Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தித்திக்கும் தேன் தமிழ் திக்கெட்டும் பரவட்டும்

முத்தமிழ் தாய்க்கு என் முதற்கண் வணக்கம்.

பெரு மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே, நீதி தவறா நீதிபதிகளே, என்

அன்பிற்கினிய மாணவ செல்வங்களே , வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே,

ஆன்றோர்களே, சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ்

வணக்கத்தை இரு கரம் கூப்பித் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேனின் பெயர்

தீபாஷ்வினி இராஜேந்திரன். நான் ஐந்தாம் ஆண்டு மாணவி.

இன்று நான் உங்கள் முன், இல்ல வழிபாடு எனும் தலைப்பில் பேச

வந்திருக்கின்றேன்.

"மானிடப்பிறவி தானும் வகுத்தது மணவாக்காயம் ஆனிடத்தைந்தும் ஆடும்

அரன் பணிக்காகவன்றோ"

என்கிறது சைவ சித்தாந்தம். அதாவது இவ்வுலகில் பிறந்த அனைத்து

உயிர்களின் பணியானது இறைவனுக்கு பணி செய்து கிடப்பதே என்கிறது

இப்பாடல். ஆகவே இந்துக்களாக பிறந்த நாம் தெய்வ வழிபாடு சேதம்

அத்தியாவசியமான ஒன்றாகும். நம் இந்து மதத்தில் வழிபாடு முறை இரண்டு

வகையாக வகுக்கப்பட்டுள்ளது. அவை இல்ல வழிபாடு மற்றும் ஆலய வழிபாடு

ஆகும்.

You might also like