Q&A in Hinduism for Tamil Malar - 00 - சித்திரைப் புத்தாண்டு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 24

ஆ ýÁ¢¸õ «È¢§Å¡õ!

¾Á¢ú ÁÄ÷ இந்து சமயக் கேள்வி-பதில் (14/01/2018)


பதில் - Dr.மு.பாலதர்மலிங்கம், MBBS, MSc, PhD;
சித்திரைப் புத்தாண்டு ஒரு தமிழர் சமயத் திருவிழா
1. Dr. மகிழோன் ஞானக்குமரன், தாப்பா, §Àáì.
கேள்வி: சித்திரைப் புத்தாண்டு குறித்து தெளிவான விளக்கம் தரவும்.
பதில்: தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான
பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழ் நாட்காட்டி
இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி
என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேடத்தில் சூரியன்
நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேடமே முதல்
இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர்.
எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம்,
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே
தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின்
திருக்கோணேச்சரம், 1622 ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு
அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்கின்றன.
மரபுகள்
தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும்,
அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள்,
வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த
தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில்
காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில்
நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர்.
மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை
பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது
தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன்
அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது
குறிப்பிடத்தக்க மரபாகும்.
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில்
வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின்
தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி
அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது
கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு
அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.
போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல்,
கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து,
நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக்
கலையாடல்கள் ஆகும்.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும்
என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும்
கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும்
மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும்
என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
தைப்புத்தாண்டு சர்ச்சை
தைப்புத்தாண்டு
முதன்மை கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து
தமிழ்நாட்டில் 1970, 80 களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய
காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத்
தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981 இல் மதுரை
உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள்
போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர்
திருநாள் தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு
தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை
முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம்
நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால்
ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக
அறிவிக்கப்பட்டது.
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன்
கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு
செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும்,
சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும்,
புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில்
எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை
தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு
விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப்
பாடவில்லையென்றும், 1921 இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு
இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில்
எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில்
வைக்கப்படவில்லையென்றும் 1921 இல் மறைமலையடிகள் இலங்கையில்
தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள்
எழுந்தன.
வடமொழி அறுபது ஆண்டுகள்
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை
உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று
அறியப்பட்டது. சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ
இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக்
குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே
தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில்,
14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது
சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள்
பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப்
பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின்
தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த
வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின்
பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது
பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால்
தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.
பங்குனி விழா
உறையூரில் பங்குனி விழா நடந்தது. இதனை,
‘‘வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடும் கள்ளின் உறையூ ராங்கண்
வருபுனல் நெரிதரும் இடுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தன்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்’’ (அகம்., பா.எ., 137)
என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
வெறியாட்டு விழா
பண்டைய நாளில் பெருவழக்காக இருந்தது வெறியாட்டு விழாவாகும்.
முருகனுக்காக எடுக்கப்பட்ட இவ்விழாவில் வேலன் கையில் வேலேந்தி
ஆடுவான். இன்னிசைக் கருவிகள் முழக்கப்படும்; தினையரிசியையும்
மலர்களையும் தூவுவர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் குருதியைச் சிந்துவர்.
இவ்விழாவைப் பற்றிய முழுவிவரம் திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகிறது.
ஊர்தோறும் இவ்விழாவினைக் கொண்டாடினர்; என்பதனை,
‘‘சிறுதினை மலரொடு சிரைஇ மறியறுத்து
வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ
ஊருர்; கொண்ட சீர்;கெழு விழவினும்’’ (திருமுருகாற்றுப்படை 218-220-வது
வரிகள்)

என்னும் திருமுருகாற்றுப்படைப் பகுதியால் அறியலாம்.


காஞ்சிபுரம் சமய விழாக்கள் பெருகிய நகரமாக விளங்கிற்று. சமயப்பிரிவினர்
பலரும் தத்தம் சமயக் கடவுளரை வணங்க விழாவெடுத்தனர் என்பதனை,
‘‘பலர் தொழ விழவுமேம்பட்ட பழவிரல் மூதூர்’’
என்னும் பெரும்பாணாற்றுப்படை பகுதியால் அறியலாம். விழா நடத்தும்பொழுது
அதற்கெனக் கொடிகள் பல ஏற்றப்பட்டதுண்டு.
‘‘சாறு அயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி’’ (மதுரைக்காஞ்சி 366-வது வரி)
வெறியாட்டின் போதும் பிற விழாக்களின் போதும் இன்னிசைக் கருவிகள்
முழங்க ஆடலும் பாடலும் நிகழ்வது வழக்கமாக இருந்தது.
‘‘வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவயரு வியலாவணத்து’’( பட்டினப்பாலை, 155-158 வது வரிகள்)
என்பது சான்றாக அமைகிறது.

வெறியாடும் இடம் வெறியர் களம் எனப்பட்டது. காலம் நள்ளிரவு, வேலன் என்ற


தன் பூசாரி மீது முருகன் ஆவியுருவில் குறி சொல்வான் என்று மக்கள்
நம்பினர். இதனை,
‘களம்நன் கிழைத்துக் கண்ணிசூட்டி
வளநகர; சிலம்பப் பாடி பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்’’ (அகம்., பா.எ., 22)

என்று அகநானூறு கூறுகிறது.


புதுமணல் பரப்புதல்
விழாக்களிலும் சடங்குகளிலும் புதுமணல் பரப்புதல் வழக்கமாக இன்றும் பல
இடங்களில் உள்ளது. இவ்விழாவிற்குப் புதுமணல் பரப்பிய செய்தியை,
‘‘பூந்தொடை விழவின் தலைநாளன்ன
தருமணல் நெமிரிய திருநகர்; முற்றம்’’ (அகம். , பா.எ. , 187)
என்று அகநானூறு கூறுகிறது.
கொடி ஏற்றுதல்
இன்றும் பல கோவில்களில் கொடியேற்றத்துடன் விழாக்கள்
ஆரம்பிக்கப்படுகின்றன. சங்க காலத்தில் விழாவின் போது கொடி ஏற்றியதை,
‘‘சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி’’ (மதுரைக்காஞ்சி., 366-வது வரி)
என்று மதுரைக்காஞ்சியும் குறிக்கின்றது. விழாவிற்கு நிமித்தம் பார்த்துப்
புறப்பட்ட செய்தியைக் குறுந்தொகை கூறுகிறது (குறுந்தொகை, பா.எ. , 233).
பிறை வழிபாடு
அக்காலம் முதல் இக்காலம் வரை பிறை வழிபாடு நிகழ்கின்றது. இந்து
மதத்தவர் அன்றி இஸ்லாமியர்களும் வளர்பிறை வழிபாட்டினைச்
செய்கின்றனர். இவ்வழிபாடு மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம்
முடிய வேண்டும் என எண்ணிப் பிறையைத் தொழுதனர். இம்முறை சங்க
காலத்தில் இருந்துள்ளமையை அகநானூறு காட்டுகிறது.
‘‘ஔஇழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை யாம்இவன் ஒழிய’’ (அகம்., பா.எ., 239)
என்ற வரிகளில் ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மாலை
நேரங்களில் பிறையினைத் தொழுதனர் என்ற செய்தி தெரியவருகின்றது.
கடல் தெய்வ வழிபாடு
நான்கு வகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தற் நில
மக்கள் மீன் பிடித்தும், உப்பு விற்றும் வாழ்க்கையை நடத்தினர். இவர்களது
வாழ்க்கை கடலை நம்பி இருந்தமையால், இவர்கள் அக்கடலைக் கண்கண்ட
தெய்வமாக எண்ணி வழிபடலாயினர்;. இந்நில மகளிர்கள் தங்கள் ஆடவர்கள்
நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்து எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல்
விரைவிலேயே அவர்கள் மீன்களோடு வீடு திரும்ப வேண்டும் என்று
கடலையே பெண்ணாகப் பாவித்து, கடல் தாயை வழிபட்டு ஆடவர்கள் வீடு
திரும்பும் வரை ஆற்றியிருப்பர்.
சங்க காலத்திலும் இக்கடல் தெய்வ வழிபாடு நிகழ்ந்துள்ளமையை,
‘‘பழையர் மகளிர் பனித்துறைப் பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு’’ (அகம்., பா.எ., 201)

என்ற அகநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம். மீனவர்களின் தெய்வமான


கடலினை, பெண்கள் யாவரும் கடற்கரையில் ஒன்று கூடி நின்று வழிபாடு
நிகழ்த்தினார்;கள் என்பதையும் அறிய முடிகிறது. இவ்வழிபாடு சங்க
காலத்தேயன்றி இக்காலத்திலும் நெய்தற் நிலப் பகுதிகளில் மீனவர்
வாழ்க்கையில் காண முடிகிறது.
பாவை வழிபாடு
பாவை வழிபாடு என்ற ஒரு வழிபாடும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளமையை,
‘தைஇ நின்ற தண்பெயல் கடைநாள் வண்டற் பாவைஉணர்;துறைத் தரீஇத்
திருநுதற் மகளில் குரவை அயரும்’ (அகம்., பா.எ., 269) என்ற பாடலால்
அறியலாம். அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட
நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல்
விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர்,
உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக்
கூத்து ஆடுவர். இந்நிகழ்வே பண்டைய பாவை வழிபாடு எனப்பட்டது.
இவ்வழிபாடு பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என்று மாறியது.
திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பக்தி இலக்கியங்கள் கூட இவை சார்ந்து
தோன்றியவை ஆகும்.

மஞ்சள் நீர் விளையாட்டு அல்லது மஞ்சள் நீராட்டு என்பது நாட்டுப்புறங்களில்


கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். மஞ்சள் நீராட்டு அன்று முறைமாமன்
மேல் முறைப்பெண்ணும், முறைப்பெண் மேல் முறைமாமனும், திருமணம்
ஆனவர்கள் நாத்துணைப் பெண்கள் மீதும், அரைத்த மஞ்சள் கலந்த நீரை
ஊற்றி மகிழ்வர். இக்கொண்டாட்டம் மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் எனவும்
அழைக்கப்படுகிறது. தமிழ் மக்களின் பண்டையகால விழாக்களில் இதுவும்
ஒன்று. தமிழ்நாட்டில் பருவப் பெண்களும் ஆண்களும் தன் உரிமையைக்
காட்டும் வகையில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவர்.
கொண்டாட்ட விதிமுறைகள்

மஞ்சள் நீர் விளையாட்டில் பெண்கள் ஆண்களின் மீது மஞ்சள் நீர்


ஊற்றலாம். ஆனால், ஆண்கள் பெண்கள் மீது ஊற்றுவது கிடையாது.
ஆண்கள் பிற ஆண்களின் மீது ஊற்றலாம். பெண்கள் பிற பெண்கள் மீதும்
ஊற்றுவது கிடையாது. இவ்விழாவின் போது இசைக் கருவிகள் வாசிப்பவர்கள்
மீது மட்டும் மஞ்சள் நீர் ஊற்றப்பட மாட்டாது; ஏனைய அனைத்து ஆடவரின்
மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படும்.

பெரும்பாலும் அண்ணன், தம்பிமார் மீது பெண்கள் ஊற்ற மாட்டார்கள்.


மச்சான்கள் அல்லது முறை மாமன்கள் மீதே இம்மஞ்சள் நீரை ஊற்றுவர்.
ஆண்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் மீது இம்மஞ்சள் நீரை
ஊற்றி விளையாடுவர். மஞ்சள், தண்ணீர், வேப்பிலை உள்ளிட்டவை
இக்கலவையில் இருக்கும். பிற வண்ணங்களைக் கலப்பதும் தற்போது
நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் பிற வண்ணங்கள் கலப்பது தடை
செய்யப்பட்டுள்ளது.
விழாக் காலம்
வளத்தூர் திருவிழா - மஞ்சள் நீர் விளையாட்டு

மஞ்சள் நீர் விளையாட்டு பல்வேறு நாட்களில், பல்வேறு இடங்களில் உள்ள


மக்களால் கொண்டாடப்பட்டாலும் கோவில் விழாக்களின் போது மட்டுமே
அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஊர்த்திருவிழா முடிந்த பின்னர் சாமியைக்
குடிவிடும் நாளில் இது நடைபெறும். சில ஊர்களில் தைம்மாதம் மூன்றாம் நாள்,
காணும் பொங்கல்[2] சில இடங்களில் அம்மன் திருவிழாக்களிலும்[3]
திருநாளைக் குடி விடுவதாக எண்ணி மஞ்சள்நீர் ஊற்றுவதும் உண்டு. ஈரோடு
மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாரியம்மன் கோவில்
விழாவின் போது, கம்பம் எடுக்கும் விழாவுடன் இணைந்து
கொண்டாடப்படுகிறது.[4] பிற உள்ளூர் திருவிழாக்காலங்களிலும்[5] மஞ்சள்
நீராட்டு நடைபெறுகிறது. இவ்விழா தனி விழாவாக இல்லாமல்[4][2][3]
கடவுளின் உருவச்சிலை அல்லது கடவுள் சார்ந்த பொருட்களின் ஊர்வலத்தின்
போது இவ்விழா கொண்டாடப்படுகிறது.[4][2][3]
வண்ணங்கள்
தற்போது இவ்விழாவில் மஞ்சள் மட்டுமல்லாது பிற வண்ணங்கள் தரக்கூடிய
பொடிகளையும் தண்ணீரில் கலந்து ஊற்றுகின்றனர். வட மாநிலங்களில்
நடைபெறக்கூடிய ஹோலி பண்டிகை இதனை ஒத்தவகையில் உள்ளது.
மஞ்சள்நீரைப் பீச்சனாங்குழாய் மூலம் பீச்சி விசிறுவதும் உண்டு. சிலர்
மஞ்சள் நீரில் பாக்குச் சாயம் கலந்தும் விசிறுவர்.
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை என அழைக்கப்படும் அரவாணிகளின் வாழ்க்கையில் மிக
முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே
கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த
ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று
கொண்டாடப்படுகிறது.

இந்துக் காலக் கணிப்பு முறை


இந்துக் காலக் கணிப்பு முறை சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு
முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச்
சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக்
கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை
அடிப்படையாகக் கொண்டது. பண்டைக்கால இந்திய வானியல் அறிவைப்
பயன்படுத்தி உருவான இந்துக் காலக் கணிப்பு முறை இந்தியாவில்
மட்டுமன்றிப் பல அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருக்கும் மரபுவழிக் காலக்
கணிப்பு முறைகளுக்கு மூலமாக உள்ளது. இந்துக் காலக் கணிப்பு முறை என்ற
ஒரே தொடரால் குறிக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரே அடிப்படையையும்
அவை புழக்கத்திலுள்ள பகுதிகளின் பண்பாடுகளுக்கு ஏற்பத் தனித்துவமான
கூறுகளையும் கொண்ட பல முறைகளின் தொகுப்பு ஆகும்.
இந்தியக் காலக்கணிப்பு முறை சுழல்முறைக் காலக் கருத்துருவை (Concept)
அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு
முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிந்து மீண்டும்
ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும்
காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே
சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப்
புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய
காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம்
காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின்
ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத்
திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி
கணக்கிடப்படுகின்றது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும்.
உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல
ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த
தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை
அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று
புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக்
கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள்
இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன.
இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன்
இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை
பண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும்
வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின்
இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின்
இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது.
சூரிய மாதம்
சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை
அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து
பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு
ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின்
தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees)
அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள்
எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம்
முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம்
செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும்
வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.
சந்திர மாதம்
ஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில்
வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக்
கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேட இராசியில் பயணம்
செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம்
வரும் என்பதால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம்
சித்திரையாகும்.
தற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே
பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய
மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
மாதப் பிறப்பு
சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய
மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும்
சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந்
நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும்,
சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன.
இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு
விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும்
ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட
நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான
காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி
ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும்
நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும்
நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும்
வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும்
இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல்
நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய
உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக்
கொள்ளப்படும்.
மாதப் பிறப்பு
சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய
மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும்
சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந்
நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும்,
சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன.
இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு
விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும்
ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட
நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான
காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி
ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும்
நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும்
நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும்
வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும்
இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல்
நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய
உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக்
கொள்ளப்படும்.
பெயர்க் காரணம்
சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்,
எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும்
வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில்
அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக்
கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ்
மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின்
பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக்
காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள
உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை
உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த
பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச்
செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத்
தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும்
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது
காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும்
அறிய முடிகிறது.
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த
நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு
இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை
நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும்
வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட
நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு
சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த
தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

தமிழகம்- தமிழர் விழாக்கள்

1. தைப்பொங்கல்
2. அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
3. இந்திர விழா
4. கள்ளர் வெட்டுத் திருவிழா
5. கூட்டாஞ்சோறு
6. சித்திரைத் திருவிழா
7. தமிழ்ப் புத்தாண்டு
8. தைப்பூசம்
9. பத்திரகாளி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்
10. பாரதம் படித்தல்
11. புரவியெடுப்பு
12. பூச்சொரிதல் திருவிழா
13. வெறியாட்டு
14. வேனில் விழா

1. தைப்பொங்கல்
பொங்கி பகிர்ந்து உண்ணல், உறவுகளை காணுதல்
2. அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில்
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது
தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில்
கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை
மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்
திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில்
பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத்
திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

2.1. திருவிழா வழக்கம்


அழகர் கோவில்
சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில்
பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம்
நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை
மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள்
மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த
அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு
திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.

2.2. சமய ஒற்றுமையாக்கம்


இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம்
என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும்,
ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத்
திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி
சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும்
விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்
நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும்
ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை
ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா
மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர்
தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம்
முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும்
புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர்
வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும்.
3. இந்திர விழா
இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில்
கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம்
அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப்
பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு
நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.
இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும்
கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா
சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக்
காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா,
இருபத்தெட்டு நாள் நாளேழ் நாளினு நன்கறிந்தீர் எனக் குறிப்படுவர்.
அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.
3.1. தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா
தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை
தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா
அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில்
வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு,
இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து
பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும்
செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக
இருந்தது என அறியலாம்.
4. கள்ளர் வெட்டுத் திருவிழா
கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த
திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு
அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் அய்யனார்
கோவிலில் கூடுகிறார்கள். இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம்
குதிரைமொழியில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.
4.1. வரலாறு
பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை
மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல
இறப்புகளும், பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் அதற்காகவே இக்கள்ளர்
வெட்டுத் திருவிழாவை மறவர்கள் விரும்பி நடத்துவதாகவும் தெரிகிறது.
மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலிலுள்ள பொன்னையும்,
பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதை கண்டு அவர்கள் மீது
தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா
நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர்
வெட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் கருப்பொருளை
மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைக்காலங்களில்
இருக்கின்றன.
4.2. திருவிழா
கோயிலின் முன்னே உள்ள தேரிப்பகுதியில் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம்
பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து
நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்படும். பின்பு பக்தர்கள் அங்கிருந்து
புனித மண் எடுத்துச் செல்கின்றனர்.
5. கூட்டாஞ்சோறு
கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா.
5.1. பிள்ளைகள்
குழந்தைகள் இவ்வாறு பெரியவர்கள் உண்பதை விளையாக நடித்து
விளையாடுவதும் உண்டு. இதனைச் சில பிள்ளைத்தமிழ் நூல்கள்
சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளன.
5.2. விழாக்கள்
முனியனார் போன்ற படைப்புத் தெழ்வங்களை வழிபடும்போது பல குடும்பங்கள்
ஒன்று சேர்ந்து ஒரே பொங்கலாக வைத்துப் படைத்துக் கூட்டாக உண்ணும்
வழக்கம் நாட்டுப்புறங்களில் உண்டு. இது கூட்டாஞ்சோறு பழக்கத்தின்
எச்சமிச்சம்.
5.3. அரசன்
அரசன் பெருஞ்சோறு வழங்குவது இதனோடு எண்ணிப்பார்க்க வேண்டிய
ஒன்று.
5.4.திருப்பாவை
ஆண்டாள் தன் தோழிமாரோடு கூடிக் கூட்டாஞ்சோறு உண்டதைக்
குறிப்பிடுகின்றாள்.
“ பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” - திருப்பாவை 27

6. சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான
சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள்
கொண்டாடப்படும் விழாவாகும்.
6.1. மதுரை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என
சமயங்கள் தொடர்புடையதாகவே மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.
சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர்
திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரு
விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த
அழகர் ஆற்றில் இறங்கும் விழா, மதுரையில் வைகை ஆற்றில்
இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை
மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு
வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து
அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில்
மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில்
எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த
பழைய புராணம்.
6.2. வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன்
கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம்
கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை
தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பொதுவாகவே
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த சித்திரை மாதத்தில்
கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். வெப்பம் மிகுந்த இந்தகாலத்தில்
வைரஸ் கிருமியினால் ஏற்படும் அம்மைத் தொற்று அதிகம். அந்த வைரஸ்
கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
அதனால் தான் தமிழ் மக்கள் வேப்பிலை மரத்தை தெய்வமாக வழிபட்டனர்.
கூழ்வார்க்கும் திருவிழாவின்போது வேப்பிலையினால் தோரணங்கள்
கட்டியதுடன் அம்மை நோய்க் கண்டவர் இருப்பவர் வீட்டில் வேப்பிலையைச்
சொருகியும் வைத்தார்கள். கேழ்வரகு தானியம் அதிக நார்ச்சத்து மிகுந்த
உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்ற நல்ல சத்தான தானியம் என்பதால் வெயில்
அதிகமான இந்த நாட்களில் கேழ்வரகினால் கூழ் செய்து அம்மனுக்கு
படைத்து அதனை ஏழை எளியோருக்கு ஊற்றினார்கள்.
இந்தச் சித்திரையில் பிள்ளைப் பிறந்தால் வெப்பத்தின் தாக்குதல்
குழந்தையைப் பாதிக்கும் என்பதால் தான் ஆடி மாதத்தில் புதுமணத்
தம்பதிகளுக்கு தடா போட்டு பிரித்து வைத்தார்கள். ஆனால் ஆடி மாதம் ஒரு
அற்புதமான மாதம். குல தெய்வ வழிபாடு நடத்துவதற்காகவே இருக்கின்ற
மாதம் இது. பெரிய நகரங்களில் வாழ்பவர்கள் கூட ஆடிமாதம் என்றால்
எவ்வளவு தூரமாக இருந்தாலும் எத்தனை பணிச்சுமை இருந்தாலும் பேருந்து
போகாத குக்கிராமமாக இருந்தாலும் தன் முன்னோர்கள் வழிபட்ட குல
தெய்வத்தை சென்று வழிபடுவார்கள்.
கார்த்திகை விழா
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது
கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று
நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க
சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’
என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை
விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால்
அழகுறுத்தப் பெற்றமையை,
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட
விளக்குப் போல் தோன்றியதாக,

‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்


பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில்மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல்மலையிறந்தோரே’’ (அகம்.,பா.எ., 185)
என்ற செய்யுள் பேசுகின்றது.
திருவோணம்
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில்
கொண்டாடிய விழா ஓண விழாவாகும். இதனை,
‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக்காஞ்சி. 590-591-வது வரிகள்)
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள்
நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித்
திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில் கேரள மாநிலத்தில்
வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது
நோக்கத்தக்கது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக்
குறிப்பிடுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது
ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.
அடுத்து கார்த்திகை, கடவுளை தீபத்தால் வழிபாடு செய்யும் மாதம் இது.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. தில்லைக் கூத்தனை தரிசித்தால் முக்தி.
ஆனால் திருவண்ணாமலை மட்டும் நினைத்தாலே முக்தி. மலையே
மகேசனாக கோயில் கொண்டுள்ள தலம் நம்முடைய திருவண்ணாமலை.
இந்த கார்த்திகை மாதத்தில் தினமும் காலையும் மாலையும் தங்கள்
இல்லத்துக்கு வெளியில் தீபம் ஏற்றுவார்கள். தமிழர்களின் பரந்த மனப்பாங்கு
இந்த வழிபாட்டில் தெரியும். பொதுவாக கார்த்திகை மாதத்தில் பகல் நேரம்
குறைவு. இரவு நேரம் அதிகம்.
இப்போதுள்ள மின்சார விளக்குகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இந்த
விளக்குகள் தான் சாலையில் செல்லும் வழிபோக்கர்களுக்கு விளக்காக
பயன்பட்டது. விளக்கு ஏற்றுவதற்கு அகல், எண்ணெய், திரி, நெருப்பு ஆகிய
நான்கும் தேவை. அதுபோல இல்லற வாழ்விற்கு அறம் பொருள், இன்பம், வீடு
என்ற நான்கும் தேவை என்பதை இந்த விளக்கு மறைமுகமாக
உணர்த்துகிறது.
மார்கழி:
பன்னிரு மாதங்களில் மகத்துவம் நிறைந்த மாதம் மார்கழி. ஓங்கி உலகளந்த
உத்தமனாய் நின்ற கண்ணனே தனது பகவத்கீதையில் மாதங்களில் நான்
மார்கழி என்று கூறியதிலிருந்தே மார்கழியின் மகத்துவத்தை உணரலாம்.
கார்த்திகைக்குப் பின் மழையில்லை, கர்ணனுக்குப் பின் கொடையில்லை
என்பார்கள். மழை முடிந்து பனிபடர்ந்து தாவரங்களுக்கு தாயவரம் கிடைத்து
தளதளவென்று வளரும் பசுமையான மாதம் மார்கழி. சோம்பேறிகளையும்
சுறுசுறுப்பாக்கும் மாதம் இது. அளிவான வெயில், அளவான குளிர் என்று
சுகமான தென்றல் வீசும் மாதம் இது.
மார்கழியை பீடமாதம் என்று சுபகாரியங்களைத் தவிர்ப்பர். உண்மையில் அது
பீடமாதமன்று, பீடுடைய மாதம். பீடு என்றால் பெருமை என்று பொருள்.
இந்தப் பெருமை கொண்ட மாதத்தில் இறைவனை மட்டும்
வழிபடுவதற்காகவே முன்னோர்கள் அந்த சுபகாரியங்களைத் தவிர்த்தனர்.
இந்த மார்கழி மாதமானது தேவர்களின் விடியல் எனப்படும். நம்முடைய ஒரு
வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். இதில் மார்கழி மாதம் 4 முதல் 6 மணி
வரை விடியற்காலை (அ) உஷத்காலம் ஆகும். தேவர்களின் விடியலும்
மனிதர்களின் விடியலும் ஒன்றாகப் பொருந்துவதால்தான் இந்த விடியல்
ஆண்டவனை வழிபட அருமையான விடியல்.
எனவேதான் மார்கழியின் அதிகாலை நேரம் தெய்வ வழிபாட்டுக்கும்
பாவைப்பாடல்களை பாராயணம் செய்வதற்கும் பஜனைப் பாடல்களைப் பாடி
வலம் வருவதற்கும் உகந்தநேரம் ஆகும். ஆரோக்கியத்தையும் இளமையையும்
அள்ளித்தருகிற இம்மாதத்தில் தான் வளிமண்டலத்திலுள்ள ஒசோன் படலம்
பூமியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலேயே படர்ந்து இருக்கும். பேட்டரியை சார்ஜ்
செய்வதுபோல ஆரோக்கியத்தை சார்ஜ் செய்துகொள்ளலாம். அதிகாலை 4.00
மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிக்கும் பொழுது நரம்பு மண்டலம்
புத்துணர்வு பெறும்.
இளைக்கின்ற நெஞ்சத்திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம் தாமே - திருமூலர்
சிவயோகம் கைவரப்பெற்றவர்கள் மார்கழி நீராடலைப் போல இன்பத்தை
எய்தலாம் என்கிறார் திருமூலர். மார்கழி என்றதும் முதலில் நினைவுக்கு
வருவது கோலங்கள். கோலம் போடுவது பெண்களின் உடலுக்கு சிறந்த பயிற்சி.
குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து, எழுந்து யோசித்து என அனைத்து
ஆசனங்களும் கோலம் போடுதலில் அடங்கியுள்ளது. மார்கழியில் சாணம்
தெளித்து அந்த சாணத்தை உருட்டி அதன் மீது பரங்கி மலரை வைப்பர்.
சாணம் மிகச் சிறந்த கிருமிநாசினி.
இந்த கோலம் புள்ளிகளை சேர்ப்பதால் வருவதைப் போல பெண்கள் குடும்ப
உறவுகளை சேர்த்து அரவணைக்க வேண்டும். புள்ளிகளை விட்டு விட்டால்
கோலம் அலங்கோலமாக ஆவது போல உறவுகளை விட்டால் சமுதாயம்
சீர்கெடும் என்ற வாழ்க்கைப் பாடத்தினை நமக்கு கற்றுத்தருகிறது. மற்ற
மாதங்களில் இறைவனை பூக்களால் மட்டுமே அர்ச்சிப்போம். ஆனால்
மார்கழியில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாக்களாலும் போற்றுவோம்.
வைணவத் தலங்களில் மார்கழியில் வழங்கப்படும் பிரசாதமான துளசி
மருத்துவ குணமுடைய சளியைப் போக்கும் மருந்து. மொத்தத்தில் மக்களின்
ஞானம் விழிக்கும் விடியலே இந்த மார்கழி.
இது தைத்திங்களில் கொண்டாடும் விழாவாகும். முதற்கண் அறுவடை
விழாவாகத் தொடங்கி பின்னர் வளத்தைக் குறித்த விழாவாக மாறியது.
ஆனால் பொங்கல் விழாவினைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
தைத்திங்களில் நோன்பு நோற்பதுண்டு என்று மட்டும் அறிகிறோம்.
தைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள்
மழையில் நனைந்து அமரந்திருப்பதாக, ‘வான்பெயல் நனைந்த புறத்த
நோன்பியர்; தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’ என்ற நற்றிணைச்
செய்யுள் (பாடல்:22) குறிப்பிடுகின்றது.
தை நீராட்டு
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது சில செய்யுட்களில்
குறிப்பு காணப்படுகின்றது. பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
‘‘தையில் நீராடிய தவந்தலைப் படுவளோ’’ (கலித்தொகை, பா.எ., 13)
மகளிர் கூட்டமாக நீராடுவர் என்பதனை,
‘‘நறுவீ ஐம்பால் மகளிர்; ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே’’ (ஐங்குறுநூறு, பா.எ., 84.)
‘‘தைஇத்திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’’ (நற்றிணை, பா.எ., 80)
என்னும் குறிப்புகளால் அறியலாம். தமக்கு வாய்க்கும் கணவன்மார்
நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு
பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர்
பாடல்களால் அறிகின்றோம். அம்பாவாடல் என்று பரிபாடல் இதனைக்
குறிப்பிடும்.

வரலாறு
7. தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக
கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்
ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக்
கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம்
முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை
பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
7.1. புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008 க்கு முன்பும்
வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான
சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78 ம் ஆண்டில் வடநாட்டில்
ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில
வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது
என்று கூறுகின்றனர். தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால்
2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது.
2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல்
நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின்
தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே
தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
7.2. கருத்து வேறுபாடுகள்
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை
முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது.
தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா
என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக
அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை
சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகஸ்ட் 23, 2011 ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும்
சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை
இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2.6 விழாக்கள்

‘கோயில் என்றாலே திருவிழா ; திருவிழா என்றாலே கோயில்’ என்ற நினைவு


அனைவருக்கும் வரும். விழைவு : விழை என்றால் விருப்பம் என்று
பொருள்படும். விழாக்கள் மகிழ்வை அடிப்படையாகக் கொண்டு மக்களால்
விரும்பி நடத்தப் படுபவையாகும்.

கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே விழாக்களின்


நோக்கமாகும்.

தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள்


திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே
விழாக்கள் நிகழ்ந்ததை மடியா விழாவின் யாணர் நன்னாடு என்று புறநானூறு
கூறுகின்றது. மடியா என்பது ஆண்டு தோறும் என்று பொருள்படும்.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களே விழா எடுக்கச் சிறந்த


மாதங்களாகக் கருதிப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

சிறுதெய்வ விழாக்களோடு அன்னக்கொடி விழா, பொங்கல் விழா, சித்திரைத்


திருவிழா, தேர்த் திருவிழா போன்ற சிறப்பு விழாக்களும் நாட்டுப்புற மக்களால்
கொண்டாடப் படுவதுண்டு.

2.6.1 அன்னக்கொடி விழா

பல்வேறு வகையான தானங்களில் பாமர மக்கள் அறிந்த தானம் அன்ன


தானமாகும். பசிப்பிணி போக்குதலே நாட்டுப்புற மக்கள் அறிந்த நல்லறமாகும்.
வேளாண்மை செய்வோர் ‘விருந்திருக்க உண்ணாத’ மனித நேயம்
கொண்டவர்கள். கிராம மக்கள் தங்கள் வீட்டுக்கு வருவோரிடம் கேட்கும்
முதல் வார்த்தை ‘சாப்புட்டீங்களா? என்பதே ஆகும். சாப்பிட்டோமென்று
அவர்கள் கூறினாலும் ‘இந்தாங்க ஒருவாய் நீராகாரமாவது சாப்பிடுங்க’ என்று
அன்பாய் உபசரிக்கும் தாராள மனமும் வெள்ளை உள்ளமும் கொண்டவர்கள்.
இதன் தொடர்ச்சியாகவே அவர்கள் ஆண்டு தோறும் சித்திரைப் பரணியில்
அன்னக்கொடி ஏற்றி அனைவருக்கும் அன்னமிடுதலை ஒரு சமுதாயப்
பணியாக, விழாவாக மேற்கொண்டு வருகின்றனர்.

அன்ன தானத்தை அன்றாட வாழ்க்கைச் செயல்பாடாகக் கொண்டுள்ள பாமர


மக்கள் மனதில் அன்னக் கொடிகட்டிப் பரதேசிகளுக்கும் பசித்து
வந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்த சிறுத்தொண்டர் (பெரியபுராணம்)
நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே கூறவேண்டும்.

சிறுத்தொண்டரின் அன்னதான விரதத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவர்


பிறந்த நாளாகக் கருதப்படும் சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளன்று
அன்னக்கொடி ஏற்றுதலும் அமுது படையல் விழாவும், திருச்சி, தஞ்சாவூர்,
தருமபுரி, சேலம், வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு மாவட்டக் கிராமங்களில்
வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அன்னக்கொடி விழா சோழர்
காலந்தொட்டு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும்


விழாவிற்குத் தேவையான பொருளுதவி அளித்து விழாவில் கலந்து
கொள்கின்றனர்.

அன்னதான விழாவில் ‘பிள்ளைக்கறி அமுது’ என்ற பிரசாதம்


வழங்கப்படுகிறது. இதை வாங்கி உண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்று
நம்பப்படுகிறது. இது ஒரு சமய நிகழ்வாக அல்லாமல் சமுதாய நிகழ்வாக,
பசிப்பிணி போக்கும் பெருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது. இவ்விழா
தமிழர்களின் மனித நேயப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாக
விளங்குகிறது.

2.6.2 பொங்கல் திருவிழா

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது. ‘தை


பிறந்தால் வழி பிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்’ என்பது தமிழரது
நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத் திருநாள். ‘சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பித்து உழவின்
சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும் வேளாண்மைத் திருநாள், போகிப் பண்டிகை,
மணப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு
நாட்களும் ஒரே திருவிழாக் கோலம்தான்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப்


புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை என்றும்
கூறப்படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப் பொங்கல் பானையில்
புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி
ஆரவாரமிட்டு, மஞ்சளும் செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு,
இயற்கையை வழிபடுவது பொங்கல் திருநாளாகும்.

தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு நன்றி


செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. எருதுகளைக்
குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் ஊட்டி,
வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய திருநாளாக இது கொண்டாடப்
படுகிறது. மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான
சல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்


புல்லாளே ஆய மகள்.
என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று தொட்டு
இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில் இவ்வீர
விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.

பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும்


பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப் பெற
வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது கன்னிப்
பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம் ஒன்றாக வைத்துக்
காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர் பெறுவதாயிற்று.

இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின் சிறப்பை, உறவின்


பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும் பரவியிருக்கின்ற தமிழர்களை
ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம் தமிழ்


மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப் பொங்கல்
திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக் கிடைத்த
பெருமையாகும்.

என்ன மாணவர்களே, பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு


மகிழ்ந்தீர்களா?

சித்திரைத் திருவிழா

மதுரை மாநகரில் ஆண்டு தோறும் வெகுவிமரிசையாகக்


கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழா ஆகும். மீனாட்சி
திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குதல் என்ற இரு
நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது.
புராண அடிப்படையில் நிகழும் பெருந்தெய்வ விழாவாக இருந்தாலும்
நாட்டுப்புற மக்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.
அழகர் கோயிலிலிருந்து மதுரை வரையுள்ள கிராமங்களில் பெருந்தெய்வக்
கடவுளான அழகர் சிறுதெய்வமாகவே கருதி வணங்கப்படுகின்றார்.
சிறுதெய்வக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் பலியிடல், மொட்டை
போடுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும்
மேற்கொள்ளப் படுகின்றன. சைவ, வைணவச் சமய ஒற்றுமையின்
குறியீடாகச் சித்திரைத் திருவிழாக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்
தக்கதாகும்.

தேர்த்திருவிழா

நாட்டுப்புற வழிபாட்டில் தேரோட்டம், தேர் இழுத்தல் என்பது மிகமிகக்


குறைவாகும். பெரும்பாலும் பெண் தெய்வங்களையே (மாரியம்மன்,
காளியம்மன், அங்காளம்மன்) தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வரும்
வழக்கம் காணப்படுகிறது. ஆண் சிறு தெய்வங்களுக்குத் தேர்த்திருவிழாக்
கொண்டாடும் வழக்கம் இல்லை. மக்கள் அனைவரும் இறையருள் பெற
வேண்டும் என்பதற்காகத் தெய்வங்களைத் தேரில் அலங்கரித்து அழைத்து
வரும் வழக்கம் கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் காணப்படுகிறது.
நான்கு நாள் திருவிழா

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.


போகி
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ (அ) காப்புக்கட்டு
முதன்மை கட்டுரை: போகி

போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம்


கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும்
விழாவாகும்.
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும்
நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது
கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட
பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக,
கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி
நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன
புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை
தொடர்ந்தனர்.
அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம்
இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று
அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகள்
மாட்டுப் பொங்கல்
முதன்மை கட்டுரை: மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும்


நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல்
என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப்
பொங்கல்!

பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று
கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
முதன்மை கட்டுரை: காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள்
அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல்
கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக
இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள்

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு.


இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி
எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள்.
பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம்
உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே
தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில்
குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல்
பண்டிகையைக்கொண்டாடினர்.[4]
தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல்


நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29,
2008 அன்று அறிவித்தது.[5] சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும்
ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள
இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும்
கூறப்பட்டது[மேற்கோள் தேவை]. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு
நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர்.
அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த
புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில்
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.

2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே


அதிருப்தியை உருவாக்கியது[மேற்கோள் தேவை]. தமிழக அரசுக்கு தமிழகப்
பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள்
எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011 ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை
தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.[6]. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக
அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை


“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை


தமிழர்களின் கலாச்சார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா.
தமிழகம், இலங்கை போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல்
தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக்
கொண்டாடி தங்கள் இன, சமூக, கலாச்சார, வாழ்வியல் அடையாளங்கள்
தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் ஐம்பது நாடுகளில்
இன்று தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

சங்ககாலமான கி.மு இருநூறுக்கும் கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட


காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது.
அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல
விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி
செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் துவங்கவும்
கொண்டாடப்படுகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக்
கொண்டாடப்படும் இந்த விழா தன்னகத்தே நான்கு விழாக்களைக்
கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா


முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட
இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர
பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும்,
ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில்
இந்த நாளில் தான் மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

தை நீராடல் என்னும் பொங்கல் விழாவின் முன்னோடியைக் குறித்த


செய்திகள் கி.பி நான்காம் நூற்றாண்டு – எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த
இலக்கியங்களான ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதே


வேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்துடனான விழாக்கள் உலகெங்கும்
கொண்டாடப்படுகின்றன.

ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை


வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன.
பயிர்களில் ஆவிகள் இருப்பதாகவும் அவை மனம் குளிர்ந்தால் விளைச்சல்
அமோகமாகவும், இல்லையேல் குறைவாகவும் இருக்கும் என்று மக்கள்
நம்பினார்கள். அதுபோல ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை
இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும்
என்றும் நம்பினார்கள். அறுவடை செய்யும்போது பயிர்களிலுள்ள ஆவி
கோபமடையும் என்பதும், அந்தக் கோபத்தை குறைக்க அவற்றுக்குப் படையல்
செலுத்த வேண்டும் என்பதும் கூட ஆதியில் இருந்த நம்பிக்கைகளில் ஒன்று.

இதனடிப்படையில் தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும்,


இயற்கையைப் பராமரிக்கும் தெய்வங்களுக்கும் ஆனந்தமளிப்பதற்காக
நடத்தப்பட்டன. கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.

கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில்


கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் கொண்டாடப்படும்
இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ-இச்சி என்னும் பெயரில்
அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய்
இந்த விழா குதூகலமூட்டுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக் கிழமை நன்றி


செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு
முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றி
செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள்
வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும்
கனடாவில் அக்டோ பர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமை இந்த விழா
கொண்டாடப்படுகிறது.

சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த


விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து
மகிழ்கிறார்கள்.

வியட்நாமில் – தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின்


பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய
காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக
இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.

இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத்


விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல்
விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக
யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா
இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த


விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து
போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா
நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி
செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப்
பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப் படுவதுண்டு.

ரோமர்கள் அக்டோ பர் நான்காம் நாள் செரிலியா என்னும் விழாவைக்


கொண்டாடுகிறார்கள். இது தங்களுக்கு நல்ல விளைச்சலைக்
கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு
நன்றி செலுத்தும் விழா. தங்கள் தெய்வத்துக்கு புதிய காய்கற்கள், பழங்கள் ,
பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை
கொண்டாடுகிறார்கள். வினாலியா என்றொரு விழாவையும் இவர்கள்
கொண்டாடுகிறார்கள். தங்கள் திராட்சைத் தோட்டங்களில் விளையும் முதல்
திராட்சைக் குலையை இறைவனுக்குப் படைத்து அந்த விளைச்சல் காலத்தை
ஆசீர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறார்கள்.
எகிப்தியர்கள் விளைச்சல் விழாவில் காய்கறிகள் மற்றும் வளம் தரும்
கடவுளான மின் வழிபாடு பெறுகிறார். இசை, நடனம் என கோலாகலப்
படுகிறது எகிப்தியர்களின் இந்த அறுவடை விழா.

ஆஸ்திரேலியாவிலும் ஏப்பிரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும்,


ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில்
ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் – ஜனவரி காலத்தில் கோதுமை
அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில்
உள்ளது.

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோ பர்விழா என்று அழைக்கப்படுகிறது.


இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது.
அக்டோ பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா
கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த
விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா


கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி
செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய
அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை
இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா


கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில்
பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும்,
நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை
எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்கவேண்டுமென்று
இறைவனை வேண்டுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள்


இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும், இறைவனோடும் சக
மனிதனோடும் மனிதன் கொள்கின்ற உறவையும் வெளிப்படுத்துபவையாக
திகழ்கின்றன. எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து
கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது.
விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன.
மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை
உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு
விடுக்கின்றன.

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும்


போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா
தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும்
தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும்
இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க
இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை.
வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள் சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல்
மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆடலும், பாடலும்
இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியும்
பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.
விழாக்கள்
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும்,
புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு
சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம்
காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம்
சங்க காலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை
இலக்கியங்கள் கூறுகின்றன.

¬ýÁ¢¸õ «È¢§Å¡õ! தொடரும்!

You might also like