Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

பொங்கல பண்டிகை நான்கு நாட்கள்

கொண்டாடப்படுகிறது. முதல் நாளில்


போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த
பண்டிகையின் நோக்கம் பழையன் கழிதலும்
புதியன புகுதலும் என்பதே ஆகும்.

வீட்டில் உள்ள பழைய பொருட்களை மற்றும்


இன்றி மனதில் இருக்கும் தவறான
எண்ணங்களையும் அழிக்க வேண்டும். வீட்டை
தூய்மையாக்கி அழகாக அலங்கரிப்பார்கள். இந்த
வருடமும் எங்கள் குடும்பம் வீட்டை சுத்தம்
செய்து அழகாக அலங்கரித்து மகிழ்ந்தோம்.
போகிப்பண்டிகையால் என் குடும்ப பிணைப்பு
பலப்படுகிறது. இது மார்கழி மாதத்தின் கடைசி
நாளாகும். பொங்கல் திருவிழா தை மாதத்தின்
முதல் நாளன்றுக்கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாள் சூரியனுக்கு நன்றி


சொல்லும் திருநாள் ஆகும். அன்று புத்தாடை
அணிந்து பானையில் பொங்கல் வைத்து பால்
பொங்கும்போது குடும்பம் சேர்ந்து "பொங்கலோ
பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்று
சந்தோஷமாக கத்துவார்கள்.
மேலும் கரும்பு, மங்கள், இஞ்சி போன்றவையை
சூரியனுக்கு நன்றி சொல்லி படைப்பார்கள். என்
குடும்பம் இந்த வருடம் பால் காச்சி பொங்கல்
வைத்தோம் என் தவர் செய்த பொங்கல் மிக
சிறப்பாக இருந்தது. மேலும் நாங்கள் புத்தாடைகள்
போட்டு மகிழ்ந்தோம்.

மூன்றாம் நாள் மாடுகளுக்கு நன்றி


தெரிவிக்கும் நாள். அன்று மாட்டுப்பொங்கல்
கொண்டாடபடுகிறது. மாட்டின் கொம்புகளுக்கு
வண்ணம் பூசி மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து
மகிழ்வார்கள். மேலும் மஞ்சுவிரட்டு என்ற
விளையாட்டு விளையாடப்படுகிறது. இதில்
இளைஞர்கள் பங்கேற்று காளைகளை
அடக்கியப்பின், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்படும்.

கடைசி நாளாக காணும் பொங்கல்


கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பலவகை கலந்த
அன்னங்களை சமைத்து ஆற்றங்கரைக்கு
குடும்பத்துடன் சென்று மகிழ்வார்கள். நாங்களும்
எங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்றோம்.

பொங்கல் பண்டிகை அனைத்து


தமிழர்களாலும் தமிழகம் மட்டும் இல்லாமல்
உலகம் முழுவதும் ஜாதி மத பேதம் இன்றி
கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இப்பண்டிகை
உழவுத் தொழிலுக்கு உதவி செய்யும் சூரியனுக்கும்
மாடுகளுக்கும் நன்றி சொல்லும் பண்டிகை ஆகும்.

இந்த பண்டிகையை நாம்


கொண்டாடிகக்கொண்டே இருக்கவேண்டும். நாம்
இந்த மகிழ்ச்சி அளிக்கும் கொண்டாட்டத்தை
கொண்டாட நிறுத்தி விட்டோம் என்றால் இந்த
பண்டிகையை எல்லோரும் கொண்டாடுவதை
நிறுத்திவிடுவார்கள். பிறகு இந்த கொண்டாட்டத்தை
பற்றியே மறந்து விடுவார்கள். \

நான் இந்த பண்டிகையை மகிழ்ச்சியுடன்


கொண்டிக்கொண்டிருக்கிறேன் மேலும்
கொண்டாடிக்கொண்டிருக்கப்போகிறேன். நீங்களும்
அப்படி செயவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

என் பார்வையில் பொங்கல் ஒரு மிக


முக்கியமான கொண்டாட்டமாகும். மேலும் அது
மக்கள் முழுவதும் விருப்பப்பட்டு
கொண்டாடப்படுகிற பண்டிகை ஆகும்.

You might also like