Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 16

வணக்கம் மக்களே

இந்த வீடியோல நாம பாக்க போறது ஒரு Post apocalyptic movie. பொதுவா ஒரு post apocalyptic movie

அப்டினாலே ஒரு பேரழிவுக்கு பின்னான மக்கள் உயிர் வாழ்றதுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்கங்குறத base

பண்ணி தான் நிறைய படங்கள் வந்துருக்கு. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான படம்னே சொல்லலாம்.

மிகப்பெரிய போருக்கு அப்பறமா மக்கள் அமைதியை கடைபிடிக்கனும் அதோட இனிமேல் போர் வராமல்

தடுக்கவும் ஒரு புதிய வாழ்க்கை முறைய பின்பற்றி வாழ்றாங்க. மனிதர்களில் இந்த உலகில் தங்களுக்கான

இடம் எதுனு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் எதிர்காலம் சாதகமாக அமையும் அப்படிங்குற ஒரு கருத்தை

அடிப்படையா வச்சு ஒரு system உருவாக்குறாங்க. அதுதான் faction system. அதாவது நம்மூர்ல இருக்குற

community மாதிரி. ஏன்னா அவங்க அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருந்தா நமக்குள்ள எந்தவொரு

போட்டியும் பொறாமையும் கோபமும் வராது அப்படினு சொல்லி இந்த system ah அவங்க வச்சுருப்பாங்க.

இது நடக்குறது Chicago நகரத்துல அதோட நகரத்தை சுத்தி ஒரு மிகப்பெரிய fence ம் இருக்கும் பாதுகாப்பு

கருதி அதை தாண்டி யாரையும் போக விடமாட்டாங்க. இதுல மொத்தமாக 5 faction இருக்கும். ஆனால்

அவங்களுக்குள்ள எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இருக்காது. ஏன்னா அந்த 5 faction ம் சேர்ந்தா தான் அந்த

சமூகமே இயங்கும் இதுல ஒன்னு செயல்படாம இருந்தாலும் சமூகத்துல பிரச்சினை வரும். அதோட

இன்னொரு பிரிவும் இருப்பாங்க அவங்க தான் factionless. இவங்க சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களா

இருப்பாங்க. அதுக்கு நிறைய காரணம் இருக்கு அத போக போக பாக்கலாம். சரி இப்போ அந்த 5 faction

என்னென்னனு பார்ப்போம்.

முதலில்

Abnegation - இவங்க வந்து சுயநலமில்லாத மக்களாகவும் இரக்க குணம் கொண்ட மக்களாகவும் சேவை

மனப்பான்மை கொண்டவங்களாகவும் இருப்பாங்க. Factionless மக்களை பராமரிக்கவும் செய்வாங்க.

இதனாலேயே இந்த சமூகத்துல அரசாங்கத்த வழிநடத்துற பொறுப்பு இவங்ககிட்ட கொடுக்கப்படிருக்கும்.

இவங்க தான் Governing faction. இவங்களோட தலைவர் தான் Marcus. நம்ம ஹீரோயினோட அப்பா இந்த

marcus கூடதான் வேலை செய்வாரு.


இரண்டாவது

Candor - இவங்க நீதித்துறைய வழிநடத்துறவங்க. இவங்க எப்பவும் உண்மையை மட்டும் தான் பேசுவாங்க.

சமூகத்தில் எங்க தவறு நடந்தாலும் அது இவங்ககிட்ட தான் வரும். அதோட இவங்க truth serum னு ஒன்னு

வச்சிருப்பாங்க அத குற்றவாளி கூண்டுல இருக்கவங்களுக்கு கொடுத்தா அவங்க நடந்த உண்மையை மட்டுமே

பேச ஆரம்பிச்சுடுவாங்க.

மூன்றாவது

Erudite - இவங்க அறிவியல் துறையை வழிநடத்துறவங்க. இந்த faction ல இருக்கவங்க எல்லாரும் அறிவில்

சிறந்தவங்களாக இருப்பாங்க. இவங்க எல்லாத்தையும் ஆதாரப்பூர்வமான முறையிலும் மற்றும் தர்க்க

ரீதியாகவும் தான் அணுகுவாங்க

நான்காவது

Amity - இவங்க அன்பான மக்களாக இருப்பாங்க அதோட விவசாயமும் செய்வாங்க. சமூகத்தோட

ஒட்டுமொத்த உணவு உற்பத்தியும் இவங்ககிட்ட தான் இருக்கும். ஆனால் இவங்க வாழ்ற இடம் மட்டும்

நகரத்துல இருக்குற compound க்கு வெளில தான் இருக்கும் ஏன்னா நகரத்துக்கு நடுவுல விவசாய நிலம்

இருக்காது. அதோட இந்த மக்கள் மன்னிக்கும் குணம் கொண்டவங்களாகவும் ஒருவருக்கொருவர்

அன்யோன்யமாகவும் அமைதியான சூழல்லயும் வாழ்வாங்க.

இறுதியாக

Dauntless - இவங்க தான் இந்த சமூகத்துல காவல்துறை. ஒட்டுமொத்த சமூகத்தோட பாதுகாப்புக்கான

பொறுப்பு இவங்க தான். நாம தினமும் செய்ற இயல்பான செயலை கூட இவங்க கொஞ்சம் வித்தியாசமா

செய்வாங்க அதுவும் அந்த செயல் துணிச்சல் மிக்கதாக இருக்கும்.

நம்ம ஹீரோயின் Tris அப்பறம் அவங்களோட சகோதரன் caleb இதுல Abnegation ல இருக்கவங்க. நம்ம

ஹீரோயினுக்கு சின்ன வயசுல இருந்தோ Dauntless மேல ஒரு ஈர்ப்பு இருக்கும். அதோட அவங்க அவங்க

அவங்க அவங்களோட இடம் எதுனு தெரிஞ்ச போதிலும் நம்ம ஹீரோயினுக்கு மட்டும் இந்த விசயம்

கொஞ்சம் குழப்பமாவே இருக்கும். இதுல இருந்துதான் கதை ஆரம்பிக்குது.


அடுத்து இந்த faction system மக்களை எப்படி தேர்ந்தெடுத்து சேர்த்துகுதுனு பார்ப்போம். இயல்பாவே அந்த

அந்த மக்கள் அந்தந்த faction ல குடும்பங்களாக வாழ்வாங்க. இதுல இருக்க குழந்தைங்க ஒரு குறிப்பிட்ட

வயசு வந்ததுக்கு அப்பறம் தனக்கு விருப்பமான faction அ தேர்ந்தெடுக்க ஒரு choosing ceremony

வைப்பாங்க. நம்மூர்ல 18 வயசுக்கு பிறகு ஓட்டு போடும் உரிமை மாதிரி. அந்த நிகழ்வுல குறிப்பா ஒரு

விசயத்த தாரக மந்திரம் மாதிரி சொல்வாங்க அதுதான் 'Faction before blood' அதாவது 'சமூகத்துக்கு

பின்னர்தான் உறவுகள்'. இதன் அடிப்படையில் ஒரு புது faction ah தேர்ந்தெடுக்குறவங்க இனிமேல் அவங்க

குடும்பத்த விட்டுட்டு அவங்க புது faction oda தான் வாழனும். ஏன்னா அப்பதான் அந்த faction system

உடையாம இருக்கும்னு இத அவங்க கடைபிடிப்பாங்க. அந்த ceremony ல தனக்கு பிடிச்ச faction ah

தேர்ந்தெடுக்க அவங்களுக்கு எந்த விதமான குழப்பமும் இருக்க கூடாதுனு சொல்லி அந்த choosing ceremony

நடக்குறதுக்கு முன்னாடி எல்லாரையும் ஒரு சோதனைக்கு அனுப்புவாங்க. அங்க ஒரு lab மாதிரியான இடத்துல

அவங்க மூளைக்குள்ள ஒரு simulation மூலமா அவங்களோட subconscious mind la தான் இந்த சோதனை

நடக்கும். அதுல வர்ற ரிசல்ட் முடிவு அவங்க உண்மையிலேயே எந்த மாதிரியான குணம்(அதாவது எந்த

faction னோட குணம்) கொண்டவர்கள்னு தெரியவரும். இத வச்சு தான் எல்லாரும் அந்த choosing ceremony ல

தங்களோட faction ah choose பண்ணுவாங்க. இந்த சோதனைக்கு நம்ம ஹீரோயின் போகும் போது என்ன

நடக்குதுனா அவங்க subconscious mind ல நடக்குற சோதனைகளை மிகவும் வித்தியாசமா கையாளுறாங்க.

சோதனை முடிஞ்சதும் சோதனைய நடத்துனவங்க சொல்றாங்க நீ வீட்டுக்கு போய் சோதனை நேரத்துல உனக்கு

உடம்பு சரியில்லாம போனதால நான் உன்ன அனுப்பிட்டேனு சொல்ல சொல்றாங்க. ஆனால் அவங்க

சொல்லும் போது அவங்க முகத்துல ஒருவித பதட்டம் தெரியுது 'சோதனைல எனக்கு என்ன நடந்ததுனு'

உண்மைய சொல்ல சொல்றாங்க Tris அதுக்கு அந்த லேடி ஹீரோயின் கிட்ட அவங்களோட test ரிசல்ட் வந்து

Abnegation,Erudite, Dauntless மூணும் ரிசல்ட்டா வந்ததுனு சொல்றாங்க. இது ரொம்பவே அரிதான நடக்க

கூடியதுன்னும் இத நாங்க Divergent னு சொல்லுவாங்கனு சொல்றாங்க. இத பத்தி வேற யார்ட்டயும் சொல்ல

வேணாம்னும் சொல்றாங்க பெத்தவங்ககிட்ட கூட. பொதுவா ஒரு ஆளுக்கு ஒரு faction தான் ரிசல்ட்டா வரும்.

அப்படிப்பட்ட நிலைமைல இது ஹீரோயினுக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இத

பாத்துட்டு ஹீரோயின் 'இல்ல.. இப்படி நடக்க வாய்ப்பில்ல.. நான் இத வச்சுதான் என்னோட முடிவ

எடுக்கணும்னு சொல்றாங்க'. அதுக்கு அந்த லேடி சொல்றாங்க அந்த சோதனை உன்மேல செயல்படலனு

நீயேதான் உன் முடிவ எடுக்கணும்னு சொல்லிட்டு ஹீரோயிகிட்ட உன்னோட faction result பத்தி யாராவது

கேட்டா உனக்கு Abnegation தான் வந்ததுனு சொல்ல சொல்றாங்க அதத்தான் நான் manual ah பதிவு செய்ய

போறேன்னு சொல்றாங்க. இதுக்கு அப்பறம் ஹீரோயினும் அவங்க சகோதரனும் வீட்டுக்கு போயிடுறாங்க.

அங்க ராத்திரி சாப்பிடும் போது ஹீரோயின்கிட்ட அப்பா அம்மா என்ன நடந்ததுனு கேட்கும்போது அந்த

testing லேடி சொன்னத அப்படியே வீட்ல சொல்றாங்க அதாவது எனக்கு உடம்பு சரியில்லாததால் நான் அங்க

இருந்து வந்துட்டேன்னு. அதுக்கு அவங்க அப்பா சொல்றாங்க இத ஏன் அங்க இருக்க யார்ட்டயுமே நீ
சொல்லல உனக்கு இங்க நடக்குற பிரச்சினையோட தீவிரம் தெரியல நமக்கு கெட்டபேர உண்டாக்கனும்னு

நிறைய பேர் வேலை செய்றாங்க அப்படி இருக்கும்போது இந்த மாதிரி நடந்தா அது நமக்கு தான் பிரச்சினைனு

சொல்றாரு. நமக்கு கெட்டபேர உண்டாக்கனும்னு நினைக்குறவங்க யாருனு Tris கேட்குறாங்க அதுக்கு அவங்க

அம்மா அது Erudite தான் அவங்களுக்கு அவங்க தான் governing faction ah இருக்கனும்னு

நினைக்குறாங்கனும் அதோட அவங்க தலைவரான Marcus யே சாய்க்க பாக்குறாங்கனும் சொல்வாங்க.

அதுக்கு Tris எப்படினு கேட்குறாங்க அதுக்கு அவர்மேல உள்ள ஒரு பழைய குற்றச்சாட்ட தான் அவங்க

காரணமா சொல்றாங்க அதாவது அவர் தன்னோட மகன துன்புறுத்துனதாவும் அதுனாலதான் அந்த பையன்

வேற faction க்கு போய்ட்டானு சொல்றதா சொல்வாரு. ஆனால் அது உண்மை கிடையாதுனு Tris சோட அப்பா

அம்மாவே சொல்றாங்க. அங்க மறுநாள் நடக்கப்போற choosing ceremony ல faction ah தேர்ந்தெடுக்கும்

போது நம்ம குடும்பத்தையும் ஞாபகத்தில் வச்சுக்கனும் ஹீரோயினோட சகோதரர் சொல்றாரு.

மறுநாள் choosing ceremony கூடுது அங்க எல்லா faction னை சேர்ந்தவங்களும் ஒட்டுமொத்தமா கூடுறாங்க.

அங்க Erudite faction னோட leader jeanine ன பாக்குறாங்க tris சோட அப்பா அம்மா. அங்க jeanine அவங்க

பசங்ககிட்ட இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான நாள்னு சொல்றாங்க அதோட உங்களுக்கு புடிச்ச faction ah

choose பண்ண சொல்றாங்க. அதுக்கு ஹீரோயின் இது நாங்க தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடையாது

எங்களுக்கு test result என்ன வருதோ அதத்தான நாங்க தேர்ந்தெடுக்கனும்னு சொல்றாங்க. அதுக்கு Jeanine

இருந்தாலும் உங்களுக்கு புடிச்சத தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்குனு சொல்றாங்க அதுக்கு

Tris ஆனால் அந்த சுதந்திரத்தை நீங்க விரும்பலைலனு சொல்றாங்க(ஏன்னா சுதந்திரமா முடிவெடுக்க

முடியும்னா எதுக்கு அதுக்கு முன்னாடி தேவையில்லாம ஒரு test. Test result ங்குறது மறைமுகமாக நீ

இங்கதான் இருக்கனும்னு சொல்ற மாதிரிதான அப்படிங்குறத மனசுல வச்சுதான் இந்த கேள்விய Tris

கேட்பாங்க). அதுக்கு jeanine சொல்றாங்க எங்களுக்கு தேவை நீங்க உண்மையிலேயே யாருங்குறத உணர்ந்து

சரியா முடிவெடுக்கனும்னு தான் ஏதோ ஒரு எண்ணவோட்டத்துல நாம எதுவா இல்லையோ அதுதான் நாமனு

நம்பி தவறான முடிவெடுக்க கூடாதுனுதான்னு நீங்க சரியான முடிவ எடுப்பிங்கனு நம்புறேனு சொல்லிட்டு

போறாங்க. அதோட தலைவர் Marcus வந்து இந்த நிகழ்வுக்கு அப்பறம் நீங்க இனிமேல் அப்பா அம்மாவை

சார்ந்து வாழமாட்டிங்க இனிமேல் நீங்க இந்த சமூகத்துல ஒரு குடிமகனாக ஆயிடுவிங்கனு சொல்றாரு.

எல்லாரும் அவங்கவங்களுக்கு புடிச்ச faction ah choose பண்றாங்க. Choosing எப்படி நடக்கும்னா அங்க

அஞ்சு faction ல ஒவ்வொரு faction oda பண்பையும் குறிக்கிற மாதிரி அஞ்சு பொருட்களை அஞ்சு bowl

வச்சுருப்பாங்க. அதுல ஒரு கத்திய வச்சு தன்னோட கைய லேசா கிழிச்சு அந்த இரத்தத்தை எந்த bowl ல

சிந்துறாங்ககளோ அதுதான் choosing. அந்த சமயத்துல ஹீரோயினோட சகோதரர் Erudite faction ah choose

பண்றாரு. அப்பறம் கடைசியாக ஹீரோயின் தேர்ந்தெடுக்க வர்றாங்க. இந்த சீன் கொஞ்சம் சுவாரஸ்யமாவே

இருக்கும். ஹீரோயின் எத choose பண்ண போறாங்கனு நமக்கு ஆர்வமாக இருக்கும். Tris தன்னோட சொந்த
faction ana Abnegation ah தேர்ந்தெடுக்க போற மாதிரி காமிப்பாங்க ஏன்னா அதுக்கு நேராதான் தன்னோட

கைய கிழிச்சு இரத்தத்தை சிந்த தயாரா இருப்பாங்க ஆனால் இரத்தம் கீழ சிந்தும் ஒரு நொடிக்கு முன்பாவே

ஹீரோயின் கைய நகர்த்தி தனக்கு புடிச்ச Dauntless faction ah தேர்ந்தெடுக்குறாங்க. தன்னோட இரண்டு

பிள்ளைகளும் வேற ஒரு faction க்கு போயிட்டத பாக்குற அவங்க அப்பா அம்மா அழுகுறாங்க. இதுக்கு

அடுத்து அவங்க சகோதரன காமிக்க மாட்டாங்க. ஆனால் ஹீரோயின் தன்னோட புது faction oda போறத

காமிப்பாங்க. இதுலர்ந்து கதை மொத்தமா Tris ah சுத்தியும் அவங்களோட புது faction னான Dauntless சயும்

சுத்தியும் மட்டும்தான் இருக்கும். .இதுல அவங்களோட புது இடத்துக்கு பயணப்படுற காட்சிகள்

அருமையாவும் Dauntless ஸ்டைல்லயும் இருக்கும். இத நான் சொல்ல விரும்பல நீங்க படத்துலயே

பார்த்திங்கனாதான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அடுத்து எல்லாரும் அவங்க எல்லாரும் அதாவது

புதுசா(Dauntless)ச தேர்ந்தெடுத்தவங்க dauntless ஏரியாவோட entrance ல நிக்குறாங்க அந்த entrance ஒரு

பெரிய building oda மாடில இருக்கும். அங்க Dauntless தலைவர்கள்ல ஒருத்தரான Eric எல்லார்கிட்டயும்

தன்னை அறிமுகப்படுத்திக்கிறாரு. Dauntless குள்ள வரனும்னா இதுதான் ஒரே வழினு சொல்லி ஒரு பெரிய

ஓட்டைய காமிச்சு இதுக்குள்ள குதிக்க சொல்றாரு. அப்படி குதிக்கலனா உங்களுக்கு இங்க இடமில்லைனு

சொல்றாரு. யாரு முதலில் குதிக்க போறதுனு கேட்குறாரு. அப்போ எல்லாரும் கொஞ்சம் தயங்குனதுக்கு

அப்பறமா நம்ம ஹீரோயின் முன்வராங்க.

அவங்க குதிச்சுதுக்கு அப்பறமா பாதுகாப்பா கீழ போயிடுறாங்க ஆனால் அது எப்படினு படம் பார்க்கும்போது

நீங்களே பாருங்க. அப்படி குதிக்குற Tris கீழ நம்ம ஹீரோவ பாக்குறாங்க அவரோட பேரு Four. ஹீரோ

அவங்ககிட்ட பேர கேட்கும்போது ஹீரோயின் அமைதியா இருக்காங்க. அதுனால ஹீரோ சொல்றாரு பேர்

சொல்றதுக்கு கஷ்டமா இருந்தா புதுசா ஒன்னு நீங்களே வச்சுக்கோங்க. இப்ப விட்டா இனிமேல் வாய்ப்பு

கிடைக்காதுனு சொல்றாங்க. அதுனால ஹீரோயின் அதுவரைக்கும் Beatrice னு இருந்த தன்னோட பேர சுருக்கி

Tris னு வச்சுகுறாங்க. candor ல இருந்து dauntless ல ஹீரோயின் கூட புதுசா சேர்ந்த ஒரு பொண்ணு கொஞ்சம்

க்ளோசா இருக்காங்க. அவங்க பேரு christina கொஞ்சம் ஜாலி டைப்பா இருப்பாங்க. ஆரம்பத்திலேய

ஹீரோகிட்ட கொஞ்சம் நக்கலா பேசி வாங்கி கட்டிக்கிறாங்க christina.

புதுசா ஒரு faction ல இருந்து இன்னொரு faction க்கு போறவங்கள அவங்களோட புது இடத்துல Initiates னு

சொல்வாங்க அதாவது அங்க இருக்குற புது வாழ்க்கை முறையை கத்துகிட்டு அந்த மக்களோட மக்களா

மாறனும்னு முதல்ல training குடுப்பாங்க அந்த training period முழுமையடையும் வரைக்கும் இவங்க initiates

தான்.
அப்பறம் ஹீரோ dauntless ல புதுசா சேர்ந்த எல்லாருக்கும் இடத்தை சுத்தி காமிக்கிறாரு. அப்படியே Pit

அப்படிங்குற ஒரு இடத்தையும் காமிச்சி இதுதான் dauntless oda life centre னு சொல்றாரு. எதுனாலும்

எல்லாரும் அங்க தான் கூடுவாங்க. இதுக்கு அப்பறமா dauntless initiates அவங்களோட பழைய ட்ரெஸ்

எல்லாத்தையும் தீயில போட்டுட்டு dauntless ட்ரெஸ்கள போட்டுகிட்டு அவங்க எல்லாரும் மொத்தமா சாப்டுற

இடத்துக்கு போறாங்க. அங்க நடக்குற conversation ல Tris,Christina,Al,Will நாலு பேரும் ஹீரோ பக்கத்துல

உட்கார்ந்து ஒவ்வொருத்தரும் மத்தவங்களோட பழைய faction ah கிண்டல் பண்ற மாதிரி பேசிக்குறாங்க. அத

பாத்துட்டு ஹீரோ இனிமேல் உங்க பழைய faction பத்தி பேசுறது நான் கேட்க கூடாது. இனிமேல் நீங்க

dauntless மட்டும்தான் னு கொஞ்சம் strict ah சொல்றாரு. இந்த சமயத்துல ஹீரோயின் ஹீரோகிட்ட நீங்க

dauntless லயே பொறந்திங்களா இல்ல வேற faction ல இருந்து மாறி வந்திங்களானு கேட்க என்கிட்ட எந்த

தைரியத்துல இதுலாம் கேட்குறனு சொல்லி கொஞ்சம் டென்சனாயிடுறாரு. ஹீரோயின் அமைதியாயிடுறாங்க.

அப்பறம் dauntless முதன்மை தலைவர் வந்து புதுசா சேர்ந்தவங்க எந்திரிச்சு நிக்க சொல்றாரு அவங்களும்

நிக்குறாங்க. அவங்ககிட்ட 'நீங்கள் எல்லோரும் ஒரு போராளி கூட்டத்தோட சேர்ந்திருக்கிங்க உங்கள்

பொறுப்பு இந்த நகரத்தையும் அதோட மக்களையும் பாதுகாக்குறதுதான். மத்தவங்களுக்கு ஒன்னுனா தன்னை

முன்னிறுத்த கூடிய வீரத்தை நாங்கள் நம்புறோம். அத நீங்க மதிக்கனும். நாங்க பெருமைபடுறமாதிரி

நடந்துகோங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு.

அப்பறம் எல்லாரும் தூங்க போயிடுறாங்க. விடியற்காலைல ஹீரோ வந்து எல்லாரையும் இரண்டு நிமிடத்துல

Pit ல இருக்கனும்னு சொல்லிட்டு போறாரு. அதேமாதிரி எல்லாரும் வந்துடுறாங்க. இங்க இருந்துதான்

இவங்களோட training ஆரம்பிக்குது.

ஹீரோ உங்க training ல இரண்டு கட்டம் இருக்கு. முதல்ல physical அடுத்தது mental.

Physical test ல உங்க உடலை எந்தளவுக்கு strain முடியுமோ அந்தளவுக்கு பண்ணி உங்களுக்கு தற்காப்பு

கலைகளையும் அதோட நுட்பங்களையும் சொல்லி தருவோம்.

Mental test ல உங்க மனோபலத்தை எந்தளவுக்கு strain பண்ண முடியுமோ அந்தளவு பண்ணி உங்களோட

பயத்தை எதிர்கொள்ள கற்றுத்தருவோம்னு சொல்வாரு.


உங்களை (அதாவது initiates ah) dauntless born (அதாவது dauntless ல பொறந்து dauntless லயே

வாழுறவங்க) ல இருந்து விலக்கி தனியா தான் ட்ரெயின் பண்ணுவோம். ஆனால் உங்கள ranking பண்ணும்

அதாவது மதிப்பீடு செய்யும் போது அவங்க கூட சேர்த்து தான் பண்ணுவோம்.

உங்களோட மதிப்பீடை பார்த்துட்டு தான் உங்களுக்கு என்ன வேலைனு முடிவு செய்யப்படும். தலைமை

பொறுப்பா, எல்லையை பாதுகாக்குறதா, இல்லை factionless மக்கள் ஒருத்தர ஒருத்தர் அடிச்சுகிட்டு சாகாம

பாத்துக்குறதானு சொல்வாரு four.

அப்போ பக்கத்தில் இருந்து Eric இதே ranking தான் யார் வெளியேற்றப்படுவாங்கன்னும் முடிவு செய்யும்னு

சொல்வாரு அதோட அப்படி நீக்கப்படும் ஆட்கள் திரும்ப அவங்க பழைய faction க்கு போக முடியாது

அவங்க factionless ah திரிய வேண்டியதான்னும் சொல்றாரு. இத ஏன் எங்ககிட்ட சொல்லலனு சொல்றாங்க

அதுக்கு அவரு இது புது rule னு சொல்றாரு. இது அங்க இருக்கவங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கும்.

இத யாராவது முன்னாடியே எங்ககிட்ட சொல்லிருக்கனும்னு சொல்வாங்க. அதுக்கு eric ஏன் சொல்லிருந்தா

வேற முடிவ எடுத்திருப்பிங்களா? னு கொஞ்சம் நக்கலா கேட்குறாரு. நீங்க எங்கள தேர்ந்தெடுத்திங்க

இனிமேல் நாங்க தான் உங்கள தேர்ந்தெடுக்கனும்னு சொல்வாரு.

இதுக்கு அடுத்த சீன்ல இருந்து பயிற்சி தொடங்க ஆரம்பிக்குது. படத்துல ஆரம்பத்தில் இருந்தே ஹீரோயின்

கூட வம்பு பண்ணிகிட்டு ஒருத்தர் இருக்காரு அந்த கேரக்டர் தான் peter. இதுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம்

தான்.

பயிற்சினு வரும்போது சண்டை போடுறது, துப்பாக்கி சுடுறதுனு பயிற்சி போய்ட்டிருக்கு. இதுக்கிடையில eric

வந்து four கிட்ட ஒரு நிஜமான சண்டைய பாக்க தயாரானு கேட்குறாரு. அதுக்கு four இன்னும் அந்தளவுக்கு

இவங்க வரலனு சொல்றாரு. ஆனால் eric அத கண்டுக்காம dauntless entrance ல இருந்து குதிச்ச முதல்

நபரையும் கடைசி நபரையும் கூப்பிட்டு நேருக்கு நேர் மோத விடுறாரு. சண்டை பேடுறதுக்கு முன்னாடி

கடைசியா குதிச்ச லேடி நாங்க எவ்வளவு நேரம் சண்ட போடனும்னு கேட்கும்போது eric சொல்றாரு உங்கள்ல

யாராவது ஒருத்தரால தாக்குப்பிடிக்க முடியாதுங்கற வரை சண்ட போடுங்கனு. இடையில் four வந்து இல்லனா

உங்கள்ல ஒருத்தர் சரணடையும் வரை சண்டை போடுங்கனு சொல்றாரு. உடனே eric அது பழைய rule புது rule

படி யாரும் சரணடைய கூடாதுனு சொல்றாரு. Four நம்ம initiates ஆ இருந்து சண்டை போடும் போது இந்த

rule இல்லயேனு சொல்லும் போது அத கண்டுக்காம இந்த சண்டைல இருந்து உங்களுக்கு score இருக்கு

அதுனால நல்லா சண்டை போடுங்கனு eric சண்டைய தொடங்கி வைக்கிறாரு.


நம்ம ஹீரோயின் கொஞ்சம் வீக்காவே இருக்காங்க ஆனால் எதிர்ல இருக்க lady நல்லா உயரமாவும் strong ah

vum இருக்காங்க. இந்த சண்டைல நம்ம ஹீரோயின் தோத்துடுறாங்க. அதுக்கப்புறம் eric எல்லாரையும் கூப்டு

Scorecard அ காமிக்கிறாரு. எல்லாரும் அவங்கவங்க இடத்தை பார்க்குறாங்க. அதுல ஒரு லெவலுக்கு கீழ

சிவப்பு கலர்ல சிலரோட பேர்லாம் இருக்கு. அவங்க first stage ட்ரெயினிங் முடிஞ்சதும் அதே சிவப்பு

லெவல்ல இருந்தாங்கனா faction ah விட்டு வெளியேத்தப்படுவாங்கன்னும் சொல்றாரு.

இதுல 33 பேர்ல நம்ம ஹீரோயின் 32 வது இடத்துல இருக்காங்க. திரும்ப தங்குற இடத்துக்கு வந்ததும் Tris

சொல்றாங்க என்னால போட்டில ஜெயிக்க முடியாது நான் தான் இருக்கதுலயே வீக்கான ஆளுனு அதுக்கு

christina அப்போ நீ உன்ன நல்லா improve பண்ணி நீ எப்படியும் ஜெயிச்சுடுவனு Tris ah motivate பண்றாங்க.

அப்போ Al சொல்றாரு ஒருவேளை என்ன வெளியேத்துனாலும் என்னோட அப்பா அம்மா ஏத்துக்குவாங்கனு.

ஆனால் அதுக்கு will சொல்றாரு அது அப்படி கிடையாது அவங்களே நெனச்சாலும் அவங்களால உன்ன

சேர்த்துக்க முடியாதுனு. அப்போ Tris சொல்றாங்க என்னோட அப்பா அம்மா என்ன ஏத்துகிட்டாலும் நான்

இனிமே அந்த இடத்துக்கு போக மனசில்லனு.

இதுக்கு அப்பறம் christina வாங்க நம்ம எல்லாரும் போய் tatoo போட்டுக்கலாம்னு கூட்டிட்டு போறாங்க.

அந்த இடத்துல ஹீரோயின் choosing ceremony க்கு முன்னாடி தன்ன test பண்ண அதே லேடிய பாக்குறாங்க.

அங்க அவங்ககிட்ட என்ன ஞாபகம் இருக்கானு சொல்லி பேச முற்படும் போது அந்த லேடி Tris ah

தவிர்க்குறாங்க நான் tatoo மட்டும் தான் போடுறேனு சொல்றாங்க. அதுனால Tris ஒரு tattoo எடுத்துட்டு

எனக்கு இத போட்டு விடுங்கனு சொல்லி அவங்ககிட்ட பேச ஆரம்பிக்குறாங்க.

அப்போ அந்த லேடி 'நீ dauntless ah தேர்ந்தெடுத்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. உன்ன பத்தி இந்த

இடத்துல அவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுரும்னு சொல்றாங்க. அதுக்கு Tris யார் அந்த அவங்கனு

கேட்கும்போது யாருக்கு நீ அச்சுறுத்தலா இருப்பியோ அவங்களுக்கு அதாவது இந்த சமூகத்துக்குனு

சொல்றாங்க. நீ எந்தவொரு பிரிவுலயும் பொருந்தலனா அவங்களால உன்னை கட்டுப்படுத்த முடியாது

அதுனால உன்னை ஒரு ஆபத்தாதான் பார்ப்பாங்கனு சொல்றாங்க. அதுக்கு Tris நான் dauntless அ தான்

தேர்ந்தெடுத்தேன் dauntless ஆ தான் இருக்க போறேன்னு அதுக்கு அந்த லேடி அப்படி இருந்தா எனக்கும்

சந்தோஷம் தான்னு சொல்றாங்க.


அதுக்கப்புறம் நம்ம ஹீரோயின் எல்லாரும் எந்திரிக்க முன்னாடியே எந்திரிச்சு போய் practice பண்ண

ஆரம்பிக்குறாங்க. நாள் போக போக 32 ல இருந்து 22 வது இடத்துக்கு வந்துடுறாங்க. அப்போ Tris punching

bag அடிச்சு practice பண்றப்போ ஹீரோ வந்து கொஞ்சம் encourage பண்றாரு அதோட உன்ன அடிக்க

வர்றவங்கள நீ முன்னாடி போய் தொண்டைல ஒரு punch பண்ணா அவங்க நிலை குலைஞ்சு

போய்டுவாங்கனும் சொல்றாரு. அங்கேயே அப்படியே tris கொஞ்சம் நடந்து போகும்போது அங்க fighting ring

கிட்ட போறாங்க. அதுல la christina வும் முன்னாடி Tris கூட சண்டை போட்ட லேடியும் சண்டை போடுறாங்க.

இதுல christina அடி தாங்க முடியாம சண்டைய நிறுத்த சொல்றாங்க. அதுக்கு eric christina கிட்ட சண்டைய

நிறுத்தனுமானு கொஞ்சம் அவருக்கே உரிய தெனாவட்டு குணத்தோட கேட்குறாரு. Christina ஆமானு

தலையாட்டவும். சரி எல்லாரும் ஒரு break எடுத்துக்கங்கனு சொல்லிட்டு நடந்து போறாங்க. எல்லாருக்கும்

முன்னாடி eric ம் chris ம் போறாங்க. அப்போ ஒரு பாலம் மாதிரி இடத்துகிட்ட வரும் போது eric chris ah

தள்ளிவிட்டு அந்த பாலத்த கைல புடிச்சுகிட்டு தொங்க விட்டுடுறாரு. கீழ பெரிய பள்ளம் இருக்கு விழுந்தா

அவ்ளோதான். அப்ப chris கு மூணு வாய்ப்பு குடுக்குறாரு . ஒன்னு அங்கயே தொங்கிகிட்டு உன்னோட

கோழைத்தனத்தை விடு. இரண்டாவது உன்னோட பிடிய விட்டுட்டு கீழ விழுந்து சாவு. இல்ல

விட்டுக்கொடுத்துரு. ஆனால் நீ விட்டுக்கொடுத்துட்டினா உன்ன வெளியேத்திடுவோம்னு. Chris கெட்டியா

புடிச்சுகுறாங்க ஆனால் கொஞ்சம் கொஞ்சமா அவங்க கையும் நழுவுது அவங்க விட்டும் கொடுக்கல ஆனா

அவங்க கீழ விழப்போகுற மாதிரி வரும்போது இரண்டு பேரை வச்சு chris ah தூக்க சொல்றாரு eric. இதோட

முடிவுல eric dauntless எப்பவுமே விட்டுக்கொடுக்க கூடாதுனு சொல்வாரு.

அடுத்த சீன்ல ட்ரெய்ன்ல போகும்போது four ஒரு dauntless ah நம்மோட கடமை fence குள்ள இருக்க

ஒவ்வொரு உயிரையும் எந்தவொரு தவறும் நேராம பாதுக்காக்கனும். அதுக்கு தான் நாங்க இந்த மாதிரி உங்கள

ட்ரெய்ன் பண்றோம் நீங்க எப்பவுமே விட்டுக்கொடுக்காம இருக்கது மாதிரி னு சொல்வாரு.

அதுக்கப்பறம் ட்ரெய்ன்ல இருந்து இறங்கி fence க்கு போறாங்க. அங்க இருந்து முதல் தடவை வெளிய

பாக்குறாங்க. Fence அந்த பக்கம் என்ன இருக்குனு Tris கேட்குறாங்க அதுக்கு will சொல்றாரு amity விவசாய

நிலங்கள் னு. இல்ல நான் கேட்டது அதையும் தாண்டினு சொல்லும்போது will போர்ல இருந்து மீட்டுருவாக்கம்

செய்யப்படாத நிலங்கள்னு ஒரு யூகத்துல சொல்வாரு. அப்போ tris four கிட்ட உங்களுக்கு தெரியுமானு

கேட்கும்போது அவர் தெரியாது ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இந்த வேலிய

அமைச்சுருக்காங்கனு.
அதுக்கப்புறம் கத்தி எறியும் பயிற்சி நடக்குது அதுல நம்ம ஹீரோயின் இலக்கை ரொம்பவே நல்லா

எறியுறாங்க. அப்போ Al எறியுற கத்தி இலக்குக்கு கீழ உள்ள தரைல விழுந்துருது. பின்னாடி இருந்து eric

செல்றாரு ரொம்ப பரிதாபமா இருக்குனு. Al என்னோட கை நழுவிருச்சுனு சொல்ல அதுக்கு Eric அப்பே போய்

கத்திய எடு அப்படினு. ஆனால் மத்தவங்க எறிஞ்சுட்டு இருக்காங்களேனு al சொல்லுவாரு. ஏன்னா

எல்லாருக்கும் தனித்தனியாக மனித உருவத்துல target இருக்கும் அத நோக்கி தான் எறிவாங்க. ஆனால்

எல்லாரும் ரொம்ப பக்கத்து பக்கத்துல இருந்து தான் எறிவாங்க. அதுனால மத்தவங்க எறிஞ்சுட்டு

இருக்கும்போது என்னால எப்படி அத எடுக்க முடியும் னு al கேட்குறாரு. அப்ப நீ பயப்படுறியா னு eric கேட்க

ஆமா அவங்க எறியுற கத்திலாம் என்மேல பட்டுடும்னு சொல்ல அதுக்கு எல்லாரையும் நிறுத்த சொல்லிட்டு

போய் இலக்கு முன்னாடி நில்லுனு சொல்ல al கொஞ்சம் தயக்கமா போய் நிக்குறாரு. Eric சொல்றாரு ஒரு

விஷயத்தை நீங்க எல்லாரும் கத்துக்கணும் அதாவது இங்க இருக்குற விதிமுறைகள் எல்லாம் உங்கள்

விருப்பத்துக்கு இணங்காதுனு. Four கிட்ட சொல்லி அந்த இலக்க சுத்தி கத்தி எறிய சொல்றாரு. அந்த டைம்ல நீ

கொஞ்சம் அசஞ்சாலும் உன்ன வெளியேத்திடுவோம்னு al ட சொல்றாரு. Al ம் நிக்குறாரு four கத்திய

எறியப்போகும் முன்னாடியே Tris அவர தடுக்குறாங்க. யார் வேணும்னாலும் இலக்கு முன்னாடி நிற்க முடியும்

இத வச்சு என்ன நீருபிக்க போறிங்கனு. அப்போ al oda இடத்துல நீ நிக்குறது உனக்கு ஒன்னும் கஷ்டமா

இருக்காதுனு சொல்ல tris al oda இடத்துல வந்து நிக்குறாங்க Al போயிடுறாரு. Eric அதே rules தான்

உனக்கும்னு சொல்லவும் four கத்தி எறிய ஆரம்பிக்குறாரு. அப்போ ரொம்ப பக்கத்துல கத்தி குத்தி நிக்குது

இரண்டு கத்தில ஒன்னு வலது பக்கமும் இன்னொன்று இடது பக்கமும் படுது. மூணாவது கத்தி தலைக்கு மேல

படுது நாலாவது கத்தி காதுகிட்ட ரொம்ப நெருக்கமா படுது இதுல லைட்டா ஹீரோயின் காதுல உரசி இரத்தம்

வந்துடுது. இத பாத்துட்டு உன்னோட தைரியத்துக்கு points குடுக்குறேன். உன்ன மாதிரி வாயவிட்டு

தோத்துப்போனவங்க நிறைய பேர் இருக்காங்க. இனிமேல் கொஞ்சம் கவனமா இரு நாங்க பயிற்சி குடுக்குறது

வீரர்களுக்கு போராட்டக்காரர்களுக்கு இல்லனு Tris சரினு தலையாட்டுறாங்க. இன்னைக்கு பயிற்சி முடிஞ்சதுனு

சொல்லி எல்லாரையும் அனுப்பிடுறாரு.

அப்பே four Tris கிட்ட உனக்கு ஒன்னும் ஆகலையேனு கேட்க Tris நீ என்ன காயப்படுத்திட்டனு சொல்றாங்க.

அதுக்கு four நான் வேணும்னுதான் அப்படி பண்ணேன் உனக்கு சின்ன காயம் கூட ஏற்படலனா eric உன்ன

போக விட்ருப்பான்னு நீ நெனக்குறியானு உன்ன இன்னும் அதே இடத்துல தான் நிக்க வச்சிருப்பானு சொல்ல

அப்போ உனக்கு நான் நன்றி சொல்லணுமானு Tris கேட்குறாங்க. அதுக்கு four நீ இன்னும் smart ah

இருக்கனும்னு நினைக்குறேனு சொல்லிட்டு போய்டுவாரு. அடுத்து தங்குற இடத்துக்கு வந்ததும் எல்லாரும் eric

எதிர்த்து பேசுனதுனால Tris ah பாராட்டுறாங்க. அங்க எப்பவுமே Tris கிட்ட வம்பு பண்ற peter Tris கிட்ட

வாழ்த்துக்கள் நீ ரொம்ப பிரபலமாயிட்ட. ஆமா ஆனா eric கூட நடந்த சம்பவத்துக்காக இல்ல உன்ன பத்தி

நீயூஸ்ல போட்ருக்காங்க. அதாவது andrew(tris oda அப்பா)வோட பசங்களான Tris ம் caleb oda transfer
Abnegation oda போதனைகளையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்குதுனு. (ஏற்கெனவே படத்தோட

ஆரம்பத்துல நாம சொல்லிருந்தோம் Tris oda அப்பா அவங்க தலைவரான marcus கூட வேலை

செய்றவருனும் abnegation க்கு கெட்ட பேர உண்டாக்க நிறைய பேர் முயற்சி பண்றாங்கனு அவர்

சொல்வாருனு) அந்த விசயம் தாங்க இது. அதோட peter செய்தில வர்றத வாசிக்குறாரு. 'எது andrew oda

இரண்டு பிள்ளைகளையும் faction மாற வச்சது. இதுக்கு காரணம் அந்த ஒட்டுமொத்த faction oda நேர்மையற்ற

கருத்தியலே பதிலா இருக்கலாம். வளங்களை திருடுவது, ஆளுமையற்ற தன்மை, தங்கள் பிள்ளைகளை

கொடுமைபடுத்துவதுனு' news ah அப்படியே வாசிக்கிறாரு. அதோட peter tris கிட்ட கேட்குறாரு அவங்க

உன்ன அடிச்சாங்களா அதாவது உங்கள் தலைவர் marcus அவரோட பையன கொடுமைபடுத்துன மாதிரினு

கேட்க Tris abnegation அத மறுத்து மக்கள் யாரையும் துன்புறுத்தல அவங்க ரொம்ப நல்லவங்கனு சொல்றாங்க.

அதுனால தான் நீ அவங்கள விட்டு வந்தியானு கேட்க Tris அங்க இருந்து போய்டுறாங்க. அப்பறம் எல்லாரும்

அந்த இடத்தை சுத்தி நடந்து வந்துட்டு இருக்கும்போது dauntless தலைவரோட erudite தலைவியான jeanine

ah பாக்குறாங்க இது எல்லாருக்கும் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. அப்போ Jeanine Tris ah அடையாளம்

கண்டு பேசுறாங்க. நீ உன்னோட அப்பா அம்மாவையும் உன் test ரிசல்ட்டையும் தாண்டி எடுத்த முடிவு

சிறப்பானதுனு சொல்றாங்க. Tris நீங்க என்னோட test result ah பாத்திங்களானு கேட்க அதுக்கு ஆமானு

சொல்றாங்க. அதோட உனக்கு எதுவும் வேணும்னா என்கிட்ட கேளுனு சொல்லிட்டு அங்க இருந்து

போய்டுறாங்க. அவங்க போகவும் இவங்க இங்க என்ன பண்றாங்கனு நம்ம ஹீரோயின் gang

அவங்களுக்குள்ளயே பேசிக்குறாங்க. Will சொல்றாருஅவங்க divergents ah வேட்டையாடுறாங்க ஆமா

erudite பத்தி இப்போதைக்கு எல்லாரும் பேசுற ஒரே விசயம் இது மட்டும்தான்னு. அப்போ Al divergents லாம்

உண்மைலயே இருக்காங்களானு ஆச்சர்யமா கேட்குறாரு. அடுத்த சீன்ல பயிற்சி பண்ற இடத்துல திரும்ப eric

Tris ah சண்ட போட சொல்றாரு ஆனால் இந்த தடவை எதிர்ல peter இருக்காரு. அப்ப four tris கிட்ட வந்து

நான் உன்கிட்ட முன்னாடியே சொன்ன மாதிரி தொண்டைல அடினு சொல்றாரு. Tris ம் அதே மாதிரி

அடிக்குறாங்க ஆனால் அவங்களால ஜெயிக்க முடியல. அவங்க தோக்குற நிலைமைல இருக்கும்போது four

அங்கிருந்து போய்டுறாரு. Peter கடைசியா அடிச்ச அடில Tris மயங்கிடுறாங்க. திரும்பி tris முழிச்சு

பாக்கும்போது christina வும் will ம் பக்கத்துல இருக்காங்க. அவங்கிட்ட Tris என்ன நடந்ததுனு கேட்கும்போது

நீ ஒருநாள் முழுக்க இங்கதான் இருக்கனு. Scoreboard பாத்திங்களானு this கேட்க நீ இன்னும் red line க்கு கீழ

தான் இருக்கனு சொல்றாங்க. Tris நீங்க ஏன் புதுசா ஒரு suit போட்ருக்கிங்கனு கேட்க அதுக்கு அவங்க war

games க்கு போறோம்னு சொல்ல நானும் வரேன்னு Tris சொல்ல இல்ல உன்னால முடியாது eric உன்ன out னு

சொல்லிட்டதா சொல்றாங்க. இரண்டு பேரும் சாரினு சொல்லிட்டு games க்கு போறாங்க.

அடுத்த சீன்ல ட்ரெய்ன்ல அவங்க கிளம்பும்போது திடீர்னு Tris ம் அதே ட்ரெய்ன்ல running ல ஏறிடுறாங்க four

கைய குடுத்து அவங்கள உள்ள ஏத்தி விடுறாரு. அப்போ அங்க இருக்க eric யார் உன்ன வெளிய விட்டதுனு
கேட்க நானே தான் வெளிய வந்தேன்னு சொல்றாங்க eric ஓகேனு சொல்லிட்டு போயிடுறாரு. பின்னர்

விளையாட்டு விதிமுறைகள சொல்றாங்க. இதுல எதிரியோட கொடிய நாம புடிக்கனும் அதான் விளையாட்டு.

அப்போ இதுதான் ஆயுதம்னு சொல்லி eric துப்பாக்கி மாதிரி ஒன்ன காமிக்கிறாரு அத பாத்து last jumper ஆ

வந்த லேடி சிரிக்குறாங்க. அப்போ eric அவங்க கால்ல சுடுறாரு ஒரு device மாதிரி போய் அவங்க கால்ல

குத்துது. அவங்க வலில கீழ விழுந்துடுறாங்க. அத device ah எடுத்து eric சொல்றாரு இதுக்கு பேரு neuro-stim

dart இது உண்மையான குண்டடி பட்ட வலியை உருவாக்கும் ஆனால் வெறும் இரண்டு நிமிசம் மட்டும்னு

சொல்வாரு. Eric four இரண்டு கேப்டன் தலைமைல இரண்டு அணியா பிரிஞ்சு ஆளெடுக்குறாங்க ஹீரோ

முதலில் Tris ah எடுக்குறாரு. அது பாத்துட்டு eric பலவீனமானவங்களை எடுத்துட்டு தோத்துட்டா அவங்க

மேல பழிய போட போற அப்படிதானனு நக்கலா சொல்றாரு. இதுக்கு அப்பறம் ட்ரெயின விட்டு இறங்கி

இரண்டு டீமும் தங்களோட கொடிய உயரமான இடத்துல வச்சிடுறாங்க. போட்டி ஆரம்பமாகுது. இந்த

போட்டில ஹீரோயின் டீம் ஜெயிச்சுடுறாங்க இந்த சீன்ஸ்லாம் நல்லாருக்கும் இத நீங்க படத்துலயே பாருங்க.

ஜெயிச்சு முடிச்சுட்டு திரும்ப அங்க இருந்தே அவங்களோட பழைய இடத்துக்கு வித்தியாசமான வழில வந்து

இறங்குறாங்க இது படத்துல ரொம்பவே அருமையான சீனா இருக்கும்.

அப்பறம் ஹீரே Tris ah கூப்டு இன்னைக்கு நீ ரொம்ப தைரியமா situation ah handle பண்ண. வாழ்த்துக்கள் னு

சொல்றாரு. அன்னைக்கு ராத்திரி dauntless தலைவர் நீங்க முதல கட்ட பயிற்சிய முடிச்சுட்டிங்க நீங்க இனி

அடுத்தகட்ட பயிற்சிக்கு போகலாம் (அதாவது physical முடிஞ்சு mental )ஆனால் இதுல red line கு கீழ

உள்ளவங்கள வச்சுகிட்டு நாங்க நேர விரையம் செய்ய போறதில்லனு சொல்லிட்டு scoreboard காமிக்கிறாங்க

இதுல tris red line ku மேல வந்துடுறாங்க. எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பாராட்டிகிறாங்க. மறுநாள் Amity farms

ல இருந்து இருந்து வந்த உணவு பொருட்களை இறக்கி வச்சிட்டு இருக்காங்க. அப்போ Tris oda முகத்துல

யாரோ கண்ணாடி வச்சு glare அடிக்குறாங்க. அது யாருனு போய் பார்க்கும்போது tris oda அம்மா நிக்குறாங்க.

அவங்க உன்ன ரொம்ப மிஸ் பண்ணோம்னு சொல்லிட்டு உன்னோட test day அன்னைக்கு உனக்கு உடம்பு

சரியில்லைனு சொன்னது பொய் தான உண்மையான ரிசல்ட் என்னனு கேட்க. அது முடிவெடுக்க முடியாத ஒரு

ரிசல்டா இருந்துச்சு சொல்ல அவங்க அம்மா divergent ah னு கேட்க. உங்களுக்கு எப்படி தெரியும்னு சொல்ல

அவங்கம்மா இது பத்தி நீ யார்ட்டயும் சொல்ல கூடாது உன்னோட தலைவர்கள் கிட்ட நண்பர்கள் கிட்ட

யார்ட்டயுமே இத சொல்லாத யாரையுமே நம்பாத இல்லனா உனக்கு தான் ஆபத்து. Divergent னாலே

அதிகாரத்துல இருக்க எல்லாருக்கும் பயம் Erudite எல்லா இடத்துலயும் divergent ah தேடிட்டு இருக்காங்க. நீ

எதுக்குமே பணிய மாட்ட அதோட உன் மூளை பலவிதமா யோசிக்கும். உன் இரண்டாவது கட்ட பயிற்சி தான்

ரொம்ப பிரச்சினை அவங்க உன் மூளைக்குள்ள புகுந்து நீ பயத்தை எப்படி கையாள்றனு பார்ப்பாங்க. ஆனால்

நீ அத dauntless வழில சமாளிச்சு ஜெயிச்சுடுவனு எனக்கு தெரியும் இதுமாதிரி நான் ஏற்கனவே

பாத்திருக்கேன்னு சொல்வாங்க. அதுக்கு Tris உங்களுக்கு எப்படி dauntless பத்தி இவ்ளோ விசயம் தெரியும்
நீங்களும் ஒரு dauntless ah னு Tris கேட்குறாங்க. ஆனால் பேசி முடிக்குறதுக்குள்ள அங்க dauntless ஆள்

ஒருத்தர் வந்து கிளம்பனும்னு சொல்றாரு ஆனால் அதுக்குள்ள அவங்க அம்மா காணாம போயிடுறாங்க.

அடுத்த சீன்ல choosing ceremony க்கு முதலில் நடந்த test room மாதிரியான இடத்துல எல்லாருக்கும்

subconcious mind test நடக்குது அதுல நம்ம last jumper லேடி ரொம்ப பாதிக்கப்பட்டு ஒரு பதட்டத்தோட

வெளிவராங்க அவங்கள இரண்டு பேர் தூக்கிட்டு போறாங்க. அடுத்த four வந்து Tris ah கூப்டுறாரு. அங்க tris

கிட்ட நான் உனக்கு ஒரு serum குடுக்க போறேன் அது உன் மூளைல பயத்தை உண்டாக்குற பகுதிய

தூண்டிவிடும். அது ஒரு மாயத்தோற்றத்தை உண்டாகும் அத இந்த serum la இருக்க transmitters மூலமா

என்னால அந்த காட்சிகளை பார்க்க முடியும்னு சொல்றாரு. அதுக்கு Tris என் mind la என்ன இருக்குனு பார்க்க

முடியுமானு கேட்குறாங்க. அப்பறம் test ஆரம்பமாகுது. Four Tris கிட்ட இப்ப நீ உன்னோட மோசமான

பயத்தை எதிர்கொள்ள போற. நிறைய பேருக்கு 10 ல இருந்து 15 பயம் இருக்கும். நீ உன்ன சாந்தமா வச்சுகிட்டு

எதிர்ல இருக்குற விசயத்தை கையாளனும். தைரியமா இருனு சொல்றாரு. Simulation ஆரம்பமாகுது Tris mind

test ல படத்தோட ஆரம்பத்துல எப்படி பிரச்சினைய வித்தியாசமான கையாண்டாங்களோ அதே மாதிரி

இப்பயும் கையாளுறாங்க கொஞ்ச நேரத்துலயே முடிஞ்சு எந்திருச்சுடுறாங்க. Test முடியவும் four tris கிட்ட

எவ்ளோ நேரம் simulation ல இருந்தனு நினைக்குறனு கேட்குறாரு அதுக்கு Tris ஒரு 20 நிமிசம்னு சொல்றாங்க

அதுக்கு four வெறும் 3 நிமிசம் தான் இது average ah விட நாலு மடங்கு வேகம்னு சொல்வாரு. இந்த

அளவுக்கு யாரும் test ah முடிச்சு பாத்ததில்லனு சொல்வாரு. அடுத்த தடவை இன்னும் ஈஸியா இருக்கும்னு

four சொல்ல திரும்பவும் நான் இத பண்ணனுமானு Tris கேட்குறாங்க. அதுக்கு ஆமா final க்கு போறதுக்கு

முன்னாடி ஒரு சிலதடவை இத பண்ண வேண்டியிருக்கும். ஆனால் நீ முடிச்சுடுவ நீ எதுக்கும் கவலைப்பட

தேவையில்லைனு சொல்வாரு.

அடுத்து தங்குற இடத்துக்கு போகவும் christina என் உடம்பு பூராவும் பூச்சியா இருந்தது னு தனக்கு ஏற்பட்ட

அனுபவத்தை சொல்றாங்க. அதுமட்டுமில்லாம Tris எப்படி சீக்கிரம் முடிச்ச னு எல்லாரும் கேட்க

ஆரம்பிக்கிறாங்க. இடையில tris ட வம்பு பண்ற peter ம் வந்து எப்படி சீக்கிரம் முடிச்சனு சொல்லு என்கிட்ட

சொல்லலனாலும் உன் நண்பர்கள்கிட்டயாச்சும் சொல்லுனு சொல்றாரு. இதகேட்ட Al அப்படி எதுவும்

வழியிருக்கானு கேட்குறாரு tris இல்லனு சொல்றாங்க. Peter Al கிட்ட Tris உன்ன dauntless ல இருந்து

வெளியேத்த போறா அவ ரொம்ப அடிமட்டத்தில் இருந்து மேல வந்துட்டா இப்ப அவ இடத்தை வேற

யாராவது எடுத்துக்கனும் அது நீதான்னு சொல்றாரு. Al அப்படிலாம் ஒன்னும் நடக்காதுனு நீ போய் உன்

வேலைய பாருனு சொல்றாரு. அடுத்த சீன்ல Tris pit க்கு ஓடி வராங்க. அங்க அவங்க நண்பர்கள் எல்லாரும்

பேசிட்டு இருக்காங்க அவங்ககிட்ட நெருங்கும்போது Tris ஒரு கண்ணாடி சுவர் தடுக்குது அப்பறம் தான் Tris
க்கு தெரியுது நாம simulation ல இருக்கோம்னு. வழக்கம் போலயே இதையும் வித்தியாசமான முறைல

கையாளுறாங்க. அப்பறம் Tris simulation ல இருந்து வெளிய வந்ததும் four dauntless யாரும் இந்த

பிரச்சினைய இப்படி கையாள மாட்டாங்கனு சொல்றாரு. அடுத்து choosing ceremony க்கு முன்னாடி வந்த

உன்னோட test result என்ன வந்துச்சுனு கேட்க Tris கொஞ்சம் தயக்கமா Abnegation னு சொல்றாங்க. Four

நான் நம்பல கடைசியா கேட்குறேன் உண்மைய சொல்லுனு சொல்றாரு அப்பயும் Tris Abnegation தான் னு

சொல்றாங்க. Four க்கு இப்பயும் சந்தேகம் போகல சரி நீ போனு சொல்லி அனுப்பிட்டு Tris வெளிய

போகும்போது திரும்பவும் dauntless யாரும் simulation ல நடந்த பிரச்சினைய நீ கையாண்ட மாதிரி கையாள

மாட்டாங்கனு சொல்றாரு.

Tris இதுபத்தி யார்ட்டயும் பேச முடியாம tatoo lady அதான் first test பண்ண லேடிட்ட போய் பேசுறாங்க

அவங்க 'என்னோட சகோதரனும் உன்ன மாதிரி தான் இருந்தான்னு. அவனோட final simulation பாக்க ஒரு

dauntless தலைவர் வந்தாரு. அடுத்த நாள் காலைல ஒரு பள்ளத்துகிட்ட (அதாவது eric chrisitina வ

தொங்கவிட்ட பாலம் இருக்கே அந்த பெரிய பள்ளத்துகிட்ட) அவனோட சடலத்தை தான் நாங்க பார்த்தோம்.

அவன dauntless தலைமை கொன்னுட்டாங்க' னு சொல்றாங்க. உன்ன பத்தி அவங்களுக்கு தெரிஞ்சா உன்

நிலைமையும் அதேதானு சொல்றாங்க. Tris ஆனால் அவங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் வந்துருச்சு னு சொல்ல

அப்ப நீ தொலைஞ்ச னு சொல்றாங்க.

என்ன பண்றதுனு தெரியாம Tris erudite ல இருக்க அவங்க brother Caleb ah போய் பாக்குறாங்க. என்னால

dauntless ல fit ஆக முடியல நான் திரும்ப abnegation போக உதவ முடியுமானு கேட்குறாங்க. ஆனால் caleb

சொல்றாரு அதுக்கு erudite அனுமதிக்கமாட்டாங்க ஏன்னா Abnegation ஏற்கனவே பல விதிமீறல்

பண்ணிருக்காங்க இனிமேல் அப்படி நடக்க விடமாட்டாங்கனு. அதுக்கு அவங்க உன்கிட்ட Abnegation பத்தி

தப்பா சொல்லிருக்காங்க அவங்களுக்கு யாரை எப்படி மூளைசலவை செய்யனும்னு தெரியும் Abnegation ah

தலைமை பொறுப்புல இருந்து தூக்க erudite திட்டம் போடுறதா அப்பா சொன்னாரே அதத்தான் அவங்க

பண்றாங்கனு. Caleb சொல்றாரு ஆமா அது உண்மை தான் ஏன்னா தலைமை பொறுப்புல erudite தான்

இருக்கனும் அதுதான் சரினு. இது Tris க்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு 'faction before blood' அப்படிங்குற

தத்துவத்தை நீ கடைபிடிக்குறல அப்படினு சொல்லிட்டு கவலையோட அங்கிருந்து போறாங்க. அவங்க

வெளிய வர்ற வழில இரண்டு erudite ஆளுங்க அவங்கள தங்களோட வர சொல்றாங்க tris அவங்கள அடிச்சு

போட்றாங்க. அப்போ மேல இருந்து jeanine Tris ah பாக்குறாங்க அப்டியே அவங்க இடத்துக்கு கூட்டிட்டு

போயிடுறாங்க அங்க Abnegation ல நிறைய தவறுகள் நடக்குது குறிப்பா divergents கு அவங்க அடைக்கலம்

தர்றாங்கனு சொல்றாங்க. அவங்கமேல சந்தேகம் வந்துடகூடாதுனு 'நீங்க சொல்றது உண்மைனா abnegation ah


விட்டு நான் வந்ததுக்கு ரொம்ப சந்தோசப்படுறேன்'னு சொல்லுவாங்க. அப்பறம் Jeanine abnegation ல

விதிமீறல்கள் நடக்கும் பட்சத்தில் அவங்க மேல சட்ட நடவடிக்கைகள் எடுக்க உறவுகளை கடந்து நீ எனக்கு

ஆதரவு கொடுப்பியானு கேட்குறாங்க அதுக்கு Tris கண்டிப்பா னு சொல்றாங்க. Jeanine அவங்க கார்லயே tris

ah dauntless இடத்துல கொண்டு போய் விட்ற சொல்றாங்க.

Tris திரும்பி dauntless உள்ள வர்றாங்க. அப்படி வரும்போது அந்த bridge கிட்ட வச்சு mask போட்ட மூணு

பேர் Tris ah கொல்ல முயற்சி பண்றாங்க அவங்க tris ah கீழ தள்ளி கொல்ல ட்ரை பண்றாங்க அப்ப tris அந்த

மூணு பேர்ல ஒருத்தர் mask கழட்டுறாங்க அந்த ஆள் tris oda நண்பர்கள்ல ஒருத்தர் தான். அப்போ அந்த

இடத்துக்கு வர்ற four அவங்கள அடிச்சு போட்டு tris ah காப்பாத்துறாரு. அப்பறம் அவரோட இடத்துக்கு

கூட்டிட்டு போறாரு இங்க நீ பாதுகாப்பா இருக்கலாம்னு சொல்லிட்டு காயத்துக்கு மருந்து போடுறாரு. Tris

அவங்க நண்பரே இத பண்ணத என்னால நம்ப முடியலனு சொல்றாங்க. Four அதுக்கு நீ ranking la முன்னேறி

போய்ட்டு இருக்க அது அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கு அதுனால அவன் தன்னையும் வெறுத்து

உன்னையும் வெறுக்க ஆரம்பிச்சுட்டான்னு சொல்றாரு. பயம் அவன மாதிரி ஆளுங்களுக்கு என்ன

பண்ணும்னு நான் பார்த்துருக்கேன். ஆனால் நீ ரொம்ப வித்தியாசமா இருக்க, பயம் உன்ன நிலைகுலைய

வைக்கமாட்டுது மாறாக உன்ன விழிப்படைய செய்யுதுனு சொல்வாரு. அப்பறம் tris ah rest எடுக்க சொல்றாரு.

காலைல Tris எந்திரிக்கிறாங்க four நேத்து எங்க போனனு கேட்குறாங்க அதுக்கு Tris நான் Caleb ah பாக்க

போனேன்னு சொல்றாங்க erudite abnegation ah overtake பண்ண போறதா அவன் சொன்னான் அதுக்கு

சாத்தியமிருக்கானு Tris கேட்க four இருக்கலாம் ஆனால் அது எந்த எல்லை வரைக்கும் erudite போக

நினைக்குறாங்கங்குறத பொறுத்து தான் இருக்குனு சொல்றாரு. அப்பறம் tris சாப்டுற இடத்துக்கு போறாங்க.

அங்க அவங்கள கொலை பண்ண முயற்சி பண்ண நண்பர் வந்து மன்னிப்பு கேட்குறாரு அதுக்கு Tris நீ ஒரு

கோழை இனிமே நீ என் கிட்ட வந்தினா உன்ன கொன்னுடுவேன்னு சொல்றாங்க அப்பறம் அவர் அந்த இடத்த

விட்டு போயிடுறாரு. அப்பறம் தங்குற இடத்துல Tris தன் நண்பர்கள் கிட்ட நடந்தத சொல்றாங்க

அவங்களுக்கும் இது அதிர்ச்சியா இருக்கு.

அப்பறம் அடுத்த சீன்ல எல்லாரும் பரபரப்பா நடமாடிட்டு இருக்கும் போது அங்க என்ன நடக்குது பாக்க Tris

ம் அவங்க நண்பர்களும் போறாங்க அங்க Tris ah கொல்ல முயற்சி பண்ண நண்பரோட சடலத்தை பள்ளத்துல

இருந்து மேல தூக்குறாங்க. Tris அதிர்ச்சியாயிடுறாங்க அங்க இருந்து போயிடுறாங்க அப்ப four அங்க வராரு

Tris அவன் செத்ததுக்கு நான் தான் காரணம் என்ன தனியா விடுனு சொல்றாங்க. அதுக்கு four அது உன்

தப்பில்லை அவனோட முடிவு அவனே தேர்ந்தெடுத்துகிட்டான் இதுல நீ கவலைப்பட ஏதுமில்லைனு. அதுக்கு

Tris எவ்ளோ சீக்கிரம் அவங்களுக்கு என்ன பத்தின உண்மை தெரியுதோ அப்போ. எனக்கும் இதே
நிலைமைதான்னு அதுக்கு four என்ன உண்மைனு கேட்க Tris உனக்கே தெரியும்னு சொல்ல four நான் அப்படி

நடக்க விடமாட்டேன்னு சொல்றாரு. அடுத்த சீன்ல Tris க்கு பயிற்சி குடுக்க கூட்டிட்டு போறாரு.

Four இந்த தடவை தன்னோட subconscious mind குள்ள Tris ah யும் கூட கூட்டிட்டு போறாரு அங்க dauntless

வழில எப்படி பிரச்சினைகள சமாளிக்கிறதுனு கத்து குடுக்குறாரு. இது Tris கு ரொம்பவே உதவியா இருக்கு.

அதில இருந்து வெளியே வந்துட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க.

You might also like