நிழலும் நிஐமும் by பாமா

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

2/27/24, 7:10 PM நிழலும் நிஐமும்

நிழலும் நிஐமும்
sirukathaigal.com/குடும் பம் /நிழலும் -நிஐமும் /

August 13, 2012

வருடத்திற்கு இரண் டு முறைதான் நாங் கள்


புதிதாக துணி எடுத்துத் தைப்போம் . ஒன் று
கிறிஸ் து பிறப்புத் திருவிழாவுக்கு.
இன் னொன் று எங் கள் ஊர் மாதா
திருவிழாவுக்கு. இந்த ஆண் டு
கிறிஸ் துமஸ் கு மதுரைக்குச் சென் று
துணிமணி எடுக்க வேண் டும் என் று முடிவு
செய் தோம் . பிள்ளைகளைப் பள்ளிக்கு
அனுப்பிவிட்டு நானும் , என் மனைவியும்
பத்து மணிக்கு வரும் வாய் தா வண் டியில்
மதுரைக்குப் புறப்பட்டோம் . அந்தப்
பேருந்தில் தான் மதுரைக் கோர்ட்டுக்கு
வாய் தாவுக்குச் செல் பவர்கள் வழக்கமாகச்
செல் வார்கள் . அதனாலேயே அந்தப்
பேருந்துக்;கு வாய் தா வணடி என் ற பெயர்
வந்தது. அதை யாரும் இப்போது மதுரைப் பேருந்து என் று சொல் வதில் லை.

எங் கள் ஊர்ப்பேருந்து நிலையத்தில் அவ் வளவு கூட்டமில் லை. உட்கார்ந்து


கொண் டு வசதியாய் ப் பயணித்தோம் . பேருந்துகளில் இருக்கையைப்
பிடித்து உட்கார்ந்து விட்டாலே பெரிய சாதானையாகத்தான் இருக்கிறது.
பயணிக்கும் போதே யார்யாருக்கு எவ் வளவு விலைகளில் , என் னென் ன
வகையானத் துணிகள் எடுக்க வேண் டும் என் று பேசி முடிவெடுத்துக்
கொண் டோம் . கையில் இரண் டாயிரம் ரூபாய் இருந்தது. எவ் வளவுக்
கெவ் வளவு சிக்கனமாகச் செலவு செய் ய வேண் டுமோ அவ் வளவுக்
கவ் வளவுச் சிக்கனமாகச் செலவு செய் ய வேண் டும் என் று மனதில்
எண் ணிக் கண் டேன் . கூடுமானவரையில் ஓர் ஐநூறு ரூவாயாவது இதில்
மீதி கொண் டுவரவேண் டும் என் று நினைத்துக்கொண் டேன் . இப்படிப்
பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய் ய வேண் டியதாக இருக்கிறது.
எங் களது பொருளாதார நிலை அப்படி.

நான் ஒருவன் சம் பாதித்து குடும் பத்தைக் காப்பாற்ற வேண் டிய நிலை.
மூன் று பிள்ளைகளும் முறையே, மூன் று, இரண் டு, ஒன் று வகுப்புகளில்
வரிசையாகப் படித்துக்கொண் டிருக்கிறார்கள் . நல் லவேளையாக மூன் று
பேரும் பையன் களாகப் பிறந்தார்கள் என் று உள்ளூர மகிழ்ந்தாலும்
மூன் றாவது பிறந்தவன் பெண் ணாகப் பிறந்திருக்கலாம் என் ற ஆசை
எனக்குள் இருக்கிறது. என் மனைவிக்குக்கூட அப்படி ஒரு ஆசை
இருக்கிறது. பெண் பிள்ளை என் றால் டிசைன் டிசைனாக டிரெஸ் போட்டு
அழகு பார்க்கலாம் @ விதவிதமா நகைநட்டுப் போட்டுப் பார்க்கலாம்
என் று அடிக்கடி கூறுவாள் . அதற்கெல் லாம் வருமானம்
இல் லையென் றாலும் ஆசைக்கு மட்டும் குறைவில் லை. எனக்கு

https://www.printfriendly.com/p/g/gjxTrd 1/5
2/27/24, 7:10 PM நிழலும் நிஐமும்

அந்தமாதிரியெல் லாம் எண் ணமில் லை. பெண் பிள்ளை என் றால் எனக்குப்
பிடிக்கும் . பிடிக்கிறடிதல் லாம் வாழ்க்கையில் கிடைத்து விடுகிறதா
என் ன?

ஆசிரியர் பயிற்சிபெற்று ஏழெட்டு ஆண் டுகள் ஆகிவிட்டன. இன் னும்


வேலை கிடைக்கவில் லை. அட்டவணைச் சாதியில் பிறந்திருந்தாலும் ,
கிறிஸ் தவன் என் ற காரணத்தால் நான் பிற்படுத்தப்பட்ட
சாதிக்காரனாக்கப்பட்டுவிட்டதால் என் னோடு படித்த அட்டவணைச்
சாதியைச் சேர்ந்த இந்துப் பையன் கள் வேலையில் சேர்ந்து கைநிறையச்
சம் பாரிக்கும் போது நான் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால்
எங் கள் ஊர்ப்பள்ளியில் நியமிக்கப்பட்டு மாதம் இரண் டாயிரம்
சம் பளத்தி;ல் வேலை செய் து கொண் டிருக்கிறேன் . ஓய் வு நேரத்தில் என்
மனைவி தீப்பெட்டி ஒட்டுவதால் கிடைக்கும் பணத்தையும் வைத்துக்
கொண் டு எப்படியோ சமாளித்து வருகிறோம் .

வருடத்தில் ஒருமுறையாவது இந்தப் பிள்ளைகளுக்கு நல் ல துணிமணி


எடுக்க வேண் டும் என் றுதான் இந்த மதுரைப் பயணம் . மதுரை விளக்குத்
தூண் பக்க் சென் று துணிமணிகளை வாங் கிக்கொண் டு திருப்தியாக
வெளியே வந்தோம் . நான் நினைத்தபடி ஐநூறு ரூபாயை மிச்சம்
பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மூன் று பையன் களுக்கும் ரெடிமேட்
துணி எடுத்தபிறகு, மனைவிக்கு ஒரு சேலை எடுத்தோம் . எனக்கு எதுவும்
வாங் கிக்கொள்ளவில் லை. கையில் பணமிருக்கவே சாப்பிட்டுவிட்டுப்
போகலாம் என் று எண் ணினேன் . மனைவியும் அதற்கு மறுப்புச்
சொல் லவில் லை. எங் கள் ஊருக்கு நேராகச் செல் லும் பேருந்து இனி மூன் று
மணிக்குத்தான் .

இப்பொழுது மணி ஒன் றுதான் ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்த


உணவகத்தில் சென் று உணவருந்திவிட்டு வெளியே வரும் போது, “சார்…
சார்… பசி எடுக்குது சார்… ஒரு அம் பது பைசா குடுங் க சார்.. சார்..” என்
மூத்த மகனைவிட கொஞ்சம் பெரியவனா இருப்பான் . கிழிந்த சட்டை,
கலைந்த முடி இப்படி வழக்கமாக பிச்சை எடுப்பவர்களின் கோலத்தில்
இருந்த ஒரு பையன் எங் கள் பின் னே கெஞ்சியபடி வந்தான் .

‘பாவம் இந்த பையன் . படிக்க வேண் டிய வயதில் இப்படி பிச்சை


எடுத்துக்கொண் டு அலைகிறானே. இவனுடைய தாய் தகப்பனுக்கும்
சரியான வேலை எதுவும் கிடைக்கவில் லையோ என் னவோ? ஒருவேளை
தாய் தகப்பனே இல் லையோ என் னவோ? பசிக்குது என் கிறான் . சரி ஒரு
ரூபாய் கொடுத்தேன் . அவனுடைய முகத்தில் ஒரு சந்தோசம் .

“இந்தமாதிரி பையனுகளுக்கெல் லாம் குடுக்கவே கூடாது தெரியுமா?


சின் னஞ்சிறுசுகள பிச்ச எடுக்க உட்டுட்டு தாயும் தகப்பனும் இவம் பிச்ச
எடுத்துட்டு வாரத வாங் கிச் சாப்புட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்குதுங் க.
இவனுக்கு பிச்ச போட்டா, இவனுக்கும் இதேத் தொழிலாப் போகும் . இந்த
வயசுல பிச்ச எடுக்கனும் னு இவந்தலைல எழுதி இருக்குது பாவம் ” என்
மனைவி கோபமாக ஆரம் பித்து பாவமாக முடித்தாள் . “ஆமா இவந் தலைல

https://www.printfriendly.com/p/g/gjxTrd 2/5
2/27/24, 7:10 PM நிழலும் நிஐமும்

எழுதி இருக்கு! யாரு எழுதுறது? எல் லாம் நம் ம எழுதுறதுதான் . ஏங் கூடப்
படுச்சவனெல் லாம் இன் னைக்கு கைநெறய் யாச் சம் பளம் வாங் கிக்கிட்டு
சொகுசா இருக்கைல நாமட்டும் நாயிபடாத பாடு பட்டுக்ககுட்டு
இருக்கம் ல. அப்படித்தான் . பாவம் இந்தப் பையன் . நல் ல புத்திசாலியான
பையனா இருப்பாம் னு நெனைக்கேன் . அவங் கண் ணப்பாத்தாலே
தெரியுது. நம் ம குடுக்குற இந்த ஒரு ரூவாய வச்சு என் னத்த வாங் க
முடியும் ? ஏதோ இப்பிடி ஒரு நாலு பேரு குடுத்தா எதுனாச்சும் வாங் கிச்
சாப்புட்டுக்குவான் .” மனiவியிடம் சொன் னேன் .

‘துணிக்கடைல அவ் வளவு ரூபா செலவழிச்சுத் துணிமணி எடுத்தமே… மீதி


ரூபாகூட இருக்குதெ… கிறிஸ் துமஸ் கு நம் ம பிள்ளைகளுக்கு இவ் வளவு
செலவு செய் யும் போது இந்தப் பையனுக்கு ஒரு டிரஸ் எடுத்துக்
குடுக்கலாமே… அட ஒரு டிரஸ் எடுக்கவேண் டாம் . நம் ம நல் லா வகுறு
நெறய் யாச் சாப்புட்டுட்டு வரலை அந்தப் பையன் பாவம் பசிக்கிதுன் னு
சொன் னப்ப ரெண் டு இட்லி எதுனாச்சும் வாங் கிக் குடுத்துருக்கலாமே…
வெறும் ஒத்த ரூவாயக் குடுத்துட்டு வந்துட்டமே…’

‘ஆமா இதுவே பெருசு. செலபேரு இதுகூட குடுக்கமாட்டாங் க. கஞ்சப்


பெயலுக. அவெ அம் பது பைசாத்தானக் கேட்டான் . நானு ஒரு ரூவா
குடுக்கவும் அவனுக்கு ரொம் பா சந்தோசமாத்தான இருந்துச்சு. நானும்
பெரிய பணக்காரனா என் ன? ஏதோ ஏந்தகுதிக்கு இம் புட்டுத்தான் செய் ய
முடியும் .’ ‘பள்ளிக்கூடத்துல பிள்ளைங் க கிட்டமட்டும் கிறிஸ் துமஸ்
சமயத்துல நம் ம மத்தவுங் களுக்கு உதவி செய் யனும் னு வாய் கிழிய
சொல் லிட்டு இப்ப இங் க ஒரு நல் ல வாய் ப்பு கெடச்ச பெறகும் செய் யாமெ
வாரமே… அந்தப் பையனுக்கு ஒரு கால் ச் சட்ட, ஒரு மேச்சட்ட
எடுத்துக்குடுத்துட்டு, சாப்பாடும் ; வாங் கிக் குடுத்துட்டு வந்துருக்கலாம் .
சரி அடுத்த கிறிஸ் துமஸ் கு கண் டிப்பா ஒரு கஸ் டப்படுற பையனுக்குச்
செய் யனும் ’. பேருந்து நிலையம் சென் று சேரும் வரையில் எனக்குள்
பலவிதமான யோசனைகள் .

பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த சிமெண் டு பெஞ்சில் நானும் என்


மனைவியும் அமர்ந்துகொண் டோம் . எங் கள் ஊர்ப் பேருந்து வருவதற்கு
இன் னும் அதிக நேரம் இருந்தது. அங் கே அமர்ந்தபடி சுற்றிலும் நடப்பதை
வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தோம் .

அப்போது சற்று தூரத்தில் மக்கள் கூட்டாக நின் று எதையோ


பார்த்துக்கொண் டிருப்பதைக் கண் ட நான் அது என் வென் று பார்;பதற்காக
எழுந்தேன் . உடனே என் மனைவி சொன் னாள் .
“எங் க கௌம் பிட்டீங் க? பஸ் சு இப்ப வந்துரும் . இங் ன இருந்தாத்தான்
ஒக்கார எடம் புடிக்க முடியும் . போயிட்டு சீக்கிரமா வந்து சேருங் க.
அப்பிடியே இந்தப் பெயல் களுக்குத் திங் கிறதுக்கு எதுனாச்சும் வாங் கிட்டு
வாங் க. போன ஒடனே வந்து பையத்தான் பாப்பானுங் க.”

https://www.printfriendly.com/p/g/gjxTrd 3/5
2/27/24, 7:10 PM நிழலும் நிஐமும்

நேராகப் பழக்கடைக்குச் சென் ற நான் கொஞ்ம் பழம் வாங் கிக்


கொண் டேன் . சின் னவனுக்குப் பால் கோவா மிகவும் பிடிக்கும் என் பதால்
கால் கிலோ பால் கோவா வாங் கிக் கொண் டேன் . அப்படிய அருகிலிருந்த
கடையில் பிஸ் கெட் பாக்கெட் இரண் டும் , வெளியே இருந்த கடையில்
அப்போதுதான் சூடாகப் போட்டுக்கொண் டிருந்த பத்து வடைகளும்
வாங் கிக்கொண் டு வந்தேன் . நேராக வந்த மனைவியிடம் கொடுத்துவிட்டு
வேறு எதுவும் வேண் டுமா என் று கேட்டபோது, கொஞ்சம் பூ வாங் கிட்டு
வரக்கூடாதா என் றாள் . அவள் கேட்காமலே வாங் கிக்
கொடுத்திருக்கலாமே என் றெண் ணியபடி அருகிலிருந்த பூக்கடையில்
பூவை வாங் கிக் கொடுத்துவிட்டு கூட்டத்தைப் பார்க்கக் கிளம் பினேன் .

“இனி எங் க போறீங் க? அதான் எல் லாம் வாங் கியாச்சே. பஸ் சு வந்துரப்
போகுது. இங் ன ஒக்காருங் க. சொல் லச் சொல் லப் போறதப் பாரு,” என் று
என் மனைவி சொல் லிக்கொண் டிருக்கும் போதே கூட்டத்தை நோக்கிச்
சென் றேன் .

பல ஊர்களிலிருந்தும் வந்த மக்கள் சுற்றி நின் று வேடிக்கை பார்க்க


நடுவில் ஒரு பெண் கழுத்தைச் சுற்றி ஒரு மேளத்தைத்
தொங் கவிட்டுக்கொண் டு அதை அடித்துக்கொண் டிருந்தாள் . அவளுக்கு
அருகே வாட்டசாட்டமான ஒரு ஆண் அந்த மேளச் சத்தத்திற்கு ஏற்றபடி
ஆடிக்கொண் டே கையில் ஒரு நீ ண் ;ட சவுக்கை வைத்து தன் முதுகிலே
ஓங் கி ஓங் கி அடித்துக்கொண் டிருந்தார். முதுகில் இரத்தம் வழிந்து
கொண் டிருந்தது. ஒரு காலில் பேண் டை முழங் கால் வரை தூக்கி விட்டிருந்த
அவர், மேலெ சட்டை எதுவும் போடவில் லை. இப்படி பல இடங் களில்
அடித்து அடித்தோ என் னவோ முதுகில் ஆங் காங் கே காய் ந்துப்
போனதுபோல் தெரிந்தது. வியர்த்து ஒழுகியது. முதுகிலும் கைகளிலும்
மாறி மாறி அடித்துக் கொண் டிருந்தார். கால் களில் கட்டியிருந்த சலங் கை,
அவரது ஆட்டத்திற்கு ஏற்ப ‘சல் ’ ‘சல் ’ எனக் குலுங் கியது. அவருக்குப்
பக்கத்திலேயெ மற்றொரு சிறுவன் அவரைப் போலவே பேண் ட் மட்டும்
அணிந்துகொண் டு மேலே சட்டை எதுவும் போடாமல் சின் ன சவுக்கு
ஒன் றை வைத்துக்கொண் டு பளார் பளார் என் று அவனது முதுகில்
அடித்துக் கொண் டிருந்தான் .

அவனும் கால் களில் சலங் கை கட்டிக் கொண் டு மேளச் சத்தத்துக்கு ஏற்ப


கால் களை மாற்றி மாற்றிப் போட்டு ஆடிக்கொண் டிருந்தான் .
ஆடிக்கொண் டெ அடித்தான் . அடித்துக்கொண் டெ ஆடினான் .அவன்
கால் களிலும் கைகளிலும் இருந்த வேகத்தையும் , அவனது அம் மா அடித்த
மேளத்துக்கு ஏற்றடி அவன் ஆடிய ஆட்டத்தையும் அனைவரும்
ரசித்தார்கள் . என் னால் அதை ரசிக்க முடியவில் லை. ‘இதென் ன
பொழப்புன் னு இப்பிடிப் போட்டு ஒடம் ப ரணமாக்கிட்டு கெடக்காங் க!
இந்த ஆளோட ஒடம் பு நல் லாத்தானே இருக்குது. எதுனாச்சும் வேல செஞ்சு
பொழைக்கலாமே… இவரு சாட்டைய வச்சுக் கொடூரமா அடுச்சுக்குறது
மட்டுமில் லாமெ இந்தச் சின் னப் பையனயும் இப்பிடி போட்டு உசுர
எடுக்காங் களே.. சே… இந்த மத்தியான வெயிலுல இப்பிடி வேர்த்து

https://www.printfriendly.com/p/g/gjxTrd 4/5
2/27/24, 7:10 PM நிழலும் நிஐமும்

ஒழுகைல இப்பிடித் தோலப் பிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டு… பாக்கவே


ரொம் பாக் கண் றாவியா இருக்குது. இதவேற இம் புட்டுப் பேரு சுத்தி நின் னு
வேடிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கோம் !

ஒரு மனுசன் அவனப் போட்டு அடுச்சுக் காயப்படுத்துறத இம் புட்டுக்


குரூரமா பார்த்து ரசிககிறத நெனைக்கைல என் னமோ மாதிரி இருக்குது.
அதுலயும் அந்தச் சின் னப் பையனப் பாத்தா நெஞ்சே கனத்துப் போகுது.’

எனக்குள் மண் டிய பலவித சிந்தனைகளோடு கூட்டத்தில் இருந்தவர்களை


ஒருமுறைச் சுற்றிப் பார்த்தேன் . பலவிதமான முகங் கள் . பலவிதுமான
முகபாவனைகள் . கூட்டத்தின் முனபகுதியில் நின் ற சிறுவனைப்
பார்த்ததும் அவனை அடையாளம் கண் டு கொண் டேன் . கொஞ்ச
நேரத்துக்கு முன் னால் என் னிடம் பிச்சை கேட்ட சிறுவன் ! இவன் இங் கே
என் ன செய் கிறான் என் றெண் ணியபடி ஆட்டத்தை விட்டுவிட்டு அவனைப்
பார்த்துக்கொண் டிருந்தேன் . அடித்துக் கொண் டிருந்த அந்தச்
சிறுவனையே அவன் பார்த்துக்கொண் டிருந்தான் .

அவன் முகம் சஞ்சலப்படுவதுபோல எனக்குத் தோன் றியது. அந்தச்


சிறுவனுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும் .
இடையிடையே சிலர் அந்தப் பெண் அருகே விரித்து வைக்கப்பட்டிருந்த
துணியில் சில சில் லறைக் காசுகளைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சென் றார்கள் . அவள் மேளத்தை அடித்துக்கொண் டே கூட்டத்தைச் சுற்றிச்
சுற்றி வந்தாள் . சிறிது நேரம் சென் றபின் அந்தச் சிறுவனும் , அவனது
அப்பாவும் சாட்டையால் அடிப்பதை நிறுத்திவிட்டு கூட்டத்தைச் சுற்றி
வந்து கையேந்தி காசு கேட்டார்கள் . சிலர் காசு கொடுத்தார்கள் .
வேறுசிலர் வெறுமனே கையை விரித்தார்கள் .

என் னிடம் பிச்சை எடுத்த சிறுவன் நேராக உள் ளே சென் றான் .


சாட்டையால் அடித்துக்கொண் டிருந்த அந்தச் சிறுவனிடம் சென் று அவன்
கையைப் பிடித்தான் . அன் று அவன் பிச்சையெடுத்து வைத்திருந்த
அத்தனை காசையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கூட்டத்தோடு
கூட்டமாகப் போய் விட்டான் . என் னை யாரோ சாட்டையால் அடிப்பதுபோல
இருந்தது.

– Dec 2006

https://www.printfriendly.com/p/g/gjxTrd 5/5

You might also like