குரு சீரடி யாளர் போற்றி மாலை-6

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

இறையருள்

“சாமியே சரணம் ஐயப்பா”

“குரு சீரடி யாளர் போற்றி மாலை-6!”


(தந்தவர்: V. சங்கர பாகம்)

“அம்மா” என்றழைப்பேன்! “அப்பா” என்றழைப்பேன்!


“குருவே” என்றழைப்பேன்! “இறையே” என்றழைப்பேன்!
எப்படியும் அழைப்பேன்! எல்லாமே நீரென காண்பேன்!
எங்கும் நிறைந்த பரமே! உமையப்பா!
எங்கும் நிறைந்த பரமே! உமையப்பா!
“அம்மா” என்றால் “அன்பாய்” தெரிவீர்!
“அப்பா” என்றால் “அறிவாய்” தெரிவீர்!
“குருவே” என்றால் “வழியாய்” தெரிவீர்!
“இறையே” என்றால் “காத்தலாய்” தெரிவீர்! – ஐயா
“இறையே” என்றால் “காத்தலாய்” தெரிவீர்!
“ஆதியும்” – “அந்தமும்” அற்றவர் நீரே!
“நினைப்பின்” வழியே தோன்றலும் நீரே!
“சத்தியம்” வழியே பயணம் செல்வார்!
“நிழலாய்” செல்வது நீவீர் அன்றோ! – ஐயா
“நிழலாய்” செல்வது நீவீர் அன்றோ!
சர்வமும் நீரேயென்று இருப்பவர்க்கு!
சஞ்சலம் உண்டோ அங்கெதற்கு!
எம்முள் ஐக்கியம் என்ற பின்னே!
எல்லாம் உமதே யன்றி எமதில்லை! – ஐயனே!
எல்லாம் உமதே யன்றி எமதில்லை!
“ஓம் சாய் ராம்”- “ஸ்ரீ சாய் ராம்”- “ ஜெய ஜெய சாய் ராம்”
“நலம்!”

You might also like