Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 25

தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாளா ? .

மலேசியத்
தமிழ்மொழிக் காப்பகத்தினருக்கு மறுப்பு

அன்புடைய திரு. கு. நாராயணசாமி,

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத் துணைத்தலைவருக்குத் திருச்சிற்றம்பலம்,

எழுத்து நெறி தாழாது , பண்பு வழுவாது கருத்துப் பகிர்வு செய்த ஐயா


அவர்களுக்கு எனது நன்றிகள். பொங்கல் கையேட்டின் முக்கிய தலைமை
பொறுப்பாளர் என்பதால் தங்களுங்குப் பதிலளிக்க நான் பெரிதும்
கடமைபட்டுள்ளேன். எனது இந்தப் பகிர்வைத் தங்களின் தைப்பொங்கல்
கையேட்டுக் குழுவினரிடம் சேர்க்கும் பணியையும் தயவு செய்து, நீங்களே
செய்து விடுங்கள்.

பொங்கல் சமயம் சாரா கொள்கையையும், தைத்தமிழ் புத்தாண்டு தவிர்த்து,


பொங்கல் திருநாள் சிறப்புகளைத் தமிழ் மாணவர்களுக்கு நன்முறையில்
சேர்க்க வேண்டும் என்ற தங்களின் உணர்வு நன்றுடையது. நமது ஊக்கமே
பல வருங்கால தமிழ் குழந்தைகளும், அவர்களை வழிநடத்தும்
தமிழாசிரியர்களும் தவறான கொள்கையில் தமிழர் பண்பாட்டைப்
புரிந்துகொள்வதிலிருந்து தவிர்ப்பதுவே.

தங்களின் காலத்தையும், எனது காலத்தையும் மிக அருமையாகக் கருதி


தங்களின் ஒவ்வொரு கருத்திற்கும் மறுப்பு பதிலுரைக்காது எனது நேர்
மறுப்பை மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்திற்குப் பதிவு செய்கிறேன்.

1) தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாள் என்ற முதல் கருத்து.
(இந்தக் கருதுகோள் முற்றிலும் சான்றுகளற்ற, ஒரு கொள்கையின்
நம்பிக்கையில் எழுந்த ஒன்று) (பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10)

அ) முதலில் ஒரு கேள்வி. மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் “சமயம் சாரா”


என்று எதனைக் கூறுகின்றது?

இந்தக்கலைச் சொல்லின் வரையறை, பொருண்மை விளக்கத்தை அதன்


உள்ளியல்( Ontology) வழுவாது சரியாக வெளியிடவும். சமயம் சாரா என்ற
கலைச்சொல்லின், பொருண்மை உள்ளியல் ( Ontology) விளக்கங்களைத்
தொல்காப்பியத்தை முதலாக வைத்து சங்கத்தமிழ் தொடங்கி தமிழ் உலகில்
எங்கே, எவ்வாறு துலக்கப்பட்டு, விளக்கப்பட்டுள்ளன என்று விரிவாக ஒரு
தமிழர் சமயம் சாரா சான்று பட்டியலை ( Tamilar religious independent evidence list )
உருவாக்கி, அதன் தரவுகளை மக்களுக்கு எழுதி உடனடியாக வெளியிடவும்.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் கூற முனையும் சமயம் சாரா என்ற
பொருண்மை எங்கே, எந்த மரபில் உருவாகியது என்பதையும், எத்தனை
தொல் தமிழறிஞர்கள் சமயம் சாரா பொருண்மையை
முதன்மைபடுத்தியுள்ளனர் என்பதை முதலில் சரியாக உறுதிசெய்து தமிழ்
மக்களுக்கு முன்வைக்கவும். உண்மையில் நீங்கள் பேச முயலும் “சமயம்
சாரா” தமிழ்மொழி மலேசிய மக்களுக்குப் புரியவில்லை. “சமயம் சாரா”
சொல்லில் மக்களைக் குழப்பும் தாங்கள், அதன் சொல்லைச் சரியாக
விளக்காது மக்களுடன் மேலும் வாதிடுவது தங்களின் மலேசியத்
தமிழ்மொழிக் காப்பகத் தகைமைக்கு அழகு அல்ல, அத்தோடு ஒரு
தகைமைசால் அமைப்பைத் தவறாக பயன்படுத்துவதாகிவிடும்.

*ஆ) தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா ஒரு திருநாள் என்ற கருதுகோள்
முற்றிலும் சான்றுகளற்ற ஒன்று என்பதைத் தமிழர் ஏற்றுப் போற்றிய
திருநாள்களின் வழியே, அதில் இருக்கும் நுட்பமான அறிவியல் சார்ந்த சமய
சடங்குகள், காலம் அறிதலின் தேவைகள், இலக்கியத்தில் தெய்வ இருப்பியல்
குறிப்புகள், இறைவனின் திருவருளில் சமைவது என்ற பெரும் சமய
நிகழ்ச்சிகளாகவே இருந்துள்ளன; இருந்தும் வருகின்றன என்பதற்குச் சங்கக்
காலச் சான்றுகளே போதுமானது.

தமிழர் மரபு இறைச்கொள்கை சமயம் சாராத ஒன்றல்ல என்பதற்குத்


திருக்குறளையே சான்றாக தந்து, தமிழர்கள் இறைக்கொள்கை உடையவர்
(வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'. (கடவுள் வாழ்த்து குறள்:2). என்று
முடிவுரைத்துள்ளேன். அதற்கு மேல் தேவையில்லாது, எழுத்துக்களைச்
சாரமற்றப் பேச்சுகளில் நீட்ட வேண்டாம் என்று கருதுகிறேன்.*

இ) தமிழர் பொங்கல் திருநாள் சமயம் சாரா திருநாள் ஒரு கொள்கையின்


நம்பிக்கையாக எழுந்த ஒன்று. எப்படி ? விரித்துக்காண்போம்.
முதலில் தங்களின் கண்களை ஒரு குழந்தையின் பார்வைக்கு (Child View)
அல்லது உளவியலுக்கு (Child Psychology) மாற்றவும்.

ஒரு குழந்தையின் பார்வையில் (தேடலில்) சமயம்/ agama/ religion எனும்


சொல்லுக்கு

1.Kamus Dewan Bahasa: [a.ga.ma] | ‫ اݢام‬:Definisi : 1. kepercayaan pd Tuhan dan sifat-sifat


serta kekuasaan Tuhan dan penerimaan ajaran dan perintah-Nya, kepercayaan pd yg Maha
Kuasa. [ https://prpm.dbp.gov.my/Cari1?keyword=agama]

2.Cambridge Dictionary: religion : the belief in and worship of a god or gods, or any such
system of belief and worship: [https://dictionary.cambridge.org/dictionary/english/religion ]

3. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: [சமை → சமையம் → சமயம்]


மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயினும், தம்முள்
நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை
மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும்
மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம்(த.ம.3).

மேற்குறிப்பிட்ட விளக்கங்களே மிகத் தெள்ளிய வரையறையாக ஆசிரியரால்


அவர்களுக்குத் தரப்படும். இதைத்தான் குழந்தைகளும் உண்மை
விளக்கமாகக் காண்கின்றார்கள். இதனையே நீங்களும், உங்கள் கையேட்டு
குழுவினர்களும் மறுக்காது ஏற்றுக் கொண்டீர்கள். [ #காப்பகத்தில்
எல்லோரும் இறை நெறியாளர்கள். சிவவழிபாடு, முருக வழிபாடு,
தாயுமானவர் மற்றும் வள்ளலார் பின்பற்றாளர்கள் என பல தரப்பினரும்
இருக்கின்றனர் என்பதை இங்குத் தெளிவுபடுத்த விழைகின்றேன்.
அனைவரும் நெறியாளர்கள்; பண்பாளர்கள். சமயமும் தமிழும் எம் இரு
விழிகள். இதில் எவருக்கும் ஐயம் வேண்டாம்.#]

ஒரு குழந்தை கீழே குறிப்பிட்ட இந்த இரண்டு வரிகளை எப்படிப் புரிந்து


கொள்ளும் என்று முதலில் , நீங்கள் நினைக்கிறீர்கள்?
பொங்கல் சமயம் சார்ந்த விழாவன்று. [( பொங்கல் திருநாள் கையேடு பக்கம்
10).]

ஒரு குழந்தையின் பார்வையில் இதன் பொருள் என்ன ?

1. Bahasa Malaysia : Pongal perayaan bukan bersandar kepada [1. kepercayaan pd


Tuhan dan sifat-sifat serta kekuasaan Tuhan dan penerimaan ajaran dan perintah-Nya,
kepercayaan pd yg Maha Kuasa. ].

2. English : Pongal is not a [ the belief in and worship of a god or gods, or any such
system of belief and worship: ] dependent festival.

3. தமிழ் : பொங்கல் [ ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து


வழிபடுவது; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும்
அடைவதற்குச் சமைவது] சார்ந்த விழாவன்று.

பொங்கல் திருநாளைச் சமயத் திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு.

( பொங்கல் திருநாள் கையேடு பக்கம் 10).

ஒரு குழந்தையின் பார்வையில் இதன் பொருள் என்ன ?

1. Bahasa Malaysia : Adalah suatu kesalahan untuk melihat Pongal sebagai [1.
kepercayaan pd Tuhan dan sifat-sifat serta kekuasaan Tuhan dan penerimaan ajaran dan
perintah-Nya, kepercayaan pd yg Maha Kuasa.].

2. English : It is a mistake/ wrong to view Pongal as a [ the belief in and worship of a


god or gods, or any such system of belief and worship: ] festival.

3. தமிழ் : பொங்கல் [ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து


வழிபடுவது; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும்
அடைவதற்குச் சமைவது] சார்ந்த விழாவன்று.
தாங்கள் நமது குழந்தைகளுக்கு இழைக்கும், தவற்றை உணர்கிறீர்களா?
குழந்தைகளின் பார்வையில் ஏற்படும் கோடலை அறிகின்றீர்களா? “சமயம்
சாரா”, “சமயம் சார்பு பார்வை தவறு” என்ற சொற்களை, அவ்வளவு வலிதாக,
குழந்தைகளுக்கு வலியுறுத்த நினைத்த தங்களின் எண்ணம் தான் என்ன ?
பொதுமை பேசுவதா? இது நமது தமிழ் குழந்தைகளுக்கு இழைக்கும் ஒரு
பெரும் தீங்காகும்.

அதனினும் மேலாக மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம், சமயம் என்ற


சொல்லுக்குச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, Kamus Dewan
Bahasa, Cambridge Dictionary போன்ற அகரமுதலிக்குப் புறம்பாக ஒரு புதிய தமிழர்
வழக்கிற்குப் படாத விளக்கம் தருவது வியப்பைத் தருகிறது.

# தமிழர்கள் ஆதியில் இயற்கையையும், தங்களின் முன்னோர் மற்றும் ஊர்


சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதப்பட்டோரையே வழிப்பட்டுள்ளனர். இது
சமயம் சார்ந்து அமைந்திருக்கவில்லை. அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட
அகழ்வாராய்ச்சி, பழந்தமிழர், மதம் சாரா இயற்கை வழிபாட்டினை
மேற்கொண்டிருந்தனர் என்பதனை மெய்ப்பித்துள்ளது. இதன்வழி, தமிழரின்
தொடக்கக்கால மெய்யியல் இயற்கை சார்ந்த பொதுமையை அடிப்படையாகக்
கொண்டது என்பதனை உய்த்துணரலாம்; அது மதமோ, சமயமோ
சார்ந்ததல்ல. #

கு. நாராயணசாமி, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத் துணைத்தலைவர்.

ஒவ்வொன்றாகக் காண்போம்

1) # தமிழர்கள் ஆதியில் இயற்கையையும், தங்களின் முன்னோர் மற்றும்


ஊர் சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதப்பட்டோரையே வழிப்பட்டுள்ளனர்.
இது சமயம் சார்ந்து அமைந்திருக்கவில்லை.#
மறுப்பு:

a) சமயம் என்ற சொல்லை விளக்க மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தினர்


முதலில் எந்த அகராதி, சொல்லாக்க விளக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்
என்று நற்றமிழ் கற்ற பேர் அறிஞர்களுக்கே ஒரு கேள்வி எழும் ?

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: [சமை → சமையம் → சமயம்]


மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயினும், தம்முள்
நுண்பொருள் வேறுபாடுடையன.

ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்;


இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது
சமயம்(த.ம.3) விளக்கம் தந்திருப்பினும் ஆதியில் இயற்கையையும்,
தங்களின் முன்னோர் மற்றும் ஊர் சார்ந்த காவல் தெய்வத்தை மதித்து,
இறைகொள்கையில் தங்களை வழிநடத்திய தமிழர்களைச், சமயம்
சாராதவர்கள் என்று ஒரு புது விளக்கத்தை, மலேசியத் தமிழ்மொழிக்
காப்பகத்தினர் தருவதைக் காணலாம். தற்பர உணர்வாகிய ஓரிறைமையைத்,
தெய்வச் சார்பை, வழிபாட்டைச் சமயமல்ல என்றால் பின்பு எது சமயம்?
ஒவ்வொருவரும் ஓரிறை தற்பர உணர்வில், தான் மேவும், வழிபடும்
தெய்வத்தை “ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற
அருளும் ( திருநாவுக்கரசர் -6.018.11)” ஆகி தோன்றும் ஆதி அருட்பெரும்
இறையை ‘அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர்
என ... அவரவர் விதிவழி அடைய நின்று (நம்மாழ்வார், நாலாயிர திவ்ய
பிரபந்தம் 2086)” இறைமையை

i) இயற்கையாக முதன்மைப்படுத்த திருமுருகு இயவுளாகவும் (


பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - திரு 274),
ii) முன்னோர் அறவாழ்வியலைத் தெய்வ மரபாக தேற்றும்
முதன்மையினை தென்புலவழிபாடாகவும் (தென் புலம் வாழ்நர்க்கு அரும்
கடன் இறுக்கும் - புறம் 9/3),

iii) சிவத்தை முதன்மைப் படுத்தச் சிவனிய சைவமாகவும் ( சைவம்


சிவனுடன் சம்பந்த மாகுதல் -திருமந்திரம் 10.5. 15.1),

iv) அம்மையைத் தாய்மையாக, திருவாற்றலாக முதன்மைப்படுத்த


கொற்றவை வழிபாடாகவும் (வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ - திரு 258
)

v) திருமாலை முதன்மைப்படுத்த நேமியோன் திருமாலியமாகவும்


(பால்நிறை உருவின் பனைக்கொடி யோனும் நின்ற உருவின் நேமியோனும் -
புறம் : 58 : 14-19)

vi) இறை ஒளிர் சூரிய,சந்திர, அங்கி ஒளிகளை முதன்மைப்படுத்த முச்சுடர்


வழிபாடாகவும் (அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் - தக்கயாகப். 281)

vii) ஞாயிற்றின் ஒளி இறைமையைப் போற்ற ஆதித்தியனாகவும் (


ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே - திருமந்திரம் 10.5.7 .9)

viii) விண்ணுலக தேவர்கள் வழிபாட்டை முதன்மைப்படுத்த அது புத்தேள்


உலக வழிபாடாகவும் (புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே- குறள்:0213)

ix) அருள் ஒளிப்பிழம்பாகி மிளிரும் தெய்வ ஒளிர்வை முதன்மைப்படுத்த


அருட்சோதி வழிபாடாகவும் (அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட
தெய்வம் - திரு அருட்பா ,ஆறாம் திருமுறை, 046. அருட்ஜோதி நிலை)

x) சூள் தேவதைகள் வழிபாட்டை முதன்மைப்படுத்த அணங்கு, சூர்


வழிபாடாகவும் (சூர் அரமகளிரோடு உற்ற சூளே - குறு 53/7), இத்துடன் ஊர்
சார்ந்த காவல் தெய்வ வழிபாடுகளும் சிறந்தன.

xi) அதற்கு மேலாக ஓரிறை பரம் பொருளை முதன்மைப்படுத்த சமயத்தை


உட்கணமாக உள்ளடக்கி உணர்பவர்களுக்கு சித்த சமயாதீத வழிபாடாகவும்
(சைவ சமயமே சமயம்; சமயாதீதப் பழம் பொருளைக் கை வந்திடவே மன்றுள்
வெளிக்காட்டும் - தாயுமானவர் )
b) இப்படிப் பல்லாயிர திரு- தெய்வ அருள் நிலை சேர்க்கும்
வாழ்வியலைத் தமிழர்கள் சமயமாக ஏற்று வாழ்ந்துள்ளனர்.
இவையாவையையும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தினர் சமயம்
சாராதவை என்றால் வேறு எதுதான் நீங்கள் சமயம் என்று ஒப்பேத்த
முயல்கிறீர்கள்? நீங்கள் சமயமல்ல என்று மறுப்பது தங்களுடைய உள்முக
இறை மறுப்பின் நேர் வெளிபாடாக தெரிகிறது.

2) #அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி, பழந்தமிழர்,


மதம் சாரா இயற்கை வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர் என்பதனை
மெய்ப்பித்துள்ளது.#

மறுப்பு:

a) அண்மையில் ஒரு கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி


முழுமைபெற்றுவிட்டது என்று எப்படி மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தினர்
முடிவுக்கு வந்தனர்? அதுவும் தமிழ்நாட்டில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் நிகழ்த்த
கீழடி அகழ்வாராய்ச்சியை வைத்து, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தினர்
பழந்தமிழர், “மதம் சாரா” இயற்கை வழிபாட்டினை உடையவர்கள் என்று
முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்? ஒரு வழிபாடே மதம் சார்ந்துதான் எழும்
எனும் எளிய சொல்விளக்க பொருள் அறியாது, புரியாது பேசுவது எவ்வளவு
அறியாமை. அதுவும் ஒரு முழுமை பெறாத ஒரு குறிப்பிட்ட அகழ்வாய்வில்
கிடைக்கப்பெற்ற தொல்பொருள்களை வைத்து, ஒரு முதல் சங்க,
இடைச்சங்க , கடைச்சங்க நீண்ட கால தமிழ் மரபிற்கு முடிவு கூற வந்தீர்கள்?
இங்கே கீழடி அகழ்வாய்வை மேலும் பிரித்து, விரித்து ஆய்வது வீண்.

b) மீண்டும் பழந்தமிழர், மதம் சாரா இயற்கை வழிபாட்டினை


மேற்கொண்டிருந்தனர் என்று இறைக்கொள்கை நிறுத்தும் மதம் என்ற
சொல்லுக்கு மேலும் ஒரு குழப்பம் விளைவிக்கும் வகையில், பொருள் கூற
முனைகின்றீர்கள். மேலும் மேலும் தமிழ்ச் சமயம், மதம் என்ற தமிழ்ச்
சொற்களை அகரமுதலிக்கும், வழக்கியலுக்கும் முரண்பட்டு, குழப்பும்
நீங்கள் யாவரும் தமிழ் மொழியை மலேசிய மண்ணில் காப்பவர் என்பதை
நினைக்க மன்னிக்கவும் - சிறிது மனம் நெருடுகிறது.

c) தமிழர் முதல் சங்க, இடைச்சங்க , கடைச்சங்க தொல்வாழ்வியலை,


மொழியியலை, அறிவியலை ஒரு முழுமை இலக்கணமாக நெறிபடுத்தி,
தமிழர் மொழிக்கும், அறிவியலுக்கும், மரபிற்கும் அரணாக இருப்பது
தொல்காப்பியம். தொல்காப்பியம் தனது பொருளியலில் திணை (ஒழுங்கு)
வாழ்வியலில் கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்,
பெருந்திணை, கைக்கிளை ஏழுதிணைகளையே வகுத்துக் காட்டும்.
கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை
என்ப ( தொல்காப்பியம் அகத்திணை 1 ), அதில் கைக்கிளை, பெருந்திணை
நீக்கி மற்ற முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், அன்பின்
ஐந்திணைகளுக்கும் ஒவ்வொரு நிலமும், அந்நிலத்திற்கு ஒரு தெய்வமும்

*மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே ( தொல்.அகத்திணை- 5 )*

உண்டு என்று தெளிவாக தமிழர் தெய்வ வாழ்வு மரபினை எடுத்து இயம்பும்.


அன்பின் ஐந்திணைகள் தவிர்த்த கைக்கிளை, பெருந்திணை இவ்விரு
திணைகளுக்கும் தெய்வங்களும், நிலமும் இல்லை. இங்குத் தெய்வம்
சாரும் மரபைக் கொண்ட ஐந்து நிலத்தினரும் இறைகொள்கை உடையவர்கள்
என்பதைத் தெளிவாக தொல்காப்பியம் உறுதி செய்கின்றது. நிலம் சாரா ஒரு
தலை காமக் கைக்கிளை, கழி காம பெருந்திணை இவ்விரு திணையோர்களே
தெய்வம்சாராதவர்கள் என்பது தொல்காப்பியரின் முடிவான முடிவு. மேலும்
தொல்காப்பியர் சமயம் சாராதவர்களுக்கு என்று ஒரு புதிய
திணைவகுக்கவில்லை. அப்படியானால் தெய்வம் நில்லா சமயம் சாரா
என்பது ஒரு தலை காமக் கைக்கிளை, கழி காம பெருந்திணை
திணையோர்களுக்கே பொருந்தும். ஆகவே நீங்கள் மலேசியத் தமிழ்மொழிக்
காப்பகத்தினைத் தொல்காப்பிய மூல தமிழர் தெய்வக் கொள்கைக்கு
எதிராகவே வழிநடத்த முயல்கிறீர்கள் என்பது வெளிப்படை.

d) மேலும் கீழடியின் ஆய்வை உங்கள் சமயம் சாரா கொள்கைக்கு


எடுத்துக்காட்டத் தெரிந்த தங்களுக்கு, ஏன் தமிழர் மொழிக்கும்,
அறிவியலுக்கும், மரபிற்கும் அரணாக விளங்கும் தொல்காப்பியத்தை எடுத்து
தெய்வம் சாரும் அகத்திணைகளாக்கத் தெரியவில்லை.

3) #இதன்வழி, தமிழரின் தொடக்கக்கால மெய்யியல் இயற்கை சார்ந்த


பொதுமையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை உய்த்துணரலாம்;
அது மதமோ, சமயமோ சார்ந்ததல்ல. #

மறுப்பு:

a) உண்மை. தமிழர் மெய்யியல் இயற்கை சார்ந்த பொதுமையை


அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் மூலத்தில் தொல்காப்பியம் ஐந்திணைப்
பொருந்தி தெய்வ வழக்கினையே தமிழர்கள் என்றென்றும் போற்றி, அதன்
கூர்வில் பேரிறைமை கண்டு, ஓரிறை கடவுள் ஒருங்கி வாழ்வர் என்பதை
நீங்கள் அறியாதவர்களா?

b) தமிழர்கள் நாள்காட்டியில் எழும் எந்தத் திருநாள் சமயம் சாராதவை?


எடுத்துக்காட்டுங்கள். தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திருநாளுக்கும்,
வானியலில் கிழமை, நாள்மீன், திதி போன்று ஒரு அறிவியல்
நிலைப்பாட்டோடு, வாழ்வியல் நலன் காண் கால திறனோடு ( எ.கா : காலம்
அறிதல் -10 திருக்குறள்கள்) ‘திரு-தெய்வம் இயல்பு பொருந்த’
சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? சமயம் சாராதவர்களுக்கு இதில்
எதிலும் உடன்பாடு தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வீர்களா? சமயம்
சாரா கொள்கையினரின் போக்கு தெய்வ வாழ்வியலுக்கு எவ்வளவு தீங்கை
விளைவிக்கும் தெரியுமா ? அதை விரிப்பது கால விரையமே.

c) நம் சூரிய தைப்பொங்கல், சமயம் சாரா திருநாள் என்று கூற முனையும்


தங்களின் எண்ணம் தான் என்ன ? மீண்டும் ஒரு கேள்வி, சமயமும் தமிழும்
எம் இரு விழிகள் என்று கூறிய தாங்கள் சமயத்தையும், பொங்கல்
விழாவையும் பிரித்துக் காண முயலும் முயற்சிதான் என்ன ? தமிழர் தெய்வ
வாழ்வியலுக்குத் தீங்கை விளைவிக்கவா? தங்களின் சொல்லுக்கும்
செயலுக்கும் முரண்பாடுகள் பெரிதாக இருக்கின்றன.

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்துக்கே சமயம் என்ற சொல்லுக்கு வழக்கு,


பொருள் புரிதல் இடர்பாடு, ஏற்படுமானால், குழந்தைகளுக்கும், எளிய
மக்களுக்கும் “சமயம் சாரா”, “சமயம் சார்பு பார்வை தவறு” என்ற சொல்
எவ்வளவு விளைவினை ஏற்படுத்தும் என்பதனை என்னவென்று சொல்வது ?

சமயம் என்ற சொல்லுக்கோ, அதன் புரிதலுக்கோ நீங்களே தெளிவான


விளக்கம் பெறாது குழந்தைகளின் உணர்வில் பொங்கலை வைத்து,
அவர்களுக்குள் இருக்கும், அவர்கள் ஏற்கும் திரு சேர் தெய்வ உணர்வைச்
சிறுமை படுத்துவது எவ்வளவு தவறு.

மற்ற இனத்தவர்கள் தங்களின் சமயத்தை எந்த நிகழ்ச்சியிலும், சூழலிலும்


விட்டுக்கொடுப்பது இல்லை. அது ஏனோ தெரியவில்லை நாம் மட்டும்,
(பொதுமை) இனவுணர்வு என்ற பெயரில், சமயத்தைப் புறம் தள்ளுவது,
கீழ்மைப்படுத்துவது அல்லது தேவையற்ற ஒன்றாக சமயத்தைக் காட்ட
முயல்கிறோம், அதுவும் நமது சமயத்தைத் தூக்கி நிறுத்தவேண்டிய
வருங்கால குழந்தைகளிடம். மனக் காயம், காய்வு அதிகமாகிறது.

எனது கருத்துகள் தவறு என்று சுட்டிக் காட்டி 1522 சொற்களைத் எழுத


தாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு என்று தெரியவில்லை ஆனால்
இவ்வாறன எழுத்துக்கள் பல்லாயிரம் மாணவர்களின் புரிதலைத் தவறாக
வழிநடத்தப்பட்டுவிடுமே எனும் ஓர் உணர்வு, ஆதங்கம், துடிப்பு, ஆழமான
சமய, சமூக பொறுப்புணர்வு இருந்திருந்தால் , அந்தப் பத்துச் சொற்களைச்
சரியாக பத்து நிமிடத்தில் மெய்ப்புப் பார்த்து, அகற்றி அல்லது திருத்திச் சரி
செய்திருப்பீர்கள். ஒரு பெரும் பொறுப்பில் உள்ள தாங்கள்
அச்சொற்களையும், பொங்கல் சமய விழாவா? என்ற தலைப்பையும்
பண்பாட்டு ஒருங்கிணவு திருவிழா போன்ற வேறு அருமையான சொற்களைத்
தந்து அக்கட்டுரையை நெறிபடுத்தி, இருப்பீர்கள், இப்படி பல்லாயிர,
பெற்றோர்களின், தமிழ் சமய உணர்வாளர்களின் கண்டனத்திற்கு, மன
உளைச்சலுக்கு நீங்கள் ஆளாகியிருக்கமாட்டீர்கள். இவ்வளவு குழப்பங்களை
மலேசிய தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க மாட்டீர்கள். தங்களின் தவறை
நீங்களே உணர்ந்திருந்தால், மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமே மக்களிடம்
மன்னிப்புக் கோரி , அதனைத் திருத்திவிடுகிறோம் என்று சொல்லியும்
இருப்பீர்கள்.

அதைச் செய்ய மறுத்து, சமயத்தை வேண்டும் என்றே குறி வைத்து,


சமயத்திற்கு ஒரு புது வரையறையைத் தாங்களே வகுத்துக் கொண்டு
முனைப்புடன் பொங்கல் சமயம் சாரா என்ற சொல்லை முனைந்து புகுத்த
நினைத்தற்குப் பெயர் என்ன? நோக்கம் தான் என்ன? கொள்கை. தாங்களே
வலிந்து ஏற்றுக்கொண்ட சமயம் சாரா கொள்கை. அது இந்து வெறுப்பாக
இருக்கலாம், உள்முகமாக சமய கொள்கைமறுப்பாகவே இருக்கலாம். வேறு
எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தங்களின் தனிப்பட்ட கொள்கை
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் நிலைப்பாட்டில் எழுவது மிகப் பெரிய
அச்சத்தை ஏற்படுத்துகிறது. மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின்
தேவையையே கேள்வி எழுப்புகிறது.

எனது ஏரணத்தைத், தெளிவின்மையை முனைந்து விரிவாக நன் முறையில்


எடுத்துக்காட்ட, முடிந்த தங்களுக்கு, உறுதியாக தங்களுக்குள்ளேயே
முரண்படும் சமயத்தைப் பற்றிய புரிதலைச், சிந்தனைகளைக்,
கொள்கைகளை அதே ஏரணத்தின் வழி சரி செய்ய இயலும் என்பது திண்ணம்.
சமயம் நமது பண்பாட்டைக் காக்கும் அரண் என்பதை நன்கு தெளிக. சமயம்
சாரா கொள்கையை விட்டு தொல்காப்பிய தெய்வ அகத்திணையை
அகப்படுத்தும் உயர் ஏரணத்தை ( Higher Order Logics ) பெற மலேசியத்
தமிழ்மொழிக் காப்பகத்தினரைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழ் தைத் திங்கள் புத்தாண்டு என்ற ஒரு கருதுகோள் ( Hypothesis )
பெரும் வானியல் அறிவியல் பிழைபாடு உடையது.

முறையான, முழுமையான தமிழர் வானியல் அறிவியல் சான்றுகள் (Proper


Complete Tamilar Astronomical Scientific Evidence) இல்லாத ஒரு கருதுகோளைக்
( Hypothesis ) குழந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பது, அவர்களின் வானியல்
அறிவியல் புரிதலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும்.

அதன் விரிவைப் பின்பு காண்க.

ஐயா, பழி கூறி தூற்றுவது நமது இயல்பல்ல. உண்மையைத் தெளிவதே


தமிழர் சமய செந்நெறி.

நன்றி.

வானியல் அறிவியலாக உறுதிபடுத்தபடாத ( unverified ) தைப்புத்தாண்டு


வானியல் அறிவியல் இடர்பாடுகளை காண்க:

மேலும் படிக்க இயலாதவர்கள், விரைவாக புரிந்துகொள்ள, இந்தக்


காணொளியைக் காணவும்

Youtube : https://youtu.be/L98_sCfjjng

சித்திரைப்புத்தாண்டை மீட்போம், தமிழர்களுக்கும், தமிழுக்கும் இழைக்கும்


பெரும் வானியல் அறிவியல் தீங்கை தடுப்போம்.
வானியல் வடிவியல் கணித வழியாக தமிழர் ஆண்டு பிறப்பு தொல் தமிழர்
சித்திரையிலிருந்து புதிய தைப்புத்தாண்டுக்கு மாற்ற முடியாது. ஏன்?

The birth of Tamil new year cannot be changed from ancient Tamil Chitrai to new Thai birth
year through Astro Geometrical Mathematics. Why ?_

அன்புடையீர், திருச்சிற்றம்பலம்.

அண்மைகாலமாக பரவலாக தமிழர்களுக்கு நம்பிக்கையாகத் திணிக்கப்பட்ட,


இரண்டு தவாறான கருதுகோள்கள் (Hypothesises).

i) தமிழ்ப் புத்தாண்டு சுறவம்( தை ) திங்களில் பிறக்கின்றது என்ற கருத்து.


தமிழர் வானியல் அறிவியல் ஆய்வு சாராது எழுந்த கருதுகோள்.

ii) தமிழ் அறிவியல் மரபைப் பெரிதும் மீண்டும் அரசியலுக்கு உட்படுத்திய


ஒரு கூற்று புதிய தைப்புத்தாண்டு பிறப்பு.

தொல் உடு பெயார சித்திரைப்புத்தாண்டு ( Ancient Chitra Sidereal Year)-ல் இருந்து


புதிய தைப்புத்தாண்டுக்கு (New Thai Tropical Year) மாற்றும் கணிதத்தை
அறிவியல் சான்றுகளோடு வெளியிடாது தமிழர்களைப் புதிய
தைப்புத்தாண்டுக்கு மாற்றும் முயற்சியைச் செய்வது தமிழர்களுக்கு
இழைக்கும் பெரும் அறிவியல் தீங்காகும்.

ஆகவே தொல் தமிழ் உடு வானியல் சித்திரையிலிருந்து புதிய


தைப்புத்தாண்டுக்கு மாற்றக் கோரும் அனைத்துத் தமிழர்களுக்கும், சில
கேள்விகளும் , அறிவியல் பணி பட்டியலும் ( Scientific Task List) .

முதலில் மீண்டும் ஒரு சிறு விளக்கம். தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு


முன்பே சூரியக் கடவு பாதையையும் (வட செலவு , தென் செலவு ), நிலவு
கடவு பாதையும், கோள்களின் கடவு பாதைகளையும், பெயராத நாள்மீன்
கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி உருவாக்கிய தொல் வானியல் கணிதமே,
உடு ( நாள்மீன்கள் ) பெயரா கால ஆண்டு (Sidereal year ) சித்திரை ஊழி கால
அறிவியல் ஆகும். NASA போன்ற உலக வானியல் ஆய்வு மையங்கள் ஏற்கும்
சரியான துல்லிய கால அளவையியல், அறிவியல் சார்ந்த உடு ( நாள்மீன்கள் )
பெயரா கால ஆண்டு முறையே (Sidereal year ) ஆகும். இன்றளவில் நமக்கு
இவையாவும் ஐந்திரமாக (பஞ்சாங்கமாக) கிடைக்கும். இதனை மீள்
கணிதமாக உருவாக்கி ஒரு கணிதச் சூத்திரமாக ( Mathematical Formula),
பன்னிரண்டு வட்டணயில் (கட்டத்தில்) உருவாக்குவது, இன்றைய கணித
அறிஞர்களுக்கே இயலாத ஒன்றாகும்.

முற்றிலும் சூரியக் கடவு பாதையை (வட செலவு , தென் செலவு ) மட்டுமே


வைத்து வானியலை அளப்பதை சூரியமான அல்லது செளரமான ஆண்டு
(Tropical Year) என்று அழைப்பார்கள். இது ஆங்கிலேய ஆண்டை (Tropical year)
பின்பற்றும் ஒரு முறையாகும். ஆங்கிலேயர்கள் இக்கணிதத்தை நமக்கு
கணித சூத்திரமாக ( Mathematical Formula) உடனடியாகத் தர இயலும். சூரியக்
கடவு பாதையை (வட செலவு , தென் செலவு ) மட்டுமே வைத்து வானியலை
தைப்புத்தாண்டு ஆயப்புள்ளியாக ( Geometrical Coordinate origin ) வைத்து,
ஆங்கிலேய ஆண்டை (Tropical year) பின்பற்ற முனைந்து செயல்படும்
தமிழர்களுக்கு சில கேள்விகளும், அதை உறுதிபடுத்த ஒரு அறிவியல் பணி
பட்டியலை ( Scientific Task List) தாங்கள் செய்யவும்.

தொல் தமிழ் உடு வானியல் சித்திரையிலிருந்து, புதிதாக தைக்கு


மாற்றக்கூறும், (மாற்ற விரும்பும்) தங்களுக்கும், தங்களைப் போன்று, தமிழர்
தைப்புத்தாண்டு கால மாற்றம் விரும்பும் மற்ற அன்பர்களுக்கும் ஒரு சிறு
வானியல் அறிவியல் பணி பட்டியலை (Scientific Task List) ஒரு காரணத்தோடு
தருகிறேன் அதனை ஒவ்வொன்றாக சரியாகச் செய்துவிட்டு, தமிழர்
வானியல் அறிவியலை முதலில், உலகத் தகைமை வானியல் புதுவ
அறிவியலுக்கு ( Modern Science) நிகர் செய்துவிட்டு தங்களின் அடுத்தக் கட்ட
புதிய தைப்புத்தாண்டு மாற்றத்தைப் பற்றி, அல்லது குழப்பமிக்க,
சான்றுகளற்ற புதிய தைப்புத்தாண்டு வரலாறு பின்புலங்களை விரிவாகப்
பேச விழைவோம்.
1) முதலில், புதிய தைப்புத்தாண்டு வேண்டும் என்று முன்மொழியும் நீங்கள்
எந்தக் கால கணிதத்தைத் தற்போதைய ஐந்திர (பஞ்சாங்க) சித்திரைக்கு
மாற்றுத் தமிழ் கணிதமாகப் பயன்படுத்தி வருகிறீர்கள்? அப்படி ஒன்று
தங்களிடம் இருந்தால் முதலில் அதனை வெளியிடவும். அதிகம் வேண்டாம்
சூரியன் காலையில் எந்த நேரத்தில் உதயமாகும் என்ற கணிதத்தையும், நிலவு
எப்பொழுது, ஒரு நாள்மீன் கடக்கும் என்ற நேர கணிதத்தையும் துல்லியமாக
கணக்கிடும் முறையை ஒரு கணித வழித்தோன்றலாக (Mathematical Derivation)-
னாக தரவும்.

2) சித்திரையிலிருந்து, தைக்கு மாற்றக்கூறும் தங்களுக்கு இன்னொரு பணி.


தற்போது நீங்கள் தொல் தமிழ் உடு வானியல் சித்திரை கால கணிதத்தையே
பயன்படுத்தி வருகின்றீர்கள் என்றால், அதனை முதலில் தூக்கி எறிந்துவிட்டு,
பழந்தமிழ் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தைப்) பயன்படுத்தாது, ஆங்கிலேயர்கள்
கணிதத்தைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு புதிய தமிழர் கணிதத்தை மீள்
உருவாக்கம் செய்து, பின்பு உடனடியாக நாங்கள் தொல் தமிழ் சித்திரை
கணிதத்திலிருந்து, புதிய தை கணிதத்திற்குப் பெயர்கிறோம், புதிய தமிழ் கால
நாள்காட்டி உருவாகி விட்டது என்று பரப்புரை (பிரகடனன்) செய்யுங்கள்.
பின்பு தமிழ் சித்திரை ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை) எரியூட்டி கொளுத்துங்கள்.

அதைச் செய்யாது, தொல் தமிழ் சித்திரை கால நாள்காட்டி ஐந்திரத்தில்


(பஞ்சாங்கத்தில்) அமர்ந்து கொண்டு, அதன்மேல் சவாரி செய்துகொண்டு,
உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல், பழந்தமிழர் ஐந்திரத்தை
(பஞ்சாங்கத்தை) கொளுத்து, தமிழ் சித்திரையை எதிர்த்துபோராடு, ஆண்டு
பிறப்பைத் புதிதாக தைக்கு மாற்று என்று ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பெயர்
என்ன? முதலில் சித்திரை எனது அல்ல, ஐந்திரம் (பஞ்சாங்கம்) எனது அல்ல
என்ற தீர்க்க முடிவுக்கு வந்து விட்ட நீங்கள், ஊரார் வீட்டிற்குள் புகுந்து,
உரிமையெடுப்பது போல் வேண்டா என்று தள்ளி விட்ட பழந்தமிழர் சித்திரை
ஐந்திரத்தில் அமர்ந்து கொண்டு ஆண்டு பிறப்பைத் புதிதாக தைக்கு மாற்று
என்று கோருவதற்கு என்ன பெயர்? அதற்கு பெயர்தான் தமிழை அரசியல்
படுத்துவது அல்லது ஆதாயப் பொருள் ஆக்குவது.
*3) முதல் கேள்வி, இந்து சமயம் சார்ந்தவரோ, சாராதவரோ, வேண்டுபவரோ,
வேண்டாதவரோ – தைப்புத்தாண்டு சூரியமான அல்லது செளரமான ஆண்டு
(Tropical Year) பிறப்பிற்கு மாற்றக் கோரும் அத்தனை தமிழ்
உணர்வாளர்களுக்கும், புதிய புத்தாண்டு வேண்டுவோர் எப்படி இப்புதிய
கணிதத்தைச் செய்தார்கள் என்று ஒரு கணித சூத்திரமாக (Mathematical Formula)
வேண்டாம், செய்முறை(Methodology) வழியாக விளக்கினால் கூட நலமாக
இருக்கும். கேள்வியை நன்றாக உள்வாங்கித் தங்களின் பதிலை அல்லது
செய்முறையை எழுதவும். இக்கேள்விக்குப் பதில் எழுதத் தங்களுக்கு எப்படிச்
சரியாக சூரியமான அல்லது செளரமான ஆண்டு (Tropical Year) கணிதம்
செய்வது என்று தெரிய வேண்டும். அதை முதலில் கணித சூத்திரமாகவோ
( Mathematical Formula) அல்லது செய்முறை(Methodology) வழியாகவோ முதலில்
உறுதிபடுத்தவும். முடிந்தால் அதனை ஆங்கிலேயர்கள் எப்படி
கணிதமாக்கியுள்ளனர் என்பதைத் புதுவ அறிவியல் (Modern Science) வானியல்
நூல்களில் கற்றுத் தெளிந்து, பின்பு நீங்கள் உருவாக்கிய புதிய தமிழர்
செய்முறையை நீண்டு விரிக்கலாம், விளக்கலாம். *

4) அடுத்தக் கேள்வி நீங்கள் வகுத்த புதிய சூரியமான அல்லது செளரமானர


ஆங்கிலேய ஆண்டு (Tropical Year) கணித முறையை (Methodology) வைத்து
எப்படி நிலவு கடவு பாதையையும், கோள்களின் கடவு பாதைகளையும்,
பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி சூரியக் கடவு
பாதையையும் (வட செலவு , தென் செலவு ), நிலவு கடவு பாதையையும்,
கோள்களின் கடவு பாதைகளையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப்
பின்புலம் நிறுத்தி கணிதம் செய்ய இயலும் என்பதை உறுதிபடுத்தவும்.

5) அடுத்ததாக உங்களால் தைத் திங்களைக் கணக்கிடும் ஆயப்புள்ளி


(Geometrical Coordinate origin) எதுவென்று முறையாக நிறுத்தி, சூரியமான
அல்லது செளரமான ஆண்டு (Tropical Year) கணிதமுறையில் ( Methodology)
எப்படி , உடு ( நாள்மீன்கள்) பெயரா வானியல் கணிதம் செய்ய இயலும்
என்பதையும் விளக்கவும். அடுத்தாக நீங்கள் உருவாக்கிய அந்தப் புதிய ஆய
அச்சு வடிவியல் வானியல் கணிதத்தை (Astro Geometrical Coordinate Mathematics )
அறிவியல் பின்புலம் கொண்டு உறுதிபடுத்தும் முறையைத் (scientific empirical
evidence) தந்து அறிவியலாக்கிக் காட்டவும். அப்படி உருவாக்கிய பின் தகமை
சார்ந்த உலக வானியல் அறிவியல் சஞ்சிகைகளில் அதை
பதிவிடச்செய்யுங்கள். தமிழ் அறிவியல் வளரும் தமிழர் அனைவரும்
அதனால் பெருமை அடைவர். தங்களைப் போற்றுவர்.

6) ஐயா, வானியல் அறிவியல் என்பது பெரும் கணிதம். அது நீங்கள்


நினைப்பதுபோல் உங்கள் கைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர்
ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன் மீயண்மை ( Perihelion )
மீச்சேய்மையைக் ( Aphelion ) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய
தைப்புத்தாண்டு சூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய
ஆய்வு ஏடாக முதலில் தரவும். அத்தோடு அல்லாது புதிய தைப் புத்தாண்டு
வேண்டும் தமிழர்கள் அதனை எப்படி செய்தனர் என்பதையும் சேர்த்து
விளக்கவும். அதுவே தங்களின் தமிழர் வானியல் கண்டுபிடிப்பிற்கு முதல்
வெற்றி.

*இது வரை நீங்கள் ஓர் ஆண்டில் எப்படிப் பல்லாயிர நாள்மீன் தோற்றங்கள்


உருவாகி நிற்கின்றன, அதனை எப்படி, ஏன் தமிழர்கள் 12 வட்டணையாக
வகுத்தனர், 8, 10 போன்ற வட்டணை அல்ல . புவியின் வட்டணைத் தள (Plane
Of Orbit) வட்டப் பிறழ்ச்சி (Eccentricity) , சாய்மானம் (Axis Tilt) , அச்சலைவு
(Precession Of Axis-Tilt), தலையசைவு/ கிறுவாட்டம்/ தலையசைவு(Nutation/
Gyration/Wobbling), மந்தோச்ச அலைவு (Apsis Precession), மீயண்மை ( Perihelion ),
மீச்சேய்மையைக் ( Aphelion), சூரிய வட்டப்பிறழ்ச்சி ( Eccentricity ),
இவையெல்லாம் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்று சூரியமான அல்லது
செளரமான ஆண்டு (Tropical Year) கணிதத்தைக் கொண்டு கணக்கிட்டுக்
காட்டிவிட்டுத், தையைப் புத்தாண்டாக ஆக்கலாமா வேண்டாமா என்று பின்பு
நீங்களே முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் பின் வானியலை ஆய்வு
செய்யும் என்னைப் போன்றோர் மறுக்க அங்குத் தேவையும் இல்லை,
நாங்களும் மறுப்புத் தெரிவிக்க மாட்டோம். வரவேற்போம். *

7) இதுவரை சூரியமான அல்லது செளரமான ஆண்டு (Tropical Year)


கணிதத்தைக் கொண்டு, நிலவு கடவு பாதையும், கோள்களின் கடவு
பாதைகளையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி சூரியக்
கடவு பாதையையும் (வட செலவு , தென் செலவு ), நிலவு கடவு பாதையும்,
கோள்களின் கடவு பாதைகளையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப்
பின்புலம் நிறுத்தி உருவாக்கிய கணிதத்தை, எந்தக் கணித அறிவியல்
மேதையும் செய்ததில்லை, அதைச் செய்யவும் முடியாது. முடிந்தால் நீங்கள்
முறையான அறிவியல் சான்றுகளோடு, அதை மறுத்தால், உலக வானியலில்
அறிவியலில் ஒரு புதிய சாதனையாளராக நீங்கள் திகழ்வீர்கள். இஃது ஒரு
தமிழரிடம் நான் பெரிதும் காண விழையும் ஓர் அறிவியல் படைப்பு. எனது
மனமகிழ்வே அதுதான். பல ஆண்டுகளாக பல வானியல் சஞ்சிகைகளை,
நூல்களைப் படித்து அப்படி ஒரு கணிதம் இருந்ததாக என்னால் எங்குமே காண
முடியவில்லை.

அப்படித் தங்களால், மேற்கூறியவற்றை செய்ய முடியவில்லை என்றாலும்


ஒரு வானியல் (வரலாறு பேசும் இலக்கியம் அல்ல) அறிவியல் நூலோ,
அறிவியல் தகைமையுடைய சஞ்சிகையிலோ பார்த்தோ, படித்தோ இருந்தால்,
முதலில் ஒரு சான்றாக எனக்கு எடுத்துக்காட்டவும். அப்படித் தங்களால்
அதனைச் செய்ய முடியும் என்றால், ஒரு கணிதத் துறை அறிஞராக நான்
தங்களுக்கு, முதலில் தலைவணங்குகிறேன்.

8) இவையாவையைவும் சரியாகச் செய்துவிட்டு, தமிழர் வகுத்தப்


பன்னிரண்டு வட்டணையில் (கட்டத்தில்) உருவாக்கித் தந்தப் பின்பு
இவையாவையையும் தமிழ் ஆன்றோர்கள் செய்த தொல் வானியலோடு
பொருந்தி வரும் சான்றுகளோடு மக்களுக்குத் தர முடியுமா? தங்கள் முதலில்
தொல்காப்பியரின் கால வகுப்பிற்கு எப்படி புதிய தைப்புத்தாண்டு
பொருந்துகிறது என்பதற்கு பதில் சொல்லியப் பின்பு மற்ற ஆன்றோர்
வானியல் கணிதத்திற்குப் பதில் சொல்ல முயற்சி செய்யவும்.

9) கொடுத்த அறிவியல் பணி பட்டியலை (Scientific Task List) முடித்துவிட்டு,


தொல் தமிழர் வானியல் அறிவியலைச் சரியாகத் தெரிந்து கொண்டு, தாங்கள்
வகுத்த புதிய தமிழர் கணியத்தை முறையாக எழுதி பதிவிடவும். பிறகு
தையைப் புத்தாண்டாக மாற்றுவதா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம்.
அப்படிச் செய்ய தங்களால் முடியுமென்றால், அதுவே உலகம் ஏற்கும்
புத்தறிவியல் என்பதால் அதற்கு மேல் புத்தாண்டு விவாதங்கள்
தேவையில்லை. தமிழர்கள் உருவாக்கிய கணிதத்தை உலக அறிவியல்
அறிஞர் அனைவரும் ஏற்பர். யாருக்கும், எந்த மறுப்பும் இல்லை. நான் பெரும்
மகிழ்வடைவேன்.

10) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் (Scientific Task List) நீங்கள் யாவரும்


சேர்க்க வேண்டியதும் விளக்க வேண்டியதும் சில உள்ளன, அதையும்
சரியாகச் செய்துவிடவும். ஒரு நீண்ட அறிஞர் பட்டியலை தைத் திங்கள்
புத்தாண்டிற்கு மேற்கோள் காட்டி, இவர்கள் தான் தைப்புத்தாண்டு மாற்றத்தை
தமிழர்களுக்கு வழியுறுத்தியுள்ளனர் என்று உறுதியாக சொல்கின்றனர்.

01. தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்,02. மொழிஞாயிறு தேவநேயப்


பாவாணர், 03. பாவலரேறு பெருஞ்சித்திரனார்,04. பேராசிரியர்
கா.நமசிவாயர்,05. தமிழ்க்கணிய மேதை இ.மு. சுப்பிரமணியனார்,06.
முனைவர் மு.வரதராசனார்,07. திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார்,08.
பெருந்தொண்டர் வ. வேம்பையனார்,09. பேராசிரியர் தமிழண்ணல்,10.
தமிழறிவியல் அறிஞர் வெங்காலூர் குணா,11. குடந்தை கதிர்.
தமிழ்வாணனார் 12. அ.சி.சின்னப்பத்தமிழர்,13. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
விசுவநாதர்,14. தமிழ்முனிவர் திரு.வி.க,15. பாவேந்தர் பாரதிதாசனார், 16.
தமிழ்க்காவலர் கா.சுப்பிரமணியனார் 17. நாவலர் ந.மு.வேங்கடசாமியார்,18.
நாவலர் சோமசுந்தர் பாரதியார், 19. பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனார்
20. சிந்தனையாளர் வே.ஆனை முத்து,21. முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல்
முருகனார்,22. சிவனியப் பெரியார் சச்சிதானந்தனார், 23. தோழர்
பெ.மணியரசனார் 24. புலவர் குழுவினர் (1971),

மலேசியாவில், 01. தமிழவேள் கோ.சாரங்கபாணியார், 02.


முதுபெரும்பாவலர் சா.சி. குறிஞ்சிக்குமரனார், 03. தமிழ்நெறி ஞாயிறு
அ.பு.திருமாலனார், 04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார் 05. கம்பார் கனிமொழி
குப்புசாமி, 06. தமிழ்ப்புனல் மணி. வெள்ளையனார், 07. தமிழ்த்தொண்டர்
திருமாறன் 08. இரெ.சு.முத்தையா, 09. முத்தமிழ் முரசு இரா.
திருமாவளவனார்
10. மூலப்பெருந்தமிழ் அறிஞர் இர. திருச்செல்வனார், 11. திருமுறைச்
செம்மல் ந.தர்மலிங்கனார், 12. சிவத்திரு. ஆறு நாகப்பனார் ,13. தமிழக்கழல்
அ.இராமன் ,14. தமிழ்வளவர் ந.பொன்னுசாமி, 15. கவிஞர் தீப்பொறி
பொன்னுசாமி .

இதற்கு மேலும் இப்பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த மேலும் வேறு யாரை


வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இங்கே நீங்கள் செய்ய வேண்டிய புதிய பணி என்னவென்றால், நீங்கள் நீண்டு


பட்டியலிட்ட ஒவ்வொருவரும் எழுதிய ஒரு தைப்புத்தாண்டு நூலையோ
அல்லது அவர்கள் கைப்பட எழுதிய தைப்புத்தாண்டு குறிப்புகளையோ
ஒவ்வொன்றாக சான்றுகளாக எடுத்து, எந்த நூலில், எந்தப் பக்கம், என்று
குறிப்பிட்டு ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி ஒருவர் விடாது பட்டியல்
இடவும்.

இதில் எத்தனை பேர் வானியல் அறிஞர்கள், அவர்கள் தைப்புத்தாண்டிற்கு


எழுதிய வானியல் அறிவியல் குறிப்புகளையும் சேர்த்து, ஒவ்வொன்றாக
வரிசைப்படுத்தி முறை கிரமப்படி காட்டவும். அதில் எவரையும் உங்கள்
பட்டியலிலிருந்து அகற்றாது செய்யவும்.அதில் தற்போதுள்ள மலேசிய
அறிஞர்களில், எத்தனை பேர் தகமை மிகு உலக வானியல் அறிவியல்
கட்டுரைகளை, அல்லது அறிவியல் சார்ந்த கட்டுரைகளை, உலக
சஞ்சிகையிலோ அல்லது ஒரு வானியல் அறிவியல் ஆய்வோ செய்து
வானியல் பட்டறிவுச் சான்றுகளோடு (scientific empirical evidence)
வெளியிட்டுள்ளனர் என்பதை காட்டவும்.

நீங்கள் பட்டியலிடும் பலரின் நூல்களை ஒன்றுவிடாது நானும்


கற்றிருக்கிறேன். எட்டுத்துக்காட்டாக தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்,
அறிஞர் திரு வீ.கா போன்றோர் நூல்கள் எனது உணர்வுகளில் இன்றும்
பசுமையாக நிறைந்து இருக்கின்றன. இதில் ஒருவரும் தை தமிழ்ப்புத்தாண்டு
(கவனமாக சொல்லைக் கவனிக்கவும் – இங்கு நான் பேசுவது , தொடராண்டு
அல்ல) என்று கூறியதாக தெரியவில்லை.
அப்படி செய்யாது, எழுத்து மேற்கோள் கண்ணியம் இல்லாது, நீங்கள்
செய்திருக்கும் நீண்ட பட்டியலில் தைப்புத்தாண்டைப் பேசாதவர்கள்,
வானியல் அறிவியல் தெரிந்தவர் தெரியாதவர், பெயர்களை எல்லாம்
இணைப்பது தங்களின் சுய விருப்பமல்லாது வேறு என்னவென்று
சொல்லுவது. இதுவரை தை தமிழ்ப்புத்தாண்டு பற்றி பேசாத, எழுதாத பலரை
அவர்கள் கூறியதாகச் சொல்லி, வலிந்து தங்களின் கொள்கைக்கு,
சுயவிருப்பிற்குப் பட்டியலிட்டு மக்களைக் கண்துடைப்புச் செய்வதை நாம்
எப்படி அழைப்பது? அதற்கு பெயர் என்ன? இதற்கு பெயர்தான் தமிழை
அரசியல் ஆதாயப் பொருள் ஆக்குதல் என்பதாகும்.

11) அதிலும் நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பலரில், எத்தனை பேர் வானியல்


அறிவியல் கற்றவர்கள்? அல்லது தைப்புத்தாண்டு வானியல் அறிவியல்
பற்றிய பெரும் கட்டுரைகளைப் படைத்தவர்கள் ? வானியல் தகைமைசால்
அறிஞர்களாக இல்லாவிடினும், யார் நுட்பமான புதிய தைப்புத்தாண்டு
தொடங்கும் வானியல் குறிப்புகளைப் பதிவுசெய்தவர்?

முதலில் நாம் உணரவேண்டிய, கற்க வேண்டிய ஒரே குறள்

*எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு (குறள் 423)*

அதை நாம் சரியாகச் செய்யாது இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற


வள்ளுவ மெய்ப்பொருள் காண் திறன் இழப்பது அறிவுடைமையன்றோ.

12) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில்(Scientific Task List), மிக முக்கியமாகச்


சேர்க்க வேண்டிய பணி, எல்லா சங்க கால வானியல் குறிப்புகளையும்,
ஆராய்ந்து, அதில் எப்படித் நீங்கள் குறிப்பிடும் புதிய தைப் புத்தாண்டு கால
அறிவியல் உள்ளன என்று குறிப்புகளுடன், சான்றாக எழுதவும்.
13) தற்போது தொல் தமிழர் உடு வானியல் சித்திரை கால கணிதத்தில் நானும்,
நீங்களும் சவாரி செய்வதால், அதை மறுக்க முயலும் தங்களுக்கு மறுதலிப்பு
எழுதும் சுமை அதிகம் என்பதால் தாங்கள் நீண்டு விளக்க முயலும் மற்ற
வானியல் விரிவுரைகளுக்கு, நான் கேள்வி கேட்டுத் தங்களுக்குப்
பணிபட்டியல்(Scientific Task List) உருவாக்கினால் அது மிக சுமையாகிவிடும்.
ஆகவே நமது வானியல் ஆய்வை ஒவ்வொன்றாகச் செய்ய கணித
விரிவுரையாளராக இருந்து முறையாக வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்.

தங்களின் புதிய தை தமிழ்ப்புத்தாண்டு அறிவியல் பணிபட்டியலை (Scientific ask


List) சரியாகச் அறிவியலாகச் செய்துவிட்டு உரிமையுடன், தைப்புத்தாண்டு
தான் தமிழ்ப்புத்தாண்டு. உண்மை அனைவருக்கும் பொது, ஆகவே அதை
ஏற்பதில் நமக்கு பெருமிதம். வெற்றி தோல்வி என்பதைவிட, தமிழின் வான்
அறிவியல் சிறக்க நாம் யாவரும் ஆங்கிலேயர்களுக்கு நிகராக செயல்படுவது,
தமிழுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீண்வாதங்களில் காலத்தைக்
கழிக்கத் அனைவருக்கும் நேரம் இல்லையென்பதால், மேற்கூறியவற்றைச்
செய்தப் பின்பு வாதவிவாதங்கள் அல்லாது, அறிவியல் தெளிவாக நமது
தமிழர் வானியல் ஆய்வை யாவரும் தொடர்வோம்.

ஆழ்ந்து சிந்தித்தால், முறையான, முழுமையான தமிழர் வானியல்


அறிவியல் சான்றுகளோடு (Proper Complete Tamilar Astronomical Scientific Evidence)

1. புறவயதன்மை (objectivity)

2. மெய்ப்பிப்பு திறன் (verifiability)

3. ஏற்புடமை (Reliability)

4. முறைமையில் நுண்கணித மானத்தில் , முறை முறை நுழைவு பெற


இயலுதல் (Systematic mathematical exploration)

5. சரிநுட்பம் (Precision)
6. துல்லியம் (Accuracy)

7. ஊகிப்பு அல்லது கணிப்பு திறன் (Predictability)

8. புலப்பாடு (Observability)

9. தமிழர் தொன்மை இலக்கிய அறிவியல் சான்றுகள் (Ancient Tamilar Scientific


Literature Evidences)

10. நுண் இயல்புடைமை (Abstractness)

வகையில், முழுமையாக ஆய்வு செய்து அறிவியல் வழியாக உறுதி


செய்யாது ( scientifically unverified ), தொல் தமிழர் உடு வானியல் சித்திரை கால
பெரும் அறிவியல் கணிதத்தில் அமர்ந்து சவாரி செய்து கொண்டு, எங்குமே
எதிலுமே ஒரு உறுதிபாடற்ற, முற்றிலும் அறிவியல் பின்புலம் அற்ற
தங்களின் புதிய தைத் திங்கள் புத்தாண்டு கருதுகோளை, பரப்புரை செய்வதை
நீங்களே நிறுத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். உலக வானியல்
அறிவுலகம் ஏற்கும் தகைமையுடைய தங்களின் ஒரு புதிய தைப்புத்தாண்டு
கணிதம் உருவாகும் வரை, இந்த பரப்புரையைத் தொடராமல் அமைதி காப்பது
நல்லது. இல்லையேல்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி வீழுமாறே


(திருமந்திரம் - 1680)

கதையாகிவிடும்.

தொல் தமிழர் உடு வானியல் சித்திரைப்புத்தாண்டை மீட்போம்,


தமிழர்களுக்கும், தமிழுக்கும் இழைக்கும் பெரும் வானியல் அறிவியல்
தீங்கை தடுப்போம்.
தங்களின் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி..

அன்புடன்,

முனைவர் இரா.சிவகுமார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்

You might also like