Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

‭கூட்ட எண் : 163‬ ‭ திக்கதை - 2‬

நீ
‭தேதி : 22-06-2024‬ ‭சுயநலமின்மையே கடவுள்‬

‭அரசன்‬ ‭ஒருவன்‬ ‭இருந்தான்.‬ ‭அவனுக்குப்‬ ‭பல‬ ‭அலுவலர்கள்‬ ‭இருந்தனர்.‬


‭அவர்கள்‬ ‭ஒவ்வொருவரும்,‬ ‭தானே‬ ‭அரசனிடம்‬ ‭மிகுந்த‬ ‭ஈடுபாடு‬
‭உள்ளவனென்றும்,‬ ‭அரசனுக்காக‬ ‭உயிரைத்‬ ‭தரவும்‬ ‭ஆயத்தமாக‬ ‭இருப்பதாகவும்‬
‭சொல்லி வந்தனர்.‬

‭ஒரு‬ ‭நாள்‬ ‭அரசபைக்கு‬ ‭துறவி‬ ‭ஒருவர்‬ ‭வந்தார்.‬ ‭அரசன்‬ ‭அவரிடம்‬ ‭பேசிக்‬


‭கொண்டிருந்தபோது,‬ ‭தனது‬ ‭அலுவலர்களின்‬ ‭நேர்மையைக்‬ ‭குறித்துப்‬
‭பெருமையாகக்‬ ‭கூறினார்.‬ ‭துறவி‬ ‭அதை‬ ‭சோதிக்க‬ ‭விரும்பினார்.‬ ‭அரசனும்‬ ‭அதை‬
‭அனுமதித்தான்.‬

‭ஒரு‬ ‭சிறிய‬ ‭சோதனை‬ ‭வைத்தார்‬ ‭அத்துறவி.‬‭அவர்‬‭அரசனிடம்,‬‭தான்‬‭அவரது‬


‭ஆயுளும்,‬ ‭ஆட்சியும்‬ ‭பல்லாண்டுகள்‬ ‭நீடிக்க‬ ‭ஒரு‬ ‭யாகம்‬ ‭செய்யப்‬ ‭போவதாகவும்,‬
‭அதற்கு‬ ‭நிறைய‬ ‭பால்‬ ‭தேவைப்படுகிறதென்றும்,‬ ‭அரசனது‬ ‭அலுவலர்‬
‭ஒவ்வொருவரும்‬ ‭ஒரு‬ ‭குடம்‬ ‭பால்‬ ‭தந்து‬ ‭அதற்காக‬ ‭வைக்கப்படும்‬ ‭அண்டாவில்‬
‭அன்றிரவு‬ ‭ஊற்ற‬ ‭வேண்டும்‬ ‭எனவும்‬ ‭கேட்டுக்‬ ‭கொண்டார்.‬ ‭அரசன்‬
‭புன்முறுவலுடன், “இதுதானா உங்கள் சோதனை?” என்று கேட்டான்.‬

‭பின்னர்‬ ‭அவன்‬ ‭தனது‬ ‭அலுவலர்‬ ‭அனைவரையும்‬ ‭அழைத்து,‬ ‭துறவி‬


‭நடத்தவுள்ள‬ ‭யாகத்தைப்‬ ‭பற்றிக்‬ ‭கூறி,‬ ‭அவர்கள்‬ ‭ஒவ்வொருவரும்‬ ‭ஒரு‬ ‭குடம்‬ ‭பால்‬
‭தர‬ ‭வேண்டும்‬ ‭எனக்‬ ‭கூற,‬ ‭அவர்கள்‬ ‭அனைவரும்‬ ‭அந்த‬ ‭யோசனைக்குத்‬ ‭தங்கள்‬
‭மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர்.‬

‭அன்றிரவு‬ ‭அவ்வாறே‬ ‭ஒவ்வொருவரும்‬ ‭ஒரு‬ ‭குடம்‬ ‭பாலை‬ ‭அதற்காக‬


‭வைக்கப்பட்டிருந்த‬ ‭அண்டாவில்‬ ‭ஊற்றிச்‬ ‭சென்றனர்.‬ ‭மறுநாள்‬ ‭காலையில்‬
‭பார்த்தபோது‬ ‭அண்டா‬ ‭நிறையத்‬ ‭தண்ணீர்தான்‬ ‭இருந்தது.‬ ‭துணுக்குற்ற‬ ‭அரசன்‬
‭அலுவலர்‬ ‭அனைவரையும்‬ ‭அழைத்து‬ ‭விசாரித்தான்.‬ ‭எல்லோரும்‬ ‭பால்‬ ‭ஊற்றும்‬
‭போது,‬ ‭தான்‬ ‭ஒருவன்‬ ‭மட்டும்‬ ‭பால்‬ ‭ஊற்றினால்‬ ‭எப்படித்‬ ‭தெரியப்‬ ‭போகிறது‬ ‭என‬
‭நினைத்து, எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.‬

‭இந்த‬‭உதாரணத்தைக்‬‭கூறி‬‭சுவாமி‬‭விவேகானந்தர்‬‭உலக‬‭மக்களின்‬‭சுயநலப்‬
‭போக்கைச்‬ ‭சுட்டிக்‬ ‭காட்டுகிறார்:‬ ‭

‭”தனிச்சலுகை‬ ‭என்பது‬ ‭நம்முள்‬ ‭உள்ள‬ ‭குலம்,‬ ‭இனம்,‬ ‭சாதி)‬ ‭என்னும்‬


‭கருத்துக்கள்‬ ‭ஒழிந்தால்தான்‬ ‭மதம்‬ ‭என்பதே‬ ‭தோன்றும்.‬ ‭எனவே,‬ ‭ஒவ்வொரு‬
‭சலுகையையும்,‬ ‭அதற்குக்‬ ‭காரணமாக‬ ‭நம்முள்‬ ‭இருக்கும்‬ ‭சுயநலப்போக்கையும்‬
‭தூக்கியெறிந்துவிட்டு,‬ ‭எல்லா‬ ‭மக்களையும்‬ ‭சமமாகக்‬ ‭காணும்‬ ‭ஞானத்தைப்‬ ‭பெற‬
‭முயலுங்கள்” என நமக்கு அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.‬

‭செய்தி‬ ‭-‬ ‭”சுயநலமின்மையே‬ ‭கடவுள்.‬ ‭கடவுள்‬ ‭அன்பின்‬ ‭வடிவானவர்.‬ ‭மனிதர்கள்‬


‭மீது‬ ‭அன்பு‬ ‭செலுத்தி‬‭அன்பின்‬‭மூலம்‬‭வழிபாடு‬‭செய்வதே‬‭உண்மையான‬‭ஆன்மீக‬
‭வழிபாடு”‬ ‭என்ற‬ ‭சுவாமி‬ ‭விவேகானந்தரின்‬ ‭வாக்கிற்கு‬ ‭இணங்க‬ ‭இவ்வுலக‬
‭மக்களிடத்தில்‬ ‭நாம்‬ ‭செலுத்தும்‬ ‭அன்பானது‬ ‭மறைமுகமாக‬ ‭நம்‬ ‭அனைவரின்‬
‭உள்ளங்களில் வாழும் இறைவனிடம் சென்று சேர்கிறது என்று நாம் உணர்வோம்.‬

‭அனைவருக்கும் நன்றி !‬

You might also like