தை எடுத்துச் சொன் னான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 21/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
"நீ சொல் றது எனக்குப் புரிகிறது நிரஞ் சன் . ஆனால் சந்திரா பிடிவாதம் பிடிக்கிறாளே."
வேணுகோபாலன் கவலையாகச் சொன் னார்.

"அதுக்குன் னு சந்திரா கல் யாணம் பண் ணிக்காம இப்படியே இருக்க முடியுமா? எனக்கு ஒரு
யோசனை தோணுது அங் கிள் . சொல் லட்டுமா?"

"சொல் லுப்பா..."

"நீ ங் க பேசாம அகிலை தூக்கிட்டு போய் அவங் கப்பா வீட்டு ஆளுங் க கிட்ட ஒப்படைச்சிட்டு
வந்துருங் க. அதுக்குப் பிறகு சந்திரா போய் க் கேட்டாலும் கூட அவங் க அகிலை அவள் கிட்ட
ஒப்படைக்க மாட்டாங் க. சந்திரா கொஞ் ச நாள் வருத்தத்தில் இருப்பாள் . பிறகு நார்மலுக்கு
வந்து விடுவாள் . அதுக்குப் பிறகு நாம கல் யாண ஏற்பாட்டை ஆரம் பிக்கலாம் ." நிரஞ் சன்
சொன் னது தான் வேணுகோபாலனுக்கும் சரியென் று தோன் றியது. இனி மகளிடம் பேசி
புரிய வைக்க முடியாது. பேசாது செயலில் இறங் கிவிட வேண் டியது தான் .

"நீ சொல் றது தான் சரி நிரஞ் சன் . நீ சொன் ன மாதிரி செய் யலாம் ." வேணுகோபாலன்
ஆமோதிக்க...

"இன் னும் என் ன நிரஞ் சன் ? மாப்பிள் ளைன் னு கூப்பிடுங் க மாமா." நிரஞ் சன் விரிந்த
புன் னகையுடன் சொல் ல...

"சரி மாப்பிள் ளை..." வேணுகோபாலன் பதிலுக்குப் புன் னகைத்தார்.

நிரஞ் சன் சொன் ன திட்டத்தைச் செயல் படுத்த நேரம் பார்த்துக் காத்திருந்தார்


வேணுகோபாலன் . சந்திரவதனி வீட்டில் இருக்கும் வரை அவரால் அகிலை அங் கிருந்து
அப்புறப்படுத்த முடியாது. அதனால் அவர் அலுவலகத்தில் முக்கியமான கோப்பில்
கையெழுத்து போட வேண் டும் என் று அவளிடம் சொல் லி அவளை அலுவலகம் கிளம் பி
போகச் செய் தார். மகள் சென் றதும் அகிலை கவனித்துக் கொள் ளும் பெண் மணியிடம்
அகிலை தூக்கி கொண் டு வர சொன் னார். அந்தப் பெண் மணியும் என் ன ஏதென் று
தெரியாது அகிலை தூக்கி கொண் டு வந்தார். இருவரையும் காரிலேறி அமர சொன் ன
வேணுகோபாலன் தானே காரை செலுத்தினார். இடைப்பட்ட நாளில் சூரியநாராயணனின்
வீட்டு முகவரியை அவர் கண் டுபிடித்து வைத்திருந்தார்.

**************************************

"எத்தனை பொண் ணுங் க ஃபோட்டோ தான் காண் பிக்கிறது சூர்யா? யாரையும் பிடிக்கலை
பிடிக்கலைன் னு சொன் னால் ... என் ன அர்த்தம் ?" வாசுகி சலிப்பாக மகனிடம் கேட்டார்.

"பிடிக்கலைன் னா பிடிக்கலைன் னு தான் சொல் ல முடியும் . எனக்குப் பிடிச்ச மாதிரி


பொண் ணைத் தேடி கண் டுபிடிங் க." என் றவன் தொழிற் சாலைக்குக் கிளம் பி கொண் டு
இருந்தான் .

"சூரியா கண் ணு, பொண் ணு நல் லா தானே இருக்கு." பாட்டி காமாட்சி மணமகள்
புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண் டு பார்த்திருந்தார்.

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 22/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
"ஆச்சி, முதல் ல கண் ணாடி போட்டுட்டு ஃபோட்டோவை பாருங் க. அப்போ தான் குறை
தெரியும் ." சூரியநாராயணன் நக்கலாய் சொல் ல...

"ஹி ஹி..." என் று அசடு வழிந்த காமாட்சி கண் ணாடியை போட்டுக் கொண் டு
புகைப்படத்தைப் பார்த்தார். அவரது கண் களுக்குக் குறை ஒன் றும் தெரியவில் லை.

"ஒரு குறையும் தெரியலையே கண் ணு."

"இல் லையே... நல் லா பாருங் க. கண் ணு மாறுகண் மாதிரி இருக்கு." அவன் சொல் லவும் ...
உற்று பார்த்தவர்,

"ஆமா, நீ சொன் னது மாதிரி தான் இருக்கு." என் று பேரனுக்கு ஒத்து ஊத...

"நீ பொண் ணு பார்த்த லட்சணம் போதும் ." என் று கனகசபை புகைப்படத்தைப் பிடுங் கி
கொண் டார்.

"ஆச்சியே சொல் லிட்டாங் க. இந்தப் பொண் ணு வேண் டாம் ." அன் னையிடம் சொல் லியபடி
வாயிலுக்கு வந்தவன் அங் குக் காரிலிருந்து இறங் கி கொண் டிருந்த வேணுகோபாலனை
கண் டு அப்படியே நின் றுவிட்டான் . காரின் மறுபக்கம் இருந்து வேலைக்கார
பெண் மணியுடன் இறங் கிய அகிலை கண் டதும் அவன் முகம் மலர சின் னவனை நோக்கி
விரைந்தான் .

சூரியநாராயணன் அகிலை வாங் கிக் கொண் டதும் வேணுகோபாலன் அந்தப்


பெண் மணியிடம் , "நீ காரில் உட்கார்." என் று கூற... அந்தப் பெண் மணி அமைதியாகக்
காரினுள் அமர்ந்து கொண் டார்.

சூரியநாராயணனின் குடும் பத்தினர் அனைவரும் வாயிலில் நின் றபடி இவர்களைப்


பார்த்திருந்தனர். அருகில் செல் வதற்கு அவர்களுக்கு மிகுந்த தயக்கமாக இருந்தது.

"உங் க வீட்டு வாரிசு. உங் க ரத்தத்தை உங் க கிட்டேயே ஒப்படைச்சாச்சு." என் று அவனிடம்
சொன் னவர் அவன் பதிலை எதிர்பாராது காரிலேறி சென் று விட்டார்.

சூரியநாராயணன் அப்படியே திக்பிரம் மை பிடித்தார் போன் று நின் றிருந்தான் . இதையா


அவன் எதிர்பார்த்தான் ? அவன் நினைத்தது நடவாதது கண் டு அவனுக்கு இயலாமையில்
கோபம் வந்தது. அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது போய் விட்டதே! ஆத்திரத்தில்
அவனது விழிகள் மெல் ல சிவக்கலானது.

"ப்பா..." அகிலின் குரலில் தன் னுணர்வு பெற்றவன் மனம் நெகிழ தாயுமானவனாய்


குழந்தையைத் தன் னோடு அணைத்துக் கொண் டான் .

************************

சந்திரவதனி அடுத்து என் ன செய் வது? என் று தெரியாது திகைத்து விழித்திருந்தாள் .


அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும் பியவளுக்கு வீட்டில் அசாதாரணச்
சூழ் நிலை நிலவியது போலிருந்தது. தாய் , தந்தை இருவரும் இறுகிய முகத்துடன்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 23/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். அதைக் கண் டு என் னவென் று யோசித்துக் கொண் டே
அவள் அகிலை தேடி அறைக்குச் செல் ல...

"அகில் ரூமில் இல் லை." என் ற தந்தையின் குரலில் அப்படியே நின் றவள் கேள் வியாய்
அவரைத் திரும் பி பார்த்தாள் .

"அகில் காணாம போயிட்டான் ." என் றவரை கண் டு பதறி போனவளாய் விரைந்து அவர்
அருகில் வந்தவள் ,

"என் னப்பா சொல் றீங் க? எப்போ? எப்படி? அகில் ..." என் று அவள் கரைந்தபடி தந்தையின்
அருகில் ஓய் ந்து போய் அமர்ந்தாள் . மகளின் தோற்றத்தை கண் டு சாந்தி பயத்துடன்
கணவரை பார்த்தார். வேணுகோபாலன் விழிகளை மூடி திறந்து மனைவியை
ஆறுதல் படுத்தினார்.

"அகிலை பார்க்குக்குக் கூட்டிட்டு போகும் போது..." என் ற தந்தையைக் கோபமாய் ப்


பார்த்தவள் ,

"ஒரு வயசு கூட ஆகாத சின் னக் குழந்தை கால் முளைத்து ஓடி போயிருச்சாப்பா? அகிலோட
கேர் டேக்கர் எங் கே?" அவள் கத்தி கூப்பாடு போட...

அகிலை பார்த்துக் கொள் ளும் பெண் மணி அவள் முன் பயத்துடன் வந்தவர், "மேடம் ,
என் னை மன் னிச்சிருங் க மேடம் ." என் றபடி அவளின் கால் களில் விழுந்தார். அகில்
அவளுக்கு உயிர் என் று அவருக்குத் தெரியுமே! அத்தகைய உயிரை தொலைத்த அவரை
அவள் சும் மா விடுவாளா!

"எப்படி மன் னிக்கிறது? நீ ங் க பண் ணியிருக்கிறது சின் னத் தப்பா?" அவள் உக்கிரமாய் க்
கேட்க... அந்தப் பெண் மணி வேணுகோபாலனை பாவமாய் ப் பார்த்தது. 'நான் சொன் ன
கதையை அச்சு பிசகாது அப்படியே சொல் ' என் பது போல் அவர் அந்தப் பெண் மணியைப்
பார்த்தார்.

"மேடம் , எப்போதும் போல் பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அகிலை அழைச்சிட்டு


போனேன் . அங் கே அகிலை தள் ளுவண் டியில் வைத்து விளையாட்டு காட்டிட்டு இருக்கும்
போது திடீர்ன் னு அகிலுக்கு விக்கல் எடுத்திருச்சு. அவனுக்குக் கொடுக்கத் தண் ணியைத்
தேடினால் ... பேக் காரிலிருந்தது. அவனைப் பக்கத்தில் இருந்த ஒரு பெண் கிட்ட
ஒப்படைச்சிட்டுப் போய் த் தண் ணி எடுத்துட்டு வர்றதுக்குள் ள..." மேலே சொல் ல
முடியாதவராய் அந்தப் பெண் மணி ஓவென அழ தொடங் கினார். அவரது அழுகை அகிலை
நினைத்தல் ல. உண் மை தெரிந்தால் சந்திரவதனி தன் னை என் ன செய் வாளோ என் று
நினைத்து தான் ...

அந்தப் பெண் மணி சொன் னதைக் கேட்டதிலிருந்து சந்திரவதனி இப்படித்தான்


திக்பிரம் மை பிடித்தார் போன் று அமர்ந்திருந்தாள் . ஆனாலும் சற்று நேரத்தில் அவள்
சுதாரித்துக் கொண் டாள் . தொழிலில் இது போன் று எத்தனை இக்கட்டான நிலைகளை
அவள் கையாண் டு இருக்கிறாள் . அப்போது எல் லாம் அவளுள் மனதைரியம் கூடவே
இருந்தது. ஆனால் இப்போது அவளது மனதைரியம் எங் கே போனது என் று அவளுக்கே
தெரியவில் லை. குழந்தையைக் காணவில் லை என் றதும் அவளது உள் ளமும் , உடலும்
ஆடித்தான் போனது.
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 24/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
You, Vinu Sethu, Roshani Fernando and 36 others

Feb 2, 2024   #9

"நான் பார்க் பக்கம் போய் த் தேடி பார்க்கிறேன் ." என் றபடி எழுந்த சந்திரவதனிக்கு காரை
ஓட்டி கொண் டு செல் லும் அளவிற்கு உடலில் வலு இல் லாது இருந்தது. அப்போது அங் கு
வந்த சஞ் சயை கண் டு,
ஶ்ரீகலா
Administrator

"சஞ் சய் , எனக்காகக் காரை ஓட்டிக்கிட்டு வர்றியா?" என் று அவள் கேட்க... சஞ் சய் ஒன் றும்
புரியாது அக்காவை பார்த்தான் . 'அச்சோ! இவனுக்கு விசயம் தெரியாதே? ஏதாவது பேசி
சொதப்பிவிடக் கூடாதே?' வேணுகோபாலன் மனதில் அச்சத்துடன் அமர்ந்து இருந்தார்.

"அகிலை காணோம் சஞ் சய் . ப்ளீஸ் ..." என் று கெஞ் சிய அக்காவை கண் டு அவன் ,

"எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கு." என் றவன் அவளது பதிலை எதிர்பாராது
சென் று விட்டான் . அதைக் கண் டு வேணுகோபாலன் நிம் மதி பெருமூச்சு விட்டார்.

எப்படித் தம் பியால் இப்படிச் செல் ல முடிந்தது? அவன் மனம் என் ன கல் லாய் போயிற்றா?
சந்திரவதனி தம் பியை கண் டு கல் லாய் சமைந்தாள் .

"அப்பா, நீ ங் களாவது வாங் களேன் ." அவள் தந்தையிடம் இறைஞ் ச...

"எனக்கு இம் பார்ட்டென் ட் மீட்டிங் இருக்கு சந்திரா. நான் போகலைன் னா நமக்குத் தான்
கோடிக்கணக்கில் நஷ் டம் ." என் றவர் நைசாக நழுவி விட்டார்.

சந்திரவதனிக்கு இருந்த மனவுளைச்சலில் அவள் இதை எல் லாம் கவனத்தில்


கொள் ளவில் லை. கவனித்துப் பார்த்திருந்தால் தந்தையின் தவறு புரிந்திருக்கும் . அடுத்து
அவள் நொடி நேரம் கூடத் தாமதியாது உடனே தனது நண் பன் பிரதாப்புக்கு தொடர்பு
கொண் டாள் . மறுபுறம் அவன் அழைப்பை எடுத்ததும் ,

"பிரதாப், நீ எங் கே இருக்க?" என் று கேட்க...

"பொண் ணு பார்க்க பொண் ணு வீட்டில் இருக்கேன் ." அவன் உல் லாச குரலில் கூற...

"ஓ..." என் றவள் அழைப்பை துண் டிக்கப் போக...

"ஹேய் பேப், என் னாச்சு? குரல் எல் லாம் ஒரு மாதிரியா இருக்கு." அவன் படபடப்பாய்
கேட்க...

"ஒண் ணுமில் லை..." என் றவளை கண் டு, "நீ எங் கே இருக்க?" என் று மட்டும் பிரதாப் கேட்க...

"வீட்டில் ..."

"உடனே கிளம் பி வருகிறேன் ." அவள் மேலே பேசும் முன் அவன் அழைப்பை துண் டித்து
இருந்தான் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 25/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

பிரதாப் சொன் னது போல் வெகு விரைவாகச் சந்திரவதனி வீடு வந்து சேர்ந்தான் .
விசயத்தை அறிந்தவன் முதலில் சொன் னது,

"இவ் வளவு நேரம் போலீஸ் ஸ் டேசன் போகாம என் ன பண் ணிட்டு இருக்கப் பேப்?" என் று
தோழியைக் கடிந்தவன் அவளை அழைத்துக் கொண் டு காவல் நிலையத்துக்குச் செல் ல
விரும் பினான் .

"பிரதாப், போலீஸ் ஸ் டேசன் போனால் வீணே நம் பெயர் கெடும் . நான் நம் ம ஆள் களைத்
தேட சொல் றேன் . நீ ங் களும் போய் த் தேடுங் க." வேணுகோபாலன் சொல் லவும் ...
சின் னவர்கள் இருவரும் அதை ஆமோதித்து அகிலை தேட விரைந்தனர். வேணுகோபாலன்
சற்று திகைப்புடன் அமர்ந்திருந்தார். இந்த விசயத்தை மகள் அவ் வளவு எளிதில் விட
மாட்டாள் என் றே அவருக்குத் தோன் றியது.

"பிரதாப், இந்தப் பார்க் தான் ." சந்திரவதனி சொன் னதும் பிரதாப் பூங் கா முன் காரை
நிறுத்தினான் . பதட்டத்துடன் இறங் கிய சந்திரவதனி அலைப்பேசியில் இருந்த அகிலின்
புகைப்படத்தைக் காட்டி அங் கு இருந்தவர்களிடம் விசாரித்தாள் . எல் லோரும் ஒன் று போல்
'தெரியவில் லை' என் று கையை விரித்தனர். சந்திரவதனி சோர்ந்து போனாள் .

"பேப், நம் பிக்கையை மட்டும் கை விடாதே. பார்த்துக்கலாம் ... வா." பிரதாப் தான் அவளைத்
தேற்றி அழைத்துச் சென் றான் .

மீண் டும் அகிலை தேடி பயணம் . வழியில் தென் பட்ட கைகுழந்தைகளிடம் எல் லாம்
சந்திரவதனி அகிலை தேடி சோர்ந்து போனாள் . அவனை மட்டும் காணவே காணோம் .
சந்திரவதனிக்கு மெல் ல பயம் பிடித்துக் கொண் டது.

"சினிமாவில் காட்டுவது போல் அகிலை எதுவும் செய் து பிச்சை எடுக்கப் பயன் படுத்தி
இருப்பார்களோ பிரதாப்?" அவள் கேட்கும் போதே அவளது விழிகளில் இருந்து விழிநீ ர்
கரகரவெனக் கொட்டியது. இதுவரை தன் தோழி அழுது பார்த்திராத பிரதாப்பிற்கு அவளது
கண் ணீர் கண் டு திகைப்பாய் இருந்தது.

"ப்ச், அப்படி எல் லாம் இருக்காது பேப். அகில் சேஃப்பாகத் தான் இருப்பான் ." பிரதாப்
அவளை ஆறுதல் படுத்தினான் .

"எங் கே?" சோர்ந்து போய் க் கேட்டவள் திடுமென ஞாபகம் வந்தவளாய் தனது


கைப்பையைத் துழாவி ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தாள் . சூரியநாராயணனின் விசிட்டிங்
கார்டை அவனது வழக்கறிஞர் ஏற்கெனவே அவளிடம் கொடுத்திருந்தார். ஏதாவது சமரசம்
பேசுவதாக இருந்தால் நேரே அவனை அழைத்துப் பேச சொல் லி... அப்போது அவள் அதை
அலட்சியமாகக் கைப்பையில் தூக்கி போட்டு கண் டு கொள் ளாது விட்டு விட்டாள் . இன் று
தான் அவள் அதைத் தேடி எடுத்துக் கரத்தில் வைத்துக் கொண் டு பார்த்திருந்தாள் .

பேசாது சூரியநாராயணனை அழைத்துக் கேட்டு விடுவோமா? ஒருவேளை அவன் அகிலை


அழைத்துச் சென் றிருந்தால் ...??? சென் றிருந்தால் சரி, இல் லை என் றால் ...
சூரியநாராயணனின் ருத்ர தாண் டவத்தை நினைத்து அவள் அமைதியாகி விட்டாள் . இந்த
ஒரு சாக்கு போதும் ... அகிலை அவன் அழைத்துச் செல் வதற்கு... தனது எண் ணத்தைச்
செயல் படுத்த இயலாது அவள் விசிட்டிங் கார்டை மீண் டும் கைப்பையில் தூக்கி போட்டாள் .

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 26/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
இரவு வரை தேடியும் அகில் கிடைக்கவில் லை. இருவரும் சோர்ந்து போய் மீண் டும் வீட்டிற்கு
வந்தனர்.

"இதற்கு மேல் தாமதிப்பது எனக்குச் சரியா படலை பேப். பேசாம போலீசுக்கு தகவல்
கொடுப்பது தான் நல் லது." பிரதாப்பின் கூற்றை அவளும் ஏற்றுக் கொண் டாள் .

"அப்பா கிட்ட கேட்டு முடிவு பண் ணுறேன் ." என் றபடி வீட்டினுள் நுழைந்தவளுக்கு வீட்டின்
அமைதி வித்தியாசமாய் த் தோன் றியது. அங் கிருந்த வேலையாளை அழைத்து,

"எல் லோரும் எங் கே?" என் று கேட்க...

"ஏதோ பார்ட்டிக்கு போயிருக்காங் க மேடம் ." என் று அவன் பதிலளித்து விட்டு சென் று
விட்டான் .

சந்திரவதனிக்கு வீட்டினர் செய் கை கண் டு திகைப்பாக இருந்தது. காணாமல் போனது


அவர்களது பேரக்குழந்தையும் தானே. கொஞ் சமாவது தவிப்பு இருக்க வேண் டாமா?

"என் னது?" பிரதாப் தனது திகைப்பினை பகிரங் கமாக வெளிக்காட்டி விட்டான் .

சந்திரவதனி சற்று நிதானத்திற்கு வந்தவள் யோசனையில் ஆழ் ந்தாள் . காலையில் தந்தை


தன் னைக் கையெழுத்து போட வேண் டும் என் று கூறி தன் னை அலுவலகத்திற்கு
அனுப்பியது, அதற்குப் பிறகு அவர் நடந்து கொண் ட முறை, வேலைக்கார பெண் மணி
தன் னிடம் கதை சொல் லியபடி தந்தையைப் பார்த்தது என் று அவளுக்கு எல் லாமே
முரணாகத் தோன் றியது. அவள் சட்டென் று தனது அலைப்பேசியில் இருந்த வீட்டின்
சிசிடிவி ஃபுட்டேஜ்களை எடுத்து பார்த்தாள் . அதில் தனது தந்தை வேலைக்கார
பெண் மணியை அழைத்துக் கொண் டு அகிலை தூக்கி கொண் டு காரில் செல் வது
தெரிந்தது. அதைக் கண் டதும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இதை அவள் முதலிலேயே
செய் திருக்க வேண் டும் . வீட்டினர் மீது நம் பிக்கை வைத்தது எவ் வளவு பெரிய தவறு!
அடுத்த நொடி அவள் தந்தைக்கு அழைத்து விட்டாள் . பிரதாப் ஒன் றும் புரியாது தோழியைப்
பார்த்திருந்தான் .

"அப்பா, உண் மையைச் சொல் லுங் க. அகில் எங் கே?" அவள் எடுத்த எடுப்பிலேயே
அதிகாரத்துடன் கேட்டாள் .

"என் கிட்ட கேட்டால் ... எனக்கு என் ன தெரியும் சந்திரா?" வேணுகோபாலன் பதிலுக்குக்
கேள் வி கேட்க...

"சிசிடிவி ஃபுட்டேஜ் போதும் ப்பா... நீ ங் க தான் குற்றவாளின் னு நிரூபிக்கிறதுக்கு..."


சந்திரவதனி சொன் னதும் பிரதாப் திகைப்புடன் தோழியைப் பார்த்தான் . மறுபுறம்
வேணுகோபாலனுக்குப் பயத்தில் வியர்த்து வழிந்தது.

"சிசிடிவி ஃபுட்டேஜ் வைத்து நான் உங் க மேல் போலீஸ் ஸ் டேசனில் ஒரு கம் ப்ளையிண் ட்
கொடுத்தால் போதும் ." சந்திரவதனி மிரட்டலாய் சொல் ல...

"பெத்த தகப்பனையே மிரட்டுறியா?" வேணுகோபாலன் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு


பதிலுக்கு எகிற...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 27/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"அகில் எங் கே? அவனை என் ன பண் ணினீங் க? இதுக்கு நீ ங் க பதில் சொல் லலைன் னா நான்
நிச்சயம் கம் ப்ளையிண் ட் கொடுப்பேன் . பெத்த அப்பான் னு எல் லாம் பார்க்க மாட்டேன் ."
உறுதியான குரலில் சொன் ன மகளைக் கண் டு வேணுகோபாலன் தனக்குள் யோசித்தார்.
தங் களது பிரச்சினை வெளியுலகத்திற்குத் தெரிய வேண் டாம் என் றெண் ணி அவர்
நடந்ததை மகளிடம் கூறினார்.

"எனக்குச் சூரியநாராயணனின் வீட்டு அட்ரஸ் வேண் டும் . அனுப்பி விடுங் க." என் றவள்
அழைப்பை துண் டித்து இருந்தாள் .

"என் னாச்சு பேப்?" பிரதாப் கேட்டதும் அவள் கண் கள் கலங் க நடந்ததை அவனிடம்
சொல் ல... அவனுக்குமே ச்சீ என் றாகி போனது.

"பிரதாப் நீ வீட்டுக்கு போ... நான் அவங் க வீட்டுக்கு போய் அகிலை தூக்கிட்டு வர்றேன் ."
என் றவள் எழ...

"இந்த நேரத்தில் நீ தனியா போக வேண் டாம் . நானும் உன் கூட வர்றேன் ." பிரதாப்
அவளுடன் எழுந்தான் . அப்போது சந்திரவதனியின் அலைப்பேசியில் குறுஞ் செய் தி
வந்ததுக்கான ஒலி கேட்டது. வேணுகோபாலன் தான் சூரியநாராயணனின் வீட்டு
முகவரியை மகளுக்கு அனுப்பி இருந்தார்.

"இந்த அட்ரசுக்கு போகணும் பிரதாப்." அலைப்பேசியை நண் பனிடம் கொடுத்த


சந்திரவதனி காரிலேறி அமர்ந்து இருக்கையில் சாய் ந்தவள் விழிகளை மூடி கொண் டாள் .
இப்போது தான் அவளுக்குச் சற்று நிம் மதியாக இருந்தது. அவளது மனம் அகில் , அகில்
என் று விடாது மந்திரம் போல் மகனது நாமத்தை ஜெபித்துக் கொண் டிருந்தது.

******************************

சூரியநாராயணன் அகிலை தனது தோளில் போட்டு தட்டி கொடுத்தபடி அங் குமிங் கும்
நடந்து கொண் டிருந்தான் . சின் னவன் சிறு தேம் பலோடு பெரியப்பன் தோள்
சாய் ந்திருந்தான் . காலையில் இருந்து அகில் இப்படித்தான் இருக்கின் றான் . இங் குச்
சூரியநாராயணனை தவிர வேறு யாருமே அவனுக்குத் தெரிந்த முகமாக இல் லை. அதனால்
அகில் சூரியநாராயணனை விடாது பற்றிக் கொண் டான் . புது இடம் , புது மனிதர்கள் அந்தப்
பயம் சின் னவனுக்கு இருந்தது. அதனால் அவன் சரியாக உணவு உட்கொள் ளவில் லை.
உறங் கவில் லை. பசியில் சிறிது உண் டவன் சோர்வில் கொஞ் ச நேரம் உறங் குவதும் , பின் பு
விழிப்பதுமாக இருந்தான் . அதுவே சின் னவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திச் சிணுங் க
வைத்தது. இன் று முழுவதும் சூரியநாராயணன் தொழிற் சாலைக்குச் செல் லாது அகிலுடன்
தான் இருந்தான் .

"சூர்யா, பேரனை என் கிட்ட கொடுப்பா." வாசுகி பேரனை வாங் க தனது கரங் களை நீ ட்ட...

"இல் லைம் மா... என் கிட்டேயே இருக்கட்டும் . நீ ங் க தூக்கினால் திரும் ப அழுவான் . திரும் பச்
சமாதானப்படுத்தணும் ." சூரியநாராயணன் சொன் னதும் வாசுகி எட்டி நின் று பேரனை
ஆசையுடன் பார்த்திருந்தார். அகில் தனது சின் ன மகன் ஆதித்யாவை உரித்து வைத்து
பிறந்து இருந்தான் . தனது மகனை அகிலில் கண் டு இன் புற்றது அந்தத் தாயுள் ளம் . பணம்
மனிதர்களைப் பிரிந்தாலும் ... பாசம் இல் லாது போகுமோ!

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 28/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
அப்போது வாசலில் கார் ஒன் று வந்து நின் றது. சந்திரவதனி கார் என் றால்
சூரியநாராயணனுக்கு அடையாளம் தெரிந்து இருக்கும் . பிரதாப் காரை அவனுக்கு
அடையாளம் தெரியவில் லை. யாரென் று உற்றுப் பார்த்தான் . காரிலிருந்து இறங் கிய
சந்திரவதனியை கண் டவன் அப்படியே திகைத்து போய் நின் றிருந்தான் . அவளின்
பின் னேயே இறங் கிய பிரதாப்பை கூட அவன் கவனிக்கவில் லை.

சூரியநாராயணனின் கரங் களில் இருந்த அகிலை கண் டதும் சந்திரவதனி மகிழ் ச்சியுடன்
அவர்களை நோக்கி விரைந்து வந்தாள் . காலையில் இருந்து அவளிடம் இருந்த பதட்டம் ,
கவலை, சோர்வு எல் லாம் இந்த நொடி காணாமல் போனது. தேடிய சொர்க்கம் கை வந்து
சேர்ந்த நிம் மதி அவளுள் ... வேகமாக அவர்களை நெருங் கியவள் சூரியநாராயணனின்
நெஞ் சில் முகம் புதைத்திருந்த அகில் அருகே குனிந்து, "அகி குட்டி..." என் றழைக்க...

பெரியம் மாவின் குரல் கேட்டதும் தேம் பி கொண் டிருந்த அகில் வேகமாய் அவளைத்
திரும் பி பார்த்தான் . அவளைக் கண் டதும் சின் னவனின் இதழ் களில் புன் னகை
தோன் றியது. அவன் மனதில் நிம் மதி தோன் றி இருக்க வேண் டும் . 'ம் மா' என் றழைத்தவன்
அவளை நோக்கி தனது கரத்தினை மட்டும் நீ ட்டினான் . சின் னவனின் செய் கையில்
அவனது கரத்தினைப் பற்றியவள் அப்படியே உடைந்து போனாள் .

இருவரது செய் கையைச் சூரியநாராயணன் சிறு புன் னகையுடன் பார்த்திருந்தான் .


சந்திரவதனியின் வருகையினால் அவனது இயலாமை, கோபம் அனைத்தும் சடுதியில்
காணாது போனது. அவனது உதடுகளில் கர்வ புன் னகை வந்தமர்ந்தது. அவன் திமிராய்
தனது முறுக்கிய மீசையை மேலும் முறுக்கி கொண் டான் . பின் னே அவன் நினைத்தது
நடந்து விட்டதே!

"அகி குட்டி..." சந்திரவதனி அதற்கு மேல் தாளமாட்டாது மகனின் முகத்துடன் முகம் வைத்து
அழுதாள் . இத்தனை நேரம் அவனைக் காணாது தவித்த தனது தவிப்பை அவள்
அழுகையில் கரைத்தாள் . அவளது கண் ணீரை கண் டு அகிலின் கண் களிலும் கண் ணீர்
தேங் கியது. அகில் 'ம் மா' என் றழைத்தபடி அவளது முடியை பிடித்திழுத்து அடித்துக்
கடித்துத் தனது தவிப்பை அவளிடம் செய் கையில் கூறியவன் ... ஒற்றைக் கையால் அவளது
கழுத்தினை வளைத்துக் கொண் டான் .

அந்தக் கணம் சந்திரவதனி ஓய் ந்து போனவளாய் சூரியநாராயணனின் நெஞ் சில் தலை
சாய் த்து அகிலை அணைத்துப் பிடித்துக் கொண் டாள் . காலையில் இருந்து ஓடி
கொண் டிருந்தவளுக்குச் சற்று இளைப்பாறல் தேவைப்பட்டது. சந்திரவதனியின்
செய் கையில் , அவளது அருகாமையில் சூரியநாராயணன் தான் பனிக்கட்டியாய் உறைந்து
போனான் . ஒரு பெண் ணின் அருகாமை அவனுக்கும் புதிதே!

எதையும் பணத்தைக் கொண் டே விலை பேசும் பணக்காரர்கள் , பாசத்தையும் அப்படியே


விலை பேசுவார்கள் என் று நினைத்திருந்த சூரியநாராயணனுக்குச் சந்திரவதனி புதிய
பரிமாணத்தைக் காட்டினாள் . அகில் மீதான அவளது பாசம் கண் டு அவனின்
விழிகளினோரம் நீ ர் கசிந்தது. கல் லுக்குள் ளும் ஈரம் கசிந்ததுவோ!

தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA

You, Vinu Sethu, Roshani Fernando and 57 others

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 29/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

Feb 6, 2024   #10

அத்தியாயம் : 4

ஶ்ரீகலா பிரதாப் தோழியின் செயலில் அப்படியே திகைத்து நின் றுவிட்டான் . திகைப்பு என் பது
Administrator
எல் லாம் சிறிய வார்த்தை... பேரதிர்ச்சி என் று வேண் டுமானால் சொல் லலாம் . அவர்களை
மாதிரியான ஆள் கள் எல் லாம் இது மாதிரியான இடத்திற்குச் செல் வதை எல் லாம்
நினைத்து கூடப் பார்க்க மாட்டார்கள் . அதுவும் இது மாதிரியான ஆள் களிடம் எல் லாம்
சரிக்குச் சமமாகப் பழகக் கூட மாட்டார்கள் . பழக என் ன, சிறு பார்வை கூட அவர்கள் பக்கம்
மெனக்கெட்டு திரும் பி பார்க்க மாட்டார்கள் . 'நீ எல் லாம் எங் களுக்குச் சமமா?' என் று
ஒருவித அலட்சிய மனப்பான் மை தான் அவர்களிடம் இருக்கும் . சந்திரவதனியும்
அப்படிப்பட்டவள் தான் . அதில் மாற்று கருத்து இல் லை. அப்படிப்பட்டவள் இப்போது எப்படி
இப்படி? அவன் நம் ப முடியாது தோழியைப் பார்த்துக் கொண் டு இருந்தான் . அதுவும் அவள்
சூரியநாராயணனின் நெஞ் சில் சாய் ந்திருந்தது கண் டு அவனுக்குத் திகைப்பாக இருந்தது.
தோழனான அவனிடம் கூட அவள் இத்தகைய உரிமையை எடுத்தது இல் லையே! அந்தக்
கணம் அவன் மனதில் சற்றுப் பொறாமை எழுந்தது என் னவோ உண் மையே!

பிரதாப்பின் நிலையே இப்படி என் றால் ... சூரியநாராயணனின் குடும் பத்தைப் பற்றிச்
சொல் லவும் வேண் டுமோ? பசுபதி, சாவித்திரி, சத்யவதி மூவரும் சற்று திகைப்புடன்
பார்த்திருக்க... தாத்தா, பாட்டி இருவரும் சந்திரவதனியின் மனநிலையை உணர்ந்தே
இருந்தனர். அதனால் அவளின் செய் கை அவர்களுக்குத் தவறாகத் தோன் றவில் லை. பாவம்
இந்தப் பெண் , குழந்தையைக் காணாது மிகவும் தவித்துப் போய் விட்டாள் என் றே அவர்கள்
நினைத்தனர். அதைவிடப் பெரியவர்கள் இருவருக்கும் பேரன் மீது அதீத நம் பிக்கை
இருந்தது.

வாசுகி தான் சற்று திகிலோடு இந்தக் காட்சியைப் பார்த்திருந்தார். ஏற்கெனவே ஒரு


மகனை பறிகொடுத்து இருந்தவர் மனதில் மீண் டும் இன் னொரு மகனையும் பறிகொடுத்து
விடுவோமோ என் கிற பயமே இருந்தது. நிச்சயம் இது பாசத்திற் கான போராட்டம் மட்டுமே!
பணத்திற் காக இல் லை. ஏனெனில் இன் றும் அவரால் தனியே உழைத்துக் குடும் பத்தைக்
காப்பாற்ற முடியும் . அதற் கான உடல் வலு இப்போதும் அவருக்கு இருக்கிறது. ஆனால்
மகனை இழந்தால் ??? அதைத் தாங் கி கொள் ளும் மன வலு தான் இப்போது அவரிடத்தில்
இல் லை. அவருள் கலக்கம் சூழ் ந்தது.

"க்கும் ..." சூரியநாராயணனின் செருமலில் திடுக்கிட்டு நிமிர்ந்த சந்திரவதனி அப்போது


தான் தான் இருந்த நிலையைக் கண் டாள் . அவள் சட்டென் று அவனை விட்டு விலகி
நின் றாள் .

"ம் மா..." அவளது விலகல் அகிலுக்குப் பிடிக்கவில் லையோ என் னவோ! சொகுசாய்
பெரியப்பனின் தோள் சாய் ந்து கொண் டு பெரியம் மாவையும் தன் னருகில் அழைத்தான் .

"அகி குட்டி..." சந்திரவதனி தவிப்புடன் அகிலின் கரத்தினைப் பற்றினாள் .

என் னமோ எளிதாகக் குழந்தையைத் தூக்கி கொண் டு வந்துவிடலாம் என் றெண் ணி


வந்தவளுக்குத் தனது தகப்பனின் செயலில் அதைச் செய் வதற்கு மிகுந்த தயக்கமாக
இருந்தது. சும் மாவே சூரியநாராயணன் அகில் விசயத்தில் அவளைக் கிழித்துத் தொங் க
விடுவான் . இப்போது சொல் லவும் வேண் டுமா! அவளது பார்வை சூரியநாராயணன் மீது
தயக்கமாகப் படிந்தது. அவனுக்கு அந்தத் தயக்கம் இல் லையோ என் னவோ! அவளைக்
கண் டு அவன் ,

"என் ன யோசனை? அகிலை பிடி..." என் று அதட்டியவன் அகிலை தூக்கி அவளிடத்தில்

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 30/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
கொடுக்க... அடுத்த நொடி தாமதிக்காது சந்திரவதனி சின் னவனை வாங் கிக் கொண் டவள்
அவனை முத்தத்தில் குளிப்பாட்டி முத்தெடுத்தாள் .

சூரியநாராயணன் வீட்டினுள் சென் றவன் சில நிமிடங் களில் திரும் பி வெளியில் வந்தவன்
நேரே சந்திரவதனியிடம் சென் று, "இந்தா..." என் று 'வெட் டிஷ் யூ'வை நீ ட்டினான் . இன் று
அகிலுக்காக அவன் இதை வாங் கி வைத்திருந்தான் .

"அகிலுக்கா?" என் று கேட்டவள் அகிலின் முகத்தைத் துடைப்பதற் காக அதை எடுக்கப்


போக...

"இல் லை உனக்கு..." என் றவனைக் கண் டு அவள் யோசனையுடன் பார்க்க...

"நீ என் நெஞ் சில் சாய் ந்து இருந்தல் ல. என் மேலுள் ள அழுக்கு உன் கன் னத்தில் ஒட்டி
இருக்கும் இல் லையா? அதைத் துடைப்பதற்குத் தான் ." அன் றொரு நாள் அவள் செய் ததைத்
தான் அவன் குறிப்பிட்டுச் சொன் னான் . அவன் சொன் னது கேட்டு அவளது முகம் தான்
கருத்துப் போனது. மற்றவர்கள் யாருக்கும் இவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில் லை.
அவர்கள் அனைவரும் மௌனப்படமாய் இருவரையும் பார்த்திருந்தனர்.

சந்திரவதனி செய் வதறியாது நின் றிருந்தாள் . முன் பு என் றால் அவள் சூரியநாராயணனின்
இந்தப் பேச்சுக்கு போடா என் றிருப்பாள் . ஆனால் இன் று அதைச் சொல் ல இயலாது
மௌனம் காத்தாள் . தந்தை செயலால் அகிலை இழந்து விட்டவளுக்கு இப்போது தனது
செயலால் அகிலை முற்றிலும் இழந்துவிடக் கூடாதே என் கிற தவிப்பில் அவள் குழந்தையை
இறுக பற்றியபடி நின் றிருந்தாள் .

"ம் மா, ங் கா..." அகிலின் குரலில் தான் இருவரும் இறுக்கம் தளர்ந்து மீண் டனர்.

"அகி குட்டிக்கு பசிக்குதா?" சந்திரவதனி சின் னவனிடம் கேட்டவள் சூரியநாராயணனை


தவிப்புடன் பார்த்தாள் . இந்த நேரத்தில் அவளும் என் ன செய் வாள் ? மகனின் பசியைப்
போக்க வேண் டும் என் பது மட்டுமே அவளின் மனதில் இருந்தது.

"உள் ளே வா..." என் றவன் அவளை வீட்டினுள் அழைத்தான் . அவளும் மறுபேச்சின் றி


அவனுடன் நடந்தாள் .

வீட்டினர் அனைவரும் ஏற்கெனவே உள் ளே சென் று விட்டனர். அகில் பசிக்கிறது என் றதும்
வாசுகி பால் கலக்க உள் ளே செல் ல... அவரைத் தொடர்ந்து அனைவரும் உள் ளே
சென் றிருந்தனர். அங் குப் பிரதாப்பை வரவேற் க தான் யாரும் இல் லாது போயினர். அவன்
அதை எதிர்பார்க்கவும் இல் லை. அதனால் அவன் தானாக வீட்டினுள் நுழைந்தான் .
சூரியநாராயணன் சந்திரவதனியை கண் டு நாற் காலியை காட்டி, "உட்கார்..." என் க...

"சேர் வேண் டாம் . அகிலுக்குப் பால் கொடுக்கச் சம் மணம் போட்டு உட்கார்ந்தால் தான்
வசதி. நான் கீழேயே உட்கார்ந்துக்கிறேன் ." என் றவள் எந்தவித பிகுவும் பண் ணாது கீழே
அமர்ந்தாள் . சூரியநாராயணன் அமைதியாய் அவளது செயலை பார்த்திருந்தவன்
அப்போது தான் பிரதாப்பை கண் டான் . எதிரியே ஆனாலும் வீட்டிற்கு வந்தவரை
வாவென் று அழைப்பது தானே தமிழர் பண் பு.

"வாங் க, உட்காருங் க..." சூரியநாராயணன் அங் கிருந்த நாற் காலியை எடுத்து பிரதாப்
அருகில் போட... பிரதாப்பும் தயங் காது நாற் காலியில் அமர்ந்தான் . சந்திரவதனியே இந்த

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 31/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
வீட்டின் தரையில் அமர்ந்து இருக்கும் போது... அவன் நாற் காலியில் அமர மாட்டானா!

"என் னோட பிரெண் ட் பிரதாப்." சந்திரவதனி அகிலுக்கு விளையாட்டு காட்டி கொண் டே


சொல் ல... சூரியநாராயணன் ஒன் றும் பேசாது அமைதியாக இருந்தான் .

அதற்குள் வாசுகி அகிலுக்காகப் பால் புட்டியை கொண் டு வந்தவர் அதை மகனிடம்


கொடுத்தார். அதை வாங் கிய சூரியநாராயணன் சந்திரவதனியிடம் கொடுத்தான் .
அகிலுக்காகப் புதிதாய் பாட்டில் வாங் கி இருப்பார்கள் போலும் . அதைவிடப் பாட்டில் கழுவி
சுத்தமாக இருந்தது. அதைக் கண் டு திருப்தியுற்றவளாய் அவள் பாலை மகனுக்குப்
புகட்டினாள் . அகிலும் பசியில் சமத்தாய் பாலை பருகினான் . சந்திரவதனி அவனது
தலையை வருடி விட்டபடி மகனது முகம் பார்த்திருந்தாள் . அவளது விழிகள் இரண் டும்
கலங் கி சிவந்திருந்தது. சில நிமிடங் களில் பசி அடங் கியதும் அகில் தனது சேட்டையை
ஆரம் பித்து விட்டான் . 'ப்பூ' என் று கூறியபடி அவன் பாலை துப்ப...

"ஒழுங் கா பாலை குடிக்கணும் . இல் லைன் னா அடி தான் விழும் ." சந்திரவதனியின்
வார்த்தையில் இருந்த கடினம் அவளது முகத்தில் இல் லை. அவள் புன் னகையுடன் மகனை
அதட்டியபடி கொஞ் சி கொண் டிருந்தாள் . மகனுக்கும் அது புரிந்ததோ! அவனும் பதிலுக்குக்
கிளுக்கி சிரித்தான் .

"ப்பா, ட்ரூ..." என் று அகில் சொல் ல... அகில் தன் னைப் பற்றித் தான் ஏதோ கூறுகின் றான்
என் று புரிந்த சூரியநாராயணன் அவன் கூறியது புரியாது விழித்தான் .

"அப்பா அகி குட்டியை வெளியில் கூட்டிட்டு போனாங் களா?" அவள் கேட்டதும் அகில்
காலை உதைத்து உற் சாகமாய் ஆமென் றான் . அப்போது தான் சூரியநாராயணனுக்கு
அகில் சொன் னது புரிந்தது.

"அப்புறம் குட்டி பையா வேறு என் ன பண் ணுனீங் க?" சந்திரவதனி மகனை செல் லம்
கொஞ் சி கொண் டே கேட்க...

"ப்பா, ங் கா..." தகப்பன் பால் புகட்டியதை குட்டி பையன் அவளிடம் சொன் னான் .

"சமத்து குட்டி... இப்போ ங் கா ஒழுங் கா குடிங் க..." என் றவள் மகனுக்குப் பாலை
புகட்டுவதில் கவனமாக இருக்க... அகில் அவளிடம் மழலை பாசையில் பேசியபடி பாலை
குடித்துக் கொண் டு இருந்தான் . தாயையும் , சேயையும் பார்ப்பதற்கு அத்தனை கவிதையாக
இருந்தது. சூரியநாராயணன் கூடச் சற்று மெய் மறந்து இந்தக் காட்சியைப்
பார்த்திருந்தான் . வாசுகிக்கு இந்தக் காட்சி ரசிக்கவில் லை. அவர் அமைதியாக நடப்பதை
வேடிக்கை பார்த்திருந்தார்.

அகில் பால் குடித்து முடித்ததும் சந்திரவதனி அவனைத் தனது தோளில் போட்டு தட்ட
தொடங் க... மெல் லியதாக ஏப்பம் விட்ட அகில் வயிறு நிறைந்ததும் தூக்கத்திற் காக
அன் னையின் தோளில் முகத்தைப் புரட்ட ஆரம் பித்தான் . "தூங் கு கண் ணா..." என் றவள்
அவனைச் சமாதானப்படுத்தித் தூங் க வைக்க... சில நிமிடங் களில் அகிலும் தூங் கி
விட்டான் . அடுத்து என் ன செய் வது? என் று அவளுக்குத் தெரியவில் லை. அகிலை கேட்டால்
தருவார்களா? என் று அவள் கலக்கத்துடன் அமர்ந்து இருந்தாள் .

"எவ் வளவு நேரம் இப்படியே அமர்ந்திருக்க முடியும் ?" என் று கேட்ட சூரியநாராயணன்
அவள் அருகே குனிந்து சின் னவனைத் தூக்கி தனது தோளில் போட்டு தட்டி கொடுத்தான் .
சந்திரவதனி அமைதியாக எழுந்து நின் றாள் . இப்போது அவள் அங் கிருந்து போயாக

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 32/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel
வேண் டும் . ஆனால் அகில் இல் லாது போக அவளுக்கு விருப்பம் இல் லை.

"இனி இது மாதிரி நடக்காது." என் று மட்டும் அவள் சொன் னாள் .

"நடந்தால் ?" என் று சூரியநாராயணன் கேட்க...

"நடக்காது... அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன் ." அவளின் உறுதியான குரலில்


சூரியநாராயணன் அகிலை அவளிடம் நீ ட்டினான் .

"சூர்யா..." வாசுகி தவிப்புடன் மகனை பார்த்தார். பேரன் தங் களை விட்டு


சென் றுவிடுவானோ என் கிற பரிதவிப்பு அவருக்கு...

"எப்படியும் அகில் எங் களுக்குத் தான் சொந்தம் . அவன் இங் கே தான் வர போகின் றான் .
அதனால் இப்போதைக்கு அவன் உன் னிடம் இருக்கட்டும் ." சூரியநாராயணன் பேச்சிற்குச்
சந்திரவதனி விழிகளில் நீ ர்கோர்க்க அவனைப் பார்த்தாள் . அதைக் கண் டு அவனுக்குச்
சங் கடமாக இருந்ததோ என் னவோ!

"உண் மை கசக்கத்தான் செய் யும் . ஆனால் புரிந்து கொண் டால் நல் லது." அவன் மெல் ல
முணுமுணுத்தான் .

"தேங் க்ஸ் ..." என் று அவனுக்கு நன் றி சொன் ன சந்திரவதனி அங் கிருந்து கிளம் ப
முயன் றாள் .

"சூர்யா சொல் வது சரி தான் . அவனுக்குப் பெண் பார்த்தாகி விட்டது. அவன் திருமணம்
வரை தான் அகில் அங் கே இருப்பான் ." வாசுகி அவளிடம் நேரே பேசாது தகவல் போல்
சொன் னார்.

வாசுகியால் பேரனையும் விட்டு கொடுக்க முடியாது. மகனையும் விட்டு கொடுக்க


முடியாது. அதைத் தான் அவர் ஜாடைமாடையாகச் சொன் னார். அதேநேரம் மகனுக்கும்
தனது மனதினை அழுத்தி உரைத்தார். அதைக் கேட்டு சந்திரவதனியின் நடை ஒரு நொடி
நின் றது. பின் அடுத்த நொடி அவள் விறுவிறுவென வாயிலை நோக்கி நடந்தாள் . பிரதாப்
தோழியின் பின் னேயே சென் றான் . அவனைத் தொடர்ந்து சூரியநாராயணனும் சென் றான் .
வாசுகி அங் கேயே நின் று கொண் டார்.

பிரதாப் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர... சந்திரவதனி காரில் ஏறுவதற் காகக் கதவை
திறந்தவள் பின் பு ஏறாது திரும் பி பார்த்தாள் . அவளின் பின் னேயே வந்த
சூரியநாராயணன் அவள் அருகில் வந்து நின் றான் .

"உனக்குப் பெண் பார்த்துட்டாங் களா?" அவள் தவிப்புடன் கேட்டதில் அவன் ஒன் றும் உருகி
போய் விடவில் லை. ஆமென் பது போல் அவன் சாதாரணமாகத் தலையாட்டினான் .

"அந்தப் பொண் ணு கிட்ட அகில் பத்தி சொன் னியா?"

'இல் லாத பொண் ணு கிட்ட என் னத்தைச் சொல் ல?' மனதில் கவுண் டர் கொடுத்தவன்
வெளியில் , "முதல் பேச்சே அகிலை பற்றித் தான் ." என் று சொல் ல...

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 33/34


3/4/24, 12:14 PM (2) ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கதை திரி | Srikala Tamil Novel

"அவங் களுக்கு ஓகேவா?"

"ஓகே இல் லைன் னாலும் வேறவழி இல் லை."

"வலுக்கட்டாயமா அகிலை திணிக்கக் கூடாது. இது அகிலுக்கு நல் லது இல் லை."

"அதை நான் பார்த்துக்கிறேன் . நீ ரொம் ப யோசிக்காதே." என் றவன் அவளைக் காரில்


ஏறும் படி சைகை செய் ய...

அவளும் மறுப்பு கூறாது காரிலேறி அமர்ந்தாள் . இப்போது அவள் பக்கம் சற்றுப்


பலவீனமாக இருக்கிறது. அதனால் தான் அவள் அமைதி காத்தாள் . இல் லை என் றால் அவள்
ஊசி பட்டாசாய் அவனிடம் வெடித்து இருப்பாள் . அகில் தன் னை விட்டு சென் று
விடுவானோ என் று அவளுக்கு அத்தனை அழுத்தமாக இருந்தது. பின் பு ஏதோ தோன் ற
அவள் திரும் பி பார்த்தாள் . அப்போது சூரியநாராயணனின் முகம் அவளது முகத்தருகே
இருந்தது கண் டு பயந்து அவள் அப்படியே பின் வாங் கி இருக்கையில் சாய் ந்து அமர்ந்தாள் .
அவனோ
Forums  SMS Writer's Novels அவளது
 Srikala’s Novels  முகத்தைக் கூடப் பார்க்காது அவளின் தோளில் தூங் கி கொண் டிருந்த
அகிலின் தலையை மென் மையாய் வருடி கொடுத்தவன் பின் பு ஒரு பெருமூச்சு விட்டபடி
 English (US) Contact us Terms and rules Privacy policy Help Home 
விலகி நின் றான் . சந்திரவதனி அவனது செயலில் நிம் மதி பெருமூச்சு விட்டவள்
மௌனமாய் அவனைக் கண் டு சிறு தலையசைப்பு மட்டும் கொடுக்க... பதிலுக்கு அவனும்
தலையசைத்தான் . அடுத்த நொடி பிரதாப் காரை விருட்டென் று கிளப்பி இருந்தான் .
Please Subscribe my YouTube channel :
Report  Like
SMS MEDIA
Vinu Sethu, Roshani Fernando, Maheswari.G and 38 others

1 2 3 … 6 Next 

 Not open for further replies.

Share:        

https://www.srikalatamilnovel.com/community/threads/ஶ்ரீகலாவின் -‘எனக்காக-வா-நான் -உனக்காக-வா-கதை-திரி.3157/ 34/34

You might also like