Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர்

ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்


என்று கூறலாம். இவர் மரியாதையின்
காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.
கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள
ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில்
தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அகத்தியரின்
12 மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர். காப்பிய குடி
எனும் ஊரில் இவர் பிறந்ததால் இவர் இப்பெயரைப்
பெற்றுள்ளார் என இறையனார் களவுரை காலத்தில்
சொல்லப்படுகிறது. இவருடைய இயற்பெயர்
திரணதூமாக்கினி என்றும், தந்தை பெயர் சமதக்கிணி
என்றும், சகோதரர் பரசுமார் என்றும் நச்சினார்க்கினியர்
கூறப்பட்ட ஒரு கருத்தும் உள்ளது. தொல்காப்பியம் 1610
சூத்திரங்களை கொண்டுள்ளது. இந்த நூலிற்கு சிறப்பு
பாயிரம் எழுதியவர் பனம்பாரனார். இந்நூல் நிலந்தரு
திருவிற் பாண்டியன் அரசவையில் அதங்கோட்டு ஆசான்
அவர்களது முன்னிலையில் வெளியிடப்பட்டது என
பனம்பாரனார் கூறுகிறார்.

You might also like