Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

மந்திர ஜெபத்தின் சக்தியைப் பற்றி பாலகுமாரன் சொன்னவை !

மந்திர ஜபம் செய்தால் எப்படி நல்லது நடக்கும். எப்படி செல்வம் கிடைக்கும்.


உண்மையில் அந்த அடிப்படை தாத்பரியம் என்ன என்ற கேள்வி கொஞ்சம்
நாத்திகமான எண்ணமுடையவருக்கு வரலாம்.

இது பெரிய வித்தையல்ல. சாதாரண விஞ்ஞானம்.மனம் மிகப் பெரிய சக்தி


வாய்ந்தது. மனித மனத்திற்கு எல்லா விஷயங்களையும் இழுத்துவரும் ஆற்றல்
உண்டு.

அந்த ஆற்றலை மனிதர்கள் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை.தன் மனதை


முழு ஆளுமை செய்து அதை உபயோகப்படுத்துவதில்லை. மாறாக
சிதறிவிடுகிறார்கள்.

சிதறிவிடுவதாலேயே சாமான்யமாக இருக்கிறார்கள். எண்ணத்தை மனதில்


ஸ்திரப்படுத்திக் கொண்டு அந்த எண்ணம் நிறைவேற ஒரு குறிப்பிட்ட மந்திர
ஒலியை சொல்கிறபோது மனம் அந்த எண்ணத்தை இறுகப் பற்றிக் கொள்கிறது.

நிச்சயம் நடக்கும், இது எனக்கு வேண்டும் என்ற வேகத்தைக் கொள்கிறது.


அப்போது அந்த எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய செயல்களையே அந்த
நாளில் செய்கிறது.

உதாரணத்திற்கு, நல்ல உணவு வேண்டும் என்று ஜபம் செய்கிறபோது, ஜபம்


செய்து முடித்த பிறகு அந்த உணவு எங்கு கிடைக்கும் என்ற தெளிவு ஏற்பட்டு
விடுகிறது. அதை நோக்கி மனம் போகிறது. அதை அடையக்கூடிய
வாய்ப்புகளை ஆராய்கிறது. அடைய முற்படுகிறது.

ஒரு வீடு என்பது அப்படி உணவு போல உடனடியாகக் கிடைக்குமா?

உடனடியாகக் கிடைக்கும் என்று எவரும் சொல்லவில்லை. வீடு வாங்கக்கூடிய


யோக்கியதையை மடமடவென்று மனம் ஏற்படுத்திக்கொள்ளும். இடம் பார்க்கும்.
கடன் கேட்கும். கட்டடம் எழுப்புவது என்ன என்று விசாரிக்கும்.

ஒருவருடம் இரண்டு வருடத்தில் அந்த வேலையைச் செவ்வனே செய்துவிட


முடியும். அதாவது, மனதை அந்த வேலையில் ஆழப்படுத்துகின்ற வித்தையை
இந்த மந்திர ஜபம் செய்கிறது.

அதைத் தாண்டி கூரையைப் பிளந்து தங்கக் காசுகள் கொட்டியது போல, உங்கள்


முயற்சியைத் தாண்டி வேறு சில உதவிகளும் எதிர்பாராத வண்ணம் கிடைக்கும்.
கிடைக்கின்ற வழியை மந்திர ஜபம் செய்யும்.

எப்படிக் கிடைத்தது, ஏன் அவர் வந்து இவ்வளவு பெரிய தொகையை கடனாக


கொடுத்து உதவினார் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இது
உண்மையா என்று கேள்வி வந்தால், நீங்கள் மந்திர ஜபத்தை உக்கிரமாக செய்து
பார்க்கத்தான் வேண்டும்.

மந்திர ஜபம் உங்கள் மனதை ஒரு நல்ல இடத்தில் பக்குவப்படுத்தி வைக்கிறது.


இன்னொருவர் உடல்நலம் தேறவேண்டுமென்று மந்திர ஜபம் செய்யலாம்.
ஆனால், அந்த நபரின் உடல்நலம் தேறுவதற்காக மனம் பிரார்த்தனை செய்ய
ஆரம்பிக்கும்.

அவர் மீது லயிக்கத் துவங்கும். மெல்ல மெல்ல மனம் அவருடைய வலியை ஆற்றி
அவரை நோயிலிருந்து மீட்கும். மனித மனத்திற்கு அந்த ஆற்றல் உண்டு.

அதனால்தான் நல்ல நேரத்தில் வாழ்க, வளர்க என்று வாயாறச் சொல்வதும்,


துக்க நேரத்திலும் மௌனமாக இருப்பதும், எல்லா சமயத்தினரும்
கடைப்பிடிக்கிறார்கள்.

நல்ல மனிதர்கள், நல்ல நேரத்தில் வாழ்க என்று சொன்னால் வாழ்ந்துதான்


ஆகவேண்டும். வளர்ந்துதான் ஆகவேண்டும்.

இதையெல்லாம் விட மந்திர ஜபத்தினுடைய மகத்தான சக்தி உங்களை


அமைதிப்படுத்துவது. எந்தப் பிரச்சினை வந்தாலும் சரி.. சமாளிப்போம் என்று
தொடைதட்டி புன்சிரிப்போடு அதை எதிர்கொள்வது.

இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது. இழந்தால்தானே இன்னும்


அதிகம் பெறமுடியும் என்று உத்வேகம் கொள்கின்ற மனோநிலையை மந்திர ஜபம்
நிச்சயம் தரும்.

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களென்றால் மற்ற சடங்குகள் முன்பின்


வித்தியாசப்பட்டாலும் மந்திர ஜபம் என்பது எல்லா சமயங்களிலும் மிக
முக்கியமாக கருதப்படுகிறது. மந்திரம் மாறும் அவ்வளவே. மந்திர ஜபம் மாறாது.

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

என்று பௌத்தர்கள் சொல்வது அருமையான மந்திரம். உள்ளே அமைதி


ததும்பும். அமைதியான மனம் ஆற்றலுடைய மனம் என்பதை பௌத்தர்கள்
அறிந்திருந்தார்கள்.

பல கடவுள்களின் பெயர்கள் மந்திர ஜபத்தின் வேகத்தைத்தான் உச்சரிப்பாக


கொண்டிருக்கின்றன. மந்திர ஜபத்தைப் பற்றி பேசுவதோ, படிப்பதோ பெரிய
விஷயமில்லை. நீச்சலை கரையில் அமர்ந்து கற்றுக்கொள்ள முடியாது. நீரில்
இறங்க வேண்டும்.

மந்திர ஜபம் என்ன என்று புரிந்துகொள்ள மந்திர ஜபத்தை வைராக்கியத்தோடு


தொடர்ந்து... தொடர்ந்து... செய்ய வேண்டும். மந்திர ஜபத்தை பத்திரிகையில்
கற்றுக்கொடுக்க முடியாது. அது குரு மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

யார் குரு... எங்கே கற்றுக் கொடுப்பார்கள்?

எதையும் வாழைப்பழமாக உரித்துத் தர முடியாது. தாகமுள்ளோர் தேடக் கடவர்.


காதுகளுள்ளோர் கேட்கக் கடவர்.
- பாலகுமாரன்” அவர்களால் எழுதப்பெற்ற "மண்ணில் தெரியுது வானம்"

யோகி ராம் சுரத்குமார்

யோகி ராம் சுரத்குமார்

யோகி ராம் சுரத்குமார்

ஜெய குரு ராயா

You might also like