Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

இறையருள்

“ஓம் சரவணபவ”

“திருமுருகன் கந்தர்சஷ்டி பெருமை-3!”


(தந்தவர்: V. சங்கர பாகம்)

ஆன்மீக அன்பர்களே!
1) நாளை 19.11.2009 ஐப்பசி மாதம் 5-ம் நாள் வெள்ளிக்கிழமை அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகன் சிவமைந்தன் அருள்மிகு முருகப்பெருமான், அதர்ம
செயலை வதை செய்யும் திருநாள்.
2) அவனுடைய அடியார்களின் குறை நீக்க எம்பெருமான் நாளை தவத்தின்
நிறைவாக அறுமுகம் கொண்டு அதர்மத்தை வதம் செய்கிறார்.
3) 1)மாயை 2)சூது 3)காமம் 4)ஆசை 5)குரோதம் 6)சினம் இவற்றை அடிப்படையாகக்
கொண்டுதான் விதி தன் செயலை பூர்த்தி செய்கிறது. இது முற்பிறவி தரும்
வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
4) இதை அழிக்க கூடிய மாபெரும் சக்தியை உடையவன் சிவமைந்தன் ஒருவனே!
அவன்தான் ஞான சற்குருநாதன்.
5) மேற்காட்டிய ஆறு குணங்களை உள்ளடக்கி ஆட்சி செய்தவன் சூரபத்மன்.
அவனுடைய அந்த ஆறு குணங்களை சம்ஹாரம் செய்து, அவனை தன்னோடு
ஐக்கியப்படுத்திக் கொள்கிறான் பகை வென்ற குமரவேள்.
6) பகைமையை சம்ஹாரம் செய்கின்றானே தவிர, பகைவனை அவன் சம்ஹாரம்
செய்யவில்லை என்பதை அன்பர்கள் இதில் நன்கு கவனித்தல் வேண்டும்.
பகைவனையும் மன்னிக்கும் பண்பு நம் குமர வேளுக்கு மட்டுமே உண்டு.
7) இதில் நாம் கவனிக்க வேண்டிய பொருள் என்னவென்றால், மக்களாகிய
நம்மிடத்திலும் அறிந்தோ, அறியாமலோ மேற்கண்ட குணங்கள் நம்மை ஆட்சி
செய்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
8) ஆகவே அக்குணங்களை நம்மை விட்டு நீக்கும் முன்னிட்டு, முருகப்
பெருமானிடம் நாளை ஒருநாள் விரதம் அனுஷ்டித்து, நம்மிடமுள்ள அவர்களை
சம்ஹாரம் செய்ய வேண்டி வேண்டுதல் செய்வது மிக, மிக நலம்.
9) நாளை ஒரு நாள் மட்டும், லௌவீக வாழ்வின் நடைமுறை செயல்களில் இருந்து
வெளிப்பட்டு, முருகப்பெருமானின் நினைவில் ஐக்கியமாகி, அவனை
சரணடைவது நம் வாழ்க்கையின் உயர்வுக்கு அதுவொரு மிக, மிக முக்கியமான
முன்னோடியாக ஆகும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.
10) நாளை ஒரு தினம் மௌனம் விரதம் அனுஷ்டிப்பது மிக,மிக நன்மை பயக்கும்.
மௌனத்தை கடைக் கொள்ளும் வேளை, உடல் சலனம் விலகி, உடல்
கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
11) உடல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வேளை, மனம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
மனம் கட்டுப்பாட்டிற்குள் வரும் வேளை, ஆத்மசுத்தி கிடைக்கிறது.
12) ஆத்ம சுத்தி வரும் வேளை, பரிபூர்ணமாக இறை காட்சியை காண்கிறோம்.
13) இறைகாட்சி காணும் வேளை, மானிடப்பிறவி வென்று, ஞான நிலைக்குள்
வருகிறோம்.
14) ஞானநிலை வரும் வேளை, விதி நாதன் செயல் அங்கே படு தோல்வி அடைகிறது.
இதுவே இறை தத்துவம் ஆகும்.
15) ஆதலால் இறை அன்பர்களே! நாளை ஒருநாள் நம் முருக வேளுக்காக ஒதுக்கி,
தவ யோகத்தில் இருந்து, விதி வென்று, எல்லாம் வல்ல முருகப்பெருமானின்
அருளுக்கு பாத்திரமாவோமாக!

“ஓம் சரவணபவ!”
“நலம்!”

You might also like