Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

வணக்கம்…வணக்கம்..வணக்கம்…மாணவர்களே..

நான் ------------------------------------------------------------------

சுடரொளி வலையொளியின் இயங்கலை வகுப்பில் அறிவியல் பாடத்தில்

நாம் சந்திக்கின்றோம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி

அடைகின்றேன். தினமும் காலை 10.00 மணிக்கு சந்திக்கும் நாம் இன்று

மாலை 6.00 மணிக்கு சந்திக்கின்றோம். இது புதிய மாற்றமாக இருந்தாலும்

தொடர்ந்து எங்களுடன் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

மாணவச் செல்வங்களே… இந்த இயங்கலை வகுப்பு வெற்றி பெற

சிறப்பாக என்னோடு கைக்கோர்த்து 5 பொறுப்பாளர்கள் உழைத்துள்ளனர்.

அவர்கள்

1. திருமதி பரிமளா வடிவேலு, மஞ்சோங் மாவட்டத் தொழில்நுட்பக்

கல்வி துணை அலுவலர்

2. திரு குணாளன் ராஜகிருடன் மஞ்சோங் மாவட்ட குறை நீக்கல் கல்வி

துணை அலுவலர்

3. திருமதி புஸ்பராதா பெருமாள், கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி

தலைமையாசிரியை,

4. ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன், நோவா ஸ்கோஷியா பிரிவு 1

தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொழில்நுட்ப ஆசிரியர்


5. ஆசிரியை சரளா கிருஷ்ணன் கம்போங் துன் சம்பந்தன்

தமிழ்ப்பள்ளியின் தொழில் நுட்ப ஆசிரியர்,

6. ஆசிரியர்இராமதாஸ் மூர்த்தி, காந்தி நினைவு தமிழ்ப்பள்ளியிப் கணித

பாடவியத் தலைவர்.

அதோடு மட்டுமல்லாமல் மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசியச்

சங்கத்தின் தலைவரும் பாகான் செராய் தமிழ்ப்பள்ளியின் தலைமை

ஆசிரியருமான ஆர்.பி.ஜெயகோபாலன், எங்களுடன் சேர்ந்து இந்த

இயங்கலை வகுப்பு வெற்றியடைய உறுதுணயாக இருக்கின்றார்.

இத்தருணத்தில் ஐயா அவர்களுக்கும் நன்றி.

மாணவர்களே…

நம் வலையரங்கம் சிறப்புற நடைபெற உறுதுணையாக பலதரப்பட்ட

நிறுவனங்கள் நம்மோடு இணைந்துள்ளன. அவ்வகையில் மலேசியா

நாட்டின் மனித வள அமைச்சு நம்மோடு இணைந்துள்ளது. இத்தருணத்தில்

மாண்புமிகு மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு

நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் நம்,

பேரா மாநிலக் கல்வி இலாகாவும் Hilir Perak, Bagan datuk மற்றும் Manjung

கல்வி அலுவலகமும் நம்முடன் கைகோர்த்துள்ளார்கள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் கற்றலில் பின்தங்கி விடக்கூடாது

என்ற ஒரே நோக்கில் நம்மோடு edidik, MINDAPPZ, பாரதி முன்னேற்ற

இயக்கம், அநேகன் மின்னியல் பத்திரிகை, என் தமிழ் போன்ற

இயக்கங்களும் இணைந்துள்ளார்கள்.
சரி, மாணவர்களே நம் இயங்கலை வகுப்பின் சில விதிமுறைகளைப்

பார்ப்போம்.

1. இயங்கலை வகுப்பின் போது உங்களைக் கருத்தாடல் பெட்டியில்

அறிமுகம் செய்து கொள்ள வேண்டாம். தயவு செய்து தேவையற்ற

சொற்களையோ படங்களையோ தட்டச்சு செய்ய வேண்டாம்.

2. பாடத்தின் போது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ,

கேள்விகளோ, தோன்றினால் அவற்றைக் கருத்தாடல் பெட்டியில்

(chat box) தட்டச்சு செய்ய வேண்டும் அவற்றிற்கான பதிலை

உங்களுக்கு ஆசிரியர் விளக்கமளிப்பார். கேள்விகள் இருந்தால்

முதலில் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் கேள்வி

பதில் அங்கத்தின் போது கருத்தாடல் பெட்டியில் உங்களின்

கேள்விகளைத் தட்டச்சு செய்யலாம்.

3. அடுத்ததாக பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் தயவு

செய்து புதிர் கேள்விகளைப் பற்றி கேட்க வேண்டாம். இந்த

விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய மாணவர்கள் உடனடியாக இந்த

இயங்கலை வகுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.

4. கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் மாணவர்கள் கருத்தாடல்

பெட்டியைத் தவிர்க்க விரும்பினால் உங்கள் (தட்டச்சுப் பெட்டியை

முடக்கிக்) கொள்ளலாம்.

விதிமுறைகளுக்குப் பின்னர் மாணவர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்

தொடர்ந்து மறவாமல் எங்களின் வலையொளியைச் (Youtube channel)


இணைகைச் செய்த பின்னர் அறிவிப்பு மணியை தட்டினால் எங்களின்

அடுத்து வரும் புதிய காணொலிகள் உங்களை வந்து சேரும்.

அதுமட்டுமின்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மறவாமல் நம்

சுடொரொளி வலையொளியின் அதிகாரப்பூர்வ தொலைவரியில் (Telegram)

இணைந்து கொள்ளவும். மாணவர்களுக்காக மேலும் பல நடவடிக்கைகளும்

தகவல்களும் பகிரப்படும்.

தொடர்ந்து இவ்வியங்கலை வகுப்பினைச் சிறப்பாக நடத்தவிருக்கும் நம்

ஆசிரியரைப் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ஆசிரியர் மதிப்பிற்குரிய முத்தரசன் செல்லையா அவர்கள் 28 ஆண்டுகளாக

கல்வி துறையில் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் அவர்கள் 1992 ல்

ஜொகூர் மாநிலத்தில் குளுவாங்லில் அமைந்துள்ள உளு ரெமேஸ் லாயாங்

லாயாங் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் தனது ஆசிரியர் பணியைத்

தொடங்கினார். ஐயா அவர்கள் கணிதம் போதிப்பதில் தலைச்சிறந்தவர்

ஆவார். மாணவர்களின் குறைகளைத் தெளிவாக எடுத்துரைந்து களைவதில்

சிறந்தவர். மேலும் சொல்லப்போனால், ஐயா அவர்கள் தனது

ஆளுமையைக் கணித துறையில் மேம்படுத்த முதுக்கலை கல்வியை

முடித்து தற்சமயம் கணித பிரிவில் முனைவர் கல்வியைப் படித்து

கொண்டிருக்கிறார். ஐயா அவர்கள் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்காக பல

கணித பட்டறைகளும் பயிற்சி புத்தகங்களையும் வெளியீடு செய்துள்ளார்


என்பது இங்கு குறிப்பிட தக்கது. மேலும், ஐயா அவர்கள் தைப்பிங்

லாரோத் மாதாங் மாவட்ட கல்வி இலாகாவில் பணியாற்றுகிறார்.

காலம் தாழ்தமல் ஐயா திரு. முத்தரசன் செல்லையா அவர்களிடம் இந்த

வகுப்பினை ஒப்படைக்கின்றேன்.

அன்பார்ந்த மாணவர்களே…

நம் வலையொளியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அவைகள் நம் தொலைவரியில் அவ்வப்போது பதிவேற்றப்படும். ஆக,

மறவாம நம் அதிகாரப்பூர்வ தொலைவரியில் இணைய மறந்திடாதீர்கள்.

மேலும் நம் வலையொளியின் தேர்வில் கலந்து கொண்டு சிறப்பு தேர்ச்சி

பெற்ற மாணவர்களின் நற்சான்றிதழ் தொர்பான தகவல்களும் நம்

தொலைவரியில் அறிவிக்கப்படும். ஆகவே நம் சுடொரொளி

வலையொளியின் அதிகாரப்பூர்வ தொலைவரியில் (Telegram) இணைந்து

கொள்ளவும்.

சரி இன்றைய பாடத்தின் கூகொள் நடவடிக்கை பாரத்தை நாளை நம்

தொலைவரியில் அனுப்பப்படும். இனி வரும் காலங்களில் நம்

கல்வியமைச்சால் வழங்கப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தினால்

மட்டுமே நம் சுடரொளியின் புதிர் கேள்விகளைப் பதிலளிக்க முடியும். 80%

புள்ளிகள் மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே நம் நற்சான்றிதழ

வழங்கப்படும் என்பதனை பெருமகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.


இறுதியாக மறவாமல் எங்களின் வலையொலியைச் இணைகைச் செய்த

பின்னர் அறிவிப்பு மணியினைத் தட்டினால் எங்களின் அடுத்து வரும்

புதிய காணொலிகள் உங்களை வந்து சேரும். நம் சுடொரொளி

வலையொளியின் அதிகாரப்பூர்வ தொலைவரியில் (Telegram) இணைந்து

கொள்ளவும். மாணவர்களுக்காக மேலும் பல நடவடிக்கைகளும்

தகவல்களும் பகிரப்படும்.

உங்களின் ஒத்துழைப்பே…

எங்களின் மன நிறைவு என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

You might also like