Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

காலை ஜெபம்

காலை ஜெபம் மிகவும் முக்கியமானது , ஏனெனில் :


 அதிகாலையில் முதல் மணியை அல்லது முதல் சில நிமிடங்களை
கர்த்தருக்கு கொடுக்கவேண்டும்.
 பிசாசை சந்திப்பதற்கு முன்பு, தேவனை சந்திக்கவேண்டும்.
 வாழ்க்கையின் சூழ்நிலைகளை சந்திப்பதற்கு முன்பு, தேவனை
சந்திக்கவேண்டும்.
 பலரிடம் பேசுவதற்கு முன், தேவனோடு பேசுசவேண்டும்.
 மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்பு, தேவனோடு
ஐக்கியம் கொள்ள வேண்டும்.
 எந்த முக்கிய செய்தியையும் கேட்பதற்கு முன்பு,
பரலோகத்திலிருந்து முதல் முக்கிய செய்தியை பெற்றுக்கொள்ள
வேண்டும்.
 மக்கள் முன் நிற்கவும் உட்காரும் முன், தேவனுக்கு முன்
நிர்க்கவேண்டும்.
 மனிதர்களுக்கு முன்பாக மண்டியிடுவதற்கு முன்பு, தேவனுக்கு
முன்பாக மண்டியிடுடவேண்டும்.
 மற்றவர்களை உயர்த்துமுன், தேவனை உணர்த்தவேண்டும்.
 மக்கள் பிரசன்னத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனுடைய
பிரசன்னத்திற்குள் நுழையவேண்டும்.
 உடலுக்கு உணவளிப்பதற்கு முன், நம்முடைய ஆன்மாவிற்கு
ஆவிக்குரிய ஆகாரம் கொடுக்க வேண்டும்
 மற்றவர்களின் பெயரை அழைப்பதற்கு முன் இயேசுவின்
நாமத்தை ஆழிக்கவேண்டும்
 கண்ணாடியில் நம்மைப் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் இயேசு
கிறிஸ்துவைப் பார்க்கவேண்டும்.
 வீட்டை சுத்தம்செய்யும் முன், நம்முடைய இதயத்தை சுத்தம்
செய்யவேண்டும்.
நீதிமொழிகள் 8:17
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள்
என்னைக் கண்டடைவார்கள்.
கொலோசெயர் 2:3
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய
பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
சங்கீதம் 63:1-2
1. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத்
தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான
நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என்
மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
2. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து,
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

சங்கீதம் 5:3 and 12


3. கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்;
காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
12. கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங்
கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.

சங்கீதம் 59:16-17
16. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17. என் பெலனே,
உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

சங்கீதம் 143:7-8 and 10


7. கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும்,
என் ஆவி தொய்ந்துபோகிறது;
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு,
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
8. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்,
உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;
உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,
நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
சங்கீதம் 119:147-148
147. அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்;
உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
148. உமது வசனத்தைத் தியானிக்கும்படி,
குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

சங்கீதம் 30:4-5
4. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு;
சாயங்காலத்தில் அழுகை தங்கும்,
விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

சங்கீதம் 16:18
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

சங்கீதம் 16:18
8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 118:24
24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்,
இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

You might also like