Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பணக்கார வாலிபன்

ஆசிரியை மாணவன் உரையாடல்

DECEMBER 31, 2023


GRF
GRF பணக்கார வாலிபன்

மாணவன்: gd mrng அக்கா

ஆசிரியை: gd mrng பவிசாந்த் இன்றைக்கு சண்டே ஸ்கூல் எல்லாம் எப்படி போச்சு


விளங்கிச்சா?

மாணவன்: ஓமக்கா நல்லா போச்சு எனக்கு ஒரு அக்கா சந்தேகம் அதான் கேட்போம்
என்று வந்தேன்.

ஆசிரியை: சொல்லுங்க பவித்சாந்த் என்ன சந்தேகம் தெரிஞ்சிருந்தா கட்டாயம்


சொல்றேன்.

மாணவன்: நேத்து நான் வேதம் வாசிக்கும்போது பணக்கார வாலிபனுடைய சம்பவத்தை


வாசிச்சன் அக்கா! அதுல எனக்கு சில சந்தேகம் இருக்கு

ஆசிரியை: சொல்லுங்க பவிசாந்த் அதுல என்ன சந்தேகம்?

மாணவன்: அந்த பணக்கார வாலிபன் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வந்து நல்ல


போதகரே என்று கூப்பிடுறான் இயேசு கிறிஸ்துவோ தானல்ல தேவன் ஒருவரே நல்ல
போதகர் என்கிறார். பின்பு அவன் தான் சிறு வயது முதலே வேதத்தில் உள்ள
கட்டளைகளை கடைபிடிப்பதாகவும் கீழ்படிவான வாழ்க்கை வாழ்வதாகவும் சொல்லி
பரலோக ராஜ்யத்தை அடைவதற்கான வழியை கேட்கிறான்.

ஆசிரியை: ஓம் பவிசாந் மிச்சத சொல்லுங்க

மாணவன்: ஆனால் இயேசு கிறிஸ்து அவனிடத்தில் உள்ள சொத்துக்களை விற்று


தரித்திரருக்கு கொடுக்கும் படியாக கூறுகிறார். அவனோ மனமுடைந்து கடந்து
போகிறான்

ஆசிரியை: ஓம் பவிசாந்த் இதுல உங்களோட சந்தேகம் என்னவென்டு சொல்லுங்க!

மாணவன்: என்னுடைய சந்தேகம் என்னவென்டா.. ஏன் இயேசு கிறிஸ்து அவன


தன்னோட சேர்த்துக் கொள்ளல? அவன் எல்லாம் சரியா செய்தான் தானே?

ஆசிரியை: அதுதானா உங்களுடைய சந்தேகம்? நல்லது பவி. முதலில் அந்த பணக்கார


வாலிபனுடைய மனநிலை பற்றி பார்ப்போம். அவன் முதலில் இயேசு கிறிஸ்துவானவரை
நல்ல போதகரே என்று அழைக்கிறான் அதை இயேசு கிறிஸ்துவானவர் மறுப்பதை
காணலாம்.

மாணவன்: ஆமாம் அது ஏன் இயேசு கிறிஸ்துவானோர் அப்ப நல்ல போதகர் இல்லையா?

ஆசிரியை: அப்படி இல்லை இயேசு கிறிஸ்துவானவர் அந்த வாலிபனுடைய மனநிலையை


அறிந்திருந்தார் அவன் அவரை புகழ்ச்சியாக பேசுவதன் மூலம் தன்னுடைய
காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றான். அதை தேவன்
அறிந்திருந்தார். அத்தோடு பிதாவை மகிமைப்படுத்தும் விதமாகவும் பிதாவைப் பற்றிய
தெளிவு கிடைக்கும் படியாகவும் அப்படி கூறுகின்றார்.

மாணவன்: அப்படியா அக்கா ! அதனால்தான் அப்படி சொல்கிறார். இப்போதுதான்


விளங்கிச்சு.

1|Page
GRF பணக்கார வாலிபன்

ஆசிரியை: ஓம் பவிசாநத் ! இப்போது அடுத்த கருத்துக்களை பற்றி பார்ப்போம்

மாணவன்: சரி அக்கா கொஞ்சம் சொல்லுங்க கேட்போம்

ஆசிரியை: அவன் தான் சிறு வயது முதல் எல்லாவற்றிலும் சிறப்பானவனாக


நல்லவனாக காணப்படுவதால் அதற்கான ஒரு அங்கீகாரமாகவே பரலோக ராஜ்யத்தை
கேட்கிறான். அதாவது தான் அந்த பரலோராட்சியத்திற்கு போகும் அளவு தகுதி
உள்ளவனாக உள்ளேன் ஆகவே அதை கேட்கலாம் என்று அவன் நம்புகிறான். ஆனால்
அது அப்படி அல்ல.

மாணவன்: அப்படி என்றால் எப்படி அக்கா ? நல்லவனாக தானே இருக்க வேண்டும் ?


அப்படி என்றால் நல்லவனாக இருப்பது முக்கியம் இல்லையா?

ஆசிரியை: அப்படி இல்ல பவிசாந்த்! நல்லவனா இருக்க வேண்டும் தான்! அது கட்டாயம்
தான். ஆனால் இந்த உலகத்தில் எந்த மனிதராலும் முழுமையான நல்லவராக இருக்க
முடியாது என்பதை வேதம் சொல்லுகிறது! அப்படி முழுவதும் நல்லவர் என்று
சொல்வார்களானால் அது பொய்யாகவே இருக்கும். அத்தோடு எம்முடைய செயல்கள்
சற்று சரியாக இருப்பதால் மாத்திரம் பரலோகத்திற்கு தகுதி உடையவர்களாக நாம்
ஆகிவிட முடியாது. நாம் பாவத்திலேயே முழுமையாக விழுந்த ஆதாமின் சந்ததிகளா
இருக்கிறோம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாணவன்: அப்படி என்றால் அக்கா?

ஆசிரியை: எமது நல்ல செயல்களிலும் கூட சில சுயநலன்களும் பாவமும்


படிந்திருக்கிறது. ஒரு விடயத்தை செயலாக செய்யாவிட்டாலும் நம்முடைய
இருதயத்தில் நினைத்தாலே பாவமாகத்தான் இருக்கிறது இன்று இயேசு
கிறிஸ்துவானவர் தெளிவுபடுத்துகிறார்.

மாணவன்: அதுவும் சரிதான் அக்கா . நம்ம கை சாகப்போல மனச கட்டுப்படுத்த


முடியிரல்லதானே கோபம் பொறாமை எல்லாம் நம்மள அறியாமலே வந்துடுது.

ஆசிரியை: ஆம் பவித்சாந்த்! அது உங்களுக்கு தெரிந்திருக்கிறது நல்லது! அதோட


அப்படி நல்ல செயல்களால் நாம் பரலோக ராஜ்யத்தை சென்றடைய முடியும்
என்றிருந்தால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் விருதாவாய் இருக்குமே.
பிதாவானவர் குமாரனை அறையும்படியாக ஒப்புக்கொடுக்க வேண்டி இருந்திருக்காதே.
அப்படி அல்ல பவிசாந்த்!

மாணவன்: கொஞ்சம் புரியவில்லை அக்கா ஏதாச்சும் ஒரு உதாரணம் சொல்லுங்களன்.

ஆசிரியை: சரி பவிசாந்த் ஒரு உதாரணம் சொல்கிறன். ஒரு குற்றவாளி இருக்கிறான்


அவன் தவறு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அவன் அந்த
தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவனுக்கான பிணையை ஒருத்தர்
வழங்க வேண்டும்... அந்தப் பினையை அதே சிறைச்சாலையில் உள்ள இன்னொரு

2|Page
GRF பணக்கார வாலிபன்

கைதியினால் வழங்க முடியுமா? அல்லது அவனுக்கு அவனே வழங்கிக் கொள்ள


முடியுமா? அது சாத்தியமான விஷயமா?

ஆசிரியை: இல்ல அக்கா அது சாத்தியம் இல்லையே. குற்றவாளியே குற்றத்துக்கு


பிணையாக போக முடியாதே!

ஆசிரியை: ஆம் அது போல் தான் பாவ சந்ததியாகிய எமக்குள் பிறக்கும் போதே பாவம்
காணப்படுகிறது. எமது அன்பு கருணை செயல்கள் என பலவற்றில் பாவம்
படிந்திருக்கிறது. ஆகவே பாவியா இருக்கும் எம்மை பாவியாகிய இன்னொரு
மனிதனாலோ எம்முடைய செயல்களாலோ மீட்டுக் கொள்ள முடியாது ஏனெனில் நாம்
ஏற்கனவே தண்டனைக்குரிய குற்றவாளி போலவே இருந்தோம். அதற்காகவே பாவம்
அறியாத இயேசு கிறிஸ்துவானவர் மனிதராய் பிறந்து எமக்காக இரத்தம் சிந்தி
எமக்கான தண்டனையை அவர் மீது ஏற்றுக் கொண்டார். ஆனால் அந்த வாலிபனோ
தன்னுடைய செயல்களால் பரலோகத்தை அடைந்து விட முடியும் என்று எண்ணிக்
கொண்டிருந்தான்.

மாணவன்: ஆமாக்கா இப்போது புரிகிறது. அப்படியெ ன்றால் அவனுடைய அந்த


எண்ணம் நிச்சயமாக தவறுதான். எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் அக்கா அவன்
பணக்காரனா இருந்தான் அது தவறா கிறிஸ்தவர்கள் பணக்காரராக,கற்றவர்களாக
இருக்கக் கூடாதா? அது பாவமா?

ஆசிரியை: இல்லை பாவிசாந் நிச்சயமாக இல்லை கிறிஸ்தவர்கள் நல்ல


உழைப்பாளிகளாக இருக்க வேண்டும் என தேவன் எரும்பினிடத்தில் அதை கற்றுக்
கொள்ள சொல்கிறார். கிறிஸ்தவர்கள் கடன் வாங்குகிறவர்களாக இல்லாமல்
கொடுக்கும் இருக்க வேண்டும் என வேதம் சொல்கிறது.

மாணவன்: ஆமாக்கா நானும் அவற்றை சில இடங்களில் வாசித்துள்ளேன்.

ஆசிரியை: நல்லது பவி . ஆகவே கிறிஸ்தவர்கள் சம்பாதிப்பதும் கற்பதோ தவறில்லை


நல்லதுதான் .இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் ஆகிய நீங்கள் பெற்றோருக்கு
கீழ்ப்படிந்து கற்பது தேவனுடைய கட்டளையாகும். ஆனால் தேவன் எதிர்பார்ப்பது
என்னவென்றால் அவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையே!.

மாணவன்: அப்படி என்றால் அக்கா எனக்கு விளங்கவில்லை அந்த வாலிபன்


எவ்விதமாய் அதை கொடுக்காமல் காணப்பட்டான் .

ஆசிரியை: பணமோ கல்வியோ உலகில் உள்ளே எதுவானாலும் சரி அது தேவனை


பார்க்கிலும் உங்களுக்கு முக்கியமான ஒன்றாக காணப்பட்டால் அல்லது உங்கள்
ஆத்மாவையும் சரீரத்தையோ அளிக்கும் விதமாய் உங்களை பாவத்தின் பக்கம்
இழுக்க பயன்படுத்தப்பட்டால் அது எதுவானாலும் தவறு. அந்த வாலிபனும்
தேவனுடைய ராஜ்யத்தை பார்க்கிலும் தன்னுடைய செல்வமே முக்கியம் என்றிருந்தான்
அதுவே தவறு.

மாணவன்: அப்படி என்றால் எப்படி இருக்க வேண்டும் அக்கா?

ஆசிரியை: நாம் எதைச் செய்தாலும் தேவனை மகிமைப்படுத்தும் எண்ணம்


உடையவர்களாக காணப்பட வேண்டும். களியாட்டங்களுக்கும் சுயநலப் போக்கும்

3|Page
GRF பணக்கார வாலிபன்

செல்வன் பயன்படுத்தவர்களாக இல்லாமல் திக்கற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும்


உதவும் விருப்பம் கொண்டவர்களாய் காணப்பட வேண்டும். எந்த உயரத்தில் இருந்தாலும்
உலகில் உள்ள எல்லாவற்றையும் பார்க்கிலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்க
வேண்டும்.யோசேப்பு யோபு போன்ற பலருடைய வாழ்க்கையில் நாம் பார்க்கையில்
அவர்கள் செல்வத்திலும் உயர்விலும் தாழ்விலும் தேவனுக்கே முன்னுரிமை
கொடுத்தார்கள். அவ்விதமாய் நாமும் தேவனுக்கே முக்கியமும் மகிமையையும்
கொடுக்க வேண்டும்.

மாணவன்: ஆமாக்கா நானும் அவற்றை வாசித்துள்ளேன் . யோபு தன்னுடைய


எல்லாவற்றையும் இழந்த போதும் தேவனை மகிமைப்படுத்தியது பற்றி வாசித்துள்ளேன்.
அவனோட விசுவாசம் அது எனக்கு ஆச்சரியமா இருந்தது.

ஆசிரியை: ஆமாம் தேவன் அவ்விதமான விசுவாசத்தையே நம்மிடத்திலும்


எதிர்பார்க்கிறார்.கிறிஸ்தவ பிள்ளைகளாக வளர்க்கப்படுகிற நீங்கள் பெற்றோருக்கு
கீழ்ப்படிந்து கற்று அந்த ஞானத்தை தேவனுக்கு பிரியமான வகையில் அவருடைய
வார்த்தைகளை உலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
அதுபோல் உலக களியாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களா இல்லாமல்
திக்கற்றவர்களையும் வேலைகளையும் தாங்கும் எண்ணம் உடையவர்களாகவும்
விருப்பமுடையவர்களாகவும் காணப்பட வேண்டும்.அந்த வாலிபனை போல்
உங்களுடைய செயல்களில் பெருமை பாராட்டாமல் அவரே சிலுவையில் அரையத்
தன்னை ஒப்புக்கொடுத்து நம்மை பாவத்திலிருந்து மீட்டுக் கொண்டார் என்பதை
ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நாமும் நம்முடைய செயல்களோ அல்ல! அவரே
நம்மை மீட்டுக் கொண்டார்.

மாணவன்: ஆமாக்கா எனக்கும் அவ்விதமாய் இருக்க விருப்பம் தான் தேவன் எனக்கு


அதற்கு பலம் தருவாராக.

ஆசிரியை: நல்லது தம்பி தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

மாணவன்:

கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும்


கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டல்
எங்கே? அது நீக்கப்பட்டதே ! எந்தப் பிரமாணத்தினாலே?
கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே !

ரோமர் 3:26-27

ஆமென்

4|Page

You might also like